அத்தியாயம் 08
விக்ரமோ அவளை வெறியுடன் பார்த்து "சிரிக்கிறத பாரு சில்லறையை சிதற விட்டமாதிரி..." என முனுமுனுக்க அது கேட்க வேண்டியவளின் செவியில் நன்றாக விழுந்து விட்டது.
அவனை மேலும் கீழும் பார்த்த அம்மு "பார்க்க ஏதோ வளரத் தெரியாம வளந்தவன் மாதிரி இருந்துட்டு நீ என்னைய கிண்டல் பண்ணுறியா..?" எனச் சிரிக்க "என்னடி லந்தா.. நீயுந்தான் பூசணிக்காய்க்கு கை, கால் முளைச்ச மாதிரி இருக்க. அடிச்சனு வை பல்லு பேரும்..." என்றவன் கடுப்பாகி கையை ஓங்க அவளோ உண்மையாகவே அடிக்கப் போகிறானோ எனப் பயந்து பின் வாங்கினாள். அதில் இப்போது விக்ரமின் வாய் சிரிப்பில் விரிந்தது.
ஃபோமுக்கு வந்தவள் இடுப்பில் கைகுற்றி முறைக்க சிரிப்பை நிறுத்தியவன் "என்ன ராட்சசி..!! இவ்வளவு தான் உன் கெத்தா...?" என்றான். ஏனோ அவளிடம் வாயடிப்பது அவனுக்கு பிடித்துப் போனது. அவளுக்கும் அதே நிலையே.
எவ்வளவு முயற்சி செய்தும் அவனையே அவனுக்கு கட்டுப்படுத்த முடியாமல் சிரித்து விட ஏகத்துக்கும் கடுப்பான அம்முவோ அவனது கழுத்தை நெறிக்க கை கொண்டு போக "ஏய்ய் ராட்சசி விட்டுடுடி.. இன்னும் கல்யாணம் கூட ஆகல..." என அவன் அலறியே விட்டான். அதில் முறைக்க நினைத்து தோற்றுப் போய் பீறிட்டு வந்த சிரிப்பை அடக்க முடியாமல் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அவளும் சிரித்தாள். அவளது சிரிப்பில் இவனின் உதடுகளிலும் சாந்தமான புன்னகை..!!
பின்னரே தாங்கள் இருப்பது நடுவீதி என்பது புரிய அவளை இழுத்துக் கொண்டு அருகிலுள்ள பார்க்கினுள் நுழைந்து கொண்டான்.
இவன் திரும்பிப் பார்க்க அவளோ அவனை முறைத்துப் பார்த்தாள்.
"இவ எதுக்கு முறைக்கிறா..?" என திருதிருத்தவன் அப்போது தான் அவளது பார்வை சென்ற இடத்தைப் பார்த்தான்.
தன் கை அவளது கரத்தை பற்றி இருக்க சட்டென விட்டவன் "சா..சாரி.." என்கவும் "ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்காதிங்க மிஸ்டர்..." என்றவளின் பேச்சில் ஏதோ போலுணர்ந்தவன் தலையை கோதி விட்டு "சாரி..." என குனிய, உதடு மடித்து சிரித்தவள் "சும்மா தான் கலாய்ச்சுப் பார்த்தேன்.. ம்ம் பரவாயில்லை ஜென்ட்மேனா தான் இருக்க.." என உதட்டை வளைத்தவளை புரியாமல் பார்த்தவனிடம் "இந்தக் காலத்துல எத்தனையோ பேர் செஞ்ச தவற ஏத்துக்காம கண்டும் காணம போற இடத்துல நீ உணர்ந்து சாரி கேட்ட பார்த்தியா அங்க இருக்க நீ..." என்றவளின் பதிலில் கோணலாக சிரித்து வைத்தான்.
பின் நினைவு வந்தவளாக "ஆமா உன் பேரென்ன..?" என விடயத்துக்கு தாவியவளிடம் இவ்வளவு நேரமும் நடந்ததை மறந்தவனாக "இப்போவாச்சும் கேட்க தோனுச்சே..." என்று அதற்கும் கடுப்படித்தான்.
"கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா நெட்ட கொக்கு..." என்றவளின் காதைத் திருகப் போனவன் "காதைப் பிடிக்கலாம்ல..?" என அவள் அப்போது கூறிய ஓவர் அட்வான்டேஜை நினைவு வைத்தவனாக கேலியாய் கேட்க, சங்கடமாய் பார்த்தவள் "அ..அது சும்மா சொன்னேன்..நீ ஒன்னும் மனசுல வச்சுக்காத..." என சிறுபிள்ளையாய் சுணங்கியவளின் மூக்கைப் பிடித்து ஆட்டிவன் "யு ஆர் கரெக்ட். தெரியாத பையன், கைய பிடிச்சா யாரா இருந்தாலும் அப்படித் தான் சொல்லுவாங்க. எக்சுவலி நான் தான் ஓவர் ரியெக்ட் பண்ணிடேன..." என்றான்.
அவன் உணர்ந்து பேசுவதும் தன்மையான பேச்சும் அவளை வெகுவாக கவர்ந்திருக்க வாயாடியோ அவனுடன் சட்டென ஒட்டிக் கொண்டாள்.
"சரி சரி லெந்தா பேசுனது போதும். பதில சொல்லு..." என்று நிலைமையை சகஜமாக்கியவளிடம் குரலை செருமி "விக்ரம்..." என்றான்.
"எங்கேயோ கேள்வி பட்டிருக்கிறனே உன் பேர..ஆமா என்ன வேலை பார்க்குற..?"
"ஏ.கே கம்பனியோட பி.ஏ.." என்றான்.
"வாட்...?" என்று அதிர்ந்தவளிடம் "என்னாச்சு..?" என புரியாமல் கேட்டான் விக்ரம்.
நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவளின் அருகில் போய் "ஏய் என்னாச்சு...?" என்ற விக்ரம்,உண்மையாகவே அவளிருந்த போசில் பயந்து போனான்.
அவனை விழி விரித்து பார்த்தவள் "டேய் என்னடா சொல்லுற...?"என்கவும் "ஏய் மொதல்ல மரியாதை தந்து பேசுடி..உனக்கு அண்ணன் வயசுல இருக்குற என்னை வாடா போடானு பேசுற நீ..." என வம்புக்கே அவன் கூறி இருக்க அவளோ அதிர்ந்தவளாக "அதென்னவோ உண்மை தான் சார்.. எம்மாம் பெரிய போஸ்ட்ல இருந்துட்டு இவ்ளோ சாதாரணமா சொல்லுறீங்க சார்..." என வாயில் கை வைத்தவளின் பேச்சில் தலையில் அடித்துக் கொண்டவன் "இதுக்குத் தான் வாயை அண்டா மாதிரி விரிச்சிட்டு இருக்கியா..?" என்றவனிடம் கண்சிமிட்டி ஆமோதித்தாள்.
அவளது செய்கைகளை ரசித்துப் பார்த்த விக்ரமோ அவளருகில் அமர அவள் சட்டென எழுந்து கொண்டாள். "மறுபடியும் என்னாச்சுடி..?" என்றவனைப் பார்த்து பாவமாக விழித்தவள் "நீங்க எவ்ளோ பெரிய ஆள். என் பக்கதுல உட்காரலாமா சார்.." என்றவளுக்கு நான்கடி மண்டையில் போட்டாள் என்ன என்று தான் தோன்றியது.
"மொதல்ல சார்னு பேசுறத நிறுத்து. கேட்கவே நாராசமா இருக்கு..." என காதைக் குடைந்தான்.
அம்முவோ அம்மாஞ்சி மாதிரி அவனருகில் சென்று "அப்படிங்களா சார் இருக்கு...?" என அவனை மேலும் கடுப்படித்தாள்.
"அடி வாங்க போறடி நீ..." என்றவன் முகத்தைத் திருப்ப தன் விளையாட்டை விட்டுவிட்டு அவனருகில் சென்று அமர்ந்து "நம்ம ஆதவ் சார் கம்பனிலயா வேர்க் பண்ணுற..?" என்றாள்.
திரும்பி அவளை முறைத்தவன் ஆம் என தலையாட்ட குஷியாகிப் போனாள் பேதை.
"எதுக்கு இப்படி பல்ல காட்டுறேனு தெரிஞ்சுக்கலாமா..?" என்ற விக்ரமிடம் "ம்ம் தெரிஞ்சுக்கலாமே.." என்றவள் மேலும் பல்லை இளித்தாள்.
"இப்படியே இளிச்சிட்டு இரு நான் கெளம்புறேன்..." என்றவன் எழ எத்தணிக்க அவசரமாக அவனது கையைப் பிடித்து தடுத்தவள் "சரி சரி உட்காரு சொல்றேன்.." என்றாள்.
ம்ம் என்றவன் அமர "யு நோ வன் திங். ஹீ இஸ் மை க்ரஷ்..." என சொல்லி விட்டு நாக்கைக் துருத்தியவளின் பதிலில் வாயில் கை வைத்தவன் "இல்லென்டா தான் அதிசயம்..." என சாதாரணமாக கூறி இருந்தான்.
அவனின் செய்கைக்கும் பேச்சுக்கும் சம்பந்தம் இல்லாமல் அமர்ந்திருந்தவனை குழம்பிப் போய் பார்த்தவளிடம் "அவர் உனக்கு மட்டுமில்ல எங்க ஆபிஸ்ல இருக்க அத்தனை பொண்ணுங்களுக்கும் க்ரஷ் தான்..." என்றவனைப் பார்த்து சிரித்து விட்டு அவனது சோக முகத்தைப் பார்த்து "உனக்கு பொறாமையா என்ன..?" என்றாள்.
"வேற...? நம்ம போய் லவ் ப்ரொப்போஸ் பண்ணினா, நோ நோ நோ ஐ ஹேவ் அ க்ரஷ் ஒன் க்ரிஷ் சார்னு போய்றாளுங்க.." என்று கவலையில் கூறிவிட்டு அமர்ந்தவனை கலாய்த்து தள்ளி விட்டாள்.
பெருமூச்சு விட்டவன் "ஆமா உன்ன பத்தி ஒன்னும் சொல்லவேயில்லையே.." என்று கேட்டவனிடம் அதே பெருமூச்சுடன் "சொல்லுறதுக்கு என்ன இருக்கு. இப்போ தான் காலேஜ் முடிச்சிருக்கேன். அப்பா என்னடான்னா அந்தப் பெரிய கம்பனிய என் தலைல கட்டிட்டு அவர் ஜாலியா இருக்க ப்ளேன் பண்ணுறார். நான் முடியாதுனு சொல்லிட்டு ஊர் சுத்திட்டு இருக்கேன்.." என்றவளின் சோகக் கதையில் புன்னகைத்தவன் "ஆமா உன் அப்பா யாரு...?" என்றான்.
அவள் ஒருவரின் பெயரை குறிப்பிட்டுச் சொல்ல இம்முறை அதிர்வது அவன் முறையாகிப் போனது.
பின்ன அவரைப் பற்றித் தான் நன்கு தெரியுமே இவனிற்கு. அவளது தந்தையும் இவர்களும் எப்படியும் வாரத்தில் இரண்டு முறை சந்தித்து விடுவர். தொழில்துறையில் அவருக்கென்று நல்ல பெயரொன்று இருக்கிறதல்லவா.
இப்படியாக இருவரும் பேசி தங்களுக்கு இணக்கமாகிக் கொண்டனர். அவன் ஆதவ் க்ரிஷின் பி.ஏ என்பதே அவளுக்கு போதுமானதாக இருந்தது. தந்தையின் மூலம் அவனைப் பற்றி அக்கு வேர் ஆணி வேராக அறிந்து வைத்திருந்தாள். அப்படிப்பட்டவனின் பி.ஏ என்றால் எத்தனை நம்பிக்கைக்குரியவனாக இருக்க வேண்டும். அப்படி அவள் நினைத்திருக்க இவனோ இன்னாரின் மகள் தான் இவள் என தெரிந்த பின்பு அவனும் அவளுடன் இலகுவாக நட்புக் கொண்டான்.
இப்படியே பேசிக் கொண்டிருக்கும் போது தான் விக்ரமிற்கு ஆபிஸின் நினைவே வந்தது. இன்று முக்கியமான மீட்டிங் ஒன்றிற்கான கோப்பு அவன் கையில்...!!அதனை சப்மிட் பண்ணவே அறக்கப்பறக்க வேகமாக வண்டி ஓட்டிக் கொண்டு வந்தவன் இவளிடம் சிக்கியது.
நினைவு வந்தவனாக சட்டென எழுந்து ஓடப் போனவனிடம் "டேய் எங்கடா போற...?" என்று சத்தமிட்டாள்.
அவனோ வேகமாக நடந்து கொண்டே இவளைத் திரும்பிப் பார்த்து "நான் ஒன்னும் சும்மா இருக்க உன்ன மாதிரி வெட்டிப் பையன் இல்லை. இந்த ஃபைல நேரத்துக்கு கொண்டு போய் ஆதவ் சார்கிட்ட கொடுக்கைல..? கைமா தான்..." என்று விட்டு பறந்து விட்டான்.
"எரும மாடே என்ன வெட்டிப் பொண்ணு சொல்றியாடா...? திரும்பி வா சாவடிக்கிறேன்..." என்றவளின் திட்டலில் "பார்க்கலாம்..பார்க்கலாம்..." என்று சிரித்துக் கொண்டே மறைந்தான்.
...
அன்று காலையில், எழுந்து உடற்பயிற்சி செய்தவன் குளித்து ரெடியாகி அவசர அவசரமாக ஆபிஸ் சென்று விட்டான்.
அங்கே விக்ரம் அனைத்து ஏற்பாட்டையும் செய்து விட்டு ஆதவின் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தான்.
அவன் சிங்கமென மீட்டிங் ஏற்பாடு செய்திருந்த அறையினுள் நுழைய இவ்வளவு நேரமும் இருந்த சலசலப்பு நீங்கி ஓர் நிசப்தம் நிலவியது...
வந்தவன் மறுபேச்சின்றி நேரே விடயத்திற்கு தாவியிருந்தான். அனைத்து தொழிலதிபர்களும் அவன் பேச்சிற்கு அமைசியாய் செவி தாழ்த்தி இருந்தனர். அவனது வயதையும் மீறி அவனின் பேச்சில் எப்போதும் ஓர் ஆளுமையும் முதிர்ச்சியும் இருக்கும். அதனாலே அங்கிருப்பவர்கள் வயதானவர்கள் என்றாலும் அவனிடம் மரியாதையாகவே நடந்து கொள்வார்கள்.
புது டெண்டர் ஒன்று அவனுக்கு கிடைத்திருக்க அது குறித்தும், அன்று கை மீறிப் போன டெண்டர் குறித்த விசாரணைக்காகவும் இந்த மீட்டிங்கை அவன் ஏற்பாடு செய்திருந்தான்.
அவனைப் பொறுத்தவரை அன்றைய தவறு தன் மனைவியால் வந்தது என நம்பினான். ஆனால் அது உண்மை இல்லையே. அவனுக்கு அது போனால் மற்றொன்று என்ற மனநிலை. ஏனென்றால் அவனிடம் திறமை நிறையவே இருக்கிறது. இருந்தும் அவளால் எப்படி தன்னை ஏமாற்ற முடிந்தது என்ற நினைப்பிலே அவளிடம் அப்படி மிருகத்தனமாய் நடந்து கொண்டான்.
பின்னர் மீட்டிங் முடிவுக்கு வரவே அனைவரும் அவனை வாழ்த்தி விட்டு தத்தம் வேலைகளில் மூழ்கி விட்டனர்.
...
ஏ.கே குரூப்ஸ் தனியார் மருத்துவமனை என அழகாக பொன் எழுத்தக்களில் பொதிக்கப்பட்டிருந்த அந்தப் பெரிய மருத்துவமனை பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. ஆம் ஆதவினுடைய உழைப்பால் உருவாக்கப்பட்ட மருத்துவமனை. தற்போது அவனின் உயிர் நண்பனான தீக்ஷனின் தலைமைப் பொறுப்பின் கீழ் உள்ளது.
ஏதோ தற்கொலை கேஸ் போலும். ருத்ரனும் அங்கே தான் இருந்தான். தன் கட்டுக்கடங்காத கோபத்தை சுவரில் காட்டிக் கொண்டிருந்தான்.
அந்தப் பக்கம் எதேச்சையாக வந்த தீக்ஷனின் கண்ணில் இந்தக் காட்சி பட அவசரமாக ருத்ரனின் அருகில் வந்தவன் அவனை பிடித்து திருப்ப முயற்சிக்க ம்ஹூம் அவன் அசைந்தபாடில்லை. மீண்டும் மீண்டும் சுவரில் குத்த ஒரு கட்டத்துக்கு மேல் கை சதை கிழிந்து இரத்தம் பீறிட்டது.
இதனை எதிர்பாராத தீக்ஷன் அதிர்ந்து அவனை தன் பலம் கொண்ட மட்டும் திருப்பி கோபத்தில் கை ஓங்கி இருந்தான். பின் சுற்றுப் புறத்தைக் கருத்தில் கொண்டு தன் கை முஷ்டியை மடக்கி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன் ருத்ரனை இழுத்துக் கொண்டே தனதறைக்குள் நுழைந்தான்.
உள்ளே வந்தவன் பற்களை நறநறுத்து திட்டிக் கொண்டே காயத்திற்கு கட்டுப் போட,மாறாக ருத்ரனின் வாயோ ஓயாமல் கெட்ட வார்த்தைகளை கொட்டிக் கொண்டிருந்தது.
அவனை உற்று நோக்கிய தீக்ஷன் அவனது முகவாயைப் பற்றி ஊசியொன்றைக் காட்டி "நாயே இப்படியே திட்டிட்டு இருந்த ஏத்திருவேன் இதை..."என்று முறைத்தான். அவனையும் அவனது கையையும் மாறி மாறி பார்த்த ருத்ரன் கையைத் தட்டி விட்டான்.
அவனது கோபம் எதற்கானது என புரியாவிட்டாலும் இப்போது ருத்ரன் அமைதியாக உற்றென இருப்பதில் மீசை துடிக்க சிரித்தவன் தனது இடத்தில் வந்து அமர்ந்து "இப்போ சொல்லு. ஏன் முட்டாள் மாதிரி அத்தனை பேர் முன்னாடியும் அப்படி நடந்துக்கிட்ட...?" என்று கேட்டவனை பார்த்தானே தவிர ஓர் வார்த்தை உதிர்க்கவில்லை. அதில் எரிச்சலுற்ற தீக்ஷன் "இடியட் சொல்லித் தொலைடா..." என்றவே ஏன்டா இவனிடம் இந்தக் கேள்வியை கேட்டோம் என்றும் நொந்து கொண்டான்.
அந்தளவுக்கு ருத்ரனின் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன.
தாங்கமாட்டாது காதைப் பொத்தியவன் "ஏய் ச்சீ வாயை கழுவு.. எரும, சாக்கடை மாதிரி திட்டுற..." என்றவனின் முகபாவனையில் கஷ்டப்பட்டு சிரித்த ருத்ரன் விடயத்தை ஒப்புவித்தான்.
"இடியட் அறிவில்லையாடா அந்த ** க்கு. அவ வேண்டாம்னு சொன்னாளாம் இவரு கோழை மாதிரி சாகப் பார்த்தாராம். என் வாயில நல்லா வருது..." என பற்களைக் கடித்தவனிடம் "ம்கும் இப்போ மட்டும் என்ன, நல்ல வார்த்தையா வருது...?" என முகத்தை சுளித்த தீக்ஷனின் மீது பேனையொன்றை எடுத்து எறிந்தான்.
அதை லாவாகப் பற்றியவன் "சரி அதுக்கு நீ ஏன் லூசு மாதிரி இந்த வேலை பார்த்த?" என அவனது கட்டுப் போட்டிருந்த கையை சுட்டிக் காட்டினான்.
அதனைப் பார்த்துக் கொண்டே நடந்ததை கூறலானான் ருத்ரன்.
ருத்ரனுக்கு இன்று தான் எடுத்துக் கொண்ட முக்கியமான கேஸ் விடயமாக ஒருவருடன் பேச வேண்டிய கட்டாயம். அதற்காக அவசரமாக தயாராகிக் கொண்டு ஸ்டேஷன் வந்தவனுக்கு இந்தக் கேஸ் நந்தியாக வந்து நிற்க கடுப்பாகி விட்டான். அவனே அந்த ஸ்டேஷனுக்கு பொறுப்பாய் இருக்க தன்னிடம் வந்த இந்தக் கேசை ஒத்தி வைக்க முடியாத நிலை அவனுக்கு. இருந்தும் அந்த முக்கியமான வேலையும் அவனிடம் வந்து இருக்க மொத்த ப்ரசரும் அவன் மேலே..!!
இவனை அடக்க முடியாமல் தீக்ஷன் விழி பிதுங்கி பின் ஒருவாறு சமாளித்து அனுப்பி வைத்திருந்தான்.
தொடரும்...
தீரா.