• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன்னால் உயிர்த்தேன் - 04

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
அத்தியாயம் 04

அவளை வார்த்தைகளால் காயப்படுத்தி விட்டு வெளியேறியவன் தன் காரை அசுர வேகத்தில் செலுத்திக் கொண்டு வந்து நிறுத்திய இடமோ அந்தப் பெரிய தன் கம்பனி முன் தான். ஏ.கே குரூப்ஸ் ஒஃப் கம்பனி என தங்க நிறத்தால் பதிக்கப்பட்டிருந்தது.

கட்டுக்கடங்காத கோபத்துடன் திடீரென உள்ளே நுழைந்தவனைப் பார்த்து அனைவரும் பயத்தில் எழுந்து நின்றனர். தன் வேக எட்டுக்களுடன் தனதறை வந்து சேர்ந்தவனுக்கோ உடலும் மனமும் ஓயாமல் கொதித்துக் கொண்டிருந்தது.

வழமை போல பிடரியைக் கோதி தன்னை சமப்படுத்த முயற்சித்தவனுக்கோ அது முடியாமல் போய்விட தாடை இறுக அங்குமிங்கும் சிங்கமென நடை பயின்றவனின் மனதிலோ காலையில் ஆபிஸ் வரும் போதிருந்த நிலை ஓடிக் கொண்டிருந்தது.

காலையில் எழுந்து வெளியே வந்தவன் மெய்யாகவே அவளை இப்படியொரு நிலையில் எதிர்பார்த்திருக்கவில்லை. அவளை பழிவாங்கவே திருமணம் செய்து கொண்டான் எனினும் அவளின் கசங்கிய முகத்தைக் காண அவனுக்கு சகிக்கவில்லை தான் போலும். ஒவ்வொரு தடவையும் அவளை வலிக்க செய்துவிட்டு அவனும் கஷ்டப்படுகிறானோ..!?

அவனே அதனை அறிய முற்படாத போது நாம் என்ன செய்துவிட முடியும்..!?

அவளை வருத்தாதே என ஒரு மனமும் தனக்கு இந்நிலையைத் தந்தவர்கள் சந்தோஷமாக இருப்பதா? என இன்னொரு மனமும் வாதிட இறுதியில் பழிவாங்கும் மனம் வெற்றி கொள்ளவே அவன் அவளை வதைப்பது. இது அனைத்துக்கும் சேர்த்து அவன் ஒட்டுமொத்தமாக உடையப் போகிறான் என பாவம் அவன் அறிந்திருக்கவில்லை.

வழி முழுவதும் தன் மனைவி கிடந்த நிலையே கண்முன் வந்து இம்சிக்க ஆபிஸ் வந்தும் அவனுக்கு இருப்புக்கொள்ளவில்லை.

அவனின் சிந்தனை முழுவதும் அவனவள் வியாபித்து இருந்தாள். முதன் முறையாக பிறரைப் பற்றி சிந்திக்கும் அவன்..!
இதனை அப்பொழுதே ஒரு தடவை ஆழமாக சிந்தித்திருந்தால் பிற்காலத்தில் வர இருக்கும் பிரச்சினைகளை தடுத்திருப்பானோ...!?

பழிவாங்கும் வெறி இரத்தத்தில் ஊறி இருந்தவனுக்கு தன் ஆழமனம் புரியாமலே போய்விட்டது. அவனை அவனறியும் போது அவளின் நிலை...??

பொதுவாக இவன் தன் தனிமையைப் போக்க எடுத்துக் கொள்ளும் ஆயுதம் வேலை. மொத்த வேலையையும் முழு மூச்சாக செய்பவன் யாரையும் பற்றி சிந்திக்க மாட்டான். சிந்திக்க யாரும் இருந்தால் தானே..!

இன்று வந்த அவளின் சிந்தனையை ஒதுக்கி வைக்க அவனால் முடியவில்லை. தன்னையே ஏமாற்றியவனாக தேவையில்லாத கோப்புவை எடுப்பதாக சாட்டு வைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்து விட்டான்.

வந்தவனின் கண்ணில் பட்டது தான் அக்ஷயா சாப்பிட மறுப்பதும் மரகதம் அதட்டி பரிமாறியதும். சிறுவயதில் தாய் தந்தையை இழந்தவன் பாசத்துக்கா ஏங்கினான் என்று தான் கூற வேண்டும். இன்று இவர்களைப் பார்த்ததும் அந்தப் பாசம் தவிப்பாக மாறி இருக்க அவர்களை ஓரிரு கணம் ஏக்கமாக அவன் பார்த்ததை யாரும் அறியார்..

தன்னைப் பெற்றவர்களின் ஞாபகத்தால் இறுகி நின்றிருந்தவன் அவர்களை இழக்க நேரிட்ட துர்பாக்கியத்தையும் சேர்த்தே நினைக்க அவன் மனக்கண்ணில் வந்ததோ தயாளன்...

எங்கிருந்து தான் அத்தனை கோபம் வந்ததோ தெரியவில்லை அவரின் சந்தோஷத்தை கலைக்க நினைத்து தன்னவளை வதைத்து தன் காதலுக்கு அவனே ஆப்பு வைத்துக் கொண்டான்.

அதை நினைத்தவன் நாடி நரம்புகள் புடைத்துத் தெறிக்க "விக்ரம்ம்ம்...." என்று கத்திய கத்தில் ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்த விக்ரம் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வந்தான்.

வந்தவனுக்கு ஆதவ் நின்றிருந்த தோரணை கண்டு பயத்தில் வியர்த்துக் கொட்ட இதயமோ கீழே விழுந்து விடுமளவு தாறுமாறாக துடித்தது. "சா...சார் எனிதிங் சீ..சீரியஸ்..?" என எச்சில் கூட்டி விழுங்கியவனை பார்வையால் பஸ்பமாக்க, அந்த ஒற்றைப் பார்வையில் ஆண்மகன் அவனே நடுங்கி விட

"நான் சொன்ன மேட்டர் என்னாச்சு...? " என்றான்.

"எ..எல்லா வேர்க்கும் முடிஞ்சு சார்..."

"ம்ம் கீப் வொட்சிங் ஹிம். அவன் என் கண்ண விட்டு எங்கேயும் போகக்கூடாது..." என உறுமினான்.

அங்கே விக்ரமின் நிலை தான் பரிதாபம்..!

"எ..எஸ் சார்..." என்றவன் அங்கேயே நின்றுகொண்டான்.

ஏதோ யோசனையில் நின்றிருந்த ஆதவ், விக்ரம் போகாமல் இருப்பது கண்டு புருவம் உயர்த்தி என்னவென கேட்க

"நீ..நீங்க போக சொல்ல..." என வார்த்தையை முடிக்கும் முன்பே "கெட் லொஸ்...." என சத்தம் போட்டிருந்தான் ஆதவ்.

தப்பித்தோம் பிழைத்தோம் என வெளியே ஓடி வந்தவன் பெருமூச்சுகளை இழுத்து விட்டவாறு..."அம்மாடியோ என்ன முறைப்புடா சாமி.." என்றவன் மீண்டும் "டேய் விக்ரா இப்படியே நின்னேனு வை சிங்கத்துட கையால நசிபட்டு சாவ..ஓடிடு..." என தனக்குத் தானே கவுண்டர் கொடுத்துக் கொண்டு அவ்விடத்தை காலி செய்தான். ஹா..ஹா. அவன் நிலை அவனுக்கு.


...


அங்கே சென்னையில் திருப்போரூர் எனும் ஊரிலே அம்மு என்றழைக்கப்படுவள் வசிக்கிறாள்.

வீட்டில் பணம் கொட்டிக் கிடந்தாலும் சந்தோஷம் தான் எட்டாக் கனியாக இருந்தது அந்தக் குடும்பத்திற்கு. அவளும் அவளது தாய் தந்தையும் அந்தக் குடும்பத்தில் இருக்கின்றனர். இருபத்து மூன்று வயதுடையவளுக்கோ அழகான முக வாக்கு. பார்க்க மங்கலகரமாக இருப்பாள். முகத்தில் எப்போதும் ஓர் குறும்புப் புன்னகை ஒட்டி இருக்கும். அப்பா அம்மாவிற்கு செல்லமாக வளந்தவளோ சுட்டிப் பெண்ணாகிப் போனாள்.

இவளின் தந்தை ஒரு தனியார் கம்பனியின் சொந்தக்காரர். நாடு பூராகவும் பேசப்பட்டு வரும் தொழிலதிபர். இருந்தும் வாழ்வின் மறுபக்கத்தை தொலைத்து விட்டு வாழ்கின்றார். அதுவே அவர்களின் நிம்மதியை பறித்திருக்க இருதய நோயாளியாக இருப்பவர் அவரின் மனைவி தான்.


...


வேலைப்பளு காரணமாக அதிலே மூழ்கிப் போய் இருந்த ஆதவ், இரவு சற்று தாமதமாகவே வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தான்.

காவலாளி வாயிலைத் திறந்து விட பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்திவிட்டு வீட்டினுள் நுழைய அவனுக்காக காத்திருந்தார் மரகதம். வந்தவனை தயக்கத்துடன் அவர் ஏறிட படிகளை இரண்டிரண்டாக தாவி ஏறியவன் ஏதோ உந்த திரும்பிப் பார்த்தான். அங்கே மரகதம் ஏதோ சொல்ல வருவதும் நிறுத்துவதுமாக இருப்பதை கவனித்தவன் என்ன நினைத்தானோ "அவ சாப்புட்டாளா..?" என்று மட்டும் தான் கேட்டான்.

அதற்காகவே காத்திருந்தவர் போல "இல்லங்க தம்பி. நீங்க வந்துட்டு போனதும் மேல வந்தவங்க தான். இன்னும் கீழ வரல..." என ஒருவாறு கூறி முடித்தார்.

அவர் கூற்றில் மனதில் அவளை வறுத்தெடுத்தவன் மரகதத்திடம் கண் காட்ட அவரும் சென்று விட்டார். அவனும் மேலே வந்து சினத்துடன் அவளது அறைக்கதவை அறைந்து திறக்க அதுவோ தானாக திறந்து கொண்டது.

"உனக்கு அவ்ளோ திமிராடி..." என மனதில் தாளித்துக் கொட்டியவனாக உள்ளே வந்தவனை வரவேற்றதோ வெற்று அறை.

அறை முழுவதும் பார்வையை சுழற்றியவனின் கண்கள் ஓரிடத்தில் அதிர்ச்சியுடன் நிலைக்குத்தி நின்றது..



***


காலையில் அவன் சம்பந்தமில்லாமல் சத்தம் போட்டு விட்டு சென்ற பின் சுயத்தையடையவே இவளுக்கு சில நொடிகள் தேவைப்பட்டன.

சுய நினைவிற்கு வந்தவளோ கண்ணீரிலே கரைந்தாள். யாரிடமும் தன் நிலையை சொல்லவும் முடியாமல் தன்னுள்ளே வைத்தே மெல்லவும் முடியாமல் தரையில் அமர்ந்திருந்தவளுக்கு விதியோ இன்னும் பல துன்பங்களை வைத்துக்கொண்டு காத்திருந்தது.

தன்னைச் சுற்றி என்ன தான் நடக்கிறது என தெரியாமல் பித்துப் பிடித்தது போன்ற நிலை அவளது..

என்னைப் பற்றி முழுவதும் தெரிந்து தான் மணந்து கொண்டாரா..? யாரோ ஒருவரைப் பற்றி அடிக்கடி பேசுவாரே. அவர் யார்..? என்னை எதற்காக பழிவாங்க வேண்டும்..? எனக்கே நான் யாரென்று தெரியாதிருக்கும் போது இவர் எதற்கு என்னைப் பழிவாங்க வேண்டும்..? நான் எந்த விதத்தில் இவருக்கு அநியாயம் செய்திருந்தேன்..? என்று யோசித்து யோசித்து குழம்பியவளின் விழிகளிலோ கண்ணீர் குளம் கட்டி இருந்தது. மனமெல்லாம் புண்ணாகியது.

ஏதோ ஜெயில் கைதியாகி விட்ட நிலை அவளது..!

இப்படி தன்னைச் சுற்றி சிந்தித்துக் கொண்டிருந்தவளுக்கு இருட்டிய கூட விளங்கவில்லை. ஓரிடத்தையே வெறித்துக் கொண்டிருந்தாள். நேற்று சாப்பிட்ட பின் தண்ணீர் கூட அருந்தாமல் இருந்தவளுக்கு இரவு நெருங்க நெருங்கவே அதன் தாக்கம் வேலை செய்திருக்க கண்கள் சொருகி மயங்கி சரிந்தாள்.

...


மேலே வந்தவன் கண்ட காட்சியில் அப்படியே அசையாது நின்று விட்டான்.

அவன் தாலி கட்டியவளோ ஒன்றும் அறியாதவளாய் கட்டிலுக்கு அருகில் அநாதையாக மடங்கி சரிந்து கிடந்தாள்.

இவனுக்குள்ளோ திடீரென ஒரு பரபரப்பு. நெஞ்சின் ஓரம் வலி. எதையும் தெளிவாக சிந்திக்கும் நிலையில் அவனிருக்கவில்லை. அவனே அக்ஷய ப்ரியாவின் மனதை கொள்ளையிட்டிருந்தவன்.

மயங்கிக் கிடந்தவளைப் பார்க்கப் பார்க்க அவனின் தாயின் முகமே அவன் நினைவில் வந்து போனது. கண்களை இறுக மூடித் திறந்தவனின் மனம் கணத்திருந்தது.

கண்கள் சிவக்க அவளை வெறித்தவன் அடுத்த கணம் அறையை விட்டு வெளியேறி இருந்தான். (சண்டாளிப் பயலே..)



தொடரும்...



தீரா.