• இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏

அரக்கி 7

sankareswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 31, 2024
35
40
18
Chennai
அத்தியாயம் 7

( மருத்துமவனையில் இருக்கும் அகலியின் அருகில் இருக்கும் மகிழன்)


ஏற்கனவே தான் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் கொடுத்த மருத்துவமனை என்பதால் நன்கு தெரிந்த கவிமகிழன் நேராக மருத்துவமனைக்கு தான் வந்துச் சேர்ந்தான்.

வரவேற்பில் வந்ததற்கான காரணத்தைக் கூற அவர்களோ, " நான்காம் நம்பர் ரூம்ல தான் அந்த பேஷண்ட நாங்க அட்மிட் பண்ணி இருக்கோம். அங்க டாக்டர் நர்ஸ் இருப்பாங்க, நீங்க அங்க போகலாம் " என்றதும் சரி எனக் கூறி வேகமாய் அந்த அறை நோக்கி சென்றான்.

அப்பொழுது தான் அவளுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் அனைத்தையும் கொடுத்து விட்டு மருத்துவர் வெளியே வர அவர்களின் முன் வந்து நின்றான்.

"டாக்டர் இப்ப அகலி எப்படி இருக்கா " என்றுக் கேட்கவே,

"ஃபீவர் குறைய கொஞ்சம் டைம் ஆகும் எப்படியும் டூ ஆர் த்ரீ டேஸ் அவங்க இங்க இருக்குற மாதிரி தான் இருக்கும். இந்த டைம்ல அவங்க ரொம்ப கேர் ஃபுல்லா இருக்கணும். இல்லன்னா குழந்தைக்கு தான் பாதிப்பு கொஞ்சம் அழுத்தம் இல்லாம அவங்களை பார்த்துக்கோங்க " என்றதும் சரி என தலையை அசைக்க மருத்துவர் சென்று விட்டார்

அறைக்குள் நுழைய ஒரு கையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க விழி மூடி படுத்தவாறு இருந்தாள் அகலிகை.

அவளை முழுவதும் ஆராய்ந்தவனின் பார்வையோ அவள் அருகில் இருந்த ரிப்போர்ட்டின் மீது தான் பதிந்தது. அதை எடுத்துப் பார்க்க அது இப்பொழுது அவளைப் பரிசோதித்து இருக்கும் சிகிச்சைக்கான ரிப்போர்ட்டும் அதன் பின்னே டி என் ஏ பரிசோதனை முடிவும் இருந்தது.

அதனைக் கண்டவனுக்கு அவள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்பதால் தான் மயங்கி விட்டால் எனப் புரிந்தது. ஆனால் அவளுக்கு காய்ச்சல் இருந்ததை ஏன் தன்னிடம் ஒரு வார்த்தை கூட அவள் கூறவில்லை ?

'நான் தான் ஆரம்பத்தில இருந்தே உன்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன்ல. ஆனா நீ கேட்டியா இப்ப பாரு உன்னோட நிலைமை தான் மோசமாயிட்டு. எங்க சொல் பேச்சை கேட்கிற. ஆனா இப்ப இதுக்கு காரணம் நான் இல்லைன்னு உறுதியா உனக்கு தெரிஞ்சிருச்சு. உண்மையான ஆள் உனக்கு தெரியுமா இல்ல கண்டுபிடிக்க போறியா. அது உன்னோட விருப்பம் தான். இந்த விஷயத்துல நான் இனிமேல் தலையிடவே மாட்டேன். நீ எத்தன நாள் என் கூட இருந்திருக்க. உனக்கும் எனக்கும் ஒரு நல்ல பான்டிங் இருந்தது. அதுக்காக மட்டும் தான் நான் இப்போ உன் பக்கத்துல இருக்கேன். ஆனா எப்ப நீ என்ன நம்பவில்லையோ அப்பவே நான் உன் மேல வச்சிருந்தேன் காதலையும் பாசத்தையும் இழந்துட்டேன். நீ எனக்கு இத்தனை நாள் ஒரு பூஸ்ட்டா மருந்தா தான் இருந்தே. ஆனா இனி நீ அப்படி இருக்க என்னால அனுமதிக்க முடியாது ' என்று மயங்கிய நிலையில் இருந்தவளிடம் மனதில் இருப்பதை வெளிப்படுத்தினான்.

அவனால் அங்கு அவளை விட்டு நகர முடியவில்லை. அவளுக்கு என்று இருப்பது இப்போதைக்கு அவன் ஒருவனே, தோழி என்றால் வந்தனா மட்டும் தான் இருக்கிறாள். இவளின் பெற்றோருக்கு அழைத்து தான் தகவல் கூறினால் தன்னிடம் கேட்காமல் ஏன் கூறினாய் என்று எழுந்து வந்த பின் சண்டையிட்டால் என்ன செய்ய முடியும் ? விழி திறக்கும் வரை காத்திருக்கலாம்' என நினைத்து தன் வேலைகள் அனைத்தையும் ஒதுக்க வைத்து அவளுக்காக அந்த மருத்துவமனையில் காத்திருந்தான். நேரங்கள் கடக்க இரவு நேரம் போல் தான் கண் விழித்தாள் அகலிகை.

அப்பொழுது அவளுக்கு காய்ச்சல் சற்று குறைந்திருந்தது. தான் எங்கு இருக்கிறோம் மருத்துவமனை என்பது விழிகளைச் சுற்றி கண்டதில் புரிந்தது. எப்படி அனுமதித்தார்கள் தன்னை என யோசித்துப் பார்க்கும் பொழுது தான் அவளுக்குப் புரிந்தது. டிஎன்ஏ ரிசல்ட் தான் எதிர்பார்த்தது வரவில்லை நெகட்டிவ் என்று வந்தது.

"ஆர் யூ ஓகே ஏதாவது பெயின் இருக்குன்னா சொல்லு " என்ற சத்தம் அவளின் செவியில் வந்து விழ அது மகிழன் குரல் என்பது திரும்பாமலே உணர்ந்து கொண்டாள்.

நேராக விட்டத்தைப் பார்த்தவாறு யோசித்து கொண்டிருந்தவள் இப்பொழுது பக்கவாட்டில் திரும்ப அங்கிருந்த ஒரு இருக்கையில் தான் தள்ளி அமர்ந்தவாறு இருந்தான்.

' தான் கண்விழித்திருக்க எழுந்து வந்து அக்கறையாக அவன் கேட்டது போல் இவ்வார்த்தை இல்லை. தனக்காக அவன் துடிக்கிறானா இல்லை தான் ஏமாற்றம் கொண்டதால் தன்னை இளக்காரமாக நினைக்கிறானா ?' என்ற பார்வையில் தான் அவனை கண்டாள்.

"என்ன அப்படி பார்த்துட்டு இருக்க இனிமே ரெண்டு நாள் நீ எங்கே தான் இருக்கணும்ன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. அப்ப தான் உன் வயித்துல வளர உன்னோட குழந்தைக்கு நல்லதாம். இப்ப என்ன பண்ணலாம் ? என்னால ரெண்டு நாளும் உன் பக்கத்தில இருந்து பார்க்க முடியுமான்னு தெரியல. உன்னோட பேரன்ட்ஸ்க்கு கால் பண்ணிசொல்லணும்ன்னா சொல்லு உன்னோட விருப்பம். அல்லது நான் நேரம் கிடைக்கும் போது வரேன் " என்று யாரிடமோ பேசுவதுப் போல் அவன் பேச குற்ற உணர்வில் தவித்தாள் அகலிகை.

அவன் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு காரணமே இல்லை என்றாலும் சிறிதளவு கூடவா அவனை தான் பாதித்ததில்லை. தன்னை பார்த்து அவன் இப்படி பேசுகிறானே ? மனமோ ஆதங்கத்தோடு தவியாய் தவிக்க, பசியோ வயிற்றைக் கிள்ளியது.

"இப்படி அமைதியாகவே இருந்தா என்ன அர்த்தம் ? நான் சொல்லும் போது நீ ஏன் என்ன நம்பாம போன ? நீ என்ன இந்த ரெண்டு வருஷம் புரிஞ்சிக்கவே இல்ல அப்படிங்கிறதை இந்த ஒரு விஷயத்துல நிரூபவிச்சு காட்டிட்டே "

"ப்ளீஸ் மகிழன் நானே ரொம்ப நொந்து போய் இருக்கேன். இதுக்கு மேல வார்த்தையால வதைக்காதே இதை பத்தி பேசாதே எல்லாம் என் தப்பு தான் நான் என்ன பார். நீ தயவு செய்து இங்கே இருந்து போ. என்னால உன் முகத்தை பார்க்க முடியவில்லை "

"குத்தம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குதோ ஆனா என்னால அப்படி உன்ன விட்டுட்டு போக முடியாது. உன்ன பாத்துக்க யாராவது ஒரு ஆளு நீ அரேஞ்ச் பண்ணு நான் போறேன் "

"உனக்கு தான் தெரியும் இல்ல எனக்கு இங்க யாருமே கிடையாதுன்னு. இந்த விஷயத்தை என்னால என் பேரண்ட்ஸ் கிட்ட சொல்லவே முடியாது. காரணம் யாருன்னு கேட்டா நான் யாரை சொல்லுவேன். அதை நான் கண்டுபிடிச்சா மட்டும் தான் அவங்க கிட்ட சொல்ல முடியும் என்னால. அவங்க என்ன நம்பி இங்க தனியா இருக்க விட்டாங்க. ஆனா நான் அவங்களுக்கு எவ்வளோ பெரிய துரோகத்தை பண்ணிட்டேன் "

"நீ உன்னோட பெத்தவங்களுக்கு மட்டும் துரோகம் பண்ணல. எனக்கும் சேர்ந்து தான் துரோகம் பண்ணி இருக்கே. உனக்கு தெரியாம எப்படி உன்னை ஒருத்தன் அப்யூஸ் பண்ணி இருப்பான். அதுவும் வயித்துல குழந்தையை தாங்குற அளவுக்கு அவன் நடந்து இருக்கிறான் நீ தான் அவனுக்கு ஒத்துழைச்சி இருந்திருக்கே " என்று கூறவே,

"ஆரம்பத்தில இருந்து நீ இந்த வார்த்தையை தான் என்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்குற. சத்தியமா சொல்றேன் அன்னைக்கு என் கண்ணு முன்னாடி நீ தான் இருந்தே. நான் உன் கூட தான் ரிலேஷன்ஷிப்ல இருந்தேன். ஆனா அதெல்லாம் இன்னிக்கி பொய் என்னால அதை உணர முடியல. நானே வேதனையில் இருக்குறேன். என்னை திரும்பத் திரும்ப நீ காயப்படுத்தாதே."

"சரிப்பா நான் எதுவுமே சொல்லல இதுக்கப்புறம் நீ என்ன பண்ற ஐடியால இருக்கே. இப்ப ஹாஸ்பிட்டல் இருக்குறே இப்பவே இதை நீ அபோஷன் பண்ணிடு அது தான் உனக்கு பெஸ்ட். வருங்காலத்தில் உன்னால இதை எப்படி வளர்க்க முடியும் ? நம்ம ஃபேமிலி ஒத்துக்கிட்டா நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா நீ இந்த குழந்தையை வச்சிருந்தா என்னால அது முடியாது. இந்த ரிலேஷன்ஷிப்லையும் என்னால இருக்க முடியாது " என்க,

"நான் இந்த குழந்தை அபார்ஷன் பண்ணனும்னு தான் நினைக்கிறேன். ஆனா இதுக்கு காரணம் யாரு ? எதுக்காக அவன் இப்படி பண்ணுனான். அவனை கண்டுபிடிச்சி நான் தண்டனை வாங்கி தரணும். அதற்கான ஆதாரம் எனக்கு தேவைப்படுது. அதனால இந்த குழந்தையை " அவளால் ஒரு மனதோடு இருக்க முடியாது தவிர்க்கவே,

"அதுக்காக உண்மையை கண்டுபிடிக்கிற வரை இந்த குழந்தையை வச்சிக்கணும் சொல்றியா ? அதான் ரிப்போர்ட் டெஸ்ட் ரிசல்ட் இருக்குல்ல. நீ ஹாஸ்பிட்டல எல்லாமே பார்த்திருக்கேல அதுவே போதும். அதை வச்சே நம்ம ஆள கண்டுபிடிச்சி கேஸ் போட்டு தண்டனை வாங்கி கொடுக்கலாம். ஏதோ ஒரு விபத்து நெனச்சி இத மறந்து இப்பவே டாக்டர் கிட்ட பேசு. எனக்கு நாளைக்கு முக்கியமான கஸ்டமரை நான் பார்க்க போகணும். அதனால நீ உன் பிரண்ட் வந்தனாவை வர வச்சுக்கோ. இல்லன்னா நீ தனியா மேனேஜ் பண்ணிப்பியான்னு பார்த்துக்கோ " என்கவே, அவளோ தலையை மட்டும் அசைத்தாள்.

அந்த நொடி சரியாக செவிலி பெண் உள்ளே வர, "இப்போ காய்ச்சல் எப்படி இருக்கு ?" என்றுக் கேட்கவே

"பரவால்ல கொஞ்சம் டயர்டா இருக்கு அவ்வளவு தான் "

"சரி ஓகே ஏதாவது ஜூஸ் அல்லது ஃபுட் இப்ப நீங்க எடுத்துக்கோங்க. அப்ப தான் உங்களுக்கு அசதி போகும். இது முடியும் போது எனக்கு இன்பார்ம் மட்டும் பண்ணுங்க " என்றவளோ டிரிப்ஸ் ஏத்தி விட்டு அங்கிருந்துச் சென்று விட,

"சரி ஓகே அப்போ உனக்கு சாப்பிடுறதுக்கு வழக்கம் போல பிரியாணி வாங்கிட்டு வந்துடவா " என்றான்.

ஏதோ தன் வீட்டில் இருப்பது போல் அல்லவா இவன் இவ்வாறு தன்னிடம் கேட்கிறான் ? என நினைத்தவளோ அவளால் அப்பொழுது அதை உண்ணக் கூட ஏனோ பிடிக்கவில்லை. முன்பெல்லாம் தான் விரும்பி சாப்பிட்ட உணவு இப்பொழுது எல்லாம் அவளை முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு வெறுப்பை உணரச் செய்தது.

பிடிக்காத உணவுகளை எல்லாம் உண்டு பார்க்க வேண்டும் என்ற ஆசையும் தோன்றியது.

"இல்ல எனக்கு இடியாப்பம் தேங்காய் பால் அந்த மாதிரி ஏதாவது ஃபுட் வாங்கிட்டு வரியா ?" எனக் கேட்கவே, ஆச்சரியம் தான் கொண்டான். அதையெல்லாம் சாப்பிடுகிறேன் என்று கூறுகிறாள்.

"அது தான் உனக்கு பிடிக்காதே "

"ஆனா இப்ப எனக்கு அது தான் சாப்பிடணும் போல இருக்கு. ஏன்னு தெரியல."

"சரி ஓகே நான் வாங்கிட்டு வரேன் " எனக் கூறி அங்கிருந்து வெளியேறி சென்றான்.

அங்கிருந்த தன் கைபேசியை எடுத்து பார்க்கவே அதில் வந்தனா தனக்கு பலமுறை முயற்சித்து இருக்கிறாள் என்பது குறுஞ்செய்தியாக வந்தது. இப்பொழுது இருக்கும் நிலையில் அவளுக்கு அழைத்து பேசக்கூட மனமில்லை. குறுஞ்செய்தியில் நாளை பேசுறேன் என்று அனுப்பிவிட்டு கைபேசியை வைத்தாள்.

லேசாக சாய்ந்து அமர்ந்து விழி மூடிய அவளின் விழிகளுக்குள் தன்னை எண்ணியே அவமானமாக தான் உணர்ந்தாள்.

நிதானம் இழக்கும் அளவுக்கு தன் செயல் இருந்து இப்பொழுது தான் இந்த அளவு பாதித்திருக்கிறோம் என்பதை அவளாலே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நேரம் செல்ல அவளுக்கான இரவு உணவினை வாங்கிக்கொண்டு வரவே ஒரு பிளேட்டில் வைத்து கொடுக்க மெல்ல அதனை எடுத்து உண்டாள்.

"நீ சாப்டியா " என்றுக் கேட்க,

"சாப்பிட்டேன். சரி நான் வெளியில இருக்கிறேன் " எனக் கூறி வெளியேச் சென்று விட்டான்.

இவனிடம் இதற்கு மேல் தான் எதையும் எதிர்பார்க்க முடியாது. தன் மீது இவன் கோபமாக இருந்தாலும் தனக்காக இப்பொழுது வந்து தனக்கு தேவையானதை செய்கிறானே அதுவே அவனின் மீது இருந்த நேசத்தை மேலும் அதிகரிக்க செய்தது. ஆனால் தான் அதற்
கு தகுதியான ஆள் இப்பொழுது இல்லை என்பதை அவள் உணர்ந்த நொடி நிலையில்லாது தவித்தாள்.

தொடரும்...
 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
545
164
43
Dindugal
ரொம்ப பாவம் இந்த பொண்ணு..
இவனை என்ன செய்றது ப்லடி
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
267
149
43
Theni
அய்யோ என்ன செய்ய போறா அகலி?
 

Vimala

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 10, 2023
112
48
28
Trichy
அப்படியே போய் தொலையட்டும்னு விட்டுடு அவனை/.
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
399
199
43
Tirupur
அவளோட நிலை ரொம்பவே கஷ்டம்தான். யாரு என்னன்னு தெரியாம... 😢 எப்படி கண்டுபிடிப்பா?