• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அள்ளிக் கொண்ட தென்றல் - 20.

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
பகுதி – 20.

மறுநாள் பிரபஞ்சன் அலுவலகத்துக்கு அத்தனை இறுக்கமாகத்தான் வந்தான். அவனுக்கோ, தியாகு அவளிடம் பேசுவதை வைத்து, அவளால் அவனை கணிக்க முடியவில்லையா? அவனைத் தவிர்க்க முடியவில்லையா என்ற கோபம்.

அவன் அத்தனை கோபமாக இருப்பதைப் பார்த்த ஷீபா, தன்னால் இதற்கு எதையாவது செய்ய முடியுமா? என யோசித்தாள்.

திடுமென ஒரு ஐடியா பளிச்சிட, “ரஞ்சா, மேலே கொஞ்சம் ஒதுங்க வைக்கணும்னு சொன்னியே... நான் அதைப் பார்க்கறதுக்கு ஆளை அனுப்பறேன். நீ கொஞ்சம் கூட இருந்து பார்த்துக்கோ...” அவள் சொல்ல, அவளை முறைத்தான்.

“என்ன... சேர்த்து வைக்கப் பார்க்கறியா?” அவன் நக்கலாக வினவ, அவனை முறைத்தாள்.

“ம்கும்... நீயும் எதுவும் செய்ய மாட்ட.... நாங்களும் செய்யக் கூடாதுன்னா... அது என்னடா கணக்கு?” அவனிடம் சாடியவள், தென்றலை அழைத்தாள்.

“சொல்லுங்கக்கா...” அவள் அங்கே வர,

“மேலே கொஞ்சம் வேலை இருக்கு... நீ என்னன்னு பார்த்துட்டு வாயேன்” அவள் சொல்ல, எதற்கென புரியவில்லை என்றாலும், அவள் சொன்னதைச் செய்யக் கிளம்பினாள்.

அவள் மாடிப்படிக்கு அருகே வர, அங்கே வந்தான் தியாகு.

“ஹாய் தென்றல்... குட் மார்னிங்... எங்கே மாடிக்கா போறீங்க?” அவளிடம் எதையாவது பேச அவன் விரும்பினான்.

“குட் மார்னிங் தியாகு சார்... நேத்து நைட் நீங்க துணைக்கு வந்ததில் ரொம்பவே சந்தோஷம். அப்போவே தேங்க்ஸ் சொல்ல நினைச்சேன், நீங்க உடனே கிளம்பிட்டீங்க” முதல் படியில் காலை வைத்தவள், அங்கேயே நின்று பேசினாள்.

“இந்த தியாகுவுக்கு என்ன வேலை இது?” தங்கள் அறைக்குள் இருந்து பார்த்தால், அனைத்து இடங்களும் துல்லியமாகத் தெரியும் என்பதால், சன்னமாக முனகினாள் ஷீபா.

“அவன் அவளை ஒன்சைடா விரும்பறான்...” பிரபஞ்சன் சொல்ல,

“என்ன...? லூசா நீ? அதைப் பார்த்துட்டு பேசாம இருக்கறியா?” படபடவென பொரிந்தாள்.

“என்னை என்ன செய்யச் சொல்ற? அவ பேசாமத்தானே இருக்கா?” அவன் கேட்க, அவளோ விழித்தாள்.

“தென்றலுக்கு அந்த அளவுக்கு மனுஷங்களை எடை போடத் தெரியுமான்னு தெரியலையே ரஞ்சா. அவ இன்னும் அந்த அளவுக்கு வளரலை” அவள் தென்றலைப் புரிந்தவளாக சொல்ல, அவனோ முறைத்தான்.

“இப்படியே சொல்லிச் சொல்லி நாமளே நம்மளை ஏமாத்திக்க வேண்டியதுதான். இன்னும் வளரலைன்னா... இருபத்திநாலு வயசுக்கு மேலே ஆகல?” அவன் வெடிக்க, அவன் நிலை அவளுக்குப் புரிந்தது.

“வயசு வேற, அனுபவம் வேற, வாழும் சூழ்நிலைகள் கற்றுக் கொடுக்கற பாடம் வேற ரஞ்சா. உனக்கு அது தெரியாததா?” அவனுக்குப் புரிய வைக்க முயன்றாள்.

“ஏன்... இந்த சமாதானம் எல்லாம் எனக்கு மட்டுமே எல்லாரும் சொல்றீங்க? அவளுக்கு எதுவும் கிடையாதா?” சற்று ஆத்திரமாகவே குரல் கொடுத்தான்.

‘அவளிடமும் பேசியாச்சு...’ எனச் சொன்னால், அதற்கும் கோபப்படுவான் என்பதால் சற்று அமைதியானாள்.

அவளிடம் கேட்டால், பிரபஞ்சனிடம் இப்படியே, எதுவும் நடவாததுபோல் வந்துவிடுவது, அவனுக்குச் சரியாகச் செய்யும் நியாயமில்லை என அவள் சொல்வதை எந்த விதத்தில் எடுத்துக்கொள்ள என அனைவரும் குழம்பிப் போயிருக்க, அதை இவனிடம் என்னவென விளக்க?

“எல்லாம் கொஞ்ச நாள்தான்... நான் தியாகுகிட்டே பேசறேன்” எழப்போனவளை கையை அழுத்தமாகப் பிடித்து தடுத்தான்.

“ஏன் அவளுக்கு வாய் இல்லையா? அவளே சொல்லட்டும்...” அவன் முடித்துவிட, அவனது அந்த வார்த்தைகளை மீறும் தைரியம் அவளுக்கு இருக்கவில்லை. ஏனென்றால் அவன் அத்தனை இறுக்கமாக, கோபமாக அதைச் சொல்லி இருந்தான்.

“ஏன்டா... உன்னை நான்தான் மாடிக்குப் போன்னு சொன்னேன் தானே?” அவள் கடுப்பாக, அவளைப் பார்த்து முறைத்தான்.

அதைப் பார்த்தவள்... “என்ன... என்ன பார்வை வேண்டிக் கிடக்கு?” அதே கடுப்போடு கேட்டாள்.

“அவன்கூட என்னை போட்டி போடச் சொல்றியா?” அவன் கேட்க, அருகே இருந்த ஃபயிளால் அவன் கையிலேயே அடித்தாள்.

“என்னடா பேச்சு இது?”.

“நீ சொல்றதைப் பார்த்தா எனக்கு அப்படித்தான் தோணுது. நேத்து வரைக்கும் அவ அப்பன், இப்போ இவன்... நாளைக்கு எவனோன்னு”.

“ச்ச்சே... ச்சே... என்ன இப்படியெல்லாம் யோசிக்கற? அவ மனசு உனக்குப் புரியவே இல்லையாடா?” சற்று வருத்தமாகவே கேட்டாள்.

“இனிமேல் நானா எல்லாம் எதையும் எனக்குப் புரிஞ்சுக்க வேண்டாம். நான் ஒன்னும் அவளை லவ் பண்ணி, பெத்தவங்க சம்மதம் இல்லாமல், இழுத்துட்டு போய், கட்டாயக் கல்யாணம் எல்லாம் பண்ணிக்கலை தானே?” அவன் முறுக்கிக் கொள்ள, அவளுக்கு ஐயோ என்று இருந்தது.

“அவ அப்பனை விட்டுட்டியே...” அவள் நக்கலாக வினவ,

“அவனை எல்லாம் நான் மனுஷனா கூட கன்சிடர் பண்ணலை... அவனைப்பத்தி நீ பேசாதே... எனக்கு அவன் பேச்சை எடுத்தாலே, அவனைக் கொல்ற அளவுக்கு ஆத்திரம் வருது” அவன் பல்லைக் கடிக்க, ‘ஏனடா இந்த டாப்பிக்கை எடுத்தோம்? என நொந்து போனாள்.

“டேய்... இப்போ எதுக்கு இவ்வளவு டென்ஷன்? விடு...” அவனை அமைதிப்படுத்த முயன்றாள்.

“நானா ஆரம்பிச்சேன்? நீதானே...?” அவன் பார்வையை அங்கே படிக்கட்டில் நிலைக்க விட்டவாறு கேட்க, இவளோ பதட்டமானாள்.

இங்கே தியாகுவோ... “நான் கிளம்பிட்டா என்ன? அதான் என்னோட போன் நம்பர் உங்ககிட்டே இருந்ததே... அதுக்கு கால் பண்ணி இருக்கலாமே” அவன் சொல்ல, அப்பொழுதுதான் சற்று உசாரானாள்.

“எதுக்கு அது? நான் அப்படியெல்லாம் யாருக்கும் மெஸ்சேஜ் பண்றது இல்லை” அதென்னவோ எப்பொழுது அவளது தகப்பன், பிரபஞ்சனுக்கு அழைக்க, செய்தியனுப்பக் கூடாது என அவனது நம்பரை ப்ளாக் செய்தாரோ, அதன் பிறகு அவள் யாருக்குமே அதைச் செய்யப் பிடிக்காமல்தான் அலைபேசியை வைத்திருந்தாள்.

ஒரு அவசரத் தேவைக்காக என அழைத்து பேசுவாளே தவிர, மற்றவர்கள் அழைக்காமல் அவள் தன் அலைபேசியை உபயோகப் படுத்தக் கூட விரும்பியது இல்லை.

“ஓ... அது ஏன் அப்படி?” அவன் கேட்க, அதற்கு அவனுக்கு பதில் சொல்ல அவளுக்குப் பிடிக்கவில்லை.

அவன் தன் எல்லைக்கோட்டை தாண்டுவது அவளுக்குப் புரியத் துவங்கி இருந்தது.

“சாரி சார்... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு...” பட்டென சொன்னவள், வேகமாகத் திரும்பி படிகளில் நடக்க முயல, கால் இடறியது.

அவள் பின்னாலேயே இருந்த தியாகு அதைப் பார்த்து பதறியவன், இரண்டே எட்டில் அவளை நெருங்கி, அவளது கரத்தைப் பற்றி தடுத்து நிறுத்தினான்.

அவன் பிடிக்கவில்லை என்றாலும், அவளாகவே பேலன்ஸ் செய்திருப்பாள் என்றாலும், அதை அவன் செய்திருக்க, வேகமாக அவனது கரத்தை உதறியவள், படிகளில் ஏறினாள்.

“சாரி, நான் வேணும்னு பண்ணலை... நீங்க விழப் போனீங்க அதான் ஹெல்ப் பண்ண ட்ரை பண்ணேன்” அவள் முதுகின் பின்னால் குரல் கொடுத்தான்.

“எனக்கு உங்க ஹெல்ப் வேண்டாம் தியாகு சார்...” முகம் மொத்தமும் மாறிவிட பதில் கொடுத்தவள், மாடி ஏறினாள்.

அவள் செல்லவே, அவள் தன்னைத் தவறாக எண்ணிவிட்டாளோ என தியாகு பதறினான். அவளைப்பற்றி தன் வீட்டில் பேசி, அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினான்.

அதற்கு முன்னால், எப்படியாவது தன் நேசத்தை அவளிடம் சொல்லிவிடத்தான் அவளையே சுற்றி வருகிறான். அது புரியாமல், எங்கே அவள் தன்னை ஒரு தவறானவனாக எண்ணி விட்டாளோ எனக் கவலையானான்.

அவள் பின்னாலேயே செல்லச் சொல்லி மனம் உந்தினாலும், மாடிக்கு இதுவரை யாரும் செல்ல அனுமதிக்கப்பட்டதில்லை என்பதால் படிகளிலேயே தேங்கினான்.

அவள் திரும்பி வருகையில், அவளிடம் விஷயத்தைச் சொல்லிவிட வேண்டும் என அவன் காத்திருக்க, அங்கே நடந்த விஷயங்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“தென்றல் இப்போதான் தெளிஞ்சிருக்கா... இவன் எதுக்கு இன்னும் அங்கேயே நிக்கறான்?” அவர்கள் பேசியது கேட்கவில்லை என்றாலும், தென்றலின் முகபாவமும், கோபமும், அவனது தடுமாற்ற முகமும் அவர்களுக்கு அங்கே நடந்ததை சற்று தெளிவாகவே விளக்கி இருந்தது.

ஷீபா சற்று எரிச்சலாக முனக, “லவ்வை சொல்ல நிக்கறான் போல?” அவனைக் கணித்தவனாக பிரபஞ்சன் சொல்ல, பட்டென இருக்கையில் இருந்து எழுந்துகொண்டாள்.

“அவன...” அவள் பல்லைக் கடித்தவாறு கிளம்ப,

“நீ மட்டும் இப்போ ஏதாவது அவன்கிட்ட சொல்லு... உனக்கு இங்கே இதுதான் கடைசி நாளா இருக்கும்” அவன் பின்னால் இருந்து கத்தவே, அவனைப் பார்த்து முறைத்தாள்.

“அப்பா சாமி... அவ உன் பொண்டாட்டின்னு... அவ வாயாலேயே அவன் தெரிஞ்சுக்கட்டும். இப்போ அவனுக்கு நான் ஒரு வேலை வச்சிருக்கேன்... அதைச் சொல்லப் போறேன். இப்போ நான் போகவா? இல்லன்னா இருக்கவா?” அவள் கோபமாக, அவன் சிரித்துவிட்டான்.

“சரி போ...” அவன் அனுமதியளிக்கவே, வேகமாக தியாகுவை நோக்கிச் சென்றாள்.

“என்ன தியாகு? படிக்கட்டில் நின்னுட்டு என்ன பண்றீங்க?” அவள் கைகளைக் கட்டிக் கொள்ள, அவன் சற்று தடுமாறினான்.

“அது... மேம்... மேலே...”.

“மேலே என்ன? ஸ்பைடர் ஓடுதா? பிடிக்கப் போறீங்களா? அதுக்குத்தான் இங்கே நிக்கறீங்களா? உங்களுக்கு வேலை எதுவும் இல்ல?” பல்லைக் கடித்தவாறே கேட்டாள்.

இவனால்தான் பிரபஞ்சன் தென்றலின் பின்னால் செல்லாமல், அறைக்குள் அமர்ந்து கோபப்பட்டுக் கொண்டு இருக்கிறான் என அவளுக்குத் தெரியுமே.

“வேலை... இருக்கு...” அவனுக்கு இப்பொழுது வேலையை விட, தென்றலிடம் பேசி, தன் வாழ்க்கையை சரி செய்வதுதான் முக்கியமாக இருந்தது.

“அப்போ அதைப் போய் பாருங்க...” அவள் அழுத்திச் சொல்லவே, வேறு வழியின்றி, மாடியை ஒரு பார்வை பார்த்தவாறே அங்கிருந்து அகன்றான்.

அவன் அங்கே பார்ப்பதைப் பார்த்தவள், “இப்போ கூட அடங்க மாட்டேங்கறானே’ எண்ணியவாறே மாடிக்குச் சென்றாள்.

அங்கே பிரபஞ்சனை எதிர்பார்த்துக் காத்திருந்த தென்றல், அவன் வராமல் போகவே, “அக்கா, அவங்க வரல?” அவளது முதல் கேள்வியே அதுவாகத்தான் இருந்தது.

“அவனுக்கு ஏதோ வேலை போல... சரி... இங்கே ஏதாவது செய்யலாமான்னு பாத்தியா?” பேச்சை மாற்றினாள்.

“இங்கே ரொம்ப நல்லா இருக்குக்கா... மூணு பெட் ரூம், ஒரு பெரிய ஹால்... ரெண்டு பால்க்கனி... அழகா இருக்கு. ஆனா எல்லாமே காலியா இருக்கே” அவள் கேட்க,
 
Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
“எல்லா ரூமையும் நல்லா பாத்தியா?” அவள் கேட்கவே, வேகமாக தங்களுக்கு எதிரில் இருந்த ஒரு அறையைத் திறந்து பார்த்தாள்.

அங்கே ஒரு டபிள்பெட் கீழே விரிக்கப் பட்டிருக்க, ஒரு பீரோ, டேபிள் மேசை என அங்கே இருப்பதைப் பார்த்தவள் புருவம் நெரித்தாள்.

“அக்கா, இதெல்லாம்...?”.

“ரஞ்சனோட திங்க்ஸ் தான்... அவங்க அம்மா இறந்த பிறகு, பாதி நான் அங்கே இருக்கப் பிடிக்காமல், இங்கேதான் வந்து இருக்கறான். தனிமை அவனை தின்னுட்டு இருக்கு தென்றல்... உனக்கு அவனைப் புரியுதா இல்லையா?” சற்று வருத்தமாக கேட்டாள்.

அவள் அப்படிக் கேட்கவே, தென்றலின் கண்களில் கண்ணீர் கடகடவென இறங்கிவிட, “அவங்களை நான் பார்த்துப்பேன்க்கா... இன்னும் கொஞ்ச நாள்... எனக்கு அவங்ககிட்டே பேசிட்டா போதும்” அவளுக்கான தனிமையை அவன் சுத்தமாக கொடுக்க மறுக்கவே, தடுமாறிக் கொண்டிருந்தாள்.

“ஹம்... என்னவோ போ... சீக்கிரம் அவன்கிட்டே வந்துடு...” அவள் சொல்ல, கண்ணீர் நிறைந்த விழிகளோடு தலை அசைத்தாள்.

“சரி வா... கீழே போகலாம்...” அவள் அழைக்க,

“அவங்க வரல?” அங்கிருந்து நகர மறுத்து கேட்டாள்.

“நீ பேசாம அவன் ரூமுக்கே போய் பேசு... இல்லன்னா வேலைக்கே ஆக மாட்டான்” அவள் சொல்லவே, புருவம் நெரித்தாள்.

“என்மேல புதுசா கோபமா இருக்காங்களா?” அவள் அப்படிக் கேட்கவே, நின்று அவள் முகம் பார்த்தாள்.

“ஏன் அப்படிக் கேட்கற?”.

“என்மேல என்ன கோபம்ன்னாலும், எனக்கு ஒரு அவசரத் தேவைன்னா, அவங்க விட்டுக் கொடுக்கவே மாட்டாங்க. நேத்தைக்கு தியாகுவை கூட அனுப்பும்போதே எனக்கு சந்தேகம் தான்...

“இப்போ என்னன்னா, தியாகு நடந்துக்கற விதத்தில் எனக்கு கொஞ்சம் சந்தேகமா இருக்கு” அவள் சொல்லச் சொல்ல, ‘இவளையா நான் சின்னப்பெண்’ எனச் சொன்னோம் என எண்ணிக் கொண்டாள்.

“அது...” அவள் பேசப் போகையில், கையில் இருந்த அலைபேசி அழைக்க, அதில் பிரபஞ்சனின் எண் ஒளிரவே, அதற்கு மேலே அங்கே நிற்க முடியாது என்பது புரிய, அவளோடு கீழே இறங்கி வந்துவிட்டாள்.

அவர்கள் வருகையில், அவன் தங்களது அறைக்கு வெளியே நின்று அவளையே கூர்மையாகப் பார்க்க, ‘நான் ஒன்றும் சொல்லவில்லைப்பா...’ எனக் கண்களை உருட்டி, அவள் சொல்லவே, அமைதியானவன் அறைக்குள் சென்றுவிட்டான்.

அவன் பின்னால் தென்றல் செல்ல நினைக்கையில், அவளது மேஜையின்மேல் இருந்த தொலைப்பேசி அவளை அழைக்கவே, அதை அட்டன் செய்யப் போனாள்.

சற்று நேரத்தில், வேலை அவளை இழுத்துக் கொள்ள, அதில் மூழ்கிப் போனாள். அவள் சற்று ரிலாக்ஸ் ஆகி, நிமிர்ந்து பார்க்கையில் நேரம் பதினோரு மணியைக்கடந்திருக்க, கொஞ்சம் தலையை வலிப்பதுபோல் இருந்தது.

‘சரி கொஞ்சம் காபி போட்டு குடிக்கலாம்’ என எண்ணியவள் கிச்சனுக்குச் செல்ல, தியாகுவும் சரி, பிரபஞ்சனும் சரி அவளைக் கவனித்துக் கொண்டே இருந்தார்கள்.

அவள் சென்ற சில நிமிடங்கள் கடக்க, தியாகுவும் எழுந்து கிச்சனுக்குச் சென்றான்.

அவனது வருகையைப் பார்த்த தென்றல், எதுவும் சொல்லாமல் தன்போக்கில் வேலையைப் பார்க்க, “டீ போடறீங்களா? எனக்கும் ஒரு டீ கிடைக்குமா?” அவன் கேட்கவே, பொதுவாகவே அங்கே யார் டீ போட்டாலும், அவர்களுக்கு மட்டும் போட்டுக்கொள்வது இல்லை என்பதால், அவனுக்கும் சேர்த்தே போட்டிருந்தாள்.

“தர்றேன்...” சொன்னவள், டீத்தூளையும், சீனியையும் சேர்த்து ஒன்றாகவே அதைக் கொதிக்கவிட, தியாகுவோ அவளிடம் பேசுவதற்கு ஒத்திகையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நான் எடுத்துட்டு வர்றேன்...” ‘நீ இங்கே இருந்து செல்’ என்னும் விதமாக அவள் சொல்ல, அவனோ தடுமாறிக் கொண்டிருந்தான்.

“ஏன்... நான் இங்கே நிக்கறதில் உங்களுக்கு என்ன கஷ்டம்...? நான் இங்கே தானே நிக்கறேன்?” அவன் சொல்ல, அவளுக்கு சற்று எரிச்சலாக இருந்தது.

ஆனாலும், அத்துமீறி எதையும் செய்ய முயலாதவன் என்ற ஒரே காரணத்துக்காக அவள் அமைதியாக இருக்கவே, “எதுக்குங்க என்மேலே தேவையில்லாத கோபம்? படிக்கட்டில் நடந்ததுக்கு வேண்ணா நான் சாரி கேட்டுக்கறேன்” அவன் சொல்ல,

“எனக்கு அதைப்பத்தி எதையும் பேச வேண்டாம்...” அவள் பட்டென சொல்லி, ஒரு கப்பில் டீயை ஊற்றியவள், அவன் அருகே இருந்த மேடைமேல் அதை வைத்தாள்.

மீதம் இருந்த டீயை தனக்கு ஒரு கப்பில் ஊற்றியவள், மீதியை அங்கே இருந்த பிளாஸ்கில் ஊற்றி எடுத்துக் கொண்டாள். ஒரு ட்ரேயில் சில கப், ப்ளாஸ்க் என எடுத்துக் கொண்டு அறையில் இருந்து வெளியேற முயன்றாள்.

“தென்றல், எனக்கு உங்ககிட்டே ஒரு விஷயம் சொல்லணும்...” அவன் சொல்ல, நின்று அவன் முகம் பார்த்தாள்.

“எனக்கு எதையும் கேட்க வேண்டாம்...” அவள் அங்கிருந்து விலகிவிட நினைத்தவள், என்ன நினைத்தாளோ, ட்ரேயை மேடைமேல் வைத்தவள், நின்று நோக்கினாள்.

ஒரு வேளை, அவர்களுக்கு சற்று தூரத்தில், தியாகுவின் பின்னால், பிரபஞ்சன் வந்து நின்றதுதான் அதன் காரணமாகக் கூட இருக்கலாம்.

“ஒரே நிமிஷம்...” சொன்னவன், “நான் உங்களை கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்படறேன். நீங்க பெர்மிஷன் கொடுத்தீங்கன்னா, உங்க வீட்ல வந்து நான் பேசறேன்” சொன்னவன், அவளது கரத்தைப் பிடிக்கப் போக, வேகமாக பின்னால் நகர்ந்தாள்.

அவள் அவனை முறைத்துப் பார்க்க, “இங்கே என்ன நடக்குது? இது ஆபீஸா? இல்லன்னா பீச்சா? பார்க்கா? உங்க பெர்சனலுக்கு எல்லாம் இங்கே இடம் இல்லை. இதை எல்லாம் ஆபீஸ்க்கு வெளியே வச்சுக்கோங்க” பிரபஞ்சன் கத்திவிட்டுச் செல்ல, தியாகு நடுங்கிப் போனான்.

அவன் ஒருமாதிரி பயந்தான் என்றால், தென்றலுக்கு அத்தனை அதிர்வு. ‘இவர் என்ன சொல்லிட்டுப் போறார்?’ எண்ணியவள், அந்த ட்ரேயை எடுத்துக்கொண்டு, பிரபஞ்சனின் பின்னால் விரைந்தாள்.

அவன் அறைக்குள் சென்று இருக்கையில் அமர்ந்து, இமைகளை மூடிக் கொள்ள, “இப்போ அங்கே என்ன சொல்லிட்டு வந்தீங்க?” கோபமாக கத்தினாள்.

“என்ன தென்றல்? எதுக்கு இவ்வளவு கோபம்?” ஷீபாவே சற்று அதிர்ந்து போனாள்.

“அக்கா, நீங்க பேசாதீங்க, இவர் பேசட்டும்... என்ன சொன்னீங்கன்னு கேட்டேன்?” தியாகுவை நாலு அறை விட்டிருந்தால் மகிழ்ந்திருப்பாள். இவன் என்னவோ, தனக்கும் அதில் விருப்பம் என்பதுபோல் பேசிவிட்டு வந்திருக்க, கொதித்துப் போனாள்.

அவள் கேட்டுக்கொண்டு நிற்கையிலே, தியாகு பெரும் பதட்டத்தோடு அங்கே வந்து சேர்ந்தான்.

“சார், சாரி சார்... நான் எந்த தப்பான எண்ணத்திலும் இவங்ககிட்டே பேசலை” அவன் இடைபுக, அவளுக்கு அத்தனை எரிச்சல் மண்டியது.

“மிஸ்டர் தியாகு... என் வீட்டுக்காரங்ககிட்டே பேசணும்னு சொன்னீங்களே, அதுக்கு அவசியமே இல்லை... என் வீட்டுக்காரரே இவர்தான், உங்களுக்கு என்ன பேசணுமோ இவர்கிட்டே பேசுங்க” அவள் சொல்ல, உயரழுத்த மின்சாரத்தை தொட்டுவிட்ட உணர்வில் ஷாக்கடித்து அப்படியே நின்றுவிட்டான்.

“தென்ற...” இழுத்து நிறுத்தியவன்... “மேடம்... நீங்க... சார்... எனக்குத் தெரியாது சார்...” ஏதோ செய்யக்கூடாத தவறை செய்துவிட்ட பாவனை அவனிடம் வெளிப்பட, பெருத்த சங்கடமாக உணர்ந்தான்.

இங்கே இத்தனை பேச்சு நடக்க, வெளியே மற்றவர்கள் அனைவரும் வந்துவிட்டார்கள். தக்ஷன், ஸ்ரீயைப் பார்க்க, அவளோ தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.

“ஸ்ரீ, தென்றல்... அவங்க சாரோட வைஃப்ன்னு உனக்கு முன்னாடியே தெரியுமா?” அவன் அவளிடம் கேட்க,

“முதல்ல கன்ஃபாமா தெரியாது... பிறகு தெரிஞ்சுகிட்டேன்” அவள் சொல்ல, அவனுக்குமே இது புதிய தகவல்தான்.

“வைஃப்ன்னா... பிறகு...” எதையோ கேட்க வந்தவன், அவள் பார்த்த பார்வையில் வாயை இறுக மூடிக் கொண்டான்.

ஆனாலும்... “எதுக்கும் நீ அவன்கிட்டே ஒரு குறிப்பு காட்டி இருக்கலாம்” அங்கே நடந்த பேச்சுக்களின் சாராம்சத்தை வைத்தே, அங்கே நடத்திருப்பதை அவர்கள் யூகித்து இருந்தார்கள்.

“சொல்லியும் கேக்காதவனை என்ன செய்யச் சொல்றீங்க?” அவள் எதிர்கேள்வி கேட்க,

“ஹம்... அப்போ அனுபவிக்க வேண்டியதுதான்... எவ்வளவு சங்கடம் இது?” அவனுக்கு அப்படித்தான் தோன்றியது.

தியாகு பேசப் பேச, பிரபஞ்சனோ, தென்றல் கொண்டுவந்து வைத்திருந்த பிளாஸ்கில் இருந்து டீயை கப்பில் ஊற்றியவன், அதன் சூட்டைக் கூட பொருட்படுத்தாமல் இரண்டு மூன்று கப் குடித்துவிட, தென்றல்தான் அதைக் கவனித்தாள்.

“என்னங்க... டீ கொதிக்குது... இதென்ன இப்படி குடிக்கறீங்க?” அவன் கையில் இருந்த கப்பை பிடுங்கி தூரமாக வைத்தாள்.

‘நான் அதைவிட கொதிக்கிறேன்...’ என்னும் பார்வையை அவன் கொடுக்க, திடுக்கிட்டுப் போனாள்.

‘இதில் என் தவறு என்ன?’ அவளுக்குப் புரியவே இல்லை.

“சாரி சார்... எக்ஸ்ட்ரீம்லி சாரி... சாரி மேம்...” தியாகு சொல்லிக் கொண்டே இருக்க,

“இதில் உங்க தப்பு எதுவும் இல்லை... நீங்க போகலாம்...” அவன் அவளையே பார்த்தவாறு சொல்ல, அவன் அங்கே இருந்து வெளியேற, அவளுக்கு அப்படி ஒரு கோபம் பொங்கியது.

அங்கே... அவன் மேஜைமேல் இருந்த ஃபயில்கள் சிலவற்றை கொத்தாக அள்ளியவள், “அப்போ என் தப்புன்னு சொல்றீங்களா? நான் என்ன செஞ்சேனாம்?” அவன் மேல் அவற்றை வீசியவாறு, அவள் ஆத்திரமாக கத்த, மற்றவர்கள் அனைவரும் அங்கிருந்து வேகமாக வெளியேறினார்கள்.

அனைவரும் வெளியேறி, கதவையும் அவர்கள் சாற்றிவிட, அவனை நெருங்கியவள், அவன் சட்டையை கொத்தாகப் பற்றிக் கொள்ள, அவள் கன்னத்தைப் பற்றி, வலிக்க கடித்தான்.

“அவன் சொல்ற அளவுக்கு நீதான் வச்ச...” அடக்கப்பட்ட கோபத்தில் கத்திவிட்டு, அவளை விலக்கிவிட்டு அவன் வெளியேற, அதிர்ந்துபோய் அப்படியே நின்றுவிட்டாள்.

தென்றல் வீசும்....
 
sme

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 9, 2024
Messages
65
Yendaa dei eppdi thalaiya suththi mooka thodra..nera sollavendiyathuthaana.....
 
saru

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 24, 2022
Messages
186
Nice update
Thendral piyala maartu iruku ushara iru ranja
Ava methu va purijukita avala sari sedrupa
Nee enda kurka panja
Epaum pola amathiya iruka vendithu tan eduku over ah ponguna
 
ஆனந்த ஜோதி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 14, 2022
Messages
137

உங்க அக்கப் போருக்கு அளவே இல்லயாடா?

ஏதோ கொஞ்சம் புத்தி தெளிஞ்சு அவள் நடந்துக்கிட்டா, நீ தேவை இல்லாம கோபப்பட்டு ஓரண்டையை இழுத்து வைக்கிறே.

அந்த தியாகு எப்படி பழகினான் என்பதை புரிஞ்சுக்காம அவள் இருந்தது தப்பு என்றாலும், நீ என்ன செய்துட்டு இருக்கே? இது அவளுக்கு மனிதர்களை பிரித்து அறிவதற்கு உண்டான பாடமா?

தென்றலிடம் முன்னே விட காணப்பட்ட மாற்றம் சூப்பர்.

வெயிட்டிங் ...
 
Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
Yendaa dei eppdi thalaiya suththi mooka thodra..nera sollavendiyathuthaana.....

எல்லாம் சொல்வான்.

நன்றி!
 
Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
Nice update
Thendral piyala maartu iruku ushara iru ranja
Ava methu va purijukita avala sari sedrupa
Nee enda kurka panja
Epaum pola amathiya iruka vendithu tan eduku over ah ponguna

இதெல்லாமே சீக்கிரமே சரி ஆகும்.

நன்றி!
 
Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
உங்க அக்கப் போருக்கு அளவே இல்லயாடா?

ஏதோ கொஞ்சம் புத்தி தெளிஞ்சு அவள் நடந்துக்கிட்டா, நீ தேவை இல்லாம கோபப்பட்டு ஓரண்டையை இழுத்து வைக்கிறே.

அந்த தியாகு எப்படி பழகினான் என்பதை புரிஞ்சுக்காம அவள் இருந்தது தப்பு என்றாலும், நீ என்ன செய்துட்டு இருக்கே? இது அவளுக்கு மனிதர்களை பிரித்து அறிவதற்கு உண்டான பாடமா?

தென்றலிடம் முன்னே விட காணப்பட்ட மாற்றம் சூப்பர்.

வெயிட்டிங் ...

அவ தெளியறா, இவன் குழப்பறான்.

இன்னும் இருக்கே.

நன்றி!
 
Kothai Suresh

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
113
அப்பாடா ஒரு வழியா தைரியம் வந்துடுச்சு, இவன் ஒருத்தன் நேரா விஷயத்தை சொல்லாம
 
Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
அப்பாடா ஒரு வழியா தைரியம் வந்துடுச்சு, இவன் ஒருத்தன் நேரா விஷயத்தை சொல்லாம

அவன் இத்தோட நிறுத்தணுமே.

நன்றி!
 
sumiram

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 20, 2022
Messages
105
Avaley ippo theliva vara, nee kulappama iruda.
 
Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
Avaley ippo theliva vara, nee kulappama iruda.

அவனுக்கு தெரியலை! ஆனால் தெரிஞ்சுப்பான்.

நன்றி!
 
Top