அகானா - 62
அன்று சிறையிலிருந்து தாமோதரனை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்திருந்தனர்.
நவீன், குமரனுடன் மஞ்சரியும் வந்திருக்க, அவருக்குத் துணையாக ஆரியனும் வந்திருந்தான்.
அந்த வழக்கிற்காக ஆகனும் வினோத்தும் கூட ரவிக்காக வந்திருந்தனர்.
இப்படியொரு சூழலை யாராலும் எதிர்கொள்ள முடியவில்லை.
ஆகனுக்கும், வினோத்திற்கும் இதை எப்படி கையாள்வது என கூட தெரியவில்லை.
இவர்களின் முறை வர, வழக்கறிஞர்களின் வாக்குவாதங்கள் தொடர ஆரம்பித்தது.
இந்த வழக்கு எப்படி முடிந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணம் தான் ஆகனுக்கு.
வினோத்திற்கும் அதே எண்ணம்தான். இதற்கு மேல் இந்த பகையை இழுத்துக் கொண்டு செல்வதில் அவருக்குமே விருப்பமில்லை.
அதோடு இப்போது அவர்கள் பிள்ளைகள் இருவரின் வாழ்க்கையும் முக்கியமாக இருக்க, இந்த வழக்கில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை அவர்.
அதோடு நித்தியாவும் அவரை பேசிப்பேசியே ஒரு வழி செய்திருக்க, மிகவும் அமைதியாகிவிட்டார் மனிதர்.
ரஞ்சனியும், மைதிலியும் தாம் தூமென்று குதித்தாலும், அதையெல்லாம் கண்டுகொள்ளத்தான் அங்கு யாருமே இல்லை.
இப்படியாக இவர்களின் எண்ணம் இருக்க, தாமோதரனின் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ‘தாமோதரன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளி’ என கொடுத்த சான்றிதழ் அங்கிருந்த அனைவரின் வாயையும் கட்டிப் போட்டது.
அந்த சான்றிதழில் இருப்பது உண்மையா என ஆராய, அந்த இடத்தில் முதல் முறையாக வாய் திறந்தார் ரவி.
“அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் தான் யுவர் ஆனர். என்னிடமே பல முறை அவர் சிகிச்சைக்கு வந்திருக்கிறார்.” என வாக்குமூலம் கொடுக்க,
அவரது வாக்குமூலத்தை ஏற்று, தாமோதரனை விடுதலை செய்தது நீதிமன்றம்.
ரவி இப்படி கூறுவார் என எதிர்பார்க்காத மற்றவர்களுக்கும் இது அதிர்ச்சிதான்.
ஆனால் அதை யாரும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
“உன் மேல இருக்குற கோபம் அது எப்பவும் குறையாது. உன்னோட சுயநலத்துக்காக என் மஞ்சரியை நீ தெருவுல விட்டுட்ட.. அவ பட்ட கஷ்டத்தையெல்லாம் இப்போ நினைச்சாலும், உன்னை கொன்னா கூட என் ஆத்திரம் அடங்காது. என் அம்மு சொல்றதுனால உன்னை அப்படியே விட்டுட்டு போறேன்.” என்ற தாமோதரனின் அடக்கப்பட்ட ஆத்திரத்தை, வெறித்துப் பார்த்தார் ரவி.
கடந்து போன எதையும் அவரால் சரி செய்திட முடியாது என்று தெரியும்.
நடக்கப் போவதையுமே அவரால் சரியாக செய்திட முடியாது என்றும் அவருக்குத் தெரியும்
இந்த சூழலை எப்படி கடந்து வருவது என அவருக்குத் தெரியவே இல்லை.
அவருடைய சுயநலத்தால் பாதிக்கப்பட்டது மூன்று பெண்கள். அவர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாக வளைந்து நிற்க, அவர் மட்டும் முற்றுப் புள்ளியாய் முடிந்து போக முடியாதே.
தாமோதரனைக் கடந்து தனக்காக நின்றிருந்த போலிஸ் வேனில் ஏறினார் ரவி.
“மாமா..” என ஆகன் அவரிடம் விரைய,
“எனக்கு இதெல்லாம் ஒன்னுமே இல்ல கண்ணா.. அம்முவை சமாதானம் செய்து அவ கூட வாழற வழியைப் பார். எனக்கு அதுதான் முக்கியம்..” என்றார் ஆழ்ந்த குரலில்.
“மாமா..” என ஆகன் திணற,
“சிலது மனைவிக்காக, காதலிச்ச பொண்ணுக்காக செய்யலாம் தப்பில்ல. அம்முதான் நம்ம வீட்டுக்கு வரனும்னு இல்ல. நீ கூட அவக்கிட்ட போகலாம். இல்ல முடியாதுனு உன்னோட ’ஆண்’ ஈகோ தடுத்தா..” என நிறுத்த,
“நான் ஏற்கனவே அந்த முடிவுல தான் இருக்கேன் மாமா. மஞ்சு அத்தைக்கிட்ட முன்னாடியே இதை பேசியிருக்கேன். ஆனா இப்போ நம்ம வீடு இருக்குற சிச்சுவேஷன்ல..” என அவனும் பாதியில் நிறுத்த,
“கண்ணா.. நீ அங்க இருந்தாலும், இல்லைன்னாலும் நடக்கிறது, நடக்கத்தான் செய்யும். இப்போ நீங்க வாழ வேண்டிய வாழ்க்கையை இன்னும் ஃபைவ், டென் யேர்ஸ்க்கு தள்ளிப் போட போறீங்களா? அப்போ திரும்பி பார்க்கும் போது உங்க லைஃப்ல என்ன இருக்கும்?” என்றார் கேள்வியாக.
“மாமா எனக்கு இதெல்லாம் புரியாம இல்ல. ஆனா இந்த மாதிரி நேரத்துல விட்டுட்டு போறது ரொம்ப தப்புன்னு தோணுது..”
“அப்படி இல்ல கண்ணா.. வினோத் இருக்கான். மாமா இருக்கார். அவங்க சமாளிக்கட்டுமே. அதோட நானும் சீக்கிரம் வந்துடுவேன். பார்த்துக்கிறேன். நீ அம்முவை சரி செய்ய பார். உன்னாலத்தான் அது முடியும்னு எனக்குத் தோணுது..”
“ஹ்ம்ம்.. சரிங்க மாமா.. ஆனா எனக்கு ஒரு கேள்வி இருக்கு. அதை உங்ககிட்ட கேட்கலாமா? வேண்டாமான்னு தான் தெரியல..”
“அம்முவோட அம்மா பத்தியா?” என ரவி சரியாக கணிக்க.
“ஆம்” என்று சொல்லாமல் அதை பார்வையில் காட்ட,
“அவங்களைப் பத்தி பேசுற தகுதி கூட எனக்கில்லன்னு நினைக்கிறேன். அதனால மட்டும் தான் அவங்களைப் பத்தி நான் பேசுறதே இல்ல..” என்றார் குற்றவுணர்வோடு.
“ஆனா.. அத்தை உங்களை..” என நிறுத்த,
“அவங்க காதல் உண்மையானது. அவங்களும் அந்த காதலுக்கு நேர்மையா இருந்தாங்க. அதனாலத்தான் அவங்களால இவ்ளோ தைரியமா, நிமிர்வா அம்முவை தன்னம்பிக்கையோட வளர்க்க முடிஞ்சது..” என்றார் பெருமையாக.
“உங்க.. உங்களுக்கு வருத்தமா இல்லையா?” என்றான் ஆகன் திணறலாக.
“ஹ்ம்ம்..” என்ற பெருமூச்சு விட்டவர், “உனக்குத் தெரியுமா? அவங்களை விட்டுட்டு வந்த கொஞ்ச நாள்லயே அவங்களை ரொம்பவே தேட ஆரம்பிச்சிட்டேன். ஒருபக்கம் துரோகம் பண்ணின குற்றவுணர்ச்சி, இன்னொரு பக்கம் அவங்களை விட்டுட்டு வந்த குற்றவுணர்ச்சி. அதையெல்லாம் தாண்டி அவங்க,” என நிறுத்தி மீண்டும் ஒரு பெருமூச்சு விட்டவர் “அம்முவை விட அவங்க தான் என்னை அதிகம் தேடுவாங்க. அப்படி அவங்களை பழக்கிட்டேன். அவங்களுக்கு நான் மட்டும்தான் எல்லாம். அப்படி தன்னோட உலகத்தையே என்னை வச்சு சுருக்கிக்கிட்டாங்க. அப்படி பட்டவங்களை விட்டுட்டு வந்துட்டோமே, எப்படி இந்த சொசைட்டிய ஃபேஸ் பண்ணுவாங்கன்னு ஒரு பயம். இதெல்லாம் என்னைப் போட்டு அழுத்த, அழுத்த நான் மைதிலியை விட்டு தூரமா வந்துட்டேன்.”
“ஆனா மாமா..?”
“ம்ம் தேட ஆரம்பிச்சேன் தான். அது நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. எனக்குள்ள… எனக்கு நானே அவங்களை தேட ஆரம்பிச்சேன். அவங்ககூட இருக்கும் போது லைஃப் எப்படி இருந்தது. மைதிலி கூட இருக்கும் போது எப்படி இருந்தது.. இப்படி எனக்குள்ளே நிறைய கால்குலேஷன்ஸ்.”
“மாமா..”
“ம்ம் அவங்க கூட இருக்கும் போது.. எத்தனை சண்டை வந்தாலும், நான் சாப்பிடாம அவங்க தண்ணி கூட குடிக்கமாட்டாங்க. என் மேல பைத்தியம் அவங்க. அவ்ளோ நம்பிக்கை…” என்றார் அதில் சற்று பெருமை தொணித்ததோ..
“எந்தளவுக்கு நம்பிக்கைன்னா. இப்போ கூட நான் போய் இதெல்லாம் என் அம்மாவோட கட்டாயத்தால செஞ்சிட்டேன். உங்களை விட்டு என்னால இருக்கமுடியாது. என்னை மன்னிச்சிடுன்னு சொன்னா போதும். உடனே சரின்னு ஏத்துப்பாங்க.” என்றார் ரவி. இப்போது அவர் குரலில் வெளிப்படையாகவே பெருமை பொங்கியது.
“மாமா..”
“ஹ்ம்ம் ஆனா அதை நான் செய்யமாட்டேன். ஏற்கனவே ஒரு துரோகத்தை செஞ்சிட்டேன். மறுபடியும் ஒரு துரோகத்தை செய்ய என்னால முடியாது. இப்போ அவங்க நல்லா இருக்காங்க. என் பொண்ணு அவங்களை நல்லாவே பார்த்துக்கிறா. இதுக்கு மேல எனக்கு என்ன வேணும். அவங்களுக்கு இந்த நிம்மதியையாவது கடைசி வரை கொடுக்கனும்னு நினைக்கிறேன்..” என்றார் நீண்ட விளக்கமாக.
ஆகனுக்கு அவரது பேச்சில் பல இடங்களில் முரன்பாடுகள் தோன்றியது.
ஆனால் வருத்தத்தில் இருப்பவரிடம் அதைக் காட்டிக் கொள்ள அவன் விரும்பவில்லை.
இனி மஞ்சரி அத்தையின் பொறுப்பை தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்று மட்டும் முடிவு செய்துகொண்டு அவருக்கு விடை கொடுத்தான் ஆகன்.
அந்த வாகனம் நகர்ந்ததும் நேராக மஞ்சரியிடம் வந்த ஆகன், “அத்தை நான் எப்போ அங்க வரட்டும்..” என்றான் அதிரடியாக.
‘என்ன பேச்சு இது? அதிலும் இங்கே வைத்து’ என்பது போல் பார்க்க,
“சீனியர் என்ன இது?” என ஆரியன் கேட்க,
“அத்த நீங்க சொல்லுங்க.?” என ஆகன் அதிலேயே நிற்க,
“நல்ல நாள் பார்த்து சொல்றேன் தம்பி..” என்று வாய் திறந்தார் மஞ்சரி.
“மஞ்சு ம்மா.. அகி கிட்ட கேட்காம எப்படி சொல்றீங்க.?” என ஆரி வர,
“ம்ச் ஆரி.. அம்முகிட்ட நான் பேசிக்கிறேன்.” என அவனை அதட்டி “நீங்க வீட்டுல சொல்லிடுங்க தம்பி..” என ஆகனிடம் முடிவாக சொல்லிவிட்டார் மஞ்சரி.
மஞ்சரியின் இந்த பதிலில் வினோத்திற்கு சற்று ஏமாற்றம் தான். அம்முவை சமாதானம் செய்து அனுப்பிவைப்பார் என்று நினைத்திருந்தார்.
ஆனால் இப்போது அவருக்குமே அவர்களின் வாழ்க்கை முக்கியமாக பட, எங்கு வாழ்ந்தால் என்ன? ஒன்றாக இருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட அமைதியாகவே கிளம்பி விட்டார்.
அவர்களோட ஆரியனும் கிளம்பிவிட “சித்தி..” என்ற நவீனிடம்
“நவீ.. அந்த தம்பி முன்னாடியே எங்கிட்ட இதை பேசிட்டார். அம்மு அங்க வரலன்னா என்ன இங்க வரேன்னு சொன்னார். இது எந்தளவுக்கு சரியா வரும்னு தெரியல. ஒருவேளை அவர் எல்லாத்தையும் விட்டுட்டு வரனும்னு கூட அம்மு எதிர்பார்க்கிறாளோ என்னமோ? அப்படி ஒருவேளை அம்மு எதிர்பார்த்திருந்தா இந்த தம்பியோடமுடிவு அவளுக்கு அவர் மேல ஒரு நம்பிக்கையை வர வைக்கும். அவளும் அவர் கூட கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போவா.. நம்ம பக்கம் இருந்து ஒரு ஸ்டெப் எடுத்து வைப்போம். அதுக்குப் பிறகு அவங்களோட சாமார்த்தியம்..” என முடிக்க,
மஞ்சரியின் பேச்சு நவீனுக்கும் குமரனுக்கும் சரியென்றுதான் பட்டது. அதனால் அவர்களும் அமைதியாகிவிட, அடுத்து தாமோதரனை விடுவிக்க தேவையான நடைமுறைகளைப் பார்த்து, முடித்துவிட்டு அவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்கள்.
இங்கு அலுவலகத்தில் அகானாவிற்கு எதிரில் அமர்ந்திருந்தார் உதய். அவர் கூறிய செய்தியில் இருந்து வெளிவர முடியாமல் உறைந்து போய் அமர்ந்திருந்தாள் அகானா.
“மேம்..” என உதய் தயங்கி இழுக்க,
“அவருக்குத் தெரியாம எப்படி நடக்கும்? என்னால நம்பவே முடியல..?” என்றாள் அதிர்வு விலகாமலே.
“மேம்.. நீங்களே கெஸ் பண்ணிருக்கலாம். பட் அவர் உங்க அப்பாங்கிறதால, சென்டிமென்டலா யோசிக்கிறீங்க. அதை விட்டு வெளியே வந்து யோசிச்சா, நிச்சயம் உங்களால ஈசியா கெஸ் பண்ண முடியும்..” என்றார் உதய்.
“இது.. ஆகனுக்கு தெரியுமா?”
“நோ.. நோ மேம்.. இது அவரோட யுனிவர்சிடில மட்டும் தான் நடந்திருக்கு. அவரோட ஹாஸ்பிடல்ல கிடையாது. ஆகன் சார் இருக்கிற இடத்துல கண்டிப்பா இதுக்கு வாய்ப்பே இல்ல. இன்கேயுமே ரவி சாருக்குத் தெரியாமதான் செஞ்சிருக்கனும். அவரோட சைன் பேப்பர்ஸ் வச்சி இல்லீகலா பண்ணிருக்காங்க. என்ன நடந்ததுனு ரவி சாருக்குமே இன்னும் முழுசா தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. பட் ஒரு விசயம் நல்லா தெரிஞ்சிருக்கு, இந்த கேஸ்ல அவரை மாட்டிவிட்டுருக்காங்க. அவரோ அந்த சைன் பேப்பர்ஸ் தான் ப்ரூஃப். அந்த ப்ரூஃப் வச்சிதான் அவரை அரெஸ்ட் பண்ணிருக்காங்க..” என்றார் உதய்.
“ஓ..” என்றவள் “லீகலா என்ன பண்ணலாம்?” என்ற அகானாவிடம்,
“நம்ம பக்கமிருந்து லீக்லா மூவ் பண்ண முடியாது மேம். உங்க பதவி ஒரு காரணம் மேம், அன்ட் உங்க மேலையும் பழி வரலாம்.”
“ம்ம் எஸ்.. அன்ட் வேற என்ன பண்ண முடியும்?”
“ஆகன் சார்க்கு தெரிஞ்ச டிடெக்டிவ் ஏஜென்சி ஒன்னு இருக்கு மேம். ஒன் வீக்ல கேசையே முடிச்சிடுவாங்க. அந்தளவுக்கு ப்ரில்லியன்ட். அங்க வேணும்னா பேசி பார்க்கலாம்.”
“ஓ.. ஆனா ஆகனுக்கு எப்படி?”
“அவரோட ஃப்ரண்ட் தான் மேம் அங்க சீப் டிடெக்டர். எனக்கு ரெண்டு கேஸ்ல ஹெல்ப் பண்ணிருக்கார். அப்படி தான் பழக்கம்.”
“ஓ.. ஓக்கே.. ஓக்கே நான் ஆகன்கிட்ட இது பத்தி டிஸ்கஸ் பண்றேன். நீங்க அந்த லாயர் பேக் அடிக்காம பார்த்துக்கோங்க..” என்றவள், பின் நினைவு வந்தவளாக, “அந்த சைல்ட் மேரேஜ் கேஸ் என்னாச்சு?” என்றாள்.
“மேம்.. மாலினி உங்ககிட்ட சொல்லலயா? அந்த பொண்ணு இப்போ ஸ்கூல் ரெகுலரா போறா? அந்த பொண்ணு மட்டுமில்ல, அந்த ஊர்ல இருக்குற எல்லா பொண்ணுங்களுமே உங்களைத்தான் ரோல் மாடலா வச்சிட்டு படிக்கிறாங்க..” என சிரிக்க, அகானாவிற்கும் சிறு புன்னகை வந்தது.
சரியாக அதே நேரம் அவளுக்கு வாட்சபில் ஒரு வீடியோ வர, அதில் கல்யாண மண்டபத்தில் நடந்த காட்சிகள் ஓடிக் கொண்டிருக்க, தாமோதரன் துப்பாக்கியை குறி பார்த்துக் கொண்டிருக்கும் அதே நேரம் அவருக்கு நேர் மேலே இருந்து வேறு ஒருவனும் ரவியை சுடுவதற்காக குறிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்ததுமே அகானாவிற்கு புருவம் சுருங்கியது. அந்த வீடியோ அனுப்பியவனின் எண்ணுக்கு உடனே அழைக்க, அவன் அந்த திருமணத்திற்கு வந்த போட்டோ கிராபர் என்று தெரிந்தது.
“மேம் இப்போதான் உங்க மேரேஜ் விடியோ எடிட் பண்ண ஸ்டார்ட் பண்ணேன். அப்போதான் இந்த சீன் கிடைச்சது. அதுதான் உடனே உங்களுக்கு அனுப்பினேன். உங்களுக்கு இது யூஸ் ஆகும்தானே..” என நிறுத்த,
“எஸ்.. எஸ்.. கண்டிப்பா யூஸ் ஆகும். இனி யாருக்கும் இந்த விடியோ அனுப்பக்கூடாது. ஒரிஜினல் ஃபைலை ஹார்ட் காபி பண்ணி வச்சிடுங்க. நான் கேட்கும் போது கொடுக்கனும், அன்ட் ஒரு வேளை சாட்சி சொல்லக்கூட வர மாதிரி இருக்கலாம்..” என நிறுத்த,
“மேம்.. நான் புள்ளக்குட்டிக்காரன்..” என தயங்க,
“உங்க பாதுகாப்புக்கு நான் கேரண்டி.. அன்ட் இன்னைக்கு இருந்து உங்களுக்கு ஒரு அசிஸ்டென்ட் இருப்பார். அவர் எங்க ஆள். உங்க பாதுகாப்புக்காக. பயப்படாம இருங்க. அவரை மட்டும் எங்கேயும் எக்ஸ்போஸ் பண்ணிடாதீங்க..” என கூறி அவனை சம்மதிக்க வைத்தப் பின்னரே போனை வைத்தாள்.
கேள்வியாக பார்த்த உதயிடம் கூற, “அப்போ லாக்கப்லயும் சாருக்கு பாதுகாப்பு இருக்காது மேம். அதுக்கு என்ன பண்ணலாம்?” என்றான் வேகமாக.
“அங்க அவர் சேஃப்தான். இல்லைனா இவ்ளோ நாள் விட்டு வச்சிருக்கமாட்டாங்க..” என்றபடியே ஆகனுக்கு அழைக்க ஆரம்பித்தாள் அகானா.