அத்தியாயம் 36 இறுதி அத்தியாயம்.
தொட்டிலில் குழந்தை உறக்கத்தில் இருக்க, அருகில் கட்டிலில் இருந்து குழந்தையை எட்டிப் பார்த்த துகிரா திகைத்து தவித்து வெலவெலத்து போனாள்.
தனக்கு சுகப்பிரசவத்திற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என்று தான் நினைத்திருந்தாள் துகிரா. ஆனாலும் நடந்ததே!
தினமும் காலை மாலை என அவள் ரத்த அழுத்தத்தை விக்ரம் உயர்த்தாத நாளே இல்லை.
"ஏன் டா அவளை இம்சை பண்ற? எங்கேயாவது வெளில கூட்டிட்டு போய் கொஞ்சம் சந்தோசமா தான் பார்த்துக்கோயேன்! மாசமா இருக்க பொண்ணு டா!"
ஐந்து மாதம் வரை கண்ணும் கருத்துமாய் வீட்டிற்குள் மட்டும் துகிராவை வைத்து என மிருதுளா பார்த்துக் கொண்டவர் ஆறாம் மாதம் துவங்கவும் விக்ரமிடம் சொல்ல,
"மிரும்மா! எங்க வந்து யாருகிட்ட கோர்த்து விடுறிங்க?" என அதிர்ந்த பாவனை காட்டியவள்,
"வீட்டுக்குள்ளயேஊருபட்ட பிரச்சனையை என் தலைக்குள்ள ஏத்திட்டு இருக்க மனுஷன் கூட வெளில போனுமா நான்? அதுவும் சந்தோசமா?" என துகிரா கேட்க,
"இவ கூட மனுஷன் போவானா?" என்றான் விக்ரமும்.
"பார்த்திங்களா? நான் சொல்ல வேண்டியதை அவரே சொல்லிக்குறார். நினைச்சு பார்க்கவே திகிலா இருக்கு. நான் வீட்டுல இருக்குறது பிடிக்கலைனா சொல்லுங்க. இப்படி தேரை தெருவுக்கு இழுக்காதீங்க!" என்றவள் படபடவென பேசியதில்,
"துகி! இப்ப இவ்வளவு எல்லாம் மூச்சு விடாம பேச கூடாது நீ! என்ன நீ?" என மிருதுளா கவலையாகிவிட,
"இல்ல இல்ல! நான் சந்தோசமா தான் இருக்கேன் மிரும்மா. இப்படியே எனக்கு புடிச்சதெல்லாம் நீங்க செஞ்சு குடுத்து உங்க கூடவே வச்சுக்கிட்டா இன்னும் சந்தோசமா இருப்பேன். நீங்க டென்ஷன் எடுத்துக்காதீங்க. ப்ளீஸ்! கோஆபரேட் பண்ணுங்க!" என துகிரா சொல்லவும் மிருதுளாவும் சிரித்துவிட,
"இப்படி அவ என்ன சொன்னாலும் சிரிச்சிடுங்க. அவளும் தலைக்கு மேல ஏறட்டும்" என்றவன்,
"ப்ச்!" என வெளியேற,
"எனக்கென்னவோ அவனெல்லாம் நார்மலா இருக்குற மாதிரி தான் தெரியுது. நீ தான் இப்பலாம் அவனை ஓட விடுற!" மிருதுளா சொல்ல,
"அட போங்க மிரும்மா! போராடுறேன்னு சொல்லுங்க. நீங்களே பாக்குறீங்க இல்ல? மனுஷன் எப்பவாச்சும் சிரிச்சு பேசுறாரா பாருங்க?" என கேட்க,
"அதுவும் சரி தான். ஆனாலும் அவன் எப்பவும் இப்படி தானே?" என மகனுக்கு பரிந்து பேச,
"அப்படி வளத்து விட்ருக்கீங்க. அப்படி என்ன சிரிக்கவே மாட்டேன்னு பிடிவாதம். உண்டாயிருக்கேன்னு சொன்னா அப்படியா டெலிவரி எப்போன்னு கேட்குற புருஷனை வச்சுட்டு நான் அமைதியா இருந்தா உங்க புள்ள தான் என் தலையில ஏறிடுவார்!" என மீண்டும் அதிகமாய் பேச,
"சரி சரி! நான் இனி அவனை பத்தி எதுவும் உன்கிட்ட பேசல. நீ டென்ஷன் ஆகாத. இந்தா ஜூஸ் குடி!" என மிருதுளா குடுக்க,
"இன்னொரு டம்ளரும் குடுங்க. ஒரு கிளாஸ் ஜூஸ் எல்லாம் இவ்வளவு பேசுற எனக்கு எப்படி பத்தும்? உள்ள இருக்குறது விக்ரம் செராக்ஸ் வேற! அடேய்! ஆம்புள புள்ளையா மட்டும் வந்துடாத டா!" என புலம்பி தள்ளினாள் ஒன்பதாம் மாதம் வரையுமே!.
துகிராவிற்கு நான்காம் மாதம் இருக்கும் நேரம் விக்ரம் துகிராவின் முதலாம் ஆண்டு திருமண நாள் வர, துகிராவையே சுற்றிக் கொண்டு வந்தார் மிருதுளா.
நிச்சயம் அவளும் மறந்திருக்க மாட்டாள் என தெரியும். ஆனாலும் அந்த நாளை அப்படியே எப்படி சாதாரணமாய் விட முடியும்? என தான் சுற்றிக் கொண்டு வந்தார்.
"துகி!" என அழைக்கவுமே,
"என்ன மிரும்மா? மறுபடியும் அந்த ரோட்டுக்கு போணுமா?" என்றாள்.
"துகிமா!" என வருத்தமாய் அவர் பார்க்க,
"இல்ல அங்க தானே கல்யாணம் நடந்துச்சு? அதான் ஒரு சுத்து அந்த ரோட்டை சுத்திட்டு வரட்டுமா கேட்டேன்" என்றவள்,
"உங்க பையனுக்கெல்லாம் எங்க நியாபகம் இருக்க போகுது" என கேட்க,
"அதெல்லாம் மறக்க மாட்டான். எப்படினாலும் இது கல்யாண நாள் இல்ல?" என கேட்க,
"சரி! நியாபகம் இல்லைனா?" என துகிராவும் கேட்க,
"வர்றான் வர்றான்! அவனே சொல்லுவான் பாரு!" என்றார் மெதுவாய் மிருதுளா.
"ஆமா! பாசத்துல கட்டிப்பிடிச்சு கல்யாண நாள் கொண்டாட வர்றாரு தேசத்து ராஜா" என வாய் நிற்கவில்லை துகிராவிற்கு.
"விக்கி!" என மிருதுளா அழைத்து அவனை ஆர்வமாய் பார்க்க,
"மிரும்மா!" என அவரை கட்டுப்படுத்தினார்ள் துகிரா.
"சொல்லுங்க ம்மா!" என்றவன் அவர்கள் இருவரின் கண்கள் பாஷை புரியாமல்,
"ஒரு ப்ரோட்யூசரை பார்க்க போறேன்!" என்றான் அவனே!.
"என்ன எக்ஸ்ட்ரா தகவல் எல்லாம் வருது. இப்படி சொல்லிட்டு போறது எல்லாம் வழக்கமே இல்லையே மிரும்மா!" என்றாள் துகிரா.
"பெங்களூர் போறேன் வர நாலு நாள் ஆகும்!" என அவனுமே அன்னையைப் பார்த்து சொல்ல,
"ஹாஹாஹா!" என சத்தமாய் சிரித்தாள் துகிரா. அத்தனை ஏமாற்றமும் மிருதுளாவிற்கு தான்.
"ப்ச்!" என அவள் சிரிப்பில் கடுப்பாகி விக்ரம் வாசலுக்கு செல்ல, முகமே வாடிவிட்டது மிருதுளாவிற்கு.
"இதுக்கு போய் கவலையா? இப்ப பாருங்க!" என்ற துகிரா எழுந்து வேகமாய் அவளும் வாசலுக்கு சென்றவள், அவனைத் தாண்டிக் கொண்டு அதே வேகத்தோடு கேட்டை திறந்து நடக்க ஆரம்பித்தாள் கையில் மொபைலுடன்.
"என்ன பண்றா?" என புரியாமல் மிருதுளா விழிக்க, அவள் செல்லும் வேகத்திலேயே பக்கென்று தான் இருந்தது விக்ரமிற்குமே!.
"ஹே!" என கை நீட்டியவன்,
"ம்மா! ம்மா! இவ எங்க போறா? அதுவும் எப்படி நடக்குறா பாருங்க?" என்றவன் கொஞ்சம் பதட்டமாகிவிட்டான் அவள் நடையின் வேகத்தில்.
பத்து நாட்களுக்கு முன் மருத்துவ ஆலோசனைக்கு மிருதுளாவோடு விக்ரமையும் வம்படியாய் வரவைத்திருந்தாள் துகிரா.
"பொறுமையா தான் நடக்கணும். நீங்க நடக்குறதே தெரியாத மாதிரி. ஆறு மாசம் வரை ரொம்பவே கேர்ஃபுல்லா இருக்கனும்!" என மருத்துவர் கூறிய நேரம், விதியே என கேட்டு நின்ற விக்ரம் இப்பொழுது இவள் நடப்பதை கண்டு பயந்து கூடவே வேகமாய் செல்ல, அவள் ரோட்டில் இறங்கி நடக்க ஆரம்பித்து இருந்தாள்.
"பைத்தியமா டி நீ? எங்க டி போற?" என அவள் முன் சென்று நிற்க, வியர்க்க வியர்க்க அவனை தாண்டி அவள் மீண்டும் செல்ல,
"இம்சை பண்ணாத துகி! அறைஞ்சிட போறேன்!" என அவள் கைப்பிடித்து விக்ரம் நின்ற நேரம்,
"அனிவெர்சரி!" என்று துகிரா மூச்சுவாங்க சொல்லியவள் அந்த இடத்தையும் பார்க்க, அது விக்ரம் மாங்கல்யத்தை அவளிடம் சேர்த்த அதே இடம்.
அவள் சொல்லிய பின் தான் விக்ரமுமே அதை உணர்ந்தான். ஆனாலும் பதிலுக்கு எதுவும் சொல்ல தோன்றவில்லை.
"ப்ச்! வா நீ!" என கைப் பிடிக்க,
"ம்ம்ஹும்!" என தலையை ஆட்டியவள்,
"போய் காரை எடுத்துட்டு வாங்க!" என சொல்லவும்,
"ஹே! என்ன நினைச்சுட்டு பண்ற நீ?" என அவன் ஒற்றை விரலை அவள் முன் நீட்ட, நிற்க முடியாமல் ரோட்டிலேயே சட்டென அமர்ந்தாள் துகிரா.
அவள் அமர்ந்த விதமும் மீண்டும் பக்கென்று ஆக, "ப்ச்! இவளோட!" என்றவன் காரை எடுத்து வரவும் அவள் ஏறிக் கொள்ள, வீட்டிற்குள் கொண்டு வந்து இறக்கிவிட்டான்.
"என்னலாம் பண்ணறா பாருங்க ம்மா!" என வாசலில் நின்று பார்த்த மிருதுளாவிடம் முறையிட,
"அனிவெர்சரியாம் அனிவெர்சரி!" என முறைத்துவிட்டு நகர்ந்தான்.
"என்ன பண்ணின நீ" என குறுகுறுவென்று பார்த்து மிருதுளா கேட்க, தண்ணீரை பருகி நின்ற துகிரா,
"ஒரு வருஷத்துல இன்னைக்கு தான் விக்ஸ் டப்பாவை என்னை சுத்த விட்டிருக்கேன்! எப்படி?" என பெருமையாய் கேட்டவளைப் பார்த்து முறைக்க முயன்று மிருதுளா சிரித்தவர்,
"அவனுக்கு விஷ் பண்ணியா இல்ல அவனுக்கே நியாபகம் வந்துடுச்சா? அனிவெர்சரினு சொல்லிட்டு போறான்!" என கேட்க,
"ம்ம்க்கும்! விக்ஸ் குட்டிக்கு விஷ் வேற பண்ணுறாங்க. நான் நியாபகப்படுத்தினேன். அவ்வளவு தான்! இல்லைனா எல்லாம் நியாபகம் வந்திருக்காது அந்த வளந்த கொக்குக்கு. நான் ஒருத்தி இருக்கேன்ன்னு இப்படி டார்ச்சர் பண்ணி தான் உங்க பையனுக்கு புரிய வைக்க வேண்டியதிருக்கு! இதுல விஷ் வேற" என சொல்லி இருந்தாள்.
துகிரா நல்ல தூக்கத்தில் இருக்கும் இரவு நேரம் விக்ரமின் ஒரு கை துகிராவின் வயிற்றில் பதிய, அதன் வித்தியாசத்தில் சில நொடிகளில் விழித்து விட்டாள் துகிராவும்.
"ஆத்தி! என்னால முடியாது!" துகிரா சொல்லவும் தான் அவள் விழித்ததையே கண்டான் விக்ரம்.
"என்ன முடியாது?" விக்ரம் கேட்க,
"எதுவும் முடியாது!" என அவள் அவனுக்கு எதிராய் திரும்பிப் படுக்க, புரிந்தவனுக்கு அமர்த்தலான புன்னகையும் தோன்றாமல் இல்லை அந்த நேரம்.
"நான் பேபியை தான் பார்த்தேன்!" என்றான் இரண்டு கைகளையும் தன் தலைக்கு கீழ் சேர்த்து வைத்து.
'ஓஹ்! தந்தை பாசமாம்!' நினைத்துக் கொண்டு மணியைப் பார்க்க, இரவு இரண்டு மணி என்றதில் திரும்பி அவனை முறைத்தாள்.
"இதெல்லாம் இந்த நேரத்துல மட்டும் தான் தெரியுமா? பகல்ல பல்ல காட்டிட்டு போய்டுமா?" அவனிடமே அவள் கேட்க,
'இதுக்கே அவ்வளவு வாய் உனக்கு..' என்றான் முணுமுணுப்பாய்.
ஆனாலும் எங்கோ என்றோ படித்தோ கேட்டோ நியாபகம் குழந்தை அசைவு வயிற்றில் தெரியும் என.
அதற்காக அவளிடம் சென்று கேட்கவா முடியும்? அதுவும் கேட்டுவிட்டால் தான் அவன் விக்ரமா?
உறக்கத்தில் இருந்தவன் கண் விழிக்கும் போது அவளின் மேடிட்ட வயிற்றைக் காணவும் ஒரு ஆசை தன் குழந்தையின் இருப்பை தெரிந்து கொள்ள.
"அசையும் போது நானே சொல்றேன்!" அவன் பார்வை குழந்தையின் இருப்பிடத்தில் இருப்பதை வைத்து துகிரா சொல்ல,
"ஒன்னும் தேவை இல்ல!" என அவளுக்கு எதிராய் திரும்பிக் கொண்டாம் விக்ரம்.
"விக்ஸ் டப்பாவாச்சும் திருந்துறதாச்சும்?" என துகிரா சொல்ல,
"பேபி இருக்குன்னு கூட பார்க்க மாட்டேன் துகிரா!" என குரல் மட்டும் வந்தது விக்ரமிடம் இருந்து.
அவனுக்கு அவளையும் இத்தனை நாட்களில் நன்றாய் தெரியுமே! அவள் சொல்லியதும் சரி என்று மட்டும் தான் சொல்லி இருந்தால் அனைவரின் முன்பும் தான் கேட்டதாய் சொல்லி குழந்தை அசைவை பார்க்க சொல்லுவாள் என சுதாரித்திருந்தான் விக்ரம்.
மருத்துவர் குறித்த நாள் வரையுமே வலி வரவில்லை துகிராவிற்கு. சாதாரணமாய் மருத்துவமனைக்கு துகிரா வந்து சேர, மருத்துவரும் இன்னும் இரண்டு நாட்களுக்கு காத்திருக்கலாம் என்றார்.
அப்படியும் வலி கண்டிடவில்லை என்றதும் அன்றே மருத்துவமனையில் அட்மிட் செய்ய சொல்லி ஊசியையும் செலுத்திவிட்டு, "வலி வருதா பார்க்கலாம் இல்லைனா ஆபரேஷன் தான்" என்றிருந்தார் மருத்துவர்.
விக்ரமையும் துகிரா வாய் பேசி இழுத்து வந்திருந்தாள் மருத்துவமனைக்கு. வலி வரும் சுகப்பிரசவம் என எல்லாம் நம்பவே இல்லை அவள்.
"என்னவெல்லாமோ சொல்லுவாங்க டெலிவரின்னா. இவ எப்படி உக்காந்திருக்கா பாருங்க?" என மருத்துமனையில் கட்டிலில் சாதாரணமாய் அமர்ந்திருந்தவளை விக்ரம் நக்கலாய் சொல்ல,
"அதுக்காக நடிக்கவா முடியும்? மூச்சு வாங்க பேசியே எனக்கு நாள் போதல" என பதிலுக்கு பதில் துகிராவும் சொல்ல ஒரு மணி நேரம் அப்படியே தான் சென்றது.
"ப்ச்!" என விக்ரமும் தனது எரிச்சலை காட்ட ஆரம்பிக்க,
"மிரும்மா! என்னவோ பண்ணுது!" என ஆரம்பித்து வலியில் அழ ஆரம்பித்த இருபதே நிமிடங்களில் விக்ரமின் மகன் இந்த உலகத்திற்கு வந்து சேர்ந்திருந்தான்.
"பையன் பிறந்திருக்கான்!" என்று மருத்துவர் துகிராவிடம் சொல்லவும் அந்த நேரம் முழு ஓய்வு தேவையில் துகிரா கண்மூடிவிட, கண்விழித்து இரண்டு மணி நேரம் ஆகியும் அரண்ட பார்வை தான் அவளிடம்.
"மாமா ! எனக்கு கண்டிப்பா பொண்ணு தான் பிறப்பா!" என பல முறை ஸ்ரீனிவாசனிடமும் கூறி இருக்கிறாள்.
"எனக்கு பையனே வேண்டாம். ஐ ஹேட் திஸ் விக்ஸ் டப்பா!" என விளையாட்டாய் விக்ரம் முன்னேயே கூட கூறிய நாட்கள் ஏராளம்.
இப்படி அனைத்து பேச்சிற்கும் வாயடைக்க வைத்து பையனே பிறந்திருக்க, "பையனைக் கொண்டு வந்து விக்கிகிட்ட குடுக்கவும் விக்கி எப்படி சிரிச்சான் தெரியுமா? பார்க்க ரெண்டு கண்ணு போதல துகி! இங்க பாரு போட்டோ, வீடியோ" என மிருதுளா காட்ட,
"நானுமே பேரனை பாக்குறதை விட்டு அவனை தான் பார்த்தேன் துகி. அப்படி சிரிச்சான்" என்றார் ஸ்ரீனிவாசனும்.
"உங்களுக்கெல்லாம் உங்க கவலை. இனி இவன் சிரிக்குறதை பார்க்க நான் உங்க வயசு வரை காத்திருக்கணுமேனு என் கவலை!" என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் துகிரா.
"என்ன துகி!" மிருதுளா அழைக்க,
"விக்ஸை உள்ள கூப்பிடுங்க மிரும்மா!" என்றாள் துகிரா.
விக்ரமை உள்ளே அனுப்பிவிட்டு மிருத்துல ஸ்ரீனிவாசன் இருவரும் வெளியில் நிற்க, நிஜமாய் அந்த நிமிடம் துகிராவைக் காண அவ்வளவு தடுமாற்றம் விக்ரமிடம்.
"பேபி பார்த்தியா?" என்றான் குழந்தையை மட்டும் பார்த்து குழந்தை அருகில் மட்டும் நின்று.
"ஹ்ம்!" என்றவள் சத்தத்தில் திரும்பி அவள் முகம் பார்த்து புருவம் சுருக்கியவன்,
"வலிக்குதா என்ன?" என கேட்க,
"இல்லையே ஏன்?" என்றாள்.
"இவ்ளோ அமைதியா பேசுற?" என்றவனிடம் மிதமான புன்னகை கூட. அது இன்னும் அழகாய் தெரிந்தது துகிராவின் கண்களுக்கு.
"கண்ணு கெட்டு போச்சோ!" என சத்தமாய் அவள் சொல்ல, புரியாமல் அவன் பார்க்க,
"ஒண்ணுமில்ல!" என்றவள் அவனை உள்வாங்கிப் பார்க்க, சில நொடிகள் அங்கே நின்றவனுக்கு அதற்கு மேல் முடியவில்லை.
"என்ன பார்வை இது?" என அவளிடமே சொல்லியவன் குழந்தையிடம் இருந்து அவளருகில் வர, அவள் கட்டிலில் அமர்ந்து நிமிர்ந்து அவனைப் பார்க்க, மீண்டும் புன்னகைத்து ஒரு அழுத்தமான நெற்றி முத்தம் விக்ரமிடம் இருந்து எதிர்பாராமல்.
"கனவோ!" என துகிரா சொல்ல,
"ப்ச்! இம்சை!" என்று சொல்லி நகர்ந்து நின்றுவிட்டான். ஆனாலும் அவன் உணர்வுகள் அந்த நொடி புரிபடுவது போல தான் இருந்தது துகிராவிற்கு.
பெரிதாய் மாற்றங்கள் எல்லாம் சில சில சிறிய மாற்றங்களால் நிகழும் தானே! இவர்கள் வாழ்விலும் நிகழ்ந்திடும்.
சுபம்...