இதயத்தில் இடம் கொடுப்பாயா பாகம் -42
காலையில் ரேஷ்மியை வீட்டில் பார்த்தவுடன்.....
என்ன ரேஷ்மி எப்போ வந்த?..... என்றாள் ராஜேஸ்வரி சிரித்து கொண்டே.....
உங்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயம்.....
என்ன? என்ன?....
நானும் உங்க பையனும் பிரெண்ட்ஸ் ஆயிட்டோம்....
பிரெண்ட்ஸா?.....அப்போ எப்போ லவ்வர்ஸ் ஆவீங்க?.... எப்போ கணவன் மனைவி ஆவீங்க?..... என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.
அதுக்கு கொஞ்சம் நாளாகும்..... என்றாள் ரேஷ்மி.
ரொம்ப சந்தோஷம் டி கண்ணு.... நீயும் விஷ்வாவும் சந்தோஷமா இருக்கனும்....அதே போல வைஷூவும் உங்க அண்ணன் ராகவும்.....
ஆமாம் அத்தை.... மாமா நேத்து அப்பா கிட்ட பேசினார். எல்லாரும் ஓகே சொல்லிட்டாங்க.... எங்க ரெண்டு பேருக்கும் ரிசெப்ஷன் நடக்கும் போது அண்ணாவுக்கும் வைஷூ அண்ணிக்கும் என்கேஜ்மெண்ட்.....
உங்க மாமா சொன்னாரு மா.... உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கு.....
உங்க பையனை எனக்கு புடிச்ச முதல் காரணமே நீங்க தான் என்று சொல்லி அவளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள் ரேஷ்மி.
அம்மாடி.... என் புள்ளைக்கு மிச்சம் வை மா..... அப்புறம் வந்து என்னை சண்டை போடுவான்.... என்றாள் ராஜேஸ்வரி சிரித்துக்கொண்டே.
போங்க அத்தை.... என்று சொல்லி விட்டு ரூமிற்கு காஃபி எடுத்துச் சென்றாள்.
தூங்கி கொண்டு இருக்கும் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள் ரேஷ்மி.
கண்களை திறக்காமலே....
ஏன்டி இப்படி வெச்ச கண்ணு வாங்காம பார்க்குற?
கண்ணை மூடிக்கொண்டு இருக்கும் போது எப்படி டா உனக்கு தெரிஞ்சுது....
டா.... வா?
ஆமாம்.... நீ டி சொன்ன அதனால நான் டா சொன்னேன்.
நீ என்னை எப்படி கூப்பிட்டாலும் பரவாயில்ல.... ஆனால் மத்தங்க முன்னாடி என்னை டா ன்னு சொல்லிடாத....
சரி சரி... என்று சொல்லி விட்டு சிரித்தாள்.
இப்போ கூட இது கனவா நனவா ன்னு தெரியல.... என்றான் விஷ்வா.
அவனை கிள்ளிவிட்டு... அவன் கத்தியதும்.... நனவு தான்.... என்று சொல்லி சிரித்தாள்.
உன்னை.... என்று துரத்த நினைத்தவன்.... அவள் ஓடாமல் கட்டிலில் அமர்ந்தவுடன் அவள் அருகில் வந்து அமர்ந்தான்.
என்னாச்சு?...
அன்னைக்கு நீ உன் ஃபிரெண்டு கிட்ட பால்கனியில் பேசியதும்..... பூ அலங்கார ஆட்கள் வந்த போது நீ உங்க அம்மா கிட்ட பேசியதும் கேட்டேன்.... இவ்வளோ நல்ல திங்கிங் இருக்கிறவன்.... ஏன் அன்னைக்கு அந்த தப்பை செய்தான்னு நானே யோசிச்சிக்கிட்டு இருந்தேன்.... அதனால தான் எனக்கே தெரியாம உன் மேல லவ் வந்துச்சு....அம்சாவும் நீ என்னோட ஃபோட்டோ ரூம்ல காணும் ன்னு அவளை திட்டினியாமே.... அதுவும் இல்லாம.... உன்னை ரொம்ப நல்லவன்னு வேற சர்டிஃபிகேட் கொடுத்தா..... என்று சொல்லி சிரித்தாள்.
கடவுள் யாருக்கு யாருன்னு எழுதி வச்சிட்டாரு ன்னு சொல்லுவாங்க இல்ல.... அதான்.... நான் அந்த தப்பை பண்ணல ன்னா.... நீ எனக்கு இன்னைக்கு பொண்டாட்டியா வந்திருக்க மாட்ட.... என்றான்.
அதுக்காக நீ பண்ணது சரின்னு மட்டும் சொல்லாத.....
சரி சரி அதை விடு.... எனக்கு தினமும் பூஸ்ட் தரியா?....
அச்சச்சோ.... உங்களுக்கு பூஸ்ட் தான் புடிக்குமா?.... எனக்கு தெரியாது.... நான் காஃபி எடுத்துக்கிட்டு வந்திட்டேன்..... இருங்க.... நான் போய் பூஸ்ட் எடுத்து கொண்டு வரேன்..... என்று சொல்லி எழுந்தவளை கை பிடித்து அமர வைத்தான்.
என்ன?
ஏய் லூசு....
நான் பூஸ்ட் ன்னு கேட்டது.... லிப் டூ லிப் கிஸ்....
ஓ.... அப்படியா?....
தருவீயா?.....
நான் ஒண்ணு சொன்னா கோச்சிக்க மாட்டீங்களே?....
இல்ல சொல்லு.... கொஞ்ச நாள் போகட்டும்.... இப்போ நான் உன்னோட லிப்ஸை பார்த்தாலே அந்த வீடியோ ஞாபகம் தான் வருது....அப்புறம் எனக்குள்ளேயே ஒரு குற்ற உணர்ச்சி வருது.....
அவள் தலை முடியை கோதிவிட்டவன்..... எனக்கு புரியுது.... நீ என்னை லவ் பண்றன்னு சொன்னதே போதும்.... அட்லீஸ்ட் கன்னத்திலையாவது கொடுப்பியா?
ஓ எஸ்.....
அப்போ கொடு....
போய் முதல்ல பிரஷ் பண்ணுங்க.....
கன்னத்தில கொடுக்கிறதுக்கு எதுக்கு பிரஷ் பண்ணனும்....
போங்க....என்று சொல்லி அவனை பாத்ரூமுக்கு தள்ளினாள்.
அவளுடைய ஃபோனில் மெஸேஜ் வந்தது.
எடுத்து பார்த்தாள்.
மதன் ஓகே சொல்லிட்டாரு.... என்று அனுப்பி இருந்தாள் விஜி.
இவ்வளோ சீக்கிரமா சொல்லிட்டியா? என்று ரேஷ்மி ரிப்ளை செய்தாள்.
உடனே விஜி கால் செய்தாள்....
ஹலோ ரேஷ்மி..... இல்ல இன்னும் நேரா மீட் பண்ணல.... மதியம் லஞ்சுக்கு தான் வெளியே போகப் போறோம்....நேத்து ராத்திரியிலிருந்தே ஃபோன்ல பேசிக்கிட்டு இருந்தோம்....இப்போ தான் வச்சோம்.....கட் பண்ண உடனே உனக்கு கால் பண்றேன்.... என்றாள் விஜி.
அடிப்பாவி..... சூப்பர் சூப்பர்.... நானும் விஷ்வாவை ஏத்துக்கிட்டேன்.
ஏய்.... சூப்பர் டி.... ஐ ஆம் ஹேப்பி ஃபார் யூ.... என்றாள் விஜி.
சரி.... எப்போ மேரேஜ்.....
எனக்கு ஸ்டடீஸ் முடிஞ்சதும்.... மதன் ஜாப்ல செட்டில் ஆனதும்......
ஓ.... ஓகே டி.... கன்கராட்ஸ்....
நிவி கிட்ட சொல்லிட்டியா?
ஹூம் சொல்லிட்டேன்.....
அவ மட்டும் தான் தனியா இருக்கா நம்ம கேங்க்ல....
ஏய், நான் உன் கிட்ட சொல்ல மறந்திட்டேன்.... நிவி மேடம் அவ அத்தை பையனோட ஒரே லவ்ஸ் தான்.... டெய்லி அவ ஃபோன் பேசி பேசி என்னை தூங்க விடறது இல்லை ஹாஸ்டல்ல....இன்ஃபேக்ட் மதன் கிட்ட பேச ஆரம்பிச்சது கூட உங்க ரெண்டு பேரால தான்....ஏன்னா.... நான் ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணேன்..... மதனும் ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணாரு.... அதான் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்திட்டோம்.... என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.
நிவி கிட்டேயும்....மதன் கிட்டேயும்.... கன்கராட்ஸ் சொல்லிடு....
நீயே ஃபோன் பண்ணி சொல்லிடு....
நிவிக்கு கால் பண்ணி பேசறேன்.... ஆனா மதனுக்கு....இல்ல டி.... நான் கால் பண்ணா அவனுக்கு சாரி அவருக்கு கஷ்டமா இருக்கலாம்.... அதுக்காக தான்.... ஆனா உண்மையாகவே நான் ரொம்ப ரொம்ப சந்தோஷ படறேன்னு சொல்லிடு.... பை.... என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்தாள்.
ஓகே டி.... பை.... டேக் கேர்..... என்றாள் விஜி.
சந்தோஷமாக இருந்தது ரேஷ்மிக்கு.
பல் தேய்த்து விட்டு வெளியே வந்தான் விஷ்வா.
அவனிடம் விஜி அனுப்பிய மெஸேஜை காண்பித்தாள்.
விஷ்வா சிரித்துக் கொண்டே.....
இப்போ கொடு.... என்றான்.
கண்களை மூடுங்க என்று சொன்னாள்....
யம்மா.... நீ கன்னத்தில தான் கொடுக்கறேன்னு.... சொன்ன.... அதுக்கு எதுக்கு நான் கண்ணை மூடனும்....
மூடலைன்னா.... இல்ல....
சரி சரி.... என்று சொல்லி.தன் கண்களை மூடிக்கொண்டான் விஷ்வா....
அவள் அவனுடைய கன்னத்தில் தன் இதழ்களை பதித்தாள். அவன் கட்டி அணைத்து கொண்டான்.
அம்மாடி ரேஷ்மி.... என்று ராஜேஸ்வரி அழைத்தாள்.
இதோ வரேன் அத்தை என்று சொல்லி விட்டு அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வெளியே வந்தாள்.
அங்கே ராகவ் நிற்பதை பார்த்து விட்டு.... ஓடிச் சென்று ராகவை கட்டிபிடித்து கொண்டு....
வாங்க அண்ணா.... என்றாள்.
சாப்பிட்டியா டி?..... என்றான் ராகவ்.
இல்லண்ணா.... இனிமே தான்.... வாங்க சாப்பிடலாம்....
இல்லடி.... அம்மா பால் கொழுக்கட்டை பண்ணாங்க.... உனக்கு பிடிக்கும் ன்னு கொடுத்து அனுப்பினாங்க.... நீ நேத்து அங்க தங்க போற ன்னு அம்மா சொன்னாங்க....
இல்லன்னா.... நேத்து விஜி மாலுக்கு வந்தா பேசிக்கிட்டு இருந்தோம்.... லேட் ஆயிடிச்சு.... நாங்க போறதுக்கு மற்ற அப்பா அம்மா தூங்கிடுவாங்க.... அதான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் ன்னு.... அம்மாவுக்கு கால் பண்ணி சொல்லிட்டேன்..... என்றாள்.
ஓ அப்படியா....சரி... நான் கிளம்பறேன்....
இருங்க அண்ணா.... டிபன் சாப்பிட்டு விட்டு போங்க....
உனக்கு அம்மா பத்தி தெரியாதா.... சாப்பிடாம கிளம்ப விடுவாங்களா?....
சரிண்ணா.... டீ மட்டுமாவது போடறேன்.... அதுவும் இல்லாம அண்ணியை பார்க்காம எப்படி போவ?.... கோச்சிப்பாங்க இல்ல என்று அவனுடைய காதில் கிசுகிசுத்தாள்.
ஹூம்.... சரி.... டீ மட்டும் கொடு.... என்று சொல்லி விட்டு சோஃபாவில் அமர்ந்தான் ராகவ்.
விஷ்வா வெளியே வந்ததும்....
வாங்க வாங்க.... என்றான் ராகவை பார்த்து.
ஹாங்.... என்றான்.
டிபன் சாப்பிடறீங்களா?
இல்ல வேணாம்.....சாப்பிட்டேன்....
காஃபி.... டீ.... எதாவது?
இதோ ரேஷ்மி போட்டுக்கிட்டு இருக்கா பா..... என்றாள் ராஜேஸ்வரி.
ஓ.... சரிம்மா.... என்றான் விஷ்வா.
அதற்குள் வைஷாலி கீழே இறங்கி வந்தாள்.
ராகவை பார்த்ததும்....
ஹேய்.... வாட் எ சர்ப்பிரைஸ்.... எப்போ வந்தீங்க?.... என்றாள் வைஷாலி.
இப்போ தான்.... என்று சொன்னான் ராகவ்.
வாங்க சாப்பிடலாம் என்று சொன்னாள் வைஷாலி.
இல்ல ஷாலி.... நான் சாப்பிட்டு விட்டேன்.... நீ சாப்பிடு டி.... என்று ஒரு சொல்லியவன் அச்சச்சோ எல்லார் முன்னாடியும் டி சொல்லிட்டோமே.... என்று நினைத்து தன் நாக்கை கடித்து கொண்டான்.
வைஷாலி அவனை பார்த்து முறைத்தாள்...
ராஜேஸ்வரி ரேஷ்மி மற்றும் விஷ்வாவும் ஆச்சரியமாக பார்த்தனர்.
என்ன அண்ணா..... டி சொல்ற அளவுக்கு கிளோஸ் ஆயிட்டீங்களா?....
அச்சச்சோ.... எங்க அக்காவுக்கு டி சொன்ன புடிக்காதே.... என்றான் விஷ்வா.
வைஷாலி சிரித்து கொண்டே சாப்பிட அமர்ந்தாள்.
அடிப்பாவி.... ஹஸ்பண்டா இருந்தாலும் டி சொல்ல ஒத்துக்க மாட்டேன்னு சொன்ன?.... இப்போ எப்படி டி.....
ஏய்.... நீ டி சொல்லாத.... எனக்கு பிடிக்காது.... என்று அவனிடம் பேசிவிட்டாள்.
தேங்க்ஸ் வைஷூ.... உன்னை என் கிட்ட பேச வைக்கத்தான்.... டி சொன்னேன்..... சாரி.... என்றான் விஷ்வா.
கண்கள் கலங்க அவன் தோளைத் தட்டி.... என் தம்பி தப்பு பண்ணிட்டான்னு எனக்குள்ள ஒரு கஷ்டம், வெறுப்பு..... அதான் என்னால உன்னை மன்னிக்க முடியல.... நீ மதன் கிட்ட சொன்னதை.... மதன் ராகவ் கிட்ட சொல்லியிருக்கான்.... அதை தெரிஞ்சதும் ராகவே உன்னை மன்னிக்க தயரா ஆகிட்டாரு.... அப்புறம் நான் மட்டும் என்ன?....
என்ன?.... என்னை மன்னிச்சிட்டாரா?....
வேற வழி இல்லாம.... அப்படிதானே ராகவ்.... என்னை போலவே.... என்று சொல்லி சிரித்தாள் வைஷாலி.
ஆமாம்.... என்று தலையை மட்டும் ஆட்டினான்.
வேகமாக சென்று ராகவின் காலில் விழுந்தான் விஷ்வா.
தூக்கி விட்டவன்.... என் தங்கச்சியை நல்லா பாத்துக்கோ.... என்றான்.
கண்டிப்பா.... உங்களை மாமா ன்னு கூப்பிடவா?
ஹூம்.... என்று சொன்னான்.
தேங்க்ஸ் மாமா.... என்று சொல்லி கட்டிக் கொண்டான்.
சிறிது நேரம் கழித்து கிளம்பினான் ராகவ்.
ரேஷ்மியிடம்.... நான் பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ற விஷயமா மும்பை போகனும்.... மூணு நாள்ல வந்திடுவேன்.... அப்பா அம்மாவை பாத்துக்கோ டி.... என்றான் ராகவ்.
அண்ணா.... இதெல்லாம் நீங்க சொல்லனுமா?.....
கவலைப்படாதே பா.... நான் ரேஷ்மி அப்புறம் விஷ்வாவை வேணும்னா நீ வர வரைக்கும் உங்க வீட்ல போய் இருக்கச் சொல்றேன்..... என்றாள் ராஜேஸ்வரி.
அங்கே போனால் இங்கே யாரு பாத்துக்குவாங்க?.... என்று யோசித்தான் ராகவ்.
அம்மா.... வர சன்டே தான் எங்களுக்கு ரிசெப்ஷன் அப்புறம் வைஷூவுக்கும் மாமாவுக்கும் என்கேஜ்மென்ட் பண்ணலாம் ன்னு அப்பா சொன்னாரு ன்னு ரேஷ்மி சொன்னா.... ஸோ.... அத்தையையும் மாமாவையும் இந்த நாலு நாள் இங்கே கூப்பிடலாம்.... பர்சேஸ் போக.... எல்லாம் கலந்து பேசி வாங்க.... எல்லாம் கரெக்டா இருக்கும் இல்ல?....
செம ஐடியா.... என்றாள் ரேஷ்மி.
அவங்க ஒத்துக்குவாங்களா?.... என்றாள் வைஷாலி.
ஆமாம் பா.... விஷ்வா சொன்னது போல அவங்க வந்திட்ட நல்லா இருக்கும்.... என்றாள் ராஜேஸ்வரி.
சரிங்க.... நான் சொல்றேன் அவங்க கிட்ட.... என்றான் ராகவ்.
விஷ்வா ரேஷ்மியை பார்த்தான்.... உடனே அவள் தேங்க்ஸ் என்பது போல தலையை ஆட்டினாள்.
விஷ்வா.....கண்களாலேயே வெல்கம் என்றான்.
இப்போது தான் ராகவிற்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
பை சொல்லிவிட்டு கிளம்பினான் ராகவ்.
வைஷாலி மற்றும் விஷ்வாவிற்கு அவன் டெல்லி செல்வது தெரியும்.... ஆனால் மற்றவர்களுக்கு தெரியாது.
ராகவ் டெல்லிக்கு சென்றான்....
சுப்பிரமணி சென்னைக்கு வந்தான்....
தொடரும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.