அத்தியாயம் 2
இங்கே செல்லும் வழியில் எந்த சிந்தனையும் அற்று ஏதோ மரத்துப் போன நிலையிலே அக்ஷய ப்ரியா அமர்ந்திருந்தாள்.
ஆதவ் க்ரிஷின் வீட்டைக் கூட அவள் கவனித்திருக்கவில்லை.
மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருந்த அந்த அரண்மனையின் ஒவ்வொரு துரும்பிலும் பணத்தில் செழுமை..! வீட்டைச் சுற்றி அவன் காவலாளிகள் கறுப்புடையில்...! வீட்டிற்கும் முதன்மை நுழைவாயிலுக்கும் இருக்கும் அவள் வசிக்குமிடத்தின் தெருவளவு தூரம். நெடு பாதையின் இருபுறமும் ஓங்கி வளந்திருக்கும் பண்ணை மரங்கள். சுற்றி பூந்தோட்டத்துடன் தேவலோகம் போல் காட்சியளித்தது அந்த அரண்மனை.
செதுக்கல்களுடன் கூடிய அவனின் வீடோ அவனை ஓர் கலைஞனாக காட்டிக் கொடுத்தது. இவை அனைத்தும் இவன் பார்த்து பார்த்து செய்தான் என்றால் மிகையாகாது.
தன் தாய் தந்தை இறந்த பின்னர் அங்கிருக்க பிரியப்படாதவன் தீக்ஷன் எவ்வளவு கெஞ்சியும் அவ்விடத்தை அநாதை ஆச்சிரமம் ஒன்றுக்கு தானமாக வழங்கி விட்டு கட்டிய தற்காப்புக் கோட்டை தான் இந்த வெள்ளை மாளிகை.
காரின் ஹான் சத்தத்தில் திடுக்கிட்டு களைந்தவள் அப்போது தான் தன்னைச் சுற்றி உள்ளவைகளை கவனித்தாள். அவள் இருக்கும் நிலையில் அந்தச் சூழல் அத்தனை ரசிக்கத்தக்கதாக இருக்கவில்லை என்பது நிதர்சனம். இருந்தும் ஏனோ பயம் வந்து நெஞ்சைக் கவ்விக் கொண்டது.
சிந்தனை மரத்திருந்த மூளை இப்போது தான் அதன் வேலையை கட்சிதமாக ஆரம்பித்தது போலும்.. இதோ தன் கேள்வி கனைகளை தொடுத்து அவள் மீதெறிந்தது..
இவர் யார்...? அதுவே மிகப் பெரிய புதிராக இருந்தது அவளுக்கு.
ஏன் தன்னை மணந்து கொள்ள வேண்டும்..? என்பதை நினைக்கையில் தான் தயாளன் கண் முன் வந்து போனார். ஆம் அவரின் மூலமாக தானே நான் இவரை திருமணம் செய்தேன்.அவரின் உறவுக்காரர்களோ.?இருந்தும் இவர் என்னை விரும்பி அல்லவா பெண் கேட்டு இருப்பதாக கூறினார்.
என்னை எப்படி இவருக்கு தெரியும்..? இப்படி பலவாறு தனக்குள் புலம்பியவளுக்கு விடையோ பூச்சியம்..
யார் கூறுவார் இந்தப் பேதைக்கு யாருக்காகவோ தீட்டப்பட்ட கத்தி முனையில் இவள் சிக்கி இருக்கும் கதையை..?
திடீரென மனதின் ஓரம் சுளீர் என்ற வலி...
அது அவளின் உதிரத்தில் உறைந்திருந்தவனின் நினைவால் வந்த வலி.. மனதளவில் அவனை நேசித்திருந்தவள் தன் நிலையை எண்ணி தன் காதலை சொல்ல மறுத்தாள்.
அவனின் உயரம் இவளுக்கு எட்டாக் கனி. இருந்தும் தன் முதல் காதல் முளையில் கருகி விட்டாலும் இப்படி தன் நிலை வந்து நின்றிருக்கக் கூடாது என உள்ளுக்குள் கதறித் துடித்தவளின் விழிகளில் நீர் திரையிட்டது.
இப்படியாக அவள் சுய ஆய்விலே இருக்கும் போதே அவனின் வீட்டு வாசலும் வந்து விட்டது.
காரிலிருந்து இறங்கிய மீரா அவளின் பக்கம் வந்து தோளை தொட, எங்கே அவள் இவ்வுலகில் இருந்தாள் தானே? மீண்டும் அவர் அவளை உலுக்கவே திருவிழாவிலே தொலைந்து போன குழந்தை போல விழித்தாள். அவரிற்குமே அவளை பார்க்கப் பாவமாகத் தான் இருந்தது.
காரிகையின் தலையை பாசமாக தடவிட்டவரைப் பார்த்து கசந்து புன்னகைக்க முயன்றாள்.
அவள் அறிந்தமட்டில் ஒருவர் இரக்கமாக தழுவும் முதல் தொடுகை இவளை கலங்க வைக்க அந்த பாசத்திற்கு ஏங்கும் குழந்தையும் அழுதது...
அவளின் நிலையை கண்டு பதறிய மீரா "என்னம்மா என்னாச்சு?அப்பா, அம்மா வ மிஸ் பண்ணுறியாடா?" என்று கேட்க ஏற்கனவே யோசனையில் இருந்தவளும் தலையை மேலும் கீழும் ஆட்டிவைத்தாள்.
பின் அனைவரும் உள்ளே செல்ல இவளுக்கு தான் கால்கள் பிண்ணிக் கொண்டன.
இவள் வராமல் நிற்பதை கண்டு அருகில் சென்ற மீரா அவளை அழைக்க அவளும் அவர் இழுப்பிற்கு சென்றாள்.
ஆனால் அவளின் துரதிஷ்டம் அங்கே அவளை வரவேற்கத்தான் யாரும் இருக்கவில்லை.. வாசலுடன் தங்கள் நடை தடைப்பட மீராவை கேள்வியுடன் நோக்கியவளைப் பார்த்து புன்னகைத்தவர் உள்ளே இருந்த மரகதத்தை அழைக்க அவர் அடித்துப் பிடித்து கொண்டு ஓடி வந்தார்.
இவர் இங்கு சமையல் வேலை பார்க்கும் பெண்மணி. ஆதவ்வின் தாய் தந்தை காலத்திலிருந்து அங்கு வேலை செய்பவர் என்பதால் இவரை தன்னுடனே வேலையில் அமர்த்திக் கொண்டான். இவர் மட்டும் தான் இங்கு வேலை செய்வதில் பெண். மீதி அனைவரும் ஆடவர்களே.
வந்தவர் அக்ஷயாவை புரியாமல் பார்க்க..
"இவ தான் இனி உங்கள் எஜமானி இந்த வீட்டு மருமகள்..." என மீரா கூற, அவரின் முகத்தில் இன்ப அதிர்ச்சி அப்பட்டமாய். பின்ன இருக்காதா..!? இவனின் கோபத்தையும் பெண்களின் மீது இருக்கும் அவநம்பிக்கையையும் அறிந்தவர் ஆயிற்றே...
சிறு வயதில் இருந்தே இவனை கவனித்து கொள்பவராயினும் அவனை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் தான் அவருக்கு இருக்கவில்லை. தன் செயல் மூலம் அனைத்தையும் புரிய வைப்பவன் ஒரு வார்த்தை யாரிடமும் பேசுவானில்லை. இவருக்கு இவன் வளர்ந்த முரட்டு குழந்தையாகவே தெரிவான்.
இப்படிப்பட்டவன் திருமணம் முடித்துள்ளான் அதுவும் மகாலட்சுமி மாதிரி பெண்ணை...யாருக்கு தான் அதிர்ச்சியாக இருக்காது..?
இன்முகத்துடன் அக்ஷயாவை வரவேற்றவர் எதிர்காலத்தில் அவளது முகத்தில் சந்தோஷத்தை பார்ப்பாரா??
...
இவளுக்கோ நடுக்காட்டில் தன்னந்தனிமையில் விடப்பட்ட நிலை. தனிமையை அனுபவித்திராவள் இல்லை. பிறந்தது முதல் அவளுடன் கூடவே இருக்கும் உடன்பிறப்பு இந்த தனிமை மட்டும் தானே. இருந்தும் இப்படியான நிலை புதிதல்லவா.. தெரியாத இடம், பழக்கப்படாத முகங்கள், புதிய வாழ்வு இவளை பயமுறுத்தியது.
இவர்களை வரவேற்று விட்டு உள்ளே சென்ற மரகதத்தின் மனக்கண்ணிலோ அவள் விம்பம்..!
சந்தனம் கலந்த வெள்ளை நிறமானவளுக்கோ இயற்கையிலேயே அழகான நேர்த்தியான வில் போன்ற புருவம். சின்ன நெற்றியில் அழகு சேர்க்கும் பூனை முடிகளுக்கு கீழே கூர் நாசி சிறிய மூக்குத்தியுடன். சிவந்த அதரங்களுடன் கூடிய இரட்டை நாடி கொண்டவளுக்கோ இடை தாண்டிய நீண்ட கூந்தல். மொத்தத்தில் ஆண் பெண் இருபாலாரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகுள்ளவளுக்கு வாழ்க்கை தான் அத்தனை அழகாக அமைந்து விடவில்லை.
இப்படிப்பட்டவள் மேலும் துன்பத்தை அனுபவிக்கத் தான் இறைவன் இந்த அரக்கனிடம் அனுப்பி வைத்துள்ளான் போலும்.
சிறிது நேரத்தில் மீரா, சங்கர் தம்பதியுடன் சோபாவில் அமர்ந்து கொண்டவள் மரகதம் அருந்த ஆகாரம் தந்தும் வேண்டாம் என்று மறுத்து விட்டாள். மனதில் நிம்மதி என்பது இருந்தால் தானே உணவு தொண்டைக்குழிக்குள் இறங்க.. பேதையின் நிலை யாரறிவார்..!?
அப்படியே நேரம் கடந்திருக்கையில் மீராவும் தங்கள் இல்லம் சென்றிருக்க இவளுக்குத் தான் துக்கம் தொண்டையை அடைத்தது.
இரவு நெருங்கியும் மேலே செல்லாமல் இருக்கும் வீட்டு மருமகளை யோசனையுடன் பார்த்து விட்டு அவளருகில் வந்த மரகதம் "அம்மாடி என்னத்தா செய்ற இங்கன..?மேல போகலயாம்மா..?" என ஒருமாதிரி கேட்டு விட்டார்.
அவள் புரியாமல் அவரைப் பார்த்து குழந்தை போல் விழிக்க அதில் என்ன தெரிந்ததோ அவரே "கண்ணா என்னடா இப்படி சொல்லுறேனு யோசிச்சிறாதமா..? தம்பிக்கு கொஞ்சம் முன் கோபம் ஜாஸ்தி. நீ தான்மா அனுசரிச்சு போகனும். அவர் வாழ்ந்த வாழ்க்கை அப்படி கண்ணு. நீ தான் நல்லபடியா இந்த குடும்பம் நிலைச்சிருக்க உதவி செய்யனும். போ மா..போ தம்பி அப்பவே வந்து மேல அறைக்குள்ள போய்றாருடா..." என்றார்.
அப்போது தான் அவளுக்கு தன் வாழ்வின் நிதர்சனமே உறைத்தது. அதோ விழவா வேண்டாமா என்றிருந்த கண்ணீரை அருகில் தன் முகத்தையே வேடிக்கை பார்த்து நிற்பவருக்காக கஷ்டப்பட்டு உள்ளிழுத்துக் கொண்டவளுக்கு மரண வேதனை தான்..!
இன்னும் இங்கே நின்றிருந்தால் அவர் கேள்விகள் கேட்டு குடைந்து விடக்கூடும் எனக் கருதி வராத காலைத் தூக்கி வைத்து மெல்லப் படியேறினாள்.
மரகதமும் வேலை முடிந்தது என்று தன் வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டார்.
இங்கே சிங்கத்தின் குகைக்குள் நுழையப் போகும் அவள் நிலை...!?
ஒவ்வொரு படியையும் மனதில் அழுத்தும் பாரத்துடன் கடந்து சென்றவளுக்கு அது முள் வேலி போன்று ரணமாய் வலிக்க வைத்தது என்பது உண்மை. தன்நிலையை எண்ணி அவளுக்குமே கழிவிரக்கம் தோன்றியது. நேரே மரகதம் காட்டி விட்டுச் சென்ற தன்னவன் அறையின் முன் வந்து நின்று கொண்டவளுக்கு உள்ளே போவோமா வேண்டாமா என்ற நிலை..!?
பின் ஒருவாறு கதவில் கை வைக்க அதுவோ தானாக திறந்து கொண்டது. இழுத்து மூச்சை விட்டவள் தலையை மட்டும் நீட்டிப் பார்க்க அது இருந்த கோலம் கண்டு திகைப்பூண்டை மிதித்தாற் போன்று கல்லாய் சமைத்து விட்டாள்.
அப்படி எதைப் பார்த்தாள்..?இதோ இதைத் தான்..
அறையிலுள்ள அனைத்துப் பொருட்களும் தரையில் சுக்கு நூறாக சிதறிக் கிடந்தன. சும்மாவே பயத்தில் கால்கள் கிடுகிடுத்துக் கொண்டிருந்தவளுக்கு இதைப் பார்த்த பின் உடல் வாரித் தூக்கிப் போட்டது. அதிர்ந்தவாக்கிலே தன்னையறியாமல் முன்னோக்கி சென்றிருந்தவள் சுதாரிப்பதற்குள் எங்கிருந்து தான் அந்தப் புயல் வீசியதோ தெரியவில்லை அடுத்த கணம் பெண்ணவளின் சங்குக் கழுத்து ஆடவனின் இறுகிய பிடியில்.
இதனை எதிர்பாராதவள் ஹக்..என்றவாறு பிடியிலிருந்து விடுபடப் போராட அவன் பிடி தளருமா என்ன!?.
பயத்தில் கண்களை இறுக மூடித் துடித்துக் கொண்டிருந்தவள் வலி தாங்கமுடியாமல் கண்ணில் நீர் வடிய விழிகளை திறந்த நொடி அவளது கண்களை அவளாலே நம்ப முடியாத திகைப்பில் இன்னும் கண்களை விரித்து நின்றாள்.
ஆம் அவனே தான். யாரை தன் இதயத்தில் சிறைப் பிடித்து வைத்திருந்தாளோ அவனே தான்..! யாருக்காக தன் காதலை சொல்லாமல் மூடி மறைத்தாளோ அவனே தான்! யார் இனி தனக்கில்லை என்று கண்ணீர் வடித்தாளோ அந்த அழகிய ராட்சசன் தான் அவள் முன் நின்றிருந்தான். காதலுடன் பார்க்க வேண்டிய அவன் பார்வை அனலை கக்கிக் கொண்டிருந்தது தான் இங்கே காதலின் நியதி.
எதிர்பாராமல் கிடைத்த ஆனந்த அதிர்ச்சியில் இவனின் பிடி கூட சுகமாகிப் போனதுவோ கழுத்தை அவனிடம் நீட்டி விட்டு அசையாமல் நின்றிருந்தாள்.
இவனின் நிலையோ அதை விட படுமோசமாக இருந்தது. இந்தக் கண்கள் அவனுக்கு ஏதோ ஒன்றை உணர்த்துவது போல் இருக்க அதிலிருந்து வடிந்த கண்ணீரை காணச் சகிக்காதவன் அவளிடமிருந்து எதிர்வினையும் வராமல் போக பெண்ணவளை உதறித் தள்ளி விட்டான்.
அவனின் வேகத்தில் பிடிமானமில்லாமல் விழுந்தவளின் தளிர் கரத்தை பதம் பார்த்திருந்தது கண்ணாடித் துண்டொன்று.
ஸ்ஸ் ஆஆஆஆ என்று முனங்கியவளை ஒரு நிமிடம் அந்த ஒரு நிமிடம் பரிதவிப்புடன் திரும்பிப் பார்த்தவன் அடுத்த கணம் மிருகமாய் மாறி இருந்தான்.
அவளின் பட்டுக் கூந்தலை தன் கரத்தால் வலிக்கப் பற்றியவன் அவளின் உதிரத்தைக் குடிக்கவே வெறி கொண்டான். அப்படியே அவளை சுவரில் தள்ளி விட்டவன் மறுகையால் கன்னத்தை அழுந்தப் பிடிக்க வலியில் கதறியது ஓர் மென்னிதயம்.
அவளின் அழுகையைப் பார்க்கப் பார்க்க அவனின் வெறி கூடியதே தவிர குறைந்த பாடில்லை. இன்னும் கன்னத்தில் அழுத்தத்தை கூட்ட மூச்சு விட சிரமப்பட்டவளாக "ப்..ப்ளீஸ் வ..வலிக்குது விடுங்க..." என்றெல்லாம் அவன் செவியைத் தீண்டவில்லை போலும்.
"ஏய்...இதுவரைக்கும் என் பெட்ரூமுக்குள்ள நான் யாரையும் அலோ பண்ணுனதே இல்லை. அப்படி இருக்க என்ன தைரியத்துலடி என் பர்மிஷன் இல்லாம உள்ள வந்த..."
அவள் பிடியிலிருந்து விடுபடப் போராட
"யாரு உன் அப்பன் சொல்லிக் கொடுத்தானோ போய் மயக்குனு...?" என்றவனின் கண்கள் சினத்தில் சிவந்திருந்தன. அதனைப் பார்க்க இன்னும் பயங்கரமாய் தெரிந்தான் அவனவள் கண்ணிற்கு.
கண்ணீர் மல்க அவனை நிமிர்ந்து பார்த்தவளைப் பார்த்து பாவம் கொள்ள அவன் ஒன்றும் அவளை விரும்பி மணந்து கொள்ளவில்லையே..
"என்னடி பார்க்குற..? என் கிட்டையே உன் நடிப்ப காமிக்கிறியா.. பெத்தவ மாதிரி தானடி நீயும் இருப்ப..." என்று சொன்ன மாத்திரமே வெறி பிடித்தவன் போல "கெட் லொஸ் இடியட்" என வெளியே தள்ளி அறைக்கதவை அறைந்து சாற்றி இருந்தான் வேங்கை.
தொடரும்...
தீரா.