அகானா - 15
கடும் கோபத்துடன் கமிஷனர் அலுவலகம் முன் நுழைந்தான் ஆகன். அவனைப் பார்த்ததுமே “சார் சார் ப்ளீஸ்.. எந்த வைலண்டும் வேண்டாம்.. அப்புறம் பிரச்சினை வேற மாதிரி போயிடும்.. ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இருங்க..” என அவனின் லாயர் சொல்லிக் கொண்டிருக்க,
“ஹவ் டேர்..” என பல்லை கடித்தவன், “ஒரு நிமிஷம் கூட என் அத்தை இங்க இருக்கக்கூடாது. ஃபாஸ்டா மூவ் பண்ண சொல்லுங்க.. அத்தை இங்க வரும்போது எல்லாம் பக்காவா, ரெடியா இருக்கணும்.. கமாண் குயிக்..” என்றவனுக்கு கோபம்.. கோபம்… கோபம் மட்டும் தான்.
இரண்டு நாட்களுக்குள் பதில் சொல்ல வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி, உடனே அரெஸ்ட் வாரண்ட் என்றால் அவனால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்.
அதிலும் எந்த தவறும் செய்யாத நித்யா அத்தை மேல் கை வைக்க, அவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்.
‘ப்ளடி பிட்ச்..’ என மனதுக்குள் கத்தியவன், இவனையே பார்த்துக் கொண்டிருந்த சங்கரிடம் “அவ தான்ப்பா.. அவ தான் எல்லாம் பண்றது..” என்றான் ஆத்திரமாக.
“அவ செஞ்சது தப்பு இல்ல கண்ணா.. நீ முதல்ல இப்படி கத்துறதை நிறுத்து. உன் அம்மா செஞ்சதுக்கு, நாளைக்கே என்னை கூட என்னவும் செய்யலாம்..” என்றவர் “மகியை கூட அவதான் வச்சிருக்கணும்..” என்றார் நிதானமாக.
“அப்பா..” என அதிர்ந்தவனிடம்,
“மகி காணாமல் போன ரெண்டு நாள், நீயும் எங்களை மாதிரிதான் பதட்டமாக இருந்த. ஆனா நேத்தும் இன்னைக்கும் அந்த பதட்டம் இல்லை. அப்போ அம்முதான் பண்ணி இருக்கணும்னு உனக்கு தெரிஞ்சிருக்கு. அவகிட்ட மகி சேஃபா தான் இருப்பான்னு, உனக்கு புரிஞ்சிருக்கு. அதனாலதான் நீ அமைதியா இருக்க.. சரியா..” என சங்கர் தெளிவாக மகனிடம் கேட்க
“நோ ப்பா.. அவ செஞ்சாளான்னு தெரியாது. பட் செஞ்சிருக்கலாம்னு நினைக்கிறேன். நம்ம மேல என்ன கோபம் இருந்தாலும், அதை மகி மேல காட்ட மாட்டான்னு நம்புறேன். அவளோட எண்ணம் நம்மளை, குறிப்பா அம்மாவை பயமுறுத்துறது மட்டும்தான். அது நடந்துட்டா அவளே மகியை கொண்டு வந்து விட்டுடுவான்னு நினைக்கிறேன்..” என்ற மகனைப் பார்த்து சிரித்தார் சங்கர்.
அம்முவோட காயங்கள் உங்க யாருக்கும் புரியல.. புரியவும் செய்யாது.. அவளோட வலியும், அவ பார்த்த அவமானமும் தான் இந்த அளவுக்கு, அம்முவை மூர்க்கமா மாற்றி இருக்கு. எனக்கு தெரிஞ்சு மஞ்சு கிட்ட கூட, அம்மு மனச விட்டு பேசி இருக்க மாட்டான்னு நினைக்கிறேன்..” என்றார் சங்கர் வருத்தமாக.
“மகி காணாம போனது.. ஹாஸ்பிடல் ரெயிட். இப்போ நித்யா அரெஸ்ட்… இதெல்லாம் தானா நடக்கல..” என்ற சங்கர் நிறுத்தி “உனக்கு முன்னமே எல்லாம் தெரியும்.. தெரிஞ்சும் அமைதியாக இருந்திருக்க..” என்றார் நிதானமாக.
“அவளுக்கு நாம செய்ததுக்கு இதெல்லாம் குறைவு தானேப்பா.. எப்படியாவது அவளோட கோபம் குறைந்து நார்மல் ஆனா போதும்னு மனசு சொல்லுது ப்பா.. ஆனா..” என்றவன் நிறுத்தி அவரைப் பார்க்க ,
“உன் வினோத் மாமாவோட வீக்னஸ் உன் நித்யா அத்தை. உன் அம்மாவோட வீக்னஸ் மகி.. எல்லாம் தெரிஞ்சுதான் இறங்கி இருக்கா..” என்றவர், அடுத்து என்ன சொல்லி இருப்பாரோ அதற்குள் ஒரு ஜீப் வர, அதில்தான் நித்யா இருந்தார். அதற்குள் கமிஷனர் ஆபீஸ் வளாகத்தில் மீடியாக்கள் கூட்டம் குவிந்துவிட்டது.
“ஷிட்.. ஷிட்..” என தன் காலை உதைத்து கோபத்தை காட்டிய ஆகன், வேகமாக முன்னே செல்ல போக,
“என்ன பண்ற நீ? எல்லாரும் கேமராவை உன் பக்கம் திருப்புவாங்க.. அது நித்யாவுக்கு இன்னும் பிரச்சனையாகிடும்.. நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு..” என மகனை இழுத்து பிடித்தார் சங்கர்.
“அப்பா..” என்றவன், அவர் பார்த்த பார்வையில் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து விட்டான். ஆனால் ஏற்கனவே அகானா கூறியிருப்பாள் போல. அதனால் நித்யாவை மிகவும் கவனமாக, ஒரு போட்டோ கூட எடுக்க விடாமல், பாதுகாப்பாக உள்ளே அழைத்து வந்து விட்டனர் காவலர்கள்.
உள்ளே ஒரு அறையில் நித்யா உட்கார வைக்கப்பட்டிருக்க, அதற்குள் லாயர் பர்மிஷன் வாங்கியிருக்க, சங்கரும் ஆகணும் வேகமாக நித்யாவிடம் சென்றனர்.
“அத்தை சாரி.. சாரி.. ஒன்னும் பயந்துக்க வேண்டாம். இன்னும் ஒன் ஹவர்ல இங்க இருந்து போயிடலாம். எதையும் நினைத்து பயப்பட வேண்டாம். டென்ஷன் ஆக கூடாது..” என ஆகன் பதட்டமாக கூற, அவன் கையைப் பிடித்து சிரித்தாள் நித்யா.
அந்த சிரிப்பு ஆகனை மொத்தமாக கொன்று குவித்தது. “அத்தை” என்றவனின் குரல் கலக்கமாக ஒலிக்க,
“ஒருத்தரோட புண்ணியத்துல மட்டும் பங்கு போதும், பாவத்துல வேண்டாம்னு சொல்றது எந்த வகையில் சரி கண்ணா.. உன் மாமா செய்த பாவத்தின் சம்பளம் இது..” என்று மெல்ல சிரித்தாள் நித்யா.
“அப்படி.. அப்படி எல்லாம் இல்ல அத்தை.. ஏன் இது மாதிரி யோசிக்கிறீங்க? நீங்க ஸ்ட்ராங் வுமன் தானே, ப்ளீஸ் டவுன் ஆகாதீங்க..” என்ற நேரம் சரியாக அகானாவின் வாகனம் அங்கு வந்து நின்றது.
“யார் என்னை கைவிட்டாலும், இவ என்னை விட மாட்டா கண்ணா.. இப்ப கூட எனக்காக தான் வந்திருப்பா.. ஏன் தெரியுமா.?” என்ற நித்யாவை பார்த்து, ‘தெரியும்’ என்பது போல தலையசைத்தான் ஆகன்.
“ஆமா அவளோட குற்ற உணர்ச்சி.. அவளோட குற்ற உணர்ச்சி அவளை அங்க நிம்மதியா இருக்க விட்டிருக்காது.. பழி வாங்கணும்னு நினைச்சாலும், மஞ்சரி அக்காவோட வளர்ப்பு அதை செய்ய விடாது. அதையும் மீறி செய்தாலும், நம்மளை பயமுறுத்த தான் இருக்கும்..” என்று நித்யா பேசிக் கொண்டிருக்கும்போதே அவர்களை கடந்து உள்ளே நுழைந்தாள் அகானா.
உள்ளே சென்று பத்து நிமிடத்தில் வெளியே வந்தவள், அப்போதும் இவர்களை கடந்து அமைதியாகவே சென்றுவிட, சங்கர் இப்போதுதான் அகானாவை முதல்முறை பார்க்கிறார்.
அவளது நிமிர்வான பார்வையும், நடையும், தைரியமும் கண்ணில் ஒற்றிக்கொள்ள வைத்தது. அதிலும் அவள் மற்றவர்களிடம் பேசிக் கொண்டே, நடந்து சென்ற தோரணை நிச்சயம் ராணியின் கம்பீரம் தான். அகானாவையே விழியாகாமல் பார்த்து ரசித்தார் மனிதர்.
அப்போது அவர்களிடம் வந்த வக்கீல் “சார் ஒன் வீக்ல எல்லாம் ரீசெட் பண்ண சொல்லி இருக்காங்க.. இப்போ நாம கிளம்பலாம்.. மேடம் நாளைக்கு வந்து ஒரு சைன் மட்டும் போடணும்.. அதுவும் கலெக்டர் ஆபீஸ்ல இருக்குற ஹெல்த் டிபார்ட்மென்ட் ஆபீஸ்ல..” என்றதும்,
“அப்போ ஜாமீன் வேண்டாமா? எப்படி ஜாமீன் இல்லாம..” என ஆகன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, மற்றொரு அறையில் இருந்து ஆரியன் வந்து கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்ததும் ‘இவன் இங்க என்ன பண்றான்.?’ என்று யோசிக்கும் போதே, ஆரியன் நேரடியாக இவர்களிடம் தான் வந்தான்.
“ஹாய் சீனியர் எப்படி இருக்கீங்க.?” என கை குலுக்க,
“எஸ் ஃபைன் ஆரி.. நீ இங்க என்னடா பண்ற.? உன் தங்கையை பார்க்க வந்தேன் எல்லாம் மொக்க போடாத.. அவளைப் பார்க்க நீ கலெக்டர் ஆபீஸ்க்கு தான் போய் இருக்கணும்.. கமிஷனர் ஆபீஸ்ல என்ன வேலை.?” என யோசனையாக கேட்க,
அவன் பேச்சில் சிரித்த ஆரியன், “சீனியர் நான் வந்து ஒன் வீக் ஆச்சு.. என் சிஸ்டர் தனியாக இருக்கா.. அவளுக்கு துணை வேண்டாமா.. மஞ்சு அம்மா இருந்தாலும், நான் இருக்கிற மாதிரி வருமா சொல்லுங்க..” என ஆரியன் கடுப்படிக்க,
“டேய்..” என்று ஆகன் பல்லை கடிக்க அதற்குள் அவனின் லாயர் தான் சார் “மேடம் க்கு ஜாமின் கொடுத்தது சார்தான்.. என காதில் முனுமுனுக்க,
“ஓ..” என்று யோசனையானவன், ஆரியனை பார்த்து “எதுக்கு இந்த ட்ராமா.?” என்றான் எரிச்சலாக.
“டிராமாவா..” என சிரித்த ஆறியன், “உங்க அத்தை மேல ரொம்ப பாசம் போல..” என்றான். பின் “ஏன் இந்த ட்ராமான்னு நீங்க அவகிட்ட தான் கேக்கணும்.. அவ என்ன சொன்னாலும் செய்யுற இந்த அப்பாவிகிட்ட கேட்டா, என்ன தெரியும்.?” என்று பேசிக் கொண்டிருக்கும்போதே, அகானாவிடமிருந்து ஆரியனுக்கு போன் வந்துவிட்டது.
“எஸ் அகி.. ஆல்மோஸ்ட் டன்.. நான் கிளம்பிட்டேன்.. டேக் கேர்..” என்று பேசி வைத்தவன், “ஓகே சீனியர்… நானும் கிளம்புறேன். இந்த கேஸ் முடியுற வரை, என்னை இங்கே இருக்க சொல்லி இருக்கா அகி. வெட்டியா இருந்து என்ன செய்ய? உங்க ஹாஸ்பிடல்ல நீட் இருந்தா சொல்லுங்க.. அப்படியே வந்து ஜாயின் பண்ணுவோம்..” என்றதும் ஆகனின் பார்வை கூர்மையாக பக்கென்று சிரித்து விட்டான் ஆரியன்.
“சீனியர் நீங்க எப்போதான் அகியை புரிஞ்சிப்பீங்க.. இங்க வந்து ஒரு மாசம் கழிச்சு தான், உங்க மேல கை வச்சுருக்கா. அப்பவே தெரிய வேண்டாம்.. உங்க பேமிலி பத்தி ஏ டு இசட் எல்லாமே தெரிஞ்சுதான் செய்றான்னு, இதுல என்ன வச்சு உங்களை தூக்க பிளான் பண்ணுவாளா.. ஹ்ம்ம் போங்க சீனியர் நீங்க.. அதெல்லாம் ஆல்ரெடி பிளான் பண்ணி இருப்பா..” என்றவன் “பாய் ஸீனியர் டேக் கேர்..” என் நடக்க ஆரம்பித்து விட்டான்.
நித்யா, சங்கர் இருவர் முன்னிலையில் தான், மற்ற இருவரின் பேச்சும் நடந்தது. சங்கருக்கு முன்னமே ஆகன் விஷயம் தெரிந்திருக்க, அமைதியாகவே பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் நித்யா தான் கலக்கமாக, கவலையாக ஆகனை பார்த்தார்.
அதை உணர்ந்த ஆகன் “அத்தை அவன் என்னோட ஜூனியர்.. அம்முவோட அண்ணன்.. அவங்க அம்மாதான் மஞ்சு அத்தைக்கு ஹெல்ப் பண்ணது. அம்முவை படிக்க வச்சது எல்லாம்.. அதனால அம்முவை எப்பவும் கூடவே வச்சிருப்பான்.” என்றான் பயம் போக்கும் விதமாக,
“அது அதெல்லாம் சரி.. ஆனா அவன் எப்படி இங்க? அவனை உனக்குத் தெரியுமா? அப்போ அம்முவை உனக்கு முன்னாடியே தெரிஞ்சி இருக்கும் இல்ல.. ஏன் வீட்ல யார்கிட்டயும் சொல்லல..” என நித்யா கேட்க,
“எதுக்கு நித்யா? இவ அம்மாவும், பாட்டியும் போய் அங்கே இருந்தும், அவங்களை துரத்தி விடவா? நான் தான் இதை யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு சொன்னேன்..” என சங்கர் கூற அதுவும் சரிதான் என்று நினைத்தார் நித்யா.
ஆனாலும் ஆரியனின் பேச்சு வேறு எதையோ குறித்தது என்று யோசிக்கும் போதே, வினோத்தும் ரவியும் அங்கு வந்து விட்டனர்.
ரவி இருப்பதால் அவர்களிடம் ‘ஆரியன் தான் ஜாமீன் எடுத்தான்’ எனக் கூறாமல், ஜாமீன் கிடைத்துவிட்டது எனக் கூறி கிளம்பி விட்டனர்.
நித்யாவின் கையைப் பிடித்து கொண்டிருந்த வினோத்தின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது.
நடுங்கிய கைகளின் மேல் தன் கையை வைத்த நித்யா ‘எனக்கு ஒன்னும் இல்ல.. நான் இப்போ நல்லபடியா வந்துட்டேன்..’ என்று சமாதானம் செய்தவள், “நான் தான் சொன்னேன் இல்ல, மஞ்சரி அக்கா மாதிரி, அகானா அமைதியா போக மாட்டான்னு..” என்றதும், ரவியின் உடல் அதிர்ச்சியில் தூக்கி போட்டது.
அதை அனைவருமே கவனித்தனர், ஆனால் எதுவும் கேட்கவில்லை.
இப்போது அனைவரின் எண்ணமும் ‘அகானாவின் பழிவாங்கலில் ரவீந்திரனுக்கு என்ன தண்டனை’ என்பதுதான். ஆனால் அகானா தவிர, அதை யாருமே அறிந்து கொள்ள முடியாதே.