அத்தியாயம் 15
"மிரும்மா! எப்படி மிரும்மா? நீங்க மாசமா இருக்கும் போது யார் மேலயும் கொலைவெறில இருந்திங்களா? இல்ல யாரும் உங்களை கொடுமைப்படுத்தினாங்களா?"
முந்தையநாள் புலம்பியது போதாது என அடுத்தநாள் காலை எழுந்ததுமே துகிரா மிருதுளாவிடம் ஆரம்பித்துவிட்டாள்.
"காலைலயேவா? எனக்கு தெம்பில்ல! ஆளை விடு!" என்றார் மிருதுளா.
"அய்யோ! சொல்லுங்க மிரும்மா. இப்படி ஒரு அம்மா. அப்படி ஒரு அப்பா. ஆனா புள்ளை மட்டும்!" என்றவள் தலையை வேகமாய் உதற,
"எங்களுக்கெல்லாம் பழகிடுச்சோ என்னவோ! ஆனா நீ சொல்றதை பார்த்தா என் புள்ளை ரொம்ப கொடுமைக்காரனோன்னு எனக்கே பயம் வருது துகி!" என மிருதுளா பாவமாய் சொல்ல,
"சந்தேகம் வேறயா உங்களுக்கு?" என முறைத்தவள்,
"நான் சொல்றேன். நல்லா கேட்டுக்கோங்க. இப்பவும் எதுவும் தப்பில்ல. எப்படியாவது எந்த சாமியார்கிட்ட கூட்டிட்டு போயாவது அவரை மாத்திடுங்க. திருத்திடுங்க. இல்ல உங்களுக்கு வர போற மருமக உங்களை வச்சு செய்யும்" என நிஜமாய் அவள் சொல்ல,
"வாயாடி! எவ்வளோ பேசுற நீ! எனக்கே பதறுது நீ பேசுறது. கொஞ்சம் சும்மா இரு டி!" அவர் சொல்ல,
"பெட்டரா ஒண்ணு சொல்லவா? பேசாம விக்ரம் சாரை அப்படியே விட்டுடுங்க. கல்யாணமெல்லாம் வேண்டாம். ஒரு பொண்ணு வாழ்க்கை நல்லாருக்கும் பாருங்க!" என விடாமல் பேசினாள் துகிரா.
"யார் வாழ்க்கை நல்லாருக்கும்?" என வந்துவிட்டார் ஸ்ரீனிவாசன்.
"வாங்க! இவ இருக்காளே இவ. என்னை கொஞ்ச நேரத்துல நெஞ்சை புடிச்சுட்டு படுக்க வச்சிருப்பா." என மிருதுளா சொல்ல, ஸ்ரீனிவாசனைக் கண்டதுமே அமைதியாகி இருந்தாள் துகிரா.
"என்னம்மா?" என அவர் சிரிக்க,
"சொல்லாதீங்க மிரும்மா. ப்ளீஸ்!" என்றவளுக்கு இப்பொழுது தான் தான் அதிகப்படியாய் பேசிவிட்டோம் என்றே உரைத்தது.
நிஜமாய் விக்ரம் மேல் அவ்வளவு கோபம். நேற்று காரில் தன்னை அமர வைத்துவிட்டு சென்றவன் வர எடுத்த அந்த நாற்பத்தைந்து நிமிடங்களில் எவ்வளவு பயந்துவிட்டாள் என அவளுக்கு தான் தெரியும்.
வந்தும் ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை. அவ்வளவு அசட்டையாய் ஒரு பார்வை பார்த்ததோடு பாட்டை கேட்டபடி வீடு வந்து சேர்ந்தவனை அப்பொழுது தாளிக்க ஆரம்பித்து இப்பொழுது வரை முடிக்க முடியவில்லை துகிராவிற்கு.
"எல்லாம் உங்க மகன் புராணம் தான்!" என பொதுவாய் சொல்லி மிருதுளா சாப்பிட எடுத்து வைக்க,
"அப்ப நல்லதா சொல்ல வாய்ப்பில்ல. என்னவாச்சும் செஞ்சிருப்பான். அதான் கோபம் வந்திருக்கும்!" ஸ்ரீனிவாசன் சொல்லவும்,
"சரியா சொன்னிங்க சார்!" என்று சொல்லி முடித்த பின் தான்,
"அச்சோ!" என தலையில் தட்டிக் கொண்டவள்,
"ம்ம்ஹுஹ்ம்ம்! நான் அப்புறம் வர்றேன்!" என சொல்லி எழுந்து கொள்ள,
"பரவால்ல! உட்காரும்மா! நேத்து விக்ரம்க்கு கால் பண்ணி கேட்டேன். ஸ்டேஷன்ல நடந்ததை சொன்னான்" என்று சொல்ல,
"எல்லாத்தையும் சொன்னாரா சார்?" என்றாள்.
"ஆமா! அந்த இன்ஸ்பெக்டர்கிட்ட ஏற்கனவே யாரையோ பேச வச்சிருக்கான். அதனால சீக்கரமே இதை என்னனு பார்த்துடுவாங்க. நீ பயப்படாத!" என்று சொல்ல,
"சீக்கிரமே சொல்லட்டும் சார்." என்றவள் அளவாய் அதன்பின் பேசி வைத்தாள்.
"உனக்கு வேணா ஒரு போன் வாங்கலாமா?" என ஸ்ரீனிவாசன் கேட்க,
"இல்ல இல்ல வேண்டாம் சார்!" என உடனே தடுத்தாள்.
"ஏன் துகிரா! அவசரத்துக்கு தேவைப்படலாம் இல்ல?" மிருதுளாவும் சொல்ல,
"எனக்கு இப்ப பேச யாரும் இல்லையே மிரும்மா. வேணா நீங்க அந்த ரூம்லயும் நான் இந்த ரூம்லயும் இருந்து பேசலாம்!" என சொல்லிவிட்ட பின் தான் தன் வாயை அடக்கவே முடியாதா என ஆயாசம் ஆனாள்.
"சரி அதான் வரலையே விடு!" என சிரித்தவர்,
"போற வழில என்னை மார்க்கெட்ல விட்டுடுங்களேன்!" என கணவனிடம் சொல்ல,
"விக்கி கிளம்பிட்டானா?" என்றார் ஸ்ரீனிவாசன்.
"அவன் என்னவோ தலை போற அவசரம் மாதிரி கிளம்பி ஆறு மணிக்கு போனான்!" என சொல்ல,
"உங்களோட நானும் வரவா?" என கேட்டவளையும் தன்னோடு அழைத்துக் கொண்டார்.
"சாரி மிரும்மா!" என்று தனியாய் அவரிடம் சொல்ல,
"எனக்கு அவனையும் தெரியும் உன்னையும் புரியும்" என சிரித்தபடி கடந்துவிட்டார் அவர்.
பதினோரு மணிக்கு காய் வாங்கிவிட்டு மிருதுளா பூவை வாங்கிக் கொண்டிருக்க, அவர் அலைபேசி அழைத்தது.
பர்சை துகிராவிடம் கொடுத்து எடுக்க சொல்ல,
"மிரும்மா! உங்க பையன்!" என அவரிடம் நீட்டிவிட்டாள்.
"சொல்லு விக்கி!" என மிருதுளா கேட்க,
"ம்மா! அவகிட்ட போனை குடுங்க!" எடுத்ததும் இப்படி விக்ரம் சொல்ல,
"விக்கி! என்ன இது அவ இவன்னு..!" என கடிந்து கொள்ளும் போதே,
"ம்மா! அர்ஜென்ட்!" என்றான். அவன் குரலிலும் அந்த அவசரம் புரிந்தது.
"இவனை திருத்த முடியுமா?" என துகிராவிடம் நீட்டினார்.
"என்ன மிரும்மா?" போனை வாங்காமல் அவள் கேட்பது விக்ரம் காதுகளிலும் விழ,
"பேசணுமாம். என்னனு கேளு! இல்ல வந்து பாட்டு படிப்பான். அதை கேட்கணும்" என சொல்லவுமே வாங்கிக் கொண்டவள்,
"சொல்லுங்க சார்!" என்றாள் பல்லைக் கடித்து.
"உன் சிஸ்டர் போட்டோ வேணும்!" விக்ரம் கூறினான்.
"போட்டோ இல்லையே சார்!" துகிரா சொல்ல,
"ப்ச்! இப்ப நான் கவனிக்கணுமா வேண்டாமா?" விக்ரம் கோபத்தை காட்ட,
"அய்யோ நிஜமா போட்டோ இல்ல சார். என்கிட்ட போன் கூட இல்லையே!" என நிஜமாய் அவள்சொல்ல, சில நொடிகள் அமைதி அவனிடம்.
"பார்க்க எப்படி இருப்பாங்க?" அவனே கேட்க,
"அது.. கொஞ்சம் ஹைட். நல்ல கலர். லாங் ஹேர். அப்புறம் எப்பவும் புடவை தான் கட்டுவா" என்றதில் தலையில் கைவைத்தவன் நெற்றியை நீவிக் கொண்டிருக்க,
"என்னவாம்?" என்ற மிருதுளாவிற்கு துகிரா விளக்க,
"சோசியல் மீடியால இருக்குமா அந்த பொண்ணு? என் போன்ல வேணா தேடி பாரு!" என மிருதுளா சொல்வதும் கேட்டபின் தான்,
"ஓஹ் மை காட்!" என தலையில் தட்டிக் கொண்ட விக்ரம்,
"ஹே! நான் அம்மா போன்க்கு ஒரு போட்டோ அனுப்புறேன். அதுவா பாரு!" என சொல்லி உடனே அனுப்ப முயல,
"போட்டோ வச்சுட்டு தான் இவ்வளவு க்வஸ்ட்டினா?" என துகிரா சொல்லிக் கொண்டு வேகமாய் மிருதுளா கைபேசியை இவள் இயக்க, மிருதுளாவும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்.
"மிரும்மா!" என போட்டோவை பார்த்ததும் கண்களை விரித்தவள்,
"இனியா மிரும்மா!" என சந்தோசமாய் சொல்ல, விக்ரம் அழைப்பில் இருப்பதை மறந்திருந்தாள்.
ஆனால் அந்த குரலையும் அவள் சொல்லியதையும் வைத்துக் கண்டு கொண்ட விக்ரம் அப்பொழுது தான் தன் எண்ணத்தை ஊர்ஜிதப்படுத்தினான்.
"ஷிட்!" என தட்டிக் கொண்டவன் உடனே துகிரா அழைப்பை கட் செய்துவிட்டு தனது பிஏவிற்கு அழைக்க,
"இங்க தான் சார்! என் கண்ணு முன்னாடி தான் வச்சிருக்கேன்!" என ராஜேஷைப் பார்த்தபடி பேசினான் அவன் பிஏ.
"நான் அங்க தான் வர்றேன்! பார்த்துக்கோ!" என சொல்லிவிட்டு கோபமாய் அந்த மருத்துவமனையில் இருந்து கிளம்பி இருந்தான் விக்ரம்.
இரவு முதல் அத்தனை குழப்பம். என்னவோ ஒன்று மனதை அழுத்திக் கொண்டே இருக்க, விஷ்வா இறந்த தினம் ராஜேஷ் அந்த மருத்துவமனை வந்ததும் உறுதியாகி இருக்க, நீண்ட யோசனைக்கு பின் தான் அந்த நியாபகம் வந்தது விக்ரமிற்கு.
காலை ஆறு மணிக்கெல்லாம் கிளம்பி மருத்துவமனை வந்தவன் அந்த டீனை சந்தித்து பேசி தன்னை அறிமுகப்படுத்தி விசாரித்து மருத்துவமனை கேமராக்களை கேட்க, அவனை தெரிந்து கொண்டு அதற்கு அனுமதி அளித்திருந்தனர்.
அன்றைய தினம் ஐசியூ முன்னிலான சிசிடிவியோடு விஷ்வாவை கொடுத்த அறை முன்பும் என அத்தனை அலசி விக்ரம் தேட, எதிலும் ராஜேஷ் தென்படவே இல்லை. அதன்பின் மருத்துவமனை வளாகம் கேட்டி ளின் அருகே என அவன் பார்வையை கூர்மையாய் செலுத்த, இதோ இரண்டு பேர் ஒரு பெண்ணை அத்தனைக்கு தள்ளிக் கொண்டு காருக்குள் இழுத்து செல்வது தெரிந்தது. அதுவும் ஒரு மூலையில்.
"இந்த பொண்ணு.." என எதுவோ தோன்ற மீண்டும் விக்ரம் அந்த ஐசியூ முன் இந்த காட்சிகளை ஓடவிட, அதிலும் அந்த பெண்ணின் முகம் அழுவது கூட புரிந்தது. கூடவே இதோ விஷவா இறுதியாய் இருந்த ஐசியூவின் பக்கத்து அறை முன்பும் கூட அதே பெண்.
யாரோ யாரையோ கடத்தி செல்கிறார்கள் என்று தான் முதலில் புரிந்தது. அதன்பின் தான் ராஜேஷை கேமராவில் கண்டான்.
தன் குடும்பத்தை மிரட்ட நினைப்பவன் இப்படி போகும் இடமெல்லாம் வர தேவை இல்லையே என அப்பொழுது தான் ஒரு குழப்பம்.
சில நிமிடங்கள் அமைதியாய் கண்ணை மூடி யோசனையில் அமர்ந்தான். என்னவோ என்னவோ என மூளையை தட்டிக் கொண்டே இருக்கும் பொழுது அந்த எண்ணம்.
அது ஒரு தனியார் மருத்துவமனை. விஷ்வா இருந்த தளத்தில் வேறு சாதாரண அறைகள் தான் இருந்தது. அந்த ஒன்று தான் ஐசியூ. எதற்காக அங்கே நின்று அந்த பெண் அழ வேண்டும்? என தோன்றவும் சட்டென மின்னலாய் அந்த எண்ணம் எழ, உடனே அழைத்துவிட்டான் அன்னைக்கு.
அன்னை சொல்லிய பின் தான் கேமராவில் இருந்ததை புகைப்படமாய் அவருக்கு அந்த புகைப்படத்தை அனுப்பவே தோன்றியது விக்ரமிற்க்கும்.
இதோ உண்மையாகிவிட்டதே அனைத்தும். இனியா மருத்துவமனை வந்திருக்கிறாள் விஷவாவை காண. அவனை அந்த நிலையில் கண்டு அழுத்திருக்கிறாள்.
இவளை ஏன் எதற்காக ராஜேஷ் கடத்தி இருக்கிறான் என தான் இப்போழுது குழப்பம். ஆனால் அதை அதிகமாய் யோசிக்கவில்லை.
துகிரா தேடும் பெண் இப்பொழுது ராஜேஷ் வசம். தான் கேட்டும் அத்தனை உறுதியாய் மறைத்துவிட்டானே அந்த ராஸ்கல்! என ராஜேஷை நினைத்து அத்தனை கோபம் பொங்க, அவனைக் காண கிளம்பிவிட்டான் விக்ரம்.
"மிரும்மா! விக்ரம் சார் இனியாவை கண்டுபிடிச்சிட்டாங்க!" என அத்தனை சந்தோஷமாய் கூறியவள்,
"ஹெலோ!" என விக்ரம் அழைப்பில் இருப்பதாய் காதில் வைக்க, அவன் இல்லை.
மீண்டும் மீண்டும் அழைத்தும் அவனுக்கு அழைப்பு செல்லவே இல்லை.
"எங்க இருக்கா? என்ன பண்றா? எப்படி மிரும்மா கண்டுபிடிச்சிருப்பாங்க? வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுவாங்க இல்ல?" என சந்தோசமாய் கூறியவள் மிருதுளாவோடு உடனே வீடு வந்து சேர்ந்தாள்.
மீண்டும் வீடு வந்து விக்ரமிற்கு அழைக்க, "ம்மா! நான் அப்புறம் கூப்பிடுறேன்!" என சொல்லி துகிரா பேச வந்ததையும் கவனிக்காமல் அவன் வைத்துவிட,
"அந்த பொண்ணை கூட்டிட்டு வருவானா இருக்கும் டா. கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்!" என்றிருந்தார் மிருதுளாவும்.
தொடரும்..