• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Mugil nila

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
4
d7b9cb72a8fa049903e5dfe761e20074.jpg



காலை சில்லென காற்று அவன் தேகம் தீண்ட கண்விழிகிறான்....
ஆனால் ஆசை மனையாள் அசையாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை உணர்ந்து,

தென்றல் அவளை தீண்ட நினைக்கும் முன்னே அவள் கன்னத்தை தன் இதழ் கொண்டு இதமாய் வருடி செல்கிறான் ஜோக்வித்...
பின் மெல்ல படுக்கையை விட்டு இறங்கி தன் காலை கடன் முடித்துக்கொண்டு சமையல் அறையை நோக்கி சென்று அடுப்பை பற்ற வைத்து கொடிக்கு பிடித்த காபியை போட்டபடி படுக்கை அறைக்கு சென்று அவளை மெல்ல கொடியென்று அழைக்கிறான் ஜோக்வித்....
ஆனால் அவளோ அசைந்தப்பாடு இல்லை...
காபி ஆருவதை உணர்ந்து கொடி கொடி உரக்க அழைக்க நினைக்கையில், நேற்று அவளை திட்டியதற்கு தன்னை வம்புயிழுதத்ததை நினைத்து தன் மீசையை நீவியபடி தனக்குள் சிரித்துக்கொண்டே செல்லக்குட்டி காபி குடிச்சிட்டு தூங்குங்க என்றான்...

அவளோ உடலை அசைத்து ஒய்யாரமாக மீண்டும் உறங்க முயன்ற போது, எரும மாடு எத்திரி டி என்று ஜோக்வித் உரக்க கத்த கொடியோ என்னடா என்ற பாவனையில் ஒற்றை கண்ணை திறந்து பார்த்து சிறிதும் சலனமின்றி இப்ப எதுக்கு டா இப்படி கத்துற எரும மாடு...
சன்டே கூட தூங்க விட மாட்டியா என்னை என்று சொன்னபடி மேட்டிட்ட வயிற்றோடு மெல்ல எழுந்து அமர்ந்து கொண்டாள் கொடி…
இல்ல செல்லம் காபி ஆருது பாரு உனக்குத்தான் சூடா இருந்தா தானே பிடிக்கும் அதுதான்மா என்று ஜோக்வித் கொஞ்ச.... கொடியோ அவனை பார்த்து கண்ணடித்த படி மிடர் மிடராக அவள் இதழுக்கு வலிக்காத படி காபியை பருகி முடித்தாள்….

மாமா இங்கே வா…

எதுக்கு டி…

ஏ எதுக்குன்னு சொன்னாதான் வருவியா….

இல்லடி செல்லம்…

பசிக்குது டா…

உனக்கு என்ன வேணும் சொல்லுடி மாமா குக் பண்ணித்தரேன் …
நூடுல்ஸ் வேணும் குக் பன்றய டா…

5 மினிட்ஸ் வெய்ட் பண்ணுடி குட்டிமா….

ம் என்று தலையாட்டி விட்டு குளியலறைக்கு சென்று குளித்து வந்தாள் அதற்குள் ஜோக்வித் சமையலை முடித்து, அவன் அறைக்குள் செல்லுகையில்
கொடி தன் தலையை துவட்டி கொண்டு இருந்தாள் அவன் வருவதை கூட அறியாமல்.....

அவனோ அவளை கண்டு முணுமுணுத்து கொண்டே அவளை கடந்து சென்று குளித்து வந்தான்…

இருவரும் உண்டு முடித்து அமர்கையில் காலை 9.30 தாண்டி இருந்தது.....

மீண்டும் அவள் உடல் சோர்வை எண்ணி கொண்டு அவர்களின் அறைக்கு அவளை அழைத்து சென்று அவளின் வீங்கிய பாதங்களை தன் முரட்டு கைக்கொண்டு மிருத்தவாக பிடித்துவிட்டு கொண்டு இருக்கையில் சிறு நியாபகம் வந்தவளாய்,
அவன் மார்பில் தலைசைத்தபடி மாமா மாமா…
ம் என்ன டி குட்டிமா...

நா குளிச்சுட்டு வரும் போது வாய்க்குள்ள என்னமோ சொல்லி சிரிச்சியே எதுக்கு…?
ஒன்னுமில்லையே செல்லம்…

பொய் சொல்லாம சொல்லுடா மரியாதையா…

நான் உன் புருசன்டி செல்லம் நா எதுக்கு உன்கிட்ட பொய் சொல்லணும் …

அப்போ உண்மைய சொல்லுடா…

அது வந்து நா சொல்லுவேன் செல்லம் ஆனா நீ கோவப்படக்கூடாது சரியாடி குட்டிமா…

ம் சொல்லு…

இல்ல கல்யாணத்துக்கு முன்னாடி, எங்க அம்மா பொண்ணு பேரு பூங்கொடி...
பெருக்கேத்த மாதிரி கொடிபோல இருப்பானு சொல்லி சொல்லியே கட்டி வெச்சாங்க ஆனா பாரு நமக்கு கல்யாணம் ஆகி எட்டு மாசம் ஆகுது நானும் கல்யாண நாலுள இருந்து பாக்குறேன் எங்க அம்மா சொன்ன மாதிரி நீ பூங்கோடி போல இருக்கியானு உன் இடுப்ப என்று சொல்லி முடிக்க கூட இல்லை ஜோக்வித்…

மார்பின் தலை சாய்த்து இருந்த கொடி அவனை முறைத்து பார்த்து ஓ அப்படியா ஆமாடா நா கொடி மாதிரி இல்ல பூசணிக்காய் மாதிரி தான் இருக்கேன் சோ உனக்கு என்னை பிடிக்கல அப்படித்தானே என்று சொல்லிகொண்டே ஜோக்வித் மார்பில் இருந்து தலையை எடுத்துக்கொண்டாள் பூங்கோடி…

நா சும்மா சொன்னேன் டி…

மனசுல இருக்கிறது தான்டா வாயில வரும் என்கிட்ட பேசாத போ...

அடிப்பெண்ணே கொடியிடை
வேண்டுமென கேட்டேன்
திருமணத்திற்கு முன்….

பூங்கோடி என்ற பெயரில்
என் வாழ்வில் வருவாயென அறியாமல்…

பொன்னகைகள் வேண்டாம் என்றேன்
உன் புன்னகையை கண்டபின்…

பூக்களின் மீது சிறு வன்மம் கொண்டேன்
என் பூமகளின் தளிர் மயிற்யிழையில்
என்னை அனு அனுவாய் வசியம் செய்வதைஎண்ணி…

உன் கைக்கு பேரழகு சேர்க்கும்
உன் கண்ணாடி பொன்வளவியில் மீதோ
சிறு அச்சம் கொண்டேன் …

நம் ஊடலோ அல்ல கூடலோ
உன்னை அள்ளி அணைக்கும்
போதெல்லாம் எங்கே என்மீது கோவம் கொண்டு உன் கையை வளவிகள் காயம் செய்யுமோ என்று…

மெல்லிடை பெண் மனையாளை
வேண்டும் என்ற எண்ணத்தை எல்லாம்
மெல்ல மெல்ல கொன்றேன் …
இப்பெண் பூ கழுத்தில்
என் பொன்தாலி கயிறு ஏறும் வரை…
அவளிடம் கவிதை சொல்லிக்கொண்டு
இருந்தான்.....

இருப்பினும் கொடி அவனை நம்பாமல் தன் மணிவயற்றை தடவிய படி அவனை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டு இருந்தாள் …

இங்க வா என்று வெட்கத்தோடு அழைத்தாள்...

ஆனால் ஜோக்வித்தோ கோவமாக அழைக்கிறாள் என்று நினைத்து மீண்டும் அவளை அவன் மார்பில் சாய்க்கும் முன் அவள் முந்தி கொண்டு அவன் அவளுக்காய் படித்த கவிதையை இடைவிடாது மீண்டும் மீண்டும் மௌனமாய் அவன் இதழ்களில் படித்தால் அவனோ தன் சிசுவை காக்கும் அவள் மணிவயற்றை தன் கையால் அணைத்தபடி அவள் தன் இதழில் அவள் படிக்கும் கவிதையை முற்றுபெறாமல் மீண்டும் மீண்டும் ஜோக்வித் கொடிக்கு அழகாய் படிக்க கற்று கொடுத்துக்கொண்டு இருக்கிறான்…

மதியம் அவளுக்கு பசிக்கும் என்ன சமைப்பது என்று மறந்து….😘😘😘
 
Top