• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன்னால் உயிர்த்தேன் - 26

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
அத்தியாயம் 26

தன் நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்தவர், சரிந்தவர் தான். எவ்வளவு நேரம் அப்படி கிடந்தாரோ தெரியவில்லை. பிரசாத் வந்து பார்க்கும் போதும் அதே நிலையிலே கிடந்தார்.

உள்ளே வந்த பிரசாத் அதிர்ச்சி ஆனது என்னவோ உண்மைதான். ஆனால் அவன் எதற்கு அதிர்ச்சியானான் என்றால்,"என்ன!!?? இவ்வளவு சீக்கிரம் இவனின் உயிர் போவதா..!!?" அப்படின்ற ஒரு நல்ல நோக்கத்திலேயே தான்.

ஓடிவந்த பிரசாத் மூக்கில் கை வைத்துப் பார்க்க அவர் இன்னும் உயிரோடு தான் இருந்தார். அதில் ஒரு பெருமூச்சை விட்டவன் ஒருவனுக்கு அழைப்பை ஏற்படுத்தினான்.

அதேசமயம்அங்கே தன் மனைவியின் சிந்தனையில் மூழ்கி, உதட்டில் ஒட்டிக்கொண்ட குறும்பு புன்னகையுடன் அமர்ந்திருந்தான் ஆதவ்.

திடீரென அவனுடைய தொலைபேசி தன் இருப்பை உணர்த்த அதில் கலைந்தவன், அதில் தெரிந்த நம்பரை கண்டும் நிதானமாகவே அழைப்பை ஏற்று தன் காதில் வைத்தான். பதற்றப்பட்டால் அது ஆதவ் க்ரிஷ் இல்லையே!!

அங்கு கூறப்பட்ட செய்தி என்னவோ தயாளன் பற்றியது தான். ஆனால் மறுபக்கம் பேசியதோ ப்ரசாத் என்பவன்.

என்ன நண்பா குழப்பமா இருக்கா? இருங்கள் உங்கள் குழப்பத்தை தீர்த்து வைக்கிறேன். ஹி..ஹி..ஹி...

இத்தனை நாட்களாக தயாளனிடம் வந்து புதிதாக வேலை பார்த்தவன் வேறு யாருமில்லை சாக்ஷாத் எங்க ஏ.சி.பி நண்பனே தான்... ஏ.சி.பி ருத்ர பிரசாத். இப்ப குழப்பம் எல்லாம் போயிட்டா நண்பா..? ஓகே வாங்க ஸ்டோரிக்குள்ள போவோம்.

தயாளன் என்ற அரக்கனுக்கு ஸ்பையை தூரத்தில் வைப்பதை விட அருகில் இருத்தினால் என்ன என்ற ஒரு ஏடாகூடமான யோசனை ஆதவினுள் முளைத்தது. அப்படி ஏடாகூடமாக அந்த சிங்கத்தின் மூளைக்குள் சிந்தனை வராவிட்டால் தான் அதிசயம். அதிலும் ஆதவ் க்ரிஷ் வித்தியாசமாகவே சிந்தித்தான். வேறு யாரையும் வைப்பதை விட தனது நண்பனை அனுப்பினால் என்ன என்று தோன்றவே ருத்ரனுக்கு அழைப்பெடுத்தான் ஆதவ்.

அவனின் அழைப்பை முதல் ரிங்கிலே ஏற்ற ருத்ரன் காலம் கடந்து தான் சிந்தித்தான் ஏன் இவனின் அழைப்பை ஏற்றோம் என. அந்த தயாளனுக்கு அவனுடைய வீட்டுக்குள்ளேயே ஸ்பை வைக்கனும் என்றது நம்ம ஐயா ஆதவினுடைய வேண்டுகோள். அதுக்கு ஆமா சாமி போடுறது நம்ம ஏ.சி.பி ட வேலை. ஆனாலும் இதுல ஏ.சி.பி ஏஏஏ எதிர்ப்பார்க்காத ட்விஸ்ட் தான் அவனையே ஆதவ் ஸ்பையா போக சொன்னது...ஹா..ஹா ஹா...

அதுக்காக தான் ருத்ரன் இந்த ரியக்ட் பண்ணுறான். பாவம் ஏ.சி.பி க்கே எமன் இந்த ஜென்மத்துல ஆதவ் தான்.

இவர்கள் இருவருடைய ப்ளேன் படியே ருத்ரனும் தயாளனின் இல்லத்தில் வேலைக்கு வந்து சேர்ந்து அவனின் அந்தரங்க விடயங்கள் அனைத்தையும் கண்டறிந்தனர். இது பற்றி எதுவும் அறியாத தயாளன் அநாதையாக மயக்கத்தில் கிடந்தான். பின் இவன் செத்து கித்து தொலைச்சிட போகிறான் என்ற ஒரு நல்ல எண்ணத்துடன் ருத்ர பிரசாத் மற்றைய வேலையாட்களையும் சேர்த்து ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றான். பின்னரே கனிகா, கவிதா இருவருக்கும் தகவல் சொல்லப்பட அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வந்தனர் என்ற கதை நம்ப கூடிய ஒன்றா நட்ப்ஸ்.. கனிகா என்னவோ தன் தாலிக்கு பாதிப்பு வந்துவிட போகிறது என்று கலங்கினார் என்றால் கவிதா அதே திமிரும் ஆணவத்துடனும் முகத்தில் எந்த கவலையின் சாயலும் இல்லாமல் வந்து நின்றாள்.

இவர்களை பார்த்த ருத்ரனுக்கு பரிதாபத்துக்கு பதிலாக கோபமா வந்தது. தன் நண்பனின் சந்தோசத்தையே இல்லாமல் ஒழித்தவர்களை நானும் சும்மா விட மாட்டன் என்று மனதில் சூளுரைத்தவன் கவிதாவை ஆழ்ந்து பார்த்துவிட்டு அவ்விடத்தை காலி செய்தான்.


*****


வெளியே வந்த பிறகு தான் அக்ஷய ப்ரியா ஒன்றை கவனித்தாள். அது மற்ற யாருக்கும் புது ஆடை கொடுத்ததாக இல்லையே. யோசனையுடனே வந்தவள் மரகதத்தின் மேல் மோதி நின்றாள். அவரோ சற்றுத் தடுமாறி விட்டு பின்னர் சிறு புன்னகையுடன் "என்னம்மா...? அப்படி என்னத்த போட்டு கொழப்பிக்கிற" என தன் கிராமத்து பாசையில் வழமை போல பேச அக்ஷய ப்ரியாவும் அவரின் பேச்சில் கவரப்பட்டு சிரிப்புடனே ஒன்றும் இல்லை என சமாளிப்புடன் அவருடன் சேர்ந்து வேலை செய்யத் தயாராகினாள். எப்போதுமே அக்ஷய ப்ரியாவிற்கு மரகதத்தின் பேச்சில் ஓர் ஈர்ப்புண்டு. அவர் கிராமத்து பாசையை சேர்த்து பேசுபவர்...

இப்போது அவளின் கை காயங்கள் எல்லாம் மறைந்திருக்க அவள் செய்யும் வேலைகளை மரகதம் தடுப்பதில்லை. எனினும் அவளை அதிகமாக வேலை வாங்காமல் கண்டிப்புடனே இருப்பார்.

மதியமாகவும் அவர்கள் உணவை மேசையில் அடுக்கிக் கொண்டிருக்கும் போதே ஆதவ் வந்து கொண்டிருந்தான்.

அவள் அவனை கவனிக்காவிட்டாலும் அவனின் பார்வை என்னவோ அவளையே சுற்றி வந்து கொண்டிருந்தது.

இத்தனை வருடங்கள் கடந்து தனக்காக கிடைத்த பொக்கிஷம் அவள். அதனை இழக்க அவன் விரும்பவில்லை. அதுவுள் தன்னுள் தனக்கே தெரியாமல் இருந்த ரோமியோவை வெளியே கொண்டு வந்த தேவதைப் பெண். ஆக மொத்தத்தில் அவனே அவனுக்காக வந்த வரம் அவள்...

அவளை ரசித்துக் கொண்டே வந்தவன் வேண்டுமென்றே அவளை உரசிக் கொண்டு கதிரையில் அமர எதிர்பாராத நேரத்தில் ஒருவரின் ஸ்பரிசத்தை உணரவும் துள்ளி விலகினாள் ஆதவின் அக்ஷு...

அவனோ இவளொருத்தி... என மனதில் வைது விட்டு மேலும் அவளை சீண்ட நினைத்து தன் வலது கையை ஆர்வத்தில் தூக்கி உதட்டில் வைக்க சென்றவன் ஸ்ஸ்ஸ் ஆஆ என்ற வண்ணம் கையை உதறினான். அவனையே பார்த்திருந்திருந்தவள் அவன் கை உதட்டை நோக்கி செல்லவும் முதலில் புரியாமல் விழித்தவள் பின்பு புரிந்து கொண்டு திரு திருவென முழிக்கவும் அவன் அலறவும் சரியாக இருந்தது. என்னானதோ என்ற பயத்தில் அவள் அவனை பார்க்க அப்போது தான் அவனின் கை காயம் தென்பட்டது. இதுவரையில் மனைவியின் எண்ணத்தில் உணராதவனுக்கு அதன் வலி இப்போது தான் தோன்றியது. வலியில் பல்லை கடித்துக்கொண்டு அமர்ந்தவனுக்கு பசி வேறு ஒரு பக்கம் எரிச்சலை கொடுத்தது. இதுவரை யாருடைய உதவியையும் நாடிச் செல்லாதவன் இடது கையால் சாப்பாட்டை எடுக்கப் போக அதுவும் முடியாமல் போக டேமிட் என்ற வண்ணம் அவளை நிமிர்ந்து பார்த்தவன் பார்வையில் "எனக்கு பரிமாறமாட்டியா?" என்ற கேள்வி தொக்கி நின்றது.

பின் அவள் அசையாமல் இருக்கவும் எழ எத்தணிக்க மரகதமோ த...தம்பி என்ற வண்ணம் அவனை அமர வைக்க முயற்சி செய்ய அவனும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு அமைதியாக அமர்ந்துவிட்டான்.

அடுத்தவர்களுக்கு காட்சிப் பொருளாக இருக்க அவன் விரும்பவில்லை என்பது தான் அவனின் இந்த செயலுக்கு காரணம். ஆரம்பத்தில் அவளை சீண்ட நினைத்த அவன் செயலே அவனுக்கு வினையாகிப் போன கடுப்பில் இருந்தவனுக்கு பசியும் இயலாமையும் ஒன்று சேர்ந்து வர கோபமாகினான் காளை.

அக்ஷய ப்ரியாவோ என்ன செய்வது என குழம்பிப் போய் நிற்க மரகதம் தான் நிலமையை சரி செய்யும் பொருட்டு அவளை கிட்சனினுள் அழைத்து சென்றார்.

"அம்மாடி தம்பிக்கு சாப்பிட முடியாம இருக்குமா. அது நீ ஊட்டி விடனும்னு எதிர் பார்க்குதோ என்னவோ..." என அனுபவசாலி அம்மா பேசவும் இவளுக்கு தான் கையாலாகாத நிலையாகிப் போனது. "நா...நான் எப்படி அவருக்கு?" என அதிர்ச்சியுடன் அவள் அவரை பார்த்து கேட்க "இதுல என்னம்மா இருக்கு. கணவனுக்கு மனைவி ஊட்டி விடுறதுல எந்த தப்பும் இல்லம்மா...போமா போ...தம்பி பாவம் பசில இருக்கு" என கூறவும் அவனுக்கு ஊட்டி விடுதல் என்பதை விட அவன் பசியுடன் இருக்கிறான் என்பதே அவள் மனதில் ஆழமாக பதிய ஏதோ பொம்மை போல நடந்தாள் பெண்ணவள்.

அவள் வருவதை கவனித்தவன் சாப்பாட்டு தட்டை தன் பக்கம் நகர்த்தினான். இயல்பாக பெண்களிடம் இருக்கும் தாய்மை குணம் தலை தூக்க தட்டில் உணவை வைத்தவள் ஒருமுறை அவனை நிமிர்ந்து பார்க்க அவனோ ஆவலுடன் அவளை பார்த்திருந்தான்.

அவனை ஏமாற்ற மனமில்லாமல் கைகள் நடுங்க உணவு கவலம் ஒன்றை எடுத்து அவன் வாயருகே கொண்டு செல்ல அவனும் அவளை பார்த்துக் கொண்டே உணவை தன் வாயினுள் எடுக்கவும் அவளின் கண்ணீர் துளி பூமியை எட்டிப் பார்க்கவும் சரியாக இருந்தது. அவள் அறிந்தமட்டில் ஒருவருக்கு இதுவே முதல் தடவை உணவை ஊட்டுகிறாள். அது அவளுக்கு ஆனந்தக்கண்ணீராக வெளிப்பட அவனுக்கோ தன் அன்னையை பல வருடம் கழித்து நேரில் பார்ப்பது போல இருந்தது. அதில் அவன் கண்கள் சிவந்திருக்க அவளோ மறுபடியும் அன்று போல கோபத்தில் எழுந்து சென்று விட போகிறான் என பயத்தில் அவனை பார்த்தாள்.

ஆனால் அவள் நினைத்ததுக்கு மாறாக அவன் அசையாமல் உண்டு முடிக்கவும் அவளோ உச்சி குளிந்து சந்தோசமாகவே அடுத்த கவலத்தை எடுத்து நீட்ட ஆதவோ சமத்தாக உண்டு முடித்தான். பின் தட்டிலே கையை கழுவியவன் அவளின் முந்தானையை எடுத்து வாயை துடைத்துவிட்டு தோட்டத்தை நோக்கி தன் நடையை கட்டினான். அவனுக்கு மனம் முழுக்க மகிழ்ச்சி நிரம்பி இருந்தது. இது நாள் இருந்த அழுத்தம் எல்லாம் நீங்கி மனநிம்மதியை உணர்ந்தான் ஆதவ்.

அவளோ இப்படி செய்வான் என எதிர்பாராதவள் அதிர்ந்து நின்றாள்.

இவர்களை இவ்வளவு நேரமும் பார்த்து கொண்டு இருந்த மரகதம் அக மகிழ்ந்து போனார் ஆதவை நினைத்து. இறைவனிடம் இவர்களின் நல்வாழ்வுக்காக பிராத்தனையை வைத்தவர் அவ்விடம் விட்டகழ்ந்தார்.

சமயலறையில் மீதி வேலைகளை பார்த்துவிட்டு தனதறை வந்த அக்ஷய ப்ரியாவிற்கு அப்போது தான் ஆதவ் கூறிய விடயம் நினைவில் வந்தது. "அவர் இன்று எங்கோ செல்ல வேண்டும் என்று கூறினாரே...எங்கே!? எதற்காக!? அது அனைத்தையும் விட நான் எதற்கு!!? ஏன் என்னை அழைத்தார்!!? எப்படி செல்வது!!?" என ஒரு தடவையில் பல கேள்விகளை கேட்டு விட்டு விடை தெரியாமல் விழி பிதுங்கி நின்றாள்.

அங்கும் இங்கும் நடந்து கொண்டே யோசனையில் மூழ்கி இருந்தவளை அந்தப் பக்கம் தனது அறைக்கு செல்லவென வந்த ஆதவ் கவனித்திருந்தான். "என்னாச்சு இவளுக்கு?" என யோசனையில் நெற்றியை சுருக்கியவனுக்குள் மின்னலென ஒரு ஐடியா தோன்ற வந்த வழியே படியிறங்கி சென்றான்.

அவன் சென்ற அடுத்த நிமிடமே அக்ஷய ப்ரியாவின் அறையின் முன் வந்து நின்றார் அவனிடம் வேலை பார்க்கும் வயதான நபர் ஒருவர்.

அவள் அவரை கவனிக்கும் நிலையில் இல்லை. அவரோ என்ன செய்வதென யோசனையில் நின்றவர் பின் ஆதவின் முகம் மனக்கண்ணில் தோன்ற பயந்து போனவர் அவளின் அனுமதி வேண்டி அவள் அறை கதவை தட்டினார். இருந்தும் என்ன பயன் அவள் சிந்தனையில் இருந்து வெளியே வரவில்லை.

என்ன செய்வதென அறியாத அவரும் தோளில் கிடந்த தன் துண்டை கையில் எடுத்து அம்மா என்று அழைக்க யோசனையுடனே திரும்பியவள் அங்கு நின்ற வயதானவரை கண்டு இன்னும் குழம்பி என்ன என மென்மையாக கேட்க அவளது மென்மையில் அக மகிழ்ந்து போனார். பணக்கார வீட்டு எஜமானி என்றாள் திமிர் ஆணவம் என்று அவரவர் நினைத்திருக்க இந்த நவீன யுக யுவராணியோ அமைதியின் மறு பிறவியாக பணத்தின் மேல் மோகம் இல்லாத தனது அழகில் கர்வம் கொள்ளாத பேதையாக இருந்தாள். இதுவே அனைவரும் அவளிடம் சாதாரணமாக பேச இருந்தது. ஆனால் அவளின் இந்தக் குணம் தான் ஆதவே அவள் வசம் இழந்து நிற்க காரணமும் என பாவம் இந்த தேவி அறியவில்லை... இனியும் அவளை அப்படி விட விதி விரும்பவில்லையோ, அவளின் வசந்தம் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தது புயலென. இந்தப்புயல் அவளை மீண்டும் வாழ்வின் இருண்ட பக்கத்தை கண்டு விட்டே செல்ல வேண்டும் எனவும் நினைத்திருந்தது தான் இங்கு துரதிஷ்டமே...

வந்தவர் அவளை தன் பதிலுக்காக காத்திருக்க வைக்காமல் "அம்மா! ஐயா இந்த அறையை சுத்தம் செய்ய சொல்லி இருக்கிறார்" என கூற அந்த ஐயா ஆதவ் தான் என தெரிந்திருந்தும் அவள் மறு பதில் பேசுவாள்? சரி என தலையாட்டியவள் அறையை விட்டு வெளியேற அவ்விடம் வந்து சேர்ந்தான் ஆதவ் க்ரிஷ்.

அவனை எதிர்பாராதவள் அவனில் மோதி விழ போக இனியும் உன்னை வாழ்வில் வீழ விட மாட்டேன் என அரணாக தன்னுள் தாங்கினான் கதாநாயகன்.

அவளோ அச்சத்தில் கண்களை மூடி இருக்க மூடிய விழிகளினுள்ளும் அவள் கருமணியின் அசைவில் பித்தனானான் ஆடவன்.

இன்னும் விழாமல் இருக்கக் கண்ட அக்ஷயா கலங்கிய கண்களை திறந்து பார்க்க தன்னை தாங்கி இருந்தவனை கண்டு பயந்து போனவள் சடார் என அவனில் இருந்து விலகி நிற்க அவளை அனல் கக்கும் பார்வை பார்த்திருப்பது ஆதவின் முறையானது. பின் தன்னை கட்டுப்படுத்தி கொண்டவன் "என்னாச்சு?" என எதுவும் அறியாதவன் போல உள்ளே எட்டிப் பார்க்க அவளுக்கோ வார்த்தை தந்தியடித்தது. அவளிடமிருந்து பதில் கிடைக்காததால் மீண்டும் முன்னே வந்து அவளை பார்த்தவன் "கேக்குறன்ல..என்னாச்சு?" என மீண்டும் கேட்க அவன் பேச்சில் காரம் ஜாஸ்தியானதை உணர்ந்தவள் "அ..அது வந்து...இ..இந்த அறைய க்ளீன் பண்ணப் போறாங்க" என கூற அவளின் ஸ்டடரிங்கை கவனித்தவன் வழமை போல மில்லிமீற்றர் அளவில் தன் இதழ்களை விரிக்க அதுவோ அவன் மீசையினுள் புதைந்து போனது... எனினும் அவனுக்கு இவளின் ஸ்டடரிங் ஏனோ வலியையும் கொடுக்கும். தன்னை கண்டு பயப்படுகிறாள் என்பதே அவனின் இழிவான செயல்களை அவனுக்கு படம் போட்டு காட்டும்.(வார்த்தைகள் தடுமாறி அல்லது நின்று நின்று வருவதையே ஆங்கிலத்தில் Stuttering என்று குறிப்பிடுவர். சிலருக்கு பிறந்ததில் இருந்து இது ஒருவகை டிசோடர் ஆக இருக்க இன்னும் சிலருக்கு அதீத பயத்தினால் இப்படி ஆவதுண்டு. இதில் அக்ஷயா இரண்டாவது ரகம். இவர்களின் பயத்தை போக்கினால் தானாக இந்த ஸ்டடரிங் நின்று விடும். எனினும் முதலாவது கூறப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை மூலமே அதனை குணப்படுத்தலாம்.)

சரி அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்? என காயப்பட்ட தன் கையை காற்றில் விட்டவன் இடது கையை பேன்ட் பாக்கெட்டில் இட்டு நின்ற தோரணை அவளுக்கு பயத்தை உண்டு பண்ண முந்தானை நுனியை கையில் சுற்றிக் கொண்டு அமைதியாக அதே சமயம் என்ன பேசுவதென தெரியாமல் தவிப்பாய் நின்றிருந்தாள்.

அவளின் செயல்கள் அவனை வெகுவாய் கவர கண்ணில் அவளுக்கான முழுக் காதலையும் தேக்கி நின்றவாறு "வா என் கூட" என அவனின் அறைக்கு அழைத்து விட்டு தன் அக்மார்க் நடையுடன் முன்னே நடந்தான்.

அவன் போவதையே ஆஆஆஆஆ வென அதிர்ந்து பார்த்து நின்றாள் காரிகை.

அறையினுள் வந்தவன் எதேச்சையாக திரும்ப அவன் கண்ணில் பட்டதோ தன் உருவத்தை காட்டி நின்ற ட்ரசிங் டேபில் கண்ணாடி.

அப்படியே தன்னை பார்த்த வண்ணம் கண்ணாடியின் அருகில் சென்றவன் கால்களை அகல வைத்து நின்று இடது கையால் தன் தாடையை அப்புறம் இப்புறம் என திருப்பியவன் மனதினுள்..."பார்க்க பேய் மாதியா இருக்கன்" என நினைத்தவன், "பின்ன ஏன் என்னை காணும் போது பேயை கண்டது போல விழிக்கிறாள்???" என்றவனுக்கு உண்மையிலே தான் பேய் போல இருக்கிறமோ என்ற சந்தேகம் தான் எழுந்தது. அவளின் நடத்தை அவனையே அவனுக்கு அப்படி காட்டிக் கொடுத்திருந்தது...ஹா..ஹா..ஹா..இது நான் சிரிக்கல அவனுடைய மனசாட்சியே அவனை பார்த்து சிரிக்க இரண்டு கொட்டு வைத்து அதனை அடக்கியவன் தன் எண்ணம் செல்லும் திசையை நினைத்து வெட்கினான்.

பின் அப்படியே யூ டேன் போட்டவனுக்கு அவள் இன்னும் வராமல் இருப்பது நினைவில் வர வெளியே சென்று எட்டிப் பார்க்க அவளோ ஆஆஆ வென அதே போசிலே நின்றாள்.

அவளை உற்று நோக்கியவன் அவளருகில் சென்று சொடக்கிட அப்போதும் அதே நிலையில் இருக்க யோசனையுடனே தோளை தொட்டு உலுக்க ஆஆஆஆஆஆ என்ற அழறலுடன் அவன் கை சந்தை பற்றிக் கொண்டாள் அக்ஷயா...

அவனோ வேற்றுக்கிரகவாசியை பார்ப்பது போல அவளை பார்க்க அவளின் அறை உள்ளே இருந்து சத்தம் கேட்டு அடித்துபிடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார் அந்த வயதானவர்.

அவரை கண்டவன் செல்லுமாறு சைகை காட்ட தவறான நேரத்தில் வந்து விட்டோமோ என்ற சங்கடத்துடனே அவ்விடம் விட்டகழ்ந்தார் அவர்.

அவளோ நடுக்கத்துடன் அவனை பற்றி நிற்க அவனுக்கோ இந்த நிமிடம் அவளிடம் பயம் இல்லாமல் இப்படியே நீளாதா என்றிருந்தது. பின் அவளை ஒருநிலைக்கு கொண்டு வருவதே கருத்தில் பட அவளினை மறுகையால் உலுக்கியவன்..ஹேய் என நடப்புக்கு கொண்டு வந்திருந்தான்.

நினைவுக்கு வந்தவளோ அப்போது தான் தன்னை உணர்ந்தாள். உணர்ந்த நொடி ஆதவின் கையை விட்டு விலகியவள் சங்கடத்துடன் ஆட்காட்டி விரல் நுனியை வாயருகே கொண்டு சென்று கடித்தவள் தலை குனிந்து நிற்க முதன் முதலாக தன் முத்துப் பற்கள் தெரிய அழகாக சத்தம் வராமல் சிரித்தான் காளை...


தொடரும்...


தீரா.


அக்ஷய ப்ரியா அவனின் அறையினுள் செல்லுவாளா!?