• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -4

shaliha ali

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 24, 2024
69
58
18
Chennai

உணவைப் பார்த்த சகா நிரஞ்சனிடம் "நிரஞ்சா இ..ன்னைக்கு என்ன சிம்பிளா முடிச்சிட்டே? நம்ம த...தமிழ்நாட்டு சாப்பாடு இல்லையா?" அவன் முகத்தை தொங்கலாய் போட்டு கேட்டான்.


நிரஞ்சன் சிரித்துக் கொண்டு "இன்னைக்கு முக்கியமான வேலை இருக்கு. மறந்து போய்ட்டியா?"


"எ...ன்ன வேலை? இன்னைக்கு பிராக்டீஸ் மட்டும் தானே"


அவன் அப்படிச் சொன்னதும் அவன் தலையின் பின்னால் லேசாக தட்டிய பார்த்திபன் "இன்னைக்கு சங்கீத மேளாவில் மீட்டிங் இருக்குல்ல அதுக்காக நிரஞ்சனும் காந்தனும் போறாங்க"


"ஓ… சாரி பிரெண்ட்ஸ் ம...மறந்துட்டேன்" என்றான் சிரித்துக் கொண்டே…


"நீ...நீங்க ரெண்டுபேரும் அங்கே போயிட்டா நா...ங்க ரெண்டுபேரும் ஜாலியா இருக்கலாமா?"

காந்தன் சாப்பிட்டு முடித்து விட்டு அவன் அருகில் தட்டை நகர்த்தி வைத்தவன் "நீங்க ரெண்டுபேரும் சாப்பிட்ட பாத்திரத்தை கழுவிட்டு வீட்டை சுத்தமா கிளீன் பண்ணி வைங்க.ஏன்னா இன்னைக்கு மாலாம்மா வர மாட்டாங்க அதனால நாங்க வர்றதுக்குள்ளே எல்லா வேலையையும் முடிச்சிடுங்க நாங்க வந்ததும் எல்லோரும் பிராக்டீஸ் ஆரம்பிக்கலாம்"என்று சொல்லி விட்டு சிரித்தான்.


இதைக் கேட்ட பார்த்திபன் "சகா நீ சும்மா வாயை மூடிட்டு இருந்திருந்தாலே கொஞ்சமாவது அவனுங்களும் உதவி செஞ்சு இருப்பானுங்க உன்னாலே எல்லாமே போச்சு"என்று அவன் கடிந்துக் கொண்டான்.


நிரஞ்சன் மூவரையும் பார்த்து "இந்த சங்கீத மேளா ஒப்பந்ததிற்கு நம்ம வக்கீல் ஓகே சொல்லச் சொல்லிட்டாங்க.நேற்றே எல்லாத்தையும் அனுப்பிட்டேன் எல்லாம் நமக்கு தான் சாதகமாய் இருக்குன்னு சொல்லிட்டாங்க நேர்ல போய் சரின்னு சொல்லிவிடவா?" என்று மற்ற மூவரிடமும் சம்மதம் கேட்டான்.


அவன் ஆவலாய் கேட்க… மூவரும் ஒன்றாய் சரி என்பது போல் தங்கள் கைகளில் உள்ள ஜீஸ் கிளாஸை மேலே உயர்த்தி காட்டி "எங்களுக்கு டபுள் ஓகே" என்றனர்.


அவனும் அவர்களைப் போல் தன்னிடம் உள்ள கிளாஸை எடுத்து ஒன்றாய் தட்டி சியர்ஸ் செய்து சம்மதத்தை தெரிவித்தான்.
பிறகு நிரஞ்சனும் காந்தனும் மகிழுந்தை எடுத்துக் கொண்டு கிளம்பினர்.


காரில் சென்றுக் கொண்டிருக்கும்போது காந்தன் நிரஞ்சனிடம் "நிரஞ்சா இவ்வளவு சலுகை சங்கீத மேளா கம்பெனிக்கு கொடுக்க வேண்டிய அவசியம் என்னன்னு தான் எனக்கு புரியலை"


"ஆமாம் காந்தா நானும் அதைத் தான் யோசிச்சுட்டு இருந்தேன்.எது எப்படியோ?நமக்கு ஒரு நல்ல ஆஃபர் வரும் போது அதை ஏன் விடனும்? அப்படித் தான் நான் நினைச்சேன், எல்லாத்தையும் விட சங்கீத மேளாவுடைய ஓனரை பார்த்து அவர்கிட்ட பேசினால் எல்லாம் புரிஞ்சிடும்" என்று அவன் தன்னை எண்ணத்தைச் சொல்லி விட்டு மகிழுந்தை வேகமாய் செலுத்தினான்.


சங்கீத மேளாவுடைய பெரிய நவீன கட்டிடத்தின் வாயிலில் உள்ள மகிழுந்தை நிறுத்தும் இடத்தில் நிறுத்து விட்டு இருவரும் வெளியே நடந்து வந்தனர்.


அப்பொழுது அங்கு இவர்கள் இருவரைக் கண்டதும் சில பெண்கள் முன்னால் வந்து அவர்களுடன் செல்பி எடுத்தனர்.


இவர்கள் இருவரும் தாங்கள் வருவதை முன்னரே நிறுவனத்தின் மேலாளர் சபரியிடம் சொன்னதால் அவரே கீழே வந்து இருவரையும் வரவேற்று மேலே அழைத்துச் சென்றார்.


அவர்களை அவர்களின் தலைவர் இருக்கும் மேலறைக்கு தானியங்கி ஏணியில் அழைத்துச் சென்றார்.


அந்த இடமே நவீனமயமாகவும்,பணத்தை வாரி இறைத்துக் கட்டிய இடமாகவும் இருந்தது.


அவர்கள் சென்ற இடத்தில் நீண்ட பெரிய வரவேற்பறை இருந்தது. அதில் ஒரு பெண் அமர்ந்திருக்க அங்கே ஒரு உள்ளறையும் அறையின் கதவு மூடியிருந்தது.

வரவேற்பறையில் இருந்த இருக்கையில் நிரஞ்சனையும்,காந்தனையும் அமர சொல்லி விட்டு சபரி மட்டும் உள்ளேச் சென்றார்.

இருவரும் அந்த இடத்தை விழிகளாலேயே அளந்துக் கொண்டிருந்தனர்.

அந்த இடம் முழுவதும் கண்ணாடிகளால் சூழப்பட்ட சுவர்களாலும் பளிங்கு தரையினாலும் வண்ணவிளக்குகளாலும் மின்னியது.


சென்றவர் இரண்டு நிமிடத்தில் வெளியே வந்து "இப்போ நீங்க உள்ளே போகலாம் எம்.டி உங்களுக்காக வெயிட் செய்றாங்க" என்று கதவை திறந்து விட்டார்.


நிரஞ்சனும்,காந்தனும் உள்ளே சென்றவர்கள் அப்படியே ஆச்சரியத்தில் மூழ்கிப் போய் அசையாமல் நின்றனர்.

அவர்கள் இருவரும் யோசித்தது எப்படியும் அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் உட்கார்ந்து இருப்பார் என்று நினைத்திருந்ததற்கு பதிலாக இருபதைக் கடந்த அழகிய இளம் யுவதி ஒருத்தி வெளிநாட்டு உடையில் அளவான ஒப்பனையில் முகத்தில் புன்னகை முகமாய் கண்ணியமாய் இருப்பதைக் கண்டு அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்குமா? இருக்காதா? அந்த யோசனையில் அவர்கள் இருவரும் நிற்க…



அந்த பெரிய நாற்காலியில் அமர்ந்திருந்தவள் எழுந்து நின்று "வெல்கம் டு சங்கீத மேளா வாங்க வந்து உட்காருங்க" என்று அவள் அவர்கள் உட்கார வேண்டிய இருப்பிடத்தைப் பார்த்து கைநீட்ட… அவர்களும் அவள் காட்டிய இடத்தில் வந்து நின்றுக் கொண்டு முதலில் காந்தன் தான் மரியாதை நிமித்தமாக கைநீட்டி "ஹாய் ஐ அம் காந்தன்" என்று சிறு புன்னகை ஒன்றை சிந்தியபடி சொன்னான்.


அவளும் பதிலுக்கு "ஹாய்" என்று கைக்குலுக்கினாள்.அதே போல் நிரஞ்சனும் தன்னை அறிமுகப்படுத்தி கை நீட்டும் பொழுது அவள் இன்னுமாய் சிரித்துக் கொண்டு கண்களில் கொஞ்சம் குறும்பு மின்ன அவனிடம் கைக்குலுக்கினாள்.


இதை எல்லாம் காந்தன் கொஞ்சம் கவனித்து தான் இருந்தான். "வெல் மியூசிக் லவ்வர்ஸ் பேண்ட் எங்க கம்பெனியோட சேர்ந்து வொர்க் பண்ண சம்மதம் தானே" என்று அவள் நேராய் விஷயத்திற்கு வந்தாள்.


நிரஞ்சனும் "எஸ் மேம் எங்களுக்கு இந்த காண்ட்ராக்ட் ஓகே தான்" என்றான்.


அதற்கு சிறிய புன்னகை ஒன்றைச் சிந்தியவள் "ரொம்ப சந்தோஷம் நாங்க எதிர்ப்பார்த்த முடிவையே நீங்களும் சொன்னதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.எல்லாத்தையும் முழுசா படிச்சு பார்த்திட்டீங்கல்ல?" என்று அவள் கேள்வியை நிறுத்த…

காந்தன் "எஸ் மேம் நாங்க புரொஸிஜரா எல்லாம் பார்த்துட்டு தான் முடிவு பண்ணி இருக்கோம்" என்றான்.


"ம்ம்… சரி உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் டபுள் ஓகே.அப்புறம் முக்கியமான விஷயம் எங்க கம்பெனி மூலமா நீங்க போட்டியில கலந்துக்க போறதுனால கடைசி வரைக்கும் சொன்ன கண்டிஷன்ஸ்ல இருந்து பேக் வாங்கக் கூடாது.அதோட எந்த சூழ்நிலையிலும் போட்டியில் இருந்தும் பின் வாங்கக் கூடாது"என்றாள் சற்றே கடுமையாய்…


அவள் சொன்னதைக் கேட்டு நிரஞ்சன் "எஸ் மேம் நீங்க சொன்ன மாதிரியே நாங்க இருக்கிறோம்"என்றான்.


"டோண்ட் கால் மீ மேம் ஜஸ்ட் கால் சாம்பவி எனிவே இனிமேல் நாம ஒன்னா சேர்ந்து வொர்க் பண்ண போறோம் என்னைப் பத்தி நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இருக்குல்ல" என்று எழுந்துக் கொண்டவள் தன்னை பற்றி அறிமுகப்படுத்தினாள்.


"ஐ அம் சாம்பவி.நான் ஜஸ்ட் டூ மன்த்தாகத் தான் இந்த சங்கீத மேளாவுக்கு தலைவர் பொறுப்பை எடுத்துக்கிறேன்.நீங்க இந்த டீல்ல நிறைய ஆஃபர் இருக்கிறதை பார்த்து இருப்பீங்க எதுக்காக இவ்வளவுன்னு கூட நினைச்சு இருக்கலாம்? ஏன்னா நான் எடுத்து செய்யப் போற பஸ்ட் பிராஜக்ட் இது இதுல எனக்கு வெற்றி தான் வரணுமே தவிர்த்து தோல்வி வரக் கூடாது அப்படிங்கிறதுனாலத் தான் உங்க பேண்ட்டை நான் செலக்ட் பண்ணது அதனால இதுல உங்க பெஸ்ட் வெரி பெஸ்ட்டோட பார்ட்டிபேஷன் தான் இருக்கனும் ஏன்னா இந்த போட்டியில நீங்க வின் பண்ணுறதுலத் தான் என்னோட சக்ஸஸ் இருக்கு என்னால இந்த கம்பெனியை ரன் பண்ண முடியும் அப்படின்னு நான் நிரூபிக்க முடியும் இது தான் எனக்கு தேவையானது என்று நான் சொல்லிட்டேன் உங்க பெஸ்ட் ப்ராபமன்ஸ்ஸ எனக்கு காட்டுங்க"என்று தனக்கு எது வேண்டுமோ? அதை அவர்களிடம் விளக்கமாய் முடிவாகச் சொன்னாள்.



அவள் சொன்னதை எல்லாம் கேட்ட நிரஞ்சன் "ம்ம்… ஓகே மேம் உங்களை ஏமாத்தாமல் எங்களுடைய பெஸ்ட்டை நாங்க கண்டிப்பா கொடுப்போம்" என்றான்.


"ஓகே கால் சாம்பவி நிரஞ்சன்"


"யா… சாம்பவி"


இவர்கள் இருவருக்குள்ளும் பேசிக் கொண்டிருப்பதை காந்தன் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தான்.



"இந்த டீல் ஓக்கேன்னு அப்படிங்கிறதுக்காக இந்த காண்ட்ராக்ட்ல பேண்ட்டோட ஹெட் நீங்க சைன் பண்ணுங்க இதுவே கன்பார்ம் தான் நாளைக்கு மற்ற நால்வரும் சைன் பண்ற ப்ராஸஸ் முடிஞ்சிடும்"என்றான்.

அவனும் சரி என்று அவள் கொடுத்த ஒப்பந்த காகிதத்தில் கையெழுத்திட்டான்.


சாம்பவி நிரஞ்சனின் ஒவ்வொரு செய்கையையும் கவனிக்கத் தவறாமல் இல்லை.அவள் கண்கள் முழுவதும் அவனையே நிரப்பிக் கொண்டு இருந்தன.


எல்லாம் பேசி முடித்தவுடன் "என்ன குடிக்கிறீங்க? கூல்டீரிங்ஸ் இல்லை சாப்ட் டீரிங்ஸ்"


"நத்திங் சாம்பவி ஒரு கிளாஸ் வாட்டர் போதும்"


"யா ஷீயர்" என்று பக்கத்தில் இருந்த பெல்லை அழுத்திய அடுத்த நிமிடம் கையில் இரு டம்ளர் தண்ணீரோடு வந்து ஒரு பெண் கொடுத்து விட்டு சென்றாள்.


அந்த தண்ணீரை எடுத்து இருவரும் குடித்து வைத்து விட்டு காந்தன் "வாட் நெக்ஸ்ட்"


சாம்பவி சிரித்துக் கொண்டு "நாளையிலிருந்து உங்க வொர்க் என்னன்னு எங்க டீம் ஒரு டைம்ஸ் சார்ட் கொடுப்பாங்க அதில் உங்களுக்கு சிலது செட் ஆகலைன்னா மாற்றலாம் பட் இரண்டு மூணு விஷயங்கள் நாங்க மாத்த மாட்டோம் அது இங்கே வொர்க் பண்ற எல்லோரும் பலோ பண்ணுற விஷயம் அதை மட்டும் என்னால மாற்ற முடியாது" என்று கண்டிப்பாய் சொன்னாள்.


"அப்படி என்ன கண்டிஷன்ஸ்?" என்று நிரஞ்சன் கேட்டான்.


"நிரஞ்சன் இப்போ அதை எல்லாம் தேவையில்லை. நாளைக்கு தான் எல்லாம் தெரியுமே லெட்ஸ் செலிபிரேட்" என்று சந்தோஷமாய் ஒரு நண்பியாய் சொன்னது நிரஞ்சனுக்கு பிடித்திருந்தது.

"தாங்ஸ் சாம்பவி இவ்வளவு பெரிய கம்பெனியின் ஹெட்டா இருந்தும் நீங்க இவ்வளவு எதார்த்தமா பேசுறது ஐ லக் தட்"


அவள் மெல்லிதாய் கண்கள் மின்ன சிரித்தவள் "செலிப்ரேஷனுக்கு எனக்கும் இன்வைட் உண்டா?"


"கண்டிப்பா நீங்க இல்லாமலா? உங்க காண்ட்ராக்ட் கிடைச்ச சந்தோஷத்துல பண்ற பார்ட்டீ டைம் முடிவு பண்ணிட்டு கால் பண்றேன்" என்றதும் சாம்பவி உடனடியாக "நிரஞ்சன் உங்க பர்ஸ்னல் நம்பர் கொடுங்க" என்று அவள் கையில் தன் அலைபேசியை எடுத்தாள்.


அவளே முந்திக் கேட்டதால் முடியாது என்று மறுக்காமல்
நிரஞ்சன் தன் அலைபேசி எண்ணை அவளிடம் கொடுத்து விட்டு அவளிடமும் பின்னர் வெளியே நின்ற சபரியிடமும் விடைப்பெற்று சென்றார்கள் இருவரும்.


இருவரும் தங்கள் மகிழுந்தில் ஏறியவுடன் காந்தன் நிரஞ்சனிடம் "நிரஞ்சா புதுசா ஒரு கதை போகுது போல" என்றான் கேலியாக…


நிரஞ்சன் அவனைப் பார்த்து "என்னக் கதை போகுது?எனக்கு ஒன்னுமே புரியலை" என்று அவன் உண்மையிலேயே புரியாமல் விழித்தான்.
 

Attachments

  • InShot_20250623_215806026.jpg
    InShot_20250623_215806026.jpg
    199.8 KB · Views: 8
  • Love
Reactions: shasri