• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன்னால் உயிர்த்தேன் - 24

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
அத்தியாயம் 24


இரத்தத் துளிகளுடன் தன் பார்வையை ஓட விட்டவளின் கண்களுக்கு அவனது அறை தென்பட இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.

அடுத்த நிமிடம் எதையும் பற்றி யோசிக்காமல் தடதடவென படிகளில் ஏறி சென்று விட்டாள்.

ஆனால் ரூமிற்கு அருகில் வந்தடைந்தவளுக்கு அவனுக்கு என்ன ஆனது என்பதை பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் சிந்தனையில் இல்லாததால் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தாள். கையில் இரத்தம் சொட்டச் சொட்ட அங்கும் இங்கும் மறு கையால் தலையை கோதிய வண்ணம் நடந்து கொண்டிருந்தவனுக்கு கதவு திறக்கப்பட கோபத்துடன் திரும்ப அங்கு தன் மனதை கொள்ளை கொண்டவளை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அவன் புரியாமல் விழிக்கவே கண்களில் கண்ணீருடன் ஓடிவந்து அவனை மேலிருந்து கீழ் தவிப்புடன் பார்த்தாள். அப்பொழுதுதான் அவளுக்கு அவனது கையிலுள்ள காயம் தென்பட பதறிவிட்டாள். அவனோ அவள் வந்தது முதல் இப்பொழுது அவளின் பார்வையில் உள்ள தவிப்பு வரை அனைத்தையும் ஒருவித குழப்பத்துடனே பார்த்து நின்றவனுக்கு அவளின் பார்வை ஓரிடத்தில் நிலைத்திருப்பது பட தானும் குனிந்து பார்த்தான்.

அப்பொழுது தான் சுய உணர்வு பெற்றவன் தன் கையை பார்த்து, ஓ..சிட்.. என உதற இவள் பதறிப்போய் அவன் கையைப் பிடித்து, "என்னங்க ஆச்சு..?" என வினவ அவளின் செயலை விசித்திரமாக பார்த்தான் என்றால் இப்பொழுது அவள், அவன் கையை தானாகவே பற்ற உள்ளுக்குள் மின்சாரம் பாய்ந்தது ஆடவனுக்கு. அவள் அத்துடன் நின்றாளா!!! ஓடிச்சென்று ஃபர்ஸ்ட் எய்ட் பாக்சை தேடி எடுத்து வந்தவள் கண்களில் கண்ணீருடன் அவனுக்கு மருந்திட ஆரம்பித்தாள்.

ஏதோ தனக்கு காயம் ஏற்பட்டது போலவே அவளின் ஒவ்வொரு செயலும் இருந்தது. இந்த வேங்கையோ,மனதில் குதூகலத்துடன் மௌனமாக அவளிடம் கையைக் கொடுத்து விட்டு ரசித்துக்கொண்டிருந்தான். உச்சி முதல் பாதம் வரை அவளை மேய்ந்த அவனின் பார்வை அடுத்து காதலாக அவள் மீது படிந்தது. "இவள் என்னவள்" என்று அவனது மனதில் தோன்றாமல் இல்லை. அத்தனை அழகு பதுமையாக இருந்தாள் அக்ஷய ப்ரியா.

அவள் மருந்திட்டு கொண்டிருக்க அவள் உச்சி முடி வந்து அவள் முகத்தின் முன் விழுந்தது. அதுவும் அவள் அழகுக்கு இன்னும் மெருகூட்டிட வலது கையை அவளிடம் நீட்டி கொண்டிருந்தவன் தன் ரசனையை குழப்புவதாக அந்த முடி வந்து விழுந்தது என நினைத்தானோ? தன் மறுகையால் உச்சி முடியை எடுத்து அவள் காதோரம் செருகினான்.

இவனின் செயலை சற்றும் எதிர்பாராதவள் அதிர்ந்தே விட்டாள்.

சட்டென நிமிர்ந்து பார்க்க அதற்கிடையில் தன் பார்வையை மாற்றிக்கொண்டான் ஆதவ் க்ரிஷ்... அப்படி அவன் தன் பார்வையை மாற்றாமல் இருந்திருக்கலாமோ?? அப்பொழுதே அவள் அவளுக்கான முழு காதலையும் அவன் கண்களில் பார்த்திருப்பாளோ??என்ன செய்வது...விதி அவளை இன்னும் காத்திருக்க வைத்தது. பார்வையை மட்டும் தான் மாற்றினான். ஆனால் கை இன்னும் அதே இடத்தில் அவளின் காதுக்கும் கன்னத்துக்கும் இடையே சஞ்சரித்துக் கொண்டிருந்தது. இவளோ ஒருவித அவஸ்தையுடன் நெளிய, அவனோ இன்னும் அவளை ரசிப்பதை மட்டும் விடவில்லை.

அவள் தலை குனிந்து இருக்க மீண்டும் தன் பார்வையில் காதலை கவ்வி கொண்டவன், தன் ஒரு கையால் அவள் கன்னத்தை வருடிய வண்ணம் மெல்ல அவள் அருகில் குனிந்து மென்மையாக தன் முதல் முத்தத்தை அவள் நெற்றியில் பதித்திருந்தான் ஆதவ் க்ரிஷ்.

அவஸ்தையுடன் இருந்தவள் சற்றும் அவனிடமிருந்து இப்படி ஒரு செயலை எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் முத்தமிட்டதில் கல்லாய் சமைத்து அமர்ந்துவிட்டாள். இவன் முதல் முத்தத்தை பதித்த திருப்தியில் அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருக்க அப்பொழுதுதான் சுயசிந்தனை அடையப் பெற்றவள் கன்னத்தின் மீது இருந்த அவன் கையை தட்டி விட்டாள் தன்னிலை உணர்ந்தவளாக.

அவள் தட்டி விடுவாள் என்று எதிர்பாராத அவனோ அவளைச் செல்லமாக முறைக்க அவளோ இவனுக்கு என்ன ஆயிற்று என்று குழம்பிப்போய் இதற்கு மேலும் நிற்க முடியாமல் கண்கள் கலங்க எழுந்து சென்று விட்டாள். போகும் அவளையே, "இனி எத்தனை நாட்களுக்குத்தான் என்ட இருந்து இப்படி தள்ளி இருக்கிறேனு நானும் பார்க்கின்றேன்" என கிண்டலாக நினைத்து விட்டு அவளின் நெற்றியில் பட்ட தன் இதழை லேசாக கடித்த வண்ணம் தலைகுனிந்தான்.

கன்னங்கள் சிவக்க பெண்கள் வெட்கினாள் எப்படி அழகோ அது போல பார்ப்பதற்கு அரிய ஆண்களின் வெட்கமும் அத்தனை அழகாக இருக்குமோ!!? அப்படித்தான் இருந்தது ஆதவின் வெட்கமும்..


...


தலை குனிந்திருந்தவன் ஏதோ நினைவு வந்தவனாக... "ஓய்..கொஞ்சம் நில்லு..." எனக்கூற வாசல் படி தாண்ட எத்தனித்தவளின் கால்கள் அவனின் குரலில் தடைப்பட்டு அந்தரத்தில் நின்றது.

ஆனால் அவள் திரும்பவில்லை. இவனோ எழுந்து சென்று அவளின் கன்னத்துக்கு மிக அருகே தன் முகத்தை கொண்டு சென்றவனாக மிக மிக மெல்லிய குரலில் "ரெடியாகி இரு... ஒரு முக்கியமான இடத்திற்கு போக வேணும்..." என்று மட்டும் கூறியவன் அவள் விழி விரித்து நிற்பதை பார்த்தும் பார்க்காதது போல மீண்டும் தனது அறையினுள் சென்று விட்டான்.

அவளுக்கு கொஞ்ச நேரம் எடுத்தது சுய உணர்விற்கு வர. அந்த நொடி எப்படித்தான் சென்றாள் என எண்ணுவதற்குள் தனது அறையினுள் தஞ்சமடைந்தாள்.

வந்தவள் கதவை சாற்றி விட்டு அப்படியே அதிலே சாய்ந்து நெஞ்சை பிடித்துக்கொண்டு ஆழ பெருமூச்சுகள் எடுத்து விட்டுக்கொண்டிருந்தாள்.

ஆதவின் சத்தம் கேட்டு நின்ற அவளின் கால் அமைதியாக தரையில் பதிந்தது. எனினும் அவள் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் அவன் இப்படி பக்கத்தில் வருவான் என எதிர்பாராதவளுக்கு அவனின் காலடியோசை தன்னை நோக்கி வருவதை கேட்டு நெஞ்சம் படபடத்தது. அப்படியே அவன் அடுத்து செய்த செயலில் அதிர்ந்து நின்று விட்டாள்.

அவள் சர்வநிச்சயமாக இப்படி ஒரு செயலை எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே அவன் செயலில் விதிர்விதிர்த்து போய் நின்றவள் இப்பொழுது அவன் தன்னை உரசி நிற்க உடலிலுள்ள கோடானகோடி செல்களும் உயிர்த்தது போல சிலிர்த்து நின்றன.

ஆணின் ஸ்பரிசம்; அதுவும் தன் காதலுக்குரியவனின் ஸ்பரிசத்தில் முதன் முதலில் பெண்ணவளின் உள்ளம் தடுமாறியது. இத்தனை நாளும் அவனை ஏற்க முடியாமல் தவித்த அவளுக்குள் எந்த உணர்வுமே இல்லை... ஆனால் இன்று ஏனோ தான் உயிர்த்தது போல உணர்ந்தாள் பாவை.
படபடப்பு மாறாமலே தனதறை வந்தவளுக்கு அவன் சொன்ன செய்தி மட்டும் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது.

"எங்கே செல்லவேண்டும்? எதற்காக என்னை அழைக்கிறார்?" இது மட்டுமே அவளின் கேள்வியாக இருந்தது. இருந்தும் பதில் தான் அவளுக்கு கிடைக்கவில்லை. இப்படியே இருந்தவளுக்குள் தான் அந்த முக்கியமான கேள்வியும் உதித்தது. "இந்த கொஞ்ச நாட்களாக மட்டும் ஏன் இவர் ஏதோ மாதிரி நடந்து கொள்கிறார்...?" என்று அவளுக்குள் இப்போதுதான் தோன்றியது. "ஒருவேளை தன்னைக் காதலிக்கிறாரா?" என்று சிந்தித்தவளுக்கு உலகையே வென்ற உவகை தோன்றி அடுத்த நிமிடம் "ச்சே...ச்சே... அப்படி இருக்காது" என்று மறுமனம் வாதிட உள்ளம் கசந்து போனது பேதைக்கு...

இருந்தும் அந்த மற்ற மனம் சொன்ன செய்தியை அவள் ஏற்றுக் கொண்டாள். நிச்சயம் அது காதல் இல்லை...வரவும் வராது என்றே நம்பினாள். அவள் அறியவில்லை அவனுள் தனக்கான காதல் முளைத்து பெரிய விருட்சமாக மாறி இருக்கும் செய்தி..
விதி வலியது...

அந்தப் பெரிய இருட்டு அறையில் ஓர் உருவம் கதிரையில் கட்டப்பட்டிருந்தது.

"தண்ணீர்..தண்ணீர்.." என்ற முனங்கல் சத்தம் மட்டுமே அந்த அறையினுள் நிரம்பியிருந்தன...

ஆள் அரவமற்ற ஒரு இடம். ஓர் ஈ காக்கா கூட அங்கு இல்லை. முனங்களுக்கு பதில் கூறுவோரும் யாரும் இல்லை.

இரத்தத்தில் மூழ்கியிருந்த அந்த உருவம் எத்தனை நாள் தான் இப்படி இருந்ததோ தெரியவில்லை இறுதியாக "த...தண்ணி.." என்று முழுதாக முடிப்பதற்குள்ளே தன் உயிரை நீத்தது...


*****


அதேசமயம் அங்கே தயாளனுக்கு ஏதோ தவறு நடப்பதை போல தோன்றியது. திடீரென படபடப்பு ஒட்டிக்கொள்ள எழுந்து அங்குமிங்கும் நடந்தவருக்கு நெஞ்சை அழுத்த, அப்படியே இடது மார்பில் கை வைத்தவர் வலி தாங்க முடியாமல் ஆஆஆ... என கத்திய வண்ணம் மயங்கி சரிந்தார். அவரின் துர்ப்பாக்கியமோ!! அவர் இருந்த இடத்தில் யாருமே இல்லை.

எட் த சேம் டைம், ஆதவின் தொலைபேசி ஒலி எழுப்பியது. தன் மனையாளின் சிந்தனையில் அமர்ந்திருந்தவனை தொலைபேசி ஒலி கலைக்க ப்ச்.. என்று சலித்த வண்ணம் தொலைபேசியை அட்டண்ட் செய்து காதில் வைத்தவனுக்கு மறுமுனையில் கூறப்பட்ட செய்தியில் அப்படியே கோபமும் பழி வெறியும் தாண்டவமாடின...

இவ்வளவு நேரமும் சாந்தமாக இருந்த அவனது முகம் அந்த தகவலில் சிவந்து செந்தனல் போல் ஆகியது. ஆனால் மறுமுனையில் கூறப்பட்ட செய்தியோ இவனுக்கு சந்தோசம் அழிக்கப்பட வேண்டிய செய்தி... இருந்தும் அவனுக்கு தன் சந்தோஷத்தை விட தன் குடும்பத்தை அழித்த கொடூர அரக்கனை கொன்று புதைக்க வேண்டும் என்ற வெறி தான் தோன்றியது...

ஆம், அந்த இறந்துபோன உருவம் வேறு யாருமில்லை. இத்தனை நாளும் ஆதவின் கை சிறைக்குள் இருந்த சாக்ஷாத் தயாளனின் மகன் சிவாவேதான்...

சற்று நேரத்துக்கு முன்பு அந்த பங்களாவினுள் நுழைந்த ஆதவின் கையாள் ஒருவன் அந்த அறையினை வெளிச்சம் ஊட்ட, இத்தனை கொடிய பாவங்களை செய்த அந்த அரக்கன் தலை தொங்கிய நிலையில் அமர்ந்திருந்தான்...

வழமைபோல மயக்கத்தில் தான் உள்ளான் என இவன் நினைத்திருக்க முகத்தில் தண்ணி ஊற்றி எழுப்பப்பட்டான். ஆனால் அவன் எழுந்தான் இல்லை. எனவே சந்தேகத்தில் அவன் அருகில் சென்று மூக்கில் கையை வைத்து பார்க்க அவன் மூச்சு தடைப்பட்டிருந்தது. உடனே ஆதவிற்கு அந்த தகவலை சொல்லி இருந்தான்...

பாவம் ஒன்று உயிர் நீத்த சந்தோசத்தில் அந்த பங்களாவின் மேல் இருந்த பறவைகள் கூச்சல் சத்தத்துடன் கலைந்து பறந்தன...


தொடரும்...


தீரா.