• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கி - 6

sankareswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 31, 2024
35
40
18
Chennai
அத்தியாயம் 6

கௌஷிக் கூறியதைக் கேட்க மகிழனுக்கு அதிர்ச்சி தான். அவளோ இப்படி கூறினாள் ?அவளுக்கு இந்த வேலையை தரக்கூடாது என்று தான் இவனிடம் கொடுத்தோம் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். தெரிந்தும் அவள் இதற்கு சம்மதித்திருக்கிறாள் என்றால் நிச்சயம் ஏதோ ஒரு காரணமாக தான் இருக்கும். எப்படியோ அலுவலகத்திற்கு நன்மை நடந்தால் சரி என நினைத்து ஒத்துக் கொண்டான் கவி மகிழன்.

"சரி கௌஷிக் நீங்க ப்ராஜெக்ட் நல்லபடியா முடிக்கணும். இதுல ஏதாவது எனக்கு பிடிக்காத மாதிரி இருந்துச்சு அப்படின்னா அப்புறம் நான் உன்னை பயர் பண்ண வேண்டியதா இருக்கும் புரிஞ்சது தானே. நல்ல படியா கொண்டு வரணும் கஷ்டம். கஸ்டமர் மனசு திருப்தியா இருக்கணும் திரும்பவும் சொல்றேன் எந்த தப்பும் நீ பண்ண கூடாது " என்றதும்,

"கண்டிப்பா சார் இது நீங்க என்னை நம்பி கொடுத்திருக்கீங்க நான் இதை நல்லபடியா முடிச்சு காட்டுவேன் " என உறுதி கொடுத்தான்.

"சரி உங்களுக்கு ரெண்டு வாரம் டைம் தான். இந்த ரெண்டு வாரத்துக்குள் உங்களோட பெஸ்ட் குடுங்க இப்ப நீங்க கிளம்பலாம் " என்றதும் சரி எனக் கூறி அங்கிருந்து வெளியேறினான் கௌஷிக்.

வெளியே வந்தவனின் மனமோ லேசாக இல்லாது பாரமாகத்தான் இருந்தது. அவனுக்கு உள்ளுக்குள் துளிர்விட்டது. காரணம் தான் இந்த ப்ராஜெக்டில் அவளை சேர்க்காமல் இருந்தால் கூட ஏதாவது தவறு நடந்தால் தன் முதலாளி தன்னை மன்னிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இப்பொழுது தான் ஏதாவது தவறு செய்தால் நிச்சயம் தன்னை மன்னிக்க மாட்டார் என்பது அவன் கூறிய இந்த வார்தையிலே புரிந்து விட்டது. நல்லபடியாக தான் இதனை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

மதிய உணவு அருந்தப் போது அதை அப்படியே தன் காதலியான வந்தனாவிடம் கூறினான்.

"உனக்கு இது தேவையா நான் தான் முதலையே சொன்னேன். நீ கேட்டியா இப்ப நல்லா அனுபவி அவங்க ரெண்டு பேருக்குள்ள ஏதோ பிரச்சனை அதனால தான் சார் உனக்கு இந்த ப்ராஜெக்ட் கொடுத்தாரு. அது உனக்கு நல்லாவே தெரியும் அப்படி இருக்கும் போது நீ இதை நல்லா பெஸ்ட்டா பண்ணனும். தேவை இல்லாம எல்லாம் பண்ணி இப்ப சொதப்பதான் போகுது பாரு. அவங்க பிரச்சனை அவங்களே சால்வ் பண்ணி இருப்பாங்க. இப்ப நீ இதுல ஏதாவது மிஸ்டேக் பண்ணா மறுபடியும் அவங்களுக்குள்ள இது பெரிய பிரச்சனையா வரும். உனக்கு பிரச்சனை மட்டும் இல்ல அவங்களுக்கும் சேர்த்து தான் "

"ஏய் நான் என்னடி எதிர்பார்த்தேன். இந்த அளவு கோவத்துல இருப்பாங்க அப்படின்னு. சரி விடு எனக்கு அகலி மேல நம்பிக்கை இருக்கு. நிச்சயமா இதை நான் பெஸ்ட்டா முடிப்பேன் "

"கவலைப்படாதே நானும் என்னால முடிஞ்ச அளவு உனக்கு ஹெல்ப் பண்றேன், நல்லபடியா அதை முடிச்சு காட்டலாம். இதை நினைச்சு நீ டென்ஷன் ஆகி உன்னோட உடம்பை கெடுத்துக்காதே. ஏதாவது டவுட்டுன்னா நீ என்கிட்ட கேளு நானும் எல்லாமே ரெபர் பண்ண ஸ்டார்ட் பண்ணிடுறேன் இப்பவே " என்று இருவரும் அலுவலகம் சம்பந்தப்பட்ட விசியம் பற்றி பேச ஆரம்பித்தனர்.

ஏதோ கிடைக்கும் கொஞ்ச நேரம் ஆவது தங்களைப் பற்றி பேசலாம் என நினைத்துக் கொண்டிருந்த பொழுதுகள் கூட இப்பொழுது இவர்களுக்கு இனி இரண்டு வாரங்களும் வேலை சம்பந்தமாகவே பேச வேண்டும் என்பதாகிப் போனது.

தன் காதலியான வந்தனா துணையாக இருப்பாள் என எதிர்பார்த்தே அவளின் பெயரை இந்த ப்ராஜெக்ட்டில் இணைத்துக் கொண்டான் கௌஷிக். ஆனால் விதியோ வேலையை பற்றி மட்டுமே நீங்கள் பேச வேண்டும் என முடிவெடுத்துவிட்டது.

எப்படித்தான் அதனை தொடர்ந்து வந்த நாட்கள் சென்றதென்றே தெரியவில்லை. ஒரு வழியாக டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்து விட்டது. அன்று காலையில் அகலிக்கு மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்தது.

"நீங்க அகலிகை தானே டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வந்துட்டு நீங்க இன்னைக்கு வந்து வாங்கிக்கலாம் " எனக் கூறவே,

"ரொம்ப தேங்க்ஸ் " என தன் கைபேசியை வைத்து கவிமகிழனுக்கு அழைப்பு விடுக்க போனால் பின் என்ன நினைத்தாலோ அவனே தன்னிடம் பேசாத போது தானாகச் சென்று அவனிடம் பேச முடியாது என்ற வீம்போடு இருந்து விட்டாள் அகலிகை.

அதனாலே அவனுக்கு இன்று டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வாங்குவதற்கு மருத்துவமனை செல்வதால் அலுவலகத்திற்கு வர நேரமாகும் என்று ஒரு குறுஞ்செய்தியை மட்டும் அனுப்பி இருந்தாள். அதுவும் தன் அலுவலகத்தில் அவன் முதலாளி என்பதால் மட்டும் வர தாமதமாகும் என முன்னரே கூறி விட்டாள்.

தன் அறையில் அலுவலகம் செல்ல கிளம்பிக் கொண்டிருந்த கவி மகிழன் அந்த குறுஞ்செய்தியை கண்டு, 'ஓ அப்ப இன்னைக்கு முடிவு தெரிஞ்சிடும் போல. எப்படியும் நீயா என்கிட்ட வந்து பேசவேல. அப்ப இருக்குடி இன்னைக்கு உனக்கு கச்சேரி ' என நினைத்து, ' ஓகே.' என பதில் கூறும் செய்தி அனுப்பினான்.

இருவரும் வீட்டில் இருந்து கிளம்பி அவரவர் வேலையைப் பார்க்க சென்று விட்டனர். மருத்துவமனை வந்துச் சேர்ந்த அகலி டாக்ஸியிலிருந்து இறங்க ஏனோ உள்ளமெல்லாம் திக்கென்று துடிக்கும் உணர்வு. ஏற்கனவே நேற்று மழையில் நனைந்ததால் லேசாக காய்ச்சல் அடிப்பது போன்று இருக்க இதில் இந்த செய்தி அவளை ஒரு நிலையில் இல்லாது தவிக்க வைத்தது.

எப்பொழுது அந்த செவிலிப்பெண் அழைத்து தனக்கு விஷயத்தை கூறினாலோ அந்த நொடியில் இருந்து இதயத்துடிப்பின் ஓசையோ பல மடங்கு வேகம் எடுத்து துடிக்கவே கட்டுப்படுத்த முடியாது திணறினாள்.

தன் கரங்களில் இன்னும் சற்று நேரத்தில் அது கிடைத்துவிடும் ஆனால் அதில் தன் எதிர்பார்த்தது மட்டும் இல்லை என்று உறுதியானால் பின் தன்னால்... அதற்கு மேல் அவளால் நினைத்துப் பார்க்க கூட முடியவில்லை.

"ஏம்மா கொஞ்சம் வழி விட்டுக்கோ " வாசலிலே நின்றுவாறு யோசிக்கவே, பின்னே வந்த ஒருவர் அவளை வழி விடக் கூறவே சற்று தள்ளி நின்று இந்த உலகத்துக்கு வந்தாள். பின் மனதினை திடப்படுத்திக் கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்தாள்.

பரிசோதனை முடிவுகள் வாங்கும் இடத்திற்குச் சென்று தன் பெயரினை கூறி டிஎன்ஏ ரிப்போர்ட் வாங்குவதற்கு காத்திருக்க முகம் எல்லாம் வியர்க்க வியர்வை துளியோ பூமியில் சிந்தியது. அங்கு எத்தனையோ பேர் இருந்தாலும் அவளுக்கு மட்டும் தான் இந்த படபடப்பு.

ஏசி ஃபேன் அனைத்துமே ஓடிக் கொண்டு தான் இருந்தது. இயற்கை காற்று கூட மருத்துவமனைக்குள் வந்தது. வியர்வையை அவளாலே கட்டுப்படுத்த முடியவில்லை. கைக்குட்டை கூட நனைந்து விட்டது.

"இந்தாங்க மேடம் உங்களுடைய ரிப்போர்ட் டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணிக்கோங்க " என்க, சரியென வாங்கிக் கொண்டு மருத்துவரை சந்திக்கச் சென்றாள்.

கரங்களில் இருக்கும் அந்த ரிப்போர்ட்டை திறந்துப் பார்த்தாலே அவளுக்கு உண்மை அனைத்தும் தெரிந்து விடும். இருந்தும் ஏனோ மனம் என்பது வரவில்லை. மருத்துவரிடம் தான் அதை கொடுக்க கரங்கள் துடித்தது. மருத்துவரின் அனுமதி வாங்கி உள்ளேச் சென்று தான் வந்த காரணத்தை கூறி கையில் இருந்த ரிப்போர்ட்டை கொடுக்கவே அவரும் அதனை வாங்கிப் பார்த்தார்.

"நீங்க எடுத்த டிஎன்ஏ டெஸ்ட் ரெண்டு பேருக்குமே மேட்ச் ஆகல. உங்க வயித்துல வளர குழந்தைக்கு நீங்க எடுத்த டெஸ்டுக்கும் சம்பந்தம் இல்லை. அவங்களோட குழந்தை இல்லை. ரிப்போர்ட்ல நெகட்டிவ் தான் வந்து இருக்கு " என்று மருத்துவர் கூற, அடுத்த நொடியை அந்த இடத்திலே மயங்கி தான் சரிந்தாள்.

ஏற்கனவே சில நாட்களாக சரியாக உண்ணாததும் வயிற்றில் இருக்கும் கரு அவளை பாடாய்படுத்தி எடுக்க அதனால் ஏற்படும் சோர்வும் இப்பொழுது மருத்துவமனைக்கு நுழைந்ததிலிருந்து படபடப்போடு இருந்த நிகழ்வும் அனைத்துமே பொய்யாகிப் போனது என்றதுமே ஒரு நொடி அப்படியே தலைச் சுற்ற சரிந்து விட்டாள்.

திடீரென இருக்கையில் இருந்து கீழே சரிந்த அகலியைக் கண்ட மருத்துவர் வேகமாக வெளியே இருந்த ஆட்களை வரக் கூறினார். பின் செவிலிப்பெண்ணும் அங்கே வேலை பார்ப்பவர்கள் வந்து அவளை தூக்கி விழிக்க வைக்க முயற்சி செய்தனர்.

அப்பொழுது மருத்துவர் பரிசோதிக்க அவளுக்கு கடுமையான காய்ச்சல் வந்திருப்பதை உணர்ந்தார்.

"இந்த பேஷன் கூட யார் வந்திருக்காங்க. அவங்க சீக்கிரம் வர சொல்லுங்க " என்று மருத்துவர் கூறவே,

" மேடம் இவங்க தனியா தான் வந்தாங்க. இவங்க கூட யாருமே வரல " என்றனர்.

"என்ன சொல்றீங்க பிரக்னண்டா இருக்காங்க தனியா வந்தாங்களா. சரி போய் இவங்களுக்கு ஃபீவரா இருக்கு அட்மிட் பண்ணுங்க. முதல்ல இவங்க வீட்டுக்கு கால் பண்ணி யாரையாவது வர சொல்லுங்க. அவங்களோட மொபைல் நம்பர் இருக்குல்ல அதான் ரிசப்ஷன்ல நம்பர் கொடுத்து இருப்பாங்கல. அதுல இருந்து கால் பண்ணி இன்பார்ம் பண்ணுங்க " என்றதும் சரி என்று அவளைப் பரிசோதித்த மருத்துவர் இப்பொழுது அவள் அனுமதிக்க வேண்டும் அதுவே அவளுக்கும் குழந்தைக்கும் நல்லது என்று கூறி விட்டனர்.

அவளுக்கு டிரிப்ஸ் ஏற தன்னந்தனியாக மயக்கத்தில் மருத்துவமனையில் படுத்து கிடந்தாள். அப்பொழுது தான் இங்கு தன் அலுவலகத்திற்கு வந்து வேலையை ஆரம்பித்த கவி மகிழனுக்கு அழைப்பு வந்தது.

புதிதாக ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வரவே ஒரு வேளை புதிதாக எதுவும் கஸ்டமர் அழைக்கிறார்களோ என்ற நினைப்போடு அதனை எடுத்தான் கவி மகிழன்.

"ஹலோ கவிமகிழன் " என்று மருத்துவமனை வரவேற்பிலிருந்து கேட்கவே,

" ஆமா நான் தான் என்ன வேணும் சொல்லுங்க ?" என்றான்.

"உங்களோட ஒய்ப் அகலிகை இங்க ஹாஸ்பிடலுக்கு வந்தாங்க. மயங்கி விழுந்துட்டாங்க அட்மிட் பண்ணி இருக்கோம். ஹெவி பீவரா இருக்கு. சீக்கிரம் வாங்க சார் " என்று கூறவே

"என்ன சொல்றீங்க மயங்கி விழுந்துட்டாளா அந்த அளவுக்கா அவளால முடியல. இதோ பைவ் மினிட்ஸ்ல வரேன் " எனக் கூறி தன் கைபேசியை வைத்தவனோ வேகமாய் இருக்கையில் இருந்து எழுந்தான்.

கார் கீயை எடுத்தவனின் மனமோ, ' நான் ஏன் இப்ப போகணும். என்ன டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வச்சாலா அப்போ அனுபவிக்கட்டும் ' என நினைக்க,

மற்றொரு மனமோ, 'என்ன இருந்தாலும் நம்ம கூட ஒண்ணா இருந்தவ எனக்கு முடியல எத்தனை நாள் கவனிச்சு இருக்கா. அவ கையால எவ்வளவு தடவை சாப்பிட்டு இருக்கோம் ' என நினைத்து அலுவலகத்தை விட்டு வெளியேறினான்.

அவன் வேகமோடு வெளியேறியதை தன் இருக்கையில் இருந்து அமர்ந்தவாறுக் கண்டாள் வந்தனா. எப்பொழுதுமே அலுவலகத்தில் வேலையில் இருக்கும் பொழுது எந்த இடையூறு வந்தாலும் அதனை பொருட்டாகவே மதிக்காத தன் பாஸ் இப்பொழுது அதி வேகமாகச் செல்லக் காரணம் என்ன ?

தன் தோழி வேறு மருத்துவமனை சென்று ரிசல்ட் வாங்கி வருகிறேன் என்று கூறினாலே, ஒருவேளை எதுவும் பிரச்சனை நடந்திருக்குமோ ? அதனால் தான் இவர் வேகமாகச் செல்கிறாளா என நினைத்தவாறு இருக்க வந்தனா அருகில் வந்தான் கௌஷிக்.

"ஏய் என்ன ஆச்சு நான் சொன்ன கோடிங் முடிச்சிட்டியா அவுட்புட் என்ன வந்தது ?" என்று கௌஷிக் கேட்கவே ,

"பண்ணிக்கிட்டே இருக்கேன் இன்னும் முடியல. இப்ப நீ ஒரு விஷயத்தை கவனிச்சியா " என்று தான் கவனித்ததைப் பற்றி கூறினாள்.

ஆனால் தன் காதலான கௌஷிக்கிடம் அகலி கருவுற்றிருக்கும் விஷயத்தை மட்டும் கூறவில்லை. உடம்புக்கு முடியாமல் மருத்துவமனைச் சென்று இருக்கிறாள் அங்கு எதுவும் பிரச்சனை வந்து அதனால் செல்கிறாரோ என்ற நினைப்பில் தான் கூறி இருக்க, கௌஷிக்கோ அதெல்லாம் மனதில் கூட பதிய வைக்க முடியவில்லை.

அவனுக்கு தான் கொடுத்த வேலையை இப்பொழுது

முடித்தாக வேண்டும் இல்லையே தன் வேலையே போய்விடும் அல்லவா அந்த எண்ணத்தில் தான் இருந்தான்.

தொடரும்...
 

sankareswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 31, 2024
35
40
18
Chennai

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
399
199
43
Tirupur
அச்சோ 😢 இனி மகிழ் ரொம்ப ஓவரா பேசுவானே... 🙄

அகலிகையோட நிலைமைக்கு யார் காரணம்? 🧐

அப்போ ஹீரோ வேற யாரோவா? 🤔 மகிழ் இல்லையா?