அத்தியாயம் 13
சிரிப்பை மறந்திருந்த ஒருவன் தன்னால் இன்று புன்னகைக்கையில், பெண்ணவளோ கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள். மற்றவர்களுக்கு தன் கையால் அன்னமிட்டு அவர்கள் வயிறார சாப்பிட வேண்டும் என நினைப்பவளுக்கு ஆதவின் இந்த காரணம் தெரியாத செயல் கவலையைக் கொடுத்திருந்தது. அவள் உணவைப் பரிமாறியதாலே அவன் பாதியில் எழுந்து சென்றிருக்கிறான் என அவளாக ஓர் காரணத்தை உருவாக்கி தேவையில்லாமல் அழுது கொண்டிருக்கிறாள்.
...
படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தவனின் மனதிலோ எண்ணற்ற சந்தோஷம் என்றாலும் முகத்தில் அதன் சாயலை அவன் காட்டிக் கொள்ளவில்லை.
சோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டவன் மரகதத்தை அழைத்து ஏதோ கூறி விட்டு அக்ஷய ப்ரியாவை அழைத்து வருமாறு பணித்தான். அவரும் அவனின் சொல்லிற்கிணங்க அவளை அழைத்து வர சென்று விட்டார்.
போகும் அவருள்ளோ ஆதவின் குரல் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அப்படி என்ன கூறினான்..? இதோ இவற்றைத் தான். இனி அக்ஷய ப்ரியாவே சமைக்க வேண்டும் எனவும் அதற்கு அவரை உதவியாக இருக்குமாறும் அமைதியாக அதே நேரம் கட்டளையிட்டிருந்தான்.
ஏதேதோ பேசி அவளை கீழே அழைத்து வந்தார் மரகதம். பத்திரிகையில் மூழ்கி இருந்தவன் ஏதோ உந்த நிமிர்ந்து பார்க்க அங்கே அக்ஷய ப்ரியா அவனை பார்த்தவாறு பயத்துடன் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தாள். அவன் பார்ப்பான் என எதிர்பாராதவள் சட்டென தலையை குனிந்து கொள்ள வேங்கையவனிற்கோ உல்லாசமானது.
இருந்தும் அவளது முகம் அழுகையில் கசங்கி இருப்பதையும் கவனித்தவனின் மனதோரம் சுருக்கென்ற வலி. எதனால்..?
பின் மரகதத்திடம் கண் காட்ட அவரும் அக்ஷய ப்ரியாவை தனியே அவனிடம் விட்டுச் செல்ல மனமில்லாமல் விட்டுச் சென்றார். அவர் தன்னை விட்டுச் செல்லவதைப் பார்த்து திடுக்கிட்டவளின் உதடு சிறு பிள்ளை போல அழுகையில் துடித்தது.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் அவனைப் பார்த்து பயப்படுவதைத் தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இன்று ஏனோ அவளை எதற்காக திருமணம் செய்தோம் என்பதை தற்காலிகமாக மறந்திருந்தான் போல..
ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டவன் அவளை மீண்டும் பார்த்தான். அவனை விட்டு தள்ளி நின்றிருந்தவளின் செயலில் கோபம் வந்தாலும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டவன் "பக்கத்துல வாங்கனு கூப்பிட்டா தான் மேடம் வருவீங்களோ...?" என்றான். எவ்வளவு முயன்றும் அவனை மீறி அவன் குரலில் அழுத்தம் குடியேறி இருந்தது.
பல நாட்கள் கழித்துக் கேட்ட அவனது அக்மார்க் பேச்சில் தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு. அதில் இன்னும் உடல் நடுங்க விழிநீர் கன்னம் தொட்டது.
எல்லாவற்றையும் கூர் பார்வையில் கவனித்திருந்தவனுக்கு இந்தக் கண்ணீரை தான் வழமை போல சகிக்க முடியவில்லை. அதில் அவனது கண்களும் கவலையை பிரதிபலித்தனவோ..!? அதற்குள் தன்னிலைக்கு வந்தவன் "ஐ நீட் அ கப் ஒஃப் காஃபி..." என கூறி விட்டு விட்ட வேலையைத் தொடர்ந்தான்.
தப்பித்தோம் பிழைத்தோம் என ஒரே ஓட்டமாக உள்ளே நுழைந்து விட்டாள். வந்தவள் எவ்வளவு நேரம் தான் அப்படியோ நின்றாளே தெரியவில்லை திடீரென அவன் நினைவு வர எதைப் பற்ற வைத்தாள், எதைக் கலந்தாள், என்ன செய்தாள் என்று தெரியவில்லை. அடுத்த கணம் கையில் காஃபி கப்புடன் வெளியே வந்திருந்தாள்.
கையில் நடுக்கம் அதிகரிக்க ட்ரேயை இன்னும் இறுகப் பற்றிக் கொண்டவளுக்கோ அச்சத்தில் கால்கள் பிண்ணிக் கொண்டன. இருந்தும் சிரமப்பட்டு அவனருகில் வந்தவள் தட்டை நீட்ட வீம்புக்காரன் நிமிர்ந்தான் இல்லை.
அவன் வாங்குவான் என அவளும், அவள் தன்னை அழைப்பாள் என அவனும் இருக்க விதியோ இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டது. மீண்டும் முன்னே நீட்ட அப்போது தான் அவளைக் காண்பது போல பாசாங்கு செய்தவன் எதோ கேட்க வாயெடுக்க அந்தோ பரிதாபம் அக்ஷய ப்ரியாவின் கை நழுவி கப் கீழே விழுந்து சிதறியது. அவள் அதில் அதிர்ந்து நிற்க ஆதவிற்கோ சப் என்றிருந்தது.
அவள் விழிகளில் தாறுமாறாக கண்ணீர் வடிய அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அதில் இன்னும் குளிரெடுக்க "சா..சா..சாரி சார். இதோ..இ.. க்ளீ..ன் பண்ணுறேன்..." என திக்கித் தினறி கூறியதும் அல்லாமல் அவன் தடுத்து நிறுத்த முன்பே குனிந்து கண்ணாடி சில்லுகளை எடுத்ததில் மீண்டும் அவள் கையை அது பதம் பார்த்திருந்தது.
அவள் தன்னை சார் என்றழைத்ததில் அதிர்ந்து நின்றிருந்தவன் சுதாரிப்பதற்குள் அனைத்தும் நடந்து முடிந்து விட்டது.
அதில் வலி எடுக்க ஆஆ என முனங்கியவள் கருமமே கண்ணாக மீண்டும் குனிய "ஏய் இடியட்...ஸ்டொப்..." என்ற அவனது சத்தத்தில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
சத்தம் போட்டது மல்லாமல் ஓடிச் சென்று ஃபெஸ்ட் எயிட் பாக்சையும் தூக்கிக் கொண்டு வந்து அவள் என்னவென்று விழிப்பதற்குள் அவளை சோஃபாவில் அமர வைத்து கையைப் பற்றி இருந்தான். அதன் பிறகே காயத்தைப் பார்க்க ஆழமாக வெட்டப்பட்டிருந்தது. அதில் சுருக்கென்று கோபம் வந்தவனாய் அவளைத் திட்ட வாயெடுத்தவன், கண்ணீருடன் அமர்ந்திருந்தவளின் விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்றில் அப்படியே வாயை கப்பென மூடிக் கொண்டான்.
அவனின் அருகாமையில் மிகவும் தவித்துப் போனது என்னவோ அக்ஷய ப்ரியா தான். இப்படியே இருந்தால் தன்னால் தாங்க முடியாது என்றெண்ணி கையை உருவிக்கொண்டு அறைக்குள் விரைந்தாள்.
இவன் தான் விழித்து நிற்க வேண்டியதாகியது.
தனதறை வந்தவள் கதவில் சாய்ந்து அழுது கரைந்தாள். ஒருகாலத்தில் அவனை காதலித்தவள் தான். இருந்தும் இந்த அந்தஸ்து, அவனின் கோபம் எல்லாம் பெண்ணவளை பயமுறுத்தியது.
கீழே அசையாமல் இருந்தவனுக்கு அப்போது தான் அவளது காயத்திற்கு மருந்திடாதது நினைவுக்கு வர "டேமிட்" என எழுந்து அவளறைக்குச் சென்றான்.
அக்ஷய ப்ரியாவிற்கு கை காயத்தை விட மனதில் பட்ட காயமே வலிக்க செய்ததால் அவளும் அதைப் பற்றி வருந்தவில்லை.
அவளறைக்குள் வந்தவன் அவளது அழுகையை புரியாமல் பார்த்தான். இருந்தும் அந்த அழுகைக்கு தான் தான் காரணம் என்பது நன்கு புரிந்தது. அவளை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தவன் தன் வருகையை அவளுக்கு உணர்ந்த திரும்பிப் பார்த்தவளுக்கு மூச்சடைத்தது.
அவளை நெருங்கியவன் அவளிடம் அனுமதி கேட்காமலே கையைப் பற்ற முயல அவளோ பின்னிழுத்துக் கொண்டாள். மீண்டும் பற்றப் போனவனை தவிர்த்து பயத்தில் பின்னோக்கி நகர்ந்தவளைப் பார்த்து இவ்வளவு நேரமும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த கோபம் வெடித்திருந்தது.
அவளை ஆதவ் முறைத்த முறைப்பில் "சா..சாரி..சார்..." என பரிதாபமாக விழித்தாள் அக்ஷயா.
அவளது சார் என்ற வார்த்தையில் கடுப்பானவன் வார்த்தைகளை விட்டிருந்தான்.
"ஏய்..என்ன சிம்பத்தி க்ரியேட் பண்ணுறியா..?" என அனைத்து கோபத்தையும் திரட்டி அவன் சீற, அவனின் கர்சனையில் கேட்பாரின்றி கண்ணீரும் அதன்பாட்டில் வடிய "இ..இல்லை சார்..." என திக்கித் தினற இன்னும் சினத்தில் பொங்கி எழுந்தவன் "இடியட் சட் அப்..." என வாயில் விரல் வைத்துக் காட்ட மிரண்டு போய் நின்றிருந்தாள் அக்ஷய ப்ரியா.
அதனைப் பார்த்துக் கொண்டே "அது சரி. உன் அப்பன்ட ஏமாத்துற புத்திதானே உனக்கும் இருக்கும்.. அவனா சொல்லித் தந்தான் இப்படில்லாம் நடி அவன் மயங்குவானு...?சொல்லுடி?" அங்காரம் பிடித்தவன் போல கத்தியவனின் கத்தலில் அக்ஷய ப்ரியா பேயறைந்ததைப் போல் நின்றிருந்தாள்.
அதை பார்த்துக் கூட இரங்காதவனாய் அவளை அழுத்தமாக பார்த்து "சொல்லு..." என்கவும், யாரை சொல்லுகிறான், என்ன பேசுகிறான் என்று புரியாவிட்டாலும் தான் வாய் திறவாமல் விட மாட்டான் என்று அறிந்தவளாய் "எ..எனக்கு தான் யா..யா..யாருமே இல்லையே.." என உதட்டைப் பிதுக்கி அழத் தயாரானவளின் பேச்சில் இப்போது அதிர்வது அவனின் முறையாகியது.
"என்ன உலறுகிறாள்" என நினைத்தவன் அதுவும் பொய்யெனத் தோன்ற அவளை ஏளனமாக பார்த்தவன் அந்த இதயத்தை குத்திக் கிழித்தான்.
"அப்போ நீ என்ன அநாதையா...?" கொஞ்சமும் ஈவு இரக்கம் இல்லாமல் கேட்டவனின் கண்களிலிலும் நொடி நேர வலி வந்து போனதுவோ..!!?
அந்த வார்த்தையை கேட்டு துடிதுடித்தவள் அவனை அடிபட்ட பார்வை பார்க்க "ஆன்சர் மீ..." என்றவனின் ரௌத்திரத்தில் அப்படியே தலை குனிந்து கொண்டாள்.
இதுவும் போதாது என நினைத்தானோ "இந்த அப்பனுக்கு புள்ளையா இருக்கிறதை விட நீ அநாதையாவே இருக்கலாம்..." என கூறியவன் நில்லாமல் சென்று மறைந்தான்.
இவனிடம் கூட இருந்து இந்த வார்த்தையை எதிர்பாராதவள் மௌனமாக தன்னுள் மரணித்தாள். பின் தனக்கு இந்த காயங்கள் புதிதா என் சிந்தித்து தன்னை தேற்றியவளாக குளிக்க சென்று விட்டாள்.
அங்கே அறைக்குள் வந்தவனுக்கோ தன் மீதும் அவள் மீதுமே கோபம் பொங்கியது. தானும் அநாதை என்ற வார்தையில் காயப்பட்டவனல்லவா..
உச்சகட்ட கோபத்தில் தன்னை கட்டுப்படுத்த வழியின்றி அங்கும் இங்கும் நடந்துகொண்டு இருந்தான் ஆதவ். ஏன்?ஏன்..? தனக்கு அவள் மேல் இந்த உரிமையான கோபம் வருகிறது? அவளிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறோம்? என்று சிந்தித்தவனுக்குத் தெரியவில்லை அவள் எப்போதோ மனைவியாய் தன்னுள் நுழைந்து விட்டாள் என்பது.
அப்படியே சிந்தித்துக்கொண்டே கட்டிலில் அமர்ந்து தலை சாய்த்து கொண்டான் ஆதவ்.
....
அன்று ஆதவ் ஆபிஸ் வந்திருக்காததால் விக்ரமே அனைத்து வேலையும் செய்து கொண்டிருந்தான். இடையிடையே அம்முவும் கால் செய்து கொண்டிருக்க வேலை பளு காரணமாக அட்டன்ட் பண்ணவில்லை. அவளும் மேலும் தொந்தரவு செய்யாது தன் வேலையில் மூழ்கி விட்டாள்.
...
ஆதவிற்கோ தன் சிந்தனையுடனே தோன்றி மறைந்தது அந்தக் கண்கள். அக்ஷயப்ரியாவின் விழிகள் அவனுக்கு எப்போதும் ஏதோ செய்தியை கூறுவதாகவே இருக்கும். அந்த விழிகளை இதற்கு முன் எங்கேயோ பார்த்த நினைவு அவனுக்கு!!!ஆனால் எங்கே எப்போது என்பதை மட்டும் அவன் தற்காலிகமாக மறந்திருந்தான்.ஆனால் தன் ஆழ்மனதில் என்றும் அழியா சித்திரமாக அந்த விழிகள் பதிந்திருப்பதை வெகு சீக்கிரம் அறிவான்..!!!
இப்படியே சிந்தனையிலிருந்து விழித்தவன் மணியை பார்க்க அது மதியம் ஒன்று முப்பதை தொட்டுக் கொண்டிருந்தது.
டவலுடன் பாத்ரூமினுழ் நுழைந்தவன் குளித்து விட்டு வீட்டில் அணியும் சாதாரண பேன்ட்,டீ-சேட் சகிதம் கீழே இறங்கி வந்தான்.
இறங்கி வந்தனுக்கு யாரோ பேசும் சத்தம் கேட்க தன் காதை கூர்மையாக்கி அந்தக் கதைக்கு செவி சாய்தான்.
ஆம் அது அக்ஷய ப்ரியாவினுடைய குரலே...
அப்படியே குரல் வந்த திசையில் சென்றவன் கண்ட காட்சியை அவனாலே நம்ப முடியவில்லை.
அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தான் ஆதவ்.
அப்படி எதை பார்த்தான்.இதோ இவை தான். அக்ஷய ப்ரியா, வீட்டில் வேலை செய்பவர்களுடன் தரையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு அது ஒன்றும் புதிதில்லை. ஆனால் அவனுக்கு அது புதிதும் அதிர்ச்சியும்...!!
அவனுள்ளம் ஒன்றே ஒன்றை தான் மறுபடி மறுபடி கேட்டுக் கொண்டு...
"என் மனைவி, அதுவும் வீட்டு மகாலட்சுமி இப்படி சாப்பிடுவதா?" ஆனால் அவன் மனசாட்சி கேட்ட கேள்வியை அவன் உணரவில்லை என்பதே உண்மை.
அடுத்து அவள் பேசிய வார்த்தைகளிலே அவன் சுய நினைவிற்கு வந்திருந்தான்.
அவளோ தன் கணவனானவன் தன்னை அதிர்ச்சியுடன் பார்த்து நிற்பது அறியாது, "நீங்க எனக்கு அம்மா மாதிரி. தயவு செய்ஞ்சு என்னை வாங்க போங்கனு கூப்பிடாதீங்க" என கூற மரகதமோ "என்னவா இருந்தாலும் நீங்க எங்க எஜமானிமா. இந்த வீட்டு மகாலட்சுமி..." என ஆதவின் மனதை படித்தவர் போல அவர் பேச அவளின் பதிலுக்காக ஒரே ஒருவன் ஆர்வமாக காத்திருந்தான்.
ஆனால் அவளுக்கோ அவர் அப்படி பேசியதும் அன்று ஆதவ் செயலால் செய்து காட்டிய வேலைக்காரி என்ற செயல் மனக்கண் முன் தோன்ற அவளது முகம் வேதனையில் கசங்கிப் போனது.
அதனை பார்க்க வேண்டிவன் கண்டு விட்டான்.. அவளது முகத்தில் வந்து போன வேதனையில் குற்றவுணர்ச்சி மேலோங்கியது அவனுக்கு.
அப்படியே வந்த சுவடு தெரியாமல் மேலே சென்று விட்டான். அப்படியே அவளின் அறையைக் கடந்து செல்ல எத்தணித்த வேலையில் திடீரென திரும்பி பார்த்தவனின் கண்ணில் தென்பட்டதோ அந்த சல்லி முட்டி.
அதனருகில் சென்றவன் அவளின் சேமிப்பு பழக்கத்தை நினைத்து இகழ்ச்சியாக இதழ் விரித்தான். "அவளிடம் இல்லாத பணமா?எதற்காக இப்படி சேமிக்கிறாள்?அப்பனை போல பணத்தாசை போல" என எண்ணிக் கொண்டவனின் கண்ணில் இறைவன் அந்த வாசகத்தை காட்டி சிரித்தான்.
இப்போது விதி இவனைப் பார்த்து இகழ்ச்சியாக இதழ் விரிந்தது.
அந்த என் தாலிக்கு கிடைத்த கூலி என்ற வாசகம் அவனின் உடலை விறைக்க வைத்தத. தன் இதயத்தை யாரோ சம்மட்டியால் அடித்தது போன்றிருந்தது.
இதற்கு மேலும் பொறுக்க முடியாதவன் அதனை அப்படியே வைத்துவிட்டு தனதறை வந்து கதவடைத்துக் கொண்டான்.
அவனை அந்த வாசகம் மிகவும் பாதித்திருந்தது என்பது உண்மை. ஏன் அப்படி எழுதினாள்?என்று கேட்டும் விடை என்னவோ பூச்சியம் தான்.
ஆனால் அது அனைத்திற்குமான விடை இன்னும் சில நாட்களின் பின் கிடைக்கவிருக்கிறது என்பதை பாவம் அவன் அறியவில்லை.
எவ்வளவு தான் தன்னை திசை திருப்பினாலும் அவனுக்கு அந்த வாசகமே கண்முன் தோன்றி இம்சித்தது. இவனின் நிலை இப்படி...!!
தொடரும்...
தீரா.

Last edited: