ஆழி நெஞ்சம் 4
ஆழி தன்னுடைய உள்ளத்து நேசத்தையெல்லாம் வார்த்தையால் சொல்லிவிட்டான்.
இந்த உலகில் எனக்கென்று நான் பார்க்கும் ஒரே உறவு நீதான் என்று சொல்லிவிட்டான்.
இதற்கு மேல் ஆழி, நான் உன்னை காதலிக்கிறேன் என்ற அந்த மூன்று வார்த்தைகளை சொல்லவும் வேண்டுமோ?
'எனக்கு சொந்தமாகக் கிடைக்கும் முதல் உறவு நீ. என் ஒட்டு மொத்த அன்பும் உனக்காக என்னிடம் காத்துக்கிடக்கிறது.'
ஆழி கூறியவற்றின் சரியான அர்த்தம், ஆண்டாள் விளங்கிக்கொள்ள மூச்சு விடவும் மறந்தாள்.
ஆழி அழைப்பைத் துண்டித்த பின்னரும், அவன் சொல்லிய வார்த்தைகளின் பொருள் உணர்த்திய தாக்கத்தில் உறைந்து நின்றிருந்த ஆண்டாள், நிகழ் மீண்டது என்னவோ ஜெயந்தியின் தொடுதலில் தான்.
"திரணி..."
"ஹான்!"
"என்னடி? அண்ணா திட்டிட்டாரா? பேயறைஞ்சவளாட்டம் நிக்கிற?"
"ஹான்... இப்போ, இப்போ வரேன்" என்ற ஆண்டாள் நேரத்தை கருத்தில் கொள்ளாதவளாக, ஓடிச்சென்று ஆழியின் அறை முன்பு நின்றாள்.
என்னவோ ஏதோவென்று ஆண்டாளின் பின்னால் வந்த ஜெயந்தி,
"அண்ணா இல்லை. கொஞ்ச முன்ன தான் நானும், ரேஷ்மா அக்காவும் கீழிறங்கும் போது மாடிக்கு போனாங்க" என்றாள்.
அடுத்து ஆண்டாள் மாடிப்படிகளை இரண்டுரண்டாகத் தாண்டிக்கொண்டு மேலேறினாள்.
முதல் படியில் நின்று மூச்சு வாங்கியவள், ஆழி எங்கென்று மாடி முழுக்க பார்வையை ஓட்டினாள்.
மாடியின் ஓர் மூலையில் தண்ணீர் தொட்டி இருக்க, அதில் ஏறிட... தொட்டியோடு இணைந்து அமைந்திருக்கும் இரும்பு ஏணியின் நடுவில் அமர்ந்து, அதிலேயே பின் சாய்ந்து படுத்திருந்தான்.
கருமேகங்களுக்கு நடுவில் எட்டிப் பார்த்து கண் சிமிட்டும் நிலவில் பதிந்திருந்தது ஆழியின் பார்வை.
அடுத்த நொடி அவனின் முன் சென்று நின்ற ஆண்டாள்,
"எனக்கு பயமெல்லாம் இல்லைன்னு சொல்லமாட்டேன். இங்க என்னை படிக்க அனுப்பும் போதே அண்ணா, பசங்களோட க்ளோஸ் ஆகக் கூடாதுன்னு தான் பர்ஸ்ட் சொன்னாங்க. அண்ணான்னா பயம் தான். ஆனால் நீங்க பக்கம் இருக்கும் போது, பயம் இருக்காது தோணுது. அப்புறம் இன்னொரு பயமும் இருக்கு. அதுவும் உங்களோட இருக்கும்போது காணாமல் போயிடும் நினைக்கிறேன். இல்லைன்னா நீங்க போகவச்சிடுங்க" என்றவள், "இதுவரை யாருக்குமே கிடைக்காத உங்க அன்பு எனக்கே எனக்குன்னு வேணும். தருவீங்களா?" என ஒரே மூச்சில் தன் மனதை சொல்லி, அவன் மனம் ஏற்கனவே அறிந்திருந்தாலும், தன் முகம் பார்த்து அவன் சொல்ல தான் கேட்க வேண்டுமென்று, இறுதியாக அவனின் சம்மதம் கேட்டிருந்தாள்.
மூச்சு வாங்க ஆண்டாள் முன் வந்து நின்றதுமே, சாய்ந்திருந்தவன் நிமிர்ந்து அமர, அவளோ ஏணியில் ஒரு அடி வைத்து மேலேறி ஆழியின் விழிகளை காதலாய் பார்த்துக்கொண்டே தன் நெஞ்சத்து விருப்பத்தைக் கூறினாள்.
அவளின் பயம் புரிகிறது. குடும்ப சூழலில் இல்லையென்றாலும், அவனுக்கும் அவள் பக்கம் தெரிகிறதே! அவள் சொல்லியது போன்று அவன் உடனிருந்து அவளின் பயம் களைய வேண்டும்.
"மொத்தமா உனக்கு தரணும்ன்னு தான் இதுவரை யாரையும் என் பக்கத்தில் நான் சேர்க்கலை போல." சொல்லிய ஆழி, ஆண்டாளின் முகத்தையே பார்த்திருந்தான்.
ஆண்டாளின் காதல் வார்த்தைகள் வழி, அவளின் அகம் பார்த்திருந்த ஆழி, முதல் முறை முகம் பார்க்கிறான். கண்களைத் தாண்டி அவனால் வேறெங்கும் பார்வையை நகர்த்திட முடியவில்லை.
"பிடிச்சிருக்கா?" ஆழி தன் முகத்தையே பார்த்திருக்க, கேட்டிருந்தாள்.
"இந்தப் பொண்ணு எப்படியிருந்தாலும் பிடிக்கும். உன் முகத்துக்கு முன்னாடி, நான் நேசிக்க ஆரம்பிச்சது என்மேல நீ காட்டின அக்கறை, உன்னோட காதல். இதுக்கு மேல அழகு எனக்கு முக்கியமா படல" என்ற ஆழி, "உன் உள்ளத்தால் மட்டுமல்ல, வெளியிலும் அழகி தான்" என்றான், குறும்பு சிரிப்புடன் ஒற்றைக் கண்ணடித்து.
ஆண்டாள் முகம் ஒளி கூடி நிலவொளியை மங்கச் செய்திருந்தது.
ஆழிக்குள் புதுவித உணர்வு. பின்னந்தலையை அழுந்த நீவிக்கொண்டான்.
"நீ போ" என்றான்.
"அதுக்குள்ளவா?"
"புரியல?"
"இப்போ தான் லவ் சொல்லியிருக்கோம். ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ணியிருக்கோம். பேச எதுவுமில்லையா?" முகம் சுருக்கி ஏமாற்றமாக வினவினாள்.
"ஒரே வீட்டில் தானே இருக்கோம். தினம் பார்த்துக்கப்போறோம். காலம் நிறைய நீண்டிருக்கே!" என்றான்.
"அப்போ லவ்?"
"நிமிடத்துக்கு ஒருமுறை லவ் பண்றோம் சொல்லிட்டே இருக்கணுமா?" என்ற ஆழி, "உன்னை என்னாலும், என்னை உன்னாலும் மனதால் உணர முடியுது தானே? அப்புறம் என்ன? இங்க நீ எதுக்கு வந்த? முதலில் அதை பாரு" எனக்கூறி,
"லவ் பண்றோம் அப்படிங்கிறதுக்காக பேசிகிட்டே இருக்கணும் அவசியமில்லை. இப்போ ரெண்டு பேருக்குமே வாழ்க்கைக்கான புரிதல் கம்மி. இந்த வயதில் என்னவோ அதை சரியா செய்வோம். நாளைக்கே உன் வீட்டில் வந்து நான் பேசணும் அப்படின்னா, என்கிட்ட எனக்கான அடையாளமா எதும் இருக்கணுமே! பாதையை சரியா அமைச்சிட்டு, இலக்கை கவனிப்போம்" என்றான்.
அவன் அளவுக்கு பக்குவமோ, வாழ்வை பிரித்தறியும் தன்மையோ அவளுக்கு இல்லை. ஆனால் அவன் சொல்கிறான் என்று தலையசைத்திருந்தாள்.
"என்னவோ சொல்றீங்க... கேட்கிறேன்" என்ற ஆண்டாள், "நான் நம்ம காதல் வரை தான் யோசித்திருந்தேன். ஆனால் நீங்க, அதுக்கடுத்து என்னன்னு யோசித்திருக்கீங்க... எனக்கு இதுவே போதும்" என்றாள்.
ஆண்டாளின் புரிதலில் அவனின் அகம் மகிழ்ந்தது. உறவுகளின் புரிதலில் தானே அதனின் ஆழம் இருக்கிறது. இணைவுகளின் நீளம் அதிகரிக்கிறது.
கீற்றுபோல் மூரல்கள் வெளிக்காட்டி புன்னகைத்தான்.
"நல்லாயிருக்கு." கண் சிமிட்டிக் கூறினாள்.
தோன்றிய வெட்கத்தை மறைக்க, "நான் போறேன்" என்று அவளைத் தாண்டிகொண்டு சென்றான்.
"அவ்ளோதானா?"
"இப்போதைக்கு இவ்ளோதான்" என்று நிற்காது சொல்லிவிட்டு சென்றே விட்டான்.
"ரொம்பத்தான்..." உதடு சுளிக்கும் இமோஜியோடு அனுப்பி வைத்தாள்.
"இன்னும் நீ ரூமுக்கு வரல" என்று பதில் தகவலில் அதட்டினான்.
"வராங்க... வராங்க..." என்று தட்டச்சு செய்துகொண்டே ஆண்டாள் கீழே வர, "குட் நைட். ஆண்டாள் ட்ரீம்ஸ்" என்றிருந்தான்.
ஆழியின் குரலில் திரும்பி பார்த்தாள். அவனது அறை வாயிலில் நின்றிருந்தான் ஆழி.
"அப்போ அன்னைக்கு மெசேஜ் பார்த்துட்டிங்களா?" விழி விரித்துக் கேட்டாள்.
சிரித்துக்கொண்டே உள் சென்றுவிட்டான்.
___________________________
அதன் பின்னர் அவர்களின் நேசம், பக்கமிருந்தும் பார்வையால் மட்டுமே அகம் நிரம்பி வளர்ந்தது.
இவர்களின் காதல் அறிந்தது ஜெயந்தி மட்டுமே!
அந்த வருடம் அத்தனை விரைந்து ஓடியிருந்தது. காதலை நேருக்கு நேரா சொல்லிக் கொள்வதற்கு முன்பு எப்படி இருந்தார்களோ அப்படித்தான் இப்போதும் இருந்தார்கள்.
ஆனால் ஆழி எங்கு இருப்பினும், ஆண்டாளின் பார்வையை உணர்ந்தே இருப்பான். அவளும் விழிகளால் அவனின் அகத்தில் தடம் பதித்துக் கொண்டே இருந்தாள்.
விடியலில் ஆழி கதவு திறக்க ஒரு நொடி தாமதமானாலும், "கதவு திறங்க. பார்க்கணும்" என்று விடாது தகவல் அனுப்பி தொல்லை செய்திடுவாள்.
மதியம் கேண்டீனில் உணவு நேரத்திற்கு ஆழி வரவில்லை என்றால், "எனக்கு பசிக்குது" என்று அவன் அங்கு வரும் வரையிலும் அவனது புலனம் ஓசை எழிப்பிக்கொண்டே இருக்கும்.
"லவ் டார்ச்சர் பண்றடி" என்று தகவலில் ஆழி புலம்பினாலும், "எனக்காக ஒரு பொண்ணு உருகி உருகி மெசேஜ் பண்றது, என்னை கவனிக்கிறது எல்லாம் வரம் மாதிரி ஃபீல் ஆகுது ஆண்டாள்" என்று மகிழ்வாய் சொல்லிடுவான்.
ஆண்டாளின் இந்தத் தொல்லையில் தான் ஆழி மகிழ்வென்பதை மனதார அறியத் துவங்கியிருந்தான்.
ஆண்டாள் என்பவளால், அவளது தூய்மையான அன்பினால், இப்போதெல்லாம் ஆழி தனிமையை உணர்ந்ததே இல்லை.
அந்த வருட விடுமுறை துவங்கியிருந்தது. ரேஷ்மா படிப்பு முடிந்து மொத்தமாக சென்றிருந்தாள். இறுதி தேர்வு முடிந்த அன்றே ஜெயந்தி கிளம்பியிருந்தாள்.
ஆண்டாளும் அன்று தான் செல்வதாக இருந்தாள்.
ஆனால் முந்தைய நாள்,
"உனக்கு பழகிட்டேன் ஆண்டாள். நீயில்லாம இருக்க முடியுமா தெரியல" என்று ஆழி அனுப்பியிருக்க, ஆண்டாள் தன் பயணத்தை ஒத்திப்போட்டாள்.
ரேஷ்மா செல்வதற்கு முன்பு அறையை காலி செய்துவிட்டு, ஜனனியுடன் ஆழியிடம் சென்று அறையின் சாவியை கொடுத்துவிட்டு நன்றி சொல்லிச் செல்ல, தன்னவள் கிளம்பும் போது வழியனுப்ப வேண்டுமென்று ஆழி அங்கிருந்த கூடத்திலே அமர்ந்துவிட்டான்.
ஆனால் ஜெயந்தி மட்டும் தனித்துச்செல்ல,
"நீ போகலையா?" எனக் கேட்டிருந்தான்.
"த்ரீ டேஸ் அப்புறம்" என்ற ஆண்டாள், "பசிக்குது பாஸ்" என்றாள்.
ஆண்டாளுக்கு சமைக்கத் தெரியாது, ஜெயந்தி செய்வாள். அவளுக்கு இவள் உதவுவாள். அவ்வளவே. இது தெரிந்திருந்த ஆழி, ஆண்டாள் பசியென்றதும் அவசரமாக உணவு செய்து, மாடிக்கு வருமாறு அழைத்தான்.
கிட்டத்தட்ட ஆண்டாளின் அன்புக்கு ஆழி தன்னைப்போல் அடிமையாகிக் கொண்டிருந்தான். அவளுக்கு சிறிது என்றாலும், அவனுக்கு பெரிதாய் தாக்கத்தை கொடுத்தது.
"எதுக்குடி ஊருக்கு போகல?" கோபமாகக் கேட்டுக்கொண்டே ஆண்டாளின் வாயில் உணவினை வைத்தான்.
"என்னால உங்களை பார்க்காம இருக்க முடியும் தோணல" என்றாள்.
அவள் சொல்வது உண்மையென்றாலும், அது மட்டுமே காரணமில்லை என ஆழிக்கு புரிந்தது.
"நேத்து நான் சொன்னதுக்காகவா?" எனக் கேட்டிருந்தான்.
"ஆமா உங்களுக்காக, எனக்காக, நமக்காக..."
சட்டென்று துளிர்த்த கண்ணீரோடு, அவளை கழுத்தோடு கையிட்டு இழுத்து தன் மார்பில் புதைத்திருந்தான்.
"என்னால இந்த அன்பை சுமக்க முடியல ஆண்டாள். எதுக்குடி என்மேல உனக்கு இவ்வளவு அன்பு?" எனக் கேட்ட ஆழி, "எனக்காகன்னு யோசிக்கிற உன்னை என் கைக்குள்ளவே வச்சிக்கணும்" என்றான்.
"உங்க கைக்குள்ள தான் எப்பவும் இருப்பேன். இப்போ பசிக்குது சாப்பிடலாம்" என்று அவனிலிருந்து பிரிந்து அவனுக்கு ஊட்டிவிட்டாள்.
யாருமற்ற ஒருவனுக்கு சிறிதாய் கிடைக்கும் அன்பும் அளப்பரியது. இங்கு ஆண்டாள் ஆழிக்கு தன்னுடைய மொத்த அன்பையும் தன்னலமற்று கொடுத்திடும் போது, அவனுக்கு அவள் தேவதையாகிப் போனாள்.
ஆழி ஆண்டாளை தன் வாழ்வின் மகிழ்வை எல்லாம் தனக்காக மீட்டுக்கொண்டு வந்த தேவதையாகத்தான் நினைக்கின்றான்.
"ச்சூ... இதுக்கெல்லாம் கலங்குவாங்களா?" என்ற ஆண்டாள் ஆழியின் கண்ணீரைத் துடைக்க, "லவ் யூ டி" என்றிருந்தான் ஆழி.
இதுநாள் வரை அவன் சொல்லிடாத வார்த்தைகள். இதற்கு மேல் வேறென்ன சொல்ல வேண்டுமென்றும் அவனுக்குத் தெரியவில்லை.
ஒருவருள் ஒருவர் உயிரை பொத்தி வைத்து நேசம் வளர்த்தனர் என்று தான் சொல்ல வேண்டும்.
மூன்று நாட்கள் என்ற ஆண்டாள், ஒருவாரமாகிய பின்னரும் கூட ஊருக்கு செல்லாது இருக்க, அவளின் அண்ணன் அழைத்துவிட்டான்.
படிப்பு சம்மந்தமாக சிறப்பு வகுப்பு என்று பொய் சொல்லி சமாளித்து விட்டாள். ஆனால் ஆழி தான் அவள் முடியாதென்று சொல்ல சொல்ல கேட்காது, அவளை ஊருக்கு ரயில் ஏற்றி விட்டான்.
ஆண்டாளை அனுப்பி வைத்துவிட்டு வருந்தினான். அவளில்லாது அறையை விட்டு வெளியில் வரவே ஆழிக்கு பிடிக்கவில்லை.
"நான் போக சொன்னா போயிடுவியா நீ" என்று அர்த்தமற்று அவளிடம் கோபம் கொண்டான்.
அப்போது தான் அவளின் அன்புக்கு தான் அடிமையாகியிருக்கிறோம் என்பது ஆழிக்கு புரிந்தது. இது அவனைக் காட்டிலும் அவனவளுக்கு நல்லதில்லை என்று தோன்ற, மெல்ல மெல்ல காதலிலும் தன் மனதை பக்குவப்படுத்தினான். ஆனாலும் அவளின் அன்பில் அவன் கட்டுப்பாடு கொள்ளவில்லை.
_______________________
அடுத்த வருட படிப்பும் இமைக்கும் பொழுதில் கடந்திருந்தது.
ஆழி முதுகலை படிப்பை முடித்திருக்க, ஆண்டாள் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தாள்.
நான்கு மாதங்களில் ஆழிக்கு சிவில் சர்வீஸ் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இருவருமே படிப்பில் தீவிரமாகி இருந்தனர்.
இரவு நேரம் சில நிமிடங்கள் மொட்டை மாடியில் பேசிக் கொள்வது மட்டுமே அவர்களுக்கான காதல் நேரம்.
ரேஷ்மா இருந்த அறையில் யாரையும் ஆழி தங்க அனுமதிக்கவில்லை.
ஏனென்று ஆண்டாள் கேட்டிட,
"கேர்ள்ஸ் யாரும் வேணும் சொன்னா தங்க வைக்கலாம்" என்று சொல்லிவிட்டான்.
தானும் ஜெயந்தியும் இருக்கும்போது, ஆண்களை எப்படி தங்க வைப்பதென்று நினைக்கிறான் என்று அவன் சொல்லாதுவிட்டது அவளுக்கு புரிந்தது.
தேர்வு நாள் நெருங்க நெருங்க, ஆழியின் படிப்பின் நேரம் கூடியது. நேரத்திற்கு உணவு கொடுத்து, மிரட்டி உறங்க வைத்தென்று அவனது நலனில் அக்கறை கொண்டு நடந்துகொண்டாள் ஆண்டாள்.
"அண்ணா எக்ஸாம் கிளியர் பண்ணிட்டால்... ரெண்டு ரெண்டரை வருஷத்துக்கு இங்கிருக்கமாட்டார். நீயெப்படி இருப்ப திரணி?" ஜெயந்தி ஒருநாள் கேட்க,
"அதைப்பத்தி இன்னும் நான் யோசிக்கவே இல்லை ஜெயா. நடக்கும் போது நடக்கட்டும்" என்று ஆண்டாள் கூறினாலும், அதுமுதல் அவனில்லாத நாட்கள் எப்படி என்று ஆண்டாளுக்கு பயந்து வந்தது.
சொல்லி அடித்தது போல, முதல்முறையே ஆழி தேர்வில் வெற்றி பெற்றிருந்தான்.
ஆண்டாளுக்கும் இளங்கலை மூன்றாம் வருட படிப்பும் முடிந்தது.
அவளை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு, ஆழி பயிற்சிக்காக டெல்லி நோக்கி பயணமாகினான்.
இரவு நேரங்களில் கிடைக்கும் சில நிமிடங்கள், புலனம் வழி உரையாடிக் கொள்வர். ஆண்டாள் வீட்டிலிருப்பதால், அழைப்பு விடுத்து பேச முடியாது போனது.
"அடுத்து என்ன பண்ணப்போற?" ஆழி கேட்க,
"நீங்க போஸ்டிங் வாங்க ரெண்டு வருஷம் இருக்கே... அதுவரை வீட்டில் சும்மா இருக்க முடியாது. இப்போவே அண்ணா கல்யாணம் பண்ணி வைங்கன்னு அம்மாகிட்ட சொல்லிட்டு இருக்காங்க" என்ற ஆண்டாள், "மேல எதும் படிக்கணும்" என்றாள்.
நாட்கள் செல்லச் செல்ல ஆழி ஆண்டாளுக்கு அனுப்பப்படும் தகவல்கள் குறைந்தன. அவனின் பயிற்சி கால தீவிரம் புரிந்து, அவனாக பேசும் போது பேசிடுவாள்.
இரண்டு மாதங்களுக்குப் பின்னர் அவளாக பார்க்க வேண்டுமென்று அழைக்க, ஆழி எடுக்கவில்லை. பயிற்சியில் இருந்தான்.
ஒருமணி நேரத்திற்கு பின் அவனாக அழைத்தான்.
"பார்க்கணும் ஆழ்..." அவளின் தவிப்புகள் குரலில் தெரிந்தது.
"இப்போ எப்படிடா?" என்ற ஆழி, "வீடியோ கால் எடுக்கவா?" என்றான்.
"இல்லை... நேர்ல பார்க்கணும்" என்ற ஆண்டாள், "உங்க சிட்டுவேஷன் புரியுது. ஆனாலும் என்ன பண்ணட்டும்? பார்க்கணும்" என்றாள், அடமாக.
"டேய்... ஆண்டாள்..." என்ற ஆழியிடமும் அத்தனை தவிப்புகள். முயன்றல்லவா, அவளின் ஆர்ப்பரிப்புகளை உள்ளத்தில் அடக்கி வைத்திருக்கிறான்.
"எனக்கு லீவ் இல்லைடா? நெக்ஸ்ட் மந்த் டூ டேஸ் லீவ் வருது. நான் வரேன்" என்றான்.
"உங்களுக்கு அவுட்டிங்லாம் இல்லையா?"
அவன் ஒன்று சொல்ல இவள் வேறொன்று கேட்டாள்.
"வெட்னஸ்டே ஈவ்வினிங் அண்ட் சண்டே மார்னிங் டூ ஹர்ஸ் அவுட்டிங் பெர்மிஷன் இருக்கு" என்றான்.
"ம்ம்" என்ற ஆண்டாள், "சண்டே மார்னிங் எப்போ?" எனக் கேட்டாள்.
"நீ வரப்போறியா?" எனக் கேட்ட ஆழி, "லாங் ஜேர்னி ஆண்டாள். தனியா வேண்டாம். நான் நெக்ஸ்ட் மந்த் வரேன்" என்றான்.
"நான் உங்ககிட்ட டைம் கேட்டேன்" என்றாள், அழுத்தமாக.
அவளிடம் எப்போதும் இப்படியொரு அழுத்தம் ஆழி கண்டதில்லை.
"டென் டூ டிவெல்வ்..."
"ஓகே" என்ற ஆண்டாள், "சண்டே டென் தர்ட்டிக்கு, ஸ்டேஷன் வந்துடுங்க" எனக்கூறி வைத்துவிட்டாள். அடுத்து அவன் விடுத்த எந்தவொரு தகவலுக்கும் அவள் பதில் அளிக்கவில்லை.
நடுவில் மூன்று நாட்கள் இருந்தன... பயிற்சிகளுக்கு நடுவிலும் ஆண்டாளின் நினைப்போடு உறவாடினான்.
"படுத்துறடி" என்று அனுப்பி வைத்தான்.
சிரித்துக்கொண்டாள். பதில் அனுப்பவில்லை.
ஞாயிறு அன்று காலை பத்து மணிக்கெல்லாம் டெல்லி ரயில் நிலையம் வந்துவிட்டான்.
பத்து முப்பதுக்கு வரவேண்டிய ரயில் இருபது நிமிடங்கள் கால தாமதமாக வந்து சேர்ந்தது. அதற்குள் பலமுறை அவளுக்கு அழைத்துவிட்டான். அவள் எடுக்கவில்லை.
"கல்நெஞ்சக்காரி" என்று அனுப்பி வைத்தான், "தேங்க்ஸ்" என்று பதில் அனுப்பியிருந்தாள். உடன் அவள் இருக்கும் பெட்டியின் எண்.
ரயில் நிற்பதற்கு முன் ஆண்டாள் இருக்கும் பெட்டிக்குள் ஏறியிருந்தான்.
ஆண்டாளை பார்த்ததும், கண்களும் உதடுகளும் சிரிக்க அணைக்க முயன்றவன் கையில் பெரும் பெட்டி ஒன்றை திணித்தாள்.
"என்னடி இது? இவ்வளவு பெரிய சூட்கேஸ். என்ன டெல்லியிலே செட்டில் ஆகப்போறியா?" எனக் கேட்ட போதும் அவள் பின்னாலேயே சென்றான்.
"ஹேய் நில்லுடி... என்னைப் பார்க்க வந்துட்டு பார்க்காம முகத்தை திருப்பிக்கிட்டுப்போற" என்று அவளின் கையை பிடித்து இழுத்தான்.
"ஹான்... நினைப்பு தான்" என்ற ஆண்டாள், "நான் உங்களை பார்க்க வரல" என்று ரயில் நிலையத்திற்கு வெளியில் வந்து ஆட்டோ பிடித்து ஏறி அமர்ந்தாள்.
ஆழி ஒன்றும் புரியாது நின்றிருக்க...
"பாஸ் எப்படி? வரீங்களா இல்லை இப்படியே உங்க அகாடெமிக்கு கிளம்புறீங்களா?" எனக் கேட்டாள்.
எதுவும் சொல்லாது ஏறி அமர்ந்தான்.
"எங்க போறோம்?"
"ட்ரைவர்கிட்ட சொல்லிட்டேன்" என்ற ஆண்டாள், ஆழியின் தன் பக்க புஜத்தை இரு கைகளாலும் கோர்த்து பிடித்து அவனின் தோளில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.
"இப்போதான் ஹார்ட் பீட் சரியா இருக்கு" என்றவளின் வார்த்தையில், அகம் மகிழ்ந்து இதழ் விரித்தான். அவளின் உச்சியில் மென்மையாய் தன் அதரம் பதித்து விலகினான்.
"ஹேய்" என்று விலகி அவனைப் பார்த்த ஆண்டாள், "கிஸ் பண்ணிங்களா?" என்றாள்.
"இல்லையே" என்று ஆழி சொல்லிட, "பொய்... பொய்..." என்ற ஆண்டாள், "இப்போ கொடுங்க பிளீஸ்" என்று தன் கன்னம் காட்டினாள்.
"போடி" என்று அவளின் முகத்தை நேராக திருப்பிய ஆழி, "ட்ரைவர் இருக்கார்" என்றான்.
"முன்ன இல்லையாக்கும். போடா" என்று மீண்டும் அவன் தோள் சாய்ந்து, கண்களை மூடிக்கொண்டாள்.
"போலீஸ் லுக்... நல்லாயிருக்கீங்க."
"ஆஹான்..."
பெரும் தவிப்புகளின் அமைதியை இணைகளின் அருகில் உணர்ந்தனர்.
சிறிது நேரத்தில் அவள் சொல்லிய இடமும் வந்தது.
"மிராண்டா ஹவுஸ்..." சொல்லிக்கொண்டே ஆழி இறங்கினான்.
மிராண்டா ஹவுஸ் டெல்லியில் புகழ்பெற்ற மகளிர் கல்லூரி.
"எஸ்... இன்னும் ரெண்டு வருஷத்துக்கு இங்க தான். உங்க பக்கத்துல தான்" என்று ஆட்டோவிற்கு பணம் கொடுத்துவிட்டு அவன் முகம் பார்த்தாள்.
"ஆண்டாள்..." அவனுக்கு பேச்சே வரவில்லை. அவள் இத்தனை தூரம் வந்திருப்பது அவனுக்காக அல்லவா! இருக்கும் இடம் மறந்து, இறுக அணைத்திருந்தான்.
"நீங்க இல்லாம முடியலப்பா... ரெண்டு வருஷம் எப்படி இருக்க? அதான் பிஜி இங்க ஜாயின் பண்ணிட்டேன்" என்றாள்.
அவளின் காதல் என்றும் போல இன்றும் அவனை திக்குமுக்காட வைத்தது.
"உன் அண்ணா எப்படி ஒத்துகிட்டாங்க?"
"அவ்ளோ ஈசியா ஒத்துக்கல" என்ற ஆண்டாள், "நாலு நாள் சாப்பிடாம, அழுது அம்மாவை கரைச்சு, அம்மா மூலமா அண்ணாவை ஒத்துக்க வச்சேன்" என்றாள்.
"எனக்காகவாடி..."
"ம்ஹூம்... நமக்காக" என்ற ஆண்டாள், "அவுட்டிங் இருக்க ரெண்டு நாளும் சரியா என்ன பார்க்க வந்திடனும்" என்றாள்.
"உத்தரவு மேடம்" என்ற ஆழி, அவளை மிராண்டா ஹவுஸ் விடுதியில் விட்டுவிட்டு, அவளுக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொடுத்துவிட்டு தன்னுடைய இடம் சென்றான்.
அத்தியாயம் 5க்கான இணைப்பு

ஆழி நெஞ்சம் 5
ஆழி நெஞ்சம் 5 இரண்டு ஆண்டுகள் அதி வேகத்தில் சென்று மறைந்தன. இடைப்பட்ட நாட்களில் இருவரின் காதல் சுகம் சுகமாய் இதயத்தில் இதம் பரப்பி, நொடி நொடியாய் அதிகரித்து, நீயின்றி நானில்லை எனும் கூற்றைக் கடந்து, நீயின்றி யாவுமில்லை என்ற நிலையில் ஆழ வேர் பிடித்திருந்தது, காதல் சுமக்கும் நெஞ்சங்களில்...
vaigaitamilnovels.com
Last edited: