அத்தியாயம் 4
காலையில் விக்ரம் தன் அறையில் இருந்து வரும் பொழுதே மணி பத்தாகி இருந்தது.
"எப்ப அவளை அனுப்ப போறீங்க?" என கேட்டபடி வந்தான்.
"அவ எப்பவோ போய்ட்டா!" என மிருதுளா முறைப்புடன் சொல்ல,
"ஹ்ம்! இவளெல்லாம்!" என சொல்ல வந்தவனை மிருதுளாவின் பார்வை தான் தடுத்திருந்தது.
"தப்பெல்லாம் நீங்க பண்ணுங்க. ஒரு உயிர் போக முடிஞ்சதை தடுக்க முடிஞ்சதா உன்னால?" என அன்னையே கேட்க, கண்களில் வலியோடு கண்டான் அன்னையை விக்ரம்.
"எல்லாருமே தப்பு தப்பா தான் முடிவெடுக்குறாங்க விக்கி. அந்த பொண்ணுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம் வேறொரு பையனை கல்யாணம் பண்ணிக்க. ஏன் சாக விஷ்வாக்கு ஒரு காரணம் போதுமா இருந்துச்சு தானே? உனக்கு அந்த பொண்ணை கல்யாணத்தை நிறுத்தி கூட்டிட்டு வர ஒரு காரணம் இருந்துச்சு தானே?" என கூட கேட்டுவிட்டார்.
"ம்மா! அதையும் இதையும் ஒண்ணா பேசாதீங்க. எனக்கு பாக்குற இடமெல்லாம் விஷ்வா தான் தெரியுறான். அந்த கவலையை கூட என்னால முழுசா காட்ட முடியாம அவளை கூட வச்சுட்டு இருந்தா எனக்கு எப்படி இருக்கும்?" என கேட்க,
"காலைலே ஆரம்பிச்சு வச்சாச்சா ரெண்டு பேரும்?" என வந்த ஸ்ரீனிவாசன்,
"இங்க பார் விக்கி! எதுவுமே காரணம் இல்லாம நடக்குறது இல்ல. இப்ப பாரு! அந்த பொண்ணு சொல்லிக்காம போய்டுச்சு. இனி கொஞ்சம் அமைதியா இரு!" என்றார்.
"வீட்டுல எதுவும் காணாம போயிருக்கான்னு பார்த்துக்கோங்க. நான் நேத்து தண்ணி எடுக்க வரும் போது கூட அவ கிட்சேன்ல என்னவோ பண்ணிட்டு இருந்தா!" என சொல்லி கிளம்பி வெளியில் சென்றுவிட்டான் விக்ரம்.
"என்னங்க இப்படி இருக்கான் இவன்?" மிருதுளா கேட்க, ஸ்ரீனிவாசன் மனைவியை சமாதானப்படுத்தினார்.
விக்ரம் நண்பர்கள் அவனிடன் மீண்டும் மீண்டும் பேச முயற்சிக்க, அதுவேறு ஒரு புறம் காயத்தை கீறுவதாய் இருந்தது.
சரியாய் உண்ணவில்லை உறங்கவில்லை என நினைக்கும் போதே ஹாலில் அவள் தூங்கி விழுந்த விதமும் பசிச்சது என்று சொல்லி சமையலறையில் நின்றவள் விதமும் தான் நியாபகத்திற்கு வந்தது விக்ரமிற்கு.
அவளை நினைக்கவே அத்தனை ஆத்திரம் வர. நினைக்க கூடாது என நினைத்தே நினைத்துக் கொண்டிருந்தான்.
பசி, தூக்கம்னு எப்படி இப்படி இருக்க முடியுது? அவளுக்காக செத்தவன் நியாபகம் கொஞ்சம் கூடவா இல்லை என தான் இப்பொழுதும் ஆத்திரம்.
அலுவலகம் வந்தவன் எண்ணம் எதிலும் பதியவில்லை. அத்தனைக்கு வியாபித்திருந்தான் விஷ்பா விக்ரமினுள்.
வீட்டினுள் இருந்தால் தான் இப்படி இருக்குமென்று வெளியில் வந்தவனுக்கு இப்பொழுது தலைவலி வந்து தான் மிச்சம்.
"சார்!" என குழந்தையோடு வந்து தனக்கு முன் ஒருவன் நிற்க, அந்த குழந்தையைப் பார்த்து வேறு இன்னும் மனதில் அழுத்தம் கூடியது.
"ஹ்ம்! என்ன சொன்னான்?" என விக்ரம் கேட்கவும்,
"பணத்தோட வர்றதா சொல்லிட்டான் சார்!" என்றான் வந்தவன்.
இதென்ன டா இப்படி என என்றுமில்லாத எரிச்சல் விக்ரமிடம்.
"விக்ரம்!" என உருமிக் கொண்டே கையில் பெட்டியுடன் உள்ளே வர,
"டாடி!" என அவனிடம் ஓடியது குழந்தை.
வந்தவன் பெட்டியை வைத்துவிட்டு விக்ரமை முறைத்து பின் குழந்தையை சமாதானம் செய்து முடித்து மீண்டும் விக்ரமை கண்கள் சிவக்க பார்த்தவன்,
"நீ இவ்வளவு தூரம் போவனு நான் நினைக்கவே இல்ல!" என்றான் அவன்.
"உன் நினைப்புக்குள்ள நான் இருக்கணும்னு அவசியமில்லை ராஜ்குமார். பணத்தை கொடுத்தாச்சுன்னா கிளம்பலாம்!" என்றான் விக்ரம் சாதாரணமாய் மட்டும்.
"உனக்கும் குடும்பம் இருக்கு!" என்று சொல்லியது தான் தாமதம்.
அமர்ந்திருந்த நாற்காலியை தள்ளி விட்டு எழுந்திருந்தான் விக்ரம். ஏற்கனவே விஷ்வா எண்ணம் தனலாய் எரிந்து கொண்டிருக்க,
"நீ தர வேண்டிய பணத்தை வாங்க உன் பின்னாடி நான் அலையனுமா? இப்ப எப்படி என்னை தேடி வந்தது இந்த பணம்? குடும்பம் எனக்கும் இருக்குது தான். முடிஞ்சா தொட்டு பாரு!" என்றவன்,
"அனுப்பி விடு!" என அங்கிருந்தவனைப் பார்த்து சொல்ல, அவனும் வந்தவனை வெளியே கொண்டு சென்றான்.
இரண்டு மணிக்கு விக்ரம் அலைபேசிக்கு அழைப்பு வர,
"சொல்லுங்க ப்பா!" என எடுத்தான் விக்ரம்.
"விக்ரம் கொஞ்சம் இந்த இடத்துக்கு வா!" என்றார் பதட்டமாய் ஸ்ரீனிவாசன்.
அவர் கூறிய மருத்துவமனைக்கு சென்ற போது ஸ்ரீனிவாசன் வெளியில் நிற்க,
"அம்மாக்கு என்ன ப்பா?" என பதறிவிட்டான் விக்ரம். 'உனக்கும் குடும்பம் இருக்கு!' என காதில் கேட்டிருந்தது விக்ரமிற்கு.
"அம்மாகிட்ட இன்னும் சொல்லல டா. உள்ள அந்த பொன்னத்!" என்றதும் விக்ரம் புரியாமல் எட்டிப் பார்க்க, மயக்க நிலையில் துகிரா.
பார்த்ததும் வந்ததே கோபம். "இவ எங்க ப்பா இங்க? முதல்ல நீங்க என்ன பண்றீங்க இங்க? வாங்க போகலாம்!" என்றான் கைப்பிடித்து இழுத்து.
"டேய்! சூசைட் அட்டாம்ட்ல என்னை உள்ள போடவா? அவ வந்து விழுந்தது என் கார்ல!" என்றார் கோபமாய்.
"என்ன சொல்றிங்க?" என்றவனுக்கு புரியவே இல்லை.
"நான் வீட்டுக்கு போய்ட்டு இருக்கும் போது டிராபிக் சிக்னல்கிட்ட வரவும் இந்த பொண்ணு கார் மேல வந்து விழுது!".
"எல்லாம் நடிப்பு. சாக வேற வண்டியே இல்லையா? வேணும்னு வந்து விழுந்திருக்கா. அப்படியே ஏத்திட்டு போறதுக்கு இல்லாம!" என்றவன் வார்த்தைகளில்,
"சொல்றதை முழுசா தான் கேளேன் டா!" என கடுப்பாய் சொல்லிய தந்தை,
"அவ வேணும்னு விழல. மயங்கி தான் விழுந்ததே!" என்றும் கூறினார்.
"இப்ப என்ன பண்ண போறீங்க?" என்றான் ஏன் எதற்கு என்ற எந்த கேள்வியும் இன்றி.
"காலைல சொல்லிக்காம போன பொண்ணு ஏன் இப்படி இருக்கனும்? என்னவோ பயமா இருக்கு. அதான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தேன்!"
"ப்பா!" என கோபமாய் கூற வந்து தலையில் அடித்துக் கொண்டவன்,
"சரி! அதான் ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டிங்க தான? வாங்க போவோம்!" என்று சொல்ல,
"வீட்டுக்கு போய் உன் அம்மாகிட்ட இதை சொன்னா என்னை நிக்க வச்சு கேட்பா. பதில் சொல்ல முடியாது. இரு என்னனு கேட்டுட்டு போவோம்!" என ஸ்ரீனிவாசன் பதில் சொல்ல,
"ஆஹ்ஹ்!" என வெறியாய் வந்தது. காலையில் இருந்து இப்பொழுது வரைக்கும் என தலைவலி குறைந்தப்பாடில்லை.
"என்னை ஏன் வர சொன்னிங்க?" என கடித்தவன்,
"அஞ்சு பத்தை போட்டுட்டு வர்றதுக்கு இல்லாம.." என வரைமுறையின்றி பேச,
"இப்படிலாம் பேசினா அம்மாகிட்ட சொல்லிடுவேன் விக்ரம்!" என்றார் ஸ்ரீனிவாசன் கண்டிப்புடன்.
"ப்ச்!" என அங்கேயே ஓரமா மை அவன் நிற்க, வெளியே வந்த மருத்துவர்,
"அவங்க சாப்பிட்டு ரெண்டு மூணு நாள் ஆன மாதிரி இருக்கு. கூடவே நிறைய பிரஷர்ல ஸ்ட்ரைன் பண்ணிருக்காங்க. ட்ரிப்ஸ் போட்ருக்கு. முடியவும் செக் பண்ணிடுவோம்!" என சொல்லி சென்றுவிட, அனைத்தையும் கேட்டுக் கொண்டது ஸ்ரீனிவாசன் தான்.
உடனே ஸ்ரீனிவாசன் மனைவிக்கு அழைக்க, "யாருக்கு பண்றீங்க? போலாம் தானே?" என அருகில் வந்தான் மருத்துவர் கூறியது தெரியாமலே.
"சொல்லுங்கங்க!" என மிருதுளா போனை எடுக்கவும்,
"மிரு! நேத்து அந்த பொண்ணு நம்ம வீட்டுல சாப்பிட்டாளா?" என கணவன் கேட்க, யோசித்தார் மிருதுளா.
நேற்று இருந்த நிலையில் மிருதுளாவிற்கே பசி என்ற ஒன்று இல்லை. சமையல் செய்யும் பெண் தான் அவ்வபோது அறைக்கு கொண்டு வந்து சூப் பும் ஜூஸும் கொடுத்திருந்தார்.
"தெரியலையேங்க. நான் ரூம்ல இருந்தேன்!" குறைந்துவிட்ட குரலில் கூறி இருந்தார் மிருதுளா.
"இதுக்கு அந்த பொண்ணை நேத்தே தனியா விட்ருக்கலாம் நீ! என்ன பண்றீங்க அம்மாவும் மகனும்!" என திட்ட ஆரம்பித்துவிட்டார் ஸ்ரீனிவாசன்.
"என்னங்க ஆச்சு இப்போ?" என புரியாமல் மிருதுளா கேட்கவும் நடந்ததை அவர் சொல்ல,
"நான் வேணா வரவா?" என உடனே கேட்க,
"ஒன்னும் வேண்டாம். நான் பாக்குறேன்" என்று சொல்லிவிட்டார்.
'இதென்ன டா புது தலைவலி?' என நினைத்துக் கொண்டாலும் தந்தையிடம் முதலில் போல கோபமாய் பேச முடியவில்லை. அன்னையையே திட்டியதை கண்டவன் அமைதியாய் பல்லைக் கடித்து நின்றான்.
ஒரு மணி நேரம் முடிவில் கண்களை திறக்கவே முடியாமல் மெதுவாய் விழியை அசைத்து கொடுத்து திறந்தாள் துகிரா.
"ஜூஸ் வாங்கிட்டு வா!" என ஸ்ரீனிவாசன் சொல்லவும்,
"நானா?" என அவன் அதிர்ந்து கேட்க,
"நான் வேணா போட்டுமா?" என்ற தந்தையின் முறைப்பில் கோபத்தை கூட காட்ட முடியா கடுப்போடு நகர்ந்தான் விக்ரம்.
"இப்ப எப்படி இருக்கு மா?" என கேட்டவரைப் பார்த்து அதிர்ந்தவள் இருக்குமிடத்தை ஆராய, மருத்துவர் நர்ஸ் கூறியதை கேட்டு வந்திருந்தார்.
"சாப்பிட உடனே எதுவும் குடுக்க வேண்டாம். லிக்விட் ஐட்டம் குடுங்க. வீட்டுக்கு போய் சாப்பிட வைங்க. சரியாகிடும்!" என கூறி மருந்து சீட்டையும் கொடுக்க, ஜூஸுடன் வந்து நின்றான் விக்ரம்.
"குட்!" என அதைக் கண்ட மருத்துவர் அவனை பாராட்டிவிட்டு செல்ல, புரியாமல் பார்த்தவன் தந்தையிடம் அதை நீட்டினான்.
அதை வாங்கி, "இதை குடி!" என சொல்லவும் அவள் வாங்காமல் பார்க்க,
"நம்பி குடிக்கலாம்!" என்ற ஸ்ரீனிவாசன் அர்த்தத்தில் துகிரா வாங்கிக் கொள்ள,
"போலாமா ப்பா?" என்றான் விக்ரம்.
"உன் வீடு எங்கனு சொல்லும்மா. விட்டுட்டு கிளம்புறோம்!" என ஸ்ரீனிவாசன் சொல்ல, கண்களில் கண்ணீர் நிறைந்துவிட்டது துகிராவிற்கு.
அவர் கேட்டதும் தான் தான் வீட்டிற்கு சென்றதும் அங்கே அவர்கள் பேசிய பேச்சும் என நியாபக அடுக்கில் மேலே வர, வழி தெரியாப் பிள்ளையாய் விழித்தாள் துகிரா.
சந்தேகமாய் விக்ரம் அவளைக் காண, "வீட்டுக்கு போக முடியாத சூழ்நிலையா ம்மா?" என ஒருவித கனிவோடு கேட்டவரை நிமிர்ந்து பாராமலே ஆம் என்று தலையாட்டியவள் சுயகழிவிறக்கத்தில் அழ,
"ஆரம்பிச்சுட்டா!" என தான் நினைக்க தோன்றியது விக்ரமிற்கு.
'இதை இப்படியே விட கூடாது!' என விக்ரம் நினைக்க,
"சரி வாம்மா! எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். அடுத்து என்னனு அங்க போய் பார்த்துக்கலாம்!" என தந்தையும் அவளிடம் சொல்ல, அவள் மறுக்கும் முன்னே,
"இவளை நேத்தே நான் சும்மா விட்டது தப்பா போச்சு. அவ தேவைக்கு தான் நம்ம காலை சுத்தி சுத்தி வர்றா. உங்களுக்குமா தெரியல? இந்த பொண்ணுங்க வேணும்னா காலையும் பிடிப்பாங்க. கழுத்தையும் பிடிப்பாங்க!" என விக்ரம் சொல்லியது தான் தாமதம்,
"என்னை சொல்ல நீங்க யாரு?" எழுந்த வேகத்தில் கேட்டவள் அடுத்தடுத்த பேச்சில் மூச்சுமுட்ட கோபத்தில் நின்றான் விக்ரம்.
தொடரும்..