அத்தியாயம் 29
விதுவிற்கு இப்போது அனைத்தும் புரிந்தது. தான் இத்தனை நாட்களும் நண்பனாக நினைத்துக் கொண்டிருந்தவன் தன் அண்ணனா?? என்பதே அவளுக்கு சந்தோஷம் கலந்த அதிர்ச்சியாக இருக்க கண்களில் விழிநீர் கோர்த்திருக்க விக்ரமை நிமிர்ந்து பார்த்தாள்.
அவனும் இவ்வளவு நேரமும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவளது உணர்ச்சிகளை படித்தவன் போல புன்னகையுடன் நிற்க விதூர்ஷன ப்ரியா என்ன நினைத்தாளோ "உன்னைய என் அண்ணனா எல்லாம் ஏத்துக்க முடியாது" என விழிகளில் கோர்த்திருந்த நீர் வழிய போலிக் கோபத்துடன் முகத்தை திருப்ப அவனோ வாய்விட்டு சிரித்தவன் ஹா..ஹா அப்படியா..? என்ற வண்ணம் அவளருகில் சென்று அவளின் தோளை சுற்றி கை போட்டுக் கொண்டவன் "எனக்கு நீ எப்பவும் என் பெஸ்ட் ஃப்ரெண்ட் தான்" எனக் கூற திரும்பி அவனை முறைக்க நினைத்து சிரித்து வைத்தாள் விது...
தன் சந்தோஷம் மீண்ட திருப்தியில் சங்கவியும் அமர்ந்திருக்க இருவரும் அவர் அருகில் சென்று ஆளுக்கு ஒரு பக்கம் அமர்ந்தனர். விதுவோ அவரை கேலி செய்ய நினைத்து "சங்கவி... உங்கட மகன் வந்துட்டானு என்னய கலட்டி விட நெனச்சிங்க அப்பறம் மர்கயா தான்" என கொலை செய்வதை போல சைகை காட்ட அவரோ தன் கவலை நீங்கி பற்பல வருடங்கள் கழித்து மனதார சிரித்தார்.
பின் விக்ரமிற்கு ஏதோ தோன்ற "ஆமா..பேபி மா வ எங்கே?" என கேட்க இருவருக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது. அதில் சங்கவியோ ஒருபடி மேலே சென்று அழுதே விட்டார். அவர் அழுவது தாங்க மாட்டாது "என்னம்மா என்னாச்சு?" என விக்ரம் புரியாமல் பரிதவிப்புடன் வினவ..
என்னவென்று கூறுவார் தன் வேதனையை அந்த தாய்...
"அ..அம்மா சொல்லுங்கம்மா.." என அவரிடமிருந்து பதில் வராமல் இருக்க தவிப்புடன் அவன் வினவ அவரோ அவனை கட்டிக்கொண்டு அழுதார்.
அவரை விடுத்து விதுவிடம் "ஹேய் நீயாச்சும் சொல்லு...நீ கூட இதுவரைக்கும் அவள பற்றி சொன்னதே இல்லையே" என அவளை ஆழ்ந்து பார்த்து கேட்க அவளுக்கும் தன் இரட்டை சகோதரியை நினைத்து உள்ளம் கனத்துப் போக வார்த்தை வரமாட்டேன் என சண்டித்தனம் செய்தது.
பின் விக்ரம் தன் பதிலுக்காக காத்திருப்பது புரிய "அ..அது..அக்.." என கூற வந்தவளுக்கு தொண்டை அடைக்க கண்களிலிருந்து கண்ணீர் உடைப்பெடுத்தது. இருவரினதும் பரிதவிப்பு அவனுக்கு ஏதோ கூற "அ...அவ உயிரோட" என வினவுவதற்குள் அவனுக்கே நெஞ்சம் வெடித்து விடும் போல் இருந்தது. விதுவோ இல்லை என தலையை வலம் இடம் என ஆட்ட அதில் விக்ரமிற்கோ பூமி தன் பாதத்தை விட்டு நழுவுவது போல் இருக்க, கண்கள் இரண்டும் சிவந்து "நீ..நீ...?" என கேட்க அவளுக்கும் தாங்கிக்க முடியாமல் போக பாய்ந்து விக்ரமை கட்டிக் கொண்டு அழுதாள் அந்தத் தங்கை...
அவனோ தன்னை தேற்றிக் கொள்வதா இல்லை அவர்களை தேற்றுவதா என தெரியாமல் கல்லாய் சமைத்து அமர்ந்திருந்தான்.
அவன் மனமோ "இ..இல்லை..இருக்காது..அப்படி...இருக்காது..அ..அவ..என்னுடைய பேபி மா... எங்கயோ உயிரோட தான் இருக்கிறாள்.." என்க விழுக்கென அவனை நிமிர்ந்து பார்த்தனர் அம்மாவும் பிள்ளையும். அவன் மனதில் நினைக்கிறேன் என்று வாய்விட்டு வெளியே சொல்லி விட்டான்.
"எ..என்னப்பா..சொல்லுற?" என சங்கவி கேட்க கண்ணில் நம்பிக்கையுடன் அவன், "ஆங்...அவ உயிரோட எங்கயோ இருக்கா..அவ நிச்சயமா என்னய விட்டுட்டு போ..போய்க்க மாட்ட" என கூற இறுதியில் இலேசாக அவன் குரல் நடுங்கியதோ...!?
அவன் உண்மையை தான் கூறுகிறான் என அதிர்ச்சியுடன் அவ்விருவரும் எழ அவன் தன் மனம் கூறுவதை கூற அவர்களுக்கோ சப் என்றிருந்தது.. இருந்தும் அவனது வார்த்தை தந்த நம்பிக்கையில் "நீ..நீ..சொல்லுறது மட்டும் நடந்தா இந்த உலகத்துல என்னை தவிர ஒரு பாக்கியசாலி இருக்கமாட்டா" என மீண்டும் அவர் அழ..
அவனோ இது நாள் வரையான தன் கனவு, தன் எண்ணம் அனைத்தையும் கூறி அவர்களுக்கு நம்பிக்கை அழித்தான். இல்லாவிட்டால் தனக்கு தானே நம்பிக்கை அழித்துக் கொண்டானோ...!?
அவனின் பேச்சு நம்பிக்கையைத் தர புது தெம்புடன் சங்கவி எழுந்து கொள்ள மூவருமாய் மீண்டும் ஹாஸ்பிட்டலுக்கு சென்று வீடு திரும்பினர்.
*****
ஆதவ் அறையை விட்டு சென்ற பின் தன் உணர்வுகளை மீட்டிக் கொண்டவள் நேரத்தை பார்க்க அது மாலை ஐந்து என காட்ட தான் காலையிலேயே ஆச்சிரமத்துக்கு செல்ல வேண்டும் என எண்ணியது நினைவு வர தனதறைக்கு மீண்டும் சென்றாள்.
அறைக்குள் நுழையும் போதே அவளை கண்டு கொண்ட ஆதவ் அவள் பின்னே சென்றான். அவள் உள்ளே வந்து அந்த சல்லிமுட்டியை தேடி எடுத்துக் கொண்டு திரும்புவதை கண்ட ஆதவின் பார்வை அதில் நிலைத்திருக்க பாதமோ உள்ளே செல்லாமல் வாசலில் நின்று கொண்டது.
அதிலிருந்த வாசகம் அவனை குறி தப்பாமல் பதம் பார்க்க அது அவனவளுக்கும் விளங்கியதோ அதனை தடவிக் கொடுத்தவள் அருகில் இருந்த கதிரையில் அமர்ந்து அதனை கிழித்தெடுத்தாள். அவளின் இந்த செயல் அவனை சிந்திக்க வைக்க கைகளை கட்டிக் கொண்டு அவளையே பார்த்திருந்தான்.
அவளோ தான் உணராமல் செய்த செயலால் தன் கணவனின் மனதை மயிலிறகு கொண்டு வருடுகிறோம் என்பதை அறியாமல் தன் கருமமே கண்ணாக அதனை குப்பை தொட்டியில் இட்டாள்.
அவனுக்கு அது ஏதோ மன நிறைவை தர தன் உடைமையை ரசித்து நின்றான்.
சல்லி முட்டியை எப்படி உடைப்பது என தெரியாது அதன் நீள விட்டங்களை அவள் அளந்து கொண்டிருக்க இவனுக்கோ சிரிப்பு முட்டிக் கொண்டு வந்தது. பின்னர், தனது சத்தத்தில் கலைந்து விட போகிறாள் என வெகு கவனமாக அவன் வாயை மூடி நிற்க மீண்டும் தன் ஆராய்ச்சியை தொடர்ந்தாள் அவள்.
பின் ஒருவாறு உடைப்போம் என திட்டம் தீட்டியவள் அதனை தூக்கினாள். அவளுக்கோ கைகள் நடுங்கியது. முன்ன பின்ன இப்படி செய்திருந்தால் தானே...
பின் ஒருவாறு கீழே போட்டவள் காதை மூடிக் கொள்ள..ஹா..ஹா என சிரிப்பு சத்தம் அந்த அறையை நிறைத்தது..
சட்டென கண்ணை திறந்த அக்ஷயா நிமிர்ந்து பார்க்க அங்கே கதவின் நிலையில் சாய்ந்து கொண்டு கைகளை மார்ப்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு நின்றிருந்தான் அவளின் கணவன்.
அவளோ அவனை விழி விரித்து வியப்பில் பார்க்க அவனுக்கோ இன்னும் சிரிப்பாகியது.
பின் தன்னால் அவள் ஆர்வமாக செய்து கொண்டிருந்த வேலை தடைப்பட்டுப் போனதை பார்த்தவன் அதே மந்தகாச மயக்கும் புன்னகையுடன் அவளறையை கடந்து சென்றான்.
வியப்புடன் பார்த்தாலும் அவன் நின்ற தோரணை அவளை சுண்டி இழுத்தது என்பதே உண்மை. விலக நினைத்தாலும் அவனின் ஒவ்வொரு செயலும் காதல் கொண்ட அவளின் மனதை கவர்ந்திழுத்தது.
இறுதியாக அவன் சிந்திய மந்தகாச புன்னகையில் ஜெர்க் ஆனவள் அப்படியே குனிய நாணயமும் தாள் சல்லியும் சிதறிக் கிடந்தன. பின்னரே தான் செய்ய வந்த வேலை மண்டையில் உறைக்க தலையை அங்கும் இங்கும் ஆட்டி நாணத்துடன் தன் ரோஜா இதழ்களை விரித்தாள்.
அவன் சென்று விட்டான் என அவள் நினைக்க அவனோ மீண்டும் வந்து அவளை பார்த்துக் கொண்டு தான் நின்றான். இம்முறை சற்று மறைவாக...
தன்னவன் தன்னை மறைந்து நின்று இன்னும் பார்த்துக் கொண்டு நிற்கிறான் என்பதை அறியாத அவளோ கீழே அமர்ந்து பணத்தை கணக்கிட தொடங்கி விட்டாள்...
அவளுக்கு வலிகள் மூலம் கிடைத்த பணம் தான் அது என்றாலும் அதில் அந்த ஆச்சிரம பிள்ளைகளுக்கு பொருட்கள் வாங்க நினைத்தது அந்த வலிகள் நிறைந்த சுவடுகளை மறைக்க சந்தோஷத்துடனே அதனை கணக்கிட்டாள்.
அவளின் சந்தோஷமே அவனை பதம் பார்க்கிறது என்பதை பாவம் அவள் அறியவில்லை.
அவள் பணத்துடன் வெளியே வரவும் அவன் தனதறையினுள் புகுந்து கொண்டான்.
பின்னர் டீ சேட்,டெனிம் சகிதம் வெளியே வந்தவன் அதிலும் நேர்த்தியாகவே இருந்தான்.
வெளியே வந்தவன் அவளை தேட அவளோ ஆட்டோ பிடித்து அதில் ஏறிக் கொண்டாள். அவள் பின்னே அவளுக்கென ஆதவ் வைத்திருந்த நம்பிக்கையான காட்ஸ் செல்ல முற்பட அவர்களை தன் பார்வையால் தடுத்தவன் தன் காரிலே பயணப்பட்டான் பின் தொடர்ந்து...
அவனுக்குத் தெரியும் அவள் அந்த ஆச்சிரமம் தான் செல்லுகிறாள் என...
வழி முழுவதும் அவனுக்கு சற்றுமுன் அவள் செய்த குழந்தை தனமான செயலே நினைவு வர சிரித்துக் கொண்டே வந்தான் வேங்கை, அதனை காணும் வரையில்......!! கண்டவன் உயர் மின்சாரம் தாக்கியது போல சடுன் ப்ரேக் போட்டு காரை நிறுத்தியவனுக்கு தன் கண்ணால் பார்த்தது பொய்யோ என தோன்றியது...
ஆனால் பொய் இல்லையே. உண்மை தானே என அவன் இன்னும் பார்த்துக் கொண்டு இருக்கிறானே..!!!
பின் சட்டென நினைவு வந்தவனாக தன் மனைவி சென்ற முச்சக்கர வண்டியை பார்க்க அதிலிருந்து மறுபக்கம் இறங்கிக் கொண்டாள் அக்ஷய ப்ரியா...
அவனுக்கோ குழப்பங்கள் சூழ்ந்து கொண்டன. பின் மனைவியே தனக்கு முதலில் கருத்தில் பட சற்றுத் தள்ளி தன் காரை நிறுத்தியவன் அவளறியாத வண்ணம் இறங்கி சென்றான். ஆனாலும் அவன் கண்டதை இன்னொரு தரம் உறுதிப்படுத்தும் முகமாக அந்த இடத்தை நோக்கிவிட்டு கூலர்சை அணிந்து கொண்டு அக்ஷயாவை பின் தொடர்ந்தான்..
ஆச்சிரமத்தில் காலடி எடுத்து வைத்தது தான் தாமதம் ஹொய் என அனைத்துப் பிள்ளைகளும் அக்ஷய ப்ரியாவை மொய்த்துவிட்டனர்..
அவர்களுக்கு இருக்கும் அன்பான தாய் அவள்... அவர்களை ஆசை தீர கண்டு மகிழ்ந்தவளை சுற்றி "அக்கா எப்படி இருக்கீங்க..?" "அக்கா ஏன் இன்னைக்கு வர லேட்டாச்சு?" "அக்கா இன்னைக்கு சூப்பரா இருக்கீங்க..." இப்படி பற்பல குரல்கள் ஓங்கி ஒலிக்க சமாளிக்க முடியாமல் அவள் தினறுவதை கண்ட கமலாம்மா அவ்விடம் வந்து அனைத்து குழந்தைகளையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். அவளும் புன்னகையுடன் அவர்களை கடந்து சென்று வழமையாக அமரும் மரத்தடியில் சென்றமர்ந்தாள்...
துக்கமோ,சந்தோசமோ, சுகவீனமோ,கோபமோ, வெறுப்போ...அனைத்தையும் கமலம்மாவின் மடியில் படுத்து கொட்டித் தீர்க்கும் அவளது இடமே அது...
இன்றும் அது போலவே இருவரும் அதன் கீழிருந்த கல் பெஞ்சில் அமர்ந்தனர். இவர்களின் நிலை இப்படி இருக்க..அவனோ வேறுமாதிரி உணர்ந்தான்..
அந்த மரம்...அதே மரத்தினடியில் இதற்கு முன் இருந்த அழகான வேலைப்பாடுடன் கூடிய பெஞ்சில் தான் ஆதவும் தன் சுக துக்கத்தை தன் தாய் தந்தையுடன் பரிமாறினான்.
ஏதாவது முக்கியமான அலுவல் என மட்டும் ஓரிரு தரம் இந்த ஆச்சிரமம் வருபவன் இயன்றவரை இங்கு வருவதை குறைத்து விடுவான். அது அவனின் கடந்தகாலத்தின் விளைவால்...
ஆனால் இன்றோ நிலை மாறிப் போய் இருந்தது. இருந்தும் அவன் நினைவுகள் கடந்த காலம் நோக்கி செல்வதை அவனால் தடுக்கமுடியவில்லை..தன்னால் ஆன மட்டும் சிந்தனையை கலைய நினைத்தவன் அக்ஷய ப்ரியாவை பார்த்த நொடி கலைந்து சென்றது தான் விந்தை... மனதை இவ்வளவு நேரமும் அழுத்திய சுமை நீங்கிய உணர்வு அவனுள்..
அவனுக்கு புரிந்து விட்டது, அவனின் இறந்தகால காயங்களின் மருந்தாக இவள் மட்டுமே இருக்க முடியும் என...
முகத்தில் சாந்தம் வந்து ஒட்டிக் கொள்ள ஏஸ் யூசுவல் பேன்ட் பாக்கட்டினுள் கையிட்டவாறு அவளையே விழுங்கிக் கொண்டிருந்தன அந்த கணவனின் கண்கள்..
அக்ஷய ப்ரியாவோ கமலம்மாவின் மடியில் தலை வைத்து கண் மூடி தன் உணர்வுகளுக்கு விடை காண முயற்சித்தாள்...
அவரும் வழமை போல அவளின் தலையை வருடிவிட இவனின் கண்கள் தாய்மையை தத்தெடுத்துக் கொண்டது..
சிறிது நேரம் மூவரும் தங்கள் பிடியில் இருக்க முதலில் கலைந்தவள் அக்ஷய ப்ரியா மெதுவாக எழுந்து அவர் தோள் சாய்ந்து "அம்மா.." என அழைக்க "சொல்லுமா.." என அவரும் உந்தினார் அவளின் மனசுனக்கம் அறிந்து..
"அ..அம்மா இன்னைக்கு ஏனோ என்னுடைய மனசுக்கு சந்தோஷமாக இருக்கு..ஏதோ இனம்புரியாத மகிழ்ச்சி..என்னுடைய வாழ் நாள் தவம் எனக்கு கிடைக்கபோற மாதிரி இருக்கு... அந்த வானத்தில இருக்கிற சூரியன் என்னைய வாழ்த்துற மாதிரி உணர்றேன்" என சிறு வயதில் கமலா அம்மா கூறிய கதையை நினைவு கூர்ந்து அவள் ஏதேதோ கூறினாள்.
அவள் எதற்காக கூறுகின்றாள் என்பது புரியாவிட்டாலும் அவனின் உள்ளமும் இன்று மகிழ்ச்சியை உணருகின்றது என்பது உண்மை தானே..
கமலாம்மாவிற்கு அவள் சந்தோஷமாக இருக்கிறாள் என்பதே உள்ளத்தை பனிசாரலாய் நனைக்க அவளை நிமிர்த்தி உச்சி முகர்ந்தார்...
"உன்ட இந்த சந்தோஷம் நீடிக்கனும்மா" என வாழ்த்தியவர் "ஆமா கண்ணு, தம்பி வரலயா?" என கேட்டுக் கொண்டே அங்கும் இங்கும் தேடிவர் கண்ணில் பட்டான் அடங்கா காளை போல நின்றிருந்த ஆதவ்...
அவனை கண்டவர் சந்தோஷத்தில் அக்ஷயாவை தட்டப் போக அவனோ வாயில் விரல் வைத்துக் காட்டி வேண்டாம் என தலையசைத்தான்..
இவ்வளவு நாளும் விறைப்புப் பேர்வழி என திரிந்தவன் இன்று தன்னுடன் பேசவும் அகம் மகிழ்ந்த கமலாம்மா சிறு புன்னகையுடன் அமைதியாகிவிட்டார்..
அவருக்கு ஆதவின் செய்கை இருவரும் ஒற்றுமையாக இயுக்கின்றனர் என்பதை பறைசாற்றுவதாக தோன்ற மகிழ்ச்சியடைந்தார்...
அவர் கேட்ட கேள்வி அவளுக்கு கசப்பாகிப் போக இல்லை என தலை குனிந்தாள். ங்கே என அவர் முழிந்துவிட்டு "என்னமா சொல்லுற... ஆதவ் தம்பி வரலைனா சொல்லுற?" என கேட்க அவளும் உதட்டை பிதுக்கிக் கொண்டு ஆம் என தலையாட்டினாள்...
என்ன சொல்லுகிறாள் என அவர் குழம்பிப் போய் ஆதவை பார்க்க அவன் அப்போதும் அதே போல நின்றிருந்தான்..
"பின்ன இது யார்ரா..?" என அவர் கை காட்ட அப்போது தான் அவள் நிமிர்ந்து பார்த்தாள். சட்டென எழுந்து நின்றவள் அதிர்ச்சி விலகாமலே அவனை பார்க்க, அவனோ கமலாம்மாவை ஒரு தரம் பார்க்க அவரோ ஏதோ தேவையாக வேறு பக்கம் பார்த்து நின்றார்.பின் இவள் பக்கம் திரும்பியவன் அவளை பார்த்து சட்டென கண்ணடிக்க அவள் கண்கள் இன்னும் விரிந்தன...அதில் அவனது உதடுகளும் விரிந்தன...
புன்னகை மாறாமலே அவளை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான். ஒரு கையில் கூலர்சும் மறுகையை பேன்ட் பாக்கட்டினுள்ளும் வைத்துக் கொண்டு வந்தவன் அவள் கண்ணுக்கு அல்ட்ரா மாடர்ன் ஆகவே விளங்கினான்...
அவனின் தோற்றம் அப்படி. கட்டிளம் காளை போன்ற உடல் கட்டு. முகத்தில் அப்படி ஒரு கலை,தேஜஸ் என கம்பீரமாய் இருந்தான்..
இவன் என் கணவன் என அவளது உள்ளம் பெருமை கொள்ளாமலும் இல்லை.
அவள் தன்னை ரசிப்பது அப்பட்டமாக தெரிய தலை குனிந்து வெட்கப் புன்னகை சிந்தி நிமிர்ந்தான் இந்த அக்ஷய ப்ரியாவின் மார்டன்...
அவர்களருகில் வந்தவன் அவள் அப்போதும் தன்னை பார்த்து நிற்பதை அவஸ்தையாக உணர்ந்தானா...இல்லவே இல்லை..தன் அழகிய பெண் மார்டன் இந்த காளையை ரசிப்பதை பெருமையாகவே நினைத்துக் கொண்டான் ஆதவப் பிறவி..
பின் கமலா தங்களை பார்த்து நிற்பது புரிய அவளின் காதருகே குனிந்து..."என்னைய ரசிச்சது போதும்...மீதிய வீட்டுல கவனிக்கலாம்" என கூற அவளுக்கோ அப்போது தான் தன் நிலை பிடிபட அதற்குள் தன் செவியை தீண்டிய அவன் மூச்சுக் காற்றில் காது மடல் சிவந்து நாணத்திலும் அவன் கூறியதை நினைத்து வாயையும் பிளந்தாள் அக்ஷயா ப்ரியா...
அவனும் அவள் நிலையை இரசித்து விட்டு கண்களால் கமலாவை ஜாடை காட்ட அப்போது தான் அப்படி ஒருவர் அங்குள்ளதே அவளுக்கு மண்டையில் உறைத்தது...
அப்படியே அவரை பார்க்க முடியாமல் தலை குனிய.. இதுவரை இவர்களின் நெருக்கத்தையும் அன்னியோன்னியத்தையும் கவனித்த கமலாம்மாவிற்கு நிம்மதியானது.
பிறகு தான் அவளுக்கு குழந்தைகளுக்கு பொருட்கள் வாங்க நினைத்தது நினைவில் வர வாங்காமல் ஏதோ யோசனையில் வந்த தன் மடத்தனம் புரிய "ஓ சிட்" என்ற வண்ணம் அந்த கல் பெஞ்சில் அமர்ந்து கொண்டாள்..
இத்தனை நாட்களும் இயல்பாக இல்லாமல், தன் உணர்வுகள் என்ன என்பதை வெளியே காட்டாமல் அமைதியாகவே திரிந்தவளது, இந்த சின்னச் சின்ன வெளிப்பாடுகள் ஆதவை அவள் காலடியில் தள்ளிவிட்டன...
"ஹே..என்னாச்சுமா?" என கேட்க...அவளும் ஆதவ் தான் பேசுகிறான் என்பதை உணராமல் "வர்ர வழில இவங்க எல்லாருக்கும் திங்ஸ் வாங்கனும்னு நெனச்சன்..பட்..மறந்துட்டன்" என சோகமாக கூற...இன்று தன்னுடன் திக்கல் இல்லாமல் இயல்பாக பேசும் அக்ஷயாவை இன்னும் இன்னும் பிடித்துப் போக..."அவ்ளோ தான..வெயிட்" என்றவன் தன் காரை நோக்கி சென்றான்..
ம்ம்..என ஏதோ யோசனையில் முனங்கியவளுக்கு அப்போது தான் மணியடித்தது. "தானா...? அதுவும் இவர் கூடயா...?இப்படி பேசிட்டியே அக்ஷயா?" என அவள் புலம்பி முடிவதற்குள் அங்கு வந்து நின்றான் ஆதவ் கையில் பல பொதிகளுடன்..
அவளையே பின் தொடர்ந்து வந்தவன் அவள் குழந்தைகளுக்கு எதுவும் வாங்காமல் செல்வதால் வழியில் அவனே வாங்கிக் கொண்டான் அவர்களுக்கு தேவையானதை...
அவளை அணு அணுவாக காதல் செய்பவனுக்கு தெரியாத அவள் எதற்காக இன்று சல்லிமுட்டியை உடைத்து பணம் எடுத்தாள் என்பது..
அவளிடம் நீட்டி.."கொடு" என கண் காட்ட அவளோ அவனை அசையாது பார்த்து நின்றாள்.
ம்ம்..என அவன் உந்த உடனே தன் நினைவில் இருந்து கலைந்து அவன் திட்டிவிட போகிறான் என பயந்து போயே அவைகளை வாங்கி கமலாவிடம் கொடுத்தாள்...
அவரும் புன்னகையுடனே அதனை வாங்கிக் கொண்டார்..
பின் சில நல விசாரிப்புகளுடன் அவரிடமிருந்து விடை பெற்றனர் இருவரும் ஒன்றாக..
வெளியே வந்தவள் ஆட்டோக்காக காத்திருக்க அவளின் நடத்தையில் கடுப்பானவன் அவளருகில் வந்து "வா என் கூட காரில" என அழைக்க, அவன் அருகில் வந்ததிலே படபடத்தவள் அவன் கடுப்புடன் கூற வே.. வேண்டாம் என மறுக்க போக அவன் முறைத்த முறைப்பில் கப்சிப் என வாயை மூடிக்கொண்டு காரின் அருகே சென்றாள்...
அவள் தன் முறைப்புக்கு கட்டுப்படுகிறாள் என்பதே கணவன் என்ற முறையில் அவனுக்கு மகிழ்ச்சியை தர சிரிக்காமல் கோபம் எனும் முகமூடியை அணிந்தவன் அவளுக்கு கார் கதவை திறந்து விட்டு தானும் ஏறி பயணமானான்...
தொடரும்...
தீரா.