அகானா - 43
அன்றைய சம்பவத்திற்கு பிறகு மைதிலி வீட்டில் யாரிடமும் பேசுவதில்லை. காலையில் கிளம்பி எங்கேயோ போவார், பின் மாலை தான் திரும்புவார். வீட்டிலும் சாப்பிடுவதில்லை. எங்கு போகிறார், வருகிறார் என யாருக்கும் சொல்வதுமில்லை.
ரவியிடமும் பேசுவதில்லை, அவருமே கோபத்தில் கண்டுகொள்வதில்லை.
சரஸ்வதி தான் மருமகளின் பின்னே கெஞ்சிக் கொண்டே இருந்தார். மைதிலியின் இந்த ஒதுக்கம் சரஸ்வதிக்கு மிகவும் பயத்தைக் கொடுத்தது.
அவளை வைத்து தான் அவர்களின் நிதி நிலை கூடியது. இன்றைக்கு ரவி ஒரு பெயர் சொல்லும் அளவிற்கு வெளியில் தெரிகிறார் என்றால் அதற்கு காரணம் மைதிலிதான் என்பதில் அவருக்கு மாற்றுக் கருத்தே இல்லை.
அதனால் அவர் மகனிடம் கேட்க, “ம்மா சும்மா அவளைத் தூக்கிட்டு சுத்தாதீங்க. அவ ஒன்னும் சின்ன புள்ள இல்ல.. கொஞ்ச நாள் இப்படித்தான் இருப்பா. மகி கல்யாணம் முடிஞ்சதும், சரியாகிடுவா, அதுவரை நீங்க அவளை தொந்தரவு பண்ணாம, அவ போக்குல விடுங்க..” என்று ரவி முடித்து விட, சரஸ்வதியால் அதை அப்படியே விட முடியவில்லை.
மகளிடம் புலம்ப ஆரம்பித்தார். “ரஞ்சி அவ நமக்காக எவ்வளவு பண்ணிருக்கா? இப்போ அவ ஒரு கஷ்டத்துல இருக்கா? நாம அமைதியா இருக்கிறது நல்லதா சொல்லு? நமக்காகத்தான் டி, அவ வாழ்க்கையையே பனையம் வச்சா, அவ சொத்து மொத்தத்தையும் நமக்காக தூக்கி கொடுத்தா, இன்னைக்கு நாம வாழற வாழ்க்கை அவ போட்ட பிச்சை டி.. அது உனக்கு புரியுதா இல்லையா?” என மகளிடம் ஒரு முறை சண்டையே போட்டுவிட்டார்.
“ம்மா எனக்கு மட்டும் இங்க நடக்குறத பார்க்கும் போது சந்தோசமாவா இருக்கு? இல்ல எனக்குத்தான் இதுல விருப்பமா? இங்க யாரும் என் விருப்பத்தை கேட்க கூட இல்ல, உங்க பேரனும் மருமகனும் என்கிட்ட பேசுறதே இல்ல. மகிக்கு புடவை கூட அவங்களே தான் போய் எடுத்துட்டு வந்திருக்காங்க. என்னை மொத்தமா ஒதுக்கி வச்சு என் பொண்ணுக்கு கல்யாணம் பண்றாங்க. எனக்கு எவ்ளோ வேதனையா இருக்கும்னு உனக்குப் புரியுதா? இதெல்லாம் தெரியாம என்னை பேசிட்டு இருக்கீங்க?” என ரஞ்சனியும் அழுதுகொண்டே புலம்ப, பெற்றவருக்கு என்ன செய்வது என்றேத் தெரியவில்லை.
“ரஞ்சி நான் ஒன்னு சொன்னா நீ தப்பா நினைக்க மாட்டியே..” என ஆரம்பிக்க,
“என்னம்மா? எந்த பிரச்சினையும் வராதுன்னா சொல்லு..” என கேட்க?
“நாம ஏன் மகியைப் போய் பார்த்துட்டு வரக்கூடாது. மகியை தனியா வச்சு பேசினா, கண்டிப்பா மனசு மாறுவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு டி. பேசி பார்ப்போம். ஒரு வேளை மனசு மாறிட்டா நல்லது தான.. உனக்கும் பிரச்சினையில்ல.. மைதிலிக்கும் நிம்மதி..” என
சரஸ்வதி ஒரு திட்டத்தைக் கூற,
“ஹான் ம்மா.. என்ன பேசுறீங்க? என் புருசனுக்கு தெரிஞ்சா வெட்டி போட்டுடுவார். ஏற்கனவே டைவேர்ஸ் அது இதுன்னு பேசிட்டு இருக்கார். இப்போ நீங்க சொன்னது மட்டும் தெரிஞ்சது, என்னை கொல்லக்கூட தயங்கமாட்டார்..” என பயந்து போய் கூற
“ம்ச் ரஞ்சி.. நாம உடனே அப்படி பேச போறது இல்ல. சும்மா புள்ளைய போய் பார்ப்போம். வாய்ப்பு கிடைச்சா பேசலாம். நாம ஒரு முயற்சி செய்வோம் ரஞ்சி..” என சரஸ்வதி விடாமல் பேச, ரஞ்சனிக்கும் செய்து பார்த்தால் என்ன என்றுதான் தோன்றியது.
“ஆனா ம்மா.. அவ இப்போ எங்க இருக்கான்னே தெரியல. அந்த பையனோட அப்பா ம்மா ஊருக்கு போய்ட்டாங்கன்னு இவங்க பேசுறதை வச்சே தெரிஞ்சிக்கிட்டேன். இப்போ அவ அந்த மஞ்சரி வீட்டுல இருக்கிறதா கேள்வி.. ஆனா அது உண்மையான்னும் தெரியல.. அப்படியே உண்மையா இருந்தாலும், கலெக்டர் குவார்ட்டர்ஸ்க்குள்ள நாம போறதெல்லாம் சாத்தியமே இல்ல..” என்ற ரஞ்சனியிடம்,
“ரஞ்சி இப்போ நமக்கு மைதிலி தான் முக்கியம். அதுக்காக அவ வீட்டுக்கு போறது ஒன்னும் தப்பில்ல. சும்மா போய் பார்த்துட்டு வரோம்னு உன் அப்பாவை மாப்பிள்ளைக்கிட்ட பேச சொல்றேன். என்ன சொல்றாங்கன்னு கேட்போம்..” என்றுவிட்டு, கணவரிடம் கூறி சங்கருக்கு அழைக்க வைத்தார் சரஸ்வதி.
விசயத்தை சொன்னதுமே “என்ன திடீர்னு.?” என சங்கர் நம்பாமல் கேட்க,
“என்ன மாப்பிள்ளை நீங்க, மகி எங்க பேத்தி. அவ கல்யாணத்தை எப்படியெல்லாம் செய்யனும்னு எங்களுக்கும் ஆசை இருந்திருக்கும். இப்போ தான் அதெல்லாம் இல்லன்னு ஆயிடுச்சே, அவளைப் போய் பார்க்கக்கூட கூடாதுன்னா எப்படி மாப்பிள்ளை. நீங்களே யோசிச்சு பாருங்க..” என மிக தன்மையாகவே அழகர் பேச, சங்கருக்கு இவர்கள் பேச்சின் மீது நம்பிக்கை இல்லைதான். ஆனால் இவர்களின் அடுத்த திட்டம் என்ன என்று தெரிந்துகொள்ள, இவர்களை அனுப்ப முடிவு செய்தார்.
“சரிங்க மாமா.. நான் மாப்பிள்ளைக்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்..” என்றவர் ஆரியிடம் கேட்க, அவன் வேண்டவே வேண்டாம் என்றான்.
அகானாதான் “வந்தா வந்துட்டு போகட்டும் ஆரி. அவங்களால என்ன செஞ்சிட முடியும். என்ன ப்ளான்ல வராங்கன்னு பார்ப்போம்..” என்றுவிட, வேறுவழி இல்லாமல் ஒத்துக்கொண்டான் ஆரி.
அன்று மாலையே அழகர், சரஸ்வதி இருவரும் கிளம்ப, அவர்களைப் பார்த்துக் கொண்டே வந்த மைதிலி புருவம் சுருக்கிப் பார்க்க, அவளிடம் தங்கள் திட்டத்தைக் கூற, ஒன்றும் சொல்லாமல் தோள் குலுக்கி அறைக்குள் சென்று விட்டார்.
“என்னங்க இந்த பொண்ணுக்காக நாம இவ்ளோ கஷ்டப்படுறோம். இவ எனக்கென்னனு போறா?” என சரஸ்வதி கனவரிடம் கேட்க,
“மருமகளுக்கு நம்பிக்கை இல்ல சரசு.? நடக்கிறது எல்லாம் அப்படித்தான இருக்கு. அதோட நாம போற காரியம் கூட கண்டிப்பா நூறு சதவீதம் நடக்கும்னு நம்பிக்கை இருக்கா? இல்லையில்ல.. அப்போ மருமகளுக்கு மட்டும் எப்படி நம்பிக்கை வரும். முதல்ல மகிக்கிட்ட பேசிப் பார்ப்போம்.. பிறகு மருமகளைப் பத்தி யோசிப்போம்..” என்று விட்டார்.
இருவரும் கிளம்பி மகள் வீட்டிற்கு வர, அங்கு ரஞ்சியுடன் சங்கரும் கிளம்பி இருந்தார். அவரைப் பார்த்ததுமே தங்கள் திட்டம் நிறைவேறாது என்று தெரிந்து போனது.
ஆனாலும் சிறு நம்பிக்கையுடன் அதை வெளிக்காட்டாமல் அமைதியாகவே அவர்களுடன் கிளம்பி விட்டனர்.
இவர்கள் குவார்ட்டஸ்க்கு வெளியில் சென்று நிற்க, உள்ளிருந்து ஆகன் வந்து அவர்களை அழைத்துப் போக, தங்கள் திட்டம் பலிக்கும் என்று இருந்த சிறு நம்பிக்கை கூட மூவர் கூட்டணிக்கு சுத்தமாக போயிருந்தது.
மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி, தொங்கிப் போன முகத்தோடு உள்ளே சென்றனர்.
அங்கு ஆரியனும் மகியும் இருக்க, ஆரிதான் அவர்களை வரவேற்றான். மகி கலங்கிய விழிகளோடு அவர்களையே பார்க்க, ரஞ்சிக்கும் மகளைப் பார்த்ததும் விழிகள் நிறைந்தது.
“உட்காருங்க ஆன்டி.. உட்காருங்க..” என மற்றவர்களிடமும் கூறிவிட்டு, உள்ளே சென்று காபி எடுத்து வந்தான்.
சங்கரும் ஆகனும் வந்தவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர். பார்வையைக் கூட வேறுபக்கம் திருப்ப முடியாத அவஸ்தையில் இருந்தனர் பெரியவர்கள் இருவரும்.
“நீ எப்போ வந்த கண்ணா?” என பேச வேண்டுமே என பேரனிடம் ஆரம்பித்தார் சரஸ்வதி.
“நான் ரெண்டு நாளா இங்க தானே இருக்கேன். ஆரி நைட் டியூட்டி போறான். மகிக்கு துணைக்கு நான் தான் இங்க இருக்கேன்.” என்றதும்,
“நீ… நீ எதுக்கு கண்ணா இங்க எல்லாம் இருக்க? இங்க இருந்தவங்க எங்க போனாங்க.. மகி தனியா இருக்கான்னா நீ நம்ம வீட்டுக்குத் தான கூப்பிட்டு வந்திருக்கனும். இங்க வந்து தங்குறது எல்லாம் என்ன புது பழக்கம்..” என சரஸ்வதி ஆரம்பிக்க,
“ஏன் தங்கினா என்ன? என் தங்கச்சி வாழப் போற வீடு.. என் அத்தையோட வீடு.. எனக்கு எல்லா உரிமையும் இருக்கு..” எதுக்கு இதெல்லாம் நீங்க கேட்குறீங்க.?” என ஆகன் முகத்திலடித்தாற் போல பேச,
“கண்ணா என்ன இது.?” என அழகர் பேரனை அதட்ட,
“அவங்க பேசினதை நீங்க கண்டிச்சிருக்கனும் தாத்தா, நீங்க செய்யல.. இப்போ நான் செய்ய வேண்டியதாகிடுச்சு..” என்றவன் அங்கிருந்து நகர்ந்துவிட, இருவரும் சங்கரைப் பார்த்தனர்.
பெரியவர்களின் முகமே மகனின் பேச்சில் விழுந்து விட்டதை உணர்ந்த சங்கர் “அம்முவும் மஞ்சுவும் சென்னை போயிருக்காங்க. அம்முவுக்கு அங்க மூனு நாள் மீட்டிங். அதனால சம்மந்தி மஞ்சுவை அங்க வர சொன்னாங்கனு போயிருக்காங்க..” என பொறுமையாக பதில் சொல்ல, வாயைத் திறக்கவில்லை சரஸ்வதி.
‘நல்லவேளை அந்த விடியா மூஞ்சியை பார்க்க வேண்டிய சூழல் இல்ல. இருந்திருந்தா அவளைப் பார்த்து எனக்கு எரிச்சலும் கோபமும் தான் வரும்..’ என மஞ்சரியை நினைத்துக் கொண்டார் சரஸ்வதி.
ரஞ்சி மகளின் கையைப் பிடித்தபடியே அமர்ந்திருந்தார். பேச ஆயிரம் உண்டு. ஆனால் பேசத் தோன்றவில்லை. இத்தனை வருடம் வளர்த்த ஒற்றை மகள், தன்னுடைய ஒற்றை செய்கையால் யார் வீட்டிலோ வந்திருப்பது அவருக்கு மிகவும் வேதனையாக இருந்தது.
அம்மா.. அப்பா.. மைதிலி.. அந்த பிரச்சினை.. என அனைத்தையும் ஓரமாய் ஒதுக்கி வைத்துவிட்டு மகளை மட்டுமே மனதுக்குள் கொண்டு வந்தார்.
“அம்மா மேல கோபமா மகி..” என்றார் தழுதழுப்புடன்..
“அப்படி.. அப்படியெல்லாம் இல்லம்மா.. நான் தான் தப்பு பண்ணிட்டேன். சாரி ம்மா.. ப்ளீஸ் இந்த மேரேஜ் வேண்டாம்னு எல்லாம் சொல்லாதீங்க ம்மா.. எனக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்கு..” என்றாள் தேம்பலுடன்..
பார்த்திருந்த அத்தனை பேருக்கும் மகியின் அழுகை மனதை பிசைய வைத்தது.
அவள் அழுது அந்த வீட்டில் யாருமே பார்த்ததில்லை. சிரித்த முகமும் கலகலப்புமாய் சுற்றிக் கொண்டிருக்கும் பெண், இப்போது எந்நேரம் அழுதுகொண்டு சோகமாய் இருப்பதை அவர்களால் பார்க்க முடியவில்லை.
அதிலும் ஆரியனுக்கு அவளை அப்போதே அள்ளிக்கொள்ள வேண்டும் போல் கையும் மனமும் பரபரத்தது.
அதே நேரம் தனக்காக எந்தளவுக்கு இறங்கி கெஞ்சுகிறாள் என்று நினைக்கும் போது மிகவும் வருத்தமாகவும் இருந்தது.
சங்கர், மனைவி சொல்லப் போகும் பதிலுக்காக காத்திருந்தார்.
“நான்… நான் ஒன்னும் சொல்லல மகி.. எனக்கு உன்னோட விருப்பம் தான் முக்கியம். உனக்குப் பிடிச்சா எனக்கு சந்தோசம்தான்.. என் பொண்ணு வாழ்க்கையை விட வேற ஒன்னும் எனக்கு பெருசில்ல.. ஆனா..” என அவரும் விசும்பலுடனே மகளிடம் சொல்லிவிட்டு மருமகனைப் பார்க்க, இப்போது ஆரி பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தான். ஆனால் பேசவில்லை.
அவர் முதலில் ஆரம்பிக்கட்டும் என மாமியாரையேப் பார்த்திருந்தான்.
அவன் எண்ணம் அவருக்கும் புரிந்ததோ “என் பொண்ணோட விருப்பம் எங்களுக்கு ரொம்ப முக்கியம் தான்.. அன்னைக்கு ஒரு கோபத்துல நான் அப்படி நடந்துக்கிட்டேன். அதை தப்புன்னும் உங்களால சொல்ல முடியாது. ஒரு அம்மாவா என்னோட கோபம் சரிதான். ஆனா என்னோட பயம் அது இல்லை. எங்க மேல இருக்குற கோபத்தை வெறுப்பை எல்லாம் நீங்களோ, உங்க ஆட்களோ மகி மேல காட்டிருவீங்களோன்னு பயமா இருக்கு. இந்த பயத்தைப் போக்க வேண்டியது நீங்கதான். நீங்க எனக்கு அந்த நம்பிக்கையைக் கொடுக்கனும்..” என்றார் நிமிர்வாகவே.
ஒரு தாயாக அவர் கேட்டதில் தப்புமில்லை.
நிச்சயம் இந்த கேள்விக்கு ஆரியன் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஏற்கனவே மஞ்சு அவனிடம் சொல்லித்தான் சென்றிருந்தார். விஜயாவும் கூட மகனிடம் இதுபற்றி பேசியிருந்தார். அதனால் இதை எதிர்பார்த்தே இருந்தான் ஆரியன்.
ஆனால் அதெல்லாம் காற்றில் பறந்து போனது. ரஞ்சனியிடம் சூடாக எதாவது கேட்க வேண்டும் என்ற எண்ணத்துடன் “ஆன்டி.. உங்க கேள்வி ரொம்ப நியாயமானது தான். கண்டிப்பா நான் பதில் சொல்லியே ஆகனும் தான்..” என்று நிறுத்தியவன் “இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க.. உங்களை மாதிரியே மத்தவங்களும் இருப்பாங்கன்னு நினைக்கிறீங்களா?” என்று நிதானமாக கேட்க, ரஞ்சனி மட்டுமல்ல, அங்கிருந்த மற்ற யாராலுமே ஆரியன் கேட்டதற்கு பதில் சொல்ல முடியவில்லை.