அத்தியாயம் 5
"என்னை சொல்ல நீங்க யாரு?" என துகிரா எழுந்த வேகத்தை விக்ரமுமே எதிர்பார்க்கவில்லை.
"என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? செத்து பிழைச்சுட்டு இருக்கேன். என் பாடு தெரியாம இனி எதாவது பேசினீங்க!" என்ற துகிரா,
"எதுவும் வேணாம்! தயவு செஞ்சு அவரை கூட்டிட்டு போங்க சார்!" என்றாள்.
நடந்து முடிந்து மங்கிவிட்ட அனைத்திற்கும் அதுவும் இவனிடம் போய் விவரம் சொல்லவா என்ற கோபத்தில் தான் காலையில் அவன் வீட்டில் இருந்து சொல்லாமல் கிளம்பி சென்றதே.
மீண்டும் இவர்கள் கண்ணிலா பட வேண்டும்? இதற்கு செத்து போயிருந்தால் கூட பரவாயில்லை எனும் எண்ணமே வந்துவிட்டது.
விக்ரமின் பேச்சை கூட அசட்டை செய்ய அவளால் முடியும். ஆனால் சொந்த தாய் தந்தை பெரியப்பா பெரியம்மாவின் பேச்சுக்கள்? அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை அவளிடம்.
பசி மயக்கத்தை விட அவர்கள் பேச்சை கேட்டு தான் அவளுக்கு இந்த நிலமையே! அதை சொல்லி அழக் கூட யாருமில்லாமல் விரக்தியில் இருப்பவளை அதை நினைத்து அழக் கூட நேரம் தராமல் இந்த கடவுள் இந்த பாடு தன்னை படுத்த வேண்டாம் என்று தான் தோன்றியது துகிராவிற்கு.
"பார்த்திங்களா? இவ நல்லா தான் இருக்குறா. உங்க கண்ணு முன்னாடி எவ்வளவு துள்ளுறா பாருங்க. எல்லாமே நடிப்பு. நீங்க தான் நம்ப மாட்றிங்க!" விக்ரம் தந்தையிடம் குறைபடிக்க,
"விக்ரம்! அந்த பொண்ணு உன் மேல கோவம் இருந்தாலும் மரியாதையா தான் உன்னை பேசினா. உனக்கு யார் தந்தது மரியாதை இல்லாம அவ இவன்னு பேசுற உரிமையை?" என்று கண்டித்தார் ஸ்ரீனிவாசன்,
"ஒரு நிமிஷம் இங்க வா!" என துகிரா இருக்கும் இடத்திற்கு கொஞ்சம் தள்ளி அழைத்து இல்லை இழுத்து வர, துகிராவை முறைத்தபடி வந்தான் விக்ரம்.
அவனுக்கு கொஞ்சமும் சளைக்காமல் பதிலுக்கு முறைத்து வைத்தாள் பெண்.
"உனக்கு ஒண்ணு புரியுதா இல்லையா விக்ரம்? விஷ்வா உன்கிட்ட என்னவோ சொல்ல நினைக்குறான். அதனால தான் அந்த பொண்ணு திரும்ப திரும்ப நம்ம கண்ணுல படுறா" ஸ்ரீனிவாசன் சொல்ல,
"அய்யோ ப்பா! விஷ்வா என்கிட்ட பேச இவ என்ன தூதா?" சத்தமாய் அவன் பேச,
"டேய்!" என அதட்டிய தந்தை,
"ஏன் டா இவ்வளவு கோவம்? ஏற்கனவே நீ பண்ற தொழிலுக்கு எவன் உன்னை என்ன பண்ணிடுவானோன்னு உன் அம்மா பூஜை அறையிலேயே கிடக்குறா. இதுல பொண்ணோட சாபத்தையும் வாங்கிக்காத" என்றார் கோபமாய்.
"விஷ்வா ஆத்மாக்கு நிம்மதி கிடைக்கணும் நினைச்சா இப்ப இந்த பொண்ணு நம்மோட தான் வரணும்!" என சொல்ல, காலை எட்டி தரையில் உதைத்தான் விக்ரம்.
"இவளால செத்தவனுக்கு இவளால தான் ஆத்ம நிம்மதியா?" என்றவன் நக்கலாய் சிரித்து வைக்க,
"நீ ஒண்ணு நினைச்சு பாரு விக்ரம். ஒருவேளை நம்ம விஷ்வா இறந்த தூக்கத்துல அந்த பொண்ணும் சாப்பிடாம சாக நினைச்சிருந்தா?" என கேட்க,
"யாரு இவளா? அவளை பார்த்தா அப்படியா தெரியுது உங்களுக்கு? நேத்து நான் வீட்டுக்கு வரும் போது தூங்கி விழுறா. அர்த்த ராத்திரில பசிக்கு சாப்பிட வந்தேன்னு சொல்லுறா. இவளை போய்!" என்றவன் தலையில் அடித்துக் கொள்ள,
"உன்னை கூப்பிட்டது தான் தப்பு. பேசாம இரு விக்ரம்!" என சொல்லி துகிராவிடம் வந்தார் ஸ்ரீனிவாசன்.
"நடந்தது நடந்து போச்சு. எதையும் மாத்த முடியாது. நீ இன்னும் பழசை நினைச்சுட்டு இருக்குறது நல்லதில்ல மா!" ஸ்ரீனிவாசன் சொல்ல,
"அவ நினைச்சுட்டு இருக்கறதை நீங்க பார்த்தீங்களா?" என விக்ரம் கேட்க,
"நீங்க பார்த்தீங்களா சார்?" என்றாள் பதிலுக்கு துகிராவும் கோபமாய்.
"பாருங்க. இவளைப் போய்!" என்றவனுக்கு மனம் ஆறவே இல்லை.
"நீ வெளில போ விக்ரம்!" கோபமாய் ஸ்ரீனிவாசன் சொல்ல, இருவரையுமே முறைத்துவிட்டு தான் நகர்ந்தான் விக்ரம்.
"என்ன நடந்துச்சுன்னு தெரியாம ரொம்ப பேசுறார் சார். அவரால நான் எல்லாத்தையும் நான் இப்ப இழந்துட்டு நிக்குறேன். எல்லாம் என் விதி!" என விக்ரமை துகிரா குறை சொல்ல, துகிரா விஷ்வாவை சொல்வதாய் நினைத்துக் கொண்டார் ஸ்ரீனிவாசன்.
"சரிம்மா! எதுவா இருந்தாலும் பேசிக்கலாம். எல்லாருக்கும் அவங்கவங்க வாழ்க்கைன்னு ஒண்ணு இருக்கு. நாம நினைச்சதும் எல்லாம் அதை முடிச்சுக்க முடியாது!"
ஸ்ரீனிவாசன் எண்ணம் முழுக்க விஷ்வா இல்லாத விரக்தியில் இந்த பெண் எதுவோ தவறாய் முடிவெடுத்திருக்கிறாள் அதை தடுக்க வேண்டும் என்பதாய் தான் இருந்தது.
"இல்ல சார்! அவர் இருக்குற வீட்டுக்கு நான் வர்ல!" என துகிரா மறுக்க, அதையும் விஷ்வாவை தான் சொல்கிறாள் என்றே முடிவுக்கு வந்து தன்னுடன் அழைத்து சென்றே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் ஸ்ரீனிவாசன்.
'இவ்வளவு நல்ல பொண்ணா இருக்குதே!' என்ற எண்ணம் வேறு அவருக்கு.
"நீ என்ன சொன்னாலும் உன்னை இப்படி நான் விட்டுட்டு போக முடியாதும்மா. அப்படி போனா என் பையனா எங்க கூட இருந்த அவனே என்னை மன்னிக்க மாட்டான்!" என கூறிய ஸ்ரீனிவாசன்,
"என் வீட்டம்மா உன்கிட்ட பேசணும் சொன்னா. வந்து என்னனு கேளு. அடுத்து எதுவா இருந்தாலும் பேசிக்குவோம். அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் நாம வர வேண்டாம்!" என சொல்லியவர் அவள் வராமல் செல்வதாய் இல்லை என நிற்க, வேறு வழியும் இல்லையே துகிராவிற்கு.
விக்ரமை பிடிக்கவில்லை தான். அவன் பேச்சை கேட்க முடியவில்லை தான். 'பைத்தியமா இவன்?' என்று கேட்க தோன்றுகிறது தான்.
ஆனாலும் அவள் அமைதியாய் இருக்க காரணமே அவள் குடும்பம் தான்.
குடும்பத்தை மட்டுமே நம்பி அன்று மனமேடை வரை ஏறி இருந்தவளை யாருமே புரிந்து கொள்ளவில்லையே. இப்பொழுது அதை நினைத்தாலும் அழுகை வரும் போலானது துகிராவிற்கு.
அவர்களே அப்படி இருக்க இவனை சொல்லி என்ன ஆக போகிறது என்பதை போல தான் நின்றாள் துகிரா.
'விஷ்வாவை நினைச்சு தான் அழுகுது. எந்த சூழ்நிலைல கல்யாணத்துக்கு சம்மதிச்சதோ இந்த பொண்ணு. எல்லாம் விதி. இந்த கடவுள் இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிருக்கலாம்!' என இல்லாதவனையும் நினைக்காதவளையும் இணைத்து வைத்து கவலை கொண்டார் ஸ்ரீனிவாசன்.
சரியாய் அதே நேரம் அழைத்துவிட்டார் மிருதுளா.
"எங்கங்க இருக்கீங்க? அந்த பொண்ணு எப்படி இருக்கா? நான் வரவா? நான் ஒரு சாரி யாச்சும் சொல்லணும்ங்க!" என ஸ்ரீனிவாசன் பேசும் முன்பே மிருதுளா கவலையாய் பேச,
"ஒண்ணுமில்ல மிரு. நீ கவலைப்படாத. அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு தான் வர போறா. நான் கூட்டிட்டு வர்றேன்" என்று ஸ்ரீனிவாசன் பேசுவதை கேட்டு நின்ற துகிராவிற்கும் வேறு வழி தெரியவில்லை.
"போவோம் ம்மா! எவ்வளவு நேரம் தான் இங்கேயே நிக்கிறது?" ஸ்ரீனிவாசன் போனை வைத்தவர் சொல்ல, மனதின்றி தான் சம்மதித்தாள் துகிரா.
அவளை அழைத்துக் கொண்டு ஸ்ரீனிவாசன் வெளியே வர, "அவனை எல்லாம் சும்மா விடாதீங்க. நம்ம ரூட் என்னனு காட்டுங்க!" என அலைபேசியில் காய்ந்து கொண்டிருந்தான் விக்ரம்.
"டேய்!" என அதைக் கேட்டு கோபமாய் ஸ்ரீனிவாசன் அழைக்க, திரும்பியவன்,
"ப்ச்! என்ன ப்பா?" என்றான் அவளையும் பார்த்த கோபத்தில்.
"பில் பே பண்ணிட்டு வா. போகலாம்!" என சொல்லி,
"இவனை என்னனு திருத்த?" என சொல்லி முன்னே நடக்க, துகிராவும் அவர் பின்னே சென்றாள்.
"அவனுக்கு உயிர் மட்டும் தான் இருக்கனும்!" பார்வையை துகிராவிடம் வைத்து போனில் செய்தியை சொல்லி வைத்த விக்ரம்,
"என்ன பிளான் பன்றாளோ! எல்லாம் இவங்களை சொல்லணும்!" என பெற்றோரை வசைபாடி பணத்தைக் கட்டிக் கொண்டு வர, தந்தை காரில் இருந்தாள் துகிரா.
"நீ வீட்டுக்கு வா" என்று சொல்லி தன்னுடைய காரில் ஸ்ரீனிவாசன் ஏறிக் கொள்ள, தலையசைத்து பின்னே தன்னுடைய காரில் தொடர்ந்தான் விக்ரம்.
"வா ம்மா!" என துகிராவை உள்ளே அழைத்தார் வாசல் வந்து காத்து நின்ற மிருதுளா.
"அந்த பொண்ணு ரொம்ப மன உளைச்சல்ல இருக்கு மிரு. அவங்க வீட்டுல என்னவோ பிரச்சனை போல. நிச்சயமா விஷ்வா பேரை சொல்லி தான் வெளில அனுப்பிருப்பாங்க!" என சொல்லிய ஸ்ரீனிவாசனுக்கு தெரியவில்லை அவளை வெளியே அவள் குடும்பம் அனுப்ப காரணமே அவர்களின் மகன் தான் என்று.
"நீ கொஞ்சம் பார்த்துக்கோ. அவகிட்டயே கேட்டு அடுத்து என்னனு முடிவு பண்ணு. இன்னைக்கு எதுவும் கேட்காத" என தனியே அழைத்து மனைவியிடம் சொல்லிவிட்டார் ஸ்ரீனிவாசன்.
ஷூவை கழட்டி அதனிடத்தில் வைக்காமல் எறிந்த விக்ரம் வேகமாய் ஹாலுக்கு வர அங்கே யாரும் இல்லை.
டைனிங் அறையில் துகிராவிற்கு சாப்பாடு கொடுத்து அருகில் மிருதுளா அமர்ந்திருக்க, ஸ்ரீனிவாசன் சட்டையை மாற்றிக் கொண்டு அறையில் இருந்து வந்தார்.
"ப்பா! நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்கனு தெரியுதா உங்களுக்கு?" விக்ரம் கோபமாய் கேட்க,
"விக்ரம் ப்ளீஸ்! இதுக்கு மேல அந்த பொண்ணு விஷயத்துல எதுவும் நீ தலையிடாத. பாவம் டா பொம்பளை புள்ள. என்ன கஷ்டத்துல இருக்கோ.." என்ற ஸ்ரீனிவாசன்,
"அவர் இருந்த வீட்டுக்கு நான் வர மாட்டேன்னு விஷ்வாவை சொல்லி அழுதுச்சு. சமாதானம் பண்ணி தான் கூட்டிட்டு வந்திருக்கேன். நீ பேசி எதுவும் இழுத்து வச்சிடாத. உன் கோவம் உனக்கு நியாயம்னா அந்த பொண்ணுக்கும் எதாவது நியாயமான காரணம் இருக்கும்!" என ஸ்ரீனிவாசன் சொல்ல,
"என்ன மண்ணாங்கட்டி காரணம்? அவ சொன்னா நீங்க நம்பிடுவீங்களா?" என கொஞ்சம் விக்ரம் குரல் உயர்த்த,
"விக்ரம்!" என முறைத்த தந்தை,
"அப்பா சொல்றேன்ல. நீ இனி இந்த விஷயத்துல தலையிடாத. நானும் அம்மாவும் பார்த்துக்குறோம். அவ்வளவுதான்!" என சொல்லி மனைவியை தேடி சென்றார் ஸ்ரீனிவாசன்.
"ஆஹ்ஹ்!" என்றவனுக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல வந்தது.
"ம்மா! எனக்கொரு காபி!" என அவர்கள் முன்னேயே சென்று அமர்ந்தான் அதே கோபத்தோடு.
"நீ சாப்பிடு டா. இதோ வர்றேன்!" என சொல்லி மிருதுளா எழுந்து செல்ல, விக்ரமின் கோபப்பார்வை தன்னை ஊசியாய் துளைப்பது தெரிந்தாலும்,
'இந்த கொசு வேற!' என நினைத்து அவனைப் பாராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் துகிரா.
ஒருவரின் எண்ணம் மற்றொருவரிடம் முரண்பட்டு நிற்க, இங்கே யாரின் பார்வையைக் கொண்டும் மற்றவரை நல்லவர் கெட்டவர் என வரையறுப்பது என்பது நன்றும் அல்ல நியாயமும் அல்ல.
தொடரும்..

Last edited: