• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அள்ளிக் கொண்ட தென்றல் - 23.

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
பகுதி – 23.

அலுவலகத்துக்கு கீழே இறங்கி வந்து, தன் இடத்தில் அமர்ந்த தென்றலுக்கு, அவனிடம் எதையோ சொல்ல நினைத்து, எதையோ சொல்லிவிட்டு வந்து அமர்ந்தது புரிந்தது.

‘காலேஜ் பத்தி அவங்ககிட்டே கேட்கணும், சொல்லணும்னு நினைச்சேனே. அதைச் சொல்லாமல், என்னென்னவோ பேசிட்டு வந்துட்டேன்?’ தன்னைத்தானே திட்டியவாறே அமர்ந்திருந்தாள்.

அந்த நேரம் ஷீபா அங்கே வர, “குட் மார்னிங்க்கா...” தென்றல் வாழ்த்தவே, அவள் அருகே வந்தாள்.

“ம்... நிஜமாவே குட்மார்னிங் தான் போல... முகத்தில் ஒரு ஒளி வட்டம் தெரியுது?” சொன்னவள், அவள் முகத்தையே குறுகுறுவென ஆராய, தென்றலுக்கு ஒரு மெல்லிய படபடப்பு எழுந்தது.

“அக்கா... அப்படியெல்லாம் எதுவும் இல்லை...” அவள் சிணுங்க,

“இல்லையா? பிறகு ஏன் முகமே ஜொலிக்குது? அப்படி என்ன சொல்லி உன்னை சமாதானம் பண்ணான்? நேத்து மூச்சு கூட விட மாட்டேன்னு அழுதுட்டு இருந்த? நீ இவ்வளவு சீக்கிரம் சமாதானம் ஆனால் எப்படி? அவனை வச்சு செய்ய வேண்டாம்?” அவள் கேட்டுக் கொண்டிருக்க, அதைக் கேட்டவாறே அங்கே வந்தான் பிரபஞ்சன்.

“ஏய், அரை லூசே... என் பொண்டாட்டியை எதுக்குடி கெடுத்துட்டு இருக்க?” அவள் தலையில் மெல்லியதாக குட்டு வைத்தான்.

“ஆமா, உன் பொண்டாட்டியை நாங்க கெடுக்கறோம்... உனக்கு லக்குதான் டா... இல்லன்னா பொசுக்குன்னு சமாதானமாகற பொண்டாட்டி கிடைப்பாளா? என்ன கால்லயே விழுந்தியா? இல்லன்னா தோப்புக்கரணம் போட்டியா?” அவள் நக்கலாக கேட்க, அவன் தென்றலைப் பார்த்தான்.

“நான் அவகிட்டே ஒரு சாரி கூட சொல்லலை...” நிஜமான வருத்தத்தில் அவன் சொல்ல, தென்றல் தலையைக் குனிந்து கொண்டாள்.

“தென்றல்... இதை என்னால் ஒத்துக்கவே முடியாது. ஒரு பத்து நாளைக்கு இவனை ‘பத்த’ போடுற....” சொன்னவள், அவர்களுக்கு நடுவில் நிற்க விரும்பாமல் அங்கிருந்து அகன்றாள்.

அவள் செல்லவே, “மோனா... ஐ’ம் சாரி... ரியலி சாரி...” அவன் உணர்ந்து சொல்ல, அவளிடம் மெல்லிய மௌனம்.

“இன்னும் என்மேல கோபம் போகலையா?” அவன் வருத்தமாக கேட்க,

“சாரி ஓகே... ஆனா, நீங்க மறுபடியும் அப்படியெல்லாம் பேச மாட்டீங்க தானே? அம்மா என்னவோ புருஷன் எல்லாம் இப்படித்தான் இருப்பாங்கன்னு சொல்றாங்க. எனக்கு அப்படி வேண்டாம்... என்னால் நீங்க திட்றதை எல்லாம் தாங்கிக்க முடியாது...” கண்களில் அத்தனை பயமும், அலைப்புறுதலும் தெரிய, அவனுக்குள் பெருத்த சங்கடம்.

“ஐ ப்ராமிஸ்... ஐ நெவர் ஹெர்ட் யூ மோனா...” அவன் உறுதியாக உரைக்க, அவள் முகம் சற்று தெளிந்தது.

“‘அப்பா... அப்பா... அப்பா... அந்த அப்பாவை மட்டும்தான் யோசிப்பியா? என்னை அந்த அளவுக்கு எப்போவாவது யோசிச்சு இருக்கியான்னு ஒரு முறை கேட்டீங்கல்ல...’ உங்க அளவுக்கு என் அப்பாவைக் கூட நான் யோசிச்சது இல்லைங்கறது தான் நிஜம்” அவள் அவனை ஏறிடாமல் சொல்ல, தன் வார்த்தைகள் அவளுக்குள் ஏற்படுத்தும் தாக்கம் கண்டு திகைத்தான்.

“எதையுமே மறக்க மாட்டியா நீ?” அவன் அதிர்வாக கேட்க,

“நீங்க சொல்றதை எப்படி மறக்கறதாம்? அதோடதான் வாழ்ந்துட்டு இருக்கேன்” அந்த வார்த்தைகள் அவனை சல்லடையாக துளைக்கும் உணர்வு.

“மோனா...” அவன் தடுமாறிப்போய் நிற்க,

“இதுக்கு மேலே இங்கே பேசவேண்டாம்... எல்லாரும் பார்க்கறாங்க... நீங்க போங்க” அனைவரும் அலுவலகம் வந்திருக்க, அனைவருமே அவர்களைப் பாராமல் பார்ப்பது அவனுக்கும் புரியவே செய்தது.

“நான் உன்னை நைட் பார்க்க வந்தேன்னு உனக்கு எப்படித் தெரிஞ்சது மோனா?” அவன் கேட்க, அவ்வளவு நேரமாக அவன் முகம் பார்க்க மறுத்து நின்றவள், சட்டென அவன் முகம் பார்த்தாள்.

அவன் இதழ்களில் ஒரு குறும்பு புன்னகை ஒட்டிக்கொண்டு இருக்க, அவள் முகம் மெல்லியதாக சூடேறும் உணர்வு.

“எனக்குத் தெரியாதே... வந்தீங்களா?” பார்வையை கணினியின்மேல் பதித்தவள், சின்னக் குரலில் கேட்க, அவள் விளையாடுவது அவனுக்குப் புரிந்து போனது.

“ஓ... ஒரு வேளை கன்னத்தில் மட்டும்தான் மார்க் விழும் போல...?” அவன் தனக்குத் தானே சொல்லிக் கொள்வதுபோல் சொல்ல, அவளுக்கு ஏனோ தேகம் மெல்லிய நடுக்கம் கொண்டது.

“மோனா... நான் வேண்ணா செக் பண்ணிக்கவா?” அவன் கேட்க, பெரும் பதட்டமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவளது பதட்டத்தைப் பார்த்தவன், “இங்கே வச்சு இல்ல...” அவன் வேகமாகச் சொல்ல, தன் பதட்டம் தணிந்தாள்.

“அடையாளம் உடனே போய்டுமா? எத்தனை நாள் இருக்கும்?” அவன் அவளை நெருங்கி வர,

“ஹையோ, எனக்குத் தெரியாது... எதுக்கு இப்படி வம்பு பண்றீங்க? போங்க” அவள் முகமே மற்றவர்களுக்கு எதையும் காட்டிக் கொடுத்துவிடுமோ என பதட்டமானாள்.

“எனக்குத் தெரிஞ்சுக்கணுமே...” அவன் சொல்ல, அம்மம்மா... அந்த பேச்சுக்கே அவளால் தாள முடியவில்லை.

“என்னங்க...” அவள் தடுமாறி நிற்கையிலே,

“மாம்ஸு...” திடுமென நைனிகாவின் குரல் அவனுக்குப் பின்னால் ஒலிக்க, சட்டென திரும்பினான்.

“பட்டு... வாடா... இந்த ஆபீஸ் ஆரம்பிச்ச பிறகு இப்போதான் வர்ற... என்ன ஸ்வீட் சர்ப்ரைஸ்...” அவள் சொல்லாமல் வந்து நின்றது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

“என் மாம்ஸை பார்க்கணும்னு ஆசையா இருந்தது... காலையில் ஃபஸ்ட் ஹாப் எந்த கிளாசும் இல்லை. மதியத்துக்கு மேலே தான் லேப்... சோ அங்கே இருக்க போரிங்கா இருந்தது. அப்படியே என் பெர்த்டேக்கு உங்களை இன்வைட் பண்ணிட்டுப் போகலாம்னு வந்தேன்” அவள் சொல்ல, அவளது பேச்சில் புருவம் நெரித்தவன், அவள் கண்களை அகலத் திறந்து, உருட்ட சாதாரணமாக நின்றுகொண்டான்.

“பெர்த்டே வருதுல்ல... நான் கூட மறந்தே போயிட்டேன் பாரேன்” அவன் சொல்ல,

“யோவ் மாம்ஸு... இன்னொருவாட்டி என் பெர்த்டேவை மற... உனக்கு நீடில்லதான் அபிஷேகமே...” அவள் அவனைப் போலியாக மிரட்ட, அவள் ஒருமையில் பேசியதிலேயே அவளது கோபம் புரிய அடங்கிப் போனான்.

“என் பட்டு பெர்த்டேயை நான் மறக்கறதா நெவர்...” அவன் வீராவேசமாக சொல்ல,

“போதும் பில்ட்டப்பு... போன வருஷம் இது எங்கே போயிருந்ததாம்?” கேட்டவள் அவனை முறைக்க, கப்பென வாயை மூடிக் கொண்டான்.

இவர்கள் பேசப் பேச, தென்றலின் பார்வை மொத்தமும், நைனிகாவின் மீதுதான் இருந்தது.

அவள் MBBS மூன்றாம் வருடம் படிப்பது அவளுக்குத் தெரியும். இடையில் மேகலை தவறியபொழுது அவளைப் பார்த்திருந்தாலும், இப்பொழுது வளர்ந்த குமரியாக, பாதி பிரபஞ்சனின் சாயலில் இருந்த அவளைப் பார்க்க, ஆச்சரியமாக இருந்தது.

இப்பொழுது இவர்களைப் பார்க்கும் யாரும், நிச்சயம் அண்ணன் தங்கை எனச் சொல்லும் அளவுக்கு இருந்தார்கள்.

“நாளைக்கு ஈவினிங் வீட்ல கேக் கட்டிங் இருக்கு, கண்டிப்பா வர்றீங்க” சொன்னவள் தென்றலைத் துளியும் கண்டுகொள்ளவில்லை.

“ஷீபா இருக்காங்களா? அவங்களையும் இன்வைட் பண்ணணும்...” சொன்னவள், அவனது அறைக்குச் செல்லப் போக, தென்றலால் அதற்குமேல் அமைதியாக இருக்க முடியவில்லை.

“பட்டு... எப்படி இருக்க?” தென்றல் அவளிடம் கேட்க, சில அடி நடந்தவள், வேகமாக அவர்களுக்கு அருகே வந்தாள்.

“பட்டுவா? எங்க ஃபேமிலியைத் தவிர வேற யாரும் என்னை பட்டுன்னு கூப்ட்டா எனக்குப் பிடிக்காது. நீங்க...? மாமா, உங்களுக்குத் தெரிஞ்சவங்களா?” அவள் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு கேட்க, தென்றல் அழுதுவிடும் நிலைக்கே சென்றுவிட்டாள்.

“பட்டு... இதென்ன இப்படி பேசற?”.

“மாமா... நீங்க சொல்லுங்க...” அவள் அதிலேயே இருக்க,

“மாமாவைத் தெரியுது, அத்தையைத் தெரியாதா? உன் கோபம் நியாயமானதுதான். அதுக்காக... என்னை யார்ன்னு தெரியாதுன்னு சொல்லுவியா? எப்படி இருக்க பட்டு?” கேட்டவள், தன் இடத்தில் இருந்து வெளியேறிவந்து, அவள் கரத்தைக் கெட்டியாக பற்றிக் கொண்டாள்.

“உங்களைத் தெரியாதுன்னு எப்போ சொன்னேன்? உங்களுக்கு மறந்து போச்சோன்னு கொஞ்சம் செக் பண்ணேன்...” அவள் சொல்ல, தென்றலின் முகம் வாடிப் போனது.

“உங்க மாமா மறந்த பெர்த்டேயைக் கூட நான் ஞாபகம் வச்சிருந்தேன்” அவள் ரோஷமாக சொல்ல,

“ஆமா, எங்கே பெர்த்டே, அம்மா அப்பா வெடிங் டே... இதுக்கெல்லாம் விஷ் மட்டும் பண்ணா போதும்னு உங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தது? உங்க வெடிங்டேயை இது வரைக்கும் நீங்க கொண்டாடி இருக்கீங்களா?” அவள் சிறு கோபமாக வினவ, அவள் கன்னத்தில் கண்ணீர் இறங்கியது.

“பட்டு, போதும்...” தென்றல் அழுவது பொறுக்காமல், பிரபஞ்சன் அவளுக்கு துணைக்கு வந்தான்.

“இன்னும் நாலு மாசம் போனா, உங்க பிஃப்த் வெடிங்டே வந்துடும். இப்படியே தனித்தனியா கொண்டாடிகிட்டே இருக்கப் போறீங்களா?” அவனிடம் சாடினாள்.

“பட்டு...” அவன் அழுத்தமாக அழைக்க, அவனை முறைத்தாள்.

“என்னவோ போங்க... நாளைக்கு வீட்டுக்கு வந்து சேருங்க. எனக்கு கிப்ட் ஐஃபோன் வேணும்...” சொன்னவள் முறுக்கிக்கொண்டு செல்ல, தென்றலால் தாங்க முடியவில்லை.

வந்தவள் தன்னிடம் பேசவும் இல்லை, தன்னை பார்ட்டிக்கு அழைக்கவும் செய்யாமல் செல்ல, அதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“பட்டு, எதுக்கு வந்தியோ அதை முடிச்சுட்டு போ...” அவன் அவளைத் தேக்கினான்.

“நான் என்னவோ உங்க பொண்டாட்டியை அழைக்க வந்த மாதிரி சொல்றீங்க? அதெல்லாம் இல்லை...” முறுக்கிக் கொண்டவள், ஷீபாவைப் பார்க்கப் போனாள்.

அவள் செல்லவே, “பட்டுவுக்கு என்மேல ரொம்ப கோபம்... என்னை இன்வைட் பண்ணவே இல்லை பாருங்க...” அவனிடம் குறைபட்டாள்.

“அவ இங்கே வந்ததே உன்னை கூப்பிடத்தான்... நான் எல்லாம் கூப்பிடாமலே போய் நிக்கற ஆளு...” அவன் சொல்ல, ‘அப்படியா?’ என்பதுபோல் நம்ப முடியாத பார்வை பார்த்தாள்.

“நம்பும்மா...” அவன் அழுத்திச் சொல்ல, ஷீபாவும், அவளும் அங்கே வந்தார்கள்.

“ஓகே ஆன்ட்டி... கண்டிப்பா ஃபங்ஷனுக்கு வந்துடுங்க...” அவள் ஷீபாவை அழைக்க, அவளோ முறைத்தாள்.

“ஏய்... நான் உனக்கு ஆன்ட்டியா? உன்னை கொல்லப்போறேன் பார்... நான் யூத்தும்மா...” ஷீபா அவளிடம் சண்டைக்குப் போக, நைனிகாவோ நக்கல் சிரிப்பு சிரித்தாள்.

“யூத்தா? பத்து வருஷத்துக்கு முன்னாடி தான?” கேட்டவள் வெடித்து சிரிக்க, அவளைப் போலியாக அடித்தாள்.

“உன்னை சும்மா விடப் போறதில்லை... ஓவர் நக்கலு... அதுவும் காலேஜ்க்கு போய் ரொம்ப கெட்டு போய்ட்ட...”.

“நீங்களே எனக்கு ஆன்ட்டியா வந்திருக்கலாம்... நல்லா இருந்திருக்கும்” அவள் சொல்ல, தென்றல் திடுக்கிட்டாள்.

“எது... இவனைக் கட்டிக்கிட்டு இவ படறது போதாதா? இவன் எல்லாம் எனக்கு செட்டே ஆக மாட்டான்... காட்டான்...” ஷீபா அதை சாதாரணமாக எடுத்துவிட்டு கடந்துவிட, பிரபஞ்சனோ சிரித்துக் கொண்டான்.

“உங்களுக்கு கொடுத்துவச்சது அவ்வளவுதான்... லாஸ் உங்களுக்குத்தான்” சொன்னவள், “சரி, நான் கிளம்பறேன்... மாம்ஸு, நீங்க வர்றப்போ உங்க வைஃப்பையும் மறக்காம கூட்டி வாங்க. வந்துடுங்க அத்த...” அவள் அந்த அத்தையை அழுத்திச் சொல்லிச் செல்ல, தென்றல் சமாதானம் ஆகவே இல்லை.

“என்னவாம்டா... வந்து சிலுப்பிகிட்டு போறா?” ஷீபா நண்பனிடம் கேட்க,

“தென்றலை சீண்டி விட வந்திருக்கா” அவளிடம் சின்னக் குரலில் சொன்னவன், தென்றலைப் பார்த்தான்.

அவள் இன்னுமே நைனிகா சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருக்க, “மோனா... என்ன அப்படியே நின்னுட்ட?” அவளது தோளைத் தொட்டு கலைத்தான்.

“அவ என்னை வா’ன்னு கூப்ட்டாளா? இல்லன்னா கேலி பண்ணிட்டு போறாளா?” புரியாத குழப்பத்திலேயே கேட்டாள்.

“சுத்தம்... இவ தேற மாட்டா... பார்த்துக்கடா...” ஷீபா புலம்பிவிட்டு போக, அவனுக்கு சிரிப்புவந்து தொலைத்தது.

“நாளைக்கு பட்டு வீட்டுக்கு வா... உனக்கே தெரிஞ்சுடும்...” அவன் சொல்லவே,

“அவளுக்கு நான் கிப்ட் வாங்கிட்டு வர்றேன்...” அவள் சொல்ல, அவன் மறுக்கவெல்லாம் இல்லை.

“சரி, நீயே வாங்கு...” அவன் அனுமதி வழங்க,

“வாங்கறதுக்கு நீங்க என்னோட வரீங்களா? சாயங்காலம் போகலாம்” அவள் ஆசையாக கேட்க, அவன் மறுப்பானா என்ன?

மறுநாள் மாலையில், தென்றல் நிவேதிதாவின் வீட்டுக்குச் செல்கையில், எந்தவிதமான அலங்காரங்களும் இல்லாமல், சாதாரணமாகவே வீடு இருந்தது.

‘பார்ட்டின்னு சொன்னாளே... ஒரு வேளை சும்மா சொன்னாளா?’ எண்ணியவாறு அழைப்புமணியை அழுத்த, நைனிகா வந்து கதவைத் திறந்தாள்.

தென்றலைப் பார்த்தவள், “அம்மா... உங்களுக்குத் தெரிஞ்சவங்க போல, வந்து பாருங்க...” அவள் குரலை வைத்தே, அவளது கேலியைப் புரிந்த நிவேதிதா, உள்ளே இருந்து வெளியே வந்தாள்.

தென்றலைப் பார்த்தவள், “அடடே... தென்றல்... வா... வா... பட்டு, வந்தவங்களை உள்ளே கூப்பிடத் தெரியாது? என்ன பழக்கம் இது?” சிறு கண்டிப்பாக மகளிடம் கேட்டவர், தென்றலை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

“வாங்க அத்த... எப்படி இருக்கீங்க?” கேட்ட நைனிகா, தென்றலை இறுக அணைத்துக் கொள்ள, அவளுக்கு ஒரு ஆனந்த அதிர்வு.

“சாரி அத்த... ரொம்ப டென்ஷன் பண்ணிட்டேனா? சும்மா விளையாடினேன். இன்னைக்கு மட்டும் நீங்க வந்திருக்கல, உங்ககிட்டே பேசியே இருக்க மாட்டேன்” சொன்னவள், அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.

“ஹேப்பி பெர்த்டே பட்டு...” வாழ்த்தியவள், தன் கைப்பைக்குள் இருந்து அந்த கிப்ட்டை எடுத்து அவளிடம் கொடுத்தாள்.

அதை வாங்கியவள், தென்றலின் கன்னத்தை ஆராய, “என்ன...? என்ன பார்க்கற?” தன் கன்னத்தை கரத்தால் தேய்த்தவள், அவளிடம் கேட்டாள்.

“இல்ல... கன்னத்தில் காயத்தைக் காணோமேன்னு பாத்தேன்...” கண்ணைச் சிமிட்டி, நாக்கைத் துருத்தி அவள் கேட்க, தென்றலின் முகம் அப்படியே சிவந்து போனது.

“அம்மா... அத்தைக்கு வெக்கத்தைப் பாருங்களேன்...” அவள் கேலி செய்ய, தென்றலோ இன்னும் சிவந்தாள்.

“பட்டு, போதும் அவளை விடு... வர வர உன் சேட்டை ஜாஸ்த்தி ஆயிடுச்சு” மகளை மென்மையாக கண்டித்தாள் நிவேதிதா.

“என்ன பண்ணா, கன்னம் சிவக்கும் அத்த?” அவள் இன்னுமே கேட்க, நிவேதிதா அவள் முதுகில் ஒரு அடியைப் போட்டு அவளை அடக்கினாள்.

“மம்மி... பெர்த்டே பேபியை அடிக்கக் கூடாது... சரி அதைக் கேட்கலை, எப்போ மாமாவோட சேர்ந்து லைஃபை ஸ்டார்ட் பண்ணப் போறீங்க? ஸ்டில் வாட் இஸ் இட்சிங் யூ?” அவள் இப்படி நேரடியாகக் கேட்பாள் என மற்றவர்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லை.

“நைனிகா... என்ன இது? வீட்டுக்கு வந்தவகிட்டே இப்படியா கேட்கறது?” நிவேதிதா அத்தனை கோபமாக கேட்க,

“நீங்களும் கேட்க மாட்டீங்க? கேட்கற நானும் கேட்கக் கூடாதுன்னா? மாமா இப்படியே இருப்பாங்க, அத்த அவங்க வீட்டிலேயே இருப்பாங்கன்னா, என்னம்மா இது? அத்தை சொல்லட்டும், நீங்க சும்மா இருங்க” அவள் அத்தனை பிடிவாதமாக இருக்க, நிவேதிதா மகளை அதற்கு மேலே எதுவும் சொல்ல முடியாமல் அமைதியானாள்.

அவளுக்குமே அந்த கேள்விக்கான பதில் வேண்டி இருந்ததோ என்னவோ?

“எங்க அடுத்த வெடிங்டே நம்ம வீட்ல பெருசா, கிராண்டா செலிபரேட் பண்ணுவோம், போதுமா?” தென்றல் கேட்க, அவள் முகத்தில் அத்தனை பிரகாசம்.

“நிஜமா? நிஜமாவா?” துள்ளி குதிக்காத குறையாக அவள் கேட்டுக் கொண்டிருக்க, பிரபஞ்சன் பெரிய கேக் பார்சலோடு அங்கே வந்தான்.

அவனைப் பார்த்த நைனிகா, “மாம்சே... கேட்டீங்களா? அடுத்த வெடிங்டே உங்களோடதானாம்... யாஹூ...” குதித்துக்கொண்டு ஓடியவள், அவன் கழுத்தை கட்டிக்கொண்டு தொங்க, அனைவரின் முகங்களிலும் புன்னகை பூத்தது.

“பட்டு... கேக் உடைஞ்சுடப் போகுது...” ஒரு கையால் அதை விலக்கிப் பிடித்தவன், மறு கரத்தால் தான் பெறாத மகளைத் தாங்கிக் கொண்டான்.

அவனது பார்வை தன்னவளிடம் ‘அப்படியா?’ எனக் கேள்வி கேட்க, ‘ஆம்...’ என அவனுக்கு பதில் கொடுத்தாள்.

“கேக் இந்தா, எடுத்துட்டு போ...” அவளிடம் கொடுத்து அனுப்பியவன், தன் மனைவியின் அருகே வந்து அமர்ந்தான்.

“நீங்க பேசிட்டு இருங்க, குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன்... தென்றலுக்கும் எதுவும் கொடுக்கவே இல்லை...” சொன்னவள், அவர்களுக்கு தனிமை கொடுத்து அங்கிருந்து அகன்றாள்.

“ஏய் மோனா... என்ன புடவை எல்லாம் கட்டிக்கிட்டு வந்திருக்க? சூப்பரா இருக்க” சொன்னவன், அவள் வெற்று இடையை உரிமையாக வருட, பதட்டமானாள்.

“ஹையோ, ஹால்ல வச்சு என்ன பண்றீங்க? பட்டுவே பார்த்தா என்ன நினைப்பா” சற்று பதறினாள்.

“நாமளா உள்ளே போற வரைக்கும் அவ வர மாட்டா... அக்கா வந்தா குரல் கொடுத்துட்டுதான் வருவாங்க” சொன்னவன், அவள் வயிற்றை அழுத்த, விரல்களோ கல்மிஷம் புரிந்தது.

நொடியும் தாமதிக்காமல் அவள் இடக்கன்னத்தை கவ்வி கடித்து சுவைத்தவன், அவள் கழுத்திலும் பல்த்தடம் பதிக்க, உள்ளுக்குள் சிதறும் மனதையும், வெளியே சிலிர்க்கும் தேகத்தையும் அவளால் அடக்க முடியவில்லை.
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
“என்னங்க பிளீஸ்... இங்கே வச்சு எதுவும் பண்ணாதீங்க. நம்ம வீட்டுக்கு வேண்ணா போய்டலாம்...” அவள் சற்று பதற, முயன்று விலகி அமர்ந்தான்.

“சரி... சரி... டென்ஷன் ஆகாத... அக்கா... அத்தானை என்ன இன்னும் காணோம்? எப்போ வராங்க?” அவன் உரக்க குரல் கொடுக்கவே, நைனிகா காபி ட்ரேயோடு அங்கே வந்தாள்.

தென்றலின் கன்னத்தைப் பார்த்தவள், “அம்மா, கிளி பழத்தை கொத்திடுச்சும்மா” ஒரு நமுட்டு சிரிப்போடு அவள் தன் தாயிடம் சொல்ல, ஸ்னேக்ஸ் கொண்டுவந்த நிவேதிதா நோகாமல் தன் தலையில் அடித்துக் கொண்டாள்.

“என்ன கிளி? என்ன பழம்?” பிரபஞ்சன் புரியாமல் குழம்ப, தென்றல் தலையைக் குனிந்துகொண்டாள்.

‘செய்யறதெல்லாம் செய்ய வேண்டியது, பிறகு அப்பாவி மாதிரி கேள்வி வேற’ எண்ணியவள், காபி கப்பை எடுத்துக் கொண்டாள்.

“இவ சொல்ற மாதிரிதான் நீயும் நடந்துக்கற... ரஞ்சா...?” புலம்பிய நிவேதிதாவும் அதற்கு மேலே எதுவும் சொல்லாமல் அமர்ந்துவிட, தன் மனைவியின் கன்னத்தைப் பார்த்தவனுக்கு, அப்பொழுதுதான் விஷயம் புரிந்தது.

அவன் வாய்விட்டே சிரிக்க, “ஹையோ... போதும்...” அவனை அடக்கியவள், ‘இனிமேல் கன்னத்தை கடிங்க, உங்களுக்கு இருக்கு...’ பார்வையால் மிரட்டினாள்.

“சாரி... சாரி... நான் லேட்டா?” கேட்டவாறே பிரதாப் அங்கே வர,

“இட்ஸ் ஓகே அத்தான்... கூல்...” ரஞ்சன் சொல்ல, தென்றல் எழுந்து நின்றாள்.

“அடடே... தென்றல்... வாம்மா எப்படி இருக்க? உக்காரு, உக்காரு, ஏன் நிக்கற?”.

“நான் நல்லா இருக்கேன்ண்ணா... நீங்க எப்படி இருக்கீங்க?”.

“எல்லோரும் நலம்... டூ மினிட்ஸ்... குளிச்சுட்டு ஓடி வந்துடறேன்” சொன்னவன் உள்ளே சென்று மறைந்தான்.

அவன் வர, அடுத்த சில நிமிடங்களில் கேக் கட் செய்ய, முதல் துண்டை தன் மாமாவுக்குத்தான் அவள் கொடுத்தாள்.

அடுத்ததாக அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை உண்ண, “அத்த, உங்க கிப்ட் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு... தேங்க்ஸ்...” அவள் சொல்ல,

“என்ன கிப்ட்?” நிவேதிதா கேட்க,

“சொன்னா திட்டுவீங்க... ஐ ஃபோன்” அவள் சொல்லவே, நிவேதிதா தென்றலைத்தான் பார்த்தாள்.

“அவன்தான் செல்லம் கொடுத்து கெடுக்கறான்னா, நீ தடுப்பன்னு பார்த்தா, நீயும் கூட சேர்ந்து பண்ற?” இப்படிக் கேட்டாலும், அதில் ஒரு சந்தோஷம் இருப்பதை அனைவரும் உணர்ந்தார்கள்.

உணவை முடித்து, அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, நீண்ட நாட்களுக்குப் பிறகு தென்றல் அத்தனை நிம்மதியாக, சந்தோஷமாக இருந்தாள்.

“அண்ணி, நான் MBA டூரிசம் படிக்கலாம்னு இருக்கேன்... நீங்க என்ன சொல்றீங்க?” அவள் திடுமென கேட்க, அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“ரெகுலரா?” நிவேதிதா சற்று கவலையாக கேட்க,

“இல்ல அண்ணி... கரஸ்பாண்டன்ட் தான்...” சொன்னவள் தன்னவனைத்தான் பார்த்தாள்.

“நீங்க பேசிக்கோங்க... படிப்பு விஷயத்தில் நான் எப்போதும் சப்போட் தான் பண்ணுவேன்” நிவேதிதா தன் ஆதரவைச் சொன்னாள்.

“அத்த... படிப்பு முடிஞ்ச பிறகு, அப்பா பிசினஸை பார்க்கப் போவீங்களா?” நைனிகா இடைபுக, தென்றலோ தன்னவனிலேயே கவனமாக இருந்ததால், அவள் கேட்டதை கவனிக்கவே இல்லை.

“ரஞ்சா... உள்ளே கூட்டி போய் பேசு...” அவன் முக இறுக்கமும், தென்றலின் கலக்கமும் நிவேதிதாவை அப்படி பேசச் சொன்னது.

அங்கே இருந்த கெஸ்ட் அறைக்கு அவளை அழைத்து வந்தவன், “என்ன நினைக்கறன்னு தெளிவா சொல்லு மோனா...” சட்டென மூளும் தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவாறே கேட்டான்.

“நான் சின்னப்பொண்ணா இருந்தப்போவே, எனக்கு எங்க ஆபீசை பார்த்துக்கணும்னு ரொம்ப ஆசை. B. Com முடிச்ச உடனேயே, MBA போகத்தான் ஆசைப்பட்டேன். ஆனா எப்படியோ அது மாறிப் போச்சு. சொல்லுங்க, படிக்கட்டுமா?” கேட்டவள் அவன் முகம் பார்த்திருந்தாள்.

“எனக்கு நீ உன் வீட்டில்... பிறகு ஆபீஸ்... கோபமா வருது. அதே நேரம், உன்னோட ஆசையை கெடுக்கவும் பிடிக்கலை” ஒரு மாதிரி இறுக்கமாகவே பதில் கொடுக்க, அவன் நெஞ்சில் சாய்ந்தவள், அவனை கரங்களால் வளைத்தாள்.

“உன் அப்பனோட அடுத்த பிளானான்னு கேட்கத் தோணுது. நம்மளை நிம்மதியா, சந்தோஷமா விட மாட்டானான்னு கோபமா வருது” அவன் சொல்லச் சொல்ல, அவன் தேகம் இறுகுவது அவளுக்குப் புரிந்தது.

அமர்ந்திருந்த படுக்கையில் அவனைச் சாய்த்தவள், அவன் நெஞ்சின்மீது சாய்ந்து படுத்துக் கொண்டாள். நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், “நான் எதுக்காகவும், யாருக்காகவும் உங்களை விட்டுக் கொடுக்க மாட்டேன்... ஐ கான்ட்... நீங்க நம்பறீங்களா?” அவன் கண்களுக்குள் ஊடுருவ, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“சொல்லுங்க...” அவள் அவனை உலுக்க,

“சாய்ஸ்ல தோத்துடுவேன்னு பயமா இருக்கு...” அவன் சொல்ல, அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

“நீங்க சாய்ஸா? யார் சொன்னா? என் முடிவு... நான் எப்படி ப்ரூவ் பண்ணா நீங்க நம்புவீங்க?” ‘நான் அதைச் செய்வேன்’ என அவள் உறுதியாக கேட்க, அவன் முகம் சற்று மென்மையானது.

“எப்போ நீ என்னோட...” அவன் கேட்டு முடிக்கும் முன்பு, அவன் இதழ்களை கரத்தால் மூடினாள்.

“நான் என்னை அழைச்சுட்டு போக சொல்ற அன்னைக்கு என்னை கூட்டி போய்டுங்க. நான் நினைச்சது நடக்கலைன்னா, நம்ம வெடிங்டே அன்னைக்கு நானே நம்ம வீட்டுக்கு வந்துடுவேன்...” அவள் முடிவாகச் சொல்ல, அதற்கு மேலே அவளை அவன் எதுவும் கேட்கவில்லை.

“ஓகே... நீ படிக்க ஏதாவது ஹெல்ப் வேணும்ன்னா கேளு, நான் செய்யறேன்” அவன் சொல்ல, அவள் முகத்தில் ஒரு நிம்மதி.

“சரி வாங்க போகலாம்... நாம வந்து நேரமாச்சு...” அவள் விலக முயல, அவளைச் சரித்தவன், அவள்மேல் சாய்ந்திருந்தான். அனல் மூச்சு தெறிக்க, அவளுக்குள் புதைந்துபோக மனம் தவிக்க, முட்டி மோதியவனை தடுக்கத் தோன்றாமல் அவன் போக்கில் விட்டாள்.

“அப்படி எல்லாம் விட முடியாது...” சொன்னவன், அவள் கன்னத்தைக் கடிக்க முயல, வேகமாக அவனைத் தடுத்தாள்.

“இனிமேல் கன்னத்தை கடிச்சா அடிதான் வாங்குவீங்க... இப்போ இங்கே எதுவும் முடியாதுன்னு உங்களுக்கே தெரியும், பிறகு நீங்கதான் கஷ்டப்படுவீங்க, வாங்க போகலாம்...” சூழ்நிலை அப்படியாக இருக்க, அவனிடம் சொன்னாள்.

“ஒரு எக்ஸ்பெரிமென்ட் பண்ண வேண்டி இருக்கு...” சொன்னவன், அவள் என்னவென யோசிக்கையிலேயே, அத்தனை அவசரமாக அவள் தேகத்தில் முட்டி, மெல்லியதாக பல்த்தடம் பதிக்க, “ஸ்...ஸ்... என்னங்க...” சன்னமாக முனகி, அவன் பின்னந்தலையை அழுத்தமாக பற்றிக் கொண்டாள்.

அவன், அவனது வசதிக்கு ஒதுக்கி, அழுத்தி என அவளிடம் முட்ட, அவன் கொடுக்கும் மெல்லிய வலியையும், அதையும் மீறிய சிலிர்ப்பையும் ஒன்றாக உணர்ந்தவள், அவன் சிகை கோதி, அவன் கன்னம் வருடி, “இதென்ன... இதில் என்ன ஆராய்ச்சி...?” அவன் முகத்தை தன் தேகத்தில் இருந்து பிரித்தவள், அவனிடம் கேட்டாள்.

“நாளைக்கு சொல்றேன்... இப்போ வா போகலாம்...” அவளை விட்டு விலகி எழுந்தவன், தன்னை சரி செய்து கொள்ள, அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள், இறுதியாக அவன் செய்கையில் வேகமாக தன் விழிகளைப் பிரித்து வேறு பக்கம் பார்த்தாள்.

அதைப் பார்த்து வாய்விட்டே சிரித்தவன், அவளை கைப்பற்றி இழுத்து நிறுத்தி அணைத்தவன், கணவனுக்கே உரிய சில்மிஷம் புரிய, அவனுடனே இருந்து அவன் உணர்வுகளை உள்வாங்கிக் கொள்ள தவித்துப் போனாள்.

“கஷ்டமா இருக்கா?” பெரும் தடுமாற்றமாக அவள் வினவ,

“ஆமா... அஞ்சு வருஷமா...?” அவன் ஏக்கமாக சொல்ல, அவன் முகம் முழுக்க முத்தமிட்டாள்.

“நைட் உங்களோடவே நம்ம வீட்டுக்கு வந்துடவா?” இப்படிக் கேட்டவளை, இதழ்களை இம்சித்து பிரிந்தான்.

‘இன்றைக்கு வருவ, நாளைக்கு?’ என கேட்க துடித்தவன், அவளை நோகடிக்க பிடிக்காமல் அதை தவிர்த்தவன், “நான் சம்மாளிச்சுப்பேன்... நீ வா...” அவளை அழைத்துக்கொண்டு வெளியேறினான்.

அனைவரிடமும் விடைபெற்று கிளம்பி, அவளை அவள் வீட்டில் விட்டுவிட்டு, தன் வீட்டுக்குச் சென்றான். அதி காலையில் நான்கு மணிக்கே எழுந்து, ப்ரெஷ் செய்துவிட்டு, அரைமணிநேரம் யோகாவில் ஈடுபட்டிருந்தவன், ஐந்து மணிக்கு மீண்டுமாக படுத்துக் கொண்டான்.

அவன் கொஞ்சமாக உறக்கத்துக்குள் அமிழும் நேரம், அவன் போர்வைக்குள், அவன் கரங்களுக்குள் யாரோ நுழைந்து கொண்டு படுக்க, சட்டென உறக்கம் கலைந்தான்.

“தூங்குங்க... நான்தான்...” தென்றலின் குரல் அவன் காதுக்குள் கேட்க, அதற்கு மேலே உறக்கமாவது ஒன்றாவது.

“மோனா... நீ எப்படி இங்கே...? நான் கனவு காணறேனா?” அவனுக்கு குழப்பமாக இருந்தது.

“அத்தையை நான் கடைசியா பார்க்க வந்தப்போ, வீட்டு கீயைக் கொடுத்தாங்க. அதை இன்னைக்குத்தான் யூஸ் பண்ணேன்...” சொன்னவள், அவன் வெற்று நெஞ்சில் தன் முகத்தை உரச, நொடிகளுக்குள் அவனுக்குள் பெரும் பிரவாகம் பொங்கிப் பெருகியது.

வேகமாக தன் போர்வையை விலக்கியவன், “அஞ்சு மணிக்கு வந்திருக்க...” நேரம் அத்தனையைக் காட்டவே, எப்பொழுது கிளம்பி இருப்பாள் என்ற எண்ணம் அவனுக்கு.

“நைட் சுத்தமா தூக்கமே வரலை... இப்போதான் தூக்கம் வருது” அவன் போர்வையை விலக்கவே, அதைப் பிடுங்கி தன் முகத்தில் போட்டு மூடியவாறு முனகினாள்.

“என்னது தூக்கம் வருதா? என் தூக்கமே போச்சு மோனா...” சொன்னவன், போர்வையை மீண்டுமாக விலக்கி தூரப் போட்டவன், அவளை ரசித்தான்.

அவள் இரவு உடையான, காட்டன் சட்டை, பேன்ட்டில் இருக்க, “இப்படியே வண்டியை ஓட்டிட்டு வந்தியா?” அவள் கன்னத்தில் மூக்கால் உரசியவாறு கேட்டான்.

“இல்ல, மேலே ஒரு ஜெர்கிங் போட்டிருந்தேன்... கீழே ஹால்ல இருக்கு...” சொன்னவள், அவனை ஒட்டிக் கொண்டு உறங்க முயல, அவனுக்கு உறக்கம் வருமா என்ன?

“ஏய்... மோனா... தூக்கம் வருதா உனக்கு?” கேட்டவனின் கரங்கள், அவளது சட்டை பட்டனில் ஊர்ந்து கொண்டிருக்க, இதழ்களோ அவள் இதழ்களை உரசி அவளை இம்சித்தது.

“உங்க வேலையை ஏதாவது டிஸ்டப் பண்றேனா?” கேட்டவள் அவனை அடிக்கண்களால் நோக்க, அவன் இதழ்கள் அவள் இதழ்களை இம்சிக்க, கரங்களோ செவ்வனே அவள் தடைகளைக் கடக்கும் முயற்சியில் இறங்கியது.

அவள் கரங்கள் இரண்டும் அவன் வெற்று முதுகில் அழுத்தி, தன்னோடு இறுக்க, அவன் இதழ்களோ, அவள் இதழ்களுக்குள் அகழ்வாராய்ச்சியில் மூழ்கியது.

பசியில் கிடந்தவனுக்கு பெரும் விருந்தே கிடைத்தால், அதுவும் தானாகவே வந்து வாய்த்தால் விடுவானா? அவள் இதழ்களை மென்று தின்னும் முயற்சியில் அவன் இறங்க, கரங்களோ அதன் வேலையை செவ்வனே செய்திருந்தது.

“ம்...” மென்மையாக முனகி, அவன் செய்கைக்கு அவள் இசைந்து கொடுக்க, “மோனா... மோனா” என பிதற்றியவனின் இதழ்கள், அவள் முகம் முழுக்க தன் முத்திரையைப் பதித்தது.

அவன் வேட்கை கண்டு சிலிர்த்தவள், “ஹம்மா... மெதுவா... இப்போ நான் எங்கே போயிடப் போறேனாம்?” அவன் அவசரம் கண்டு அவனைத் தேக்க முயன்றாள்.

“ஒரு விஷயத்தை மறந்துட்டேன் பாரேன்...” அவன் திடுமென சொல்ல, புருவம் நெரிய அவனைப் பார்த்தாள்.

“அதான்... அந்த எக்ஸ்பெரிமென்ட்...” சொன்னவன் அவசரமாக செயல்பட, “ஹையோ... என்னங்க... வேண்டாம்...” அவள் அவனைத் தடுக்க முயல, அது எல்லாம் அவனிடம் செல்லுபடி ஆகுமா என்ன?

அவளை விட்டு சற்று விலகியவன், நேற்று தான் காயப்படுத்தியதன் தடத்தைக் காண, சின்னதாக சிவந்த தடத்தை அவள் தேகத்தில் கண்டவன், அவள் முகம் பார்த்தான். அவளோ தன் இமைகளை அழுத்தமாக மூடிக் கொண்டிருக்க, அவன் பார்வை அவளுக்குள் ஒரு சிலிர்ப்பை விதைத்தது.

“என்ன...? ஆராய்ச்சி முடிஞ்சதா?” அவள் வெட்கம்கொண்டு முனக,

“இன்னுமே தடம் தெரியுதே... கொஞ்சமா அழுத்தி புடிச்சா கூட உன் உடம்பு இப்படி சிவந்து போனா, நான் என்னதான் செய்யறது?” குறும்பு புன்னகையில், மயக்கும் விழியோடு அவன் கேட்க, தன் கீழுதட்டை கடித்துக் கொண்டாள்.

“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை...” விழி திறக்காமலே அவள் முனக, அவள் இதழ்களில் அழுத்தமாக முத்தம் வைத்தான்.

“மோனா... என்னைப் பாரேன்...” அவன் மயக்கும் குரலில் சொல்ல, மெதுவாக இமை பிரித்தாள்.

“கிஸ் மீ...” அவன் சொல்ல, அவனை இழுத்து அணைத்தவள், அவன் இதழ்களில் முத்தமிட, சில பல நிமிடங்கள், யார் எடுத்தது, யார் கொடுத்தது என்றே தெரியாத முத்த யுத்தம் அரங்கேறியது.

அவன் கரங்கள் இரண்டும் அவளைத் தொட்டு, உணர்ந்து அழுத்தி, சிலிர்த்து கொண்டாட, அவள் தேகம் குழைந்து கரைந்தது. அவனது ஈர இதழ்கள் அவள் கழுத்தில் இறங்கி, அவள் தேகத்தில் நிலைக்க, சிதறிக் கொண்டிருந்தாள்.

அவள் மேனியில் முட்டி, அவள் உயிரையே குடிக்கும் வேகத்தில் அவன் இருக்க, அவன் சிகை கோதி, அவன் முதுகில் நகக்கண் பதித்தவள், மென்மையாக முனக, அவனோ வேங்கையாகிக் கொண்டிருந்தான்.

அவன் உருவம்கொண்ட உணர்வு அவளைத் தாக்க, சிறு பதட்டமும், மெல்லிய நடுக்கமும் கொண்டாள். அதை உணர்ந்தவன், அவளுக்கு தன்னை உணர்த்த, தன் கரத்தை விலக்கிக் கொள்ள முயன்றவளின் முயற்சி தோல்வியைத் தழுவியது.

“என்னங்க...” அவள் சிலிர்த்து தடுமாறி அவனை அழைக்க, கணவனாக அவன் ஒன்றைச் சொல்ல, அவன் கோரிக்கையிலும், பேச்சிலும் சற்று நடுங்கினாள்.

“ம்ஹும்... என்ன இப்படியெல்லாம்...” அவள் போலியாக மறுக்க, அவளை முத்தமிட்டு அவன் சமாதானம் செய்தவன், தான் நினைத்ததை சாதித்திருந்தான்.

“மோனா... கொல்ற... இதுக்கு மேல முடியாது...” சொன்னவன், அவள் கண்களுக்குள் ஊடுருவி, அவளுக்குள்ளும் ஊடுருவ, மெல்லியதாய் முனகி சற்று திணறிப் போனாள்.

அவனோ முழு வேங்கையாக மாறி இருக்க, நிதானம் என்பதே இல்லாமல் அவன் வேகம் கூட்ட, அவன் அதிரடியில் திணறினாள்.

“ம்மா... மெதுவா... என்னால் முடியலை...” அவனது நெருக்கம் தகிக்க, அவன் அழைத்துச் சென்ற உலகுக்குள் அவள் கரைந்து காணாமல் போகும் உணர்வு. எங்கே தான் சிதறிப் போவோமே என அவள் நினைக்கையில், அவளுக்குள் முதல் உச்சம் புரட்டிப் போட, அவனை இறுக அணைத்து, அவன் தோளில் பல்த்தடம் பதிய கடித்திருந்தாள்.

அவள் நிதானத்துக்கு வர நேரம் கொடுத்தவன், தன் அதிரடியைத் தொடர, அவன் உச்சம் கண்டு சோர்ந்துபோகப் போகையில், “இப்போ விலகணுமா?” அவளிடம் கேட்டான்.

“நான் இன்னும் சின்னப்பிள்ளையா?” அவனை இழுத்து கட்டிக்கொள்ள, அவன் அவளோடு கலந்திருந்தான். அவன் அவளுக்குள் சிதற, அவளும் முழுதாக சோர்ந்துபோக, இருவரும் ஒன்றாக அப்படியே கட்டிக்கொண்டு படுத்து விட்டார்கள்.

அவன் அவளைவிட்டு விலக முயல, “பிளீஸ்...” விலகாதே என்னும் விதத்தில் சொன்னவளின் குரலில் ஒரு கண்ணீர்த்தடம் தெரிய, அவனுக்கும் பழைய நினைவுகள் தாக்க சற்று சோர்ந்தான்.

“ஷ்... மோனா... எதையும் நினைக்காதே...” சொன்னவன் அவளை இறுக கட்டிக் கொண்டான். உறக்கம் அவர்களைத் தழுவிக் கொள்ள, அன்று முழுவதும் அவன் அவளைக் கொண்டாடித் தீர்த்திருந்தான்.

எப்பொழுது உண்டார்கள்... உண்ணும் இடைவெளிக்கும், உறங்கும் நேரத்துக்கும் இடைப்பட்ட நிமிடங்கள் அவர்கள் உலகுக்குள் மாயமாக, அடுத்த இரண்டு நாட்கள் அவள், அவளது வீட்டுக்கும் செல்லவில்லை. வார விடுமுறையை கொண்டாடித் தீர்த்தார்கள்.

அவர்களது அந்த மகிழ்வை கெடுக்கவென்றே அங்கே வந்திருந்தார் அவளது ‘அப்பா’ பரமேஸ்வரன்.

தென்றல் என்ன செய்வாள்?
தென்றல் வீசும்...
 

ஆனந்த ஜோதி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 14, 2022
Messages
135
வந்தாச்சு சனீஸ்வரன்.

அவங்க சந்தோஷமா இருப்பது பொறுக்காம உடனே வந்துட்டார் பெரிய இவரு மாதிரி.

தென்றல் இந்த முறை விட்டா மறுபடியும் ஒரு வாய்ப்பு அவ்வளவு எளிதில் அமையாது. கவனம்

வெயிட்டிங்....
 
Last edited:

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
வந்தாச்சு சனீஸ்வரன்.

அவங்க சந்தோஷமா இருப்பது பொறுக்காம உடனே வந்துட்டார் பெரிய இவரு மாதிரி.

தென்றல் இந்த முறை விட்டா மறுபடியும் ஒரு வாய்ப்பு அவ்வளவு எளிதில் அமையாது. கவனம்

வெயிட்டிங்....

தென்றல் இப்பொழுது நிலையான ஒரு முடிவை எடுக்க வேண்டும். பார்ப்போம்......

நன்றி!
 

gomathy

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 16, 2022
Messages
99
வந்தாச்சு சனீஸ்வரன்.

அவங்க சந்தோஷமா இருப்பது பொறுக்காம உடனே வந்துட்டார் பெரிய இவரு மாதிரி.

தென்றல் இந்த முறை விட்டா மறுபடியும் ஒரு வாய்ப்பு அவ்வளவு எளிதில் அமையாது. கவனம்

வெயிட்டிங்....
Sariyana karana peyar Parameswaranukku:LOL::LOL:
 

Lakshmi murugan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
646
பெண் தக்க பதிலடி கொடுப்பாள் என்பதை நம்புவோமாக.
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
Thendral mudivu panniduva
Inium appa kaila kuduka vaipila

அப்படித்தான் நடக்கணும்.

நன்றி!
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
அப்பாடா இப்போதான் தெளிஞ்சு அவளே வந்திருக்கா, யோவ் கரடி உன்னை யாருய்யா கூப்பிட்டா, 😡😡😡😡😡

அவர் வராமல் போவாரா என்ன?
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
Intha Parameshwaran kosu thollai theeravey theeratha Writerji😜😁

கடைசி வரைக்கும் அதற்கு வாய்ப்பே இல்லை.

நன்றி!
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
Ippo enna seiya poraro

இதுக்கு மேலே முட்டாள்த்தனம் செய்ய மாட்டா.

நன்றி!
 
Top