அகானா - 45
மகிழினியைப் பார்த்ததும் அந்த நர்ஸ் புன்னகைக்க, “எப்படி இருக்கீங்க ரம்யா.?” என மகி சிரிக்க,
“ஸூப்பர் மேம்.. நீங்க எப்படி இருக்கீங்க? ஏன் இவ்ளோ டல்லாகிட்டீங்க.. கல்யானக் கலையே இன்னும் வரலையே.. இன்னும் பார்லர் பக்கமே போகலையா?” என படபடவென கேட்க,
“இன்னும் இல்ல ரம்யா.. கொஞ்சம் ஹெல்த் இஸ்ஸூஸ் அதான் டல். பார்லர் எல்லாம் அம்மா தான் பார்த்துட்டு இருக்காங்க டூ டேய்ஸ் கழிச்சு அப்பாய்ன்மென்ட் இருக்கு போகனும்.” என மகி புன்னகைக்க,
“ஓக்கே மேம்.. சார் ஃப்ரீயாதான் இருக்கார். நீங்க போங்க..” என்றதும், மகி ஒரு தலையசைப்புடன் கதவைத் தட்டி உள்ளே சென்றாள்.
அவளைப் பார்த்ததும் “ஹான் வந்தாச்சா? இப்போதான் உனக்கு கால் பண்ணலாம்னு நினைச்சேன். இன்விடேஷன் எல்லாருக்கும் சரியா போகுமா?” என்றான் சாதாரணமாக.
“இருக்கு.. சரியா போகும்னு தான் நினைக்கிறேன்..” என்றபடியே அவனுக்கு எதிரில் அமர, அப்போது ஆகனிடமிருந்து ஆரியனுக்கு போன் வர, யோசனையாகவே அதை எடுத்து காதில் வைத்தான்.
“சொல்லுங்க சீனியர்..”
“ஆரி.. ஷாப்பிங்க் தவிர வேற ப்ளான் இருக்கா..? ஒரு ஸ்டாஃப் மீட்டிங்க் வச்சிடலாம்னு சடனா ஒரு ப்ளான். மகியை இங்க எல்லாருக்கும் தெரியும், ரொம்ப பிடிக்கும். சோ மீட்டிங்க் வச்சு அனவுன்ஸ் பண்ணா நல்லா இருக்கும்னு தோனுது. மகியைப் பார்த்த ஸ்டாஃப்ஸ் எல்லாம், ஏன் டல்லா இருக்காங்க.? என்னாச்சுனு கேட்டுட்டு போறாங்க. உனக்கு ஓக்கேன்னா சொல்லு டென் மினிட்ஸ்ல அரேஞ்ச் பண்ண சொல்றேன்..”
“நோ பிராப்ளம் சீனியர். அரேஞ்ச் பண்ணிட்டு சொல்லுங்க நாங்க வரோம்.”
“ஓக்கே டா..” என போனை வைத்துவிட்டான் ஆகன்.
“இங்க அடிக்கடி வருவியோ?”
“ஹான் என்ன?”
“இல்ல.. இங்க ஹாஸ்பிடலுக்கு அடிக்கடி வருவியோன்னு கேட்டேன்..”
“ம்ம் காலேஜ் பஸ், ஸ்கூல் பஸ் எல்லாம் இங்கதான் ஸ்டாப்பிங்க் எனக்கு. அதனால ஈவ்னிங்க் இங்கதான். மாமா யுனிவர்சிடில இருந்து இங்கதான் வருவார். அவர் இங்க முடிச்சதும், நானும் அவரும் வீட்டுக்கு போவோம். ஆகன் நைட் வருவான்.”
“ஹ்ம்ம்.. இங்க எல்லாருக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும் போல.. பார்த்தேன்..”
“அது அப்படியெல்லாம் இல்ல.. ஆகன் எல்லாரையும் திட்டிட்டே இருப்பான். அவன்கிட்ட இருந்து எஸ் ஆக நான் ப்ளான் சொல்லிக் கொடுப்பேன். அப்படியே எல்லாரும் ஃப்ரண்ட்ஸ் ஆகிடுவோம்..”
“ம்ம்.. சீனியர் சும்மா எல்லாம் திட்டமாட்டார்.. தப்பு செஞ்சா மட்டும் தான் திட்டுவார்.”
“சரிதான்.. ஆனா ஓபி சிஸ்டர் பாவம்ல்ல.. எல்லா திட்டும் அவங்கதான் வாங்குவாங்க. ஒரு வீக் வர சிஸ்டர், நெக்ஸ்ட் டைம் வரவே மாட்டாங்க. அவ்ளோ பயம் அவங்களுக்கு. அதான் அவனை எப்படி சமாளிக்கனும்னு சொல்லி கொடுத்திருக்கேன்.”
“உன்னோட ப்ளான் எக்ஸ்கியூட் பண்ண பிறகு திட்டே வாங்கலையா?”
“ம்ச் அப்படியெல்லாம் இல்ல. அவன் எல்லாத்துக்கும் திட்டுவான். என் ப்ளான் எல்லாம் அவன்கிட்ட செல்லுபடியாகாது. பட் அந்த சிஸ்டர்ஸ் கொஞ்சம் நார்மல் ஆவாங்க. இந்த டாக்டர் இப்படித்தான் ன்ற மைண்ட் செட்டுக்கு வந்துடுவாங்க அவ்ளோதான்.”
“ஹ்ம்ம். நானும் இப்போ அப்படித்தான் இருக்கேன்.. நாளைக்கு என்னையும் திட்டினா, கம்ப்ளைன்ட் பண்ணா, அப்பவும் இப்படித்தான் டிப்ஸ் கொடுப்பியா..?”
ஆரியன் கேட்டதும் மகி பதிலே சொல்லவில்லை. சட்டென தலையைக் குனிந்து கொண்டாள்.
அதை கவனித்தவன் “என்னாச்சு.. ஏன் சைலன்டாகிட்ட. பதில் சொல்ல முடியாத அளவுக்கா நான் கேள்வி கேட்டேன்..” என்றான்.
“இல்ல.. இது அப்படியில்ல..” என வேகமாக கூறி, “எனக்கு இந்த கேள்விக்கு பதிலே தெரியாது. தெரிஞ்சாதானே சொல்ல முடியும்..” என்றாள் அமைதியாக.
“ஓ.. என்னை புரிஞ்சிக்க முடியலன்னு சொல்றியா? இல்லை என்னைப்பத்தி எதுவும் தெரியாதுன்னு சொல்ல வர்றியா.?”
“எனக்கு சொல்லத் தெரியல.. ஆனா உண்மையும் அதுதான். உங்களைப்பத்தி எனக்கு எதுவும் தெரியாது. அதனால இப்போ நான் எதையும் யோசிக்கல.. ஏதோ எனக்காகத்தான் இந்த கல்யாணம் நடக்கிற மாதிரி நீங்க நடந்துக்கிறதைப் பார்க்கும் போது எனக்கே என்னை நினைச்சு அசிங்கமா இருக்கு. நான் கல்யாணத்துக்கு அலையிற மாதிரி, உங்களுக்காக அலையிற மாதிரி ஃபீலாகுது. இதையெல்லாம் யோசிக்கும் போது..” என்ற நேரம் “ஏய் நிறுத்து..” என சத்தமாக அதட்டியிருந்தான்.
“என்ன பேசுற நீ? அலையிறேன் அது இதுன்னு? உங்கிட்ட இருந்து இப்படியொரு வார்த்தையை நான் எதிர்பார்க்கவே இல்ல..” என ஆரியன் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆகனின் அழைப்பு.
இப்போதே அனைத்தையும் உதறி எரிந்துவிட்டு ஓடி விட வேண்டும் போல் ஒரு கோபம் ஆரியனுக்குள். அது அவள் வார்த்தைகளில், அவள் கண்ணீரைப் பார்த்து வந்த இயலாமையின் வெளிப்பாடு.
ஆத்திரத்தோடு அமர்ந்திருந்தவனைப் பார்த்தவள், எழுந்து ரெஸ்ட் ரூமுக்குள் சென்றுவிட, இப்போது மீண்டும் அழைத்தான் ஆகன்.
இனி பதில் சொல்லாமல் இருக்க முடியாது, தப்பாக நினைக்கவும் வாய்ப்பிருக்க, போனை எடுத்து காதில் வைத்தான்.
“ஆரி ஆல் ஓக்கே..”
“எஸ் சீனியர்.. நாங்க வரட்டுமா?”
“ஹான். அதுக்குத்தான் கால் பண்ணேன். நீங்க வெய்ட் பண்ணுங்க.. நான் வரேன். சேர்ந்து போகலாம்..” என்றதும், ஆரியும் சரியென்றுவிட, குளியலறைக்குள் நுழைந்த மகியின் அழுகை தான் குறைந்தபாடில்லை.
ஒரு மூச்சு அழுது ஓய்ந்தவள், முகத்தை நன்றாக கழுவி, அழுந்த துடைத்து வெளியில் வந்தாள்.
அவனைத் தாண்டி நகர்ந்தவளின் கையைப் பிடித்துக் கொண்ட ஆரி “மகி.. நீ இப்படி அழாத. என்னை ரொம்ப டவுனா ஃபீல் பண்ண வைக்கிற.. நான் அந்தளவுக்கு கொடுமைக்காரனா.?” என்றான் வருத்தமாக.
“இல்ல.. இப்போ பேச வேண்டாம்.. ஆகன் இப்படி பார்த்தா என்ன என்னனு கேட்டு டார்ச்சர் பண்ணிடுவான். ப்ளீஸ் இன்னொரு நாள் பேசலாம்..” என்றாள் தளர்வாக.
அதன் பிறகு ஆரி எதுவும் பேசவில்லை. பிடித்திருந்த கையை விட்டுவிட, அவளும் அமைதியாக போய் அமர்ந்து விட்டாள்.
இரண்டு நிமிடங்கள்.. இரண்டு கனங்களாக கழிய, ஆகன் வந்தான் இவர்களை அழைக்க.
தங்கையின் முகத்தைப் பார்த்து யோசனையானாலும், அதை வெளிக்காட்டாமல் “போகலாமா?” என்றான் பொதுவாக.
மகி வேகமாக எழுந்து ஆகனின் கையைப் பிடித்துக் கொண்டு அவனோடு நடக்க, தன்னை கடந்து சென்றவளையே உறுத்து விழித்தான் ஆரியன்.
“எங்க போறீங்க பாப்பா..”
“எனக்கு தெரியல ண்ணா.. அவர் ஏதாவது ப்ளான் வச்சிருப்பார்..”
“ம்ம்.. இங்க அவனுக்கு எந்த இடமும் தெரியாதே.. ட்ரைவர் வரச் சொல்லவா?”
“ம்ச் வேண்டாம்..” என்றவள் “ண்ணா.. என்னை ட்ரைவிங்க் ஸ்கூல் சேர்த்து விடுறியா?” என்றாள் மெதுவாக.
“ஏன் பாப்பா..” என்றவன் சட்டென நின்று தங்கையைப் பார்க்க,
“ம்ச்.. அப்போ நீ சொல்லும் போது தேவைப்படல. இப்போ தேவைப்படுது. எல்லாத்துக்கும் உங்கிட்ட காரணம் சொல்லிட்டு இருக்கனுமா? உன்னால முடிஞ்சா செய்.. இல்லைன்னா விடு. நான் அப்பாக்கிட்ட கேட்டுக்கிறேன்..” என பட்டென ஆத்திரமாக கூற,
“ஹேய்.. பாப்பா.. பாப்பா.. ஓக்கே ஒக்கே.. நான் அரேஞ்ச் பண்றேன்.. நீ டென்சன் ஆகாத..” என தங்கையை சமாதானம் செய்ய, அவர்களின் மீட்டிங்க் ஹால் வந்திருந்தது.
சட்டென மூவரும் அந்த இடத்திற்கு தகுந்தாற் போல, முகத்தை புன்னகையாக மாற்றிக் கொண்டனர்.
அனைத்து ஊழியர்களும் அங்கிருக்க, அனைவரையும் பார்த்து பேசி, அவர்களிடம் பத்திரிக்கையைக் கொடுத்து என அவர்கள் கிளம்ப ஒரு மணி நேரமே கடந்திருந்தது.
“ஆரி.. லஞ்ச் என்ன ப்ளான். என் கூட வரீங்களா? லஞ்ச் முடிச்சிட்டு கிளம்புங்க..” என ஆகன் கேட்க,
“ஓக்கே..” என ஆரி சொல்ல வருவதற்குள், “அதெல்லாம் தேவையில்லை..” என்று வெளியில் வந்தவள் ஆரியின் காரில் ஏறி அமர்ந்திருந்தாள்.
“ஸாரி ஆரி.. அவ பேசினதுக்கு ரொம்பவே ஸாரி. அவ மனசுல ஏதோ ஒரு அழுத்தம், கஷ்டம் இருக்கு. அதைத்தான் இப்படி வெளிக்காட்டுறா? அவளே சரியாகிடுவா.. டோன்ட் வொரி.. பார்த்து போயிட்டு வாங்க. எனி ஹெல்ப் உடனே கால் பண்ணு..” என அதற்கு மேல் என்ன பேசுவது என தெரியாமல் நிற்க, ஆரியன் பதிலே சொல்லவில்லை. அமைதியாகவே பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன ஆரி..?”
“ஸாரி சீனியர்.. நான் மகி வாழ்க்கையில வந்திருக்கக்கூடாது. அதனாலத்தான் இப்போ இவ்ளோ பிரச்சினை. மகிக்கும் அதும் ரொம்ப அழுத்தத்தைக் கொடுக்குது. நான் வந்த வேலையைப் பார்த்துட்டு போயிருக்கனும். தேவையில்லாம அவளை உள்ள இழுத்து..” என பெருமூச்சு விட,
“ஆரி.. அப்படி மட்டும் சொல்லாத.. எல்லாருக்கும் அவங்களோட காதல் கை கூடுறது இல்ல. உனக்கு கிடைச்சிருக்கு. விட்டுடடாத. உனக்காக அவ எடுத்த ரிஸ்க் ஈசி இல்ல. இப்போ கஷ்டமா தான் இருக்கும். பட் பின்னாடி உங்க லைஃப் நல்லா இருக்கும். மகி கண்டிப்பா உன்னை அட்ஜஸ்ட் பண்ணிப்பா.. உனக்காக உன் பின்னாடி இருப்பா..” என்ற ஆகனை அனைத்துக் கொண்ட ஆரி,
“நீங்க உங்க தங்கைக்காக இவ்ளோ பேசுறீங்க. என் தங்கையை ஏன் யோசிக்க மாட்டேங்குறீங்க. அவ வெளியில் தான் ஸ்ட்ராங்க். பட் உள்ள ரொம்ப உடைஞ்சுப் போய் இருக்கா.. அவளோட அப்பாவை உங்ககிட்ட பார்த்தா.. நீங்க அப்படி இல்லன்னதும் மொத்தமாவே ஒடுங்கிப் போயிட்டா.. அவளை இப்படி விட்டுட்டு என்னால எப்படி மகியோட நிம்மதியா வாழ முடியும்..” என்றான் தழுதழுப்பாக.
“ஆரி.. நான் செஞ்சது ரொம்ப மோசமான தப்புத்தான். அதுக்காக அவக்கிட்ட கெஞ்சிக்கூட பார்த்துட்டேன். இனி நான் என்னதான் செய்யனும்னு எனக்குத் தெரியல. ஒருவேளை உசுரை விட்டாத்தான், அவளுக்கு என் மேல நம்பிக்கை வருமோ என்னமோ.. ம்ச் போடா.. இதெல்லாம் எப்பவும் மாறாது. உன் தங்கையும் மாறமாட்டா.. நான் இப்படியே இருக்க வேண்டியதுதான். அதுதான் எங்க வீட்டாளுங்களுக்கு நான் கொடுக்குற தண்டனை. ஓக்கே நீ கிளம்பு.. மகி கீழ இறங்கி வரா பார்..” என ஆரியனை அனுப்பிவிட்டு, தங்கை பார்க்கும் முன்னே தன் காருக்கு சென்று வேகமாக காரை எடுத்து போய்விட்டான்.
“என்னாச்சு.. ஏன் ஆகன் ஒரு மாதிரி போறான்..” என மகி பதட்டமாக கேட்க,
“ம்ம்.. அவருக்கு ஒரு கேஸ்.. அங்க போறார்..” என பேச்சை மாற்றிவிட்டு, வண்டியை எடுத்தவன் தேனியின் மிகப்பெரிய நகைக்கடையில் வந்து நிறுத்தினான்.
‘இங்கு ஏன்..?’ என நினைத்தாலும், அவனிடம் எதுவும் கேட்காமல் அமைதியாக அவனோடு செல்ல,
“வாங்க சார்.. வாங்க மேம்.. என்ன பார்க்குறீங்க..?” என்ற சேல்ஸ்மேனிடம்,
“டைமென்ட்ல மூக்குத்தி வேணும்.. இங்க எங்க இருக்கும்?” என ஆரியன் கேட்டதும், மகி மயங்கி விழாத குறைதான்.
‘அம்மாடி..’ என அருகில் இருந்தவனின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள் பெண்.