• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஆயிழை - 2

MK20

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
90
29
18
Tamil nadu
ஆயிழை - 2 🍬

“இப்ப என்னென்ன கேஸஸ் இருக்கு சிஸ்டர்” தலையில் போட்டிருந்த கொண்டையை மறைக்கும் வலை அமைப்பிலானப் பொருளைப் போட்டபடி வந்து நின்றாள் எஸ்தர்.

“இப்போதைக்கு மதியம் ஸ்ட்ரோக் கேஸ் இரண்டு வந்திருக்கு க்கா. tPA போட்ருக்கேன். ஸ்டில் வீட்டில் இருந்து யாரும் வரலை. டாக்டர் பேசிக் ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க க்கா. இன்டியூபேட் பண்ணியிருக்கு. இப்ப வைட்டல்ஸ் ஸ்டேபிள்.

இன்னொரு கேஸ் டயாலிசிஸ் முடிஞ்சதுக்குப் பிறகு லோ சுகர் லெவல்னு நமக்கு ஷிப்ட் பண்ணியிருக்காங்க. நைட் செக் பண்ணிட்டு ஸ்டேபிள் ஆகலனா ஐசியூக்கு மாத்துறதுபோல ப்ளான் சொல்லியிருக்காங்க க்கா. இதுதான் இப்போதைக்கு” என்று கூறி முடித்தாள் சக செவிலியர் மிஸ்பா.

அவர்கள் நோயாளிகளின் தற்போதைய நிலையைக் குறித்து விளக்கிக் கொண்டிருக்க, ஒரு பெண்மணி குழந்தையை அழைத்து வந்தார்.

“பிள்ளைக்கு என்னம்மா ஆச்சு” என்று கேட்டபடி வந்தாள் மிஸ்பா.

“சிஸ்டர் நீங்க போங்க. நான் டீல் பண்ணுறேன்” என்றவள், அவர்களிடம் “சொல்லுமா பிள்ளைக்கு என்ன ஆச்சு” என அழைத்து வந்தக் குழந்தையைக் குறித்து வினவினாள்.

“ பிள்ளைக்கு மூணு நாளா ஜொரம். ஜொரம் கூட 108 இருக்கு… “ என்று பிள்ளையை அழைத்து வந்தவர் கூற, எஸ்தரோ “ நீங்க எதுல வந்தீங்கன்னு நான் கேட்கலமா பிள்ளைக்கு என்னாச்சுனு தான் கேட்டேன்” என்றாள். அதோடு பிள்ளையை ஆராய ஆங்காங்கே வீக்கங்கள் தென்பட்டது. கூடவே பிள்ளை பேச்சு மூச்சின்றி வித்தியாசமாகக் காணப்பட்டாள்.

பிள்ளையை அழைத்து வந்த அந்த நபரை சந்தேகமாகப் பார்த்தவள், “ வேற ஏதும் பிரச்சினை இருக்காமா பிள்ளைக்கு. பிள்ளை ஏன் சோர்வா பேச்சு மூச்சு இல்லாம இருக்குறா…” என்றவள், வலது புறம் திரும்பி, “ யாழினி சிஸ்டர் கொஞ்சம் இந்தப் பிள்ளையை அசெஸ் பண்ணி டாக்டரைக் கூப்பிட்டு டிரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணுங்களேன்” என்றாள். அதோடு கூட அழைப்பு மணியை அழுத்த, வெளியே காவலுக்கு நின்ற இரு காவலர்கள் உள்ளே நுழைந்தனர்.

அடுத்த ஓரிரு நிமிடங்களில் உள்ளே நுழைந்த காவலர்கள்,
“ என்னமா பிரச்சினை” என்று விசாரிக்க,

“ இல்ல சார் ஃபீவர்னு வந்தாங்க; ஃபீவர் கூட 108 இருக்கிறதா அவங்க சொல்றாங்க. பிள்ளைக்கு பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கு” என்றிட,

“இன்னுமா அந்தப் பிள்ளை பாடைல ஏறல” என்று நக்கலாக வினவினார் அந்த காவலர்.

அதற்கு அவளோ, “ அவங்க உருட்டுறாங்க னு நல்லாவே தெரியுது. ஆனா நக்கல் செய்யணும்னு எந்த அவசியமும் இல்லை. நக்கல் பண்ண கவர்மென்ட் ல நமக்கு சம்பளம் தரலை. அந்தப் பிள்ளைக்கு என்ன ஏதுனு விசாரிங்க” என்று அழுத்தமாகக் கூறினாள். பின்னர் அவளே தொடர்ந்து,
“பார்க்க மெடிக்கோ லீகல் இஷ்ஷியூ போலத் தெரியுது. அதான் பெல் ப்ரெஸ் பண்ணினேன்” என்றவள் , மேற்கொண்டு மருத்துவத் தாள்களை எடுக்க, “உங்க நேம் சிஸ்டர் “ என்ற காவலரின் கேள்விக்கு “எஸ்தர் “ என்ற பதிலைத் தந்தவள், அடுத்த நோயாளிகளைக் கவனிக்கலானாள்.

“சிஸ்டர் நீங்க கிளம்புங்க ‌… நோட்ஸ் நானே பாத்துக்குறேன். சேஃபா போங்க” என்றவள், தன் பணிகளை நோக்க,
“ எப்ப தான் என்ன தங்கச்சினு கூப்டுவீங்களோ” என்று கூறி முகம் சுருக்க, புன்னகைத்தவள், ‘உன்ன நானு தங்கச்சினு கூப்பிட்டா என் தம்புடு உசுரை விட்டுர மாட்டான்’ என்று மனதில் நினைத்துக் கொண்டவள், “அதுலாம் நடக்காது ராசாத்தி. நீ கிளம்பு” என்று கூறிச் சிரித்தவள் மேற்கொண்டு தன் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.
“***
மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த மிஸ்பா வண்டிகளை நிறுத்தும் இடத்தின் வெளியே நின்றிருந்த மணிமாறனைக் கண்டவள் 'அட இந்த கிறுக்குப்பய இங்க என்ன பண்ணுறான்.. அடியேய் மிஸ்பா இப்படியே மிஸ் ஆகிடுடி' என்று எண்ணிப்படி வந்த வழியே உள்ளே செல்ல திரும்ப, சரியாக மணிமாறன் கண்ணில் பட்டு தொலைந்திருந்தாள்.

"அடியேய் எனக்கு மிஸ் ஆக சொன்னா, எங்கிட்ட இருந்தே மிஸ் ஆகப் பாக்குறியா?" என்று அங்கிருந்தே கத்தினான். அங்கு வருவோர் போவோர் அனைவரும் இவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவளுக்கோ இதனை வளர்க்க தோற்றவில்லை. இவனின் குரங்குச் சேட்டையை இங்கே காட்டி விடுவானோ என்ற பயம் வேறு‌.
கோபமாய் அவனருக்கே வந்தவள் "எதுக்கு இப்போ இங்க வந்து சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்க" என்றாள்.

அவனோ எதுவும் பேசாமல் "மதுர மணமணக்குது, மச்சான் மல்லிகப்பூ மணமணக்குது" என்று சம்மந்தம் இல்லாமல் பாடியபடி பூங்கொத்தை அவளிடம் நீட்ட, அவளோ புரியாமல் முழித்தாள்.

அவனோ "அப்படி என்ன லுக்கு விட்டு கொல்லாதீங்க மிஸஸ் மணிமாறன்" என்று கூறி வெட்கப்பட, அவன் வெட்கம் என்ற பெயரில் செய்யும் வேலையைப் பார்த்து தலையில் அடித்துக்கொள்ள தான் முடிந்தது‌. அவள் பூவை அப்போதும் வாங்காமல் போக, அவளை அழுத்தமாகப் பார்த்தவன் திடீரெனே முட்டுக்கால் போட்டு நிற்க,

அவளோ, பயத்தில் ஒரு அடி பின்னே நகர்ந்தாள். அதில் அவளை முறைத்தவன், "அடேய்… ஏமிரா… ரொமான்டிக்கா ஏதாச்சும் பண்ண விடுறியா? இங்க வா ஒரு பொசிஷன்ல நில்லு" என்றாள். அவன் சொன்னதற்கு அவளும் சட்டென சொன்னதைச் செய்திட, அவள் மனமோ 'அடியேய்! அவன் தான் சொல்றான்னா நீயும் ஏன்டி அப்படியே பண்ணுற … உனக்கு எங்கடி போச்சு புத்தி' என்று எண்ணினாள்.

அவள் ஆழ்ந்த எண்ணத்தை எல்லாம் கலைக்கும் விதமாக அவன்
"செல்வி மிஸ்பா அவர்களே! உங்களுடைய செல்வி பொசிஷன்ல இருந்து மிஸஸ் ஆகும் பொறுப்பைத் தர எனக்கு பயங்கர ஆவல். அதனால் மணிமாறனின் மிஸ் மிஸஸ் ஆக மாறி, அவன் காதலில் எதையும் மிஸ் பண்ணாம, டோடல் காதலோட சேர்த்து அவனையும் மொத்தமா டேக் கேர் பண்ணிக்க ரெடியா?" என்று கூறி கண் சிமிட்டியவன், பூவுடன் சேர்த்து அவன் காதலையும் அவளிடம் அழகாய் முகம் சுழியாதவாறு சமர்ப்பித்தான். ஆனால் அவளோட அவனின் ப்ரப்போசலில் பட்டென சிரித்து விட்டாள்.

“என் லவ்ஸ இப்படி சில்லு சில்லா சிரிச்சு சிரிச்சே நொறுக்குறியேமா‌‌”

“ஆஹான்”

“ நீ சிரிக்கும்போது நல்லா சில்வர் குடத்துல போட்ட கல்லு போல கலகலனு இருக்கு” வர்ணிக்கிறேன் என்ற பெயரில் தன் குரங்கு சேட்டையை மிஸ்பாவிடம் ஆரம்பித்தான் நம் தலைவன்.

“கொய்யால டேய்… நீ ஓவரா போறடா. இதுக்குலாம் நீ பின்னாடி ரொம்ப ஃப்ல் பண்ணுவ” என்று முகம் சுருங்க கூற, அவனோ கண்கள் விரிய ஆச்சரியத்துடன், “ என்ன சொன்ன… பின்னாடி ரொம்ப ஃபீல் பண்ணுவியா. அப்ப நீ என்ன உன் மிஸ்டரா ஏத்துக்குற.
ஐயோ ஜாலி” என்று மீண்டும் கத்த ஆரம்பிக்க, அவனின் தலையில் நங்ஙெனக் கொட்டினாள் அவள்.

“எரும மாடு கணக்கா வளந்துருக்க… கொஞ்சமாச்சும் அறிவிருக்கா. இதுல போலீஸ்னு பீத்திக்க மட்டும் குறைவில்ல” என் எண்ணெயில் இட்ட கடுகாய் அவள் பொரிய,

“அதையெல்லாம் விடு கேர்ள். நீ என்னோட மிஸஸ் ஆக ஓகே சொல்லிட்ட தானே” எனக் கண்களில் காதல் மின்னக் கேட்டான் அவன்.

“அப்படியெல்லாம் இல்லையே”

“அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தயிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே”

அவனின் பாடலில் தவறி விழத் துடித்த இதயத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டவள் , வெளியில் அவனை முறைக்க, அவன் இன்னும் தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தான்.

“கிளியே… ஆலங்கிளியே…
குயிலே… ஏலங்குயிலே…
அழகான ராட்சசியே
அடினெஞ்சில் குதிக்கிறியே”

அதே நேரம் மருத்துவமனைக்குள்,

“இப்ப என் பேரன்ட்ஸ்க்கு எப்படியிருக்குங்க சிஸ்டர்”
முகத்தில் பயம் விரவிக்கிடக்க வந்து நின்றான் வாலிபன் ஒருவன்.

“ஃபர்ஸ்ட் நீங்க யாரு. எதுக்கு இவ்வளவு பதட்டம். ஃபர்ஸ்ட் காம் டவுன் ஆகுங்க” என்றவள், அந்த நபருக்கு குடிக்கத் தண்ணீர் எடுத்துக் கொடுத்து பதற்றம் விலக வைத்தாள்.

“இப்ப சொல்லுங்க. என்ன வேணும். யாரைப் பார்க்கணும்”

“ வீரேந்திரர் காமாட்சினு இரண்டு பேரை மதியம் அட்மிட் பண்ணியதா கால் வந்துச்சு” என்றவனின் முகத்திலோ அழத் தயாராகும் குழந்தையில் சாயல் படிந்திருந்தது.

‘இந்தக் காலத்துல இப்படி ஒரு பாசமா. அதிசயம் தான்’ என்று தனக்குள் எண்ணியவள், ரெஜிஸ்டரில் நோக்க, மிஸ்பா சொல்லிச் சென்ற ஸ்ட்ரோக் பேஷன்ட் என்பது தெரிந்தது.

“இப்ப தான் வர்ற நேரமுங்களா. பேரன்ட்ஸ் மேல பாசம் இருந்தா மட்டும் போதாது. கொஞ்சம் அவங்க கூட இருக்கணும். தனியாவே விட்டுப் போனா அவங்க என்ன செய்வாங்க.


நல்லா தானே சம்பாதிக்குறீங்கல… ஒரு ஆள் போட்டு அவங்களைப் பாத்துக்கலாமே … எதோ அந்த வழியாக யாரோ கால் பண்ணி சொல்லவே எங்க ஸ்டாஃப் போய் கூட்டி வர முடிஞ்சுது‌. இல்லனா யோசித்துப் பாருங்க. உங்க பேரன்ட்ஸ் லைஃப் லாங்க் பக்கவாதம் வந்து படுத்துக்க வேண்டியதுதான். இதுதான் உங்க ஆசையா…” என்றவள் அப்பொழுதுதான் நோயாளிகள் யார் என்று அறிய உள்ளே சென்றாள்.

“தாத்தா…”

ஒரு நிமிடம் ஒரு அனைவரும் ஸ்தம்பித்துப்போகும் வகையில் அலறினாள் எஸ்தர்.

அதே நேரம் மருத்துவமனைக்குள் ஓடி வந்தான் இளமாறன். இளமாறன் ஓடுவதைக் கண்டு வாகன தரிப்பிடத்தில் முன் நின்ற மணிமாறன் உள்ளே ஓட, அவனைத் தொடர்ந்து மிஸ்பாவும் வந்திருந்தனர்.


பெரியதாய் ஒரு ஆப்பை வைத்து விட்டு படுக்கையில் இருந்தார் அந்தத் தாத்தா.
அந்த ஆப்பு என்னவோ...

_என்றும் அன்புடன்
இஞ்சி மிட்டாய்
 
Last edited:
  • Haha
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
🤣🤣🤣அடேய் சிரிச்சே ஒருவழியாகிட்டேன்🤣🤣🤣 யப்பா முடியலடா🤣🤣🤣

சேட்டைபிடிச்ச மணிமாறனோட ப்ரோபோசல் தான் ஹைலைட்🤣🤣🤣🤣

ஆனா ஸ்வீட் ப்ரோபோசல் 🤩🤩🤩

இந்த தாத்தா இங்க அட்மிட்டாகி இருக்காரே🧐🧐

எஸ்தருக்கும் இளமாறனுக்கும் கல்யாணம் பண்ணி வைப்பாரோ 😍

மாறனும் மாறனும் மாமா மச்சான் ஆகிடுவாங்களா🤩😍

அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️
 
  • Like
Reactions: MK20

MK20

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
90
29
18
Tamil nadu
🤣🤣🤣அடேய் சிரிச்சே ஒருவழியாகிட்டேன்🤣🤣🤣 யப்பா முடியலடா🤣🤣🤣

சேட்டைபிடிச்ச மணிமாறனோட ப்ரோபோசல் தான் ஹைலைட்🤣🤣🤣🤣

ஆனா ஸ்வீட் ப்ரோபோசல் 🤩🤩🤩

இந்த தாத்தா இங்க அட்மிட்டாகி இருக்காரே🧐🧐

எஸ்தருக்கும் இளமாறனுக்கும் கல்யாணம் பண்ணி வைப்பாரோ 😍

மாறனும் மாறனும் மாமா மச்சான் ஆகிடுவாங்களா🤩😍

அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️

ஹே இந்த ஐடியா நல்லா இருக்கே 😍...
ட்ரை பண்ணி பாக்கலாமோ...

மணிமாறன் 🤣🤣 அவன் ஒரு யுனிக் பீஸ் க்கா 😂😂. கொஞ்சம் அப்படி தான் இருப்பான். நீங்க நல்லா வைப் பண்ணுங்க அவன்கூட சேர்ந்து 🤪
 
  • Haha
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ட்ரை பண்ணலாமே 🤣🤣 அப்ப தானே நம்ம மிஸ்டருக்கும் அவரோட மிஸ்ஸ மிஸ்ஸஸ் ஆக்க ரூட் க்ளியர் ஆகும் 🤣🤣🤣

மணிமாறனோட சேட்டையில ஒரே வைப் மோட் தான் 🤩🤩