• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இதயத்தில் இடம் கொடுப்பாயா பாகம்-37

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
196
78
28
Maduravoyal


இதயத்தில் இடம் கொடுப்பாயா பாகம்-37

டிரைவரை கூட்டிக்கொண்டு கொஞ்சம் தூரமாக சென்று வண்டியை நிறுத்த சொன்னான் விஷ்வா.

அண்ணா..... கொஞ்சம் கீழ இறங்கி வாங்க.... என்றான்.

நீங்க மூணு வருஷமா எங்க கிட்ட வேலை செய்யறீங்க.... அன்னைக்கு அப்பா உங்களை அடிச்சதுக்கும் நான் வந்து சாரி சொன்னேன்.... அப்பாவும் அடுத்த நாள் உங்க கிட்ட சாரி சொன்னாரு இல்ல.... அவரோட கார் பங்சர் ஆனதால.... முக்கியமான மீட்டிங் போக முடியலை ன்னு தான் உங்களுக்கு கால் பண்ணிருக்காரு.... நீங்க எடுக்கல.... அதுவும் எங்க கிட்ட சொல்லாம பிரெண்ட்ஸ் ஓட காரை எடுத்துக்கிட்டு வெளியே போயிருக்கீங்கன்னு தெரிஞ்சதுனால தான் அடிச்சாரு..... அப்படி இருக்க.... அதை நீங்க மனசுல வச்சிக்கிட்டு.... பழி வாங்க நினைப்பீங்கன்னு நான் நினைக்கல....

இவனுக்கு எப்படி தெரியும்..... அவ சொல்லி இருப்பாளோ?.... பொதுவா சின்ன விஷயத்துக்கே கோபப்படுறவன் இப்போ எப்படி இவ்வளோ பொறுமையா பேசறான்.... என்று நினைத்து கொண்டான்.

கார் சாவியை கொடுங்க.... என்று கையை நீட்டினான். சாவியை வாங்கி கொண்ட பின்.... இதுக்கு மேல நான் உங்கள பார்க்கக்கூடாது.... தயவு செஞ்சு எங்கேயாவது போயிடுங்க..... மறுபடியும் என்னோட ஃபேமிலி பக்கம் வந்தீங்க..... என்று தன் ஆட்காட்டி விரலை ஆட்டி மிரட்டி விட்டு காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தான்.

கடுப்பாக ஆனான் சண்முகம். கண்களில் கோபமும் ஆத்திரமும் தேங்கி இருந்தது.

ரூமுக்கு சென்று ரேஷ்மியிடம் பேச சென்றான். ஆனால் அவள் அங்கு இல்லை.
வெளியே வந்து அவனுடைய அம்மாவிடம் ரேஷ்மி எங்கே என்று கேட்டான்.

டேய்.... வந்திட்டியா.... நானே உனக்கு ஃபோன் பண்ணலாம் என்று நினைச்சேன்.

ஏன் மா.... என்னாச்சு?....

ரேஷ்மி அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கா....

சரி அதுக்கு என்ன....

இல்லடா.... போகும் போது ஆட்டோவில் போனா.... அதான் நீ டிரைவரையும் கூட்டிக்கிட்டு போயிட்டியே.... திரும்ப வருவதற்கு டிரைவர் கிட்ட வண்டி கொடுத்து அனுப்பறேன் மா..... ன்னு சொன்னேன்.

வேண்டாம்.... உங்க பையனை அனுப்புங்க ன்னு சொன்னாளா?.... என்றான் விஷ்வா.

ஆமாம் டா.... ஆனா உங்க பையன்னு சொல்லல.... இவரை அனுப்புங்கன்னு சொன்னா....

ஓ.... ஓகே....

என்னடா ஓகே.... அவளுக்கு உன்னை பிடிச்சிருக்கு டா....

டிரைவர் மேல இருந்த பயத்துல என்னை வரச்சொல்லி இருக்கா.... இதை தெரியாம இந்த அம்மா வேற என்று நினைத்து கொண்டான் விஷ்வா.

சரிம்மா.... நானே கூட்டிக்கிட்டு வரேன்.... எத்தனை மணிக்கு வரச் சொன்னா?..... ஐந்து மணிக்கு போய் கூட்டிக்கிட்டு வா.... இங்க அவளை சாயந்திரம் விளக்கேத்த சொல்லனும்.

சரிம்மா.... நான் காலேஜ் போயிட்டு அப்படியே போய் கூட்டிக்கிட்டு வரேன். வர வாரம் லாஸ்ட் ஸெமஸ்டர் எக்ஸாம் இருக்கு.... அப்புறம் ஜூன்ல இருந்து அப்பா நம்ம ஆஃபீஸூக்கு வரச் சொன்னார்.

சரிப்பா.... ஜாக்கிரதை.... பை.... என்றாள்.

ரேஷ்மி அவளுடைய அம்மா அப்பாவிடம் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தாள்.

மாத்திரை போட்டுகொண்டு தூங்கினார் ராஜசேகர்.

கனகவள்ளியும் ரேஷ்மியும்.... ஹாலுக்கு வந்து அமர்ந்தார்கள்.

கனகவள்ளி ரேஷ்மியிடம்....

அடியேய்....

என்னம்மா....

நான் ஒண்ணு சொன்னா கோச்சிக்க கூடாது....

கோசிக்காத மாதிரி சொல்லுங்க.... கோச்சிப்பேன்னு தோணுச்சு ன்னா சொல்லாதீங்க....

ஏய்.... வெறுப்பேத்தாத டி....

சரிம்மா சொல்லுங்க நான் கோச்சிக்கல....

விஷ்வா.... கொஞ்சம் நல்ல பையன் தான்....

முறைத்தாள் ரேஷ்மி....

சும்மா முறைக்காத.... அதான் கல்யாணம் ஆயிடுச்சு இல்ல....

அதனால....

அவர் கூட ஒண்ணா சேர்ந்து குடித்தனம் நடத்து டி.....

அம்மா.... எனக்கு தெரியும்..... நான் தான் சொல்லிட்டேன் இல்ல.... கண்ணை கசக்கிக்கிட்டு வாழா வெட்டியா வந்து நிக்க மாட்டேன்னு....

அதுக்கு சொல்லல டி....

அம்மா.... இதோட இந்த பேச்சை முடிக்கறீங்களா? நான் இப்பவே கிளம்பவா?

சரிம்மா.... நான் ஒண்ணும் சொல்லலை.... என்று கோபப் பட்டு கொண்டே.... கிட்சனுக்குள் நுழைந்தாள் கனகவள்ளி.

***************

விசாலாட்சி பாட்டியின் வீட்டு வாசலில் போலீஸ் அதிகாரிகள் நின்று விசாரித்து கொண்டிருந்தார்கள்.

விசாலாட்சி பாட்டி போலீஸிடத்தில்.....

சார்.... அந்த பொண்ணு பேரு சீதாலட்சுமி. அவ புருஷன் வெளிநாட்டில் வேலை செய்யராரு ன்னு சொன்னா.... ரொம்ப தங்கமான பொண்ணு.... இவனுங்க நாலு பேரும் ரொம்ப மோசமானவனுங்க.... இவனுங்க மேல நிறைய ஈவ் டீசிங் கேஸ் இருக்கு.... முந்தா நேத்து மத்தியானம் கூட அந்த பொண்ணு கிட்ட வம்பு பண்ணினாங்க.... அன்னைக்கு ராத்திரி நான் தான் இந்த பொண்ணுக்கு துணையா போய் படுத்துக்கிட்டேன். நேத்து என் வீட்டுக்காரருக்கு அடி பட்டிடவே ஹாஸ்பிட்டல் போயிருந்தேன்..... அந்த நேரம் அந்த பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்கிட்டாங்கன்னு நினைக்கிறேன்..... பாவம் அவ மானத்தை காப்பாத்திக்க.....இவனுங்களையும் கொன்னுட்டு அவளும் செத்திட்டா போல.... என்று அழுதுகொண்டே சொன்னாள் விசாலாட்சி பாட்டி.

எஸ்.ஐ.... கான்ஸ்டபிளிடம் அனைத்து விஷயங்களையும் குறித்து வைத்துக் கொள்ள சொன்னார். அவரும் ஃபோனில் எல்லாவற்றையும் குறித்து கொண்டார்.

அவங்க கணவர் பேர் சொன்னாங்களா?.... எந்த ஊர்ல வேலை செய்யராரு.... இல்ல அவரோட ஃபோன் நம்பர்..... எதாவது என்று கேட்டார் எஸ். ஐ.

இல்ல சார்.... நான் அதெல்லாம் கேட்கல.... அன்னைக்கு ராத்திரி நான் தூங்க போகும் போது அவளோட புருஷன் தான் கால் பண்றாரு ன்னு சொன்னா....

என்னைக்கு?

முந்தா நேத்து ராத்திரி தான்...

கான்ஸ்டபிள்.... விக்டிம் ஃபோனை எடுத்து கொண்டு வாங்க....

சார் ஸ்விட்சிடு ஆஃப்ல இருக்கு.... சார்ஜ் போட்டிருக்காங்க.... பவர் சப்ளை அதிகமாக வந்ததால ஃபோனும் பர்ஸ்ட் ஆயிட்டு இருக்கு. ஓகே.... அந்த சிம் எடுத்து அந்த நம்பரோட கால் ஹிஸ்டரி எடுக்க சொல்லுங்க....

ஓகே சார்....

மீடியா ஆட்களும் சூழ்ந்திட அவ்விடமே கூட்டமாக இருந்தது. விசாலாட்சி பாட்டியையும் மீடியா ஆட்கள் பேட்டி எடுத்து நியூஸில் போட்டார்கள்.....

நித்தின் ஜியிடம் மெஸேஜ் செய்தான்....
ஜி..... மேரி நேத்து நடத்தின ஆப்பிரேஷன் பத்தி அப்டேட் கொடுத்தாளா?

இல்ல நித்தின்.... அவ நம்பர் ரீச் ஆகல.... இன்னும் ஃபோன் வரலை....

டென்ஷனாக இருந்தான் நித்தின்.

ஓகே ஜி.... நான் ராகவ் அன்ட் வைஷாலி ஃபாலோ பண்றேன்....பை...

ஓகே நித்தின்.... பை....

ராகவ் ஒரு கம்பெனியின் உள்ளே நுழைந்தான். அந்த பிரபலமான தோழிற்சாலையின் புஃட் கோர்ட்டில் (கேன்டீனில்) அமர்ந்து ராகவ் வருவதற்கு காத்திருந்தான் நித்தின். ராகவ் ஃபிரி லான்சராக வேலை செய்வதால் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணிநேரத்தில் வந்து விடுகிறான். இதை இரண்டு நாட்களாக ஃபாலோ செய்ததில் அறிந்திருந்தான் நித்தின்.

காஃபி ஆர்டர் பண்ணி வருவதற்கு வெயிட் பண்ணி கொண்டிருந்த நேரம்.... டிவியில் நியூஸ் வந்தது.

மின்சாரம் பாய்ந்தது பெண் பரிதாப மரணம். சம்பவ இடத்திலேயே இன்னும் நான்கு பேர் அதே போல் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.... தன் மானத்தை காப்பாற்றி கொள்ள அந்த பெண் இவ்வாறு செய்தாரா?....அக்கம்பக்கத்தினர் பேச்சு...... சென்னையில் பிரபலமான எடிசன் காலெனியில் நடந்த உண்மை சம்பவம்.....

இதை பார்த்த உடன் நித்தினுக்கு தலை சுற்றியது.... முகத்தை மறைத்து அவர்கள் காட்டிய உருவத்தை பார்த்தவன் அதிர்ச்சிக்குள்ளானான். ஆம்.... அது அவனுடைய மேரி தான்.... வேகமாக வெளியே வந்தவன் தன் காரை எடுத்துக்கொண்டு அந்த காலெனிக்கு சென்றான்.

அங்கே போலீஸ் கான்ஸ்டபிள்கள் சிலர் இருக்க....ஃபாரன்சிக் ஆட்கள் சிலர் தடையங்கள் தேடிக் கொண்டு இருந்தனர். சிசிடிவி ஃபூட்டேஜ் செக் பண்ணுங்க என்று ஒரு போலீஸ்காரர் சொல்ல.... ஓகே சார் என்று மற்றவர் ஓட..... ஒரே பரப்பரப்பாக இருந்தது அந்த இடம். கூட்டத்தில் ஒருவனாக நின்று பார்த்துக் கொண்டு இருந்தான் நித்தின். அப்போது மேரியின் உயிரற்ற உடலை ஆம்புலன்சில் ஏற்றினார்கள். உடம்பு வலைந்து கண்கள் விரந்து இறந்திருந்தாள் மேரி. அதை பார்த்த நித்தின் கண்கள் ரத்தக் கண்ணீராக கலங்கி இருந்தது. அதற்கு மேல் அங்கே நிற்காமல் தன் காரை எடுத்துக்கொண்டு தூரமாக ஒரு இடத்திற்கு சென்று ஜி க்கு கால் செய்து விஷயத்தை கூறினான்.

என்ன?.... நம்ம மேரி யா? நல்லா பாத்தியா?.... இதை விட ரொம்ப ரிஸ்கான ஆப்பிரேஷன் எல்லாம் ஈஸியா முடிச்சவ மேரி....என்ன சொல்ற நித்தின்....

ஆமாம் ஜி.... அவளே தான்.... என்று சொல்லி கதறி அழுதான். என்னால தீபக் இறந்ததிலிருந்தே வெளியே வரமுடியல..... இப்போ.... என்னோட உயிர்.... என்னோட மேரி..... என்று தேம்பி தேம்பி அழுதான் நித்தின்.

நித்தின்.... நீ முதல்ல வா..... நம்ம பிளானை கொஞ்ச நாள் கழிச்சு போட்டுக்கலாம். அங்கே தனியா இருக்காத.... சரி நேத்து நீ மேரியை பார்த்ததை யாராவது பார்த்தாங்களா?....அவ கிட்ட பேசின.... அவ்வளவு தான?....

இல்ல ஜி.... சாரி....

அடேய்..... சீ..... இப்போ போஸ்ட் மார்ட்டத்தில எல்லாம் தெரிஞ்சிடுமே டா.... இடியட்....

சாரி ஜி....

நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தா ஒரு பிளானை கரெக்டா எக்ஸிகியூட் பண்ணிடுவீங்கன்னு தான் உங்க கிட்ட சொன்னேன்.... ஆனா இப்போ....சே....

சாரி ஜி.... என்னால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது..... நான் என்னோட மேரி கிட்டயே போறேன் என்று சொல்லி விட்டு தன் ஃபோனை தூக்கி போட்டு விட்டு அந்த ஹைவேஸ்ஸில் தீடிரென்று நடுவில் வந்து நின்றான். வேகமாக வந்து கொண்டு இருந்த லாரி அவனை அடித்து தூக்கி போட்டது.....

ஃபோனில் ஜி என்கிற சுப்பிரமணி....

நித்தின்.... நித்தின்.... நான் சொல்றதை கேளு..... என்று சொல்லி கொண்டிருக்கும் போது அந்த ஆக்ஸிடென்ட் சப்தம் கேட்டது.

கோபத்தில் தன் ஃபோனை தூக்கி போட்டு உடைத்தான் சுப்பிரமணி.

ரத்தவெள்ளத்தில் ஸ்பாட்டிலேயே உயிர் இழந்தான் நித்தின்.

(வினை விதைத்தவன் வினை அறுப்பான்).

தொடரும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.