• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அவள் -2

வாணிலா அழகன்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
21
17
3
Vaitheeswaran koil
அவள் -2
🤎🤎🤎


சிந்தியா சுந்தரின் அத்தை மகள்.. அத்தையின் வேண்டுக்கோளுக்கு இனங்க திருமணம் செய்துகொண்டான்.. ஆனால் அவன் ஒருபோதும் அப்படி சிந்தியா இடம் நடந்து கொண்டது கிடையாது.. இருவரும் நல்லொரு தம்பதியினர் தான்..

அவளால் அவன் ரசனைக்கு ஈடுக்கொடுத்து போக இயலாமை தான் அப்ப.. அப்ப.. இந்த மூக்குறிஞ்சும் படலம்..

ஒருவாரமாக இப்படியாக தேங்காய் சட்னி.. இட்லி மட்டுமே தொடர்ந்தது..

"சிந்தியா.. இன்றைக்கு என்ன?"

"இட்லி, தக்காளி சட்னி"..

"ஏன்டாமா, சிந்து வீட்டில் மளிகை பொருட்கள் இல்லையா?"

"ஏன் கேட்கிறீங்க.. இந்த நெக்கலுக்கு ஒன்றும் குறைச்சல் இல்ல.. என்னால் இவ்வளவு தான் முடியும்.. உடம்புக்கு இதான் நல்லது"..

"யார் உடம்பிற்கு மா"😀

"ஏன் சொல்லமாட்டிங்க காலையில்" என சிந்தியா அவளுடைய வேலைகளை பட்டியல் போட ஆரம்பித்தாள். கண் விழிக்கும் போது அங்கிருந்த பட்டாளமே மறந்து போய் இருந்தனர்..

சின்ன.. சின்ன விசயத்திற்கு கூட சிந்தியாவின் கத்தல் ,, தொட்டதற்கு எல்லாம் ஒரு குத்தல் பேசி எப்படி தொடங்கினாலும் அது யூடேன் அடித்து கடைசியாக சண்டையில் வந்து முடிவடைவதுமாக தான் இருந்து..

ஆபிஸில் கண்களை உறக்க மூடி ஆழ்ந்து போய் இருந்தான் சுந்தர்..

"சார்.. சார்... சார்"..

தன்னை தட்டிய எழுபிய பின் உணர்வுக்கு வந்தவனாய்.. "ஓ.. சாரி சேதுராமன் சார்.. என்ன சொல்லுங்க"..

"சார் இன்றைக்கு"..

"ஆஹா.. சாரி சார்.. கவலைப்படாதீர்கள் ஷார்ப்பா 5.30 க்கு பார்ட்டி.. நீங்க எல்லாருக்கும் பத்திரிகை தந்து விட்டிர்களா??"

"ம்ம்.. தந்துட்டேன் சார்.. நான் அதற்காக வரல உங்களை தான் பார்க்க வந்தேன்"..

"சொல்லுங்க சார்"..

"சொல்கிறேன் என்று தப்பாக நினைக்காதீர்கள்.. நீங்களும், என்னை அப்படி தான் நடத்தி உள்ளீர்கள், நானும் உங்களை அப்படி தான் நானும் பார்க்கிறேன் தம்பி"..

"எதுவாக இருந்தாலும் சொல்லுங்க" "சார்! நான் எப்பொழுதும் உங்களை என் அப்பா ஸ்தானத்தில் வைத்து தான் பார்க்கிறேன் நீங்கள் தாராளமாக சொல்லாம் சார்!!"

கொஞ்சம் தயங்கியவர் பின்னர் தொடர்ந்தார்.

"நீங்க ஆபிஸிக்கு வந்ததிலிருந்து நான் பார்க்கிறேன்.. நீங்கள் தேனீ மாதிரி உழைப்பாளி.. சிரித்த முகம் மாறாதவர்.. இங்கே உள்ள எத்தனை பெயருக்கு உங்களால் கஷ்டம் போன இடம் தெரியாமல் போய் இருக்கின்றன.. ஓடி.. ஓடி வளைய உதவி செய்தவர்.. ஆனால் கொஞ்ச நாட்களாக ஏனோ ஒருவித சோகம் முகத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கு சீக்கிரமாக அந்த முகமூடியினை கழற்றி வீசி விடுங்கள் தம்பி.. அது உங்களுக்கு பொருந்தவில்ல" என்றவர் சற்று என வெளியேறினார்..

சுந்தர் அவர் சொன்ன விதத்தினை ரசித்தவன் மௌன சிரிப்புடன் அன்றைக்கு முழுவதும் குதூகலத்துடன் அனைவருடனும் சேர்ந்து உழைத்தான்..

பார்ட்டி முடிந்த பின்னர் அனைவரும் சேதுராமன் சாரை கட்டி தழுவி அணைத்தபடி அவரின் ரிட்டயர்மென்ட்க்கு வாழ்த்துகள் கூறி வழி அனுப்பினர்..

நல்ல மனுசன் என அனைவரும் கூறி மல்கினர்..

விழா முடிந்து வீட்டிற்கு முன் கார் வந்து நின்ற பொழுது நடுதிசையை தொட்டு விட்ட பரப்பரப்பில் இருந்தனர் மேக மூட்டங்கள்!!


அவள் வருவாள் -3