ஆழி நெஞ்சம் 10
வீட்டிற்கு வந்த ஆழியின் நெஞ்சம் சமன்பட மறுத்தது...
அருகில் இருக்கும், நொடிக்கு நொடி தன் உயிரானவள் மீது எழும் கோபத்தை அவனின் காதலாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
மன்னிக்கும் செயலையா அவனவள் அவனுக்கு செய்திருக்கிறாள்?
இந்த நிலையிலும் அவளது செயல்களுக்கு நியாயம் தேடிக் கொண்டிருக்கிறது ஆழி நெஞ்சம்.
அதனாலேயே கண் முன் அழுது துடிப்பவளிடம் தன் கோபத்தைக் காட்டிட முடியாது வேகமாக வந்திருந்தான்.
எவ்வளவு கோபம், வலி இருந்த போதும் அவளை இழக்க அவன் தயாராக இல்லை.
அதிலும்... இருவரின் நேசத்திற்குச் சான்றாக, கண்முன் வானவில்லாய் நிற்கும் அவர்களது குழந்தை! அவனால் எப்படி விட முடியும்?
குடும்பம் என்ற அமைப்பிற்கு எத்தனை ஏங்கியிருப்பான்? இன்று அவனுக்கென மனைவி, குழந்தை இருந்தும்... அவனுடன் இல்லை.
நெஞ்சத்தை இரத்தமும் சதையுமாய் யாரோ கையால் பிடுங்கிடும் வலி.
வாழ்வில் யாருமற்று தனித்து இருந்தபோதும் ஒரு நாளும் ஆழி அழுதது கிடையாது. ஆனால் தற்போது அவனை அரவணைக்கும் ஒரே காரணி அவனது கண்ணீர்.
அழுவதற்கு உணர்வுகள் போதுமானது. அதில் ஆண், பெண் பாகுபாடில்லை. வீரன், கோழை எனும் வேறுபாடில்லை.
இருக்கையின் பின் தலை சாய்த்து, கால்களை அகட்டி வைத்து அமர்ந்திருந்தான். கண்கள் மூடியிருக்க, இதயத்தில் வலியின் பிம்பமாய் குருதி கசிந்து கொண்டிருந்தது.
எத்தனை நேரம் அமர்ந்திருந்தானோ? மெல்லிய இருட்டு வீட்டுக்குள் நிறைந்திட, விளக்கினை உயிர்ப்பிக்க எழுந்தான். அடி வைக்கும் முன்னர் அவனது அலைபேசி சத்தமிட்டது.
புதிய எண்ணாக இருக்க, அசட்டையாக எடுத்து காதில் வைத்தான்.
"ஆழி..." ஆண்டாளின் குரல். மூச்சு வாங்கிட பயம் கலந்து ஒலித்தது.
"ஆண்டாள்..."
"ஆழியை காணோம்." அவள் விசும்பல் அவனை என்னவோ செய்தது. குழந்தை காணவில்லை எனும் செய்தி, அவனின் உலகை அதி வேகமாக சுழல வைத்தது.
சடுதியில் பரபரப்பாகினான். அதீத பதட்டமும் கொண்டான்.
மகளுக்கு ஆறு வயது ஆகிய பின்னரும், இன்னும் அள்ளி தன் மார்போடு பொதித்தது இல்லை. இன்று தான் பார்க்கவே செய்திருக்கிறான். அதற்குள் அவளுக்கு ஓர் ஆபத்து என்றதும் தந்தையாய் துடித்துப்போனான்.
அதுவரை நின்றிருந்த அவனது கண்ணீர் கன்னம் வழிந்தது.
"இப்போ நீ எங்க இருக்க?"
அவளிடம் பேசிக்கொண்டே வீட்டை விட்டு வெளியேறிய ஆழி, வண்டியை உயிர்ப்பித்து சாலையில் வேகமெடுத்தான்.
"அதே கோவிலில் தான்."
"இன்னும் அங்க என்ன பன்ற?"
ஆழியின் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
"எதுக்கும் பதில் சொல்லிடாதடி" என்று பற்களைக் கடித்தவன், "அழாம இரு. வந்திட்டு இருக்கேன்" என்று அந்நிலையில் கூட மனைவியின் அழுகை பிடிக்காதவனாக வார்த்தையால் திடம் கொடுத்தான். அழைப்பைத் துண்டித்த சில நிமிடங்களில் மனைவியின் முன் நின்றிருந்தான்.
கோவில் முக்கிய உறுப்பினர்களுக்கு நடுவில், அழுது கொண்டிருந்த ஆண்டாள் ஆழியை கண்டதும், யாவும் மறந்தவளாக ஓடி வந்து அவனின் மார்பில் தஞ்சம் புகுந்தாள்.
"ஆழி... பாப்பா..."
"ம்ப்ச்... உன்னை அழாதன்னு சொன்னேன்" என்ற ஆழி, "இங்க தான் இருப்பாள். கண்டுப்பிடிச்சிடலாம்" என்று அவளின் முதுகில் தட்டிக் கொடுத்தான்.
தரையில் மண்டியிட்டு அழுது கொண்டிருந்த ஆண்டாளுக்கு கணவன் பேசியவை யாவும், அவள் செய்த தவறின் வீரியத்தையும், அவனின் வலியையும், தன் முட்டாள் தனத்தால் தாங்கள் இழந்த மகிழ்வையும் வலிக்க உணர்த்திட, ஆழி சென்ற பின்னரும் கூட தன்னிலையில் மாற்றமில்லாது அழுது கொண்டிருந்தாள். சுற்றம் மறந்து.
சிறிது நேரம் கழிய கோவில் ஐயர் அவளை கவனித்து அருகில் வந்து விசாரித்த பின்னரே, குழந்தை தன்னுடன் இல்லை என்பது அறிந்து பதறினாள்.
அவள் அந்த ஊருக்கு புதிது என்றாலும், இங்கு வந்தது முதல் வாரம் இருமுறை கோவிலுக்கு வருவதால், ஐயர் பழக்கம் என்பதைவிட அவளின் பதவி, அவளை எளிதாக அடையாளப் படுத்தியிருந்தது.
"அழாதம்மா... குழந்தை இங்க தான் பொம்மை கடைகளில் எங்கும் வேடிக்கை பார்த்திட்டு நிக்கணும். நாம போய் பார்ப்போம்" என்று சொல்ல, அவள் மற்றும் அவருடன், கோவிலில் பணிபுரியும் இன்னும் சிலரும் தேடிட, ஆழிதா எங்குமில்லை.
சற்றும் யோசிக்காது கணவனுக்கு அழைத்துவிட்டாள்.
அவள் தான் அவன் தன்னை கண்டுபிடித்துவிடக் கூடாதென்று அலைபேசியை கூட விட்டு வந்திருந்தாள். ஆனால் ஆழி, என்றாவது ஒரு நாள் அவள் தன்னிடம் வர நினைத்து தனக்கு அழைப்பாள் என்கிற நினைப்பிலேயே, தன்னுடைய எண்ணை மாற்றாது வைத்திருந்தான். நடுவில் ஒருமுறை அலைபேசி தொலைந்த போது கூட, அதே எண்ணை கேட்டு வாங்கியிருந்தான்.
ஆண்டாள் ஆழியின் மார்பில் சாய்ந்து கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்க, வரும்போதே ஆழி காவல் நிலையம் அழைத்து அங்கு வர சொல்லியிருக்க, அவர்களும் வந்து சேர்ந்தனர்.
"பேபி போட்டோ எதும் இருக்கா?" மனைவியை தன் கை வளைவில் வைத்துக்கொண்டே வினவினான்.
ஆண்டாள் தன்னுடைய அலைபேசியை அவனிடம் கொடுத்தாள்.
"நாங்களே இங்க எல்லா இடமும் தேடிட்டோம் சார். எங்கையும் இல்லை" என்று தர்மகர்த்தா சொல்ல, "நாங்களும் ஒன்ஸ் பார்க்கிறோம். நீங்க கோவிலுக்குள் தேட மட்டும் பெர்மிஷன் கொடுங்க" என்றான் ஆழி.
"சரிங்க சார். தாராளமா பாருங்க." அவரும் மற்ற பணியாளர்களும் தள்ளி நின்றனர்.
ஆழி ஆண்டாளின் அலைபேசி திரை நீக்க, என்றோ ஒரு நாள், ஆழியின் கையில், ஆழி லவ்ஸ் ஆண்டாள் என்று அவள் எழுதிய புகைப்படம் ஒளிர்ந்தது.
"இதுக்கெல்லாம் குறைச்சல் இல்லை" என்று முனகிய ஆழி, கேலரியில் ஆழிதாவின் புகைப்படம் எடுத்து தனக்கு அனுப்பிக் கொண்டான்.
அடுத்த நொடி தன்னிடமிருந்து மற்ற காவலர்களின் எண்ணிற்கு அனுப்பிய ஆழி, "என் பொண்ணோட போட்டோ அனுப்பியிருக்கேன்... சீக்கிரம். பாஸ்ட், மூவ்" என்றான்.
அதுவரையிலும் கூட யாரையும் கருத்தில் கொள்ளாது, மனைவியை தன் கைவளைவில் தான் வைத்திருந்தான். அவனுக்கும் பதட்டம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவளின் முன் காண்பித்து அவளை மேலும் பயம் கொள்ளச் செய்ய அவனுக்கு விருப்பமில்லை.
"கோவில் குளம், கிணறு அங்கையும் பாருங்க" என்ற ஆழிக்கு தொண்டை அடைத்தது.
போலீஸ் எனும் கண்ணோட்டத்தில் ஆழி அனைத்து இடங்களில் ஆராயத்தான் வேண்டும்.
ஆழி குளம் மற்றும் கிணற்றை குறிப்பிட்டதும், அவனின் மார்பில் சாய்ந்திருந்த ஆண்டாள் விலுக்கென தலையை உயர்த்தி அவனின் முகம் பார்த்தாள்.
"எதுவும் ஆகியிருக்காதுடி. ஜஸ்ட் பார்க்க சொன்னேன்" என்றான்.
"சாரி ஆழி..."
"இப்போ இது தேவையா?" என்ற ஆழி, "எனக்காக கொஞ்ச நேரம் தைரியமா இரு. நான் பேபியை கூட்டிட்டு வரேன்" என்றான்.
குழந்தையை காணவில்லை எனத் தெரிந்த நொடி முதல் உடலில் நடுக்கம் வெளிப்படையாகத் தெரிய பயந்து கொண்டிருந்த ஆண்டாள், கணவனை கண்டதும், அவனது அணைவில் இருப்பது முதல் பயம் நீங்கியவளாக, சரியாகி விடும் எனும் திடம் எழ, மெல்ல பாதுகாப்பை உணர்பவளுக்கு... அவனின் வார்த்தைகள் மீது மட்டுமல்ல, அவனின் மீது அக்கணம் அதீத நம்பிக்கை உண்டானது.
மெல்ல அவனிடமிருந்து விலகி நின்றாள்.
"நான் தைரியமா இருக்கேன்."
ஆண்டாள் சொல்லிட, அவளின் முகத்தை அழுந்தத் துடைத்த ஆழி,
"அழக்கூடாது" என்றான்.
ஆழியும் மற்ற காவலர்கள் உடன் இணைந்து தன் மகளை தேடும் பணியில் தீவிரம் காட்டினான்.
எங்கும் ஆழிதாவை காணவில்லை.
நேரமாக ஆக ஆழிக்கே படபடப்பு அதிகமாகியது.
கோவிலின் உள்ளே தெய்வத்தின் முன் அமர்ந்திருந்த ஆண்டாளின் மனதில் அத்தனை திடம். தன் கணவன் மீட்டுவிடுவான் என்று. இன்று அவன் மட்டுமே தங்களின் காவலன் என்று மனம் முழுக்க நிரம்பியிருக்கும் எண்ணம் அன்று ஏன் தனக்கில்லையென தன்னையே நிந்தித்துக் கொள்கிறாள்.
ஆழி பார்த்துக் கொள்வான் எனும் நம்பிக்கை, மகள் பற்றிய கவலையை கூட ஆண்டாளுக்கு பின் தள்ளியிருந்தது. அவளின் இதயம் முழுக்க ஆழி குறித்த எண்ணம். அவனை விட்டுவந்த மடத்தனத்தின் எண்ணம் தான்.
அன்றும் அவன் தானே தன் வயிற்றிலிருந்த தங்கள் பிள்ளைக்கு எதும் நேராது, தன்னைத் தாக்க வந்த ரவுடிகளிடமிருந்து காத்திருந்தான்.
ஆழி தங்களை எந்நிலையிலும் பாதுகாப்பான் என்பதற்கு அந்த ஒரு நிகழ்வு போதாதா? ஒவ்வொரு முறையுமா அவன் நிரூபிக்க வேண்டும்?
அன்று இருந்த குழப்ப நிலையில் தெளிவு காண முடியாத யாவும் இன்று தெள்ளத் தெளிவாக விளங்கியது.
ஆழியின் வேலை ஆபத்து நிறைந்ததாக இருப்பினும், எதுவும் அவனைத் தாண்டித்தான் தங்களிடம் வர வேண்டும் என்பதை காலம் கடந்து புரிந்து கொண்டிருந்தாள்.
"என் பொண்ணை கண்ணுல காட்டிடு பிளீஸ். அவளை அவ அப்பாகிட்ட நான் ஒப்படைக்கணும்." கனிவு சுமந்து அனைத்தையும் அமைதியாக பார்த்திருக்கும் கடவுளின் சிலையை கையெடுத்து வணங்கி வேண்டினாள்.
ஆழி கோவிலின் கடை வீதி முழுக்க விசாரித்துவிட்டு, அடுத்து என்ன என சிந்தித்து, கோவிலின் வாயிலில் இருக்கும் கண்காணிப்பு காமிராவின் காட்சிகளை ஆராய்ந்திட, கோவிலின் தொழில்நுட்ப அறைக்குள் சென்றான்.
அங்கிருப்பவரிடம் விவரத்தை சொல்லி, குழந்தை காணாமல் போன நேரத்தை ஆராயக் கூறினான்.
ஆண்டாளின் அலைபேசி ஆழியிடம் தான் இருந்தது. ஒலித்திட, எடுத்து யாரென்று பார்த்த ஆழியின் நெற்றி சுருங்கியது. திரையில் ஒளிர்ந்த பெயரில்.
காலையில் ஏலத்தின் போது, முட்டிக்கொண்ட இருவரில் ஒருவரது பெயர்.
பணி நிமித்தமாக அப்பகுதியின் முக்கிய புள்ளிகளின் எண்ணை ஆண்டாள் சேமித்து வைத்திருந்தாள்.
ஆழி சந்தேகத்துடன் அழைப்பை ஏற்றான்.
"என்னா மேடம்" என்று கரடுமுரடாக ஒலித்த குரல், "பிள்ளை என்கிட்ட தான் இருக்கு" என்றது.
ஆழி அவன் என்ன சொல்ல வருகிறான், எதற்காகக் கடத்தியிருக்கிறான் என்பதை நொடியில் கணித்துவிட்டான்.
"என்னா ஆபிசர் மேடம், விஷயம் கேள்விப்பட்டதும் பேச வாய் வரலையா?" என்றவன், "நான் சொன்னதை செய்தின்னா, உன் பொண்ணு தூக்கின மாதிரியே உன் கை வந்து சேருவாள்" என்று வெடி சிரிப்பு சிரித்தான்.
"போலீஸ் கிட்ட சொல்ல நினைக்காத, அடுத்த நிமிஷம் பச்சைப் பிள்ளைன்னு கூட பார்க்காம கழுத்தறுத்துப் போட்டு போயிட்டே இருப்பேன்" என்றான்.
அவனுக்கு எதிரில் இருப்பவர் பேச வேண்டுமென்ற எண்ணமில்லை. தான் அழைத்த நோக்கத்தை சொல்வதில் மட்டுமே குறியாக இருந்தான். அது ஆழிக்கும் வசதியாகப் போச்சு.
எதிராளியும் பழைய ஆள் போல, ஆதிகாலத்து வில்லியன் போல் வார்த்தையால் வில்லத்தனம் செய்தான்.
அவன் பேசிக்கொண்டே செல்ல, அவனிருப்பிடம் கண்டுபிடிக்க ஆழிக்கு அந்நேரம் போதுமானதாக இருந்தது.
கட்டுப்பாட்டு பிரிவுக்கு (கன்ட்ரோல் யூனிட்) தன்னுடைய அலைபேசியிலிருந்து அவனின் எண்ணை அனுப்பி வைத்து, அவனிருக்கும் இடத்தை நிமிடத்தில் கண்டறிந்துவிட்டான்.
"காலையில் கையெழுத்துப் போட்ட காண்ட்ராக்ட் செல்லாதுன்னு நீயே கிழிச்சிப்போட்டுட்டு, என் பேருக்கு கையெழுத்துப் போட்ட பேப்பரை நான் சொல்ற இடத்துக்கு கொண்டுவரணும்" என்றான்.
"நீ பேப்பர் வேலையை முடிச்சிட்டு வெயிட் பண்ணு, நானே கூப்பிடுறேன். நடுவில் எந்த புத்திசாலி வேலையும் பண்ணாத. உன் பொண்ணு உயிர் என் கையில்" என்று வைத்தான்.
"சார் குழந்தை மேடம் பக்கத்தில் நின்னுட்டு இருந்து, யாரோ கூப்பிடவும் தள்ளி போறது தெரியுது. பட் அந்தப்பக்கம் யாருன்னு தெரியல" என்று கண்காணிப்பு பதிவை பார்த்துக் கொண்டிருந்த நபர் தெரிவிக்க, "ஆளே யாருன்னு தெரிஞ்சிடுச்சு தேங்க்ஸ்" என்று அவரின் தோளில் தட்டி வெளியில் வந்தான்.
ஜெயந்தியிடமிருந்து அழைப்பு வந்தது.
"நான் வந்துட்டேன் அண்ணா. எங்க இருக்கா அவள்?" அத்தனை கோபம் ஜெயந்தியிடம்.
காலையில் ஆண்டாளை அலுவலகத்தில் பார்த்ததும் ஜெயந்திக்கு உன் ஃப்ரெண்ட் கிடைச்சிட்டான்னு தகவல் அனுப்பியிருந்தான். தகவலை படித்ததும் ஜெயந்தி தன்னுடைய கணவனிடம் சொல்லிவிட்டு கிளம்பியிருந்தாள். வந்து சேரும் நேரத்தையெல்லாம் அவள் பொருட்படுத்தவில்லை. தோழியை பார்த்து ஒரு அறையாவாது அறைந்தால் தான் அவளின் மனம் ஆறுதல் அடையும்.
ஆழி அக்கோவிலின் இடம் குறிப்பிட்டு வரச்சொல்லி வைத்திட்டான்.
குழந்தையை கடத்தியிருக்கிறான். அவனின் இருப்பிடம் தெரிந்துவிட்டது. இனியும் நேரத்தை தாமதப்படுத்தக் கூடாதென்று எண்ணிய ஆழி, தன் குழுவை அழைத்து கடத்தியவன் யாரென்று அவனின் இருப்பிடத்தை சொல்லி, அவனை சுற்றி வளைக்க உத்தரவிட்டு, மனைவியிடம் சென்றான்.
"ஆண்டாள்..."
"ஆழி..." அவளுக்கு கண்ணீர் கன்னம் உருண்டது.
"குழந்தை இருக்கும் இடம் தெரிஞ்சிடுச்சு. காண்ட்ராக்ட் கிடைக்கலன்னு அந்த சண்முகம் தான் கடத்தியிருக்கிறான். நான் போய் கூட்டிட்டு வரேன்" என்று நகர்ந்தவனின் கையை பிடித்தாள்.
"நானும் வரேன்."
"ஜெயந்தி வந்திருக்காள்" என்று ஆழி சொல்லும்போதே, ஜெயந்தி அங்கு வந்தாள்.
"பார்த்துக்கோம்மா" என்று ஆண்டாளின் கையை எடுத்து ஜெயந்தியின் கையில் வைத்த ஆழி விடுவிடுவென அங்கிருந்து சென்றான்.
"ஜெயா..."
சப்பென்று அவளின் கன்னத்தில் ஒன்று வைத்திருந்தாள் ஜெயந்தி.
"உனக்கு நாங்கெல்லாம் நினைவிருக்கோமா?" என்ற ஜெயந்தி, "உன்னை கொல்லனும் போல வருது" என்றாள்.
"ஜெயா பிளீஸ்... தப்பு பண்ணிட்டேன்" என்று ஆண்டாள் அழுதிட, அதற்கு மேலும் ஜெயாவால் தன் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை.
"அண்ணா எப்படி உயிரோடு இருந்தாருன்னு சந்தேகப்படுற அளவுக்கு அவரை வதைச்சிட்ட ஆண்டாள் நீ" என்ற ஜெயந்தி, ஆண்டாள் சென்றது முதலான ஆழியின் வலி நிறைந்த நாட்களை சொல்லிட ஆண்டாள் துடித்துப்போனாள்.
"தப்பு தான்..." என்ற ஆண்டாள் தலையில் தட்டிக்கொள்ள,
"இப்போ உன்னால தான், உன் வேலையால் தான் குழந்தைக்கு ஆபத்து. அண்ணா தான் குழந்தையை காப்பாத்தப் போறாங்க. நீ அவளை அண்ணாகிட்ட விட்டுட்டு போயிடேன். குழந்தை எந்த ஆபத்துமில்லாம இருப்பாள்."
ஜெயந்தியின் வார்த்தை ஆண்டாளின் நெஞ்சத்தை சுருக்கென்று குத்தியது.
தன் தவறின் ஆழம் பூதாகரமாகத் தெரிந்தது.
தோழியின் தோளில் சாய்ந்து குலுங்கி அழுதாள்.
"எந்த வேலையில், எந்த இடத்தில் தான் ஆபத்தில்லை ஆண்டாள். நன்மை அப்படிங்கிற ஒன்றில் கூட கெட்டது அப்படின்னு ஒன்னு இருக்கத்தான் செய்யுது. இனியாவது புரிஞ்சிக்க" என்றாள் ஜெயந்தி.
ஆண்டாள் இதனை ஏற்கனவே உணர்ந்துவிட்டாளே. ஆனால் தோழி சொல்லும்போது அத்தனை வலியாகவும் குற்றவுணர்வாகவும் இருந்தது.
"அம் சாரி... அம் சாரி ஜெயா..."
"இப்போ கூட அண்ணா உன்மேல கோபப்படாமல் வருத்தம் தான் படுறார். இனியாவது புரிஞ்சிக்க, விட்டு பிரிஞ்சி வலி கொடுக்கவா, அவ்ளோ லவ் பண்ண? அண்ணா உன் லவ்வுக்கு அடிமையாகியிருக்கார் ஆண்டாள். அதாவது உனக்கு புரியுதா இல்லையா?" எனக் கேட்டாள்.
ஏற்கனவே அவள் அறிந்தது. எப்படி பதில் சொல்வாள்? எல்லாம் தெரிந்து தானே விட்டு வந்தாள். இப்போதல்லவா புரிந்து தெளிகிறது.
"ஒரு விஷயம் கிடைக்கவே இல்லைன்னா அது பெருசாவே தெரியாது. ஆனால் கைக்கு வந்து, இருந்து, காணாமல் போற கொடுமை தான் இருப்பதிலேயே அதிக வலி,"
"சேர்ந்து வாழப் பாரு" என்று ஜெயந்தி முடித்துக் கொண்டாள். அதற்குமேல் பேசினால், தன் கோபத்தைதான் காட்டுவோம் என்று ஜெயந்தி அமைதியாகிவிட்டாள்.
"நீ உன் அண்ணா, அம்மாவோட இல்லையா?" சிறிது நேரம் கழித்து வினவினாள்.
"குழந்தையை கலைக்க சொன்னான். அப்போ தான் வீட்டில் சேர்த்துப்பேன் சொன்னான்." அதற்குமேல் எந்த விளக்கமும் ஜெயந்திக்கு தேவையில்லாமல் போனது.
"இந்த வேலை எப்படி?"
"ஆழி தான் அரசு தேர்வு எழுத படிக்க சொல்லியிருந்தார். குழந்தையை பார்த்துக்க, தேவைக்கு பணம் வேணுமே, தேர்வு எழுதினேன். வேலை கிடைத்தது" என்றாள்.
"ஒருமுறை கூட அண்ணாகிட்ட வரணும் தோணலையா?"
"ஜெயா பிளீஸ்..."
"போடி!" இனி கேட்டு தெரிந்துகொண்டு மட்டும் என்னவாகப் போகிறது. நடந்த எதுவும் இல்லையென்று ஆகிடுமா என்ன?
சண்முகம் தன்னுடைய பண்ணை வீட்டில், தனக்கு துணையாக நாலைந்து அடியாட்களை மட்டும் வைத்துக்கொண்டு தனியாகத்தான் இருந்தான். அவனை வளைத்துப் பிடித்து, அடியாட்களை அடித்து வீழ்த்தி, எல்லோரையும் கைது செய்து குழந்தையை மீட்டிட, ஆழிக்கு அதிகபட்சமாகவே பத்து நிமிடங்கள் தான் ஆனது.
அடுத்த அரை மணி நேரத்தில் குழந்தையுடன் கோவிலுக்குள் வந்த ஆழி, ஆண்டாளிடம் குழ்ந்தையை ஒப்படைத்துவிட்டு, தன் வேலை முடிந்ததென கிளம்பிவிட்டான்.
செல்லும் முன்னர், "பையனை உன் புருஷனால் தனியா சமாளிக்க முடியாது தானே! நீ கிளம்பு, வா. உன்னை பஸ் ஏற்றிவிடுறேன். ஒருநாள் பையனையும் கூட்டிட்டு வந்து பொறுமையா எல்லாம் பேசிக்கோ. மேடம் இனி எங்கையும் ஓடமாட்டாங்க" என்று ஆண்டாளுக்கு வார்த்தையால் கொட்டு வைத்து ஜெயந்தியை உடன் அழைத்துச் சென்றுவிட்டான்.
____________________________
தொடர்ச்சி கீழே