• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அவள்-4

வாணிலா அழகன்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
21
17
3
Vaitheeswaran koil
அவள்-4
🤎🤎🤎


இன்னிசை இசை ஞானி இளையராஜாவின் மனதினை மயக்கும் ரம்மியமான இசையில் நனைந்த படி சுந்தர் காரை விரட்டியபடி வீட்டை வந்து அடைந்தான்..

அசதியில் கண் அசர்ந்து தூங்கிய சுந்தர்.. காலையில் தாமதமாகவே எழுந்து ஆபிஸ்க்கு அவசரம் அவசரமாக கிளம்பிய பின்னர் சுந்தர் சிந்தியாவை அழைத்தான்.. "சிந்துமா பசங்களுக்கு விடுமுறை விட்டாச்சி.. அவர்களும் எத்தனை நாட்களுக்கு தான் வீட்டிலேயே அடைஞ்சி கிடப்பார்கள்.. நான் அப்பாவை கிளம்பி வந்து பசங்களை அழைச்சிட்டு போக சொல்லி இருக்கிறேன்.. ஊரில் தம்பி பசங்கள் விமலும்.. தீபிகாவும் எதிர் பார்க்கிறார்களாம்.. நான் கறிகடை பாய் இடம் சொல்லிட்டு போறோன். அவர் கடை பையன் இடம் தந்து அனுப்பி வைப்பார் சரியா, வாங்கி சமைத்து விடுமா".

"ஆஃபீஸ்கு கிளம்புகிறேன் ஏதாவது வேண்டும் என்றால் போன் பண்ணி சொல்லு வரும்போது வாங்கி வருகிறேன் எனக்கு இப்போது நேரமாய்டு என்று கூறிவிட்டு",

ஏய்!! பசங்களா இங்கே வாங்க என்று அழைத்தவன். நல்லா கேட்டுங்க ஊரில் போய் இருக்கிறப்ப அங்க பாட்டி.. தாத்தாவிற்கு எல்லாம் தொந்தரவு தர கூடாது.. அவங்க சொல்வதை கேட்டு சமத்து பிள்ளைகளாக நடந்து கொள்ளனும் என்ன ஓகே என்று சொன்ன கணமே"..

"ஹாய்.. ஜாலி.. ஜாலி"..

இரண்டும் அவன் கன்னத்தில் முத்தமழை பொழிந்து விட்டு ஓடின..

"என்னங்க என்னிடம் ஒரு வார்த்தை கேட்கமா ஏன்?? அதற்குள் மாமாவை வர சொன்னிங்க.. இங்க அப்பாவும்.. அம்மாவும் கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க.. அப்புறம் என்னை பத்தி என்ன நினைப்பாங்க",

"உன்னை பற்றி ஒன்றும் நினைக்க மாட்டார்கள்.. அத்தை இடம் நான் சொல்லி கொள்கிறேன்.. இங்கிருந்து நான்கு தெரு தள்ளி இருக்கும் உங்கள் வீட்டிற்கு லீவ் விட்டு இவ்வளவு நாள் கழித்தும் அழைச்சிக்கிட்டு போகதது உன் தவறு.. உனது சோம்பேறி தனத்திற்கு நான் என்ன செய்ய ?? போதும்.. போதும்.. என் பிள்ளைங்க இந்த இயந்திர வாழ்க்கை வாழ்ந்தது எல்லாம் போதும் .. கொஞ்ச நாட்களாவது இயற்கை சூழலில் வாழட்டும்.. நான் கிளம்புகிறேன் பை".. 👋..

சிந்தியாவின் பதிலுக்கு காத்திருக்காமலே கிளம்பி பறந்தான்..

ஆபீஸ்சே ஒரே பரபரப்பாக காணப்பட்டது. அனைவரும் படை சூழ ஆபிஸ் வாயில் நின்று காத்திருந்தனர்.. அவர்.. அவர் கைகளிலும் மலர் கொத்துக்களும்.. பூ மாலையும் என வைத்து கொண்டு வரிசை கட்டி நின்றனர்..

சுந்தர் அனைவரையும் கடந்து கேபினுக்குள் சென்று அமர்ந்தான் ..

சரியாக மணி 10.10 தொட்டது.. கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது துணை மேலாளர் வந்து விட்டார்கள் என்பது நன்றாகவே தெரிந்தது.. சிறு நொடிக்கு பின்னர் வெளியே ஒரே சலசலப்புகள் சிரிப்பு ஒலிகள்.. கை தட்டல்கள் விண்ணை பிளைந்தன.. வாழ்த்து உரைகள்.. தொடர்ந்து பாராட்டுக்களும் பரிசளிப்புகளும் நடைப்பெற்ற வண்ணம் இருந்தனர்..

சுந்தர் மனதிற்குள்ளும் ஆவல் வந்து ஒட்டிக்கொண்டது.. எழுந்து சென்று கண்ணாடி வழியாக எட்டி பார்த்தான் வந்திருக்கும் மேலாளரை சுற்றி ஒரு பெரிய கூட்டமே ஆழ்க்கொண்டு இருந்தால் அந்த கூட்டத்தின் நடுவே இருப்பவர் யார் என்று தெரியவில்லை.. மனது கடந்து அடித்து கொண்டதை சமாதானம் செய்து விட்டு மீண்டும் இருக்கையில் வந்து அமர்ந்தனே தவிர இருப்பு கொள்ளவில்லை..

இதயம் படப்படத்து.. கண்கள் தேடி.. தேடி ஓய்ந்து போக ஆரம்பித்தது.. அந்த பட்டாள கூட்டங்கள் கலைந்து போன மாதிரி தெரியவில்லை.. பேப்பர் வெயிட்டை எடுத்து உருட்டினபடியே மனதிற்குள் எழும் கேள்விகளுக்கு பதில் தேடலானான் 'யாராக இருக்கும் ஆணா? பெண்ணா? நாமும் கொஞ்சம் அலட்சியமாக இருந்து விட்டோமோ?' இதற்கு மேலே யோசிப்புதை நிறுத்து விட வேண்டியது தான் என முடிவு எடுத்தவன் அடுத்த நொடியே பெல் பட்டனை அழுத்தினான். நோ பதில் காணும் பெல் பட்டனை அழுத்தி.. அழுத்தி நோ யூஸ். 'என்னடா இது ஒரு பயலையும் காணும்.. இது சரிம்படாது'.. கைப்பிள்ளை நேராக களத்தில் குதித்திட வேண்டியது தான் என்றபடி..

டெலிபோனில் அழைப்பு விடுத்தான்.. ரிங் முடியும் தருவாயில் அட்டன் செய்த உடனே சரண்யாவிடம் அவனின் கோபத்தின் வெளிப்பாடுகள் தெறித்து விழுந்தன வார்த்தைகளாக.. "அங்கு என்ன சத்தம்? இன்னும் ஓய்ந்த படி தெரியவில்லை"..

"அது வந்து சார்! புது"...

"சரண்யா! அவங்களோட வெளியே வேலை செய்ய போகின்றனர்களா, இப்ப மணி எத்தனை, எல்லாரையும் அவர்கள்.. அவர்களின் வேலையை உடனே போய் பார்க்க சொல்லுங்க".. அதட்டல் கொஞ்சம் அதிகமாக இருந்தது.. "புதுசா வந்திருக்கும் ஏஐம்- ஐ எனது கேபினுக்கு வர சொல்லுங்க". இணைப்பு டங்குனு என்ற சத்ததுடன் துண்டிக்கப்பட்டது.. அவன் கோபத்தின் அனல் போனில் தெரிந்தது சரண்யாவிற்கு அவன் துண்டித்தும் சில நொடி அதிலிருந்து விடுப்பாடமல் சிலை போல நின்றவள் சுதாரித்து கொண்டு புது மேலாளரை நோக்கி ஓடினால்..

கேபினிக்குள் சுந்தர் கோபத்தின் உச்சத்தில் இருந்தான்.. கண்கள் எல்லாம் கோவை பழம் போல சிவந்து இருந்தன.. மனதிற்குள் வசைப் பாடிக்கொண்டிருந்தான் 'அப்படி என்ன பெரிய லாடு லபக்கு தாஸா.. இங்கே வரட்டும் அவ்வளவு சீக்கிரமாக உள்ளே வர அனுமதி விடுவேனா?? என்று பார்ப்போம் வெளியே காக்கா வைக்கிறேன் அப்ப தெரியும் சுந்தர் யார்' என்று கர்வத்தின் உச்சத்து கொம்பானியில் இருந்தது அவன் எண்ண உணர்வுகள்..

Excuse me Sir,,.. may i come in - என்ற வெளியில் கேட்ட அந்த குரல்!!!

தொடர்ந்து அவள் வருவாள் - 5