• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இலக்கணம் பிழையானதோ ..25

Samithraa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 16, 2022
131
58
28
Karur
அத்தியாயம் ..25


சன்னலின் போட்டிருந்த ஸ்கிரீனை மீறி அறையினுள் வெளிச்சம் நுழைய படுக்கையில் மெதுவாகப் புரண்ட சுகாசினிக்கு ஏனோ மனத்தில் என்றுமில்லாத உவகையில் ஏனென்று தெரியாமல் மகிழ்ந்து முகிழ்ந்தது..


தன் மேனியில் எழுந்த மெல்லிய மாற்றங்கள் ஏனென்று அறிந்து அறியாமலே இலகுவான மனத்தோடு புரண்டவளுக்கு விழிகளைத் திறக்க மனதில்லை..


நேற்று கணவனைக் காணாமல் தவித்து அவனைக் கண்டதும் ஓடி கட்டிக் கொண்ட நிகழ்வு மட்டுமே கண்ணுக்குள் ரீங்காரமிட அவனிடம் கோபத்துடன் இருந்தவளுக்கு அவனைக் காணாமல் தவித்த தவிப்புக்கு விடைறியாமல் திகைத்தவளுக்கு விடையாக வீட்டிற்கு அழைத்து வந்தபின் நடந்த நிகழ்வுகள் பதில் சொல்ல.. மனமோ இதுயெல்லாம் கனா போலவே விழித்ததும் மறைந்து விடுமா காட்சிகள் என்று விழிகளைத் திறக்காமல் படுத்திருந்தாள் சுகாசினி.


மெல்லிய மேனியின் அயர்வில் அசந்து கிடந்தவளுக்குத் தன் கணவனைக் காணும் போது எவ்விதமாக நடந்து கொள்ளவது குழப்பம் மிஞ்சிக் கிடக்க,


அதை நினைத்துத் தன்னுள்ளே மூழ்கிக் கிடந்தவள், கணவன் அவ்வறையில் இருக்கும் அரவம் இல்லாமல் இருக்க, அவன் எப்போதும் போல கம்பெனிக்கு ஓடியிருப்பான் என்று நினைத்து எழுந்தவளுக்கு, தன் ஆடைகள் மாற்றிருப்பதும், அங்கே இருக்கும் டேபிளில் பிளாஸ்க்கும் கூடவே மாத்திரை பிரித்த கவர்களும் இருப்பது கண்டவள் , இரவில் அவனின் ஆத்மார்த்தமான அரவணைப்பும், ஆக்ரமிப்புகளும் அவளின் கன்னங்களில் வெம்மையை தோற்றுவிக்க அதில் மீண்டும் மெய் சூடாகிப் போய் இருந்தவளுக்கு, இப்படியே இருந்தால் தன் குழப்பமோ அதற்கான தீர்வோ எதுவும் கிடைக்காது என்று நினைத்து எழுந்து காலை கடமைகளை முடித்தவள், மெதுவாக எழுந்து கீழே வந்தாள்..


அங்கே வரும்போது ராஜலட்சுமியின் குரல் செவியில் அடைய, தன் கணவனின் ருத்ர மூர்த்தியாய் முகம் சிவந்து இறுகிய பாறையாக நிமிர்ந்து நின்றவனின் சுற்றி தீ ஜவாலையாக கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டு இருப்பதைக் கண்டு தான் நெருங்கினாள் தீயால் வெந்து விடுவோமோ என்று உள்ளம் அதிர அவனின் அதீத சினத்தைக் கண்டு இனமறியாத பயத்துடன் பார்த்தாள் சுகாசினி… அப்போது மாடியின் கடைசியில் படியில் நின்றவள், ராஜலட்சுமி பேசிய வார்த்தைகள் மட்டுமே காதில் விழ அதன் முன் நடந்தது எதுவும் அவளுக்குத் தெரியவில்லை.. ஆனால் ராஜலட்சுமி சொன்னதைக் கேட்டவளுக்கு அதீத கோபத்தில் உடல் மெல்லிய தடுமாற்றம் உருவாக அங்கே மாடிக் கைபிடியை பிடித்து தன்னை நிலைநிறுத்தியவள் ,அவர் பேசுவதை உற்றுக் கவனித்தாள்..


''ஒண்ணுமில்லாத வக்கத்து வந்தவளுக்காக பெத்த அப்பனிடம் இத்தனை பேசறீயே.. என்ன? உன்னை அவ பாவாடை நாடாவில் முடிஞ்சு வச்சுக்கிட்டாளா… அவ சொல்லற படி ஆடுகிறே'',.. என்று வாய்க்கு வந்ததைப் பேசுவதைக் கண்ட நிஷாந்தன்'' போதும் நிறுத்துங்க… தேவையில்லாமல் சுகாசினியை பேச வேண்டாம்'',..


''உங்களைப் பற்றி தெரிந்தும் நேற்று அவளை அங்கே அழைத்து வந்தது மிகப் பெரிய தப்பு தான்… என்றைக்கு இல்லாமல் ஆசைப் படுகிறாளே என்று நினைத்தும் தன்விகாவிற்குகாகத் தான் வந்தோம்.. ஆனால் உங்க ஈனப் புத்தியை கண்டும் மற்றவர்கள் முன் எந்தவித பிரச்சினையும் வராமல் வந்துட்டோம்…


ஆனால் இனி அப்படியே இருக்க முடியாது.. என்றவன் உங்களிடம் சொன்னது ஞாபகம் இருக்கா பா'', என்று மகேந்திரனைப் பார்த்துக் கேட்டவரின் கண்களில் இருந்த வலியைக் கண்டு காணாமல், ''அதற்கான வேலையை பாருங்க'',.. என்று சொல்லிவிட்டு செல்ல..


மாடி வாசற்படியில் சிலையாக நிற்பவளைக் கண்டு திடுக்கிட்டுத் திகைத்தவன், அவளருகில் சென்றான் நிஷாந்தன். அவள் எப்ப அங்கே வந்து நின்றாலோ என்று தெரியாமல் மனம் சுருங்கிப் போக இந்நொடிகளை இக்கணங்களை இயல்பாகக் கடந்து விட முடியாமல் இருந்தான் நிஷாந்தன்...


மகேந்திரனிடம் இன்று பேசிய பேச்சை நினைத்தவனுக்கு, அவர் முகம் பேயறைந்துப் போல மாறியதும், அங்கே வந்த ராஜலட்சுமி அதை விட பேசியது மனம் கசந்து போனது தான் நிஜம்.. இவர்களை ஒதுக்கவும் முடியாமல் ஒதுங்கிப் போகவும் முடியாமல் சுழலில் சிக்கிக் கொண்டு மூச்சிற்கே தவிக்கும் இதயம் தன்னவளின் அன்பிலாவது மலராதா என்ற ஏக்கமும் உள்ளுக்குள் எழ..


அவளின் நேசமான பார்வை தன்னை ஆரத் தழுவிக் கொள்ளாதா.. இதயத்தினுடைய சுவர்களில் அவளின் வீசும் நறுமணத்தை உள்வாங்கி நிரப்பிக் கொண்டு அவளின் சுவாசத்தோடு தன்னை உயிர்பிக்க வேண்டிய ஏழிலை நிலையில் ஏங்கியவனுக்கு அது கிட்டுமானால் அவனை விட இவ்வுலகில் சந்தோஷமான மனிதன் எவருமில்லை என்று உணர, என்று சுகாசினியின் முகத்தை ஒரு ஆவலோடு நோக்கினான்..


அவளோ முகம் கருத்து கண்களில் தேங்கி நிற்கும் கண்ணீர் கொட்டிவிடாமல் குளம் கட்டி நிற்க, தன்னுடைய அந்தரங்கத்தை அந்த அம்மா அவ்வளவு எளிதாகப் பேசியதைக் கண்டு சீற்றத்துடன் நின்றிருந்தவளுக்கு, நிஷாந்தன் தன்னருகே வந்ததோ தன்னை ஆவலோடு பார்ப்பதை தவிர்த்துத் திரும்பி வேகமாக மாடிப்படி ஏறினாள் சுகாசினி..


தன் உருவத்தைக் கூட உள்வாங்காமல் ஓடுபவளைப் பார்த்த நிஷாந்தனுக்கு அவள் இங்கே பேசியது எல்லாமே காதில் விழுந்திருக்குமோ என்று ஐயம் தோன்றினாலும் அவளைப் பேசி சமாளிக்கலாம் என்று நினைத்தவன் மனதளவில் ஓய்ந்து போனான்.


இருந்து இருந்து நேற்று தான் வாழ்க்கையின் முதல் அடி எடுத்து வைத்தோம்.. அதைக் கூட முழுமையாக அனுபவிக்க இயலாமல் பிரச்சினைகள் அணிவகுத்து நிற்பது என்பது விதியா மனிதன் செய்யும் சதியா.. என மனதில் நொந்தவன், மாடியேறி தங்கள் அறைக்குச் செல்ல அங்கே சுகாசினி சன்னல் வழியே வெறித்தப் பார்வையோடு நின்றும் கொண்டிருநந்தவளின் மேனியோ நடுங்கிக் கொண்டிருந்தது.


கதவைத் திறந்து அவளை நோக்கிய நிஷாந்தனுக்கு மனம் வலித்தாலும், அதைக் காமிக்காமல் சுகா, எழுந்திருச்சா.. காய்ச்சல் எப்படி இருக்கு என்று அவளருகில் வந்தவன் அவளின் கழுத்தை தொட்டுப் பார்க்க கையை நீட்ட, அவளோ சட்டென்று அதைத் தட்டிவிட்டு தீவிழி விழித்தாள்…


அவள் பார்வையில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் எதிரே நின்றவனின் மனம் பொசுங்கிப் போனது தான் நிஜம்..


அதிலே அவள் மனத்தை உணர்ந்தவன், இதற்கு மேலே எதாவது பேசினால் மனம் காயம் படுமளவுக்குப் பேசுவாள் என்று நினைத்து பெருமூச்சை விட்டபடி அங்கிருந்து நிறைந்தவன், ''இனி நீ கீழே போக வேண்டாம் சுகாசினி.. உனக்குத் தேவையானதை மேலே கொண்டு வந்து தரச் சொல்லுகிறேன்'', என்று சொல்ல..



அவளோ ''என்னை என்ன கூண்டுக்குள் சிறை வைப்பதுப் போல இங்கே அறைக்குள் சிறை வைக்கீறிங்களா'', என்று கேட்டவளின் அதீத கோபத்தை அடக்கிக் கொண்டு நின்றவள்,'' என்னமோ உங்..உங் …உங்களை பாவாடை நாடாவில் முடிந்து வைச்சு

இருக்கேன் அவங்க பேசறாங்க… சோத்துக்கு வழியில்லாத வக்குத்தக் குடும்பம் சொல்லறாங்க'',.. என்று திக்கித் திணறியவள், ''எங்க அரிசி மில்லில், ஊருக்கே அரிசி பகுமானமா பக்குமாக அரைச்சுப் போடறவங்க நாங்க.. உங்க அளவுக்கு வசதியில்லை என்றாலும் பட்டினி கிடந்தில்லை'',.. கண்களின் கண்ணீர் வடிய, பேசியவளுக்குத் தன் தாத்தாவின் நினைவு அதிகமாக ''நீங்க மட்டும் இருந்திருந்தால் எனக்கு இந்நிலை வந்திருக்குமா தாத்து",… என்று வாய் விட்டு அழுதாள் சுகாசினி..


அவளின் அழுகையை கண்டவனுக்கு உள்ளமோ குருதி வெப்பத்தால் கொதி நிலை அடைய அவனால் அவள் அழுகை தாங்க முடியாமல் இழுத்து அணைத்தான்..


அவன் அணைப்பில் திணறியவள், "விடுங்க, விடுங்க.. இனி தொடாதீங்க என்னை", என்று கத்தியபடி அவனிடமிருந்து விலகப் போராடினாள் சுகாசினி.


அவளின் எதிர்ப்பை முறியடித்தவன், அவளுடைய முகவாயைத் தூக்கி "இங்கே பாரு சுகா,மற்றவர்கள் பேசுவதற்கு எல்லாம் அர்த்தம் கண்டு பிடிச்சு நம் வாழ்க்கையை பாழாக்க வேண்டாம் … இனி அவர்கள் பேச மாட்டார்கள், அப்படியே பேசினாலும் உனக்கும் வாய் இருக்கது அல்லவா நீயும் பேசு.. சும்மா மற்றவர்கள் அதைச் சொன்னார்கள், இதைச் சொன்னார்கள் மூலையில் முடங்காமல் பேசு", என்று அழுத்தமாகச் சொன்னவன்," உனக்காகக் கண்ணம்மாவை சாப்பாட்டை இங்கே கொண்டு வரச் சொல்லிருக்கேன்.. சாப்பிட்டு ரெஸ்ட் எடு.. இப்ப ஒரு நேரம் மாத்திரை போட்டுக்கோ.. மாலை டயராக இருந்தால் டாக்டரைப் போய் பார்க்கலாம்'', என்று சொல்லியவனிடமிருந்து வேகமாக விலகியவள்,


''உங்கள் அக்கறைக்கு ரொம்ப நன்றி.. இ..இனி.. என்னை தொடாதீங்க'',.. என்று சொல்லியவளின் வலியை உணர்ந்தவன் அதன்பின் என்ன சொல்லித் தேற்றுவது என்று அறியாமல் திகைத்து நின்றான் நிஷாந்தன்.


அவளுடைய விலகலும் பேச்சையும் கேட்டு எந்தவித பதிலும் சொல்லாமல் மௌனமாக இருந்தவன் நேற்று நடந்த நிகழ்வுகளால் இன்னும் அவள் மீள விழவில்லை போல என்று வருந்தி… ''நேற்று நடந்தற்கு சாரி சுகா .. அவர்களின் குணம் தெரிந்ததும் தன்விகாவிற்காக உன்னை அழைத்துக் கொண்டுப் போய் கஷ்டப்படுத்திவிட்டேன்.. இனி இது மாதிரி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்'', என்று பேசுகிறவனின் இருக்கும் கம்பீரம் குறைந்து மீண்டும் மீண்டும் தன்னிடம் அன்பை யாசிக்கும் அவனிடம் என்ன சொல்லுவது என்று பேசாமடந்தையாக நின்றவளிடம் அதற்கு மேலே என்ன பேசுவது என்று புரியாமல் நிற்க.. கதவு தட்டும் ஓசையில் திரும்பியவன் தானே போய் கண்ணம்மா கொண்டு வந்த உணவை வாங்கி வந்தவன், அவளிடம் நீட்டி ''சாப்பிடு சுகா'', என்று சொல்ல..


அதுவரை ஏதோ மாய உலகில் இருந்ததைப் போல இருந்தவள் அவன் நீட்டிய உணவினைப் பார்த்ததுமே நேற்றும் இன்றும் ராஜலட்சுமி சொன்ன வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுக்க… அவனை வெறித்துப் பார்த்தவள், அந்தச் தட்டை வேகமாகத் தட்டிவிட்டு வெளியே விரைந்தாள்..


அவளுக்கு உள்ளுக்குள் அவ்வளோ வலியை இவ்வளவு நேரம் அவன் பேசியதும் மறந்த தன்னிடமே கோபம் வந்தது .. எப்படி மறந்தேன்.. அந்தம்மா பேசும்போது அமைதியாக இருந்தவனிடம் நேற்று தன்னிலை மறந்த நிலையில் அவன் ஆட்க்கொண்டவுடன் அவனிடம் பாசம் பொங்கி வழிதா என்று தன்னையே கேள்வி கேட்டவளுக்கு, அவள் கேளாமல் விட்ட பலதை மகேந்திரனிடமும் ராஜலட்சுமியிடம் பேசியதை அவள் அறியவில்லை ..


அதை நிஷாந்தனும் அவளிடம் இதைச் சொல்ல தோணவில்லை .. அவள் தட்டியதைக் கண்டு கோபம் கண்ணை மறைத்தாலும் இங்கே இருந்தால் இவளை மேலும் எதாவது சொல்லிக் காயப்படுத்தி விடுவமோ என்று எண்ணிக் கம்பெனிக்குக் கிளம்பிப் போய்விட்டான் . காலையிலிருந்த மனநிலை இப்போ அவனிடமிருந்து ஓடிவிட எப்பவும் போல ஒரு இறுக்கம் மனத்தைத் தாக்க வேலையில் ஒன்றிப் போய்விட்டான்.. நாள் கணக்கில் வாரக்கணக்கில் நாட்களோ வேகமாக ஓடியது .


வேலையின் பின்னே இவன் ஓடிக் கொண்டிருந்தான்.. சுகாசினி வீட்டில் இருந்தாலும் காலையில் எழுவதற்கு முன்பே செல்வதும் இரவில் தூங்கும் அவன் தன் வீட்டில் நடமாடினான்..


அவளிடம் நெருங்கவோ பேசவோ விருப்பமில்லாமல் அவனுள் அரித்துக் கொண்டிருக்கும் காயங்களுக்கு மருந்தே இல்லை இந்த ஜென்மம்த்தில் என்று எண்ணத்தோடு இருப்பவனுக்குத் தொழிலே ஏன்றும் போல அவனிடம் உறவாட வெளியூர், வெளிநாடு என்று அவனின் ஓட்டம் இருந்தது.


சுகாசினியோ அவ்வீட்டில் இருப்பதை விட கிராமத்திற்கே சென்று விடத் துடிக்க, அதற்கு தகுந்தபடி அந்நிகழ்வினை தொடங்கி வைத்தாள் ராஜலட்சுமி.


தினமும் ஏதோ ஒன்றை சொல்லி சுகாசினியை வருந்த வைத்தவளுக்கு, நிஷாந்தன் அன்று பேசிய பேச்சுக்கள் அவளை மிருகமாக மாற்றி ஈட்டிப் போல கூர்மையான வார்த்தைகளை நங்கூரமாக சுகாசினியிடம் விளாச அவளும் தன்னால் ஆனா வார்த்தைகளைப் பேசினாலும் ஏதோ சண்டைக்கடை போல தினமும் நடக்கும் யுத்ததால் மனம் நொருங்கிப் போனாள் சுகாசினி. ..


எப்படி இவ்வளவு தைரியமில்லாத கோழையாக மாற்றிய அத்திருமணத்தையை அறவே வெறுத்து ஒதுங்கிப் போய்விட்டாள்..


அன்றும் காலையில் எழும்போதே அவளுள் ஏதோ மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்பட அதை நினைத்துக் கொண்டு இதை யாரிடம் முதலில் சொல்வது, விலகிப் போகும் கணவனிடம் சொல்ல யோசனை செய்ய அதற்கு அவன் தானே காரணம் என்பதை மறந்த நிலையில் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தவளுக்கு.. கீழே அதிகமாகச் சத்தம் கேட்க எழ முடியாமல் இருந்தவள் தன் கதவு தட்டப் படவும் மெதுவாக எழுந்து கதவைத் திறக்க அங்கே புசுபுசுவென்று மூச்சை விட்டப்படி நின்ற ராஜலட்சுமியைப் பார்த்து, இந்தம்மா காலையிலே ஏன் ரயில் எஞ்சின் மாதிரி புகை விடுது என்று நினைத்து அவரே சொல்லட்டும் ராஜலட்சுமியின் முகம் பார்க்க..


அவரோ ''இன்னும் யாரை ஏமாற்றி மயக்கி இருப்பதை சுழற்றிக் கொண்டு போக இங்கே இருக்க .. முதல இங்கிருந்து கிளம்படி… உன் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏத்திட்டான் ஒருத்தன் உன்னுடைய ஊர்க்காரன்… இன்னும் இங்கிருந்து எங்க மானத்தை வாங்காம பெட்டி கட்டிட்டு கிளம்பி போ… நீ தான் ஒண்ணும் கொண்டு வராமல் கை வீசிட்டு தானே வந்த அப்படியே கிளம்பிடி'', என்று அவள் கையைப் பிடித்து இழுக்க, அவளோ ராஜலட்சுமியின் கையை உதறியவள், ''ச்சீய்'' ஒரு வார்த்தையில் முகம் சுளித்து வேகமாக வீ்ட்டை விட்டு வெளியேறினாள்.. அதன் பின் அவளைத் தேடி அவனும் வரவில்லை, அவளும் போகாமல் நாட்கள் கடக்க சிப்பி வயிற்றில் முத்து தோன்றி வளர அது பொக்கிஷமாகப் பாதுக்காத்துத் திரும்ப அதனுடைய இடத்திலே கொண்டு வந்துச் சேர்த்தார் ரங்கநாயகி…


தொடரும்..

சாரி சாரி மக்கா.. உடல்நிலை ரொம்ப முடியாதால் லேட் ஆகிவிட்டது கதை மன்னிச்சுங்க.. இனி தினமும் வந்து விடும்...
20221216_155104.jpg
 
  • Like
Reactions: Durka Janani