உதிராத மலராய் நானிருப்பேன் இறுதி அத்தியாயம் -30
அவன் சொன்னதைக் கேட்ட பார்த்திபன் “நிரஞ்சன் நீ போற இடத்துக்கு எங்களையும் கூடிட்டு போ ஏன்னா யாருமே இல்லாத எங்களுக்கு ஒரு உறவை அமைச்சுக் கொடுத்தது நீதான் அதனால நாங்க தானே உன்னுடைய உறவு அதனால நாங்களும் உனக்கு துணையாக வர்றோம் நிரஞ்சா” என்றதும் மற்ற இருவரும் அதை ஒப்புக் கொண்டனர்.
நிரஞ்சன் யோசனையாக “இதெல்லாம் சரியாக வரும்னு நினைக்கிறீங்களா?” என்று கேட்டான்.காந்தனோ “நாம முயற்சி செய்து பார்க்கிறதில் தப்பில்லை எல்லாம் நல்ல படியாக முடியும்” என்று நிரஞ்சனுக்கு நம்பிக்கை கொடுத்தார்கள் மூவரும்.
நால்வருமாக சபரியின் வீட்டிற்கு வந்தார்கள்.அவர்கள் அழைப்பு மணியை அழுத்தவும் செழியன் நிரஞ்சனாகத் தான் இருக்கும் என்று கதவை திறந்தவனுக்கு பெருத்த அதிர்ச்சி.
அங்கே நால்வரையும் கண்டவன் யோசனையோடு “உள்ளே வாங்க” என்று அழைக்கவும் அவர்கள் தெ நால்வரும் செழியனை நலம் விசாரித்து விட்டு உள்ளே வந்தனர்.
சபரி எழுந்துக் கொள்ள அங்கே வந்த நால்வரையும் பார்த்து அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.எல்லோரையும் உட்காரச் சொன்னவர் அவரும் அமர்ந்தார்.சிறிது நேரம் அங்கே ஒரு அமைதி நிலவி இருந்தது.சிற்பிக்கு ஒருவிதமான பயத்தில் நின்றுக் கொண்டிருந்தாள்.
பூர்ணா தான் மெதுவாக “இப்படியே எவ்வளவு நேரம் இருக்க யாராவது முதல்ல பேசுங்க” என்றதும் சபரி “நிரஞ்சன் தம்பி நான் உங்களை மட்டும் தானே வரச் சொல்லி இருந்தேன்” என்றதும்
காந்தன் எழுந்து “அங்கிள் நிரஞ்சனோட குடும்பமே நாங்க தான் அதனால அவனுடைய எல்லா விஷயங்களிலும் நாங்களும் உறுதுணையாக இருப்போம் அதனாலத் தானே எல்லோருமாக வந்தோம்” என்று சொல்லவும் சபரியோ மெலிதாக புன்னகைத்தார்.
நிரஞ்சனைப் பார்த்து சபரி “எனக்கு எல்லா விஷயமும் தெரியும் நான் நேர்ல பார்த்துட்டேன் எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு தம்பி சிற்பிகா எனக்கும் பொண்ணு அவளை இப்போ பாட அழைச்சுட்டு போங்க அதுக்கு மட்டும் தான் இப்போது அனுமதி அவளுடைய திறமையைப் பத்தி முதல்ல பெத்தவங்களுக்கு தெரியனும் அது தெரிய மேடை ஏறி பாடட்டும் அதற்கு பிறகு எல்லாமே நான் பார்த்துக்கிறேன்” என்றார்.
அவரின் பதிலைக் கேட்டு அதிர்ச்சியான சிற்பி “மாமா அம்மா ரொம்ப கோபப்படுவாங்களே?” தயக்கமாகக் கேட்டாள்.
“நீ எதுவும் கவலைப்படாதே தாமரைக்கிட்டே எப்படி பேசினால் சரிவரும்னு எனக்கு தெரியும் நீ ப்ராக்டீஸ் பண்ணு பார்த்துக் கொள்ளலாம் நிரஞ்சன் உங்களுக்கு நாட்கள் ரொம்ப குறைவா இருக்குது அதனால போட்டியில் மட்டும் கவனத்தை செலுத்துங்க இனிமேல் நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளை அதுக்கு நான் உறுதி” என்று ஒரு வார்த்தையில் முடித்து வைத்தார்.அவரின் பேச்சைக் கேட்டு அங்கிருந்த எல்லோர் முகத்திலும் புன்னகை பரவி இருந்தது.
காரணம் இல்லாமல் நம் வாழ்க்கையில் எதுவும் நடப்பதில்லை.அதனால் சில நேரங்களில் வாழ்க்கைத் தரும் இன்ப அதிர்ச்சிகளை அதன் போக்கிலேயே அனுபவித்து விடுவது நல்லது.
அங்கே எல்லோரின் முன்பாக தன் கரங்களை சிற்பிக்கு முன்பாக நீட்டியவன் “சிற்பி முதல்ல உனக்கு பிடிச்ச பாடுறதை விருப்பம் போல பாடு பிறகு நமக்கான நாளை நாம முடிவு செய்யலாம் இப்போ வா போகலாம்” என்று அழைக்க சிற்பி தன் மாமாவையும் அத்தையையும் பார்த்தாள்.இருவரும் ஒன்றாக சரியென்பது போல் தலையசைக்கவும் நீட்டியிருந்த கரங்களின் மேல் தன் கைகளை கோர்க்கவும் அழுந்த பிடித்தான் நிரஞ்சன்.
மறுநாள் சபரி அருள்மணியின் கைப்பேசியில் அழைத்தவர் முதலில் நலம் விசாரித்தவர் “மச்சான் ரொம்ப நாளாக ரெஸ்ட் எடுத்துட்டு தானே இருக்கீங்க நாம எல்லோருமாக சேர்ந்து ஒரு சுற்றுலா போய்ட்டு வரலாமா?” என்று கேட்டார்.
உடனே அருள்மணி “மச்சான் சிற்பிக்கு வேலை அதிகமா இருக்குல்லே எங்கும் அவளால் வர முடியாதே பொண்ணு இல்லாமல் எங்கே போக முடியும்?” என்றதும்
சபரி “நாம அவளோடு தான் வெளிநாட்டுக்கு போறோம் சீச்கிரமா ரெடியாகுங்க” என்றார் நேராக…
அதைக் கேட்டு அதிர்ச்சியான அருள்மணி “என்னச் சொல்லுறீங்க மச்சான்?” என்று கேட்க… சபரியோ “போட்டி நடக்குற இடத்திற்குத் தான் போறோம்” என்றார் சாதாரணமாக…
அதைக் கேட்டு யோசித்த அருள்மணி “இப்போ எதுக்கு தேவையில்லாத செலவு ரொம்ப செலவாகும்” என்றார்.
அதைக்கேட்டு சிரித்த சபரி “மச்சான் செலவு எப்பவும் இருந்துட்டே தான் இருக்கும் அதனால அதைப் பத்தி எல்லாம் யோசிக்கக் கூடாது இது கம்பெனி மூலமாக எனக்கு சில பேரை இலவசமா அழைச்சிட்டு போக பர்மிஷன் கிடைச்சு இருக்கு அதனால தான் உங்களை ரெண்டுபேரையும் அதோடு கனிகாவுக்கும் அவளோட புருஷனுக்கும் சொல்லி இருக்கேன் அவங்களோடு வந்துடுங்க கனிகாகிட்டே பாஸ்போர்ட்டை ஸ்பீடு போஸ்ட்ல அனுப்ப சொல்லி இருக்கேன் ” என்று முடிவாகச் சொன்னவர் மறு பதிலைக் கேட்காமல் வரச் சொல்லி அழைப்பை துண்டித்தார் சபரி.
சிற்பியிடம் தாமரை கைப்பேசியில் பேசியவர் பொதுவாக நலம் விசாரித்து விட்டு “எந்த ஊருக்கு போறோம்னு தெரியுமா?” என்று கேட்டார்.
சிற்பி “ம்ம்… மலேசியாக்கு தான் போறோம்” என்றாள்.
தாமரையோ சிரித்துக் கொண்டே “ஊர்ல எல்லோருகிட்டேயும் வெளிநாடு போறோம்னு சொல்லிட்டேன் இந்த ஊரை தாண்டாத எனக்கு இது பெரிய பாக்யம் அண்ணனை மாதிரி யாரும் இருக்க மாட்டாங்க ரொம்ப நல்ல மனசு அவங்க நம்ம குடும்பத்தை அவரு குடும்பமா நினைக்கிறதுனால இப்படி எல்லாம் யோசிக்கிறாங்க என்னோடு பிறந்தவங்க என்கிட்டே இருக்கிறதை பிடிங்கிட்டு போறதுல தான் இருக்காங்க என்னச் செய்ய? சபரி அண்ணன் சொல் பேச்சு கேட்டு நடந்துக்கோ சிற்பி” என்றதும் “சரிம்மா சீக்கிரம் துணிகள் எடுத்து வைங்க நாட்கள் ரொம்ப குறைவா இருக்கு அதோடு நீங்க இங்கே வர்றதுக்கு முன்னாடியே நான் கிளம்பிடுவேன் அங்கே வேலைகள் இருக்கும்மா” என்று சொன்னதும் தாமரை “நீ சபரி அண்ணே சொல்ற படி செய்ம்மா பார்த்து கவனமா இரும்மா” என்று பேசி விட்டு அழைப்பை துண்டித்தார்.
சிற்பிக்கு பயமாக இருந்தது.இருந்தாலும் சில நேரங்களில் நமக்கான ஒரு வழியை நாம் தேர்ந்தெடுக்கும் போது அதில் சில தடைகளை தாண்டித் தானே செய்ய வேண்டும்.அப்படித் தான் அவளும் தன் அம்மாவிற்கு தெரியாமல் அவள் ஒரு விஷயத்தை துணிந்து செய்கிறாள்.
அவளது நிலைமையை அருகில் இருந்து பார்த்த நிரஞ்சன் “என்னாச்சு ஏன் பதற்றமா இருக்கே?”
“அம்மாகிட்டே பேசினேன் பொய் சொல்லுறேன்னு பயமா இருக்கு”
அவனோ “அப்படி எல்லாம் இல்லை அம்மா உன்கிட்ட பாட்டு பத்தி எதுவும் கேட்கலை நீயும் அதை மறுக்கலை அப்படி இருந்தால் தான் அது பொய் சொன்னதாக இருக்கும் இங்கே உன் திறமையை காட்டப் போறேன்னு நினைச்சுக்கோ தவறாகத் தெரியாது” என்று அவளுக்கு தைரியத்தைக் கொடுத்தான் நிரஞ்சன்.
நால்வருடன் சிற்பிகாவும் தனது பயிற்சியை தொடர்ந்து செய்வதோடு நிறுவனத்தின் வேலைகளும் இருந்தன.அதை எல்லாம் அவள் கைப்பேசியிலும் சிலவற்றை நேரில் சென்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தில் உள்ள இரண்டு நபர்களை வெளிநாட்டில் நேரில் அழைத்துச் செல்வதற்கு அனுமதி கொடுத்து இருந்தாள் சாம்பவி.
அதில் சிற்பியின் சார்பாக தன் பெற்றோரையும் நிரஞ்சனின் சார்பாக கனிகாவையும் அவளுடைய கணவனையும் தங்களோடு அழைத்துச் செல்ல முடிவெடுத்து இருந்தார் சபரி.இதில் நிறுவனத்தின் ஊழியரான சபரியின் மூலமாக செழியனையும் பூர்ணாவையும் அழைத்து செல்ல முடிவெடுத்து இருந்தார்.
எல்லாம் சரியாகச் சென்றுக் கொண்டிருந்தது.போட்டி நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே நிரஞ்சனும் அவனது நண்பர்களும் உடன் சிற்பியும் மலேசியாவிற்குச் சென்றனர்.
அவள் சென்ற பிறகு சிற்பியின் பெற்றோரும் கனிகாவும் வந்து இருந்தார்கள்.பூர்ணா தனியாக பார்த்தவள் “அத்தை அம்மாகிட்டே எப்போ சிற்பியோட விஷயத்தைப் பற்றி சொல்லலாம் முடிவு செய்து இருக்கீங்க?” என்று கேட்டாள்.
பூர்ணா “உன்கிட்டே சொன்னது யாரு?”
கனிகா சிரித்துக் கொண்டே “சிற்பித் தான் எல்லாத்தையும் சொன்னாள்.எனக்கும் சம்மதம் அவளாவது அவள் விரும்பிய படி இந்த வீட்டை என்னும் கூட்டை விட்டு பறந்து போகட்டும்” என்றாள் உண்மையான அன்போடு…
கனிகா சொன்ன பதிலைக் கேட்டு சிரித்த பூர்ணா “என்
அண்ணன்கிட்டே மாமா எல்லா விஷயத்தையும் சொல்லிடுவாங்க.உன் அம்மாக்குத் தான் எப்போத் தெரியப் போகுதுன்னு தெரியலை எல்லாம் நல்லபடியா முடியனும் தான் நான் கடவுள்கிட்டே வேண்டிட்டு இருக்கேன்” என்று சொன்னார்.
சிற்பியின் அறையில் தங்கிய தாமரை அவளுடைய பொருட்களை எல்லாம் எடுத்துப் பார்த்தார்.சிற்பியின் உடைகளை எடுத்து மடக்கி அலமாரியில் வைக்கும் போது அங்கே ஒரு டைரி இருந்தது.அதைப் பார்த்தவர் எதாவது புத்தகமாக இருக்கும் என்று நினைத்தவர் அதை அந்த இடத்திலேயே வைத்தார்.
சபரி அருள்மணியை வெளியே கொஞ்ச நேரம் நடக்கலாம் என்று அழைத்தவர் “மச்சான் உங்ககிட்டே ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்” என்று சபரி கேட்க அருள்மணி எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் “சொல்லுங்க மச்சான்”
“இந்த விஷயத்தில் நான் முடிவெடுத்ததை தப்பா நினைக்காதீங்க நான் சிற்பிக்கு எப்பவும் நல்லது தான் நினைப்பேன்” என்றவர் நடந்த எல்லா விஷயங்களையும் அருள்மணியிடம் சொன்னார்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தவர் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார் அருள்மணி.
அவரது அமைதி சபரியை யோசிக்க வைக்கவும் சபரி “நான் எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்றேன் நீங்க அமைதியாக இருந்தால் என்னால என்னன்னு புரிந்துக் கொள்ள முடியலை” என்று நேராக கேட்டார்.
அருள்மணி சிரித்துக் கொண்டே “ஒரு தகப்பனாக நான் செய்ய வேண்டிய விஷயத்தை நீங்க செய்து இருக்கீங்க மச்சான் எனக்கு அதுல சந்தோஷம் தான் சிற்பி படிப்பு முடியவும் அவளை பாடுவதற்கு அனுப்புறேன்னு நான் வாக்கு கொடுத்து இருந்தேன் அந்த பேச்சை நம்பித் தான் சிற்பியும் கல்லூரி படிப்பை நல்ல படியாக முடித்தாள்.ஆனால் அதுக்குள்ளே என்னவெல்லாமோ நடந்து போச்சு இப்போ நான் செய்ய வேண்டியதை நீங்க செய்ததில் எனக்கு சந்தோஷம் தான் மச்சான் பிள்ளைகளை அவங்க ஆசையை நினைவாக்கி பார்க்கிற சந்தோஷம் எல்லோருக்கும் கிடைக்காது எனக்கு கிடைச்சு இருக்கு வாழப் போற ஒரு வாழ்க்கையை இவ்வளவு நாளாக எங்களுக்காக வாழ்ந்த பொண்ணு இனிமேல் அவள் விருப்பப்படி வாழட்டும் எனக்கும் இதில் சம்மதம் தான் மச்சான்” என்று சபரி எதிர்பாராத பதிலை அருள்மணி சொல்லவும் சபரி அருள்மணியை ஆரத் தழுவிக் கொண்டவர் “ரொம்ப தாங்ஸ் மச்சான் எனக்கு ரொம்ப கவலையா இருந்துச்சு சிற்பியோட விஷயத்துல நீங்க என்ன முடிவு எடுப்பீங்களோன்னு கவலையா இருந்துச்சு இனி நாம எல்லோருமா சேர்ந்து தங்கச்சி மனசையும் மாத்திடலாம்னு எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றார்.
சபரி சாம்பவியிடம் தன் குடும்பத்தினரோடு வருவதாகச் சொன்னார்.ஏற்கனவே எல்லா ஏற்பாடுகளையும் வீடியோ காலில் பேசி முடித்து வைத்து இருந்தார்.அதோடு சிற்பியும் இரண்டு நாட்கள் முன்னதாக சென்றதால் அவளே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டாள்.அவளுக்கு உதவியாக நால்வரும் இருந்தார்கள்.
தாமரைக்கும் அருள்மணிக்கும் இது முதல் விமானப் பயணம்.அதனால் அவருக்கு எல்லாமே புதிதாக இருந்தது.
புதிய இடம், மனிதர்கள், சூழ்நிலை என எல்லாமே வித்தியாசமாக இருந்தது.நான்கு மணிநேர பயணம் முடிந்து தென்கிழக்கு நாடான மலேசியாவில் வந்து இறங்கினார்கள்.
சிற்பி தினமும் கைப்பேசியில் அழைத்து அவள் சொல்லும் விஷயங்களை கேட்டாலும் நம்பாமல் இருந்தவருக்கு இப்போது ஒவ்வொரு சூழ்நிலையும் புரிய ஆரம்பித்தது.
எல்லாவற்றையும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் பார்த்தார் தாமரை.தான் வாழும் உலகமே வாழ்க்கை என்று வாழ்ந்தவருக்கு அந்தக் கூண்டை விட்டு வெளியே வரும் போது தான் இந்த உலகம் எவ்வளவு பரந்து விரிந்த இடம் என்று புரிந்தது.
முதலில் நேராக அவர்களுக்கு கொடுத்து இருந்த அறைக்குச் சென்று தயாராகி மாலையில் நடைபெறும் போட்டியைக் காணும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள்.
தாமரை பலநாட்டு மக்களும் அவர்களின் பேச்சும் நிறமும் உடையும் என்று எல்லாவற்றையும் கவனித்தார்.பெண்கள் எல்லா துறைகளிலும் இருப்பதையும் அவர் பார்த்தப்படியே வந்தார்.
கனிகாவிடம் மெதுவாக தாமரை “சிற்பியை பார்க்க முடியுமா?” என்று கேட்டார்.
“ஏன் ம்மா என்னாச்சு?” என்று கனிகாக் கேட்க “என்னன்னு தெரியலை சிற்பியை பார்க்கனும் போல இருக்கு போய் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் தூரமா பார்த்துட்டு வந்துடலாம் சபரி மாமாகிட்டே கேளும்மா” என்று சொன்னார்.
கனிகா யோசனையோடு சபரியிடம் விஷயத்தைச் சொன்னாள்.அவரோ “சரி சீக்கிரம் தயாராக இருங்க போகலாம் ஆனால் ரொம்ப நேரம் நிற்க முடியாது” என்று சொல்லவும் கனிகா “சரிங்க மாமா நாங்க உடனே கிளம்பிடுறோம்” என்று சொன்னாள்.
நிகழ்ச்சி ஆரம்பிக்க இரண்டு மணிநேரத்திற்கு முன்பே அந்த இடத்திற்கு வந்தார்கள்.
அங்கே சிற்பி நின்றுக் கொண்டு இவர்கள் நால்வரும் பாடுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.அப்பொழுது இவர்கள் இருக்கும் அறையின் வாயிலில் “சிற்பிகா அம்மா சிற்பி” என்று குரல் கேட்க அவள் திரும்பிப் பார்க்கவும் அங்கே தாமரை,அருள்மணி,
கனிகா,கணவர்,அத்தை,
மாமா,செழியன் என எல்லோரும் நின்றுக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் பார்க்கவும் “அம்மா அப்பா” என்று ஓடிப்போய் தாமரையைக் கட்டி கொண்டாள் சிற்பி.
தன் பெற்றவர்களை நேரில் சந்தித்து எத்தனையோ மாதங்களாகிப் போனது.இன்று நேரில் காணவும் அவர்களுக்கு தெரியாமல் அவள் செய்யப் போகும் விஷயத்தையும் நினைத்து அவளையும் அறியாமல் கண்ணீர் வந்தது.
இதற்கிடையில் நிரஞ்சனும் நண்பர்களும் அவர்களுக்கு அருகில் வந்து நின்றார்கள்.
சிற்பியைப் பார்த்து தாமரை “இப்படியே அழுதுட்டு இருக்க போறியா? இவங்களை அறிமுகப்படுத்த மாட்டியா?” என்று கேட்கவும் நால்வரையும் அறிமுகப்படுத்தினாள் சிற்பி.
நிரஞ்சனைப் பற்றி சொல்லவும் அருள்மணி அவனது கரங்களை பிடித்து வாழ்த்துச் சொன்னார் முகம் முழுக்க புன்னகையோடு.கனிகாவும் அவளது கணவனும் நிரஞ்சனை மேலும் கீழுமாக பார்த்தவர்கள் “ரொம்ப அழகா இருக்கீங்க நிரஞ்சன் வாழ்த்துக்கள்” என்று இருவரும் நிரஞ்சனிடம் கையைக் குலுக்கினார்கள்.
சஹா மெதுவாக “காந்தா இன்னைக்கு நமக்கு பைனல்ஸா இல்லை மாப்பிள்ளை பார்க்கும் படலமா?” என்று கேட்க காந்தனோ அவனைப் பார்த்து முறைத்து “ஒழுங்கா வாயை மூடு” என்று அவனது காலின் மேல் லேசாக மிதித்து விட்டான்.சஹா அதோடு வாயை மூடிக் கொண்டான்.
சபரி “சரி நேரமாகுது வாங்க போகலாம்” என்று அவசரப்படுத்தவும் தாமரை சிற்பியை கட்டிக் கொண்டபடி “வாழ்த்துக்கள் சிற்பி நல்லபடியா பாடு” என்று சொல்லி விட்டு வேகமாகச் செல்ல அவர் சொன்னதைக் கேட்டு நம்ப முடியாமல் சிற்பி தன் அம்மாவின் பக்கம் செல்ல எத்தனிக்க அங்கே வந்த ஒப்பனையாளர் “சீக்கிரமா வாங்க எல்லோரும் தயாராக நேரமாகுது” என்று சொன்னார்.
சிற்பி யோசனையாக நிற்பதைப் பார்த்த நிரஞ்சன் “என்னாச்சு சிற்பி? ஏன் ஒரு மாதிரி நிற்கிறே?”
“நிரஞ்சன் அம்மா சொன்னது எனக்கு சரியா புரியலை” என்றதும் அஅவனோ “போட்டி முடிஞ்சதும் பேசலாம்” என்று சொல்லவும் சிற்பி தயாராக ஆரம்பித்தாள்.
அவளது மனமோ தன் அம்மா சொன்னதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்க அருகில் இருந்த கைப்பேசியை எடுத்து அம்மாவிடம் பேசலாம் என்று எடுத்தவளுக்கு தாமரையிடம் இருந்து ஒரு குரல்பதிவு வந்து இருந்தது.ஒருமணிநேரத்திற்கு முன்பு அனுப்பி இருப்பதாக அதில் காட்டி இருந்தது.
உடனே ஹெட்போனை எடுத்து செவியில் மாட்டிக் கொண்டு என்னவென்று கேட்க தாமரை “சிற்பி சின்ன வயசில் இருந்து வாழ்க்கைன்னா இப்படித் தான் எனக்குள்ளே நானே ஒரு சின்ன வட்டத்துக்குள்ளே என்னுடைய பாதி வாழ்க்கைக்கு மேல நான் வாழ்ந்துட்டேன் நீ சொன்ன விஷயங்கள் எல்லாம் எனக்கு தப்பாக தெரிஞ்சது சிற்பி மாமா வீட்ல உன்னோட அறையில் அம்மா உன்னுடைய துணியை உள்ளே வைக்கும் போது அங்கே ஒரு டைரி இருந்துச்சு எதாவது எழுதி வைச்சு இருப்பேன்னு எடுத்துட்டு திரும்ப வைக்கும் போது அதில் நீயும் ஒரு பையனும் இருக்கிற போட்டோ விழுந்திச்சு என்ன இருக்குன்னு பார்க்கனும் ஒரு கோபத்தில் தான் உன் டைரிய எடுத்து படிச்சேன் சிற்பி.அதில் எழுதி இருந்த உன் ஆசைகளும் அப்பா அம்மாவிற்காக நீ யோசித்த விஷயங்கள் உன் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் எல்லாவற்றையும் நான் படிச்சேன் அதில் நீ தவற விட்ட உன் வாய்ப்புகளையும் நான் படிச்சு தெரிஞ்சுகிட்டேன் எப்பவும் ஒரு அம்மாவாக தான் யோசித்தேனே தவிர உன்னுடைய நிலைமையில் நான் யோசிக்கலை இதைப் பற்றி இவங்ககிட்ட பேசலாம்னு வரும் போது எல்லோரும் உனக்காக எனக்கு தெரியாமல் பேசிகிட்டு இருந்ததை நான் கேட்டேன் உன் அப்பாவையும் சேர்த்து தான் சொல்றேன் எல்லா அம்மாக்களுக்கும் அவங்களுடைய பொண்ணு மேல பயம் கலந்த பாசம் எப்பவும் இருக்கும் ஏன்னா அவளுடைய வாழ்க்கையை சிறப்பானதாக அமைச்சுக் கொடுக்கனும் இல்லைன்னா பொண்ணு காலத்துக்கும் கண்ணீர் வடிக்கிறதை எந்த தாயாலும் அதை பார்க்க முடியாது அதனாலத் தான் உன்கிட்ட கொஞ்சம் இல்லை ரொம்ப கடுமையா நடந்துக்கிட்டேனே தவிர மற்ற எந்த எண்ணமும் இல்லை.சமூகத்தின் மேலான பயம் என்னை இப்படி மாத்திடுச்சு சிற்பி அம்மாவை மன்னிச்சிடு எல்லோரும் உனக்கு நல்லது நடக்கும் நினைக்கும் போது அம்மா எப்போதும் அதை தடுக்க நினைக்க மாட்டேன் சிற்பிம்மா படிப்பும் உலகறிவும் இல்லாத இந்த அம்மாக்கு தெரியாமல் பாடுறோம்னு கவலைப்படாமல் தைரியமா உன்னுடைய திறமையை முழுசா காட்டு சிற்பி நல்லா பாடு என் பொண்ணை மதிக்கிற நிரஞ்சனையும் எனக்கு பிடிச்சு இருக்கு ” என்று அழுகையோடு முடித்திருந்தார் தாமரை.
அவர் பேசியதைக் கேட்ட சிற்பியின் விழிகளும் கண்ணீரை நிரப்பிக் கொண்டது.பக்கத்தில் ஒப்பனை செய்துக் கொண்டிருந்த பெண் “எனி ப்ராளம்” என்று கேட்க…
சிற்பியோ முகத்தில் புன்னகையோடு இல்லை என்பது போல் தலையசைத்தாள்.அவ்வளவு நேரமாக இருந்த பாரமும் பதற்றமும் மறைந்து இப்போது மனம் முழுவதும் நிறைந்து போய் இருந்தது.
எல்லோரும் தயாராகி அவர்களுக்கான முறை வருவதற்காக காத்திருக்கும் போது நிரஞ்சன் சிற்பியின் முகத்தைப் பார்த்தவன் “என்ன நடந்துச்சு சிற்பி ரொம்ப சந்தோஷமாக இருக்கே? என்னன்னு சொன்னால் நானும் சந்தோஷப்படுவேன்” என்று கேட்டான்.
சிற்பியோ முகம் முழுவதும் புன்னகையோடு “அம்மா என்னை நல்லபடியா பாடச் சொல்லி மெஸேஜ் அனுப்பி இருந்தாங்க அவங்க பொண்ணு பாடுறதில் சந்தோஷம் தான் அதோடு உங்களையும் பிடிச்சு இருக்குன்னு சொன்னாங்க” என்று அவள் சொல்லவும் அவளது முகத்தில் இருந்த புன்னகை இப்போது நிரஞ்சனின் முகத்திலும் நிறைந்து இருந்தது.
அதைப் பார்த்து பார்த்தி நிரஞ்சனிடம் “என்ன விஷயம்னு சொன்னால் நாங்களும் சந்தோஷப்படுவோம்ல” என்றதும் நிரஞ்சன் மெதுவாக “எல்லாம் ஓகே ஆகிடுச்சு” என்று சொல்ல சஹா “புரியலை சத்தமா சொல்லு” என்று சொல்லவும் நிரஞ்சன் புன்னகைத்துக் கொண்டே “எங்க காதல் ஓகே ஆகிடுச்சு” என்றதும் இவர்களின் அணியின் பெயரை அழைத்தார்கள் அங்கே நிகழ்ச்சியை நடத்தும் பெண்.
இவர்கள் நால்வரும் முன்னால் சென்று ஒன்றாக எல்லோருக்கும் வணக்கம் சொன்னவர்கள் நிரஞ்சன் “இதுவரைக்கும் எங்கள் குழுவின் பாடலைக் கேட்டவங்களுக்கு இன்றைக்கு எங்களின் புதிய உறுப்பினரின் முயற்சியாக இதோ என்று காந்தன் முதலில் பாட ஆரம்பிக்க
நதிகளோ தேங்குவதில்லை
அலைகடல் தூங்குவதில்லை
வாழும் வரை விழித்து
இருந்தால் உன் கனவை யார்
பறிப்பார் ஹோ அதிகமாய்
ஆசைகள் கொள்வோம்
விதிகளை வேர்வையில்
வெல்வோம் வேற்றுமையின்
வேரறுத்து வானவில்லாய்
சேர்ந்திருப்போம் ஒன்று கூடி
யோசித்தோம் நம்மை நாமே
நேசித்தோம் எங்கள் விழியில்
இனிமேல் உலகம் முகம்
பார்க்கும் நித்தம் ஒரு கனவில்
தூங்கு உள்ளங்கையில்
உலகை வாங்கு என்று நிரஞ்சன் அடுத்து பார்த்தி, சஹா என எல்லோரும் ஒவ்வொரு வரியைப் பாடலை பாடிக் கொண்டிருக்க அவர்களின் இன்னிசையில் எல்லோரும் ஆரவாரமாக கேட்டுக் கொண்டிருக்கும் போது கடைசியாக சிற்பி வந்து
“றெக்கை விரிக்க வானம்
கேட்டேனே
அன்பே உந்தன் நெஞ்சம் கொடுத்தாய்…
உயிரே எனை மீண்டும் இணைந்தாயா
நான் இறக்கின்றேன்
புதிதாய் ஒரு ஜென்மம்
கொடுத்தாயே நான்
பிறக்கின்றேன் ஆஆஆ…என்று அவள் பாட அந்த அரங்கமே அவளின் இனிமையான குரலில் மிதந்து இருக்க பாடல் முடியவும் நிரஞ்சன் சிற்பியின் கைகளை அழுத்தமாக பிடித்துக் கொண்டான்.எல்லோரும் ஆரவாரமாக அவர்களின் பாடிய பாடலுக்கான வாழ்த்தை தெரிவித்தனர்.
அங்கே வந்திருந்த பெண்கள் குழுவிற்கு என எல்லோருக்கும் இது கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்தது.
சிற்பி பாடி முடிக்கவும் இங்கே எல்லோரும் தாமரையைப் பார்க்க அவரும் எழுந்து நின்று கைத்தட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவரை ஆச்சரியமாக பார்ப்பதை உணர்ந்த தாமரை “நீங்க சொல்லித் தான் எனக்கு எல்லாம் தெரியனும்னு இல்லை என் பொண்ணே எல்லாத்தையும் சொல்லிட்டா நானும் அவளுக்கு வாழ்த்து சொல்லிட்டேன்” என்றதும் கனிகா அவரைக் கட்டிக் கொண்டு “தாங்ஸ் ம்மா” என்று கன்னத்தில் முத்தமிட்டாள் தன் தங்கைக்காக…
எல்லோரும் வெற்றியாளர்களுக்காக அறிவிப்பிற்காக காத்திருக்க மொத்தம் மூன்று குழுவில் இரண்டு குழுவாக நிரஞ்சனின் அணியும் இன்னொரு அணியும் வந்திருக்க முடிவினில் நிரஞ்சனின் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் அவர்களுக்கான கோப்பையும் பரிசுத் தொகையும் ஐவரும் ஒன்றாக அதை வாங்கினார்கள்.எல்லோரும் வெற்றிக் கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டிருக்க அங்கே எல்லோரின் முகத்திலும் புன்னகையும் மகிழ்ச்சியும் நிறைந்து இருந்தது.
இனி எல்லாம் சுகமே
முற்றும்.

Last edited: