அகானா - 63
தனக்கு முன்னே மேசையில் அலறிக் கொண்டிருந்த அலைபேசியை யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான் ஆகன்.
தன் மீதுள்ள காதலாலும், கணவன் என்ற எண்ணத்தாலும் தன் மனைவி அழைக்கவில்லை என்றுதான் அவனுக்குப் புரியுமே.
அதோடு மஞ்சரியுடன் பேசியதை உடனே அவர் மகளிடம் இவ்வளவு அவசரமாக தெரிவித்திருக்க மாட்டார் என்றும் தெரியும்.
வேறு என்ன? வேறு என்ன என்ற யோசனை மருத்துவனின் மண்டையை சூடாக்கியது.
முதல் அழைப்பு முடிந்து மீண்டும் அழைத்தாள். இப்போது ஏன் இப்படி தொடர்ந்து அழைக்கிறாள், அங்கு வேறு எதுவும் பிரச்சினையோ என்று திடீரென ஒரு பயம் வந்து நெஞ்சை அடைத்தது.
அந்த பயம் தோன்றிய அடுத்த நொடி, இரண்டாவது அழைப்பின் கடைசி ரிங்கில் வேகமாக எடுத்து காதில் வைத்து “என்னாச்சு அம்மு?” என்றான் பதட்டமாக.
“ஹான் என்ன..? என்னாச்சு? ஒன்னுமில்ல. நீங்க பிசியா? அப்புறம் பேசவா..?” என்று முதலில் திணறி, பின் தன் ஆளுமைக் குரலுக்கு வந்து விட்டாள் ஆட்சியர் பெண்.
“ஊப்ஸ்..” என பெருமூச்சு விட்டவன் “நீ கண்டியூவா கால் பண்ணவும் பயந்துட்டேன். பிசி தான். ஆனா உனக்கு டைம் ஸ்பென்ட் பண்ண முடியாத அளவுக்கு பிசி இல்ல. என்னாச்சு.?” என்ற மருத்துவனும் நார்மல் மோடுக்கு வந்திருந்தான்.
“ஹோ..” என்ற அகானா “உங்க ப்ரண்ட் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி வச்சிருக்காராமே, அவரை இப்போ மீட் பண்ணனும்.. ஒரு கேஸ்ல அவரோட ஹெல்ப் வேணும் அரேஞ்ச் பண்ண முடியுமா?” என நேரடியாகவே விசயத்துக்கு வந்துவிட்டாள்.
“ஹ்ம்ம் ஓக்கே.. அவன் பேர் விமல். அவன் லோக்கல்லா இருக்கானானு விசாரிச்சுட்டு உனக்கு சொல்றேன்..” என்றதும்,
“ஓக்கே இருந்தா நான் அவரை உடனே மீட் பண்ணனும். ஆஃபிஸ்ல வச்சு பார்க்க முடியாது. வீட்டுலயும் முடியாது அம்மா இருப்பாங்க. வெளியே கண்டிப்பா முடியாது..” என்று சொல்லிக்கொண்டே வந்தவளிடம்,
“நான் விமலை இங்க ஹாஸ்பிடல் வர சொல்றேன். நீ இங்க நம்ம ஹாஸ்பிடல் வந்துடு. நான் அவன்கிட்ட பேசிட்டு உனக்கு மெசேஜ் பண்றேன்..” என்றவன், உடனே விமலுக்கு அழைத்து பேசிவிட்டு, அவன் இருக்கிறான் என்று தெரிந்ததும் உடனே அகானாவிற்கும் கூறிவிட, அடுத்த அரை மணி நேரத்தில் உதயுடன் ஆகனின் முன் அமர்ந்திருந்தாள் ஆட்சியர் பெண்.
உதயுடன் வந்தவளை யோசனையாக பார்த்தாலும், ஒன்றும் கேட்காமல் மூவரையும் வரவேற்று உபசரித்துவிட்டு அமைதியாக அவர்களை பார்த்திருந்தான் மருத்துவன்.
இப்போது வரைக்குமே ஏதோ ஒரு கேஸ், அதற்கு விமலின் உதவி தேவை என்று மட்டும் தான் ஆகன் நினைத்துக் கொண்டிருந்தான்.
“ஸாரி சிஸ்டர்.. இல்ல மேம்..” என அகானாவை எப்படி அழைப்பது என குழம்பிய விமல், தன் நண்பனை உதவிக்கு பார்க்க, அவனோ தன் ஆட்சியர் பெண் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று ஆவலாக அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் அவளோ அதை கண்டு கொண்டதை போல் தெரியவில்லை.
“மிஸ்டர் ரவீந்திரனோட கேஸ் பத்தி தான் பேச வந்திருக்கேன் விமல். இந்த கேஸ்ல நான் ஸ்ட்ரெயிட்டா இன்வால்வ் ஆக முடியாது. இன்ஸ்பெக்டர் உதய் தான் டீல் பண்றார். எங்களுக்கு சில டவுட்ஸ் இருக்கு. அன்ட் அதை வச்சு உதய் மூவ் பண்ணா, அவரோட ஹையர்ஸ் அதை செய்ய விடமாட்டாங்க. உதய்க்கும் ப்ராப்ளம் வரலாம், இல்ல கொடுக்கலாம். சோ ப்ரைவேட்டா தான் மூவ் பண்ணனும். உங்களால முடியுமா?” என மூச்சு விடாமல் பேச,
ரவி பெயரைக் கேட்டதும் ஆகனும் உண்ணிப்பாக அதை கவனிக்க ஆரம்பித்திருந்தான். முழுதாக சொல்லி முடிக்கட்டும் என்று அவளையே பார்த்திருந்தான்.
‘இது நமக்கு மட்டுமே தெரிஞ்சதா இருக்கட்டும், உங்க வினோத் மாமா, உங்க அப்பானு யாருக்கும் சொல்ல வேண்டாம். அன்ட் ஆரிக்கு கூட தெரிய வேண்டாம். அவன் அம்மாக்கிட்ட கண்டிப்பா சொல்லிடுவான். இதெல்லாம் தெரிஞ்சா அம்மா ரொம்ப வருத்தப்படுவாங்க..” என்றாள் ஆகனை நேருக்கு நேர் பார்த்து.
ஆகனுக்கும் இதற்கு உடனே பதில் சொல்ல வாய் வந்ததுதான். ஆனால் அவள் விழியில் தெரிந்த தவிப்பில் அமைதியாகி தலையை மட்டும் ஆட்டினான்.
அதன் பிறகு விமலிடம், தானும் உதயும் டிஸ்கஸ் செய்ததை கூறி, அந்த வீடியோவையும் காட்ட, ஆகனின் முகம் இறுக்கமானது.
“உங்களுக்கு யார் மேலையாவது டவுட் இருக்கா மேடம்..” என்ற விமலும் தொழில் சார்ந்து பேச ஆரம்பித்திருந்தான்.
“எனக்கு டவுட்னா அது இவரோட அத்தை மேல மட்டும் தான். அன்ட் அது தப்பாவும் இருக்கலாம். எனக்கு அவங்களைப் பத்தி முழுசா தெரியாதே..” என்றவளின் பார்வை மருத்துவனிடம் சென்றது.
“அத்தை இதை செஞ்சிருக்க மாட்டாங்க. அவங்களுக்கே தெரியாம வேற யாராவது அவங்களை வச்சு மாமாவை மாட்டி விட்டுருக்கலாம்..” என்றான் மருத்துவன் பெருமூச்சோடு.
இதை அகானா நம்ப வேண்டுமே என்ற கோரிக்கையும் மருத்துவனின் பார்வையில் இருந்தது.
“ஓ.. ஓக்கே சார். பட் எப்படி இவ்ளோ காண்ஃபிடன்டா சொல்றீங்க..” என உதய் கேட்க, அகானாவிடமும் அதே கேள்விதான் இருந்தது.
“மைதிலி அத்தை பணத்துக்கோ, சொத்துக்கோ ஆசைப் படுறவங்க இல்ல. அவங்ககிட்ட இருந்த சொத்து முழுவதையுமே மாமா ஹாஸ்பிடல் கட்டணும்னு சொன்னப்போ தூக்கி கொடுத்தாங்க. அதுக்கு பிறகு அதை விட பல மடங்கு மாமா சம்பாதிச்சிருந்தாலும், அதை ஒரு பொருட்டா கூட அவங்க நினைச்சதில்ல..” என்றவன் தன்னவளின் பார்வையில் இறுக்கம் கூடுவதை உணர்ந்து பேச்சை நிறுத்த,
“அதெல்லாம் ஓக்கே தான் சார். அது முன்னாடி. எப்போ அகானா மேடம் இங்க வந்தாங்களோ, அப்போ இருந்து மைதிலி மேடத்தோட நடவடிக்கை சரியில்லையே, இப்போ செஞ்சிருந்தா?” என உதய் கேட்க, விமலும் நண்பனை பார்த்தான்.
“இல்ல.. வாய்ப்பில்ல உதய். அத்தை இந்த சொசைட்டில ரொம்ப நல்ல பேர் எடுத்து வச்சிருக்காங்க. அந்த பேர் கெட்டு போற மாதிரி அவங்க எப்போதும் நடக்கமாட்டாங்க. அன்ட் அத்தைக்கு எல்லாரும் அவங்களை புகழ்ந்துக்கிட்டே இருக்கனும். அந்த மென்டாலிடி அவங்களுக்கு அதிகமா இருக்கு. சோ அதுக்கு பயந்து இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யவே மாட்டாங்க.” என ஆகன் தீர்க்கமாக கூற, அகானாவுக்கும் அது புரிந்தது.
இல்லையென்றால் மகிழினியின் திருமணத்தில் மிகப்பெரிய பிரச்சினையை கிளப்பியிருப்பார். தங்களது திருமணமும் நடந்திருக்காதே..
“ஹ்ம்ம்.. வாட் நெக்ஸ்ட்..” என அகானா கேட்க,
“மேம் நான் உதய் சார்கிட்ட பேசிட்டு, மத்த டீடைல்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டு நாளைக்கு ஈவ்னிங்க் உங்களுக்கு ரிப்போர்ட் பண்ணிடுறேன். அன்ட் எனக்கு ஒன்னு தோணுது, நீங்க தப்பா எடுத்துக்காதீங்க..” என்றதும், ஆகனின் பார்வை நண்பனை தொட,
“இது ரவி சார்க்கு போட்ட ஸ்கெட்ச் போல எனக்கு தெரியல, மேடம்க்கு போட்ட ஸ்கெட்ச் போலதான் எனக்கு தெரியுது.” என்றதும்,
“என்னடா சொல்ற? அவளை ஏன் மாட்டிவிடனும்..” என ஆகன் அதிர,
“மேடம் இங்க வந்து செஞ்ச புரட்சி அப்படி?” என நண்பனுக்கு பதில் கொடுத்தவன், பின் அகானாவிடம் “நீங்க இந்த கேஸ்ல இன்வால்வ் ஆவிங்கனு தெரிஞ்சே தான் பண்றாங்க. இனி இதுல இருந்து கொஞ்சம் தள்ளியே இருங்க. நான் எல்லாம் ஆகன்கிட்ட சொல்றேன். அவன் உங்களுக்கு சொல்லட்டும். நாம மீட் பண்றதே தெரிய வேண்டாம்..” என்று கூறிவிட்டு உதயிடம் “உதய் உங்க செகண்ட் சிம்ல எனக்கு டீடைல்ஸ் அனுப்புங்க..” என்றதும், உதயும் சரியென்று விட, ஆகனுக்குதான் பெரும் குழப்பம்.
‘இப்போ யாரன்னு நான் யோசிக்க, ஒருத்தன் ரெண்டு பேர் கூட உரண்டை இழுத்து வச்சிருந்தா பரவாயில்ல. ஊர் முழுக்க இழுத்து வச்சிருக்காளே’ என மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தான் மருத்துவன்.
“ஓக்கே மேம் நான் கிளம்பறேன்..” என உதய் செல்ல, விமலும் சென்று விடுவான் மனைவியிடம் பேசலாம் என கணவன் பார்த்துக் கொண்டிருக்க, அவனோ “மேடம்கிட்ட பேசி அனுப்பிட்டு வா மச்சான், உங்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்..” என விமல் இளிக்க, இருவரையும் கூர்மையாக பார்த்த அகானா வெளியில் நடக்க ஆரம்பித்துவிட்டாள்.
“பரதேசி நாயே, என் கையாலதாண்டா உனக்கு சாவு..” என விமலிடம் கத்திவிட்டு, ஆட்சியரின் பின்னே வேகமாக நடந்தான் மருத்துவன்.
“அம்மு… அம்மு நில்லு..” என வேகமாக அவள் கையைப் பிடித்து நிறுத்தியவன், “உதய் கூடவா வந்த, உன் கார் எங்க? கண்ணன் அங்கிள் எங்க?” என மூச்சு வாங்கியபடியே கேட்க,
“கண்ணன் அங்கிள் இன்னைக்கு லீவ்..” என்றவள் அவன் பிடித்திருந்த கையைப் பார்க்க, அவனோ சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டி, அருகில் இருந்த எக்ஸ்ரே ரூமுக்குள் அவளை தள்ளிக்கொண்டு சென்றான்.
“ஹேய் என்ன பண்ற..?” என கணவனின் செய்கையில் அவள் கத்த ஆரம்பிக்கும் போதே மனைவியை இறுக்கமாக, மிக மிக இறுக்கமாக தன்னோடு அனைத்திருந்தான் மருத்துவன்.
அவள் திமிற “அம்மு ப்ளீஸ்..” என அவள் கழுத்தோரம் இதழ் பதித்தபடியே கூற, பெண்ணவளின் இறுகிய மெடல் மெல்ல தளர்ந்தது.
அவனை பதிலுக்கு அனைக்கவில்லையே தவிர, கணவனின் அந்த அனைப்பை தடுக்கவுமில்லை.
நொடிகள் நிமிடங்களான பின்னும் கூட அவன் அனைப்பை விளக்கவில்லை. அனைப்பைத் தாண்டி முன்னேறவுமில்லை.
பெண்ணவளும் கணவனின் அனைப்பில் அப்படியே நின்றாள்.
சில நிமிடங்களில் அனைப்பைத் தளர்த்தியவன், அவள் முகத்தை தன் இரு கைகளிலும் தாங்கி அவள் விழிகளில் தன் பார்வையைத் தாக்கி “ஸாரி..” என்றான் உணர்ந்து.
அவள் விழிகள் கலங்க ஆரம்பிக்க, முகம் கசங்கி அவன் கையிலிருந்து தன் முகத்தைப் பிரிக்க பார்க்க, பிடிவாதமாக அதைத் தடுத்து அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட, கட்டுப்படுத்தி வைத்திருந்த பெண்ணவளின் விழிநீர் வழிய தொடங்கியது.
மனைவியின் விழிநீரைத் துடைத்தவன் மீண்டும் அவள் நெற்றியோடு நெற்றி முட்டிக் கொண்டவன் “ஏன் நம்ம வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு?” என்றான் குரல் உடைந்து.
அதற்கு மேல் அகானாவின் காதல் கொண்ட மனம் அவளது கட்டுப்பாட்டில் இல்லை.
அவனை அனைத்து வெடித்து அழ ஆரம்பித்தாள்.
“அம்மு..” என அதிர்ந்தவன் அவளைத் தன்னோடு இறுக்க, அகானாவும் கணவனின் இடுப்பைக் கட்டிக் கொண்டாள்.
அவளின் அழுகையை நிறுத்த ஆகன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவள் அழட்டும்.. மனதில் இருந்த இறுக்கமும், கோபமும், ஆதங்கமும் குறையும் வரை அழட்டும் என அவள் முதுகை வருடியபடியே தன் அனைப்பின் இறுக்கத்தைக் கூட்டினான் கணவன்.
‘அகானா இப்படியே இறுக்கத்தோட இருக்கிறது நல்லதில்ல ஆகன். அது அவளுக்கு மென்டல் ப்ரெஷர் ஆக வாய்ப்பிருக்கு. அவளோட ஹெல்த்துக்கும் நல்லதில்ல. இப்படியே போனா மன அழுத்தத்தைக் கொடுக்கலாம். அது அகானாவுக்கு இன்னுமே பிரச்சினை ஆகலாம். முதல்ல அவளை அந்த இறுக்கத்துல இருந்து வெளியே கொண்டுவாங்க. அவங்க லைஃப் பத்தியும், உங்க ஃபியூச்சர் பத்தியும் யோசிக்க வைங்க. ரவி அவங்க வாழ்க்கையியல் தேவைப்படாத ஆளுன்னு புரிய வைங்க. அவருக்காக தன்னோட வாழ்க்கையை அழிச்சிக்க வேண்டாம்னு சொல்லுங்க. அது உங்களால மட்டும் தான் முடியும்..’ என சர்ஜரி நேரம் நிர்மல் அகானாவைப் பற்றி ஆகனிடம் கூறியிருந்தார்.
அப்போது ரவியும் கூட அங்குதான் இருந்தார். அவர் நண்பனை கேள்வியாக பார்க்க, “உன் பொண்ணு உன் கூட இல்லைன்னாலும் பரவாயில்லை, உயிரோடாவது இருக்கனும்ல. அப்போ எப்போதும் போல நீ கொஞ்சம் தள்ளியே இரு..” என்று சொல்லிவிட, ரவி அமைதியாக தலையசைத்துக் கேட்டுக் கொண்டார்.
நிர்மல் கூறிச் சென்ற பிறகுதான் ஆகன் தங்களின் திருமணத்தை இத்தனை அவசரமாக நடத்திக் கொண்டான். அதோடு இந்த உண்மையை மஞ்சரியிடமும் கூறிவிட்டான்.
அவருக்கும் முதலில் அதிர்ச்சி தான். தன்னுடைய வாழ்க்கைதான் ஒன்றுமில்லாமல் போய்விட்டது. மகளின் வாழ்க்கையாவது நிம்மதியாக, அவளுக்கு பிடித்த வாழ்க்கையாக இருக்க வேண்டும் எண்டு நினைத்து ஆகன் கேட்டதற்கு ஒத்துக் கொண்டார்.
அனைப்பில் வைத்துக் கொண்டே இதையெல்லாம் யோசித்தவன், தன் மீது பாரம் கூடுவதை உணர்ந்து குனிந்து பார்க்க கண்களை மூடி அவன் மீது மொத்தமாக சாய்ந்திருந்தாள்.
‘அழுது அழுது மயக்கமாகிவிட்டாளோ?’ என பயந்து அவளை செக் செய்ய, உறங்கியிருந்தாள் பெண்.
அதைக் கவனித்ததும் மெல்லிய புன்னகை அவன் இதழில். உடனே இன்டெர்காமில் ரிசப்ஷனுக்கு அழைத்து கதவை திறக்க வைத்து, மனைவியை கைகளில் அள்ளிக்கொண்டு காருக்கு நடந்தான்.
அங்கிருந்த அனைவரும் முதலில் என்னவோ என பதறி, பின் ஆகனின் முகத்தில் இருந்த சிரிப்பில் தங்களும் சிரித்து வழி விட்டிருந்தனர்.
வாட்ஸ்மேன் கார் கதவை திறக்க, முன் சீட்டை படுக்கும் அளவிற்கு சாய்க்க சொல்லி அதில் கிடத்தி, சீட் பெல்டையும் மாட்டிவிட்டு, மலர்ந்த புன்னகையுடன் காரை எடுத்தான் ஆகன்.