அகானா- 37
“அம்மு.. அம்மு..” என வினோத் பல முறை அழைத்த பின்னேதான் நிகழ்வுக்கு வந்தாள் அகானா.
அவளால் அந்த குரலின் அடர்த்தியில் இருந்து வெளி வரவே முடியவில்லை. ஆம் அப்படியே ரவியின் குரல் வினோத்திற்கு. ரவியிடம் எழுந்த அதே உணர்வு வினோத்திடமும். ரவியிடம்
அவளால் கோபப்பட முடிந்தது. அவரை தன்னிடம் நெருங்க முடியாத அளவிற்கு ஒதுக்க முடிந்தது.
ஆனால் வினோத்திடம் அது முடியவில்லை.
“அம்மு..” என்ற வினோத்தின் பதட்டமான குரலில்தான் “ஹான்..” என நிகழ்வுக்கு வந்த அகானா “ஹான் Sorry.. அது.. அது மகியோட அப்பா உங்ககிட்ட எதுவும் சொன்னாரா?” என்றாள் சட்டென குரலை சரி செய்து.
“ஹ்ம்ம் ஆமாம்.. ரஞ்சிக்கா ஏதோ பிரச்சினை பண்ணிருப்பா போல, ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் ஆகி, மாமா எனக்கு போன் செஞ்சி ரஞ்சியை கூப்பிட்டு போ, அவகூட இனி வாழ முடியாதுன்னு சொல்றார். உனக்கு யார் சொன்னா? ஆகனா?” என வினோத்தும் கேட்க,
“ம்ச்.. அவன் எதுக்கு எனக்கு சொல்ல போறான். மகியோட அப்பாதான் விஜிம்மாவுக்கு கூப்பிட்டு சொல்லிருப்பார் போல. மகி அழுதுட்டே இருக்காளாம்.” என்றவள், “எனக்கு ஆரியோட லைஃப் ரொம்ப முக்கியம். உங்க வீட்டு ஆளுங்க இல்லைன்னாலும், ஆரி மகியை நல்லா பார்த்துக்குவான். ஆனா அதுக்கு பிறகு அவங்க யாரும் மகியை வந்து பார்க்க முடியாது. ஆரி அதுக்கு சம்மதிக்க மாட்டான். உங்களுக்கு உங்க பொண்ணு வாழ்க்கை முக்கியம்னா அடுத்து என்ன செய்யனுமோ செய்ய சொல்லுங்க. இல்லைன்னா மகியை மறந்துட சொல்லுங்க. நான் என்ன சொன்னாலும் ஆரி கேட்பான். ஆனா மகி விசயத்துல அப்படி இருப்பான்னு சொல்ல முடியாது. இது அவனோட வாழ்க்கை.” என்று நிறுத்தியவள், “விஜிம்மா எல்லாரும் இப்போ வருவாங்க, அதுக்குள்ள அவங்களை சரி செஞ்சி, மத்த ஏற்பாடு பண்ணுங்க..” என்று வைத்துவிட, வினோத்திற்கு ரஞ்சியை நினைத்து எரிச்சல்தான் வந்தது.
அகானா சொல்வது போல ஆரியும், அவன் குடும்பமும் இனி எப்போதும் மகியை இங்கு அனுப்பாமல் விட்டால் என்ன செய்ய முடியும்.. ஆரியன் செய்யக்கூடியவன் தான்.
‘மாமா இவ்ளோ கோபப்பட்டு பேச, இந்த ரஞ்சனி என்னதான் பேசி தொலைச்சா’ என கோபமாக வந்தது. அகானா பேசியதை நித்யாவிடம் கூற, அவருக்கும் ரஞ்சனி மீது கோபம்தான். ஆனால் அதை இப்போது வெளிக்காட்ட முடியாதே.
“நானும் வரேன் வினோ… போகலாம். முதல்ல அங்க என்ன நடந்தது தெரியாம, நாம என்ன செய்ய முடியும்.. அண்ணனுக்கு கூப்பிட்டு நாம வந்துட்டு இருக்கோம்னு சொல்லுங்க..” என இருவரும் வேகமாக சங்கரின் வீட்டிற்கு சென்றனர்.
வீட்டில் இருந்து கிளம்பிய ஆகனுக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. ஒருத்தரின் இறப்பை விரும்பும் அளவிற்கா வன்மம் இருக்கும் என்பதை அவனால் நினைக்கவே முடியவில்லை.
இத்தனைக்கும் அவளை நேரில் பார்த்தது இல்லை. பழகியது இல்லை. அவளைப்பற்றி எதுவும் தெரியாது. மஞ்சரி அத்தை மகள் என்ற ஒற்றை காரணத்திற்காக அவள் மீது இவ்வளவு வெறுப்பும், வன்மமுமா.?
அகானாவிற்கு தன் வீட்டு ஆட்களைப் பற்றி தெரிந்தது கூட தனக்கு தெரியவில்லையே என்று தன்னையே அசிங்கமாக திட்டிக்கொண்டான்.
அதிலும் தன் அம்மா இப்படி என்று ஆகனால் இன்னுமே நம்ப முடியவில்லை. இவர்களுக்காக, இவர்கள் வருந்துவார்கள், கஷ்டப்படுவார்கள் என்று எத்தனை யோசித்து தன் காதலை ஒதுக்கி வைத்தான்.
இப்போது அதை கூட யோசிக்காமல் என்னவெல்லாம் பேசிவிட்டார். அவளின் இறப்பில் இவர்களுக்கு இத்தனை மகிழ்வா? நினைக்கவே நெஞ்சமெல்லாம் வெடித்து சிதறியது. இவர்களை நான் தவறாக எடைபோட்டு விட்டேனா?
பணத்திற்காக தரம் இறங்கி அந்த பாவத்தை செய்தாலும், அதற்கான தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கும், மைதிலி அத்தையைப் பார்த்தும் கூட இவர்கள் திருந்தவில்லையே.
எந்த வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மஞ்சரி அத்தையை, மாமாவின் வாழ்க்கையில் இருந்து வெளியேற்றினார்களோ, அந்த வாழ்க்கையை அவர்கள் நிம்மதியாக வாழவே இல்லையே.
எந்த நேரமும் ஒரு பயம். நான்தான் எல்லாம் என காட்ட, தன்னிடம் இருக்கும் பணத்தை செலவு செய்து, தன் பாதுகாப்பின்மையை மறைத்து என மைதிலி அத்தை வாழும் வாழ்க்கையை அவன்தான் பல முறை உணர்ந்திருக்கிறானே.
அப்போது எல்லாம் மஞ்சரி அத்தைதான் மாமாவை விட்டு போய்விட்டார் என்று நினைத்து மைதிலிக்காக மிகவும் வருந்தியிருக்கிறான்.
ஆனால் உண்மை தெரிந்த பிறகு அந்த எண்ணம் முற்றிலும் மாறி, அவர்கள் மேல் இருந்த நல்ல எண்ணமே குறைந்து போயிருந்தது. இனி அகானாவின் முன் எப்படி நிமிர்ந்து நிற்பது என்ற தயக்கம் வேறு.
அதோடு ஆரியன் வேறு மகிழினியை வைத்து ஏதோ திட்டம் தீட்டுகிறான் என்று புரிகிறது. இனி அவனையும் சமாளிக்க வேண்டும் என ஆகன் யோசித்துக் கொண்டவனுக்கு நடக்கும் அனைத்தையும் நினைத்து சலிப்பும் வெறுப்பும் வந்தது. இந்த ஒரு வாரத்தில் என்ன என்ன நடந்து விட்டது என யோசித்தபடியே, ஆரி இருந்த வீட்டிற்கே வந்துவிட்டான்.
ஆனால் இறங்கி வீட்டிற்குள் செல்ல பயந்தான். காரிலேயே கண்ணை மூடி அமர்ந்தவனுக்கு இன்று வேறு எந்த வேலையும் பார்க்க முடியும் என்று தோன்றவில்லை.
அவனுக்கு மகிழினியைப் பற்றி எந்த கவலையும் இல்லை. எந்த சூழலையும் கையாளக் கூடியவள்தான். ஆனால் குழந்தைத்தனம், விளையாட்டுத்தனம் அதிகம். அவளை எப்படி ஆரியன் சமாளிப்பானோ என்ற கவலைதான் இப்போது.
யோசனகளும் நேரமும் கடந்ததே தவிர உள்ளே செல்ல சற்று குழப்பமாக இருந்தது ஆகனுக்கு.
இப்போது அவனுக்கு ரஞ்சனியை விட மகிழினியின் வாழ்க்கைதான் முக்கியமாக பட, அடுத்து யோசிக்கவே இல்லை. இறங்கி வந்து காலிங்க் பெல்லை அமர்த்தினான்.
கதவை திறந்த விஜயா சங்கடமாக நின்ற ஆகனைப் பார்த்து “வாங்க.. வாங்க தம்பி..” என அழைக்க,
“ஸாரி ஆன்டி..” என அதே சங்கடத்துடன் பதில் அளித்தவன் “மகி..?” என இழுக்க, இவன் சத்தத்தைக் கேட்டதும் வேகமாக வெளியில் வந்தவள் “அண்ணா..” எனக் கட்டிக்கொண்டு தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.
“பாப்பா.. இங்க பாரு பாப்பா.. எதுக்கு இப்படி அழற? அதுதான் நான் வந்துட்டேன்ல.. ஏன் பாப்பா… ம்ச் பாப்பா சொன்னா கேட்கனும்? என்னாச்சு.?” என்ற தமையனின் எந்த கேள்விக்கும், சமாதானத்திற்கும் கட்டுப்படாமல் அழுது கொண்டே இருந்தாள் மகி.
“ப்ச் பாப்பா..?” என ஓங்கி ஒரு அதட்டல் போட, சட்டென அழுகை நின்றது மகிக்கு.
அழுத விழிகளுடன் ஆகனை நிமிர்ந்து பார்க்க, “எதுக்கு இப்படி அழற.? என்ன பிரச்சினை.?” என கூர்மையாக கேட்க,
“நீ எனக்கு கூப்பிடவே இல்ல.. பேசவே இல்ல.. அப்பாவும் கால் எடுக்கல… நான் பயந்து போய்ட்டேன். நான் வேண்டாம்னு..” என முடிக்க முன்னே மீண்டும் அழ,
“ம்ச் மகி.. அழாம என்ன கேட்கனுமோ கேளு..” என்றான் மீண்டும் அதட்டி,
“நீ எங்கிட்ட பேசல…” என்றாள் அவளும்..
“நீ செஞ்ச வேலைக்கு உன்னை கொஞ்சனுமா? ஹான் என்ன வேலை பார்த்து வச்சிருக்க? ஆரியை எனக்குத் தெரியும். அவன் ரொம்ப நல்ல பையன், அதனாலத்தான் நேத்து நான் உன்னை இங்க விட்டுட்டு போனேன். இதே வேற யாரா இருந்தாலும் உன்னை அப்படியே விட்டுட்டு போயிருப்பேன்னு நினைக்கிறியா.?” என்றான் கண்டிப்பான வார்த்தைகளில்.
‘இல்லை’ என வேகமாக மகியும் தலையாட்ட,
“ம்ம்.. இப்போ உனக்கு ஹெல்த் எப்படி இருக்கு? ஹாஸ்பிடல் வரியா? ஒன்ஸ் செக்கப் செஞ்சிக்கலாம்..” என்றவனிடம், என்ன சொல்வது என தெரியாமல் மகி விஜயாவைப் பார்க்க, ஆகனும் விஜயாவைப் பார்த்தான்.
“கூட்டிட்டு போங்க தம்பி. இதுக்கெல்லாம் ஏன் என்னை பார்க்குறீங்க. ஆரி எதுவும் சொல்லமாட்டான். அவனும் வந்துட்டுதான் இருக்கான். வந்ததும் கிளம்புங்க..” என்றவர் “காபி எடுத்துக்கோங்க..” என வேலை செய்யும் பெண் நீட்டிய காபியை காட்டி சொன்னார் விஜயா.
“தேங்க்ஸ் ஆன்டி..” என்று எந்த மறுப்பும் சொல்லாமல் எடுத்துக்கொண்டான். அவனுக்கு நிச்சயம் இந்த காபி தேவைப்பட்டது.
அகானா பேசியது, ரஞ்சனி பேசியது, அதற்கு தான் பேசியது என அனைத்தும் அவன் மூளையை சூடாக்கியிருந்தது.
மகியை அருகில் அமர்த்திக்கொண்டு அமைதியாக காபியை அருந்தி முடித்தான். அதே நேரம் அறைக்குள் இருந்து முருகானந்தம் வர, மரியாதை நிமித்தம் இருவரும் எழ, “ஹேய் உட்காருங்கப்பா.. மரியாதை மனசுல இருந்தா போதும்..” என்றவர் மனைவியின் அருகில் அமர்ந்தார்.
இப்போது அவரைப் பார்த்து “ஸாரி அங்கிள்..” என்றான் ஆகன்.
“என்ன பிரச்சினை ஆகன்? எதுக்காக சம்மந்தி போன் பண்ணி நீங்களே எல்லாம் பார்த்துக்கோங்க. என் பொண்ணுக்கு என்ன செய்யனுமோ ஒரு அப்பாவா நான் செய்றேன். ஆனா அவ கல்யாணத்தை நீங்களே முடிச்சிடுங்கன்னு சொல்றார்.” என சற்று வருத்தமாகவே கேட்டார்.
“ம்ச் அம்மாதான் அங்கிள்.. புரிஞ்சிக்காம பேசிட்டே இருக்காங்க. நாங்க எவ்ளோ எடுத்து சொன்னாலும் அவங்க முடிவைத்தான் நாங்க ஏத்துக்கனும்னு உறுதியா இருக்காங்க..” என்றான் சலிப்பும் வருத்தமுமாக.
“ஆகன்.. இதை நாம முன்னாடியே பேசிடுறது நல்லது..” என அவர் ஆரம்பிக்கும் போதே ஆரியன் வந்துவிட்டான்.
ஆகனைப் பார்த்து ‘வாங்க சீனியர்’ என்றவன் மகியைப் பார்த்து முறைத்துவிட்டு தந்தையின் அருகில் அமர்ந்தான்.
“அகி எப்படி இருக்காடா? எதுக்கு எங்களை வர வேண்டாம்னு சொன்னா?” என விஜயா கேட்க,
“ம்மா அவ நல்லாத்தான் இருக்கா? சின்ன ஆக்சிடென்ட் அவ்ளோதான். அவளுக்கு செகியூரிட்டி டைட் பண்ணிட்டாங்க. நீங்க வந்தாலும் பார்க்க அலோவ் பண்ண மாட்டாங்க.. அதான் வேண்டாம்னு சொல்லிட்டா. ஈவ்னிங்க் வீட்டுக்கு வந்துடுவா.. நாம் போய்க்கலாம்..” என்றான் ஆரியன்.
“எதுக்கு இப்போ இவ்ளோ பகையை சம்பாதிச்சி வச்சிருக்கா? வந்த ரெண்டு மாசத்துல எவ்ளோ பேரை பகைச்ச்சிருக்கா பாரு. இப்படியே இருந்தா ஒரு வருசம் கூட ஒரு ஊர்ல இருக்க முடியாது. ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டே இருப்பாங்க..” என விஜி கோபமாக கூற,
“அப்போ அவ வேலையை விட்டுட்டு, அட்ஜஸ் பண்ணிட்டு லஞ்சம் வாங்கிட்டு போக சொல்றியா?” என மனைவியை அதட்டிய முருகானந்தம் “உங்கிட்ட இதை எதிர்பார்க்கல?” என கண்டிப்புடன் கூற,
“எனக்கும் இப்படி பேசனும்னு ஆசையெல்லாம் இல்ல.. அவ எனக்கு இங்க இருக்குறதே பிடிக்கல. முதல்ல இந்த ஊரை விட்ட வந்துட்டா போதும். இங்க வந்த நாள்ல இருந்து அவளுக்கு பிரச்சினைதான். நிம்மதியும் போய், அவ சிரிச்சே எவ்ளோ நாளாச்சு..” என்றார் ஒரு தாயாக.
“ம்மா.. இது அவளுக்கு பிடிச்சு செய்றா, அதுல என்ன நடந்தாலும் அதை நாம ஏத்துக்கத்தான் வேணும். அகி ஒரு நேர்மையான அதிகாரின்னு பேர் வாங்கினா போதும். அதைத்தான் மஞ்சும்மாவும் விரும்புவாங்க..” என்ற ஆரியன், ஆகனைப் பார்த்து “நான் எப்போ உங்க ஹாஸ்பிடல்ல ஜாயின் பண்ண?” என கேட்க, மகியைத் தவிர மற்ற அனைவரும் யோசனையாகவே அவனைப் பார்த்தனர்.