• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இறுதி அத்தியாயம்

Rithi

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
266
அத்தியாயம் 36

"மச்சி! எங்க ஓடிட்டே இருக்க.. நாங்க கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லிட்டு போ டா" என்று ஒருவன் கூற,

"டேய்! அதை ஏன் அவன்கிட்ட கேட்டுட்டு... எந்த பக்கமா அடிக்கடி போறானோ அந்த பக்கமா எந்த பொண்ணு இருக்குதுன்னு பாரு.. அது தான் இவன் ஆளா இருக்கும்" என்றான் மற்றொருவன்.

"தப்பா சொல்லி தர்ம அடி வாங்குறதுக்கு தான் வந்தோமா.. மச்சி! நீயே சொல்லிடு டா.." என்று அந்த மண்டபத்தில் இளைஞர்களாய் அரட்டையில் நின்ற ஏழு பேர் கொண்ட கூட்டத்தில் இன்னொருவனும் கூற, அனைவரும் கேலியும் கிண்டலுமாய் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர் கண்ணனை.

"அடேய்! வந்த இடத்துல கையை காலை வச்சுட்டு சும்மா இருங்க டா.. எங்கேயாவது என்னை மாட்டி விட்டுட்டு போய்டாதீங்க.. என்னவோ இப்ப தான் காலேஜ் முடிச்ச மாதிரி இருக்கு உங்க அட்டூழியம்" கண்ணன் கூற,

"நீ வேணா ராமனா இருந்துக்கோ டா.. அதுக்காக இப்படி கல்யாண வீட்ல சைட் அடிக்க கூடாதுன்னு எல்லாம் சொல்லாத.. தெய்வ குத்தம் ஆகிடும்.." கண்ணன் நண்பர்களின் ஒருவன் கூற,

"ஏன் டா எந்த பொன்னையும் பார்க்க மாட்டுறனு கேட்டா.. நம்ம வீட்டு பொண்ணை இப்படி பார்ப்போமானு கேட்ட.. சரி லாஜிக் ஓகே.. அப்புறம் அம்மா சொன்னாங்க அத்தை பொண்ணு தான் எனக்குனு சொன்ன.. அதுக்கும் சரினு சொன்னோம்.. இப்ப உன் அண்ணா மேரேஜ்ல கூட அந்த பொண்ணை எங்களுக்கு காட்ட மாட்டுற.. அப்ப நீ சொன்னது எல்லாம் ரீல் தானே?" என்றான் அந்த இன்னொருவன்.

"நானா டா காட்ட மாட்டுறேன்.. காட்டுனா என்னை சும்மா விட மாட்டிங்க.. சொன்னா கேளுங்க டா.. நானே டைம் வரும் போது சொல்றேன்" என்றவன் அபர்ணாவை பார்வையால் தேட, அவன் நினைத்தது போலவே தான் நின்றிருந்தாள் அவள்.

"டேய்! இவன் வேலைக்கு ஆக மாட்டான்.. வாங்க டா இவன் அண்ணாகிட்ட பஞ்சாயத்து வச்சுக்கலாம்" என்றபடி மணமகன் அறைக்கு அவர்கள் செல்ல முயல,

"மலை மாடுங்களா... உங்களை எல்லாம்..." என்று நொந்தவன், மெதுவாய் அவள் நின்ற பக்கம் வலது கையை உயர்த்தி ஆட்காட்டி விரலை அவளை நோக்கி நீட்டினான்.

"அப்பு!" என்று அழைக்க வேறு செய்ய, லதாவிடம் சொல்லிக்கொண்டு, அந்த லெஹன்காவை ஒரு கையால் தூக்கி பிடித்து மற்றொரு கையில் பஞ்சுமிட்டாயை குச்சியுடன் பிடித்தபடி அவனை நோக்கி வந்தாள்.

"சொல்லுங்க த்தான்" என்று கூற, திரும்பி நண்பர்களை பார்த்தான் கண்ணன்.

அவர்களும் இவனை பார்த்துவிட்டு அபர்ணாவையும் பார்க்க,

"இங்கே என்ன பண்ற? உன்னையும் லதாவையும் வாசல்ல தானே நிற்க சொன்னேன்?" என்று கேட்க,

"இப்ப தான் குட்டிஸ் கூட்டம் இங்கே குறைஞ்சது.. அதான் இதை வாங்கிட்டு வாசலுக்கு போகலாம்னு இருந்தோம்" என்றாள் பஞ்சுமிட்டாயை காட்டி. மானசீகமாய் தன் தலையிலேயே கொட்டிக் கொண்டான் கண்ணன்.

"சரி அவளைக் கூட்டிட்டு போ" என்று சொல்லவும் சரி என்று தலையசைத்து, புது லெஹன்காவை மீண்டும் ஒரு கையால் லேசாய் தூக்கிக் கொண்டு போக,

"அதான் அந்த பாப்பா போய்டுச்சே! இப்பவாச்சும் சொல்லு டா யார் தான் அந்த பொண்ணு" என்று மீண்டும் நண்பன் கேட்கவும்,சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை கண்ணனுக்கு.

"டேய்! அப்பு.. அபர்ணா டா.. அவ தான் கீர்த்தி சிஸ்டர்.. என் அம்மா என்கிட்ட கையை காட்டின பொண்ணு.. நான் உங்ககிட்ட கையை காட்டின பொண்ணு" என்று கூற, மொத்த கூட்டமும் ஒரு நொடி ஜர்க் ஆனதை கண்டு கொண்டான் கண்ணன்.

"நிஜமாவா கண்ணா? ஆஃபிஸ்ல அந்த திட்டு திட்டுவ பொண்ணுங்களை" என்றதும் கண்ணன் முறைக்க,

"சரி! அதான் ஒரு பொண்ணு ப்ரொபோஸ் பண்ண வந்தப்போ போல்டா இருக்கனும்.. ஸ்ட்ரோங்கா பேசணும்னு கிளாஸ் எடுத்து ஓட விட்டியே.. இப்ப இப்படி ஒரு கிண்டர்கார்டன் பொண்ணை காட்டுற.." என்று கூற,

"ஆமா இப்பவும் அப்படி தான் சொல்றேன்.. சொல்லுவேன்.. அவ கிண்டர் கார்டன் தான்.. ஆனா நான் சொன்ன குவாலிட்டிஸ் எல்லாம் அப்புகிட்ட இருக்கு.. அதெல்லாம் என்னோட மேரேஜ் வரும் போது சொல்றேன்..இப்ப கொஞ்சம் அமைதியா இருங்க டா" என்று சொல்லிவிட்டு கீர்த்தி அறைக்கு ஓடினான் கண்ணன்.

"கீர்த்தி!" என்று அழைக்கவும், அருகில் நின்ற சித்ரா அவனை முறைக்க,

"அ...ண்...ணி!" என்றவன் முகம் அஷ்ட கோணலாய்.

"சொல்லு கண்ணா!" சிரித்தபடியே கூறியவள் தன் அலங்காரத்தை கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"அண்ணா உ.. ங்.. க.. கிட்ட பேசணுமாம்" கண்ணன் இழுத்து கூற, அவனை முறைத்தாள் கீர்த்தி.

"ஏன் டா.. உனக்கு, உன் அண்ணனுக்கு, உன் அப்பாக்கு எல்லாம் எப்ப தான் மூளை வேலை செய்யுமோ.. இன்னும் அரை மணி நேரத்துல தாலி கட்டிட்டு பேச சொல்லு.. இப்ப போ" சித்ரா கூற,

"ம்மா! போன்ல தான் மா" என்றவன் தன் மொபைலை நீட்டவும் சித்ராவைப் பார்த்தாள் கீர்த்தி.

"சரி பேசு.." அவர் கூறவும் மொபைலை வாங்க,

"அப்பப்பா! ரொம்ப நல்லவ தான்" என்ற கண்ணன் கிளம்பிவிட,

"சொல்லுங்க ராம்.." என்றாள் கிசுகிசுப்பான குரலில்.

"ஒன்னும் இல்லையே.. சும்மா தான் கூப்பிட்டேன்" என்று அதே குரலில் கூறியவனை நினைத்து இவள் பல்லைக் கடிக்க,

"இல்ல இல்ல.. ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் கூப்பிட்டேன்" என்றான் மீண்டும் அவள் கூறியது போலவே.

"ராம்! எல்லாரும் இருக்காங்க ராம்.." கெஞ்சலும் கொஞ்சலுமாய் சிணுங்கலுமாய் கீர்த்தி கூற,

"சரி சரி சாரி! ஐ லவ் யூ கீர்த்தி.. ஐ லவ் யூ ஸோ மச்.. இதை சொல்ல தான் கூப்பிட்டேன்.. எங்க நீ ஒரு முறை சொல்லு பார்ப்போம்" என்று இந்த நேரத்தில் கூறுபவனை என்ன செய்ய என கீர்த்தி விழிக்க, அதில் சில நொடிகள் ஓரமாய் நின்ற சித்ரா வந்து அவள் கைகளில் இருந்த போனைப் பறித்தார்.

"சொல்லு கீர்த்ஸ்!" அவன் சிணுங்கல் குரலை கேட்டது அன்னையாகிவிட,

"டேய்! உதை வாங்குவ.. போய் ரெடியாகுற வேலையை பாரு.. போ டா" என்ற குரலில் ஒரு நொடி திடுக்கிட்டு, போனையும் தவறவிட்டு கேட்ச் பிடித்தான்.

"அம்மாகிட்டயா லவ்வை சொன்னேன்.." என்று பேந்த முழித்தவன், பின் "அம்மாக்கு லவ் யூ சொல்லலாம்.. தப்பில்ல" என்றும் கூறி தன்னையே சமாளித்து அதையே நினைத்தும் கொண்டிருக்க, ஐயர் அழைத்துவிட்டார்.

மணமேடையில் ஹோமகுண்டத்தின் முன் அமர்ந்தவன் பார்வையை அங்கே இங்கேயும் என எங்கேயும் சிதறவிடவில்லை.

தானும் தன்னவளுமாய் வாழப் போகும் இந்த வாழ்வு தனக்கு மிகமிக முக்கியம் என்பதைப் போல ஐயரின் சொல்படி அவன் கேட்டு அதை முறையாய் சரியாய் செய்து கொண்டிருக்க, அருகே நின்று அதைப் பார்த்திருந்த கண்ணனுக்கும் அவ்வளவு திருப்தி.

லதா, அபர்ணாவை ஐயர் கூறியதும் கீர்த்தியை அழைத்து வரும்படி ஜெகன், தங்கராஜ் கூறவும் அவர்களுடனே சித்ராவும் மணப்பெண்ணுடன் வர, மாங்கல்யம் அனைவரின் ஆசிக்கும் சென்று வந்தது.

கெட்டிமேள சத்தத்தில் ராம் கீர்த்தியின் முகத்தில் ஒரு நொடி பார்வையை செலுத்தியவன் கடவுளை வேண்டியபடியே கீர்த்திக்கு பிடித்தமான புன்னகையுடன் மாங்கல்யத்தினை அவள் கழுத்தினில் இட்டான்.

அட்சதை இருவரின் மேலும் அழகாய் சென்று சேர, ஜெகன் கண்களில் கண்ணீர்.

அந்த நொடியினில் கௌசல்யா அங்கே இருந்து மகளை ஆசீர்வதிப்பதாய் தோன்றவும் இருவரையும் மனதார வாழ்த்தி நின்றார் ஜெகன்.

"சித்ரா நெகிழ்ச்சியுடன் அட்சதை தூவியவர் தூவியபடியே நிற்க,

"சித்துமா!" என்று கணவரும், "ம்மா!" என்று கண்ணனும் அவர் அருகே நின்றிருந்தனர்.

"ஹாப்பி வெட்டிங் டியர் வைஃப்" கீர்த்தியின் தோள்களை இடித்து ராம் கூற, அவனைப் பார்த்து புன்னகைத்தவள் கன்னசைத்து தன் மகிழ்ச்சியினை தெரிவித்தாள்.

சடங்கு சம்பிராதயங்கள் என அனைவரையும் வேலைகள் இழுத்துக் கொள்ள, லதா, அபர்ணா குழந்தைகளாய் வலம் வர, மணமக்களை கிண்டலடித்து கீர்த்தி அருகே நின்று அடி வாங்கிக் கொண்டு என மிக முக்கியமான வேளையில் நின்றிருந்தான் கண்ணன்.

"ஓவர் குஷியா இருக்கியே! அடுத்து உன் கல்யாணம்னு தானே?" ராம் கண்ணனை கேட்க,

"இல்லைனு எல்லாம் பொய் சொல்ல மாட்டேன் பா.." என்றவனை கீர்த்தி, ராம் இருவருமே முறைக்க,

"பின்ன! அம்மா வேற கீர்த்திக்கும் ராம்க்கும் கல்யாணம் பண்ணினா தான் உன் கல்யாணம்னு சொல்லிட்டாங்க.. நல்லவேளை ரெண்டு கல்யாணமா இல்லாமல் உங்க கல்யாணமா அது முடிஞ்சது.. இனி அம்மா கவனம் நம்ம பக்கம் திரும்பும்ல.. காரணம் இல்லாமல் இந்த கண்ணன் எதுலயுமே இன்வால்வ் ஆக மாட்டான்" கண்ணன் தற்பெருமையாய் கூற,

"இங்கே என்ன டா வம்பு பேசிட்டு நிக்குற? போய் சாப்பிட வர்றவங்களை கவனி" என்று வந்தார் சித்ரா.

"ஆண்ட்டி! அப்படியே அங்கிளை கூப்பிட்டீங்கனா பேமிலி போட்டோ எடுத்திடலாம்" போட்டோகிராபர் கூறவும்,

"ஆமா ஆமா டா.. எத்தனை வீட்டுல பாத்துருக்கேன்.. எனக்கும் அப்பல்லாம் ஆசையா இருக்கும்.. போய் அப்பாவையும் மாமாவையும் கூட்டிட்டு வா டா" சித்ரா உடனே ஆசை ஆர்வம் கலந்து கூற,

அடுத்த நிமிடமே மேடையில் நின்றனர் அனைவரும்.

"என்ன பா கண்ணா! அடுத்து உன்
கல்யாணம் தான்.. என்ன படிப்பு படிச்சுருக்க.. நம்ம வலசல்ல ஒரு பொண்ணு இருக்கு.." பேமிலி போட்டோ எடுத்து முடிக்கவும் மேடை ஏறிய பெரியவர் கூற,

"என்ன கீர்த்ஸ்! நம்ம கல்யாணமே இப்ப தான் நடந்திருக்கு.. அதுக்குள்ள இவனை ஹீரோ ஆக்குறாங்க" ராம் கேட்கவும் அங்கே பேச ஆரம்பித்திருந்தார் சித்ரா.

"அதெல்லாம் தேவை இல்லை சித்தப்பா.. கண்ணனுக்கு பொண்ணு எல்லாம் ரெடியா இருக்கு.. இன்னும் ஒரு ரெண்டு வருஷம் ஆகும்" என்று சொல்ல, கீர்த்தி, லதா, அபர்ணாவை தவிர அனைவரும் தெரிந்தது போல நின்றனர்.

"நல்லது தான் த்தா.. பொண்ணு ஆரு?" என்றார் பெரியவரும்.

"பொண்ணு வெளில எல்லாம் எடுக்கல சித்தப்பா.. என் அண்ணே பொண்ணு தான் இருக்கே.. கீர்த்தி தங்கச்சி தான்.." என்று சொல்ல,

"அட! அத ஐத்துட்டேன் பாரு.. ரொம்ப நல்லது.. தாயில்லா புள்ளைங்கள தாயா வளர்த்தியே! உன்னை மாதிரி ஆரு பாத்துக்குவா?" என்றபடி அவர் சென்றுவிட, ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாய் கணவனைப் பார்த்தாள் கீர்த்தி.

அவனும் ஆமாம் என்று கண்களை அசைத்து புன்னகைக்க, கண்ணீர் தானே உற்பத்தி ஆனது அங்கே.

"ப்ச்! கீர்த்தி!" என்று ராம் அதட்ட,

"அத்தை!" என்று தோள் சாய்ந்தாள் மாமியாரிடம்.

அவ்வளவு சந்தோசமாய் இருந்தது அந்த நிமிடம். கண்ணன் என்பவன் தனக்காக செய்ததும் இந்த குடும்பத்திற்காக செய்ததும் என கடன் பட்டிருந்தவளுக்கு இந்த செய்தி அவ்வளவு சுகமானது.

லதா கூட நம்ப முடியாமல் அந்த இடத்திலேயே ஆர்ப்பரிக்க, அந்த இடத்தில் அதிர்ச்சியாக வேண்டிய அபர்ணா எந்த முக பாவனையும் காட்டாது நின்றதை கண்ணன் மட்டுமே கவனித்து நின்றான்.

ராமிற்கும் கீர்த்திக்கும் நடுவில் வந்து "கீர்த்தி!" என்று கண்ணன் அழைக்க, கண்ணீருடன் திரும்பினாள் அவன் பக்கம்.

"ஓவரா பொங்காத! எனக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லைனு நிக்குது பாரு" என்று அபர்ணாவைக் காட்ட, கீர்த்தியும் ராமும் அபர்ணாவைப் பார்த்துவிட்டு தங்களுக்குள் பார்த்துக் கொள்ள,

"நான் வேணா கேட்கவா?" என்ற ராமிடம்,

"அதான் மேட்டர் பொதுவில வந்தாச்சே! நானே கேட்குறேன்" என்று அபர்ணா பக்கம் சென்றான் கண்ணன்.

அப்போது தான் அனைவரும் இவர்களை கவனிக்க,

"என்ன அப்பு? உனக்கு ஓகே தானே? இல்லை புடிக்கலைனாலும் ஓப்பனா சொல்லிடு" என்று கண்ணன் சத்தமாகவே கேட்க,

"என்ன சொல்லணும் த்தான்?" என்றாள் சாதாரணமாய்.

'இவளை!' என மனதில் எண்ணிக் கொண்டாலும்,

"ஒன்னும் வேண்டாம்.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறியானு மட்டும் சொல்லு போதும்" நிதானமாக கேட்டவன் நெஞ்சு தடதடக்க, அனைவரும் பார்வையாளர்களாய்.

"ம்ம்! பண்ணிக்குறேன் த்தான்" என்றதும் அனைவரும் சிரிக்க, அவள் சாதாரணமாய் சொல்லியது கண்ணனுக்கு 'என்ன இவள்?' என்று தான் தோன்றியது.

"ஆனா ஒன்னு" என்று அபர்ணா சொல்லவும் என்ன என கண்ணன்னுடன் அனைவரும் பார்க்க,

"எனக்கு டெய்லி ஃபலூடா வாங்கி தரணும்..ஓகே" என்று டீல் பேச, முதலில் வாய் திறந்து சிரித்து வைத்தது கீர்த்தியே தான்.

அவளை தொடர்ந்து ராம், சித்ரா, தங்கராஜ் அனைவரும் சிரிக்க, "ஷ்! அப்பு" என்று ஜெகன் கண்டிக்கவுமாய் இருக்க, கண்ணன் முகத்தினை பார்த்து பார்த்து சிரித்து வைத்தாள் கீர்த்தி.

"கேட்டதெல்லாம் வாங்கி கொடுக்காதனு சொன்னேனே! கேட்டியா நீ? இப்ப பாரு.. ஒரு ஃபலூடாக்காக ஓகே சொல்லியிருக்கா" என்று சொல்லி சிரிக்க, பெரியவர்கள் அந்த இடத்தினில் இருந்து புன்னகையுடன் கலைந்தனர்.

"அடியேய்!" என்று அப்புவை அழைத்தவன், "ம்ஹ்ம்! காலேஜ் முடியட்டும்.. அப்புறம் இருக்கு உனக்கு" என்று விட்டு கடுப்புடன் நகர்ந்துவிட,

'நான் இப்ப என்ன தப்பா சொல்லிட்டேன்' என்றபடி உதட்டை பிதுக்கி நின்றிருந்தாள் அபர்ணா.

இந்த சந்தோஷம் என்றும் இந்த குடும்பத்துடன் நிலைக்கும் என்ற உறுதியுடன்....

முற்றும்...
 

Apsareezbeena loganathan

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
72
இனியெல்லாம் காதல் மாயம்....

இரு குடும்பம் ஒரு வீடு
அன்னையை இழந்த கீர்த்தி
அத்தையை அன்னையாக மாறி
அணைத்து சென்று
அன்பு கொடுத்து
ஆறுதலாய் இருந்து
அனைவரையும் வழி நடத்தி செல்லும்
அன்பு அத்தை சித்ரா.....

தோழியாய் என்றும்
தன்னலம் கருதாத சுகத்திலும்
துக்கத்திலும் கிர்த்திக்கு
துணையாக நட்புக் கரம்
தரும் கண்ணன்....

அக்காவின் சொல் பேச்சு கேட்கும்
செல்ல தங்கை அபர்ணா
எல்லோருக்கும் செல்லமே.....
அபர்ணாவின் தோழியாய்
தோழமையுடன் லதா.....

அப்பாவிடம் பேசாமல் இருந்தாலும்
அவருக்கும் பார்த்து பார்த்து செய்யும் அன்பு மகள் கீர்த்தி.....

இருவருக்கும் இடையே
எப்பொழுதும் ஒரு திரை
ராம் வேறு பொண்ணை
காதல் செய்ய
கீர்த்தி ராமை விரும்ப
கண்ணன் புத்தி சொல்லியும்
கீர்த்திய தடுத்தும்
கண்ணீர் விட்டால் ஒழி யே
காதலை விட வில்லை.....
கீர்த்தி காதல் வென்றதா
ராம் காதல் வென்றதா???
இதமாய் பதமாய்
அழகாய் நேர்த்தியாய்
ஒரு காதல் கதை.....

கண்ணன் அம்மா அப்பா என்று
கிண்டல் காமெடி எல்லாம்
கலக்கல் இடம் ...அருமை...
கண்ணன் கண்ணன்....
கண்ணன் தான்
கீர்த்தியின் நலம் விரும்பி
காதலுக்கு பாலம்...
குழப்பத்தை தீர்ப்பது
குடும்பத்தை சேர்ப்பது...
அண்ணணு க்காக
காலில் விழும் இடம் எல்லாம்....
தம்பிடா மொமெண்ட்.......
கண்ணன் தான் எனக்கு ரொம்ப பிடிச்சது.....
கலகலப்பாக
கவுண்டர் கொடுப்பது....
தனக்கு தானே பேசி புலம்புவது....
எல்லாம் சூப்பர்......
குடும்பத்து கதை.....👏👏👏👏
அருமை சகி 👍👍👍👍
வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
 
Last edited:

Rithi

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
266
இனியெல்லாம் காதல் மாயம்....

இரு குடும்பம் ஒரு வீடு
அன்னையை இழந்த கீர்த்தி
அத்தையை அன்னையாக மாறி
அணைத்து சென்று
அன்பு கொடுத்து
ஆறுதலாய் இருந்து
அனைவரையும் வழி நடத்தி செல்லும்
அன்பு அத்தை சித்ரா.....

தோழியாய் என்றும்
தன்னலம் கருதாத சுகத்திலும்
துக்கத்திலும் கிர்த்திக்கு
துணையாக நட்புக் கரம்
தரும் கண்ணன்....

அக்காவின் சொல் பேச்சு கேட்கும்
செல்ல தங்கை அபர்ணா
எல்லோருக்கும் செல்லமே.....
அபர்ணாவின் தோழியாய்
தோழமையுடன் லதா.....

அப்பாவிடம் பேசாமல் இருந்தாலும்
அவருக்கும் பார்த்து பார்த்து செய்யும் அன்பு மகள் கீர்த்தி.....

இருவருக்கும் இடையே
எப்பொழுதும் ஒரு திரை
ராம் வேறு பொண்ணை
காதல் செய்ய
கீர்த்தி ராமை விரும்ப
கண்ணன் புத்தி சொல்லியும்
கீர்த்திய தடுத்தும்
கண்ணீர் விட்டால் ஒழி யே
காதலை விட வில்லை.....
கீர்த்தி காதல் வென்றதா
ராம் காதல் வென்றதா???
இதமாய் பதமாய்
அழகாய் நேர்த்தியாய்
ஒரு காதல் கதை.....

கண்ணன் அம்மா அப்பா என்று
கிண்டல் காமெடி எல்லாம்
கலக்கல் இடம் ...அருமை...
கண்ணன் கண்ணன்....
கண்ணன் தான்
கீர்த்தியின் நலம் விரும்பி
காதலுக்கு பாலம்...
குழப்பத்தை தீர்ப்பது
குடும்பத்தை சேர்ப்பது...
அண்ணணு க்காக
காலில் விழும் இடம் எல்லாம்....
தம்பிடா மொமெண்ட்.......
கண்ணன் தான் எனக்கு ரொம்ப பிடிச்சது.....
கலகலப்பாக
கவுண்டர் கொடுப்பது....
தனக்கு தானே பேசி புலம்புவது....
எல்லாம் சூப்பர்......
குடும்பத்து கதை.....👏👏👏👏
அருமை சகி 👍👍👍👍
வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
Thank u so much sis
 
Top