• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அவனது அவள்

Malar Bala

Staff member
Jul 31, 2021
67
50
18
Thanjavur
அவனைப் பற்றி நானறிந்த சில..



செய்யும் வேலைகளைப்
பாராட்டுபவன் தான்
ஆகினும் அவனருகில்
நான் செய்தால்
ஏனென்ற கேள்வியுடன்
நின்று தடுப்பான்..



அதிகம் கோபம்
கொள்ளும் பழக்கமுடையவனே
ஆகினும் நான்
அதிகப்பிரசங்கி யாகவே
செய்தாலும் சிரித்து
நகர்கின்றான் ஏனோ..



தன் காதலின்
உணர்வை அவன்
வார்த்தைகள் கூறாவிடினும்
கூறாமல் சென்றதில்லை
அவன் விழிகள்..



அவன் எனைத்தேடியது
இல்லை தேடவிட்டதுமில்லை
ஆகினும் நானாக
ஒதுங்கினால் நானரியுமுன்
என் முன்னிருப்பான்..



சிறிது சோர்வுற்றாலும்
ஆதரவாய் இருப்பான்
அணைப்பினில் ஆனந்தம்
கொடுப்பான் ஆகினும்
தனிமைப் படுத்தி
இரசிப்பான் ஏனோ..



கண்ணாடி பார்த்தால்
அருகில் இருப்பான்
பின்னின்று அவனே
அணைப்பான் இரகசியமாய்..



பொய்யென்றால் கண்டுகொல்வான்
மெய்யாகக் காதல்
கொள்வான் அவனே..



ஏனோ என்
மனம் மட்டும்
அறிய மறுக்கின்றான்
என் நிலையறிந்து
இத்தனிமை போக்க
எப்பொழுது அவனென்
காதல் அறிவானோ...



அவனது அவளாக