• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன்னால் உயிர்த்தேன் - 15

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
அத்தியாயம் 15

அந்த பங்களாவில் நடு நாயகியாக நின்று கொண்டு ஃபோனில் யாரிடமோ கத்திக் கொண்டிருந்தாள். அவள் கவிதா. (கொஞ்ச நாளுக்கு முன்னாடி பாரின்ல இருந்து வந்திருந்தா திமிரு பிடிச்சவ..அவ தான் இவ..)

"என்ன நெனச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல. உங்கள யாரு அப்படி செய்ய சொன்னா..?" என ஏகத்துக்கும் கடுப்பாகி அலறிக் கொண்டிருக்க அந்தப் பக்கம் என்ன கூறப்பட்டதோ தெரியவில்லை அதற்கு இவள் "எனக்கு அதெல்லாம் தெரியாது. அவன் எனக்கு வேணும் அவ்ளோ தான்..." என பைத்தியம் போல பேசிக் கொண்டிருந்தவளின் பேச்சைக் கூட கேட்காமல் மறுபக்கம் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

"ஹலோ..ஹலோ.." என இவள் கூறியதெல்லாம் காற்றில் கலந்து போக "டேமிட்..." என்றவாறு ஃபோனை தரையில் தூக்கி எறிந்ததில் அது சில்லு சில்லாக சிதறியது.

தன் கோபத்தை கட்டுப்படுத்த வழியின்றி அங்குமிங்கும் நடந்தவள் ஓர் முடிவெடுத்தவளாய் வெளியேறி இருந்தாள்.


...


"புள்ளையாடி பெத்து வச்சிருக்க..? திமிரு பிடிச்சவ.." என மனைவியைப் பிடித்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தார் தயாளன்.

"என்னங்கா செய்தா..?" என கேட்ட கனிகாவுக்கும் என்னத்த செய்து வைத்திருக்கிறாளோ என்றிருந்தது.

"இன்னும் என்னடி செய்யனும்..?" என அவர் சீற கனிகாவிற்கு ஐயோ என்றிருந்தது.

"அவ கிட்ட சொல்லி வை. என்னை மீறி ஏதாச்சும் ஏடாகூடமாக செய்து வைக்கட்டும் அதுக்கப்றம் அம்மா, புள்ளை ரெண்டு பேரையும் தொலைச்சு கட்டி வச்சிறுவேன்.." என விரல் நீட்டி எச்சரித்து விட்டு தயாளனும் வெளியேறி விட்டார்.

இவரோ "இவள.." என பல்லைக் கடித்துக் கொண்டு அவளுக்கு அழைப்பெடுக்க அதுவோ துண்டிக்கப்பட்டிருந்தது.

ஆம் இவர்களின் தவப் புதல்வி தான் கவிதா...


....


அக்ஷய ப்ரியா ஆட்டோவில் வீடு வந்து கொண்டிருக்க அவளைப் பின் தொடர்ந்து ஒரு ஹைப்ரிட் காரும் வந்து கொண்டிருந்தது. சரியாக அவள் வந்திறங்கவும் அந்தக் காரின் உரிமையாளியின் கண்களோ அக்ஷய ப்ரியாவை விசமத்துடன் பார்த்து விட்டு கடந்து சென்றிருந்தது.

வீட்டு வாசலினுள் காலடி எடுத்து வைக்கப் போனவள் அப்படியே ஆணி அடித்தது போல அசையாது நின்றுவிட்டாள்..ஏன்..?

இதோ ஏ.கே பெலஸ் என பொறிக்கப்பட்டிருந்த போர்டை கவனித்து விட்டாள். இதே விலாசம் தானே அந்த ஹாஸ்பிடல் பெயர் பலகையிலும் இருந்தது என யோசித்தவள் "அப்போ அது இவருடைய ஹாஸ்பிடலா...?" என அதிர்ந்து நின்றாள்.

அவனது அந்தஸ்தை பற்றி கொஞ்சம் தெரியும் தான். இன்று முழுவதுமாக தெரிந்தும், சந்தோஷப்பட முடியாத நிலை அவளது. அவன் கூறும் தகுதி இது தானோ என நினைத்த மாத்திரமே கண்களில் தேங்கி இருந்த விழிநீர் சட்டென கன்னத்தில் வடிந்தது.

அந்த பொன் எழுத்துக்களை வலியுடன் தடவிக் கொடுத்தவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.

ஆதவோ எரிமலையாக கொதித்துக் கொண்டிருந்தான். "அதெப்படி நான் கூப்பிட்டும் அவ மறுப்பது. அவ்வளவு திமிரா...??" என்று அங்கும் இங்கும் நடந்து கொண்டே திரும்பியவனின் கண்ணில் வீழ்ந்தாள் பெண்ணவள்.

உள்ளே வந்தவள் அவனைப் பார்த்து பயந்தாலும் கஷ்டப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவனைத் தாண்டி செல்ல முற்பட திடீரென அவள் முன் வந்து நின்றான் வேங்கையவன்.

அவள் திடுக்கிட்டு பின்னோக்கி செல்ல அவளை வெறுமையாக தொடர்ந்தது அவன் பார்வை. சில நிமிடங்கள் தொடர்ந்த அமைதியை உடைத்தெறிந்தவனாக "உனக்கும் அவங்களுக்கும் என்ன சம்மந்தம்..?" என்றவாறு பேண்ட் பாக்கெட்டினுள் கையிட்டு நின்றிருந்தவனின் தோரணை அவளுக்கு திகிலை கிளப்பி விட்டது.

எச்சிலை விழுங்கியவள் "அ..அ..அவங்க தான் எ.
என்னை வளர்த்தாங்க.." என்று கூற அவனின் புருவம் யோசனையில் சுருங்கியது.

மீண்டும் "இருக்கட்டும்..தென் நான் கூப்பிட்டும் ஏன் வரல..? அவ்ளோ திமிரா என்ன..?" என்றவனின் கர்சனைக்கு என்ன பதில் கூறுவாள்..!?

அவளின் அமைதி அவனை கோபப்படுத்த "கேக்குறன்ல..ஆன்சர் மீ..." என சீறினான்.

அவளோ அதிர்ந்து பின் "நா..நான் எப்படி சார் உ..உங்க கார்ல வர்றது...?" என அப்பாவியாய் விழித்தாள். அவள் சார் என்றழைத்ததில் பற்களை நறநறுத்தவன் "வந்தா என்ன..?" என உறும அவளுக்கு அழுகை வந்து விட்டது.

அவனது முறைப்பில் கண்ணீரை நடுங்கும் கைகளால் துடைத்து விட்டு "நா..நா..."என வார்த்தைகளை கோர்த்தவள் "உ..உங்க வீட்டு வேலைக்காரி எப்படி சா..சார் உ..உங்க கூட கா..கார்ல வர்றது..?" எனக் கூறி முதன் முறை அவனுக்கு வார்த்தைகளால் அடித்திருந்தாள்.

அவளது வார்த்தைகளில் பேச்சற்று அதிர்ந்து நின்றிருந்தான் ஆதவ் க்ரிஷ்.

அவனிடமிருந்து பதில் வராமல் இருக்க அவனைப் பார்த்துக் கொண்டே தனதறைக்கு சென்று விட்டாள் அக்ஷய ப்ரியா. அங்கே தனித்து விடப்பட்டிருந்ததோ ஆதவ் க்ரிஷ்.

அசைய முடியாமல் நின்றிருந்தவன் இப்போது தான் சுயத்தையடைந்தான் போலும். அவனுள்ளம் ஏகத்துக்கும் கலங்கிப் போயிருந்தது. தான் செயலால் செய்த போது வராத குற்றவுணர்ச்சி இன்று அவளது வார்த்தைகளில் வந்து போக அடிபட்டுப் போனான்.

"உங்க வீட்டு வேலைக்காரி எப்படி சார் உங்க கூட வர்றது"

இந்த வார்த்தைகளே மீண்டும் மீண்டும் வந்து அவனது செவிகளைத் தீண்ட குற்றவுணர்ச்சியில் செத்துக் கொண்டிருந்தது ஓர் இரும்பிதயம்.

அப்படியே சோஃபாவில் தொப்பென அமர்ந்தவன் ஒரு நிலையில்லாமல் தவித்தான்.

...


இங்கே தீக்ஷனோ ஆதவ் இன்னும் வராததால் அவனுக்கு அழைப்பெடுக்க அது ரிங் ஆகிக் கொண்டிருந்ததே தவிர எடுபடவில்லை. மீண்டும் மீண்டும் முயன்று தோற்றுப் போனவனை தாதி வந்து அவசரமாக அழைக்க அந்தப் பக்கம் சென்று விட்டான்.

அம்முவோ அழுதழுது ஓய்ந்து போய் நாற்காலியில் அமரப் போக அப்போது தான் ஐ.சீ.யூ அறையிலிருந்து கையுறையை கலட்டியவாறு வெளியே வந்தார் டாக்டர்.

அவரைக் கண்டவள் பாய்ந்து அவரருகில் சென்று "டா..டாக்டர் அம்மாக்கு இப்போ எப்படி இருக்கு.. அ..அவங்களுக்கு. ஒன்னும் ஆக இல்லைல...நா..நான் இப்போ அவங்கள பார்க்கலாமா..???" என அவரை பேச விடாமல் அவளே கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவளை தடுத்த டாக்டர் "ஹலோ மிஸ்..!! காம்ப் டவுன். உங்க அம்மாக்கு எதுவும் ஆகல்ல..சீ இஸ் பர்பக்ட்லி ஆல்ரைட். பட் இப்போதைக்கு அவங்கள டிஸ்டப் பண்ண வேண்டாம்..." என்று தலையசைத்து விட்டு சென்று விட படபடப்புடன் அவ்விடம் வந்து சேர்ந்தான் விக்ரம்.

வேலைப்பளுவில் அம்முவிடமிருந்து வந்த அழைப்புகளை கவனித்திராதவன் தொலைபேசியை எடுத்துப் பார்க்க அவளிடமிருந்து பல அழைப்புகள் வந்திருந்தன.

யோசனையோடு அவசரமாக அவளுக்கு மீண்டும் அழைப்பெடுத்ததில் மறுபக்கம் கூறிய செய்தியில் அதிர்ந்தவன் ஏதோவோர் தவிப்புடன் இங்கே விரைந்தான்.

அவனது சத்தத்தில் திரும்பியவள் அங்கே விக்ரமை கண்ட நொடி ஓடிப் போய் அவனை கட்டிக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள்.

அவளுக்கு ஆறுதல் கூறும் முகமாக அவளை அணைக்க சென்றவன் சங்கடத்துடன் அம்முவின் தந்தையைப் பார்க்க அவரும் புன்முறுவலுடன் சம்மதமாக தலையாட்ட அவனும் பதிலுக்கு தலையை அசைத்து விட்டு அம்முவை அணைத்து தலையை வருடினான்.

"அழாதடா..ரிலேக்ஸ். அம்மாக்கு ஒன்னும் இல்லை..." என்று அவன் கூறியதெல்லாம் அவள் செவிகளில் விழவில்லை. சிறு பிள்ளையாய் திரும்பத் திரும்ப "வி..விக்ரா அம்மா..."என திக்க, அவன் உஷ்ஷ் என்றதில், ஏதோ கூற வாயெடுத்தவள் அப்படியே அமைதியாகி அவனது நெஞ்சில் சாய்ந்து, விட்ட அழுகையைத் தொடர்ந்தாள்.

அவளை அப்படியே நகர்த்தி கூட்டிச் சென்றவன் அருகிலிருந்த பெஞ்சில் அமர வைத்து தண்ணீரை எடுத்து வந்து தானே புகட்டியும் விட அதனை பருகியதில் கொஞ்சம் ஆசுவாசமடைந்தாள்.

இவர்களின் நெருக்கத்தைப் பார்த்த தந்தைக்கு விக்ரம், தவறாக படவில்லை. அவனைப் பற்றி அறிந்தவராயிற்றே.. இருந்தும் விக்ரமை அவருக்குப் பிடித்துப் போனது. அது அவனது முக ஜாடையா? இல்லை யாருக்கும் அடங்காத தன் மகள் அவனிடம் அடங்கியதாலா.. ??

இப்படியே இவர்களின் பொழுது ஓடியது.

கொஞ்ச நேரத்தில் டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு அவரை பார்க்க அனுமதி தரவும் அம்முவும் அவளது தந்தையும் உள்ளே சென்று விட்டனர்.

விக்ரமிற்கு சரியாக அந்நேரம் பார்த்து அவசர அழைப்பொன்று வர இவர்களிடம் சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.

அம்முவின் தாயாரைப் பார்க்காமலே செல்ல வேண்டும் என்பது அவனது விதியோ...??

போக முதல் வாசலில் வைத்து அம்முவிடம் ஆயிரம் பத்திரம் கூறி விட்டே சென்றேன். உள்ளே நுழைந்தவள் நிற்கக் கூட பொறுமையற்று தாயருகில் ஓடிச் சென்று அவரது கையைப் பிடித்தழ, அவளது அழுகை சத்தத்தில் கண் விழித்தார் அவளது அம்மா.

கணவரைப் பார்த்து புன்னகைத்தவர் மகளது தலையை தடவி விட அவளோ "அம்மா..அம்மா ஏன்மா இப்படி..? நான் பயந்துட்டேன்மா..." என்றவாறு அவரது நெஞ்சில் சாய்ந்தழுதாள்.

அவளை கஷ்டப்பட்டு அணைத்தவர் "அது தான் வந்துட்டேன்லமா..." என கூற கொஞ்சம் அழுகையை நிறுத்தினாள் அம்மு. பின் அவருக்கு உணவூட்டி மருந்து கொடுத்து தூங்க வைக்கவே அவர்களுக்கு நேரம் சென்று விட்டது.


தொடரும்...


தீரா.