அவள் -3
மேகங்கள் இடையே கண்ணாமூச்சி காட்டி கண்சிமிட்டும் நட்சத்திர கூட்டங்கள் சுந்தரை கண்டு நகர்ந்து கொண்டன..
காலிங் பெல் ஒருமுறைக்கு இருமுறை ஒலித்து அடங்கின..
தலையை சொறிந்தபடியே அரை தூக்கத்தில் நடந்து வந்த சிந்தியாவை பார்க்கும் போது சித்தானைக்குட்டி போல அந்த இருட்டில் தெரிந்தாள். வாய் விட்டு வெளியே வந்த சிரிப்பினை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான் சுந்தர்..
"என்னங்க சாப்பாடு எடுத்து வைக்கவா.. தூக்கம் கலையாமலே கேட்டாள்"..
"ஒன்னும் வேணாமா!! பார்ட்டியில் சாப்பிட்டு வந்துட்டேன். நீ சாப்பிட்டியா, பசங்க சாப்பிட்டு விட்டிர்களா?"
"வேணாமா, அப்ப டைனிங் டேபிளில் உள்ள சாப்பாட்டை எல்லாம் கொஞ்சம் ப்ரிட்ஜ்ல எடுத்து வைச்சிட்டு படுங்க"..
ப்ரிட்ஜ்ல சாப்பாட்டை எடுத்து வைத்துக்கொண்டே, "இன்னைக்கு என்னம்மா சாப்பாடு செய்து தந்த பசங்களுக்கு, சிந்துமா.. சிந்து".. குறட்டையே சத்தமே பதிலாக வருவதை கண்டு நகைத்தவாறு அங்கிருந்து நகர்ந்தவன்..
ஷோபாவிலேயே படுத்து உறங்கும் தன் மனைவிக்கு போர்வை போர்த்தி விட்டு.. பசங்க அறைக்கு உறங்க சென்றான்.
மறுதினம் காலை;
நிர்வாகத்தில் இருந்து போன் அழைப்பு வந்தது..
சுந்தர்..
"வணக்கம் சார்"..
"வணக்கம் சுந்தர்".
"சொல்லுங்க சார்"..
"கம்பெனிக்கு துணை மேலாளர் தேர்வு செய்ய ஆட்கள் எடுக்க விளம்பரம் தந்து இருந்தோம் அல்லவா அதற்கான தேர்வு நாளை தானே"..
"ஆமாம் சார்"..
"ஓகே சுந்தர்".
" சார் நான் எத்தனை மணிக்கு வரனும் சார்" என்ற போதே அவன் குரல் கொஞ்சம் தொவ்வல் விழுந்து இருந்தது. 'நாளைக்கு ஒரு நாள் தான் லீவ், ம்ஹூம்' என மனதுக்குள் யோசித்தபடியே பெருமூச்சை வெளியே விட்டான்.
"சுந்தர் நான் கூப்பிட்டது. நாளை நீங்கள் வரனும் என்ற அவசியம் இல்லை நாங்கள் இண்டர்வியூ நடத்தி முடித்து விடுகிறோம்.. நீங்கள் மண்டே ஆபீஸ் வந்தால் போதும் என சொல்ல தான்" என்றவரின் குரல் அவனுக்கு தெய்வாதினமாக ஒலித்தது.
"ஆஹ்! ஓகே சார், ஓகே சார், தேங்க்ஸ் சார்". என்றவனிடம்.
" இட்ஸ் ஓகே சுந்தர் .. நல்ல எஞ்சாய் செய்யங்க".. என்றவரின் இணைப்பு துண்டிக்கப்பட்டது..
சுந்தர் குஷி மூட் உடன் பசங்களை அழைத்தான்..
"இன்றைக்கு எங்க போகலாம்.. எங்க..??
"அப்பா பீச்.. பூங்கா"..
" அப்பா.. அப்பா.. பொம்மை .. பொம்மை".. ( மாதம் இருமுறை பொம்மை ஷாப்பிங் தான் சின்னம்மா குட்டிக்கு).
"ஓ..ஓகே.. ஓகே.. சிந்தியா நீ சொல்லு எங்க போகலாம்"..
"எங்காவது அப்பாவும், புள்ளையும் போய் விட்டு வாங்க. என்னை விடுங்க.. நான் கொஞ்சம் நிம்மதியாக தூங்குவேன்"..
"சிந்துமா உன் மதியம் தூக்கம் என்னைக்கு உன்னை விட்டு தொலைகிறதோ அன்னைக்கு தான் உன் உடம்புக்கு நல்லது"..
"அப்ப.. இப்ப.. என்ன சொல்ல வரிங்க??
"நான் சினிமா.. பூங்காவானு கேட்க தான் வந்தேன். ஒன்னும் சொல்ல வரல" என்று சிரித்தான்.. அவனுக்கு நன்றாக தெரியும் இதற்கான முடிவு.. ஆதலால் அவன் குழந்தைகள் முன்பு விவாதங்களை முடிந்தவரை தவிர்த்து விடுவதே அதிகம் முற்பட வேண்டி இருக்கிறது..
ஒருவழியாக குழந்தைகளின் அழுகையே மேலோங்கி ஜெயித்தது.. அனைவரும் சேர்ந்து ஷாப்பிங்.. சினிமா.. ஹோட்டல் என முடிவுற்றது..
காரில் வரும் போது பசங்க உறங்கி போய் இருந்தனர்..
"சிந்துமா!! சிந்து".. ரம்மியமான குரலில் அழைத்தான்..
" ம்.. சொல்லுங்க"..
"மூவி எப்படி இருக்கு??
சொரம்மே இல்லாத குரலில் "நல்லா இருக்கு"..
"அந்த படத்தில் வந்த ஹீரோயினியே பார்த்தால், கல்யாணம் ஆன பொழுது நீ இருந்ததை போலவே இருக்கிறாள் இல்ல"..
"இல்ல.".
"அவ தமிழ் பொண்ணு மேக்கப் இல்லாமல் தமிழச்சிக்கே உரித்தான கலர்.. நல்ல உடல்வாகு எல்லாம் அளந்து வைத்தார் போல் ரம்மியமான அழகு"..
--------------
"ஹீரோ சறட்டு என அவள் அறியாத வண்ணம் இழுத்து அணைக்கும் பொழுது அவள் விழி உண்மையாகவே பேசாமல் பேசுகிறது, ச்சே.. சான்ஸ்சே இல்ல"..
"என்னுடைய நொம்ப நாள் ஆசை சிந்து.. இப்படி யாருமே இல்லாத ரோட்டில் நள்ளிரவில் மெல்லிசை கேட்டப்படி நீ என் தோளில் சாய்ந்து பேசியபடியே நான் காரை ஓட்டனும்.. பனியின் காற்றை சுவாசித்தபடி சில்லென்ற மேகத்தில் நிலாவின் தென்றலை தீண்டியபடி .. இப்படி நிறைய சின்ன.. சின்ன ஆசைகள் இருக்கு.. அதில் இப்ப ஒன்று நிறைவேற போகிறது" என்றவனின் சந்தோஷத்தை கலைத்தது சிந்தியாவின் குறட்டை ரிங்காரம்..
சிந்தியாவின் தூக்கத்தை கலைக்காமல் மனதிற்குள் சிரித்தபடியே காரை விரட்டினான்..
அவள் வருவாள் -4