• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ.. - 38

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,331
543
113
Tirupur
அகானா - 38

“டாக்டர் அந்த பேசன்டோட அட்டென்டர் உங்களை பார்க்காம போக மாட்டேன்னு வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க..” என்று நர்ஸ் ரம்யா வந்து சொன்னதை கேட்ட ஆர்யன் “ஓக்கே ஒரு டென் மினிட்ஸ் கழிச்சு உள்ள அனுப்புங்க. அவங்க ஃபைல் கொண்டு வந்து என் டேபிள்ல வைங்க. சீஃப் இன்னைக்கு வந்துருக்காரா?” என வரிசையாக கேட்க

“ஓக்கே டாக்டர்.. ஓக்கே டாக்டர்..” என்ற ரம்யாவும் “சீஃப் இன்னைக்கு ஈவ்னிங்க் தான் இங்க வருவார் டாக்டர். இப்போ யுனிவர்சிடில இருப்பார். ஆகன் டாக்டர் வந்துட்டார்..” என்றாள் தயக்கமாக.

“ஓகே.. நான் பார்த்துக்குறேன்..” என்றவன் தன் கையிலிருந்த ஒரு சிடி ஸ்கேன் ஃபைலை அவளிடம் நீட்டி “டாக்டர் ஆகன்கிட்ட காமிச்சு ஒபீனியன் வாங்கிடுங்க. அப்படியே ஃபேசன்டுக்கு சர்ஜரி பத்தின டீடைல்ஸ் எக்ஸ்ப்ளைன் பண்ணிடுங்க. பேசன்ட் வில்லிங்க்னா சொல்லுங்க, டேட் ஃபிக்ஸ் பண்ணிடலாம். ஜிஏ டாக்டர் அவைலபிளான்னு ஒன்ஸ் ரிசப்சன்ல கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க..” என்று முடித்துவிட, மயக்கம் வராத குறைதான் அந்த பெண்ணுக்கு.

‘ஊப்ஸ்.. என்ன இந்த மனுசன் இப்படி வேல செய்றான். நமக்கே ரெஸ்டே கொடுக்க மாட்டேங்குறான்..’ என புலம்பியபடியே அவன் சொன்ன வேலைகளை பார்த்துவிட்டு, ஆகனின் ஓபிக்கு சென்றாள் ரம்யா.

அங்கிருந்த மற்றொரு நர்ஸ் வாணியிடம் “டாக்டர் ஃப்ரீயா ப்பா.. இந்த ஸ்கேன் ஓபினியன் மட்டும் வாங்கனும்..” என சோர்வாக கூறினாள்.

“என்னப்பா உன் வாய்ஸ் டல்லடிக்குது.. புது டாக்டர் எப்படி இருக்கார். ஓக்கேவா..” என கிண்டலடித்தாள் வாணி.

“ஹேய் போப்பா.. அந்தாளு ரெஸ்டே இல்லாம வேலை கொடுக்குறார்.. நான் ஓபி டியுட்டி வேண்டாம்னு வார்ட் டியுட்டி பார்க்க போறேன்..” என அழு குரலில் ரம்யா சொல்ல,

“ஹாஹா மேடம் நீங்கதான புது டாக்டர் ஓபி நான்தான் பாப்பேன்னு சொன்னீங்க.. இப்போ என்ன அழறீங்க..” என வாணி சிரிக்க,

“சிரிங்கடி.. சிரிங்க.. ஒரு நாள் அந்த டாக்டர்கூட ஓபி பார்த்தா தெரியும் என் கஷ்டம்..”

“கூல் ரம்யா.. ஆரம்பத்துல இப்படித்தான இருப்பாங்க. போக போக சரியாகிடும்..” என்ற வாணி “மகிழினி மேம் வந்துருக்காங்க.. அவங்க கூட தான் ஆகன் சார் பேசிட்டு இருக்கார். நீ டோர் தட்டிட்டு போ..” என அனுப்ப,

“ம்ம் ஓக்கே..” என்ற ரம்யா அதே போல் கதவைத் தட்டி உள்ளே சென்று அந்த ஸ்கேன் ரிபோர்டை காட்ட, “ம்ம்ம் ரம்யா நான் டாக்டர் ஆர்யன்கிட்ட பேசிக்கிறேன். நீங்க பேசன்ட் வில்லிங்கான்னு கேட்டுக்கோங்க.. மத்த டீடைல்ஸ் நான் டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றேன்..” என்றதும் ரம்யாவும் வெளியில் சென்றுவிட்டாள்.

“ஓக்கே மகி.. நீ ஆரியனை பார்க்கனும்னா பார்த்துட்டு வா.. அவனும் உன்கூட இன்விடேஷன் கொடுக்குறானான்னு கேளு.. இல்லைன்னா நாம ரெண்டு பேரும் போய் கொடுக்கலாம். ஈவ்னிங்க் நானும் அப்பாவும் மஞ்சு அத்தை வீட்டுக்கு போய்ட்டு வரோம்…” என்றான் ஆகன்.

“ஹான் அவரும் சேர்ந்து கொடுக்குறேன்னுதான் சொன்னார். நான் போய் பார்க்குறேன்..” என்று எழுந்தவள், பின் தயங்கி அமர்ந்து அண்ணனையே பார்க்க, அந்த பார்வையில் ஆகனுக்கு உருகிவிட்டது.

“என்ன பாப்பா..?” என பதறியபடியே, வேகமாக எழுந்து வந்து தங்கையின் அருகில் அமர்ந்தான்.

“ஸாரி ண்ணா… நான் உங்க எல்லாரையும் ரொம்ப கஷ்டப்படுத்துறேன்..” என்றாள் மகிழினி நிறையும் விழிகளோடு.

“ஹேய் பாப்பா.. என்ன பேசுற நீ? எங்களுக்கு என்ன கஷ்டம், எதுவும் இல்ல. ஆரி மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைக்க நாம எல்லாருமே ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும். அவனை நாலு வருசம் கூட இருந்து பார்த்துருக்கேன். ரொம்ப நல்ல பையன். பாசத்துல அவனை மிஞ்ச ஆளே இருக்க மாட்டாங்க. கண்டிப்பா உன்னை நல்லா பார்த்துப்பான். என்ன தங்கச்சி மேல ரொம்ப பாசம். அதனால அடிக்கடி நம்மக்கிட்ட கோபத்தை காமிப்பான். அதையெல்லாம் கடந்துதான் வரனும். உனக்கு அவனை பிடிச்சிருக்குதானே..”

“ம்ம்.. பிடிச்சிருக்குத்தான்.. ஆனா பயமா இருக்கு. இன்னும் அவர் எங்கிட்ட பேசவே இல்ல..”

“அதெல்லாம் சரியாகிடும் மகி.. நீ பொறுமையா இருக்கனும். அவன் கோபத்துல தப்பு இல்லைதானே..”

“ம்ம் சரி ண்ணா… நான் போய் அவரைப் பார்த்துட்டு, அப்படியே இன்விடேசன் கொடுத்துட்டு வரேன்..”

“ம்ம் ஓக்கே மகி.. எதையும் மனசுல போட்டு குழப்பிக்ககூடாது. உனக்கு என்ன கஷ்டமா இருந்தாலும், முதல்ல ஆரிக்கிட்ட சொல்லு. அவன்கிட்டயும் சொல்ல முடியலையா உடனே எனக்கு சொல்லு. நான் எப்போவும் உன் கூடத்தான் இருப்பேன். தைரியமா இருக்கனு.. ஹ்ம்ம் ஸ்டே ஸ்ட்ராங்க் பாப்பா..” என பலவாறு தைரியம் சொல்லி மகிழினியை அனுப்பி வைத்தான் ஆகன்.

மகிழினி வெளியேறியதுமே ஆகனுக்கு கடந்த சில நாட்களாக நடந்தது கண் முன்னே வந்து போனது.

“நான் எப்போ உங்க ஹாஸ்பிடல்ல ஜாயின் பண்ணட்டும்..” என்ற ஆரியனின் கேள்விக்கு ஆகன் பதில் சொல்லும் முன்பே,

“ஆரி வீம்புக்கு எந்த வேலையும் செய்யக்கூடாது. நீ ஆல்ரெடி சிங்கப்பூர் வரதா சொல்லிட்ட.. அப்புறம் எதுக்கு உனக்கு இங்க வேண்டாத வேலை..” என விஜயா மகனை அதட்ட,

“ம்ம்.. அகி இங்க இருக்குற வரை நான் எங்கேயும் போற ஐடியால இல்ல. நான் அங்க வரலன்னு இன்ஃபார்ம் பண்ணிட்டேன். மந்த்லி ட்வைஸ் ஜிப்மர் போவேன். மத்தபடி இங்கதான். அகி ட்ரான்ஸ்ஃபர்ல வேற டிஸ்ட்ரிக்ட் போனாதான், நான் அப்ராட் கிளம்புவேன்…” என உறுதியாக கூறிவிட,

“என்ன பேசுற ஆரி..?” என அதட்டிய மனைவியை முருகானந்தம் தான் சமாதானம் செய்தார்.

“விஜி.. இவ்ளோ பிரச்சினையில அகியை இங்க விட்டுட்டு அவனும் அங்க போய் நிம்மதியா இருக்கமாட்டான். அவனுக்கு என்ன விருப்பமோ அதை பண்ணட்டும். அவன் ஒன்னும் சின்ன பையன் இல்ல..” என்றதும்,

“என்னமோ பண்ணுங்க..” என எழுந்து சென்றுவிட்டார் விஜயா..

“ஆரி நீ எதுக்கும் ஒன்ஸ் யோசிச்சிக்கோ.. ஆன்டி ரொம்ப வருத்தப்படுறாங்க பார்..” என ஆகன் கூற,

“அம்மாவை என்னால சமாதானம் செய்ய முடியும் சீனியர். அது ஒரு பிரச்சினையே இல்ல. நான் பார்த்துக்கிறேன். நீங்க நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க..”

“ஹ்ம்ம் எனக்கு ஓக்கே தான். மாமாக்கிட்ட நான் இன்ஃபார்ம் பண்ணிடுறேன். நீ நாளைக்கே கூட வந்துடு..”

“ஹான் ஓக்கே.. மார்னிங்க் வந்துடுறேன்.. நீங்க உங்க டீம்க்கு இன்ஃபார்ம் பண்ணிடுங்க..” என்று முடித்துவிட்டான்.

முருகானந்தத்தை பார்த்து “அங்கிள்.. நீங்க எப்போ வரீங்க.. அப்பா கேட்டுட்டு வர சொன்னார்..” என்றான் ஆகன்.

“இன்னைக்கு ஈவ்னிங்க் ப்பா.. நல்ல நேரம் பார்த்துட்டு கிளம்பறோம். அதுக்கு முன்னாடி நான் உனக்கு சொல்லிடுறேன்..” என்றார் அவரும்.

“ஓக்கே அங்கிள்.. அப்போ மகியை நான் அழைச்சிட்டு போகட்டுமா? நீங்க வரும்போது அவ அங்க இருக்கனும்..” என்றான் தயக்கமாக..

“வேண்டாம் சீனியர்.. மகி இங்க இருக்கிற வரைதான் உங்க அம்மா இந்த மேரேஜ்க்கு ஓக்கே சொல்வாங்க. வேற எந்த பிரச்சினையும் செய்யமாட்டாங்க. மகி அங்க வந்தா அவ மண்டையை கழுவ ஆரம்பிச்சிடுவாங்க. அது தேவையில்லாத பிரஷர்..” என்ற ஆரியனின் கூற்றும் சரியெனத்தான் பட்டது.

“ஹ்ம்ம் அதுவும் சரிதான்..” என முருகானந்தம் கூற, ஆகனுக்கும் மறுத்து பேச முடியாத நிலை.

“ஓக்கே அங்கிள்.. நான் மகியை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டு வரேன். அப்படியே ஒரு செக்கப் செஞ்சிக்கலாம்..” என்றதும், அனைவரும் சரியென ஆகன் மகியைப் பார்க்க, அவளோ ஆரியனைப் பார்த்தாள்.

ஆரி அதை கவனிக்கவில்லை. அதனால் “ஆரி..” என ஆகன் கூப்பிட ‘என்ன?’ என்பது போல் பார்த்தவனிடம் மகியை கண்ணை காட்டினான்.

“ஹான்.. நீங்க எல்லாம் முடிச்சிட்டு கால் பண்ணுங்க. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.” என்றான் மகியைப் பார்த்து.

விம்மி வெடித்து வந்த அழுகையை அடக்கி, கண்ணீரை அனைகட்டிய விழிகளோடு ஆகனுடன் சென்றாள் மகிழினி.

“ஷ்ஷ்ஷ்..” என பெருமூச்சு விட்டவன், முகத்தை அழுந்த துடைத்துவிட்டு, தலையை கோதியபடி தன்னறைக்குள் நுழைந்துகொண்டான் ஆரி.

மகனின் மனம் அந்தப் பெண்ணிடம் விழுந்து விட்டதை உணர்ந்த பின்தான் இந்த திருமணத்திற்கு சரியென்று சொன்னார்கள் ஆரியின் பெற்றொர்.

‘கூடிய விரைவில் அனைத்தும் என நினைத்து தன் மனதை தேற்றிக் கொண்டார் முருகானந்தம்.

மகிழினி காரில் ஏறியதுமே தன் தோளில் சாய்த்துக் கொண்டான் ஆகன்.

அதற்காகவே காத்திருந்ததை போல தேம்பி தேம்பி அழுதாள் மகி.

அவள் அழுது ஓயும் வரைக்கும் எந்த சமாதானமும் சொல்லவில்லை ஆகன்.

அவளே அழுது முடித்து, முகத்தைத் துடைத்து நிமிர்ந்து பார்க்க, “இப்போ ஓக்கே வா..” என்றான் சிறு புன்னகையுடன்.

“ஹான் ஓக்கே..” என்றாள் அவளும் சிறு புன்னகையோடு.

“சரி போகலாம்..” என காரை எடுத்தான் ஆகன்.

இங்கு வீடு இருந்த நிலையைப் பார்த்தே என்ன நடந்திருக்கும் என்று வினோத்திற்கும், நித்யாவிற்கும் புரிந்து போனது.

“என்ன ரஞ்சி இதெல்லாம்?” என வினோத் கடுப்பாக கேட்க, மகள் அருகில் அமர்ந்திருந்த சரஸ்வதியோ “அவளை ஏன் அதட்டுற வினோ.. எல்லாம் ஆகனோட வேலை..” என மகனை அதட்டினார் வினோத்.

நித்யா தான் மாமியாருக்கு அழைத்து உடனே வர வைத்திருந்தாள். வந்ததிலிருந்து இப்படித்தான் புலம்பிக்கொண்டே இருக்கிறார்.

“ம்மா நீங்க கொஞ்சம் சும்மா இருங்க. நல்ல காரியம் நடக்கிற வீட்டுல ஏன் இப்படி இவ பிரச்சினை பண்ணிட்டு இருக்கா. நாமளே இறங்கி போய் எல்லாம் செஞ்சா, நம்ம பொண்ணு நமக்கு இருப்பா.. இல்லைன்னா மகியை மறந்துடுங்க. அந்த பையனுக்கு சிங்கப்பூர்லதான் வேலையாம். போனா எப்போ வருவான்னே தெரியாதாம். நல்ல முறையில் போனா கூட நம்மக்கிட்ட பேசுவா, நாமளும் போய் வரலாம்.. இல்லைன்னா என்ன நடக்கும்னு நான் சொல்ல வேண்டியதுல்ல.. நீங்களே முடிவு பண்ணிக்கோங்க..” என்றான் வினோத் எரிச்சலில்.

“எனக்கும் அந்த பயம்தான்.. கண் காணாத இடத்துக்கு கூட்டிட்டு போய்ட்டா நாம என்ன செய்ய.? நடந்தது நடந்து போச்சு. இனி நடக்க வேண்டியதை பார்க்கலாம்.” என்றார் அழகர்.

“ப்பா.. அண்ணியை யோசிங்க.. இது தெரிஞ்சாலே என்ன சொல்லுவாங்களோன்னு பயமா இருக்கு..” என்ற ரஞ்சனியை முறைத்துப் பார்த்தாள் நித்யா.

“உங்க பொண்ணு வாழ்க்கையை விட அவங்கதான் உங்களுக்கு முக்கியமா போயிட்டாங்களா அண்ணி. அப்படி நீங்க பார்த்து பார்த்து செய்ய அவங்க ஒன்னும் நல்லவங்க இல்ல அண்ணி..” என்ற நித்யாவிடம்,

“அதெல்லாம் நீ சொல்லாத.. உனக்கு மைதிலியை ஆரம்பத்துல இருந்தே பிடிக்கல.. எப்போடா சாக்கு கிடைக்கும், அவளை தட்டி விடலாம்னு பார்த்துக்கிட்டே இருக்க.. எனக்கு இதெல்லாம் தெரியாதுன்னு நினைச்சியா?” என சரஸ்வதி கத்த,

“ஆமாம்.. எனக்கு அவங்களை பிடிக்காதுதான். அப்போ மட்டுமில்ல, இப்போவும்தான். இனி எப்போவும் பிடிக்காதுதான். அடுத்தவ புருசனுக்கு ஆசைப்பட்டு அந்த குடும்பத்தை கெடுத்து தெருவுல நிறுத்தின ஒரு பொம்பளையை எப்படி பிடிக்கும்..” என நிறுத்தி நிதானமாக, அதே நேரம் அழுத்தமாக சொல்லி முடிக்க, அங்கிருந்த அனைவரும் நித்யாவை திகைத்துதான் பார்த்தனர்.