• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன்னால் உயிர்த்தேன் - 11

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
அத்தியாயம் 11


இங்கே இப்படி இருக்க அங்கே தயாளனோ பெருமைக்காக எதையும் செய்யத் துணிந்திருந்தார். சரியாக கமலாவின் ஆச்சிரமத்தைப் பற்றி கேள்வியுற்றவர் நல்ல பேர் எடுக்க வேண்டும் என்பதற்காக அங்கிருந்த அநாதை குழந்தைகளுக்கு பல உதவிகளை செய்ய முன்வந்தார். அப்படி அங்கே போய் வந்த நேரம் அவரது மனைவிக்கு பழக்கமானவள் தான் இந்த அக்ஷய ப்ரியா.

முதலில் அவளின் அழகிலும் குணத்திலும் கவரப்பட்டு அவளுடன் பழகியவர் போகப் போகப் தன் புத்தியை காட்ட நினைத்தார். அவளது அமைதியையும் மென்மையையும் சாதகமாக பயன்படுத்திக் கொண்டவர் ஆதவின் விடயத்தில் அவளை பகடக் காயாய் பயன்படுத்தியது தான் வேதனைக்குரிய விடயம்.

ஒரு நாள் திடீரென அவளிடம் வந்து திருமணம் செய்து கொள்ளுமாறு கூற திடுக்கிட்டாள் பெண்ணவள். பின்ன, அவள் ஆதவ்வை அல்லவா காதலிக்கிறாள். ஆம் அவள் அவனைத் தான் காதலித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அங்கே வேங்கையவனோ தாம், பூப்போல மனம் கொண்ட பெண்ணவளால் காதலிக்கப்படுகிறோம் என்பதிறியாது தன்னவளை தனக்கு எதிரியாய் நினைத்து அவளை பழிவாங்க திட்டம் தீட்டிக் கொண்டிருந்தான்.

இந்த இடைப்பட்ட காலத்தில் தான் ஆதவ் க்ரிஷும் ஆச்சிரமத்திற்கு வந்து போய் கொண்டிருந்தான். தன் தாய், தந்தை வாழ்ந்த அழகிய கூடல்லவா அது. அதனை முற்றாக அவனால் விட்டுச் செல்ல முடியவில்லை. அங்கிருக்கும் குழந்தைகளின் சிரிப்பில் தன் தாய் தந்தையை கண்டான். ஆகவே அங்கே செல்வதை வழக்கமாக்கிக் கொண்டான். ஏதோ ஓரிரு கணங்கள் நின்று அந்தக் காற்றை சுவாசித்து விட்டு சிட்டாக பறந்து விடுவான்.

அந்த சமயம் தான் அக்ஷய ப்ரியாவிற்கு இது தான் ஆதவ் க்ரிக்ஷ் என்ற விடயம் தெரிய வந்தது. அவனின் நிமிர்விலும் நற் குணத்திலும் கவரப்பட்டாள் காரிகை. அவனோ இப்படி ஒருத்தி இங்கே இருப்பதைக் கூட கண்டதில்லை. முதலில் அது ஏதோ ஈர்ப்பு என கடந்து சென்றவளுக்கு போகப் போக அவனை பார்க்கும் போதெல்லாம் தோன்றும் உல்லாச மனநிலையை என்ன சொல்லி விரட்டுவது என்ற நிலை..!! அதன் பின்னர் நிதானமாக சிந்தித்து பார்க்க, அங்கே முழுக்க முழுக்க ஆதவ்வின் மேல் இருந்த காதலே அவளிடம் வெளிப்பட்டது. புரிந்த நொடியே திகைத்து தீப்பட்ட புழுவாய் துடித்தாள். அவனின் அந்தஸ்து என்ன இவள் இருக்கும் நிலை என்ன..? கசந்த சிரிப்பொன்றை உதிர்த்தவள் இதை இப்படியே வளர விடக் கூடாது என தன்னுள் சபதம் எடுத்துக் கொண்டாள். அப்படியே வளர்ந்தாலும் ஒருபோதும் அவனிடம் இதனை வெளிக்காட்டி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். அது இன்று வரை தொடர்கிறது என்பது வேறு கதை .

ஆனால் அவளே எதிர்பார்த்திராத ட்விஸ்ட் தான் தயாளனின் மனைவியின் இந்தப் பேச்சு.

ஆனால் ஆதவோ தயாளனுக்கு மகள் இருக்கிறாள் என்பது வரை அறிந்து வைத்திருந்தவன் அவளைப் பற்றி ஓர் துரும்பு கூட அறிய முற்படவில்லை. அவனைப் பொறுத்தவரை அவள் அவன் பழிவாங்கத் துடிக்கும் உயிருள்ள சதை.

காலம் அதன் போக்கில் செல்ல ஆதவால் அவன் இழந்ததை ஜீரணிக்க முடியவில்லை. அதுவும் அவனாய் இழந்ததில்லை. அவனிடமிருந்து பறிக்கப்பட்ட ஒன்றே. அதுவே அவனுள் இருந்த கோபத்தைத் தூண்டி பழிவெறியாய் உருவெடுத்தது. அங்கே ஒருவனுள் பழிவெறியை தூண்டி விடுகிறோம் என்பதை அறியாத முட்டாள் தயாளனோ அவன் முன்னே எதுவும் செய்யாத மாதிரி சிரித்துக் கொண்டு சுற்ற, அங்கே ஆதவ் ஒன்றை முடிவெடுத்து விட்டான்.

முதலில் தொழிலை முடக்கி அவரை எழுந்திருக்க முடியாமல் செய்தவன் இறுதியாக இந்த விபரீத முடிவையும் எடுத்து விட்டான்.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது இவனுக்கு சாலப் பொறுந்துமோ..?இதோ திருமணத்தை நடத்த எண்ணினான். அங்கே தன்னால் ஓர் அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கை சீரழியப் போவதை அறிந்தும் அவளை கோர்த்து விட்டு வேடிக்கை பார்த்த தயாளனுக்கும் விதி ஆப்புக்களை வைத்திருந்தன.

இதோ அவளிடம் தயாளனின் மனைவி சம்மதம் கேட்க கண்ணீருடன் மறுப்பாக தலையை ஆட்டினாள்.

அதில் வெகுண்டெழுந்த கனிகா "இவ்வளவு நாளும் என்னை நீ அம்மானு வெறும் வாய் வார்த்தையா தான் சொன்னியா...?" என ஆத்திரத்துடன் கேட்டு போலிக் கண்ணீர் வடிக்க அவரை பரிதாபமாக விழித்தாள் பெண்.

சேலை முந்தானையை கண்ணில் ஒற்றிய வண்ணம் "அப்போ இது நாளும் இந்த ஆச்சிரமத்துக்கு நாங்க செய்ததுக்கு நன்றிக் கடன் இது தானா..?" என்று கேட்க திடுக்கிட்டவள் மீண்டும் மறுப்பாக தலையாட்ட பற்களை கடித்தவர் அவளை மனதினுள் வைது விட்டு "சரி நீ ஒத்துக்கலன்னா பரவாயில்லை. இனி இந்த ஆச்சிரமத்துக்கு எந்த உதவியும் நாங்க செய்ய மாட்டோம். உன் கைல தான் இருக்கு இந்தப் பிள்ளைங்கட வாழ்க்கை..." என்று முடித்தவரின் கூற்றில் அதிர்ந்தே விட்டாள்.

என்ன கூறி விட்டார். அவளின் அதிர்ந்த முகத்தை திருப்தியுடன் பார்த்த கனிகா முகத்தை திருப்பிக் கொண்டு எழுந்து செல்ல முற்பட, அக்ஷய ப்ரியாவோ தன் ஒருத்தியாள் இந்த சின்னஞ்சிறு குழந்தைகளின் வாழ்க்கை வீணாவதா..? ஒருவேளை சோற்றுக்கு எவ்வளவு கஷ்டப்படுகிறாள் என்பதை அனுபவித்து உணர்ந்தவள் அல்லவா. இவை அனைத்துக்கும் மேலாக சொல்லாப்படாத காதலுக்காக தன்னைப் போன்றவர்களின் சந்தோஷத்தில் கை வைப்பதா? என்று அனைத்தையும் மனதில் உருப் போட்டுப் பார்த்தவள் தெளிவான முடிவுடன் கண்ணீரை துடைத்துக் கொண்டு கனிகாவிடம் சம்மதமென்று கூறும் போது தொண்டை அடைக்க கண்ணிலிருந்து சொட்டுக் கண்ணீர் சலேரென எட்டிப் பார்த்தது.

தன் வேலை முடிந்தது என குதூகலித்தவர் கமலாவிடம் கூற அவரும் இவளின் வாழ்க்கையின் நன்மை கருதி உடனே சம்மதித்து விட்டார்.

இங்கே இவர்களுக்கு கூறப்பட்டதோ ஆதவ் என்பவன் அவர்களின் உறவுக்காரன் என்றும் அவனே அவளை விரும்பி மணந்து கொள்வதாக கூறியதாகவும் கூறி இருக்க அங்கே ஆதவ்விற்கு கூறப்பட்டதோ அக்ஷய ப்ரியா அவர்களின் மகள் என்று.

அன்று தன்னுள் மரித்தவள் மீண்டும் உயிர்ப்பெற்றது என்னவோ தங்கள் திருமணமான அன்று அவனைப் பார்த்த போது தான்.

இதில் அவனது வாழ்க்கையில் மட்டுமன்றி எதுவும் அறியாத தன் மனைவியின் வாழ்க்கையிலும் தயாளன் என்ற கொடியவன் விளையாடி இருக்கிறான் என்ற உண்மை ஆதவை வந்தடையும் போது அந்த அரக்கர்களின் நிலைமை...???


...


சிந்தனையிலிருந்து கலைந்தவனுக்கு யாரோ தன்னுடைய பதிலை எதிர்பார்த்து காத்திருப்பது புரிய தன் கம்பீரக் குரலில், "எஸ் கம் இன்..."என அனுமதி வழங்கினான்.

வழமை போல அவனின் அழுத்தமான குரலில் விக்ரமின் மெய் சிலிர்த்தது.

உள்ளே வந்தவனுக்கு உணர்ச்சிகள் துடைக்கப்பட்டு இருந்த ஆதவின் முகத்திலிருந்து எதுவும் படிக்கமுடியவில்லை. அவன் தான் அவ்வளவு சீக்கிரம் தன் உணர்ச்சிகளை யாருக்கும் வெளிக்காட்டி விடமாட்டானே.

ஆதவை நிமிர்ந்து பார்த்த விக்ரம் கோப்புகளை அவனிடம் நீட்டி "சார் நீங்க கேட்ட ஃபைல்ஸ்..."

அதனை மேசையில் வைக்க சொல்லியவன் காஃபி எடுத்து வருமாறு கூற விக்ரமே, அதனையும் எடுத்து வர சென்றிருந்தான்.

எப்போதும் போல அவனே ஃபில்டர் காபி கொண்டு வந்து தர வாங்கிப் பருகியவன் அவனை மெச்சுதலாக பார்த்தான். அதில் மெல்ல இதழ் விரித்த விக்ரமிற்கு ஆதவின் நிலை நன்கு புரிந்தது.

தலைவலி, ஸ்ரெஸ், குழப்பங்கள் எதுவாக இருந்தால் தான் ஆதவ் என்பவன் காஃபி அருந்துவான். அதனால் விக்ரமே தன் கையால் அவனுக்கு தயாரித்து தருவதுமுண்டு. ஆனால் தனது வாழ்க்கையில் இனி ஒருத்தியின் சமயலுக்கும், காஃபிக்கும் அடியமையாக கிடக்கப் போகிறோம் என்பதை இப்போது காஃபி அருந்துபவனோ அதனை வழங்கியவனோ அறிய வாய்ப்பில்லை. இனி காலம் எனும் சக்கரம் ஆதவிற்கு எதிராக சுழல இருக்கிறது...!!


விக்ரம் வெளியேறியவுடன் அனைத்து எண்ணங்களையும் தூக்கி எறிந்து விட்டு வேலையில் மூழ்க எத்தணித்தவனுக்கு அது தான் முடியாத காரியமாய் போய் விட்டது. ஏனோ அவளின் நினைவாக இருந்தது. அன்றைய சம்பவத்தின் பின்னர் அக்ஷயாவை அவன் பார்க்கவேயில்லை. (ஒரு வீட்ல பக்கத்து பக்கத்து ரூம்ல இருந்தும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்காம இருந்த கொடுமைய எங்க போய் சொல்ல...)

அவளை நினைக்க நினைக்க மனம் பாரமாகியது. யாரோ செய்த தப்பிக்கு அவளை அறைந்து விட்டோமே என நினைத்தவன் அதே யாரோ செய்த தவறிற்கு அவளை பழிவாங்குகிறோமே என்பதைப் பற்றி சிந்திக்க தவறினான்.

அவளை காயப்படுத்த நினைத்தவனுக்கு அவளை விட்டுப் பிரிய மனம் வரவில்லை. ஆம் அவளுத்கு டிவோர்ஸ் தந்து ஒரேடியாக அவர்களை வெட்டி விடவும் எண்ணினான் தான். அந்த யோசனை அவனுக்கு ஒரு சதவீதம் கூட மன ஆறுதலை தராததால் அடுத்த நிமிடம் அந்த யோசனையையும் கைவிட்டான்.

ஆனால் இவை அனைத்தும் புயலாக மாறி அவனை தாக்க இருக்கிறதே...!!

..

காலையில் எழுந்து சுத்தமாகிக் கொண்டு தயாராகி கீழே வந்தாள் அவள். படி இறங்க இறங்க அவளது மனம் தடதடத்தது. கண்களோ வீடு முழுக்க அவனைத் தேடி அலைமோதியது. அவனின் நடமாட்டம் இல்லையென்றான பின்னே அவளுக்கு நிம்மதியாய் மூச்சு வெளியே வந்தது. இருந்தும் எங்கே திடீரென வந்து விடுவானோ என்று அஞ்சியவாறு சமயலறை வந்தவளை மரகதம் சிரிப்புடன் வரவேற்றார்.

சிவப்பு சாரியில் தேவதையென வந்து நின்றவளைப் பார்த்து வழமை போல கன்னம் வழிந்தவர் அவளுக்கு என்ன வேண்டுமென்று கேட்டு செய்து கொடுத்தார்.

அக்ஷய ப்ரியாவோ அவரைத் தடுத்து தானே இன்று சமைப்பதாக கூற முதலில் தடுத்தவர் அவள் கெஞ்சிக் கேட்கவும் சரியென்று விட்டார். ஆனாலும் உதவி ஒத்தாசைகள் செய்து கொடுத்தார்.

அந்த அறையிலே அடைந்து கிடக்க மூச்சு முட்டுவது போலிருக்கவும் தான் அவள் இன்று கீழே வந்திருந்தாள்.

இப்படியாக இருவரும் சேர்ந்து சமைத்து முடித்திருக்க டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைக்க வந்தவளே அவனை கண்டு கொண்டாள்.

பயத்தில் ஸ்தம்பித்து நின்றிருந்தவளை மரகதம் புரியாமல் பார்த்து விட்டு அவளது பார்வை சென்ற திக்கில் பார்த்த பின்னரே அவளது அதிர்ச்சியின் காரணம் அவருக்கும் புரிந்தது.

ஆறுதலாய் அவளது தோளில் கை வைத்தவரை திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தவள் அவசர அவசரமாக நடுங்கும் கைகளால் அவரிடம் பாத்திரத்தை தந்து விட்டு சமலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அங்கே ஆதவோ ஃபோனில் யாருடனோ பேசிக் கொண்டு வந்தவன் இவர்களை கவனித்திருக்கவில்லை.

இருவரது வாழ்க்கைப் போக்கைப் பார்த்து அதிருப்தியானது என்னவோ மரகதம் தான்.


தொடரும்...


தீரா.