அகானா- 50
மஞ்சரியின் எதிரில் அமர்ந்திருந்தார் ரவீந்திரன். பல வருடங்களுக்குப் பிறகு நேருக்கு நேராக அவரைப் பார்க்கிறார்.
‘மஞ்சரி என்ன சொல்வாளோ?’ என்ற பதைபதைப்புடனே அமர்ந்திருக்க, மஞ்சரிக்கு அப்படி எந்த பதட்டமோ, பயமோ இல்லை.
ரவியை நேர் கொண்டு ‘என்ன விசயம்?’ என்பது போல் பார்த்தார்.
தன் பின்னே கொஞ்சி, கெஞ்சி, கிறங்கி ஒரு கட்டத்தில் அவர் விட்டு சென்ற பின் அழுது, ஆர்ப்பாட்டம் செய்து, கெஞ்சிய அந்த மஞ்சரி இப்போது இல்லை என்று மஞ்சரியின் நேர் கொண்ட பார்வையிலேயே புரிந்து கொள்ள முடிந்தது.
வாழ்க்கையில் விழுந்த அடிகள் அவரை அந்தளவிற்கு பக்குவப்படுத்தியிருக்கிறது என்றும் அவரால் உணர முடிந்தது.
பணத்திற்காக வாழ்க்கையை அடகு வைத்த கோழையை வெறுத்து ஒதுக்காமல் வேறு என்ன செய்வார்கள்.
மஞ்சரியின் முகத்தில் துளி அளவு கூட சலனமோ, ஏன் ரவியைக் கண்ட வெறுப்பு கூட தென்படவில்லை. அதுவே ரவீந்திரனுக்கு மிகப்பெரிய அடி.. உயிர்க்காதலை கொன்றுவிட்டு, இன்று அதற்காக ஏங்கித் தவிப்பவரை என்னவென்று சொல்ல?
என்ன பேசுவது எனத் தெரியாமல் ரவி அமர்ந்திருக்க “மாமா.” என்றபடியே உள்ளே வந்தான் ஆகன்.
“ஹான் கண்ணா வா..” என்றவர் மஞ்சரியைக் கண் காட்டி, ‘நீயே பேசு’ என்பது போல் பார்த்தார்.
“அத்தை அந்த டாக்டர் நாளைக்கு தான் மலேசியால இருந்து கிளம்பறார். அடுத்த நாள் மார்னிங்க் சர்ஜரி ஃபிக்ஸ் பண்ணிருக்கோம்.. உங்களுக்கு பிரச்சினை இல்லையே. சர்ஜரி முடிஞ்சளவுக்கு சீக்கிரம் பண்ணிடலாம். இல்லைன்னா போன் சேர லேட்டாகும்..”
“ம்ம் சரிங்க டாக்டர். ஆரியனுக்கு நீங்க இதை சொல்லிடுங்க. அவன் இருக்கும் போது எனக்கு கவலை இல்லை. அவன் பார்த்துப்பான்..”
“ம்ம் ஆரிக்கு எல்லாம் சொல்லிட்டேன் த்த. பட் பேசன்டோட ரிலேடிவ்க்கு நான் எக்ஸ்ப்ளைன் பண்ணனும் இல்லையா?”
“ம்ம் புரியுது டாக்டர்.. சர்ஜரி முடிஞ்சதும் எவ்ளோ நாள் இங்க இருக்கிற மாதிரி இருக்கும்..”
“கண்டிப்பா டூ வீக்ஸ் இருக்கனும் அத்த. அதுக்குப் பிறகு எக்ஸ்ரே பார்த்துட்டு சொல்றேன்..”
“ம்ம் சரிங்க டாக்டர் அப்புறம். உங்ககிட்ட பெர்சனலா ஒன்னு சொல்லனும்..” என்று நிறுத்திய மஞ்சரி ஆகனை நித்சலனமாக நோக்க,
“என்ன சொல்லனுமோ சொல்லுங்க அத்த. அம்முவைப் பத்தின கவலைனா அது இனி உங்களுக்கு தேவையில்ல.” என படபடவென பேச
“அது.. அது இல்ல டாக்டர்.. நீங்க எங்களை ஒரு பேஷண்டா மட்டும் ட்ரீட் பண்ணுங்க போதும். இந்த அத்தைன்னு சொல்லி சொந்தம் எல்லாம் வேண்டாம். அது அபத்தம்னு உங்களுக்கே புரியும்..” என ஆகனைப் பார்த்து நிதானமாக கூற, ரவீந்திரன் என்ற மனிதர் கூனிக் குறுகிப் போய் அமர்ந்திருந்தார்.
மஞ்சரிடம் இப்படியான பேச்சை ரவி எதிர்பார்க்கவில்லை என்று அவரின் அதிர்ந்த முகத்தை வைத்தே புரிந்துகொள்ள முடிந்தது.
ஆனால் ஆகன் எதிர்பார்த்திருப்பான் போல, அவன் முகம் சலணமே இல்லாமல் அவரை எதிர்கொண்டது.
“அத்தை நீங்க நினைக்கிற மாதிரியான உறவு முறையை வச்சு உங்களை அத்தைன்னு நான் கூப்பிடல… இன்னொரு காரணம் என்னன்னு உங்களுக்கு இந்நேரம் புரிஞ்சுருக்கணும். அம்மு வந்து உங்ககிட்ட இதெல்லாம் சொல்லுவான்னு நீங்க எதிர்பாக்கிறீங்களா? கண்டிப்பா சொல்ல மாட்டா..? அவளை இப்படியே உங்ககூட வச்சிக்க போறீங்களா?” என கேட்டவனை அதிர்ந்து பார்த்தார் மஞ்சரி.
“உங்க பொண்ணுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையை கொடுக்க யாருமே யோசிக்கவே இல்லையா?” என்றதும் மஞ்சரி துடித்துப் போனார்.
“கண்ணா என்ன பேசுற?” என ரவி மருமகனை அதட்ட,
“ப்ளீஸ் மாமா இன்னைக்கு நான் இதை பேசிடுறென்.. இல்லைன்னா எங்க வாழ்க்கை என்னாகுமோ எனக்குத் தெரியாது. அதை நினைச்சாலே எனக்கு பயமா இருக்கு..” என்றதும், ரவிக்கு ஏதோ புரிவது போல் இருக்க, அதிர்ந்து போய் மஞ்சரியைப் பார்த்தார்.
“தம்பி என் பொண்ணோட விருப்பம் தான் என்னோட விருப்பமும். ஆனா அவ எப்படி உங்க குடும்பத்து ஆளை ஏத்துப்பான்னு நினைக்கிறீங்க..” என்றார் கோபமாக.
“கண்டிப்பா மட்டா.. எனக்குத் தெரியும். நம்பிக்கை வைக்கிறதும் கஷ்டம் தான். ஆனா வேற என்ன செய்வீங்க. வேற மாப்பிள்ளை பார்த்து மேரேஜ் பண்ணி வைப்பீங்களா, அதுக்கு அம்மு சம்மதிப்பாளா? நீங்க இதுக்கு பதில் சொல்லுங்க. உங்களை தனியா விட்டு போகமாட்டேன்னு சொல்லியே கல்யாணத்தை தள்ளிப் போடுவா? அப்புறம் இப்படியே இருந்துக்குறேன் சொல்லுவா, இதுதான் உங்களுக்கு வேணுமா?” என ஆதங்கமாக கேட்க,
பெற்றவர்களுக்கு இதயமே நொருங்கிப் போனது..
அவளே அப்படி இருக்கும் போது நான் மட்டும் நிம்மதியா இருப்பேனா? நானும் அப்படியே இருந்துடுவேன்..” என ரவியைப் பார்த்து கோபமாக கூற், மருமகனின் இருந்த வேதனை அவரை சுட்டது.
தன்னுடைய ஒற்றைச் செய்கை இன்று எத்தனை பேரின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கி விட்டிருக்கிறது. அதை நினைக்க நினைக்க அவரையே அவரால் மன்னிக்க முடியவில்லை.
“ப்ளீஸ் அத்தை.. நான் செஞ்சது பேசினது எல்லாம் தப்புத்தான். அன்னைக்கு எனக்கு உண்மை தெரியாது. தெரிஞ்ச நொடியில் இருந்து நான் அம்முவுக்காகத்தான் காத்திட்டு இருக்கேன். அவக்கிட்ட எப்படி பேசினாலும், மனசு இறங்க மாட்டேங்கிறா? நான் என்ன செய்யனும் சொல்லுங்க..” என்றான் பொறுமையாக.
ஆகனின் கேள்விக்கு இருவராலுமே பதில் சொல்ல முடியவில்லை. அமைதியாக இருக்க, “என் பொண்ணை என்னால சமாளிக்க முடியும்.. ஆனா இவங்க வீட்டு ஆளுங்க மேல எனக்கு நம்பிக்கை இல்லை. இனி அது வரவும் வராது.. எங்க வலி உங்களுக்கு புரியவும் புரியாது. கொஞ்ச நாள் போகட்டும் நான் என் பொண்ணுக்கிட்ட பேசுறேன்.” என்றவர் அமைதியாக வெளியேற எழுந்துக் கொள்ள, அந்த கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார் மைதிலி.
அந்த ணேரத்தி, அந்த இடத்தில் மைதிலியை யாருமே எதிர்பார்க்கவில்லை.
கண்ணை மூடி தன்னை சமாளித்து வெளியேற நினைத்த மஞ்சரியின் முன் வந்து நின்றார் மைதிலி.
“ஏன்டி.. உனக்கெல்லாம் வெட்கமாவே இல்லையா? எப்படி கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம இவர் முன்னாடி வந்து நிக்கிற, அன்னைக்கே உன்னை நாயை விட கேவலமா பேசி விரட்டி விட்டது ஞாபகம் இல்லையா? ச்சே அன்னைக்கே அந்த சனியன் செத்து தொலைஞ்சிருந்தா..?” என முடிக்கும் முன்னே அமர்ந்திருந்த நாற்காலியைத் தள்ளிக்கொண்டு ‘ஏய்..’ என ரவீந்திரன் ஆத்திரமாக வர,
“போதும் இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசக்கூடாது.” என ஆகன் சீற, அந்த நொடி மைதிலியை ஓங்கி அறைந்திருந்தார் மஞ்சரி.
மூவரும் மஞ்சரியை அதிர்ந்து பார்க்க, “இந்த அறையை அன்னைக்கே கொடுத்திருக்கனும், என் தப்புத்தான். புருசன் எங்க போறான், யார் கூட பேசுறான்னு கூடத் தெரியாம, மொத்தமா நம்பி வாழ்க்கையை தொலைச்சது என் தப்புத்தான். வேற ஒருத்திக்கு புருசன், ஒரு குழந்தை இருக்குன்னு தெரிஞ்சும் அந்த ஆம்பளை தான் வேணும்னு அலைஞ்ச உன்னைய விட நான் கேவலமா போயிடல.. இன்னொரு தடவை என்னைப் பத்தியோ, என் பொண்ணைப் பத்தியோ நீ பேசுறதைக் கேட்டேன், கொலைகாரி ஆகிடுவேன். அன்னைக்கு மாதிரி இப்பவும் அமைதியா போயிடுவேன்னு மட்டும் நம்பி ஏமாந்திடாத. ஒவ்வொருத்தரையும் உருத் தெரியாம அழிச்சிட்டு போயிடுவேன்.. ஜாக்கிரதை..” என உக்கிரக் காளியாக கர்ஜித்து சென்றவரையே திகைத்துப் போய் பார்த்திருந்தார் மைதிலி.
“இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்க மாமா” என சலிப்பாக கூறிய ஆகன், எரிச்சலோடு சென்றுவிட, மனைவியை ஆத்திரமாக முறைத்துப் பார்த்தார் ரவி.
“என்ன.. என்ன பார்த்திட்டு இருக்கீங்க? உங்க முன்னாடி என்னை அடிச்சிட்டு போறா, அவளை ஒன்னும் சொல்லாம என்னை முறைச்சிட்டு இருக்கீங்க.. என்ன அவளைப் பார்த்ததும் உங்க காதல் பொங்கி வழியுதோ? அப்படி மட்டும் அவ பின்னாடி போக நினைச்சா, என்னைப்பத்தி தெரியும்ல.. கூண்டோட தூக்கி கூண்டுல நிக்க வச்சிடுவேன்..” என ஆங்காரமாகக் கத்த,
“அவளை விட்டுட்டு வர எனக்கு கொஞ்ச காலம் தேவைப்பட்டது. என்னோட குற்றவுணர்ச்சி என்னை கொல்லாம கொன்னுச்சு. மனசைக் கல்லாக்கிட்டுத்தான் அவளை விட்டு வந்தேன். ஆனா உன்னைவிட்டு போக எனக்கு ஒரு நொடி கூட தேவைபடாது. இப்போ இந்த செகன்ட் நினைச்சாலும் என்னால போயிட முடியும்.. ஆனா உன்னோட மானம் மரியாதைக்காக அமைதியா இருக்கேன். உன் ஆட்டத்தை இதோட நிறுத்திக்கோ.. இதுக்கு மேலையும் ஆடித்தான் பார்ப்பேன்னு நினைச்சா, நீ சொன்னியே இன்னொரு மைதிலியைப் பார்ப்பேன்னு, நீயும் இன்னொரு ரவீந்திரனைப் பார்ப்ப..” என கர்ஜனையாக கூறியவரை அதிர்ந்து பார்த்தார் மைதிலி.
அன்றைய சம்பவத்திற்கு பிறகு மஞ்சரியும் ரவியும் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ளவில்லை. மஞ்சரி முற்றிலுமாக அவரை தவிர்த்தார்.
அதை புரிந்து கொண்ட ரவியும் ஒதுங்கித்தான் போனார்.
ஆகனும் இதில் எதுவும் தலையிடவில்லை. ஆனால் அகானாவிடம் தினமும் காலையும் மாலையும் அவளிட வந்து நேரம் செலவழிக்க ஆரம்பித்தான்.
அவன் பேச்சுக்கு அவளிடம் எந்த ரியாக்ஷனும் இருக்காது. ஆனாலும் ஆகன் பேசிக்கொண்டே இருப்பான். சில நாள் ஆரியும் வந்துவிட்டால், கல்லூரி காலத்தைப் பற்றி பேசிக அந்த இடத்தையே கலகலவென மாற்றிக் கொண்டிருப்பான்.
அகானாவிடமும் சில மாறுதல்கள் வந்ததுதான். ஆரம்பத்தில் அவனை துரத்தியவள், இப்போது மறுப்பேதும் சொல்லாமல் அவன் பேச்சைக் காதில் வாங்க ஆரம்பித்திருந்தாள்.
இரண்டு வாரத்தில் ஆரியின் திருமணம் என்றிருந்த நிலையில், இன்று அகானாவுக்கு சர்ஜரி நடக்க இருந்தது.
“அகி.. நீ தான் என் பொண்டாட்டிக்கு நாத்தனார் முடிச்சி போடனும். அதை மறந்துடாத..” என கிண்டலடித்தபடியே தான் ஆபரேசன் தியேட்டருக்குள் அழைத்து சென்றிருந்தான்.
இன்றும் அந்த அறையின் வெளியே இரண்டு குடும்பமும் பயமும், பதட்டமுமாக நின்றிருந்தது.
இன்று ஹரினியும், ஹரிஷுமே வந்திருக்க, இருவரும் மஞ்சரியை ஒட்டியே அமர்ந்திருந்தனர்.
இங்கு ரஞ்சனியின் வீட்டிற்கு வந்திருந்தனர் சரஸ்வதியும் ஆழகரும். அவர்களைப் பார்த்ததுமே சங்கரி வெளியில் சென்றுவிட “என்ன நடக்குதுனே தெரியல ரஞ்சி..? நாம எதை நினைச்சி பயந்தோமோ அதுதான் இப்போ நடந்திட்டு இருக்கு.. இந்த மைதிலி போக்கும் சரியில்ல..” என வழக்கம் போல புலம்ப, பதில் சொல்லாமல் அமைதியாக கேட்டுக் கொண்டார் ரஞ்சனி.
மகளின் அமைதியில் பெற்றவர்கள் என்ன கண்டார்களோ, வெகு சீக்கிரமே அங்கிருந்து கிளம்பிவிட்டார்கள்.
“ரஞ்சி முகமே சரியில்லங்க.. நம்மக்கிட்ட எதையோ மறைக்கிற மாதிரி இருக்கு..” என்ற மனைவியிடம்,
“மாப்பிள்ளை முகமும் சரியில்ல. அந்த பொண்ணுக்கு இன்னைக்குத்தான ஆபரேஷன். அதுக்கு கூப்பிட்டு இவ வரலன்னு சொல்லிருப்பாளோ, அதனால ஏதும் பிரச்சினையோ?” என அழகரும் கூற,
“என்ன நடக்குதுனே புரியலங்க..” என புலம்பியபடியே சரஸ்வதி காரில் ஏற, அதே நேரம் அவர்கள் காருக்கு அருகில் சுற்றில் கொண்டிருந்த தெரு நாய் ஒன்று சட்டென சீற, அந்த பயத்தில் அரண்டு போய் கீழே விழுந்திருந்தார் சரஸ்வதி.