• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இராக்கதனின் கண்மணி! 7

kkp2

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
38
30
18
Tamil nadu
அத்தியாயம் 7

"தப்பா நினைச்சுக்காத டா. அவன் எப்பவுமே இப்படி தான். கொஞ்சம் கூட பேசவே தெரியாது!" என மிருதுளா சொல்ல,

"எல்லாத்தையும் எல்லாரும் உடனே மறந்துட மாட்டாங்க மிரும்மா!" என்ற துகிரா நியாபகம் வந்தவளாய்,

"மிரு தானே உங்க பேரு? அங்கிள் மிருன்னு கூப்பிட்டதும் நானும் உங்க பெர்மிஸ்ஸன் இல்லாம கூப்பிட ஆரம்பிச்சுட்டேன்!" என்றாள்.

"மிருதுளா!" என சொல்லி புன்னகைத்தவர்,

"சாப்பிடு!" என எடுத்து வைக்க, துகிராவும் எடுத்துக் கொண்டாள்.

"விஷ்வா தான் விக்ரம்க்கு எல்லாம். கூடவே இருந்தான். விக்கி அதுல இருந்து வெளில வர்றது கஷ்டம்" மிருதுளா சொல்ல,

"எனக்கு புரியுது. ஆனா என் தப்பு எங்கேயும் இல்ல. அதை யார்கிட்ட சொல்ல மிரும்மா? எல்லாருக்கும் நல்லது தான் நான் நினைச்சேன். ஆனா எல்லாமே என் கைவிட்டு போச்சு!" துகிரா சொல்லியவள் சாப்பிடாமல் இருக்க, மிருதுளாவும் தன் தலையில் தட்டிக் கொண்டார்.

"நான் ஒருத்தி! சாப்பிடுற பொண்ணுகிட்ட என்னவெல்லாமோ சொல்லிட்டு இருக்கேன்!" என்றவர்,

"சாப்பிடு!" என சொல்லி அமைதியாய் அமர, துகிராவிற்கும் பசி. சாப்பிடும் வரை அடுத்து பேசவில்லை.

"இங்க எதாவது லேடிஸ் ஹாஸ்டல் தெரியுமா உங்களுக்கு?" துகிரா கேட்கவும் அதிர்ந்தவர்,

"ஏன் டா? நீ வீட்டுக்கு போகலையா?" என்றார் பதறி.

இல்லை என்பதாய் தலையசைத்தவள் "என்னை ஹாஸ்டல்ல மட்டும் சேர்த்து விடுங்களேன். நிச்சயமா அடுத்து உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்!" என்று சொல்ல, குழம்பிவிட்டார் மிருதுளா.

"நான் வேணா உங்க வீட்டுல பேசட்டுமா மா?" என்றார்.

வீட்டைவிட்டு வந்தது கூடவே திருமணம் நின்றது என அவள் வீட்டினருக்கு இவள் மீது கோபம் இருக்க கூடும். அதனால் தான் பிரச்சனையாய் இருக்கும். தான் சென்று பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கலாம் என்று தான் நினைத்தார்.

"நான் வந்து பொறுமையா சொல்றேன். அந்த கல்யாணம் நடந்திருந்தாலும் தப்பு தான். அதான் என் பையன் சொன்னானே அந்த மாப்பிள்ளை நல்லவன் இல்லைனு அதை சொல்றேன். நிச்சயம் உன் வீட்டுல புரிஞ்சிப்பாங்க!" மிருதுளா சொல்ல,

"மாட்டாங்க மிரும்மா. உங்களுக்கு புரியலை. என் வீட்டுல இருக்குற எல்லாருக்கும் என் மேல இருந்த நம்பிக்கை போயிடுச்சு!" என்றவள் வெளிவர இருந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.

"உங்களுக்கு தெரியுமா? அந்த கல்யாணத்துல எனக்கு இஷ்டம் இல்ல. ஆனாலும் என் பெரியப்பா சொல்லவும் என் அப்பா என்கிட்ட கேட்டதுக்காக தான் நான் சம்மதிச்சேனே! என் வாழ்க்கையை அவங்களை நம்பி சரின்னு சொன்னேன். ஒரே நாள்ல நான் வேண்டாதவளா போய்ட்டேன் அவங்களுக்கு!" என்று துகிரா சொல்ல, மிருதுளாவிற்கு இன்னுமே குழப்பம் தான்.

திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இணைந்ததாய் கூறுகிறாள். ஆனாலும் வீட்டிற்காக சம்மதித்தவள் ஏன் விஷ்வாவை நினைத்துப் பார்க்கவில்லை? என அவர் நினைக்க,

"என்னை யாருமே புரிஞ்சுக்கல. அதுக்கு என் விதி தான் காரணம். வேற யாரை நான் சொல்ல? உங்க பையன் மட்டும் அன்னைக்கு வராம இருந்திருந்தா இன்னைக்கு என் குடும்பம் என்னை தலையில தூக்கி வச்சிருப்பாங்க. பிடிக்காத கல்யாணத்தை பண்ணிக்கிட்டு பெத்தவங்களுக்காக வாழணும்னு வாழ்ந்திருப்பேன். ஆனா இப்ப வேண்டாதவளா நிக்குறேன் நான்!" என்றாள் துகிரா.

குறை சொல்கிறாளா இல்லை நல்லது என நினைக்கிறாளா என புரியாமல் பார்த்தவர் தான் எதுவும் கேட்டுக் கொள்ளாமல் அவள் கூறுவதை கவனிக்க தொடங்கினார்.

"எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு மிரும்மா. ப்ளீஸ்! எனக்கு இப்போ வேற யார்கிட்ட போக யாரை பார்த்து பேசனு கூட தெரியலை. என்னை ஹாஸ்டல்ல மட்டும் சேர்த்து விடுங்க. நான் பார்த்துக்குறேன்!" என்ற துகிரா முதலில் இனியாவை கண்டுபிடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.

அவள் கிடைத்தாள் மட்டுமே ஆதரத்தோடு தன்னை நியாயமாய் தன் குடும்பத்திற்கு நிரூபிக்க முடியும் என நினைத்தாள்.

அப்போதுமே தன் குடும்பத்திற்கு தான் நிரூபிக்க நினைத்தாளே தவிர்த்து விக்ரமை அவள் சட்டை செய்யவே இல்லை.

தான் மட்டும் இல்லாமல் இரண்டு பெண்களின் வாழ்க்கை அல்லவா இது? இனியா நிச்சயம் விஷ்வாவை தேடி தான் சென்றிருப்பாள் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆனால் எங்கே சென்றாள்? அவன் இல்லை என்பது தெரியுமா தெரியாதா? எங்கு சென்று அவளை தேட என எந்த வித குறிப்பும் இன்றி தான் இருக்கிறாள்.

ஆனாலும் முதலில் தனக்கென ஒரு இடம் வேண்டுமே! தானே இப்படி அனாதையாய் யாரோ ஒருவரின் வீட்டில் இருக்க, தன்னால் என்ன செய்துவிட முடியும் என எண்ணியவளுக்கு தான் விடுதி திடீரென நியாபகம் வந்தது.

அங்கே சென்று விட்டால் தன்னால் யாருக்கும் தொல்லை இல்லையே என்ற நினைவில் தான் மிருதுளாவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.

"என்னம்மா நீ! எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. எல்லாம் விக்ரம்னால தானே?" என கவலையாய் அவர் கேட்க,

"உங்க மகன் செஞ்சது நல்லதா இல்லையானு எனக்கு தெரியாது. ஆனா எனக்கு இது தான் நடக்கனும்னு இருந்திருக்கு. ப்ளீஸ்! எனக்கு ஹெல்ப் பண்றிங்களா?" என்றாள் அத்தனை கெஞ்சலாய்.

"ஈவ்னிங் அவர் வரட்டும் டா. அவங்ககிட்ட சொல்றேன். எனக்கென்னவோ அது சரியா தோணல. அதுவும் எங்க குடும்பத்தால நீ இப்படி...." என்றவருக்கு அதை சொல்லவும் மனது வலித்தது.

"எனக்கு போன் தரிங்களா? என்கிட்ட போன் இல்ல ஒரே ஒரு போன் பண்ணிட்டு தர்றேன்!" என உடனே கேட்க, தலையசைத்தவர் மொபைலை எடுத்து கொடுத்தார்.

இனியா எண்ணை அழுத்திவிட்டு அவள் காத்திருக்க, அது தொடர்பில் இல்லை என்ற செய்தி வந்தது.

நண்பர்கள் எண் எதுவும் நினைவில் இல்லை. அன்னை தந்தையோடு இனியாவின் எண் மட்டும் தான் தெரியும். என்ன செய்வது என யோசனையோடு நிற்க,

'என்ன செய்கிறாள் இந்த பெண்?' என தான் கவனித்தார் மிருதுளா.

என்னென்னவோ பேசுகிறாளே என நினைத்தவருக்கு கொஞ்சமும் விஷ்வாவைப் பற்றி இவள் பேசவில்லையே என்ற கவலையோடு, அவனை நினைத்து வருந்தவும் இல்லை தானே என நினைக்க வர, எந்த விதத்தில் இதை எடுப்பது என தெரியாமல் குழம்பிப் போனார்.

கவலையோடு போனை மிருதுளாவிடம் நீட்டினாள் துகிரா.

"போன் பண்ணலையா நீ?"

"கால் போகல. என்னாச்சுன்னு தெரியல. பாவம்" துகிரா சொல்ல, இவள் இருக்கும் நிலைக்கு இவள் யாரை பாவம் என்கிறாள் என தான் நினைத்தார்.

"எதுக்காக உன் வீட்டுல உன்னை கோவப்பட்டாங்க மா? நீ விரும்பினது... உன் விருப்பம் இல்லாம தானே கல்யாணத்துக்கு சம்மதிச்ச? அதனால நீ கல்யாணத்தை நிறுத்தினதா நினைச்சுட்டாங்களா? " விஷ்வாவை சொல்ல வந்து சொல்லாமல் அவர் விட,

"அப்படி நினைச்சிருந்தா கூட பரவால்லைனு நான் நினைக்குற அளவுக்கு பேசிட்டாங்க. கொஞ்சமும் நம்ம பொண்ணு அப்படி இல்லைனு அவங்க நினைக்கல. அவங்களை எல்லாம் சும்மா விடமாட்டேன். நிச்சயமா திருப்பி கேட்பேன்!" என்றாள் கோபமாய்.

கொஞ்சமும் புரியவில்லை புரிவது போல அவளும் சொல்லவில்லை. இதற்குமேல் கேட்டாலும் அவள் கூறுவாள் என நம்பிக்கை இல்லை. எனவே அமைதியாகிவிட்டார் மிருதுளா.

அமைச்சரின் அலுவலகத்தில் வந்து இறங்கி இருந்தான் விக்ரம். உடனே அழைப்பு வந்துவிட்டது அவனை உள்ளே வர சொல்லி அழைப்பு.

"வாங்க விக்ரம் சார்! என்ன இவ்வளவு தூரம் என்னை தேடி வந்திருக்கீங்க?" என்றார் மினிஸ்டர் மாணிக்கராஜ் விக்ரமிடம்.

"உங்க பையன் என் வீட்டுக்கு வந்திருந்தானாம் அதுவும் நைட்டு பத்து மணிக்கு. அதான் என்ன வேணும்னு கேட்டுட்டு போக வந்தேன்!" என்றான் அவருக்கு எதிரில் இருந்த சேரில் அமர்ந்தபடி.

"அதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லையே விக்ரம்!" மாணிக்கராஜ் கேட்க,

"இல்லையா? அப்ப ஏன் உங்க பையன் இங்க வந்து ஒளிஞ்சு இருக்கனும். நான் கூட எனக்கு பயந்து தான் இங்க வந்து ஒளிஞ்சு இருக்கானோனு நினைச்சேன்!" என கேட்டவன் முகம் அமைதியாய் இருந்தாலும் அந்த குரலில் கிண்டலும் கோபமும் இருந்தது.

"அவன் ஏன் ஒளியனும்? ஏன் உன் அப்பா சொல்லலையா அவன் ஏன் உன் வீட்டுக்கு வந்தான்னு?" என்றவர் முகமும் கோபத்துக்கு சென்றிருந்தது.

"என்ன சார் இதுக்கே கோவப்படுறீங்க. நான் சாதாரணமா தான் கேட்டேன்!" என்றவன் முகத்தில் அமைதியை கண்டு மாணிக்கராஜ் விழிக்க,

"என் அப்பா சொல்றது இருக்கட்டும். நீங்க அவன் அப்பா தானே? சொல்லலையா?" என கேட்கவுமே அதுவும் அழுத்தி கேட்கவுமே அவன் எங்கே வருகிறான் என புரிந்துவிட்டது அவருக்கு.

"அவன் ஏதோ சின்ன பையன் தெரியாம..." என சொல்ல வரும் போதே,

"சின்ன பையனா? சின்ன பையன்னா அஞ்சு வயசா ஆறு வயசா?"

"விக்ரம் அவன் தெரியாம பண்ணிட்டான். இனி நான் சொல்லி வைக்குறேன்!" மாணிக்கராஜ் சட்டென இறங்கிவர,

"இதை அவன் என் வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி நீங்க சொல்லி இருக்கனும் சார். இப்போ!" என தோள்களை குலுக்க,

"அதான் சொல்றேனே! நான் பார்த்துக்குறேன்!" என்றவருக்கு அரசியலில் இருந்து கொண்டு இவனிடமெல்லாம் கெஞ்ச வேண்டிய கட்டாயத்தில் கடுப்பாய் தான் வந்தது.

"சாரி அவனை வர சொல்லுங்க!" என விக்ரம் சொல்ல,

"அவன் பிரண்ட்ஸ் கூட இப்ப தான் போனான்"

"போனானா இல்ல அனுப்பி வச்சீங்களா?" என சரியாய் அவன் கேட்க,

"போதும் விக்ரம். அதான் சொல்லி வைக்குறேன் சொல்லிட்டேனே! இத்தோட விடு!" என்றார் மாணிக்கராஜ்.

"வீடு வரை வர்ற தைரியம் வந்துடுச்சுல்ல அவனுக்கு? ஓகே! லெட் சீ!" என அவன் சொல்லியதே பயத்தை கிளப்பியது மாணிக்கராஜிடம்.

"இனி உங்க பையன் படம் நடிச்சாலும் எந்த ப்ரோடியூசரும் அவருக்கு கிடைக்க போறதில்ல. பாவம். உங்களால உங்க பையனால டைரக்டர் தான் கஷ்டப்படவும் நஷ்டப்படவும் போறார்" என்று சொல்ல,.

"அப்படி எதுவும் பண்ணாத விக்ரம். அதான் சொல்றேனே. அவன் இனி உன் வழிக்கு வர மாட்டான்!"

"அதை இனி நான் பாத்துக்குறேன். தேங்க் யூ சார். உங்க பிஸி டைம்ல என்னை மீட் பண்ண டைம் குடுத்ததுக்கு" என்று கூறி அவர் அழைக்க அழைக்க நிற்காமல் சென்றுவிட்டான்.

"சொன்னேனே கேட்டானா அவன்!" என மகனை எண்ணி தலையில் அடித்துக் கொண்டார் மாணிக்கராஜ்.

"தூக்கிடவா சார்?" என விக்ரமிடம் அவன் பிஏ கேட்க,

"யாரை தூக்க போறீங்க?" என்றான் நடந்தபடி.

"அதான் மினிஸ்டர் பையனை!"

"மினிஸ்டர் பையனை தூக்கி என்ன பண்ண? அவன் அங்கேயே இருக்கட்டும். எதை தூக்கணுமோ அதை தூக்கிடலாம்" என்றான் சிரித்தபடி.

தொடரும்..
 
  • Love
Reactions: shasri and Vathani

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,343
557
113
Tirupur
இந்த பைத்தியத்துக்கு நான் ஆர்மி ஆரம்பிச்சு எங்க போய் முட்ட.. கொஞ்சமாவது பேசுறது புரியுதா?
 
  • Haha
Reactions: kkp2

kkp2

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
38
30
18
Tamil nadu
இந்த பைத்தியத்துக்கு நான் ஆர்மி ஆரம்பிச்சு எங்க போய் முட்ட.. கொஞ்சமாவது பேசுறது புரியுதா?
ஹப்பா காப்பாத்தியாச்சு ஆர்மிய🤣🤣
 

shasri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
259
114
43
Tamilnadu
yaaru intha minister? minister paiyan aythuku vikram veetuku vantha onum puriyala
 
  • Love
Reactions: kkp2