• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இராவணனின் ராஜ்ஜியம்...10

MK23

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
11
10
13
Tamil nadu
அத்தியாயம் … 10


கடலை வெறித்தபடி அமர்ந்திருந்த ஆதிஜித்தோ ‘’ஆரு உன்கிட்ட இப்படி பேசறேன் தப்பா நினைக்க மாட்டேனு நினைக்கிறேன்… உன்னையே கேட்காமலே எல்லாரிடமும் நீ என் மனைவி என் பொண்ணுக்கு அம்மா சொல்லிருந்தாலும் அதை உன்னிடம் கேட்டுச் சொல்லிருக்கணும் புரிது. எந்த உரிமையில் அப்படி சொன்னாயென என் மனம் பலமுறை கேள்வி கேட்டாலும் அதற்குரிய பதிலைத் தான் என் மனதிற்குள் தேடிகிட்டு இருக்கேன்.

நெருப்பாய் நினைவுகள் ஒரு புறம் சுட்டுக் கொண்டிருக்க இந்த நாலைந்து நாட்களில் வாழ்க்கைப் படகுத் திசை மாறிக் கொண்டிருக்கிறது. ஆதினிக்காக நீ என் வாழ்வில் நுழைந்தது அதற்காக உன் வீட்டில் பிரச்சினை, அதைத் தீர்க்க வழியின்றி என் விட்டுக்கு வரும்போது தேவியின் பெற்றோரால் பிரச்சினை மனம் ரொம்ப வலிக்கது. என்னாலே யார் என்று அறியாத ஒரு பெண் கஷ்டப்படுகிறாளேயென நினைக்கும்போது மனதில் இனம்புரியாத ஒரு உணர்வின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது.

கடவுள் எதையும் காரணம் இல்லாமல் செய்யமாட்டார். என் வாழ்க்கை சூன்யமாக இருப்பதும் அதில் ஆதினியின் மனயுணர்வுகளை நான் அறியாமல் இருந்ததை உன்மூலம் எனக்குக் காட்டிக் கொடுத்து உள்ளே வர வைத்தவர். எங்கள் கூட்டுக்குள் நீயும் ஒரு தாயாக வருவாய் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன். மறுக்கமாட்டேன் நினைக்கிறேன்’’ என்றவனை ஆழ்ந்து பார்த்த ஆருத்ராவோ….

‘’நீங்க என்ன கேட்கப் போறீங்க புரிகிறது?. இது எனக்குப் போகப் போக்கிடம் இல்லை என்பதற்காகக் கேட்டகிறீங்களா… இல்லை இவளுக்கு யார் இருக்கா…. இனி நம்ம கூடவே தன் மகளுக்குத் துணையாக இருந்துட்டு போகட்டும் கேட்கிறீங்களா’’ எனக் கேட்டவளின் குரலில் சிறிதளவு கோபம் இருந்தது.

‘’ஏய் அப்படி உன்னை ஆயா வேலை பார்க்க வைக்கணும் நினைத்திருப்பேன் நினைக்கிறாயா…. அதற்கு உன் அம்மா தம்பி மற்றவர்களிடம் ஏன்? உன்னை விட்டுக் கொடுக்காமல் பேசப் போகிறேன். நீ எங்களுக்காக எங்கள் வீட்டுக்கு வந்த தேவதையாகத் தோன்றியது. என் மகளின் முக்கியமான தருணத்தில் நீ தான் கூட இருந்தாய். அதன் பின் உன்னை அன்று எடுத்தெறிந்து பேசி இருந்தாலும் அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் என் மகளுக்காகக் கூடவே இருந்து அவளின் உடல் மாற்றத்தைப் புரிய வைக்கத் தாயாக இருந்தாய். உனக்குப் பிரச்சினைகள் எங்களால் வந்தபோதும் நிமிர்ந்து நின்று நீங்க நினைப்பதற்கு எல்லாம் நான் பதில் சொல்லணும் அவசியமில்லையென மனதிற்குள் நேர்மையாக இருக்கிறேன் என நின்றாய். எங்கும் சோர்ந்து போகாமல் திடமாக இருக்கும் உன்னைப் பார்த்து எனக்குப் பிரமிப்பு தான் உண்டானது’’ என்றவன் …

‘’இப்படி தான் என் பெண் வளரணும் ஆசைப்படுகிறேன்’’ எனச் சொல்லி நிறுத்தியவன்

‘’என் பெண்ணுக்காக மட்டுமல்ல. எனக்காகவும் கேட்கிறேன்… என்னை இந்தத் தொலைந்து காலத்திலிருந்து மீட்டு எடுப்பாயா’’…. என விழிகளின் யாசிப்புடன் கேட்டவனை அதிர்ச்சியும் ஆனந்தமாக ஏறியிட்டவளுக்கு என்ன சொல்வது? என்று புரியவில்லை சில நிமிடங்கள்.

மௌனமாக அவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளை ‘’நிஜமாகத் தான் கேட்கிறேன் ஆரு. உண்மையில் என் பெண்ணுக்காக மட்டுமல்லாமல் எனக்காகவும் தான். சுயநலமாக இருக்கேன் என நினைத்தாலோ இதில் உனக்கு விருப்பமில்லை என்றால் தாராளமாகச் சொல்லாம்’’ எனச் சொல்லியவன் குரல் உள்யடங்கி இருக்க …

அவனின் கரங்களை எடுத்துத் தன் கரத்தில் வைத்துக் கொண்டவளை ஆச்சரியமாகப் பார்த்த அவனின் விழிகளுக்குள் ஊடுருவிப் பார்த்து….


‘’மறைந்த மனைவிக்காக நீங்கத் தாஜ்மஹால் மட்டும் தான் கட்டவில்லை. ஆனால் உங்கள் உள்ளத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பெண்ணின் மேல் இருக்கும் தூய அன்பினை புரிந்துக் கொண்டதால் மட்டுமே. நிழல் படத்தில் இருப்பதை மறக்க முடியாமல் தவிப்பவர் நீங்கள். நிஜத்தில் இருக்கும் என்னை எந்தளவுக்கு அன்பினை செலுத்துவீர்கள் எனப் புரியும்.

அதற்காகக் கடந்த காலத்திலே நினைக்கக் கூடாது சொல்லவில்லை. நிகழ்காலத்தில் என்னையும் ஆதினியும் கண்ணுக்குள் வைத்துக் காத்துக் கொள்வீர்கள் என நம்பறேன்’’ எனச் சொல்லியவளின் கரங்களை அழுத்தியவன்… சட்னு அவளின் தோளில் சாய்ந்து விழிகளில் நீர் வடிய ‘’தேங்க்ஸ் ஆரு’’ எனச் சொன்னான் ஆதிஜித்.

‘’ஆனால் இனி இந்த மாதிரி சீரியல் டைலாக் மாதிரி நீளமாகப் பேசிகிட்டு இருக்க கூடாது’’…. எனக் கேலியாகச் சொல்லிக் கண் சிமிட்டியவளை முறைத்தான் ஆதிஜித்.

அவனின் முறைப்பில் சிரித்தவளோ ‘’இயல்பாக வாழ்ந்து தானே ஆகணும். இந்த உலகத்தில் நானோ நீங்களோ என்றும் இங்கே தங்கி விட முடியாது அல்ல. அப்ப ஆதினி தனியாக நம்மை மட்டும் நினைச்சு வாழ முடியுமா. அவளுக்கு ஒரு வாழ்க்கை இருக்கத் தானே செய்யும்’’ என்றவளிடம்… பதில் சொல்லாமல் உப்புக்காற்றில் கலைந்தாடும் முடிக்கற்றைகளை ஒதுக்கிவிட சட்னு அவளின் முகம் செந்நிறம் பூசிக் கொண்டது.

அவள் முக மாறுதல்களைக் கவனித்தவனோ தன் கரங்களை விலக்காமல் செவி மடல்களைத் தீண்டிக் கன்ன கதுப்புகளை வருடி நுனி நாசியை தீண்டியவன் கைகள் அதரங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர அதுவரை வேறு உலகத்தில் சஞ்சரித்தவளோ நினைவுலகத்திற்கு வந்தவள் அவன் கரங்களை அழுத்திப் பிடித்து ‘’என்ன செய்யறீங்க? என்றவளை…

‘’ ம்ம் என்ன செய்கிறேன்? உனக்குப் புரியலயா’’ என்றவனின் விழிகளின் மாயச் சிரிப்பில் தலை குனிந்தவளை நிமர்த்தியவன் ‘’என்னடா இவன் இத்தனை நாளா மறைந்தவளை நினைத்துக் கொண்டிருந்தவன் சட்னு இப்படி செய்கிறானே தோன்றுகிறாதா’’ என முகம் மாறி இறுக்கமாகக் கேட்டவனை முறைத்தாள் ஆருத்ரா.

‘’உங்க கற்பனையான பேச்சுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்லிகிட்டு இருக்க முடியாது’’ எனச் சொல்லியவள் அவனிடமிருந்து விலகி ‘’ஆதினி என்ன பண்ணற? எனக் கேட்டபடி அவளிடம் போனாள் ஆருத்ரா.

எழுந்து செல்லும் அவளைப் பார்த்தபடி இருந்தவன் மகள் பேசுவதை ரசித்த படி அங்கேயே அமர்ந்திருக்க நேரம் கழிந்து போனது.

திடீரென்று ஆதினி ‘’அப்பா அப்பா’’ என உலுக்க…

‘’ என்னடா குட்டி’’ எனக் கேட்டவனின் கரத்தை இழுத்து எழுப்பியவள் அவள் மணலால் கட்டிய வீட்டைக் காட்டினாள்.

அதைப் பார்த்தவனுக்கு உள்ளமெல்லாம் மகிழ்ச்சியின் ஊற்றுகள்.

புன்னகையுடன் ‘’அழகாக இருக்கு கண்ணு’’ என்றவன் அதில் தேவி இல்லம் ஆர்டீன் வரைந்து அவனுடைய பெயர் ஆருத்ரா ஆதினி மூன்று பெயரையும் எழுதி வைத்திருந்த மகளைத் தூக்கி உச்சி முகர்ந்தான் ஆதிஜித்.

அதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவளையும் எழுப்பித் தன் கரங்களின் மறுபக்கம் தோளோடு அணைக்க…

ஆதினியோ ‘’இவங்களை மிஸ் கூப்பிடுட்டா இல்லை அம்மா கூப்பிடுட்டா’’ எனக் கண்களைச் சிமிட்டியவளின் அழகில் சொக்கிப் போனான் ஆதிஜித்.

ஒரு வாரம் ஓடியது. ஆதிஜித் வீட்டிற்குள் ஆருத்ராவின் குரல் எங்கும் ஒலிக்க…

ஆதினியோ ‘’அம்மா நான் எங்கே இருக்கேன் கண்டுபிடிங்க?’’ எனச் சத்தமிட்டவளோ தன் அப்பாவின் பின் நிற்பதைக் கண்டு ‘’காலையில் என்ன விளையாட்டு ஆதி… சீக்கிரம் கிளம்பு. இன்று எங்கே போறோம் தெரியுமலே?’’ எனக் கேட்க…

‘’தெரியும் தெரியும்’’ எனக் கோரசாக அப்பாவும் மகளும் பேசுவதை கண்டு முறைத்தாள் ஆருத்ரா.

அன்று ஆதிஜித்க்கும் ஆருத்ராவுக்கு கோவிலில் கல்யாணம். பொன்னம்மாள் முன்னாடியே போய் அங்கே இருக்கும் வேலைகளைப் பார்க்கப் போய்விட்டார்.

ஆதினியோ கிளம்பி இருந்தாலும் உரிமையாக இத்தனை வருசம் பேசாத பேச்சும் செய்ய முடியாத குறும்புகளைச் செய்கிறவளை அடக்க முடியாமல் அவளின் போக்கில் போகும் ஆதிஜித்யை முறைத்தாள் ஆருத்ரா.

‘’ஆதி குட்டி அம்மாவிற்கு கோபம் வந்திருச்சு. சீக்கிரம் கிளம்பு’’ என அழுத்தமான குரலில் சொல்லியதும் ‘’ம்ம் பா’’ என்றவள் ஆருத்ரா அருகில் போக இருவரின் உடைகளைக் கண்டவனுக்கு சந்தோஷமாக இருந்தது.

ஒரே வண்ணத்தில் பட்டுச் சேலை பட்டுப் பாவாடை சட்டை போட்டு அதற்குத் தகுந்த நகைகளைப் போட்டு இருக்க தலையில் மல்லிகைப் பூக்கள் சூடி மிதமான ஒப்பனையில் இருவரும் பௌர்ணமியின் அழகாக ஜொலித்தனர்.

அவனும் பட்டு வேட்டி சட்டை அணிந்திருந்தவனின் கம்பீரத்தை கண்களாலே அளவெடுத்தவளோ ‘’நல்லா இருக்கு’’ என ஆருத்ரா சொல்லியதும்…

‘’ ஆமாம் பா உங்களுக்கு இந்த டிரஸ் அழகாக இருக்கு’’ என மகளும் சர்ட்டிபிகேட் கொடுக்க அவனும் புன்னகையுடன் இருவரையும் பூஜையறைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த நிழல் படத்தின் முன் கைகூப்பியவன் ‘இன்று என் வாழ்க்கையின் மாற்று பாதையை அமைத்துக் கொடுத்திருக்கே தேவி. இதில் நீ தெய்வமாக இருந்து எங்களை வழி நடத்து’ என வேண்டிக் கொண்டான் ஆதிஜித்.

மூவரும் கோயிலுக்குக் கிளம்பி வர அங்கே கடவுளின் முன் மாலை மாற்றி மாங்கலயத்தை ஆருத்ரா கழுத்தில் கட்டினான் ஆதிஜித்.

அதைக் கண்டு ஆதினிக்கோ ‘’அம்மா அப்பா’’ என இருவரையும் சேர்த்து அணைத்துக் கொண்டவளின் விழிகளும் கலங்கியது.

அவளைச் சேர்த்து அணைத்து கொண்டே ஆதிஜித் ‘’இப்ப உனக்குச் சந்தோஷமடா குட்டி’’ எனக் கேட்க….

‘’ ரொம்ப ரொம்ப ‘’எனக் கைகளை விரித்துக் காட்டினாள் ஆதினி.

ஆருத்ரா இருவருக்கிடையே நின்றவள் தன்னால் ஒரு குடும்பம் இணைந்து மட்டுமல்லாமல் தன்னையும் ஒரு அங்கமாக இணைத்துக் கொண்டாட அவளின் விழிகளில் லேசான கண்ணீரால் மிதந்தாலும் இந்த நேரத்தில் தன் அம்மா பக்கத்தில் இல்லாதது வருத்தம் தான். ஆனால் வேறு வழியில்லையேயென உணர்ந்தவள் கணவனோடும் மகளோடு வீடு வந்து சேர்ந்தார்கள்.

ஆதிஜித் தன் மனைவி மகளோடு சேர்ந்து நிற்கப் பொன்னமாளோ மூவருக்கும் ஆரத்தி எடுத்தவர் இப்பதான் உங்க முகத்தில் சிரிப்பைப் பார்க்கிறேன் தம்பி. இனி எப்பவும் நீங்க இதே சந்தோஷத்தோடு நீடூழி வாழ வேண்டும் என வாழ்த்தியவரை பார்த்துச் சிரித்தபடி தன் வீட்டிற்குள் நுழைந்தான் ஆதிஜித் தன் மனைவி மகளோடு.

வீட்டுக்குள் நுழைந்தும் ஆதினி அறைக்குள் ஓடி விட ஆருத்ராவை தன் அறைக்குள் அழைத்துச் சென்றவன் தன் கைவளைவுக்குள் அவளை இழுத்து அணைத்தவன் தன் மனதின் தேங்கி இருந்த மனகிலாசங்களை களைந்து ஆருத்ராவின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவன் ‘’என் வாழ்க்கையில் இடையே ஆழியாக வந்தவள் நீயே கண்ணம்மா என் நினைவுகளிடமிருந்து மீட்கும் சக்தியாக வந்தவள்’’ எனச் சொல்லிக் கொண்டிருந்தவனின் கைகளில் கிள்ளி

‘’இனி இந்த மாதிரி வசனம் பேசினால் கிள்ளி வைப்பேன் என் அந்தமும் ஆதியும் நீங்களேயென மறு வசனம் பேசமாட்டேன்’’ எனச் சொல்லிச் சிரிக்க அவளின் குறும்பில் புன்னகைத்து வாலு என அணைத்துக் கொண்டான் மனைவியை.

ஒரு குழந்தையின் தவிப்பில் தொடங்கிய பயணம் ஒரு குடும்பத்தை உருவாக்கியது இறைவனின் திருவிளையாடல் தானே.

நிறமிழந்த வானமாக
நிஜமறந்த மனிதனாக
நிழலற்ற உருவமாக
நிதம் கண்முன் நடமாடிக் கொண்டிருந்தவனின் வாழ்க்கையில் புயலாக நுழைந்து தென்றலாகத் தழுவிக் கொள்ள அங்கே தெளிந்த நேரிடையாக அவர்களின் வாழ்க்கை பயணம் தொடங்கியது.

ஆதினிக்கு ஆருத்ராவால் அப்பாவின் பாசம் கிடைத்தது. ஆருத்ராவுக்கு ஆதினியால் ஒரு காதல் மலர்ந்தது. ஆதிஜித்க்கு இறந்து போன நினைவுகளிடமிருந்து விடுதலை கிடைக்க….

அங்கே
அழகான காதல்...
இரு நயனங்களில்
மின்னலாய் தோன்றிரும்
ஒற்றை நொடியில்
ஓராயிரம் யுகங்களை
வாழ்ந்து கழிக்கும்
உணர்வு குவியல்களை
அள்ளிக் கொடுக்கும்
அட்சய பாத்திரமான
காதலை ஆயுள் வரை
நீண்டு செல்லுட்டுமே ஆதிஜி
த் ராஜ்ஜியத்தில் ஆருத்ராவின் வாழ்வு செழிக்கட்டும்……


வாழ்க வளமுடன் …

சுபம் ….
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
இறைவனின் திருவிளையாடலில் காரணகாரியமின்றி ஏதும் நிகழ்வதில்லை 😍 ஆதியும் ஆருத்ராவும் வாழ்க்கையில் இணைய காரணமாக அமைந்தவள் ஆதினி ❤️