தன் குடும்பத்தின் இன்றைய நிலை தாங்காத கஸ்தூரி அங்கே இருக்கும் அம்மனிடம் வேண்டி கொண்டிருக்கும் நேரம் அங்கே தன் சாலாவுடன் வந்த ரிஷி அங்கே இருந்த தேவநந்தனின் குடும்பத்தை கண்டவனுக்குள் அலை அலையாய் பிரளயம் பொங்கி எழுந்தது.
அவர்களையும் தன்னவளையும் கண்டவனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.. அடுத்த நொடியே தன்னவளுடன் தான் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று யோசித்தவன் தன்னவளை பார்க்க அவளோ நீண்ட நாட்கள் கழித்து தன்னவனுடன் கோவிலுக்கு செல்ல ஆசையாய் முகம் விகசிக்க வந்திருந்தாள்.
அவளின் ஆசை முகத்தை கண்டவனுக்கு என்ன சொல்லி அவளை இங்கிருந்து அழைத்துச் செல்வது என்று தெரியவில்லை.. ஆனால் அடுத்த நொடியே தன்னவள் தான் தனக்கு எல்லாம் என்று முடிவு செய்தவன்,
"அய்யோ சாலா என்னால முடியலை மா..." என்றபடி தன் அடி வயிற்றில் கையை வைத்து அழுத்திக் கொண்டான்.
அவனின் கதறல் கேட்ட அடுத்த நொடியே பதட்டத்துடன்,
"அய்யோ ரிஷி என்னாச்சி உங்களுக்கு.." என்றாள் படபடப்பாய்.
"தெரியலை சாலா மா வயிறு ரொம்பவே வலிக்குதுடி.. என்னால ரொம்பவே முடியலை மா.. ப்ளீஸ் டி ஹாஸ்பிடல் போலாமா.." என்றான் அவளின் கலங்கிய கண்களை பார்த்தபடி.
"அய்யோ இது என்ன கேள்வி வாங்க போலாம் ரிஷி.." என்று அவனை தன் தோளில் தாங்கி அணைத்தபடி வெளியே சென்றாள்.
" இல்லை டி நீ ஆசையா கோவிலுக்கு வந்தே.. நீ போய் சாமி கும்பிட்டு வா நான் கார்ல வெயிட் பண்றேன்.." என்றான் அவள் கோவில் உள்ளே செல்லக்கூடாது என்று வேண்டியபடி.
அவனின் நினைப்பை பொய் ஆக்காமல், "அய்யோ ரிஷி கோவிலுக்கு எப்போ வேணாலும் போலாம்.. முதல்ல நீங்க வாங்க உங்க உடம்பை பாக்கலாம்.. எந்த கடவுளும் என்னை கோவிச்சிக்க மாட்டாரு.. வாங்க போலாம்.." என்று பேசியபடி தன்னவனை அழைத்து கொண்டு காருக்கு சென்றவள் அவனை அமர வைத்த அவள் வண்டி ஓட்டினாள்.
பதட்டத்துடன் பெண்ணவள் வண்டி ஓட்டிக் கொண்டிருக்க ரிஷிக்கு தான் குற்றவுணர்ச்சியாய் இருந்தது.. இன்னும் எத்தனை நாளைக்கு தன்னவளை இப்படி ஏமாற்ற முடியும்.
இதற்கு தீர்வே இல்லையா..? நிச்சயம் தீர்வு உண்டு.. நடந்த உண்மையை முழுதாய் அவளிடம் சொல்லிவிட்டு அவளின் மன்னிப்புக்காக காத்திருப்பது.. ஆனால் அவனால் அது முடிகின்ற காரியமா..? நிச்சயம் இல்லை அவனால் முடியாது..
அப்படி ஏதேனும் நடந்தால் அவளை பிரியும் அந்த நொடியில் நிச்சயம் உயிர் துறந்திருப்பான் ஆடவன்.
ஆம் அத்தனை காதல் அவளின் மேல் உள்ளது.. அதனால் தான் உண்மையை சொல்லி அதை உடைக்க ஆடவனால் முடியவில்லை.
ஆனால் அதே நேரம் அதீத காதலும் பேராபத்தில் முடியும் என்பதை ஆடவன் உணரவில்லை.. அப்படி உணரும் தருணம் நிச்சயம் அவனவள் அவனின் அருகில் இருக்கமாட்டாள்.
இருவரும் மருத்துவமனைக்கு வந்து அவனுக்கு சிகிச்சை செய்து கொண்டு வீட்டிற்கு சென்றனர். அவனுக்கு தெரிந்த மருத்துவர் அவன் கூறிய பொய்யை அவளிடம் மறைத்து விட்டார்.
இங்கே குழந்தைக்கு பெயர் வைத்து விட்டு வீட்டிற்கு வந்த அனைவரும் ஒரு மோனநிலையில் தங்களின் அறைக்குள் அடைக்கலமாயிருக்க கன்யாவோ மிருதுவிற்கு பாலை குடிக்க வைத்து தோளில் போட்டு தட்டி அவள் தூங்கியது அவளை எடுத்து கொண்டு தேவநந்தனின் அறைக்குள் வந்தாள்.
அவள் வந்ததை கண்டும் காணாமல் இருந்தவனை கண்டவள் மிருதுவை அங்கிருந்த தொட்டிலில் போட பிள்ளைகனியோ அவளின் சூடு இல்லாமல் போகவும் அழ ஆரம்பிக்க தொட்டிலை ஆட்டிக் கொண்டே அங்கே அமர்ந்தவனை கண்டவள் மெதுவாய் தாழ்ந்த குரலில் பாட ஆரம்பித்தாள்.
ஆ...ஆ...ஆ..ஆ…..
ஒரு சந்தன காட்டுக்குள்ளே
முழு சந்திரன் காயயிலே
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
மலை தென்றலும் வீசயிலே
குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே
ராத்திரி வேளையிலே
கண் முழிச்சி நான் இருப்பேன்
கண்ணே உன் பக்கத்திலே
சோலை பூவே ஆராரோ
பசும் சொக்க பொன்னே ஆரிரோ..
அங்கே அமர்ந்தவனுக்கும் தற்சமயம் அந்த பாடல் தேடுவது போல் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான். அது தெரிந்தும் அவனை பாராமல் மிருதுவை பார்த்து கொண்டே மீண்டும் பாட தொடங்கினாள்.
நான் வளர்க்கும் மூத்த பிள்ளை
பூவும் பொட்டும் தந்த
நாயகனே நாயகனே..
நான் குளிக்கும் மஞ்சளுக்கு
நாளும் காவல் நின்ற
நல்லவனே நல்லவனே..
என் மாமன் அன்புக்கு
கோயில் கொண்ட தெய்வம் கூட
ஈடில்லையே
எல்லாமே என் ராசா
வாழ்வோ தாழ்வோ
சொந்தம் பந்தம் வேரில்லையே..
என் போலே யார்க்கும் கணவன் வாய்க்காது
ஈரேழு ஜென்மம் உறவு நீங்காது
மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே
குழலை போலே தினம் மழலை பேசும்
இளம் பூங்கொத்தே பூங்கொத்தே..
இந்த நொடி அவளின் மடியை தஞ்சமாய் தேடியது ஆணின் மனம்.. அடுத்த நொடி தனது கோபம் வீம்பு வரட்டு கௌரவம் என அனைத்தும் மறந்து போய் அங்கே நின்றவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
மிருது தூங்கிவிட தன்னை அணைத்தவனை விலக்கி விட மனமில்லாமல் அவனின் முதுகில் தடவி ஆறுதல் தந்தாள் பெண்ணவள்.. மெல்ல அப்படியே அவனை நகர்த்தி கொண்டு வந்து அவனை கட்டிலில் அமர வைத்தவளின் மடிமீது படுத்து கொண்டவன் அவளுடைய வயிற்று புறம் திரும்பி அவளை இறுக்கமாய் கட்டி அணைத்தவனின் கண்ணீர் துளிகள் அவளின் வயிற்றில் சூடான் இறங்கியது.
"நந்து என்ன இது சின்னபிள்ளை மாறி.. முதல்ல கண்ணை துடைங்க.." என்று அவனின் கண்ணீர் துடைக்க முற்படும் போது அவளின் கையை பிடித்து நிறுத்தியவன் அவளின் புறம் கோபமாய் திரும்பி,
"ஏன்டி எப்பவும் என்னை பலவீனப்படுத்திட்டு இருக்க.. நான் உன்னை கூப்பிட்டேனா.. நான் தேவையில்லைன்னு போனியே அப்படியே போயிட வேண்டியது தானே.. ஏன்டி ஏன் என்னை பக்கத்துல இருந்து கொல்ற.." என்றான் ஆக்ரோஷமாய்.
ஏதோ அந்த இடத்தில் பிள்ளை இருந்ததால் அந்த ஆக்ரோஷத்தையும் அமைதியாய் காட்டினான் ஆடவன்.
அதை உணர்ந்த பெண் மனம் இதே வாய் தான், 'நீதான்டி என்னோட பலமே..' என்றது ஒரு முறை. அதை நினைத்து மென்மையாய் சிரித்தவள் மெல்ல அவனின் தலையை வருடி விட அவளின் மடியில் படுத்து கொண்டே அப்படியே கண் அயர்ந்து போனான்.
எத்தனை நாட்கள் தூங்காமல் தவித்தது.. இன்று அவளின் மடியில் நிர்மலமாய் உறங்கினான் ஆடவன்.
அதை பார்த்தவளுக்கு மனம் கனத்து போனது.. எப்படி இருந்தவன் யாருக்கும் அடங்காத காளையாய் இருந்தவனை இந்த குடும்ப பாசம் இத்தனை மோசமாய் ஆக்கிவிட்டிருக்கிறதே என்றவளுக்கு பெரும் ஆற்றாமையாய் இருந்தது.
அவளும் அவனை பற்றி நினைத்தபடியே அப்படியே அமர்ந்த வாக்கிலே உறங்கிவிட்டாள்.
பாதி இரவில் கண் விழித்தவனுக்கு யாரின் மடி என்று புரியாமல் பார்த்தவனின் முகம் எதிரே உறங்கியவளை கண்டதும் பனியாய் உருகி விட்டது.
மெல்ல அவளை படுக்கையில் படுத்தவன் அவளின் அருகிலே மீண்டும் படுத்து தன் கையை தலைக்கு முட்டு கொடுத்து உறங்க ஆரம்பித்தவனின் நெஞ்சில் பூமாலையாய் உருண்டு வந்து படுத்தாள் பெண்ணவள்.
தன் மேனியில் பூவாய் இருந்தவளை தாங்கியவன் அவளை அணைத்து பிடித்தபடி அப்படியே உறங்கி போனான்.
ஆதவனின் பொற்கரங்கள் பூமியை தொட்டு தழுவும் அந்த அதிகாலை நேரத்தில் அலைபேசி அழைப்பில் கண் விழித்த தேவநந்தன் தன் மார்பில் தூங்கிய பூஞ்சிலையை பக்கத்து தலையனையில் படுக்க வைத்து விட்டு எழுந்தவன் அழைபேசியை பார்க்க அதில் வந்த செய்தியில் வேகமாய் எழுந்தவன் உடைமாற்றி கொண்டு வெளியேறினான்.
அவன் வீட்டை விட்டு அடுத்த அரைமணி நேரத்தில் கண் விழித்த பெண்ணவளுக்கு தான் படுத்திருக்கும் இடம் புரிய இங்கே எப்படி வந்தோம் என்று புரியாமல் யோசித்தவளுக்கு இரவில் நடந்தது புரிய அவளின் பார்வை அவனை தேடியது.
ஆனால் அவளின் தேடலுக்கு காரணமானவனோ அங்கே இல்லாமல் போக மெல்ல எழுந்தவள் அங்கிருந்த குளியல் அறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டவள் வெளி வர அப்போது தான் தூக்க கலக்கத்தில் அழுத மிருதுளாவை தூக்கி கொண்டு கீழே வந்தாள்.
அங்கே கஸ்தூரி சமைத்து கொண்டிருக்க அவரிடம் வந்தவர், "அத்தை அவரை பாத்தீங்களா.." என்றாள் கேள்வியாய்.
"காலையிலே எங்கேயோ வேகமா கிளம்பி போனான் மா.. என்னாச்சி கன்யா.. நைட்ல எதாவது பிரிச்சனையா மா.." என்றார் பரிதாபமாய்.
" அய்யோ அத்தை அப்படிலாம் எதுவும் இல்லை.. நீங்களா எதாவது கற்பனை பண்ணிக்காதீங்க.. அப்படி பிரச்சனைனா நைட்டே அவரு போயிருக்க மாட்டாரா.. அதெல்லாம் எதுவும் இல்லை.. எதாவது வேலையாய் போயிருப்பாரு.. சரி நீங்க பாருங்க நான் இவளுக்கு பால் காய்ச்சி குடுத்துட்டு வர்றேன்.." என்றபடி பிள்ளைக்கு பால் காய்ச்சி எடுத்து கொண்டு போனவளின் சிந்தனையில் 'எங்கே போயிருப்பான்' என்ற யோசனை தான்.
அவளின் யோசனைக்கு காரணமானவனோ தன் முன்னே இருந்தவனை கொஞ்சமும் பாவம் பார்க்காமல் அடித்து துவைத்து கொண்டிருந்தான்.
"சொல்லு டா.. எதுக்காக அவளை கடத்துன.. என் வீட்டுல பூந்து என் வீட்டு பொண்ணை கடத்துற அளவுக்கு உனக்கு யாருடா அந்த தைரியத்தை கொடுத்தது.." என்றவனுக்கு ஆத்திரம் கொஞ்சம் கூட மட்டுபடவில்லை.
"சார் சார் என்னை மன்னிச்சிடுங்க.. நான் பணத்துக்காக இப்படி பண்ணிட்டேன்.. நான் கடத்துவது என்னவோ உண்மை தான்.. ஆனா இப்போ அந்த பொண்ணு இல்லை சார்.." என்றான் அடிதாங்காமல்.
" என்னடா சொல்றே நானே இல்லைன்னா வேற எங்கடா கொண்டு போனீங்க.. இப்போ எங்கேடா அவ.." என்றவன் கொஞ்சமும் அடியை நிறுத்தவில்லை.
" அய்யோ சார் நிப்பாட்டுங்க சார்.. நாங்க கடத்திட்டு போகும் போது ஒரு இடத்துல வண்டியை நிறுத்திட்டு பாத்ரூம் போனோம்.. நாங்க திரும்பி வரும் போது அந்த காருல பெட்ரோல் தீப்பிடிச்சி எரிஞ்சிடுச்சி சார்.. அதுல இருக்கற யாருமே உயிரோட கிடைக்கலை சார்.. என்னை விட்டுடுங்க சார்.. அந்த பெண்ணும் அதுல செத்து போச்சி சார்.." என்றவனின் வார்த்தையில் அடித்து கொண்டிருந்தவனின் கரங்கள் அப்படியே நின்றுவிட அதிர்ச்சியில் சிலையாய் நின்றுவிட்டான் ஆடவன்.
இறுக்கமாய் முகத்தை வைத்து கொண்டிருந்தவன் அங்கிருந்த ஆட்களிடம், "இவனை கொன்னுடுங்க.." என்று சொல்லிவிட்டு வெளியே வந்தவனின் கண்கள் கலங்க அப்படியே கீழே அமர்ந்தவன் தன் கையை பூமியில் அழுத்தமாய் குத்தியவன், "லட்சுமி.." என்று வானத்தை பார்த்து கத்தினான்.
அவனின் கடத்தலில் அந்த அடர்ந்த வனமே நடுங்கி போயிருந்தது.
அதே நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பெண்ணவள், "அம்மா.." என்று அலறியபடி எழுந்தாள்.
அடுத்த பாகத்துல பாக்கலாம் மக்களே.. இந்த கதையை பத்தின உங்க கருத்துக்களை சொல்லிட்டு போங்க செல்லம்ஸ்.
இதயம் நுழையும்...