• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இராக்கதனின் கண்மணி! 14

kkp2

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
36
27
18
Tamil nadu
அத்தியாயம் 14

விக்ரம் பேசுவதை கேட்டு அத்தனை எரிச்சல் துகிராவிற்கு.

எப்படி ஒரு மனிதனால் நாக்கில் விஷத்தை மட்டும் வைத்துக் கொண்டு பேச முடியும் என்பதை போல தான் இருந்தது விக்ரம் பேச்சுக்களும்.

ஆனால் அதை அவன் உணரவில்லை என்பதும் நிஜம். இது தானே நிஜம். உண்மையை தானே சொல்கிறேன் என சர்வ சாதாரணமாய் அவன் பேசுவது அடுத்தவரை காயப்படுத்துகிறது என்பதை மறந்திருந்தான். நினைவில் இருந்தாலும் அது புரிய வாய்ப்பில்லையோ அவனுக்கு.

இப்பொழுதும் அனைத்தையும் தான் பார்த்துக் கொள்வதாய் சொல்லி காவல் நிலையத்திற்கு துகிராவை அவன் அழைத்து வர, நிச்சயம் அவன் உண்மையை கூறுவான் என்றெல்லாம் தோன்றவே இல்லை துகிராவிற்கு.

"வணக்கம் சார்! எப்படி இருக்கிங்க?" வாசலில் அவனைக் கண்ட காவலர் ஒருவர் விக்ரமிடம் விசாரிக்க,

"இது வேற!" என சத்தமாய் சொல்லி சலித்துக் கொண்டு அவனோடு துகிரா உள்ளே செல்ல,

"ஹலோ சார்! ஐம் விக்ரம் ஸ்ரீனிவாசன்!" என தன்னை அவன் இன்ஸ்பெக்டரிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள,

"வாங்க சார்!" என்ற இன்ஸ்பெக்டர்,

"இப்ப தான் கால் வந்துச்சு! உட்காருங்க!" என்று சொல்லி,

"சொல்லுங்க! என்ன ப்ரோப்லேம்?" என கேட்க,

"இவங்க துகிரா! மிஸஸ் துகிரா விக்ரம். இவங்க சிஸ்டரை காணும் இப்ப கொஞ்ச நாளா!" என்றான் கொஞ்சமும் அச்சமில்லாமல்.

அச்சமில்லாமலா? ஆம் அச்சமில்லாமல் என்று தான் தோன்றியது துகிராவிற்கு.

அதிர்ந்து அவள் விழித்ததை கூட கவனிக்க விரும்பாதவனாய் அடுத்தடுத்து விக்ரம் பேச,

'இவங்களை என்னனு பெத்திங்க மிரும்மா!' என நினைத்து பல்லைக் கடித்து அமந்திருந்தாள் துகிரா.

"இவங்க சிஸ்டர்க்கு மேரேஜ் ஏற்பாடு பண்ணிருந்தாங்க. சோ மண்டபத்துல இருந்து தான் காணும்" என்றவன் தான் அங்கு சென்றது இவளை அழைத்து வந்ததை எல்லாம் கூறி, விஷ்வாவைப் பற்றியுமே கூறிவிட்டான்.

அடுத்து அவர் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் விக்ரமே பதில் சொல்ல, ஓரளவு அனைத்தும் உண்மை தான். ஏன் தன்னை மட்டும் அப்படி கூறினான் என கோபம் தான் வந்தது துகிராவிற்கு.

"ஓகே சார்! நாங்க ஆக்ஷன் எடுக்குறோம். சிசிடிவி கூட செக் பண்ணிட்டதா சொல்றிங்க. அங்க பக்கத்துல நாங்களும் வேற சிசிடிவி ஃபுட்டேஜ் கிடைக்குதா பாக்குறோம். இதுல ஒரு சைன் பண்ணனும். நீங்க ஆர் மேடம் யார் பண்ணினாலும் ஓகே!" இன்ஸ்பெக்டர் கேட்க,

"நீயே பண்ணு!" என்றான் அவளிடம்.

துகிரா என தன் பெயரை மட்டும் கையெழுத்திட்டு அவள் அதை நகர்த்தி வைத்தது தான் காவல் நிலையம் வந்து அவள் செய்த ஒரே செயல்.

"உங்களுக்கே புரியும் நினைக்குறேன். அவங்க ஒரு பொண்ணு. சோ கொஞ்சம் சீக்கிரமா ஸ்டெப் எடுத்திங்கன்னா நல்லாருக்கும்!" என சிறு அமைதியுடன் விக்ரம் கேட்க,

"நிச்சயமா சார்! நாங்களே கால் பண்றோம்!" என அத்தனை இனிமை இன்ஸ்பெக்டரிடமும். அத்தனை பெரிய இடத்தில் இருந்து தூது வந்திருக்க, விக்ரம் பலத்தை உணர்ந்திருந்தார் அவர்.

பேசி முடித்து வெளிவரும் வரை ஒற்றை வார்த்தைக்கு கூட வாயை திறக்கவில்லை துகிரா. தன்னிடம் எதுவும் கேட்கவில்லை என்பதோடு அவனே அனைத்தும் பேசி முடித்திருக்க, இதையும் அவள் எதிர்பார்க்கவில்லை.

பேசவே கூடாது இவனிடம் என நினைத்தாலும் அப்படி முடியாதபடிக்கும் நடந்து முடிந்திருக்க,

"ஏன் அப்படி சொன்னிங்க?" என காரில் ஏறியதும் கேட்டுவிட்டாள் துகிரா.

"என்ன சொன்னேன்?" என கொஞ்சமும் நியாபகம் இல்லாதவனாய் அவன் கேட்க, துகிரா தான் நடிக்கிறானோ என குழம்பிவிட்டாள்.

"அங்க சொன்னதெல்லாம் கேட்ட தானே? எல்லாம் நீ சொன்னதை வச்சு தான் நான் பேசினேன். எதுவும் தப்பா எல்லாம் சொல்லலயே!" என்றபின் தான் அந்த பெயர் நியாபகம் வந்தது விக்ரமிற்கும்.

"ஆமா பின்ன! என் வீட்டுல தானே நீ இருக்க? காரணமும் இல்லாம சம்மந்தமும் இல்லாம என் வீட்டுல நீ இருக்கறதை சொன்னா ஆயிரத்தெட்டு கேள்விக்கு நான் பதில் சொல்லணும். தேவையா எனக்கு? இப்ப பாரு உன் பேமிலி பத்தி கேட்டத்தோட சரி ஏன் அவங்க வரலைன்னு எதுவும் கேள்வி வர்ல. இதுவே நீ மிஸ் துகிரான்னு சொல்லி இருந்தா உன் வீட்டையும் கிண்டி கிளருவாங்க தானே?" என்றான் அவள் கேளாமலே!

"அதுக்கு நீங்க இப்படி தான் சொல்லனுமா?" துகிரா கேட்க,

"வேற என்ன சொல்ல சொல்ற? வேற என்ன சொல்லி இருந்தாலும் என் பேமிலில நீ யார்ன்னு கேள்வி வரும் அண்ட் உன் பேமிலில ஏன் யாரும் வரலைனும் கேள்வி வரும். புரியுதா இல்லையா உனக்கு?" என்றவன்,

"எனக்கு மட்டும் என்ன ஆசையா இப்படி சொல்ல? அதுவும் என் விதி!" என்று சொல்ல, இன்னும் சுருசுருவென வந்தது துகிராவிற்கு.

அதன்பின் வாயே திறக்கவில்லை மீண்டும் துகிரா. இவனிடம் பேசவா என அவள் அமைதியாகிவிட, விக்ரம் அலைபேசியில் அத்தனை அழைப்புகள் ஓயவே இல்லை.

"ப்ச்!" என சலித்துக் கொண்டவன் வேறு வழியில் சென்று ஓரிடத்தில் காரை நிறுத்தியவன்,

"ஒரு டென் மினிட்ஸ் இங்கேயே இரு. நான் வந்துடுறேன்!" என சொல்லி இறங்க,

"என்னை வீட்டுல விட்டுடுங்களேன்!" என்றாள் வேகமாய்.

"அதுக்கு டைம் இல்லைன்னு தான் வந்தேன். வெயிட் பண்ணு. உன்னால தானே லேட் எனக்கு!" என சொல்லி நிற்காமல் அவன் சென்றுவிட,

"மிரும்மா!" என பல்லைக் கடித்து அமர்ந்திருந்தாள் துகிரா.

சுற்றிலும் அப்பார்ட்மெண்ட்களால் நிறைந்திருந்த இடத்தில் அவன் விட்டு சென்றிருக்க, அவன் சென்ற வழி மட்டும் தான் தெரியுமே தவிர்த்து எங்கு எதற்கு என எதுவும் தெரியாமல் அங்கே அவன் வரும் வரை என காரில் இருந்து கூட இறங்கவில்லை அவள்.

"என்னாச்சு?" என கேட்டு ஒரு அபார்ட்மெண்ட்டின் மூன்றாம் தளத்துக்கு வந்து ஒரு வீட்டினுள் நுழைந்திருந்தான் விக்ரம்.

"சாரி தவிர எதுவும் சொல்லல சார்!" விக்ரம் பிஏ சொல்ல,

"சாரி சொல்லவா அவனுக்கு இவ்வளவு ஏற்பாடு பண்ணிருக்கோம்?" என நக்கலாய் ஒரு புன்னகையோடு அந்த அறைக்குள் நுழைந்தான் விக்ரம்.

"குட் மார்னிங் ராஜேஷ்! எப்படி இருக்கீங்க?" என கேட்டு ராஜேஷின் முன் அமர்ந்தான் விக்ரம்.

"விக்ரம்! என்ன பண்ணிட்டு இருக்கீங்க! அதான் அன்னைக்கே சாரி சொல்லிட்டேனே! இப்ப எதுக்காக என்னை இங்க அடைச்சு வச்சிருக்கீங்க? என் அப்பாக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா?" ராஜேஷ் பேச,

"என்ன ஆகும்? என்ன கிழிப்பார் மினிஸ்டர் மாணிக்கராஜ்? அவர்கிட்டயே கேட்போமா?" என்றான் கொஞ்சமும் அசாரத விக்ரம்.

"விக்ரம் திஸ் இஸ் டூ மச். அன்னைக்கு உன் வீட்டுக்கு நைட்டு வந்தது தப்பு தான். அதுவும் நீ.. நீங்க அப்பாவை ரொம்ப பேசினதால தான் கோபத்துல வந்தேன்!" ராஜேஷ் சொல்ல,

"ஓஹ்! உன் அப்பாவை என்ன பேசிட்டேன்? எதுக்காக பேசினேன்?" என்றவன்,

"என்பது கோடி காசு. அவ்வளவு சாதாரணமா உன் அப்பா வாங்கின காசுக்கு பதில் சொல்ல முடியாதுன்னு சொல்லுறாரு. அதுவும் அவ்வளவு பெரிய மினிஸ்டர். அந்த பேரை காப்பாத்திக்கணும்ன்னு நினைக்கல இல்ல? அவருக்கு அவர் பையனை நடிக்க வச்சு பெரிய ஆளா ஆக்கணும்ன்னு ஆசை. அதெல்லாம் புரியுது. அதுக்காக ஏமாத்தி ப்ரோட்யூஸ் பண்ணின பட காசுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லைன்னு சொன்னா அதுக்கான ஆக்ஷன் நான் எடுக்க மாட்டேனா? இந்த தொழில் எப்படி இருக்கும்னு தெரியாமலா நான் வந்தேன்? இல்ல மினிஸ்டர்னா பயந்துடுவேன் நினைச்சாரா?" என கேட்க பதில் சொல்ல முடியவில்லை ராஜேஷிற்கு.

எந்த பொறுப்பும் இன்றி சுற்றி திரிந்தவனை சினிமாவில் நடிக்க வைத்தது அவன் தந்தை மினிஸ்டர் மாணிக்கராஜ் தான். அதற்காக அவரே தான் வேறொருவரின் பெயரில் ப்ரோடக்ஷன் தொடங்கி விக்ரமிடம் கடன் வாங்கி முதலீடு செய்ததும்.

படம் எதிர்பார்த்த அளவில் போகவில்லை என்பதை விட, எடுத்ததும் பெரிய பட்ஜெட்டில் அவர் மகனை அறிமுகப்படுத்தியது தான் தவறு என புரியவில்லை அவருக்கு.

அதற்காக விக்ரமிடம் பணத்தை கொடுக்க கூடாது என அவர் செய்த செயலில் வசமாய் மாட்டியது என்னவோ ராஜேஷ் தான். தந்தையின் திருகுத்தாளம் தெரியாமல் தந்தையை விக்ரம் தான் ஏமாற்றுவதாய் நினைத்து விக்ரம் வீட்டிற்கு சென்று ரகளை செய்ததோடு நில்லாமல் அடுத்து அவன் செய்த வேலை இன்னும் விக்ரம் அறியவில்லை.

"உன் அப்பாகிட்ட மீதி காசை வங்குறது எனக்கு பெரிய விஷயம் இல்ல. ஆனா நீ ஏன் ஊடால எலியாட்டம் என் வீட்டுக்கு வந்து ஆட்டம் காட்ட நினைச்ச? அவ்வளவு சீப்பா என்னை எடை போட யார் சொல்லி தந்தது?" என விக்ரம் கேட்க,

"அதான் சொல்றேனே விக்ரம்! இனி உன் வழிக்கு வர மாட்டேன். என்னை விடு. இங்க இருந்து நான் போகணும்!" ராஜேஷ் விக்ரம் முகத்தை பார்த்து கெஞ்ச பிடிக்காமல் திரும்பி நின்று கேட்க,

"இல்லையே! எனக்கு தோணுதே நீ என்னவோ இன்னும் என் விஷயத்துல பண்ணிருக்கன்னு. அது என்னனு சொல்லு நான் விட்டுடுறேன்!" என விக்ரம் சொல்ல, நாவறண்டது ராஜேஷிற்கு.

"அப்படி எதுவும் இல்ல விக்ரம்!" என அவன் தடுமாற, அது விக்ரம் கண்களுக்கும் தப்பவில்லை.

"ஓகே ஆல்ரைட்! நீ செஞ்ச தப்புக்கும் செய்யற தப்புக்கும் இங்க இருக்கலாம். தப்பில்ல. நீ எப்ப வெளில போகணும்னு நான் முடிவு பண்ணிக்குறேன்!" என சொல்லி எழுந்து கொண்டான் விக்ரம்.

"விக்ரம்! விக்ரம் ப்ளீஸ்!" என எழுந்து நடக்க தொடங்கிவிட்ட விக்ரம் பின்னேயே வேகமாய் நடந்தான் ராஜேஷ்.

"ஏன்னா எனக்கு உன்னை தெரியும். நான் உன்னை ஸ்மெல் பண்ணிட்டேன் மேன்! பட் என்னனு மட்டும் கன்ஃபார்ம் ஆகட்டும். அன்னைக்கு இருக்கு அப்பனுக்கும் மகனுக்கும்!" என்ற விக்ரம் தன் பிஏவிடம் கண்ணசைக்க, மீண்டுமாய் அறைக்குள் தள்ளப்பட்டான் ராஜேஷ்.

"விக்ரம் விக்ரம்!" என அவன் சத்தம் அந்த வீட்டிற்குள் மட்டும் கேட்க, இழுத்து சாற்றிவிட்டு காரை நோக்கி நடக்க தொடங்கிய விக்ரமிடம் மீண்டும் சிந்தனை.

இப்பொழுதும் தோன்றுகிறது இந்த ராஜேஷ் அவன் தந்தை மாணிக்கராஜ் தனக்கெதிராய் என்னவோ செய்திருக்கின்றனர். அதை தெரிந்த அளவிற்கு என்ன என்று தான் கண்டு கொள்ள முடியவில்லை.

விஷ்வா இறந்த அன்று இந்த ராஜேஷ்ஷும் அந்த மருத்துவமனைக்கு வந்திருக்கிறான். அதை அறிந்த பின் மூளை அத்தனை வண்டாய் குடைந்தாலும் காரணம் இன்னும் புரியவில்லை விக்ரமிற்கு.

காருக்கு அருகே வந்துவிட்ட பின் தான் துகிராவை அங்கே விட்டு வந்ததே நியாபகம் வந்தது விக்ரமிற்கு.

"ப்ச்!" என எப்பொழுதும் போல அவளிடம் அலட்சியம் காட்டி வீடு வந்து சேர்ந்தான் அவளுடன்.

"மிரும்மா! இருந்தாலும் இவ்வளவு அசால்ட்டா இருக்க கூடாது உங்க புள்ளை. வாய் இருக்கே வாய்! அது என்ன தெரியுமா? தேள். தேளோட கொடுக்கு!" என புலம்பியவள் என்னவென்று மட்டும் கூறவில்லை மிருதுளாவிடம்.

தொடரும்..
 
  • Wow
Reactions: shasri

shasri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
247
106
43
Tamilnadu
உன் வாய்க்கு ஏத்த வேலைதான் பார்க்கற விக்ரம்
 
  • Haha
Reactions: kkp2