இதயத்தில் இடம் கொடுப்பாயா பாகம் -34
விமலாவிற்கு சுப்பிரமணி சொல்ல நினைத்தது புரிந்தது.
ஓகே சார்.... நான் உங்க கெஸ்ட் ஹவுஸூக்கு வரேன். எப்போன்னு சொல்லுங்க....
வெரி வெரி கிளவர் விமலா நீ..... வர வெள்ளிக்கிழமை ஈவினிங் லேட் ஆகும் ன்னு உன் ஹஸ்பண்டு கிட்ட சொல்லி விட்டு வா..... நானே உன்னை டிராப் பண்ணிடறேன்..... அதுக்கு அப்புறம் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்....
நாளை மறுநாள் தான் வெள்ளிக்கிழமை..... தனக்குள் ஒரு பிளான் போட்டு கொண்டாள். அதில் அவள் உயிர் போனாலும் அவள் கற்பை இழக்கக் கூடாது என்று உறுதியாக ஒரு திட்டம் தீட்டினாள். பாவம் அவளுக்கு அதுவே வினையாகி போனது....
வெள்ளிக்கிழமை.... ஈவினிங் ஆஃபீஸ் பாத்ரூம் சென்று.... யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு....
வீடியோ ரெக்கார்டு செய்தாள்....
அகத்தியன்....என்னை மன்னிச்சிடுங்க.... எனக்கு வேற வழி தெரியலை.... நான் அந்த பொறுக்கி சுப்பிரமணி கெஸ்ட் ஹவுஸூக்கு போகப் போறேன்.... என்னை தப்பா நினைக்காதே டா.... உன்னை தவிற வேறு எவனோட கை என் மேல பட்டுச்சுன்னா.... நான் உயிரோட இருக்க மாட்டேன்.... நம்மல மாதிரி மிடில்கிளாஸ் ஆளுங்களை இவனுங்க வலைல விழ வைக்க நினைக்கிறாங்க..... அவனோட உண்மையான முகத்திரையை கிழிச்சி....அவனை சட்டத்துக்கு முன்னாடி நிக்க வைக்க போறேன்..... இதுல என் உயிருக்கு எதாவது ஆச்சுன்னா....அதற்கு மேல் பேச முடியாமல் அழுகை வந்தது.... நம்ம பையனை நல்லா பாத்துக்கோ.... என்று வீடியோ எடுத்து....அது சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு அகத்தியன் மெயிலுக்கு போகும் படி அனுப்பி விட்டு.... அவள் ஃபோனில் இருந்து டெலீட் செய்தாள்.
ஒரு சின்ன கேமிராவை தன் சல்வார் பட்டனில் பொறுத்தியிருந்தாள். பயந்து கொண்டே அவனுடைய கெஸ்ட் ஹவுஸின் உள்ளே சென்றாள்..... எல்லாமே ரெக்கார்டு ஆகிக் கொண்டு இருந்தது.
வா வா....விமலா.... உன்னை நான் முதல்ல பார்த்தவுடனே உன்னை கல்யாணம் பண்ணிக்க நினைச்சேன்.... ஆனா நீ ஏற்கனவே கல்யாணம் ஆனவ ன்னு தெரிஞ்சதும்.... சரி ஒரே ஒரு முறை மட்டும்.... ன்னு தான் நினைச்சேன்.... ஆனா இவ்வளோ சீக்கிரமா நீ ஒத்துக்குவ ன்னு நான் கனவுல கூட நினைக்கல.....
சார்.... அந்த 25 லட்சம்....
நீ வீணா கவலைப் படாத விமலா.... அதை நான் கட்டிடறேன்..... உனக்கு டவுட்டா.... வா....என் பக்கத்துல வந்து உட்காரு..... நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து பே பண்ணிட்டு அப்புறமா ரூமுக்கு போலாம்.....
பயந்து கொண்டே அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.....
அவனுடைய லேப்டாப்பில் சில ஃபைல்களை கிளிக் செய்தான்.... அதை பார்த்து கொண்டே இருந்தாள் விமலா....
ஒரு ஃபைலை தெரியாமல் ஓப்பன் செய்து விட்டான்....
சார் இது.... இதுல இருக்கிற படி பார்த்தா.... என்னோட தப்பு எதுவும் இல்லை.... நான் டைமுக்கு சப்மிட் பண்ணிட்டேன்.... அதனால 25 லேக்ஸ் லாஸ் இல்லை.... அனைத்தையும் ரெக்கார்டு செய்தாள்....ஆட்டோமெட்டிக்காக அகத்தியனின் மெயிலுக்கு போகும் படி அதையும் செட் செய்து இருந்தாள்.
சே.... அதனால என்ன.... வந்தது வந்திட்ட.... சும்மா படுக்க கஷ்டமா இருந்தா.... ஒரு லட்சம் தரேன் வாங்கிட்டு போ....
சீ..... நீ எல்லாம் ஒரு மனுஷனா....
ஓ.... நீ ரொம்ப நல்லவளா டி.... உனக்கு தேவைன்னா நீயே வருவ..... வேண்டாம் ன்னா போயிடுவ.... நீ பண்றதை எல்லாம் பார்த்துகிட்டு என்னை விரல் சூப்ப சொல்றியா....என்று சொல்லி அவள் துப்பட்டாவை பிடித்து இழுத்தான்....
அங்கிருக்கும் கிளாஸ் டம்ப்ளரை எடுத்து அவனுடைய தலையில் அடித்து உடைத்தாள்.... வலியிலும் ஆத்திரத்திலும் அவளை பிடித்து சுவற்றில் இடித்தான்.
வலியில் மயங்கி போனாள் விமலா..... அவளை நாசம் செய்த பின்.... அவள் கழுத்தை நெறித்து கொலை செய்தான்..... அனைத்து அந்த கேமராவில் ரெக்கார்டு ஆகி அகத்தியனுக்கு சென்றது....
இரவு நேரம் அவளை காரில் ஏற்றி சென்று.... கூவம் ஓரத்தில் போட்டுவிட்டு சென்றான்.....
அவளுடைய போஸ்ட் மார்ட்டத்தில்..... அவள் ரேப் செய்யப் பட்டு இருக்கிறாள் ஆனால் விந்தணுக்கள் அழிக்கப் பட்டு இருக்கிறது என்று ரிப்போர்ட் வந்தது....
ஒரு வாரம் வீடே மயானமாக இருந்தது. பின்னர் தன் மெயிலை ஓப்பன் செய்தவனுக்கு இந்த வீடியோக்கள் கிடைக்க..... வைஷாலியின் உதவியுடன் லாயர் ரஞ்சித்திடம் அனைத்து ஆதாரங்களையும் கொடுத்து அவனுக்கு ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுத்தார்கள். அகத்தியனின் தங்கை வைஷாலியின் ஃபிரெண்ட்....
அகத்தியன் விமலா இறந்த பிறகு இங்கே இருக்க முடியாமல் மிகவும் வருந்தினான்..... சுப்பிரமணிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த பின்.... தன் மகன் அவினாஷூடன் வெளிநாட்டிற்கு சென்று விட்டான்.
சுப்பிரமணி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து.... ஆதாரங்களை மாற்றி.... அது அவன் இல்லை என்று நிரூபித்து வெளியே வந்து விட்டான். மேலும் விந்தணுக்கள் அழிக்கப்பட்டு இருந்ததால் அவனுக்கு அது சாதகமாக இருந்தது.... ஆயினும் ஒரு வருடம் அவன் சிறையில் இருந்ததை நினைத்து அதற்கு காரணமாக இருந்த லாயர் ரஞ்சித், வைஷாலி, அகத்தியன் இவர்களை கொள்வதே அவனுடைய குறிக்கோளாக இருந்தது.
ராபர்ட்...ராகவ் கொடுத்த ஃபைலை வைத்து அலசி ஆராய்ந்ததில் அந்த சுப்பிரமணியின் பழைய கேஸூக்கு சம்பந்தமான யாரோ தான் இவர்களுக்கு ஃபோன் பண்ணியிருக்க வேண்டும் என்று யூகித்தான்.... ஆனால் ராகவிற்கு எதற்காக கால் பண்றாங்க..... அதுதான் அவனுக்கு புரியாத ஒன்று.....
ஃபோனை எடுத்து ராகவிற்கு கால் செய்தான் ராபர்ட்.
சொல்லுங்க ராபர்ட்....
நீங்க கொடுத்த கேஸ் ஷீட் படிச்சு பார்த்தேன் ராகவ்.... அவனோட மோடிவ் ரஞ்சித் அப்புறம் வைஷாலி தான். வைஷாலிக்கு நீங்க ஹெல்ப் பண்றதால உங்களையும் டார்கெட் பண்ணியிருப்பான்னு நினைக்கிறேன்....
அதெல்லாம் எனக்கும் தெரியும் ராபர்ட்....
யாரு ஃபோன் பண்ணாங்கன்னு.... மட்டும் கண்டுபுடிச்சு சொல்லுங்க....
சரி ராகவ்.... கண்டிப்பா....
நீங்க இப்போ எங்க இருக்கீங்க ராகவ்....
நான் தீபம் ஹாஸ்பிடலில்ல இருக்கேன்.....
உங்க அப்பா அங்கேயா இருக்காரு?
இல்ல இல்ல....என்னோட பிரெண்டுக்கு உடம்பு சரியில்லை.... அதான்....
ஓ.... ஓகே.... பை.... நான் வேற எதாவது தெரிஞ்சா சொல்றேன்....
ஓகே ராபர்ட்.... பை.... தேங்க் யூ....
*****
விஷ்வா வின் வீட்டிற்குள் நுழைந்தவுடன்....
ராஜேஸ்வரி ரேஷ்மி அருகில் வந்து....
வாம்மா.... அப்பா இப்போ எப்படி இருக்காரு?
இப்போ பரவாயில்ல அத்தை....
சரிம்மா.... நீ போய் ஃபிரெஷ் ஆகிட்டு வா காஃபி தரேன்....
அவளுடைய டிரெஸ்களை எடுத்து கொண்டு அவளுக்கென்று உடைகள் வைத்திருந்த வாட்ரோபில் அடுக்கினாள்.
பின்னர் குளித்து விட்டு ஒரு சுடிதாரை போட்டு கொண்டு வந்து.... நேராக பூஜை ரூம் சென்று பிராத்தனை செய்து விபூதி இட்டுக் கொண்டு வந்து அமர்ந்தாள்.
அம்மாடி ரேஷ்மி.... இப்போ உனக்கு கல்யாணம் ஆயிடிச்சு மா.... நெற்றி உச்சியில குங்குமம் வெச்சிகினும்மா.... சரியா?.....
சரிங்க அத்தை..... ஆனா காலேஜ் போகும் போது....
ஒரு நிமிடம் யோசித்தவள்.... காலேஜூக்கு வெச்சிக்க வேண்டாம்..... வீட்டிற்கு வந்து குளிச்சிட்டு குங்குமம் வச்சிக்கோ....
சரிங்க அத்தை....
மன்டேல இருந்து காலேஜ் போகட்டுமா?.... ஏற்கனவே நிறையவே லீவு எடுத்திட்டேன்.....
சரிம்மா.... உங்க அப்பா சொன்னாரு ன்னு உங்க மாமா கல்யாணத்துக்கு முன்னாடியே எங்க கிட்ட சொல்லிட்டாரு....
சரிங்க அத்தை.... ரொம்ப தேங்க்ஸ்....
எனக்கு பசிக்கல.... தலை வலிக்குது.... நான் போய் தூங்கட்டுமா?....
அம்மாடி.... ரெண்டே ரெண்டு இட்லி மட்டும் சாப்பிடு மா.... அப்புறம் தலைவலி அதிகமாயிடும்.....என்றாள் ராஜேஸ்வரி.
இதை கேட்டதும் ரேஷ்மிக்கு ..... தன் அம்மாவின் ஞாபகம் வந்தது ரேஷ்மிக்கு....கனகவள்ளியும் இதே போல் தான் கூறுவாள்... கண்களும் லேசாக கலங்கியது....
ஓகே அத்தை....சாப்பிடறேன்....
சரிம்மா....இன்னைக்கு நாள் நல்லா இல்ல.... அதனால நீ வைஷூவோட ரூம்ல படுத்துக்கோ.... நாளைல இருந்து உங்க ரூம்ல படுத்துக்கலாம்.....
சரிங்க அத்தை....டெயிலியே நான் அவன் ரூம்ல படுக்கலைன்னா நல்லா இருக்கும் என்று நினைத்து கொண்டாள்....
சாப்பிட்டு விட்டு வைஷூ வரும் வரை லிவிங் ரூமில் சோஃபாவில் அமர்ந்து இருந்தாள்....
உள்ளே போய் படுத்துக்கோ மா....
இல்ல.... அவங்க வரட்டும்.... அப்புறம் போய் படுத்துக்கிறேன்....
இருமுறை சொன்னாள் ராஜேஸ்வரி....
ரேஷ்மி மறுபடியும் மறுபடியும் வைஷாலி வரட்டும் என்று சொன்னதால்....
சரிம்மா.... நான் போய் படுத்துக்கவா....எனக்கு பிரஷர் இருக்கு மாத்திரை போட்டுக்கிட்டேன்.... கொஞ்சம் டையர்டா இருக்கு....
சரிங்க அத்தை..... நீங்க போய் படுத்துக் கோங்க.... நான் வைஷாலி அண்ணி வந்ததும் படுத்துக்கிறேன்.
முன்தினம் தூங்காததால் ரேஷ்மிக்கு கண்கள் சொருகியது.... தூங்கி தூங்கி விழுந்தாள். அதை பார்த்து விஷ்வா தவித்து கொண்டு இருந்தான்.... வைஷூ எப்போ வருவ.... பாவம் ரேஷ்மி.... என்று நினைத்து கொண்டே இருந்தான்.
அரைமணி நேரத்திற்கு பிறகு வைஷாலி வந்தாள். அவள் காலடி சப்தம் கேட்டு முழித்து கொண்டாள் ரேஷ்மி.
எழுந்து நின்றாள்....
ஸாரி ரேஷ்மி..... கேஸ் விஷயமா அலைஞ்சதால லேட் ஆயிடிச்சு.... அம்மா கால் பண்ணி சொன்னாங்க இன்னைக்கு மட்டும் என் ரூம்ல நீ படுத்துக்கனும்னு.... நீ போய் படுத்து தூங்க வேண்டியது தானே.... நம்ம வீட்ல என்ன இருக்கு ஃபார்மாலிட்டீஸ்....
இல்ல பரவாயில்ல....உங்கள அண்ணின்னு கூப்பிடவா?
ஸ்மைல் செய்து கொண்டே
ஹூம்.... சரி.... என்றாள்.
வா.... என்று அவள் ரூமிற்கு அழைத்து சென்றாள்.
அவ்வளவு அழகாக இருந்தது அவளுடைய ரூம்.... விஷ்வா வின் ரூமை கம்பேர் செய்தால் இது 10/10....அது 5/10.....விஷ்வா வின் ரூம் சுத்தமாக இருந்ததே தவிர.... பார்ப்பதற்கு கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு அழகாக இல்லை.... கண்கள் சொருக உள்ளே நுழைந்தவளுக்கு அங்கிருக்கும் அலங்கார பொருட்கள் கடிகாரம், கட்டில் வேலைபாடுகள்....என பார்க்கும் அனைத்தும் கலை நயத்தோடு இருந்தது.
உங்க ரூம் ரொம்ப அழகா இருக்கு அண்ணி....
ஸ்மைல் செய்து கொண்டே.... தேங்க்ஸ் என்றாள்.
அண்ணி.... அண்ணாவை தப்பா நினைச்சுக்காதீங்க.... ஏதோ கோவத்தில பேசிட்டாரு....
நாங்க எப்பவோ பேசி சமாதானம் ஆயிட்டோம்.....நீ கவலைப் படாத மா....
கண்கள் கலங்க வைஷாலியை கட்டி பிடித்து கொண்டாள் ரேஷ்மி.
ரொம்ப நல்ல பொண்ணா இருக்கா.... இவள போய் இந்த விஷ்வா.... சே.... என்று நினைத்து கொண்டாள் வைஷாலி.
வைஷாலியின் ரூமிற்கு ரேஷ்மி சென்றவுடன்.... விஷ்வா தனது அறைக்கு வந்து படுத்து கொண்டான்......
அனைவருமே முந்தைய நாள் தூங்காததால் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றனர்.
*****
மதனுடைய அப்பா அம்மா வந்ததும்.... அவர்களை பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு கிளம்பினான் ராகவ்....
கண்கள் விழித்த மதன்....
சார்.... என்று ராகவை அழைத்தான்.
இப்போ எப்படி இருக்கு..... என்றான் ராகவ்.
அப்பா, அம்மா.... கொஞ்சம் வெளியே இருக்கீங்களா.... நான் இவர் கிட்ட தனியா பேசணும் என்றான் மதன்.
அவர்கள் வெளியே சென்றதும்....
சார்.... நேத்து ரேஷ்மியோட புருஷன் வந்தான்....
ராகவ் கோபமாக....
உன்னை எதாவது தொந்தரவு பண்ணானா?
இல்ல சார்.... என்று சொல்லி விஷ்வா சொன்ன அனைத்தையும் ராகவிடம் சொன்னான் மதன்....
நீங்க என்ன நினைக்கிறீங்க ன்னு எனக்கு தெரியல சார்.... ஆனா நான் அவனை நம்பறேன்.... அவன் ரேஷ்மியை நல்லா பாத்துக்குவான்.... என்னால ரேஷ்மி கஷ்டபடக் கூடாது.... ஏதோ கஷ்டத்துலையும் ஆத்திரத்திலயும் தற்கொலை செய்து கொள்ளனும்னு தப்பான எண்ணம் வந்துச்சு.... எப்போ ரேஷ்மி வந்து அழுதாளோ அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன்.... அவளுக்கு நம்மால கஷ்டமும் வருத்தமும் குற்ற உணர்ச்சியும் இருக்கக் கூடாது ன்னு.... அவளை மறக்கிறது கஷ்டம் தான்.... ஆனா கண்டிப்பா நான் டிரை பண்றேன்.... நானும் என் ஜாப் பர்மெனன்ட் ஆன உடனே கல்யாணம் பண்ணிக்குவேன்.... ரேஷ்மி கிட்ட சொல்லுங்க....என்னை நினைச்சு அவ கஷ்டபட வேண்டாம் ன்னு..... விஷ்வாவோட சந்தோஷமா வாழ சொல்லுங்க.... என்றான்.
அனைத்தையும் அமைதியாக கேட்டு விட்டு....
சரிப்பா.... நீ ரெஸ்ட் எடு.... உடம்பை பாத்துக்கோ.... பை.... என்று சொல்லி விட்டு கிளம்பினான் ராகவ்.
தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்