• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இதயம் 16💘

Rizka muneer "Rizii"

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 12, 2022
16
5
3
18
Kandy
tamil.pratilipi.com
வீரை எதிர்பார்க்காத மதி வீரின் தீடீர் குரலில் திடுக்கிட்டு பிடிமானமாய் பிடித்திருந்த மரக்கிளையை தவற விட அதனால் பிடிமானமின்றி மற்றொரு கிளையில் வைத்திருந்த கால் தடுக்கி "ஆ..ஆ.." என்று கத்திக் கொண்டே கீழே விழப் போனவளை சட்டென பாய்ந்து தன் கரங்களில் தாங்கிப் பிடித்துக் கொண்டான் வீர்.

ஓர் கரத்தை தாவணியால் மறைத்தவாறு மறு கையால் வீரின் சட்டையை இறுக்கமாய் பற்றி பயத்தில் பெரிபெரிய மூச்சுக்களாய் வெளியேற மிரண்ட மான் விழிகளை விரித்தவாறு அவன் விழிகளை நோக்கினாள்..

இருவரின் விழிகளும் ஒன்றாய் கலக்க வீர் தன் பார்வையை விலக்கி பெருமூச்சொன்றை இழுத்து விட்டவன் மதியை முறைக்க மதி விழிகளை உருட்டியவாறு பாவமாய் பார்த்து வைத்தாள்.

"கொஞ்சமாச்சும் அறிவிருக்கா... பார்க்க பாப்பா போல இருந்துகிட்டு செய்ற வேலையா இது.. யாராச்சும் மரத்து மேல ஏறுவாங்களா.. இப்போ மட்டும் நான் வந்து பிடிக்கலன்னா உன்னோட இடுப்பெலும்பு முறிஞ்சிருக்கும்.." என்று பட்டாசாய் வெடித்துத் தள்ள மதியின் கண்கள் கலங்கியது..

அவள் கண்கள் கலங்கியதில் தான் மேலும் கூற வந்ததை நிறுத்தியவன் "எதுக்கு இந்த தேவயில்லாத மங்கி வேல?" என்று சாந்தமாய் வினவ அவன் கேள்விக்கான பதிலாய் தான் தாவணியால் மறைத்திருந்த தன் வலதுகரத்தை வெளியே எடுத்து காட்டினாள் மதி.

புருவ முடிச்சுடன் அவள் கரத்தை பார்த்தவன் விழிகள் சுருக்கியது..
மதியின் கரத்தில் இன்னும் சரியாக சிறகு கூட முளைக்காத பிஞ்சுப்பறவை ஒன்று சத்தம் வெளியே வராதவாறு வாயை பிளந்து கீச்சிட்டவாறு அவள் மென்கரத்தில் தாயின் கதகதப்பையும் அரவணைப்பையும் தேடி சுருண்டுக் கொண்டிருந்தது..

வீர் தன் கரத்திலிருந்த மதியை கேள்வியாய் பார்க்க அவன் பார்வையின் அர்த்தம் லேசாய் புரிந்தவளாய் இவ்வளவு நேரம் முகத்தில் பிரதிபலித்த மிரட்சி எங்கோ பறந்து செல்ல அவள் அழகுவதனம் முழுவதும் வாட்டத்தை தத்தெடுத்துக் கொண்டது..

அந்த பிஞ்சுப்பறவையை கனிவுடன் நோக்கியவாறு "நான் செடிங்களுக்கு தண்ணி பாய்ச்ச வரும் பொழுதுதான் இந்த குட்டிய பார்த்தேன்... பாவம் எப்படியோ தெரியல கீழ விழுந்து கிடந்திச்சி.. மேல மரத்துல தான் இதோட கூடு இருக்கு.. தவறுதலா விழுந்திருக்கும் போல.." அதோ என்று மேலே மரத்தை நோக்கி கை காட்ட வீரும் பார்வையை மேலே செலுத்தினான்..

ஆம் அதன் இருப்பிடம் மரத்தில் ஓர் கிளையில் சிறிதால் காய்ந்த கீற்றுக்களை கொண்டு அமைக்கப்பட்டிருந்தது.. அப்பறவையின் தாயோ பிள்ளையை மீட்க முடியாது மரக்கிளைகளில் அங்கும் இங்கும் சிறகடித்துக் கீச்சிட்டவாரே தாவிக் கொண்டிருந்தது..

"இந்த குட்டிய அதோட தாய்க்கிட்ட கொண்டு போய் ஒப்படைக்கதான் ரொம்ப ட்ரை பண்ணி மரத்து மேல ஏறினேன் ஆனா கடைசில நானும் சேர்ந்து கீழ விழுந்துட்டேன்.. " என்று தன்னை மறந்து அப்பறவையை பார்த்து இதழைப் பிதுப்பிக் கூறியவள் அப்பொழுது தான் தான் அந்தரத்திலிருப்பதை உணர்ந்து பார்வையை தாழ்த்தியவாறு "நான் இறங்கனும் என்று மெல்லிய குரலில் கூற வீர் தன் கரத்தில் தாங்கியிருந்தவளை நிலத்தில் இறக்கிவிட்டான்..

மதியின் கரத்திலிருந்து கீச்சிட்டுக் கொண்டிருந்த குட்டிப் பறவையை பார்க்கையில் அதன் தாயை மனநிலையை விட மதியின் மனதிற்கே அப்பறவை தாயின் அரவணைப்பிற்காய் ஏங்குவது ஏகத்திற்கு வருந்தத்தை கொடுத்தது.

அப்பறவை குஞ்சிற்கு வலிக்குமோ என்று பயந்து விரலிற்கு வலிக்காத அளவு மெல்ல வருடிக் கொடுத்தவள் அதன் இருப்பிடத்தை ஏக்கத்துடன் பார்த்து வைத்தாள்...
அவள் விழிகளில் அவள் மனநிலை அப்பட்டமாய் பிரதிபலித்தது..

திடீரென அந்தரத்தில் மிதக்க இதயம் வேகமாய் துடிக்க பதற்றத்துடன் சட்டென குனிந்துப்பார்த்தாள்..
அவளிடையை பற்றியவாரு அவளை பார்த்துக் கொண்டிருந்தான் வீர்..

அவளிடையை பற்றி அவளை அவனே உயரத் தூக்கியிருந்தான்..

மதியோ அதிர்ச்சியுடன் வீரைப்
பார்க்க வீரோ கண்ணசைவால் அவளை மறுபுறம் பார்க்கும் படி செய்கை காட்ட அவன் கண்ணசைத்த இடத்தை பார்த்தாள் மதி..

அவளுக்கு கை எட்டும் தூரத்திலிருந்தது அந்த பறவையின் கூடு.. முகம் பிரகாசமாய் மலர முகம் கொள்ளா புன்னகையுடன் தன் கையிலிருந்த பறவையையும் அக்கூட்டையும் மாறிமாறிப் பார்த்தாள்..

"குயிக்கா வெக்கிறியா என்னால இதுக்கு மேல இந்த வெயிட்டத் தாங்க முடியாது.. " என்று பூமூட்டையை தாங்கியவாறு வீர் கூறவும்,

"நான் அவ்ளோ வெயிட்டாவா இருக்கேன்" மைண்ட் வாய்ஸ் என நினைத்து வெளிப்படையாய் மதி கேட்டு வைத்தாள்..

"ஆமா உனக்கு இப்போ அதுதான் முக்கியம் பாரு.." என்று அவன் முறைக்க அவன் முறைப்பை கண்டு கொள்ளாதவள் போல் பாவனையால் நழுவியவள் அந்த பறவையை மெல்ல எடுத்து அதன் கூட்டில் வைத்தாள்.

மதி வீரின் தோலை தாங்களாய் பற்றிக் கொள்ள வீர் மெல்ல மதியை இறக்கவும் அவளிடையில் அவனதரங்கள் உரச பெண்ணவள் உடல் மின்சாரம் பாய்ச்சது போல் சிலிர்ப்பு எழ கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்..

அவனதரங்கள் அப்படியே மேலே சென்று மென்மையாய் உரச பெண்ணவளோ அதிர்ந்து சட்டென கண்களை திறக்க இருவர் முகமும் மூச்சுக் காற்று உரசும் இடைவெளியில் காணப்பட்டது..

அவன் முகத்தில் எந்த வித உணர்வும் தெரியாத பட்சத்தில் தன் பிரம்மை என நினைத்து தன்னையே மானசீகமாய் திட்டிக்கொண்டாள் மதி பறவையின் கீச்சுக் குரலில் அவனிடமிருந்து விலகி மேலே நிமிர்ந்து பார்த்தாள்.

தாய் பறவை சிறகை விடாது அடித்தவாறு அதன் குஞ்சை அதன் சொண்டால் உரசி தன் பாசத்தை வெளிப்படுத்த அதன் குஞ்சும் அதன் சிறகில் உரசி தஞ்சம் புகுந்து கொண்டது..
இக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த மதியின் இதழ்கள் அழகாய் விரிந்து கொண்டது..

வீரோ விழியகற்றாது விசித்திரமாய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.. அவளை சந்தித்ததிலிருந்து மிரட்சி, அதிர்ச்சி, அழுகை, தவிப்பு என பல உணர்வுகளை வெளிப்படுத்துபவள் இன்று தான் முகமலர்ந்து முகம் கொள்ளா புன்னகையை சிந்துவதை பார்க்கிறான்.. அதுவும் இன்னுமோர் உயிரின் மகிழ்ச்சியில் தான் மகிழ்கிறாளல்லவா..

அப்பறவைகளையே பார்த்தவாறு "நான் இந்த குட்டி பர்ட்டா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்ல" என்று தன்னையே அறியாது கூறியவள் மேலும் அங்கு நிற்காது அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

வீரோ புருவமுடிச்சுடன் அவளின் பின்னால் சென்றான்.

"ஓய் பேப்ஸ்.. இத யாரு பண்ணுவா?" வீர் கிச்சனை நோக்கி சென்ற மதியை பார்த்து கூற மதி புரியாது மான் விழிகளை உருட்டியவாரே அவனை திரும்பிப் பார்த்தாள்.

வீர் பார்வையை தாழ்த்தி தான் அணிந்திருந்த பூட்டப்படாத சட்டையை காட்டினான்.. மதி வேறு மனநிலையிலிருந்ததால் இப்பொழுதுதான் அவன் கோலத்தை தெளிவாகக் காணுகிறாள்.

மெல்ல அவனருகே வந்து அவன் பட்டனில் கண்ணை பதித்தவாறு ஒவ்வொரு பட்டனாய் பூட்டத்துவங்கினாள்.

அனைத்து பட்டனையும் பூட்டியவள் அதன் காலரை நேர்த்தியாய் சரி செய்துவிட்டு அவன் கூறாமலே மேலே சென்று அவன் கோர்ட்டையும் எடுத்து வந்து அணிவித்து விட்டாள்..

"எதுக்கு இதெல்லாம் நீயா பண்ற? " என்று அழுத்தமாய் மதியை பார்த்தவாறு வீர் வினவ,

"நீங்க தானே நேத்து பண்ண சொன்னிங்க" என்று கண் சிமிட்டியவாறு உள்ளிருந்த குரலில் கூறியவள் கோர்ட்டின் கையை சரி செய்து விட்டாள்..

வீர் எதுவும் கூறாது நேராக சென்று சாப்பாடு மேசையில் அமர முன்னமே அனைத்தையும் எடுத்து வைத்திருந்தவள் தட்டில் உணவை பரிமாரினாள்...

இரண்டு சாப்பாத்தியை தட்டில் வைத்ததும் கையை நீட்டிப் போதும் எனத் தடுத்தவன் தட்டை அவள் புறம் தள்ளினான்..
மதி புரியாமல் பார்க்க "ஊட்டி விடு.. அதான் நான் ஒருவாட்டி சொன்னா நெஸ்ட் டைம் நான் சொல்லாமலே பண்ணுவல்ல சோ இனி இதயும் அந்த லிஸ்ட்டுல சேர்த்துக்கோ.. " என்று புருவம் வளைத்துக் கூற மதி நாளா புறமும் தலையை ஆட்டி வைத்தாள்..

"தலைய ஆட்டிக்கிட்டிருந்தது போதும் குயிக்கா ஊட்டி விடு நேரமாச்சு.." என்று தன் கை கடிகாரத்தைப் பார்த்தவாறு அவசரப்படுத்த மதி அவசரமாய் தட்டை எடுத்து சாப்பாத்தியை பிய்த்து அவன் வாயருகே கொண்டு செல்ல அவள் கரத்தை பார்த்தவாரே வாங்கிக் கொண்டவன் அதன் பின் எந்த எதிர்வினையுமின்றி அனைத்துப் பிடியையும் அவள் நீட்ட முன் அவனாய் வாய் திறந்து வாங்கிக்கொண்டான்..


சத்யா குரூப் ஒப் கம்பெனியில் வீர் தனது அறையில் இருக்கையில் சாய்ந்தவாறு எதையோ சிந்திக் கொண்டிருந்தான்..
அவன் சிந்தனையில் அவன் கையிலிருந்த பேனை தான் அவன் சுழற்றும் திசைகேட்ப சுற்றிச் சிக்கிச் சின்னா பின்னமானது..

வீரின் மொபைல் அலற அதிலிருந்த எண்ணைப் பார்த்தவன் அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

"நானே உனக்கு கால் பண்ணத்தான் இருந்தேன்.. "

"வட்டர் சப்ரைஸ்.. என் ப்ரதர் எனக்கு கால் பண்ணனும்ன்னு நெனச்சியிருக்காரா..அப்படின்னா இன்னிக்கு மழை கன்போர்ம்" என்று எதிர்புறத்திலிருந்தவன் வாரி விட்டவன் எதிர்புறம் பதிலின்மையில் தன் அண்ணனை புரிந்தவனாய் "ஓகே ஏதாச்சும் இம்போர்ட்டண்ட்டான ஒர்க்கா? " என்று விடயத்திற்கு வர,

வீர் நெற்றியை நீவியவாறு "வீட்டுக்கு வா பேசிக்கலாம்.. ஆ ஒன் மோர் திங் காலேஜ்ஜ கட் பண்ணிட்டு வந்துடாத எப்போ செமிஸ்டர் பிரேக் தந்ததும் வா.. " என்று அவன் பதிலை கூட எதிர்பார்க்காது அழைப்பை துண்டிக்க எதிர்புறத்திலிருந்தவனோ மொபைலை பார்த்தவாறு "என்னைய பத்தி நல்லா புரிஞ்சி வெச்சிருக்காரு ஸ்மார்ட்.." என்று மெச்சிக் கொண்டான்..


மழை பெய்தது கணக்காய் வரலாற்றில் பொறுக்கப்பட வேண்டிய அதிசயமாய் வீர் மதியம் வீட்டிற்கு சென்றான்..

அவனலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் இது சாத்தியமா என்பது போல் வாயை பிளந்தனர்..
வீர் அலுவலகத்திற்குள் நுழைந்து விட்டால் ஒரு போதும் வேலைகளை பூர்த்தி செய்யாது வெளியேற மாட்டான் அதுவும் மதியநேரம் வாய்ப்பேயில்லை..
இன்று ஏனோ பல கோப்புகள் கையொப்பம் போடாது பாடிக்கிடக்க அவனோ அவற்றையெல்லாம் அசட்டை செய்து விட்டு வீட்டை நோக்கிக் கிளம்பிவிட்டான்..

காரணம் அவனே அறிவான்.. !
ஏதும் தலை போகும் வேலை உள்ளதோ என்னவோ..

வீட்டிற்குள் நுழைந்தவன் சோபாவில் தனது கோர்ட்டை கழட்டி வீசி விட்டு அமர்ந்து கொண்டான்..

வீடோ ஓர் சின்னத்துரும்பு ஓசையுமின்றி மயான அமைதியாய் காணப்பட ஏதோ தப்பாய் உள்ளது என சந்தேகம் எழ எழுந்து நேரே சமையலறையை நோக்கிச் சென்றான்.. அறை முழுதாய் நொட்டமிட அதுவோ மதியம் சமைத்ததற்கான அறிகுறி எதுவுமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது..

தனது வோர்ஷ்சை ஓர் சுற்று சூழலற்றியவன் வேக எட்டுக்களில் மாடியிலிருந்தான்.. ஒவ்வொரு இடமாய் நோட்டமிட்டு வந்தவன் பார்வை அவனறை பால்கனியில் பதிய ஓர் நொடி அதிர்ந்து போனான்..



துடிக்கும்...