• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
இன்னிசை -24

காரில் மௌனம் மட்டுமே நிலவியது. ஜீவாத்மனும், ஆதிரனும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு நிர்மலாவை பார்த்தனர். நிர்மலா கடும்கோபத்தில் இருந்தார்.

ஜீவாத்மன், " அம்மா." என்றான்.

" டேய் ஆதி! அவனை பேச வேண்டாம்னு சொல்லு." என்றார் நிர்மலா.

" அம்மா, நான் என்ன பண்ணேன்? எம் மேல ஏன் கோபமா இருக்கீங்க? எதுவா இருந்தாலும் நேரா என்கிட்டே சொல்லுங்க" என்று ஜீவாத்மன் கூற.

" நான் உன் மேல கோபமா இல்ல, கொலவெறில இருக்கேன். டேய் பொண்ணு பார்க்க கிளம்புறதுக்கு, நீ பண்ண அமர்க்களத்தைக் கூட மன்னிச்சுடுவேன். ஆனால் அவளுக்கு லீவு குடுக்காமல் நீ பண்ண அலப்பறையை நினைச்சா தான் கொலவெறியே வருது. கொஞ்ச நேரத்துல நானும் அந்த பொண்ணை தப்பா நினைச்சுட்டேன். "

"அம்மா…"

" நீ எதுவும் பேசாதே. நாளைக்கே போய் என் மருமகளை நேரில் பார்த்து, கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிற. அவ்வளவு தான்." என்றார் நிர்மலா.

" சரிமா." என்றான் ஜீவாத்மன்.

அதற்குள் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் வந்து விட, முறைத்துக் கொண்டே நிர்மலா உள்ளே செல்ல. ராஜனும் அவர் பின்னே சென்றார்.

தலையை கோதிக் கொண்டு, ஜீவாத்மன் நிற்க.

" ப்ரோ, அப்புறமா ஃபீல் பண்ணுங்க. இப்போ லக்கெஜ்ஜை தூக்குங்க." என்று கிண்டலடித்தான் ஆதிரன்.

அவனை முறைத்துக் கொண்டே கார் டிக்கியிலிருந்து லக்கேஜை எடுத்துக் கொண்டான் ஜீவாத்மன்.

கேலியாக அவனைப் பார்த்துக் கொண்டே பின் தொடர்ந்த ஆதிரன், " அண்ணா, நீ ஏன் அண்ணிக்கு லீவு கொடுக்கல? தெரிஞ்சு கொடுக்கலையா, இல்லை தெரியாமல் கொடுக்கலையா? நடந்தது என்ன? மறைக்காமல் சொல்லு." என்றவன் சிரிக்க.

" டேய் என்னை ஓட்டுறியா?"

" அப்படியெல்லாம் இல்லைன்னு சொல்ல மாட்டேன். எனக்கே, என்னைக்கோ ஒரு நாள் தான் சான்ஸ் கிடைக்குது. அதை விட முடியுமா?"

" உன்னை…" என்ற ஜீவாத்மன், அவனை அடிக்க வருவது போல் வர…

" அண்ணா, சாரி. சும்மா விளையாட்டுக்கு வம்பிழுத்தேன்." என்றான் ஆதிரன்.

" எல்லாம் என் நேரம்." என்றவன், பெருமூச்சு விட்டுக் கொண்டு நடந்ததை கூற ஆரம்பித்தான்.

ஆதிரன் கண் முன்னே காட்சிகள் விரிந்தது‌.

' "முகுந்தன்…" என்று ஜீவாத்மன் அழைக்க.

ஜீப்புடன் வந்தான் முகுந்தன்.

ஜீவாத்மன் மனமோ, நடக்க போகும் மீட்டிங் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது.

முக்கியமான அதிகாரிகள் எல்லோரும் வந்து விட, மீட்டிங் ஆரம்பமானது.
"ஹாய் எவ்ரிபடி. குட்மார்னிங். கோடை காலம் ஆரம்பிக்க போகுது. ஊழியர்களுக்கு இன்னும் மூன்று மாதத்திற்கு விடுமுறை கிடையாது. அன்னியர் யாரும் காட்டுக்குள் அனுமதியில்லாமல் நுழையக் கூடாது. அப்புறம் தீ பரவல் ஏற்படாமலிருக்க, தீ தடுப்பு கோடுகள் ஏற்படுத்தணும். வனப்பரப்பை ஒட்டி உள்ள சாலையோரத்தில் உள்ள குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தணும்.

ஒவ்வொரு வனமண்டலம், கோட்டம் சரகம் பகுதியில் தீ தடுப்பு தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். உங்களுக்கு எந்த உதவி வேணும்னாலும் வனக்கிராம மக்களிடம் கேட்கலாம். அவர்கள் உங்களோடு, சேர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தயாரா இருக்காங்க. ஒவ்வொரு வனச்சரகத்துல இருந்தும் அப்பப்போ ரிப்போர்ட் வரணும். நான் சொல்றது புரியுதா? வருமுன் காப்போம் பாலிசி தான். சின்ன தவறு நடந்தாலும் காடு தான் பாதிக்கப்படும். நம்ம தான் கவனமா இருக்கணும். இந்த சில காலம் நமக்கு கடுமையான காலம். எல்லாரும் சேர்ந்து சமாளிப்போம். சோ, நீங்களும் உங்களோட ஒத்துழைப்பை தரணும். எந்த நேரம் வேணும்னாலும் என்னை தொடர்பு கொள்ளலாம். " என்றான் ஜீவாத்மன்.

மீட்டிங் முடிந்து எல்லோரும் களைய பெருமூச்சு விட்டுக்கொண்டு கைகளை நெட்டி முறித்தான்.

'காலையில் ஊருக்கு கிளம்ப வேண்டியது தான்.' என்று எண்ணிய ஜீவாத்மனின் முகத்தில் இளம்புன்னகை மின்னியது. 'மேனகா முதல் முறை பார்த்த போது வன மோகினி மாதிரி இருந்தாள். அதற்கு பிறகு அவளை சீருடையில் மட்டுமே பார்த்திருக்க, இன்று எப்படி இருக்க போகிறாளோ! புடவையில் தேவதையாக மின்னுவாளோ, இல்லை சுடிதாரில் கேஷூவலாக வந்து மனதை கொள்ளையடிப்பாளோ!' என்று மனதிற்குள் கற்பனை செய்துக் கொண்டிருக்க, அவனது கற்பனையை தடை செய்ய ஒருவன் உள் நுழைந்தான்.

" சார்." என்றழைக்க.

"என்ன வருண்?" என்றான் ஜீவாத்மன்.

" சார் ஃபாரஸ்டர் லீவ் கேட்க்குறாங்க."என்று வருண் சொல்ல.

" யார் அது? எந்த ஏரியா? என்ன ரீஸன்னு சொன்னாங்களா? எதுவா இருந்தாலும் என் வரைக்கும் ஏன் எடுத்திட்டு வர்றீங்க? லீவ் கிடையாதுன்னு சொல்ல வேண்டியது தானே." என்று தனது உதவியாளரிடம் கடிந்துக் கொள்ள.

" அது வந்து சார்…" என்று இழுத்தான் வருண்.

"எதுவும் எமர்ஜென்சியா? ரீஸன் சொன்னாங்களா?"என்று சற்று கடுப்புடன் வினவினான் ஜீவாத்மன்.

" இல்லை சார். பர்ஸ்னல் மட்டும் தான் சொன்னாங்க." என்று தயக்கத்துடன் கூறினான் வருண்.

" அப்போ லீவ் கிடையாதுன்னு சொல்லுங்க. இன்னைக்கு நடந்த மீட்டிங்கே, யாருக்கும் லீவ் கிடையாதுன்னு இன்ஃபார்ம் பண்ணத்தானே. ஒவ்வொன்னையும் உங்களுக்கு சொல்லிக் கிட்டே இருக்கணுமா? மீட்டிங் தான் முடிஞ்சிருச்சே? ஆதிரனுக்கு பதிலா நீங்க தானே இன்சார்ஜ். இன்னும் போகலையா?" என்று வினவ.

" இதோ கிளம்பிட்டேன் சார்." என்றவனும் லீவ் கேட்ட ஃபாரஸ்டரின் பெயரை சொல்லவில்லை. யார் என்று வினவியவனும், முழுதாக தெரிந்துக் கொள்ளவில்லை.

வருணின் மறுமொழிக்காக காத்திருந்த மேனகாவிற்கு கிடைத்ததென்னவோ ஏமாற்றம் தான்.

" சாரி மா. ஜீவா சார் கிட்ட லீவ் கேட்டேன். சார் கன்னாபின்னானு திட்றாரு. நீங்க வேணும்னா அவர்கிட்ட பேசி பாருங்க. ஆனால் இன்னைக்கே போய் பாருங்க. நாளைக்கு சார் லீவாம்‌." என்று வருண் சொல்ல.

" லீவ் கிடைக்கலைன்னா பரவாயில்லை சார். விடுங்க." என்றாள் மேனகா.

அவளுக்கு ஜீவாவிடம் சென்று பேசுவதற்கு சற்றும் விரும்பவில்லை. அதுவுமில்லாமல் மாப்பிள்ளையிடம் தனியாக பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. அதைப்பற்றி வீட்டில் பேசுவதை விட இங்கே பேசினால் அவளுக்கு வசதி. எனவே கிடைத்த சான்ஸை பயன்படுத்திக் கொண்டவள், மாப்பிள்ளையை இங்கே பெண்பார்க்க வர வைத்திருந்தாள்.

ஆனால் அவள் எதிர்ப்பார்க்காதது மாப்பிள்ளையாக வந்த ஜீவாத்மனை தான்.

ஜீவாத்மனை கண்டதும் மயக்கம் வராத குறை தான். அதெல்லாம் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே. அதற்குள் தன்னை சுதாரித்துக் கொண்டவள், அவனைப் பார்த்து முறைத்தாள்.

" சாரி மேனகா." என்றான் ஜீவாத்மன்.
"எதுக்கு இந்த சாரி சார்?"
"ஆக்ஷுவலி நீ தான் லீவ் கேட்குறேன்னு எனக்குத் தெரியாது. நீ லீவ் கேட்ட நேரமும் சரியில்லை. ரீசனாவது சொல்லியிருக்கலாம். என்னால உங்க அத்தைக்கிட்ட நீ திட்டு வாங்குனல அதுக்குத்தான் இந்த சாரி."

" ஓஹோ! நான் கூட என்னை தவறா நினைச்சதுக்கு தான் சாரி கேட்குறீங்களோன்னு நினைச்சுட்டேன்."

"அது வந்து…" என்று ஜீவாத்மன் தயங்க.

" அப்படியெல்லாம் நினைக்கலைன்னு மட்டும் பொய் சொல்லிடாதீங்க சார். நான் ரிஷிவர்மனோட ரிலேட்டிவ்ன்னு உங்களுக்குத் தெரியும். ரிஷிவர்மனை பத்தியும் உங்களுக்குத் தெரியும். நீங்க என்னை பார்க்கும் பார்வையிலே குற்றவாளின்னு முத்திரை குத்தாத குறையாகத் தான் பார்த்தீங்க. ஆனால் எனக்குத் தெரியாதது ஒண்ணு தான். நான் தான் உங்க வீட்ல பார்த்த பொண்ணுன்னு தெரியுமா? தெரியும்னா எப்படி பொண்ணு பார்க்க ஒத்துக்கிட்டீங்க? இல்லை அங்க வச்சு என்னை ஹர்ட் பண்ணலாம்னு பார்த்தீங்களா?" என்று கேள்வி மேல் கேள்வியாக வினவினாள் மேனகா.

" ஸ்டாப் மேனகா. என் மேலேயும் தப்பு இருக்குன்னு அமைதியா இருந்தா, வாய்க்கு வந்தபடி பேசுற."

" நான் ஒன்னும் உங்களை மாதிரி பொய் சொல்லலை. உண்மையைத் தான் சொல்றேன்." என்ற மேனகாவின் சவால் பார்வையில்,

" நானும் பொய் சொல்லலை. உண்மையே சொல்றேன். ஃபர்ஸ்ட் உன்னை தப்பா தான் நினைச்சேன். ரியல்லி சாரி. பார்த்தவுடனே உன்னை எனக்குப் பிடிச்சிடுச்சு. ஆனால் ரிஷிவர்மன் ஒன்னும் நல்லவர் கிடையாது. அவர் மேல ஏகப்பட்ட கம்ப்ளைன்ட். கண்டிப்பா அவர் உயிரோட இருந்தா ஆக்ஷ்ன் எடுக்குற மாதிரி தான் இருந்திருக்கும். ரிஷிவர்மனோட பியான்ஸின்னு சொன்னதும், உன்னையும் தப்பா நினைச்சுட்டேன். இப்போ உன் மேல தப்பில்லைன்னு புரியுது. சாரி மேனகா." என்று தன்மையாக கூறினான்.

"திடீர்னு என்ன ஞானதோயம்? எங்க அத்தை எதுவும் ரிஷிவர்மனை பத்தி சொன்னாங்களா?" என்று குழப்பத்துடன் வினவ.

" வாட்? ரிஷிவர்மனைப் பத்தி அவங்க பேரண்ட்ஸுக்கு எல்லாம் தெரியுமா?" என்று அதிர்ச்சியாக வினவினான் ஜீவாத்மன்.

" தெரியும்." என்றவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

" அழாதே மேனகா." என்றவன், அவளது கண்களை துடைக்க.

அவனிடமிருந்து பதறி நகர்ந்தாள்.

லேசான புன்னகை ஜீவாத்மனின் முகத்தில் வந்து போனது.

" சரி சொல்லு மேனகா. நீ ரிஷிவர்மன் மேல கொடுத்த கம்ப்ளைண்ட் அவங்க பேரண்ட்ஸுக்கு தெரியுமா?"

" ம்… எல்லாம் தெரியும். அவங்க பாவம். எங்களுக்கு நேர்மையா இருக்கணும்னு சொல்லி தந்ததே எங்க அத்தை, மாமா தான். ஆனால் அத்தான் இப்படி மாறுவாங்கன்னு நினைச்சே பார்க்கலை. எனக்காக அவங்க உணர்வுகளை மறைச்சுக்கிட்டு, உயிர் வாழ்றாங்க."

" ம்… பரவாயில்லை அவங்க க்ரேட்." என்று மெச்சினான் ஜீவாத்மன்.

" இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?" என்று தயக்கத்துடன் வினவினாள் மேனகா.

" நீ கம்ப்ளைன்ட் கொடுத்த கலெக்டர் என்னோட ஃப்ரெண்ட். இறந்து போன ரிஷிவர்மன் மேலயும், உன் மேலயும் சந்தேகம் இருக்குன்னு நான் சொன்ன போது தான், அவன் நீ கம்ப்ளைன்ட் கொடுத்த விஷயத்தை சொன்னான். சாரி மேனகா. உன்னைப் பத்தி அப்போ தெரியாது. அதான் சந்தேகப்பட்டுட்டேன். உன் கண்களில் எப்போதும் ஒரு நிமிர்வு இருக்கும். அது பொய் சொல்லாமல் நேர்மையா இருக்கிறதால தான். இப்போ புரியுது. நான் உனக்குத் தகுதியானவனா தெரியலை. ஆனால் நீ என் வாழ்க்கையில் வந்தால் அது என் அதிர்ஷ்டம். நீ என் கூட நான் வாழும் காலம் முழுவதும் வரணும்னு ஆசைப்படுறேன். அப்படி நடக்கலைன்னா, அடுத்து என்னன்னு கூட யோசிக்க முடியலை. என் லைஃப் அதோட நின்னுடும். நீ உன் முடிவை சொல்லு மேனகா." என்று கூறியவன், படபடப்புடன் அவளது மறுமொழிக்காக காத்திருந்தான்.

" நீங்க தான் மாப்பிள்ளைன்னு எனக்குத் தெரியாது. ஆனால் எங்க அத்தைக்காக தான் பொண்ணு பார்க்க வர சொன்னேன். வரப்போற மாப்பிள்ளைக் கிட்ட சில கண்டிஷன் சொல்லணும்னு தான் நினைச்சேன். நான் வேலையை எப்பவும் விட மாட்டேன். அப்புறம் எங்க அத்தை, மாமா உறவை எப்பவும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். அவங்க எனக்கு பெத்தவங்களுக்கு மேல. அவங்களுக்கு ஒன்னுன்னா நான் தான் முன்னே நின்னு செய்யணும்."

"உன் கண்டிஷனுக்கு டபுள் ஓகே. உன்னோட உறவுகள், எனக்கும் உறவு தான். அவ்வளவு தானே."

" இன்னொரு விஷயம், நான் எங்க அத்தான் இறந்த அன்னைக்கு அந்த ஸ்பாட்ல தான் இருந்தேன். என்னை காப்பத்துறதுக்காகத் தான் அவர் உயிரை விட்டார். என் பெயர் வெளியே வர்றதை விரும்பாமல் சத்தியம் வாங்கிக்கிட்டார். நாம திருமணம் பண்ணிக்க போறோம். உங்களுக்கு உண்மையா இருக்கணும்ங்குறதுக்காக சொல்றேன்." என்று அன்று நடந்த விஷயம் அனைத்தையும் கூறினாள் மேனகா.

" மேனகா… உன் அத்தான் உண்மைத் தெரியக் கூடாதுன்னு ஒரு கணக்கு போட்டாலும், நம்ம டிபார்ட்மெண்ட்ல உள்ளவங்க அவ்வளவு முட்டாள் கிடையாது. நீ கொடுத்த கேஸை வச்சு ரகசிய விசாரணை நடத்துனாங்க. கார்த்திக்கை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க.ரிஷிவர்மன் இறந்ததால தப்பிச்சான். அப்புறம் அந்த அமைச்சர் பையனோட கேங் மேலேயும் கேஸ் நடந்திட்டுருக்கு. எப்படியும் தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை கிடைக்கும்.தென் நான் அந்த பழங்குடி மக்களுக்கு கொடுத்த வாக்குப்படி, வேலை செய்யாமல் மெத்தனமாக இருந்த அதிகாரிகள் எல்லோர் மேலயும் ஆக்ஷன் எடுக்க போறோம். அதுக்கான உத்தரவு கூடிய சீக்கிரம் மேலிடத்திலிருந்து கிடைச்சிடும்."

" உண்மையாவா சொல்றீங்க? இவ்வளவு நாள் லட்சுக்கா சாவுக்கு காரணமானவங்களை ஒன்னும் பண்ண முடியலையேன்னு குற்றவுணர்ச்சியா இருந்தது. இப்போ தான் நிம்மதியா இருக்கு. தேங்க்ஸ் ஜீவா." என்றாள்.

" அதையெல்லாம் விடு. இப்போ சொல்லு நம்ம கல்யாணத்துக்கு நாள் பார்க்க சொல்லிடவா?" என்று புன்னகையுடன் வினவ.

" அது… " என்ற மேனகா, தயங்கினாள்.

" என்ன மேனகா? இன்னும் ஏதாவது சொல்லணுமா?"என்று அவளைப் பார்த்து புன்னகையுடன் வினவினான்.

" அது வந்து…"

"வந்து…" என்று ஜீவாத்மன் புன்முறுவலுடன் ஊக்க.

" எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும்." என்று தயக்கத்துடன் வினவினாள்.

" மேனகா கல்யாணத்துக்கெல்லாம் டைம் கொடுக்க முடியாது. அதுக்கு அப்புறம் நம்ம லைஃப் ஸ்டார்ட் பண்ண எவ்வளவு டைம் வேண்டும்னாலும் எடுத்துக்கோ." என்றவனது பதிலில் மேனகாவின் மனது லேசாக ஆட்டம் கண்டது.

"...."

" என்ன மேனகா பதிலை காணோம்? மௌனம் சம்மதா? வீட்ல கல்யாணத்துக்கு நாள் பார்க்க சொல்லட்டுமா?"

" சரி." என தலையசைத்தாள் மேனகா.

"அப்பாடா!"என்று நிம்மதி பெருமூச்சு விட்டான் ஜீவாத்மன்.

அவனது நிம்மதிக்கு ஆயுள் திருமணம் வரை தான். அதற்கு பிறகு தினமும் ஐயோ! கடவுளே! என்று புலம்ப போவதையும் அவன் அறியவில்லை.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,989
ஜீவா அவன் வாயாலேயே சூனியம் வச்சுக்கிட்டானே, மேனகா அவன் பேச்சை கெட்டியா புடுச்சுக்க போறா 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
 

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
ஜீவா அவன் வாயாலேயே சூனியம் வச்சுக்கிட்டானே, மேனகா அவன் பேச்சை கெட்டியா புடுச்சுக்க போறா 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
நன்றி சகி 💕
 
Top