அகானா- 64
தன் தோள் வளைவில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவளையே விழி எடுக்காமால் பார்த்துக் கொண்டிருந்தான் மருத்துவன்.
நெஞ்சம் விம்மித் துடிக்க, முகத்தை மூடிக் கிடந்த முடிக் கற்றைகளை ஒதுக்கிவிட்டு குனிந்து பெண்ணவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான் கணவன்.
உறக்கம் கலையவில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் பெண்.
எங்கே எப்படி ஆரம்பித்ததோ? அவர்களின் இல்லறம் இனிதே நடந்து முடிந்திருந்தது.
விழித்து எழுந்து என்ன சொல்வாளோ என்ற பயம் ஒருபக்கம் இருந்தாலும், அவள் உடன்படாமல் இந்த இனிமை சாத்தியம் இல்லை என்று அவனுக்கும் புரியும். அவளுக்கும் புரியும். அதனால் பெரிதாக எந்த ஆர்ப்பாட்டமும் செய்யமாட்டாள் என்று நம்பினான் மருத்துவன்.
ஆனால் இதற்காக தனக்குள்ளே குற்றவுணர்ச்சியில் நொருங்கிப் போவாளோ என்றும் பயந்தான்.
தங்களின் உறவை கசப்பாக ஏற்று, அதை குற்றவுணர்ச்சியாக நினைத்தால் இந்த வாழ்க்கையும், அவர்களின் இனிமையான இந்த கூடலும் அர்த்தமற்றதாகி போகுமே என்றும் பயந்தான்.
அந்த எண்ணம் தோன்றியதுமே அவனால் அவளோடு அந்தப் படுக்கையில் படுத்திருக்க முடியவில்லை.
மெல்ல அவளைத் தன்னிடமிருந்து பிரித்து, குளியலறைச் சென்றான். குளித்து வெளியில் வர, அவன் அறைக் கதவு தட்டப்பட்டது.
‘அத்தையோ?’ என்று எண்ணியவன் கதவைத் திறக்க, மகிழினி தான் காஃபி டிரேயுடன் நின்று கொண்டிருந்தாள்.
“அண்ணிக்கு லேட் ஆச்சுன்னு அத்தை சொல்லிட்டே இருந்தாங்க. இன்னும் எழுந்துக்கலயா?” என்றாள் வருத்தமாக.
நேற்று மாலையில் இருந்து உறக்கமும், விழிப்புமாக இருந்தால் எல்லாரும் பயப்படத்தானே செய்வார்கள்.
“மகி.. உன் அண்ணிக்கு ஒன்னுமில்ல. நீ இவ்ளோ பயந்தா அத்தையும் தான் பயப்படுவாங்க. அத்தைக்கு அம்முவை பத்தி எல்லாம் சொல்லிருக்கேன். பயப்பட வேண்டாம்னு சொல்லி, நீதான் அவங்களை சமாதானம் செய்யனும். நீ போ.. கொஞ்ச நேரத்துல ரெடியாகி வரோம்..” என தங்கைக்கு சொல்லி அனுப்பினான்.
அண்ணனின் வார்த்தையை ஏற்றும், ஏற்காமலும் மெதுவாக திரும்பி நடந்தாள் மகிழினி.
காஃபி டிரேயுடன் கதவை அடைத்தவன் ‘ஊப்ஸ்’ என ஒரு பெருமூச்சுவிட்டு தன்னை சமாதானம் செய்து கொண்டான்.
பின் காஃபியை ஊற்றி அங்கிருந்த சோபாவில் அமர்ந்து மனைவியைப் பார்த்தபடியே மனைவியையும், காஃபியையும் துளித்துளியாய் அருந்த ஆரம்பித்தான்.
சிந்தனைகள் நேற்றைய இரவை மீண்டும் ஒளிபரப்ப தயாரானது.
இப்படியே இவர்கள் யாரும் இல்லாத ஒரு இடத்திற்கு, எந்த பிரச்சினையும் அவளை அண்டாத ஒரு இடத்திற்கு மனைவியோடு போய் விட வேண்டும் என்ற வெறிதான் கணவனுக்கு. ஆனால் நிதர்சனம் அதை செயல்படுத்த விட வேண்டுமே.
அதனால் நேற்று மருத்துவமனையில் இருந்து மனைவியை, நேராக வீட்டிற்கே அழைத்து வந்திருந்தான்.
காரை நிறுத்திவிட்டு, அவளை எழுப்பி எழுப்பி பார்த்து முடியாமல் போக, மனைவியை கைகளில் அள்ளிக்கொண்டு உள்ளே வர, ஹாலில் இருந்த மஞ்சரியும், மகிழினியும் பயந்தே போயினர்.
“என்ன என்ன கண்ணா?” என மஞ்சரி பதறிக் கொண்டு மகளிடம் வர, மகிழினியின் முகத்திலும் பதட்டம்.
“அத்தை பயப்பட ஒன்னுமில்ல. இன்னைக்கு கண்ணன் அங்கிள் லீவ். நான்தான் பிக்கப் பண்ணேன். வர வரவே தூங்கிட்டா… டயர்ட் போல, நல்ல தூக்கம். தூங்கி எழுந்தா சரியாகிடுவா?” என மகிக்கு தெரியாமல், மஞ்சரிக்கு மட்டும் புரியும்படி அர்த்தமாக கூற, அவரும் தலையசைத்து மகளின் அறைக்கு அவர்களுக்கு முன் சென்று படுக்கையை சரி செய்து கொடுத்தார்.
“அவளே எழுந்துக்கட்டும் அத்த.. யாரும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். ஆஃபிஸ் கால் வந்தா மட்டும் நீங்க எடுத்து பேசுங்க..” என்றவன், மீண்டும் மருத்துவமனைக்கு சென்றிருந்தான்.
இவன் வரும் வரைக்குமே விமல் காத்திருக்க, ‘ஏதோ இருக்கிறது?’ என்று புரிந்து கொண்டவன், எதிரில் அமர்ந்து யோசனையாக பார்த்தான்.
“சிஸ்டர் எங்க? வீட்டுக்கு போயாச்சா?” என்றான் விமல்.
“அவளை விட்டுட்டுத்தான் வரேன். உனக்கு என்னாச்சு?”
“எனக்கு என்ன மச்சான்? நான் ஓக்கே.. இந்த கேள்வியை நான் திருப்பி உன்கிட்ட தான் கேட்கனும்?”
“ம்ச் என்ன விமல்?”
“ஆகன்… நான் ஆல்ரெடி ரவி சார் கேஸ் பத்தி உங்கிட்ட சொல்லிட்டேன்ல. நீ ஏன் சிஸ்டர்கிட்ட இதை சொல்லல. சொல்லி வார்ன் பண்ணிருந்தா, இப்போ தேவையில்லாத சிக்கல்ல போய் மாட்டிருக்க மாட்டாங்க இல்ல. ஸ்யுரா இது சிஸ்டரை மாட்டி விடுற ப்ளான்தான்.”
“ம்ச் நான் சொன்னா, சொன்னதுமே சரிங்க மாமான்னு கேட்டுட்டு தான் மறுவேளை பார்ப்பாளா? ஏன்டா நீ வேற? நான் சொன்னதுக்காகவே அதை வீம்புக்குன்னு செய்வா? அத்தைக்கு மட்டும் சொல்லிருக்கேன். அவங்க பார்த்துப்பாங்க. நானும் வாட்ச் பண்ணிட்டே தான் இருப்பேன்..”
“கிழிச்ச.. டேய் உங்க ஈகோவால எவ்ளோ பெரிய பிரச்சினைல மாட்டிருக்கீங்க தெரியுமா?” என பல்லைக் கடித்தான் விமல்.
ஆகனுக்குமே இன்று காலை தான் தெரிந்தது. புலி வாலை பிடித்து விட்டார்கள் என்று. எப்படி இதிலிருந்து அகானாவை வெளியேக் கொண்டு வருவது என்று யோசித்துக் கொண்டே இருக்கிறான்.
ரவியோ அனைத்து பழியையும் தன் மேல் போட்டுக்கொண்டு சென்று சிறையில் அமர்ந்துகொண்டார்.
இப்போது இருவரையும் எந்த பிரச்சினையும் இல்லாமல் இதிலிருந்து மீட்க வேண்டிய பொறுப்பு அவனிடம்.
“ம்ம்ம்..” என்று மூச்சை இழுத்து விட்டவன் “சரி சொல்லு.. நான் கேட்ட டீடைல்ஸ் எல்லாம் ரெடியா?” என்றான் மருத்துவன்.
“பக்காவா இருக்கு.. ஆனா இப்போ நாம இதை லீக் பண்ண முடியாது. உங்க வினோத் மாமா மூலமா லீகலா மூவ் பண்ணு. அன்ட் சிஸ்டரையும் கொஞ்ச நாள் இதுல இன்வால்வ் ஆகாம இருக்க சொல்லு. நான் எப்போன்னு டைம் பார்த்து சொல்றேன். அந்த எவிடென்ஸை லீக் பண்ணிடலாம்.” என்றான் விமலும்.
“மாமாவுக்கு உள்ள எந்த பிரச்சினையும் வந்துடக்கூடாது.”
“அதெல்லாம் பார்த்துக்கலாம். ஜெயிலர் நம்ம ஆளுதான். சின்ன பிரச்சினை கூட உங்க மாமாவுக்கு வராது..” என்றவன், “மச்சான் நான் மறுபடியும் சொல்றேன். சிஸ்டரை கவனமா பார்த்துக்கோ..” என்றுவிட்டு கிளம்பினான்.
விமல் சென்ற பிறகு, ஆகனுக்கும் அங்கு இருக்க முடியவில்லை. நேரத்தை பார்த்தான் இரவு எட்டை நெருங்கியிருந்தது. நல்லவேலை அன்றைய அப்பாயின்மென்ட்ஸ் அனைத்தையும் முதல்நாளே மாற்றியிருந்தான். ஆரியன் வர பத்து மணி ஆகிவிடும். அதனால் அவனிடம் முன்னரே கிளம்புவதாக கூறிவிட்டு உடனே வீட்டிற்கு சென்றான்..
ஆகன் உள்ளே நுழையும் நேரம் தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் அகானா.
அவனைப் பார்த்ததுமே புன்னகைக்கவா வேண்டாமா? என்ற யோசனையிலேயே விழிகளை திருப்பாமல் இருந்தாள்.
அதை உணர்ந்தவன், மனைவியிடம் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு தங்களின் அறைக்குச் சென்றான்.
ஆகனின் செயலை எந்தவித சலனமும் இல்லாமல் கவனித்தாள் அகானா.
ஆகன் மகளின் அறைக்குள் நுழைந்ததுமே, “மகி தம்பி மாத்த ட்ரெஸ் கொண்டு வரல.. ஆரியோடது எடுத்துட்டு வந்து கொடு..” என்றார் மஞ்சரி.
“சரிங்க த்த..” என்ற மகியும், அவர் சொன்னதை செய்ய, ஆகனும் ‘எதுக்கு? வேண்டாம்?’ என எந்த பாவ்லாவும் காட்டாமல் உடை மாற்றி வந்து மனைவியின் அருகில் அமர்ந்தான்.
ஆகனுக்கு சப்பாத்தியை வைத்துக் கொண்டே “தம்பி.. நித்யா போன் பண்ணிருந்துச்சு. உங்க ரெண்டு பேரையும் வீட்டுக்கு வர சொல்லுச்சு. நாளைக்கு நீங்களும் அம்முவும் போயிட்டு வந்துடுங்க. நீங்க போயிட்டு வந்த பிறகுதான் ஆரியும் மகியும் போக முடியும். இதுதான் முறை..” என மகள் மறுக்க முடியாத அளவுக்கு அழுத்தமாக மஞ்சரி கூற,
“நாளைக்கா அத்தை. எனக்கு ஒரு சர்ஜரி இருக்கு.. நைட் போயிட்டு வரோம்..” என்றதற்கும் சரி,
“அப்போ நைட் அங்க தங்கிட்டு, அடுத்தநாள் காலையில வாங்க..” என்றதற்கும் சரி அகனாவிடம் எந்த மறுப்பும் இல்லை.
“ம்மா நான் படுக்கிறேன். ரொம்ப டயர்டா இருக்கு..” என அறைக்கு செல்ல, மாமியார் மருமகன் இருவரின் பார்வையும் நொடி நேரம் சந்தித்து பின் விலகியது.
“பார்த்துக்கலாம் த்த..” என மஞ்சரியை சமாதானம் செய்ய, அவர்களுக்கு பாலோடு வந்தாள் மகி.
அதை வாங்கிக் கொண்டு அறைக்குச் சென்றவனின் முகம் குறும்பில் குளித்திருந்தது.
‘ஓ மை காட்.. என் வாழ்க்கைல எல்லாம் தலைகீழா நடக்குது’ என நினைத்து சிரித்தபடியே உள்ளே வர, மீண்டும் உறக்கத்தின் பிடியில் இருந்தாள் அவனது அல்லி ராணி.
“ஆனாலும் உனக்கு பேராசைடா ஆகன். இன்னைக்குத்தான் உன் பக்கம் ஒரு படி எடுத்து வச்சா, அதுக்குள்ள எல்லாம் நடக்கனும்னு நினைக்கலாமா? அதுக்கெல்லாம் கொஞ்ச நாள் ஆகும்.. வெய்ட் பண்ணு.. மகாராணி எப்போ மனசு வைக்கிறாளோ அப்போதான் எல்லாமும் நடக்கும்…” என முணுமுணுத்தவாறே அவளுக்கு அடுத்தப் பக்கம் சென்று படுத்தான்.
“நீ இங்க வந்தது உங்க வீட்டுக்கு தெரியுமா?” என்ற மனைவியின் குரலில் சட்டென அவள் பக்கம் திரும்பியவன், அவளையே விழியெடுக்காமல் பார்த்தான்.
‘என்ன?’ என புருவம் உயர்த்தியவளிடம்,
“சாப்பிட்டதுமே வந்து இப்படி படுக்கக்கூடாதுனு உனக்கு தெரியாதா?” என்றான் கண்டிப்பான மருத்துவனாக.
‘நீ மட்டும்..’ என நக்கலாக ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பி கொள்ள, அது அவனை உசுப்பியிருக்க வேண்டும்.
அவளை பின் பக்கமாய் அனைத்து கழுத்தோரம் தன் நாடியை பதித்தவன் “இந்த வீட்டுக்கு மருமகனா வாக்கப்பட்டு வந்துட்டேன். இனி எல்லாம் இங்கதான். நீ போக சொன்னாலும் போகமாட்டேன்.. என்னை கண் கலங்காம பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு..” என அவள் பின்னங்கழுத்தில் உதடசைத்து பேச, அவன் பேசியது எங்கே அவளுக்கு புரிந்தது.
கணவனின் மூச்சுக்காற்றும், அவன் உதட்டசைவும் அவள் மேனியில் கூச்சத்தையும், கிறக்கத்தையும் உண்டு பண்ண, ‘ஸ்ஸ்ஸ்..’ என உதடு கடித்து கண்கள் மூடிக் கொண்டாள்.
“ம்ம்ம்.. இங்க என்ன ஸ்மெல். இது என்னை என்னமோ பண்ணுதுடி..” என அந்த வாசனையை ஆழ்ந்து மூச்சிழுக்க, பெண்ணவளுக்கு தேகம் மொத்தமும் நடுங்கத் தொடங்கியது.
அதில் அவள் உடலை குறுக்கியபடியே “என்ன.. என்ன பண்ற?” என திணற,
“உன்னை ஸ்மெல் பண்றேன் அம்மு… இது டிஃபரன்ட் ஃப்ளேவரா இருக்கு..” என்றான் மீண்டும் ஆழ்ந்து மூச்செடுத்து..
இப்போது அவனின் ஒரு கரமோ அவள் இடையை வளைத்திருக்க, மற்றொரு கரமோ கழுத்தடிக்கு சென்று, அங்கு மென்மையாக வருட ஆரம்பித்திருந்தது.
கணவனின் செய்கையில் மொத்தமாய் உருகிப் போனவள், அதன் தாக்கம் தாள முடியாமல் சட்டென முன்பக்கம் திரும்ப, அது இன்னமும் வசதியாகிப் போனது அவனுக்கு.
அவளை மொத்தமாக வளைத்து, தன் முகம் பார்க்கும் படி வைத்தவன் அந்த முகத்தையே விழியசைக்காமல் பார்த்தான்.
அகானாவும் சலிக்காமல் அந்த பார்வையை எதிர்கொள்ள, “இந்த அச்சம், மடம், நாணம் எல்லாம் உனக்கு வருமா வராதா?” என கிண்டலடித்தபடியே இடையை அழுத்தி வருட,
“ம்ச்..” என அவளின் வழக்கமான வீம்புடன் அவனிடமிருந்து திமிற,
“மூச்..” என சற்று சத்தமாக மிரட்டி அவளை அணைத்தான் ஆகன்.
அதில் அகானாவிற்கு இன்னும் வீம்பு தான் கூடியது. நீ இடுப்பை தேய்ச்சாலும் பரவாயில்லை, நான் வாய் திறக்க மாட்டேன்.. என்று அவளின் வீம்பு கூட, ஆகனின் பிடிவாதமும் கூடியது.
“அப்போ நான் என்ன செஞ்சாலும் உனக்கு ஓக்கே, அப்படித்தான?” என அவளிடமிருந்து பிரிந்தவன், கண்கள் அவளை தீர்க்கமாக பார்க்க, கைகள் சாவகாசமாக அவளின் மேல் சட்டையை விலக்கி வெற்றிடையில் மேலும் அழுத்தமாக வருடியது.
அகான அதிர்ந்து பார்க்க, என்ன..? என்று புருவத்தை தூக்கியவன் கைகள் அப்படியே அவளின் முதுகை அணைத்து தன்னோடு ஒட்ட வைத்து முதுகை வருட, அவளின் கழுத்தோர முடிகள் சிலிர்த்து நின்றது.
பார்த்த கணவனின் உதடுகள் தன்னை போல அதில் உரச, அகானாவிற்குள் நடுக்கம் கூடத் தொடங்கியது.
அவளின் நடுக்கத்தில் என்னமோ ஆகனுக்கு ஒருவித சுவாரசியம் பிறக்க, மிகவும் உரிமையுடன் அவளின் முதுகில் இடுப்பில் விரல்களால் இதமாக வருடி அவளை கூச செய்தான்.
"ஸ்ஸ்ஸ்.." பெண்ணவள் சிலிர்க்க, ஆகன் அவளை தன்னிடம் இருந்து விலக்கி முகம் பார்த்தான்.
கண் மூடி, கன்னங்கள் சிவக்க, உடல் நடுங்க நின்றவளை பார்த்தவனுக்கு பிடிவாதம் எல்லாம் மறைந்து போக, கணவன் என்ற அவதாரம் தானாக முன் வந்து நின்று பேயாட்டம் போட்டது.
அந்த நேரம் இருவருக்குள்ளும் இருந்த கோபம், அவரவர் வீம்பு, பிடிவாதத்தை மறந்து தங்களை மறந்து மற்றவரின் நெருக்கத்தில் மயங்கி நின்றனர்.
"அம்மு..” என கிசுகிசுத்த ஆகன் அவளின் சட்டை பட்டனில் கை வைக்க, அகானாவின் உதடுகள் மலர்ந்து "மாமா.." என்ற சொல் முத்தை உதிர்த்தது.
அதுவே ஆகனுக்கு போதுமானதாக இருக்க, அவனின் உணர்வுகள் பூகம்ப பூக்களாய் வெடித்து சிதற ஆரம்பித்தது.
“அம்மு.. அம்மு…” என அவளின் உதட்டை தன் உதடால் உரசியவன் “எத்தனை வருஷம் ஆச்சுடி அம்மு, இப்போதான் நான் உன் மாமான்னு உனக்கு தெரிஞ்சதாடி.." என அவளை தன்னுள் புதைத்து அவளின் மறுப்பை மீறி தேடலை தொடங்கினான்.
இடையிடையே கேட்கும், "மாமா.." என்ற அவளின் சிணுங்கல்களுக்கு, "உன் மாமாத்தாண்டி அம்மு" என்று கொஞ்சி மிஞ்சினான்.
"மாமா.." என்ற அவளின் பயத்திற்கு, "நான்தானேடி அம்மு.." என்று உரிமை கொண்டாடினான்.
"மாமா.." என்ற அவளின் மயக்கத்திற்கு, "அம்மு.." என்று தானும் மயங்கி கிறங்கினான்.
ஓய்ந்த அவளின் "மாமா.." என்ற சோர்விற்கு, "என்ன அம்மு? மாமா மறுபடியும் வேணுமா..?" என்று திரும்பவும் அவளை மாமா என்று சிணுங்க வைத்து கொஞ்சி மிஞ்சினான்.
இப்படியே அவளின் மாமா என்ற ஒற்றை வார்த்தை தான் இரவு முழுதும் அவளை கொண்டாட வைத்து, திண்டாட வைத்து, ஓய்ந்து போக வைத்தது.
இறுதியில் "அம்மு.." என்று மனைவியின் முகம் பார்க்க, அவள் எப்போதும் போல் அவனை அமைதியாக பார்த்து, சில நிமிடங்களில் உறங்கியும் போனாள்.
ஆகனே "இவ என்ன மேக்னே தெரியயே." என குழம்பி போனான்.
மனைவியிடம் மெல்ல அசைவுகள் தெரிய, ஆகனும் தன் நினைவுகளில் இருந்து மீண்டு அவள் என்ன செய்வாளோ? இதை எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று அரண்டு போய் பார்த்திருந்தான்.