• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன்னால் உயிர்த்தேன் - 30

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
அத்தியாயம் 30

ஆதவும் அவனது மனைவியும் இன்றே முதன் முறையாக தங்கள் காரில் பயணமாகின்றனர். அவனுக்கு இது குஷியாகிப் போக அவளுக்குதான் பழைய நினைவுகள் வந்து மனதை வாட்டின...

சந்தோஷமாக பயணமாக வேண்டியவள் தன் மனதினுள்ளே போராட்டம் நடத்திக் கொண்டிருந்தாள். தன் காதலன் அதுவும் கணவனானவன் அவளருகில் இருக்க அவனுடன் செல்லும் பயணம் அவளுக்கு உள்ளுக்குள் உள்ளத்தை குளிர்வித்தாலும் எப்போதும் போல தகுதியை நினைத்து மருகிக் கொண்டிருந்தாள்.

ஜன்னல் பக்கமாக பாதையை வெறித்துப் பார்த்துக் கொண்டு வந்தவளை காணக் காண அவனுக்குத் தான் மனம் அடிபட்டுப் போனது .

பக்கவாட்டில் தெரிந்த அவளின் முகத்தை பார்த்தே அவளின் எண்ணவோட்டத்தை கணக்கிட்டவன் பாதையின் ஒருவோரம் காரை நிறுத்தினான்.

இப்படி இவன் பாதையில் வண்டியை நிறுத்துவது அவனுக்கு ஆபத்து தான். ப்ரெஸ் மீடியா என அவனின் ஒவ்வொரு அசைவையும் ஒரு கூட்டமே கண்காணித்துக் கொண்டிருக்கிறது. இவனுடன் ஒரு ஃபோடோ சரி எடுத்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்காதா என இளம் வட்டாரமே சுற்றிக் கொண்டிருக்க இவன் தன் ஒவ்வொரு அடியையும் வெகு கவனமாகவே எடுத்து வைக்க வேண்டி இருந்தது. இது வரையில் தனக்கு திருமணம் ஆனதை வெளியில் கசியவிடாமல் கனகட்சிதமாக காயை நகர்த்தி வருகிறான் ஆதவ். எனினும் எப்படியோ வெளியே விடயம் தெரிந்துவிட்டது.

சோ இந்த நேரத்தில் அவன் இப்படி நடந்து கொள்வது தனக்கு எதிராகும் என தெரிந்தும் இன்று, இப்போதே தன் மனைவியுடன் பேச வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தான் ஆதவ் க்ரிஷ்.

அவ்வளவு நேரமும் பாதையை வெறித்து அமர்ந்திருந்தவள் பயணம் தடைப்பட்டு நிற்க அமைதியாகவே அதே நேரம் மனதில் ஆரவாரத்துடனே திரும்பி ஆதவை பார்த்தாள் அக்ஷய ப்ரியா.

அவனும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

மெல்ல அவள் கைகளை தன்னுள் பொத்திக் கொண்டான். எப்பொழுதும் அவனிடமிருந்து விலக நினைப்பவளுக்கு இன்று ஏனோ அவனின் அருகாமை தேவையாக இருந்தது.

அவனும் அவளிடமிருந்து எதிர்வினை வராமல் இருக்க "உன் மனதுல இப்போ என்ன ஓடிட்டிருக்குனு எனக்கு புரியுது..." எனவும் அப்போதும் அவள் அவனை நிதானமாகவே ஏறிட்டு நின்றாள்.

தொடர்ந்தவன் "எது எப்படியோ..இப்போ இருக்கிற ஆதவ் தான் நிஜம். அதுல நீ சந்தேகம் கொள்ள கூடாது. காட் இட்...?"என கேட்க

அவளோ விழி அசையாது தன் கணவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளிடமிருந்து பதில் வராமல் இருக்கவும் அவனும் அவளையே நேருக்கு நேர் நோக்கினான்..

அவளின் மனப்போராட்டங்கள் அவனுக்கு புரிவதாக இருக்க... அவள் முகத்தை கையில் தாங்கியவன் அவள் நுதலில் முத்தமிட்டு விலகினான்..

இப்போது தான் கூறியதை அவள் புரிந்து கொண்டாள் என உறுதியாக நம்பினான் ஆதவ் க்ரிஷ். பின் காரை ஸ்டாட் செய்து செலுத்த முற்பட அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் அவனது மனைவி.

அவளிடமிருந்து இப்படி ஒரு எதிர்வினையை ஆதவ் எதிர்பார்க்கவில்லை என ஸ்டியரிங் வீலில் அவன் கொடுத்த அழுத்தத்திலே புரிந்தது.

மனம் முழுக்க காதலுடனும் மகிழ்ச்சியுடனும் அசையாமல் சில வினாடிகள் நீடித்தவன் கடைக்கண்களால் தன் இணையை பார்த்துக் கொண்டே காரை இல்லம் நோக்கி செலுத்தினான். தன் தோள் சாய்ந்தவளால் அவனது மனம் ரெக்கை கட்டி பறந்தது.

வீட்டின் வாசல் முன் கார் வந்து நிற்க கதவு திறந்துவிடப்பட்டது. காரை பார்க் செய்தவன் திரும்பி தன் மனைவியை பார்க்க அவளோ உறங்கிவிட்டிருந்தாள்.

ஏதோ இதமான இன்றைய நிலையில் மெல்லிய ஏசிக் குளிரில் கணவனின் தோளில் சுகமாக உறங்கிக் கொண்டிருந்தாள் ஆதவின் அக்ஷு...

அவளை எழுப்ப மனமற்று அப்படியே சீட்டில் சாய்த்து வைத்தவன் மறுபக்கம் வந்து அவளை அலேக்காக கைகளில் ஏந்திக் கொண்டான்.

வேலைக்காரர்கள் தங்களை பார்ப்பதை கூட பொருட்படுத்தாதவனாக நேரே கொண்டு வந்து தனதறை மஞ்சத்தில் கிடந்தினான் இல்லாளை.

திரும்ப எத்தணித்தவனை தூக்கத்திலே அவனது சேட் காலரை பிடித்து வைத்திருந்த அக்ஷயாவின் செயல் தடுக்க திரும்பி தன் மனைவியையும் கையையும் மாறி மாறி பார்த்தவனின் இதழ்கள் புன்னகையை பூசிக் கொண்டன.

அவளது கைகளை மெதுவாக எடுத்துவிட்டவன் இதழில் குட்டி முத்தம் வைத்து விலகிச் சென்றான்...


*****


சிறிது நேரத்தில் குளித்து விட்டு வந்தவன் நேரத்தை பார்க்க அது மணி ஏழாகியது...

தங்கள் இன்று முக்கியமான இடத்துக்கு செல்ல வேண்டும் என்பது நினைவு வர அக்ஷய ப்ரியாவை பார்த்தான் ஆதவ்..

அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளை எழுப்பவும் மனமில்லாமல் அப்படியே விடவும் வழி இல்லாமல் அவளருகே சென்றான்.

தன் மனைவி உறங்கும் அழகிகை ரசித்தவனின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தரிகெட்டு அவள் உடலில் பயணித்தது...கணவனாக தன் மனைவியை இப்படி பக்கத்தில் வைத்துக்கொண்டு சும்மா இருக்கமுடியவில்லை அவனால்...

காதலும் காமமும் ஒருங்கே கலந்து அவனை பாடாய்படுத்த தன்னை கட்டுப்படுத்த முடியாமல் போனது.

முதலில் அவளின் ஒருபக்க கன்னத்தை தடவி கொடுத்தவனின் குளிர்ந்த உள்ளங்கை ஸ்பரிசத்தில் அக்ஷய ப்ரியா அசைய சட்டென கையை எடுத்துக் கொண்டான் ஆதவ்..

உப்..என்ற வண்ணம் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டே அவன் திரும்ப அந்தோ பரிதாபம் அக்ஷயா அவனின் தலையில் இருந்து வடிந்த நீரினால் விழித்துக் கொண்டாள். இருந்தும் அரை தூக்கம் அவளுள். மெல்ல கண்களை கசக்கிக் கொண்டு எழும்ப, டீசேட் டவளுடன் மட்டும் இருந்த ஆதவ் க்ரிஷ் அவள் கண்ணுக்கு விருந்தாகினான்..

தன் கணவனை இந்த நேரத்தில் இப்படி ஒரு கோலத்தில் எதிர்பாராதவள் அதிர்ந்து அமர்ந்திருக்க கொஞ்ச நேரம் இருந்தவன் பின் எழுந்து ட்ராயர் அருகில் சென்று நின்று கொண்டு "முக்கியமான இடத்துக்கு போகனும்...ரெடி ஆகு" என்று கூறும் போதே அவளுக்கு காலையில் அவன் கூறியது நினைவு வர குழம்பித் தவித்தாள் பெண்...

மெதுவாக எழுந்தவள் பாத்ரூமினுள் சென்று கதவடைத்துக் கொள்ள அவளின் அமைதி எப்போதும் போல ஆதவை வாட்டியது..."இவ வாய திறந்து பேசுனா எவ்வளவு நல்லா இருக்கிறா.."என்று நினைத்தவன் "இத எப்படி மறந்தேன்" என்ற வண்ணம் தன் செல்ஃபோனை தேடி எடுத்தவன் சில பல உத்தரவுகளுடன் அழைப்பை துண்டித்திருந்தான்.

அவன் தொலைபேசியை வைத்த அடுத்த நொடி அக்ஷய ப்ரியா வெளியே வர இருவரினதும் பார்வைகள் மௌனமாக சந்தித்துக் கொண்டன. முதலில் கலைந்தவள் அருகிலிருந்த சிறு அறையினுள் புகுந்து கொள்ள அங்கே அவளுக்காக காத்திருந்தது ஆதவ் வாங்கிக் கொடுத்த சீலை..."இதெப்படி இங்கே?" என சிந்தித்தவளுக்கு அது ஆதவின் வேலை தான் என புரிய அதனை கையில் எடுத்துப் பார்த்தவளுக்கு அதன் நிறம் மனதை கவர்ந்தது.

அப்போது தான் அதனை கவனித்தாள். அதன் அருகில் அதிக வேலைப்பாடும் இல்லாமல் சிம்பலாக அணியக்கூடிய தங்க நெக்லஸ் முதல் கொண்டு இயரிங் வரை அனைத்தும் இருந்தன. இதுவரை இப்படி எல்லாம் வாங்கி பழக்கப்பட்டிறாதவளுக்கு அது ஏனோ தன் தகுதிக்கு மீறியதாக தோன்றியது.

அதனை விடுத்து சாரியை அணிந்து கொண்டவள் ஃப்ரேன்ச் ஹெயா ஸ்டையிலிட்டு சேலையின் முந்தானை பகுதியை வழமை போல லூர்ஸாக விட்டவள் ஆதவ் அணிந்த தாளிச் செயினுடன் மட்டுமே அன்று மலர்ந்த தாமரை போல அத்தனை அம்சமாக இருந்தாள்.

தன்னை கண்ணாடியில் சரி செய்து கொண்டு நிற்கும் போது பின்னாடி ஏதோ அரவம் தெரிய திரும்ப எத்தணிப்பதற்குள் தன் முதுகில் சூடான உரசலையும் இடையில், உள்ளங்கையின் தழுவலையும் உணர்ந்தவளுக்கு முள்ளந்தண்டு சில்லிட்டது...

அவனின் அருகாமையிலே அவன் யாரென புரிபட அவஸ்தையுடன் நெளிந்தாள் அக்ஷயா...

"அக்ஷூ பேபி...சூப்பரா இருக்கடா..."என ஹஸ்கி வாயிசில் கூறியவனின் குரல் குழைந்து போய் ஒலித்தது...

அவளை இன்னும் இன்னும் தன்னுள் இறுக்கியவன் கிறங்கிப் போய் கண் மூடி சுகத்தை அனுபவித்தான். யாரிடமும் பேசக் கூட தோன்றாத தான் இவளிடம் மட்டும் எப்படி இயல்பாக மனதில் உள்ளதை பேசி விடுகிறோம் என்று நினைத்துப் பார்த்தவன் தனது இந்த நிலையை வெகுவாக விரும்பினான்.

அதன் வெளிப்பாடாக அவனின் இதழ்கள் புன்னகையில் விரிந்திருக்க அவளுக்கு தான் அவனது அருகாமையை ஏற்றுக்கொள்ள முடியாமல் கண்ணீர் வடிந்தது.

விம்மல் சத்தம் கேட்க தன் மோன நிலையில் இருந்தவன் கலைந்தான். அவளை கண்ணாடியினூடு பார்க்க அவள் தன் அழுகையை கட்டுப்படுத்த உதடு கடித்து நின்று போராடுவது புரிய மனம் வலிக்க அவளை தன் பக்கம் திருப்பினான்.

அவளின் முகத்தை கைகளில் ஏந்தியவன் "என்னாச்சுடா...அக்ஷு?"என கவலையுடன் வினவ அவள் என்னவென்று கூறுவாள் தன் நிலையை.

அனைத்துக்கும் தான் தானே காரணம் என ஆதவிற்கு மனதில் தோன்றிய நொடி எப்படியாவது நடந்த அனைத்தையும் அவளிடம் கூற வேண்டும் என உறுதி கொண்டான். ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல என்று நினைத்தவன் அவள் கண்ணீரை தன் பெருவிரலால் துடைத்துவிட்டவனுக்கு அருகில் அவள் அணியாமல் வைத்திருந்த அணிகலன்கள் பட...அதனை கையில் எடுத்து அவளுக்கு அணியப் போக "வே.. வேண்டாம்"என மறுத்தாள் அக்ஷயா...

ஏன் என குழம்பியவன் அந்தக்கேள்வியை அவளிடமே கேட்டு வைத்தான்..."ப்ளீஸ் வேண்டாங்க"என அவள் அழுது கொண்டே மறுக்க அவனும் என்ன தான் செய்வான்...

அவளின் அழுகையில் தன் அனைத்து உணர்வுகளையும் அடக்கியவனுக்கு இந்த மிதமான ஒப்பனையும் அவளுக்கு அழகாக இருப்பதாக தோன்ற "சரி வா போகலாம்" என்று அழைத்துச் சென்றான்..

அப்போது தான் அவனையும் அவள் கவனித்தாள்...

அவளின் சாரியின் நிறத்துக்கு ஏற்றாற் போல வெள்ளை சேட் மற்றும் கடும் நீல நிற பேன்ட் ப்லசர் அணிந்து கொண்டவன் ட்ரைவர் ஷூ சகிதம் தன் ராயல் வாட்ச் அணிந்து கொண்டவன் க்கோட்டை கைகளில் வைத்திருந்தான்.

இவ்வளவு நேரமும் இருந்த தன் மனநிலை மறந்து தன் அக்மார்க் ஆணழகனை விழி அகலாமல் பார்த்து வந்தாள்.

அவளின் பார்வையை உணர்ந்தானோ!!அவனும் திரும்பி அவளை பார்க்க தன் தலையை குனிந்து கொண்டாள் பாவை.

ஆனாலும் அவனின் அருகாமையை ரசித்துக் கொண்டே வந்தாள்.

காரில் அவள் ஏறி அமர்ந்த உடன் சிட்டாக பறந்தது ஆதவின் ராயல் ப்ளூ கார் அந்த வரவேற்பு அறையை நோக்கி.

முதலில் தான் இறங்கி அடுத்து அவள் இறங்க உதவி செய்தவன் கை தாங்களாகவே தன் மனைவியை அழைத்து சென்றான். அவனின் இந்த கரிசனைகள் கூட அவளை கலங்க செய்தன. முன்னுக்குப் பின் முரணாக நடந்துக்கொள்கின்ற தன் கணவனை நினைத்து குழம்பினாள் அக்ஷு.

அவர்கள் வந்திறங்கிய அடுத்த நொடி மீடியா அவர்களை சுற்றி வளைக்க பளீச் பளீச் என கேமராக்களில் புகைபடம் எடுக்கும் சத்தம் கேட்டு அதன் ஒளியும் கண்ணை கூச செய்ய கணவனின் கையை தாவி அணைத்துக் கொண்டாள்.

அவனும் சிறு புன்னகையுடன் அவளை திரும்பிப் பார்த்து தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டே நடந்தான்..

அது அவர்களின் திருமணம் பற்றி செய்தியை இன்டஸ்ரிக்கு ஒஃபீசியல் ஆக அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்டமான வரவேற்பு விழா...

அங்கே தான் கவிதாவும் அமர்ந்திருந்தாள். அவளின் கண்கள் அக்ஷய ப்ரியாவை வெறியுடன் முறைத்து நின்றன...தயாளனும் அழைக்கப்பட்டிருந்தார்.


.....



ஹாஸ்பிடலில் தயாளன் அமைதியாக கண் மூடி கிடந்தார். இருந்தும் மனதில் பயம் ஒட்டிக் கொண்டிருந்தது. தன் மகனைப் பற்றி எந்த செய்தியும் அவனுக்கு தெரியாமல் போய்விட்டது. "எங்கடா போய் தொலைஞ்ச..?" என்று வாய்விட்டே கேட்க "நான் சொல்லட்டுமா...?"என்ற கம்பீரக் குரல் அறையின் சுவரில் பட்டு தெறித்தது...

சட்டென கண்ணை திறந்தவர் குரலின் சொந்தக்காரன் யார் என்பதை அறியாமல் போவாரா..!! ஆதவின் ஆட்சியையே பறிக்க நினைத்தவறாயிற்றே...ஆனால் விதிவசம் அவரே தலைகுப்புற அதனுள் விழுவது போல் ஆகிற்று...


"நீ...நீ.."என அவர் திக்கித் தினற "யா..இட்ஸ் மீ...த க்ரேட் ஆதவ் க்ரிஷ் ரத்தினவேல்" என கோணலாக சிரித்தவன் "விக்ரம்...என்னைய தெரில போல இந்த ***" என அரைவாசி வார்த்தையை அப்படியே விழுங்கிக் கொண்டவன் கோபத்தில் தலையை கோதிக் கொண்டே ஆதவ் திரும்ப, உச்ச கட்ட இரத்த அழுத்தத்தில் "ஏஏஏய்ய்....."என சத்தம் போட்ட தயாளன் அடுத்த நொடி "ஆஆஆஆ..."என நெஞ்சை பிடித்துக் கொண்டு இருந்துவிட்டார்...

அந்தக்கணம் ஆதவின் சிரிப்பு சத்தத்தில் அந்த அறை அதிர்ந்திருந்தது. பின் கோபம் தலைக்கேற ஆஆஆஆ என்ற வண்ணம் அருகில் இருந்த கதிரையை ஓங்கி அடுத்திருந்தான் தரையில்...

விக்ரம் உட்பட தயாளன் முதற் கொண்டு ஆதவின் காட்ஸ் அனைவரும் பயத்தில் அதிர்ந்து போயினர்.

தயாளனின் அருகில் வீறு கொண்ட சிங்கமென வந்த ஆதவ்..."டேமிட்...உனக்கு இந்த வலி போதாதுடா...நீ அனுபவிச்சு அணு அணுவாக சாகனும்...அத பார்த்து நான் சந்தோஷப்படனும்.."என்றவனின் கர்சனையில் முதுகுத் தண்டு பயத்தில் சில்லிட அமர்ந்திருந்தார் தயாளன்.

"உன்னைய இவ்வளவு சீக்கிரம் போக விட்டுடுவேனு நினைச்சியா....? இப்போ நீ என் கைல..." என்றவன் "ருத்ரா.."என அழைக்க இவ்வளவு நேரமும் மறைந்து இருந்த ருத்ரன், அதாவது தயாளனுக்கு பிரசாத் என்றவன் வெளியே வர, தயாளன் உச்சகட்ட அதிர்ச்சிக்குள்ளானார்..

"ஏ..ஏய்..நீ..?"என்க,
ஆதவும் ருத்ரனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். அவர்களின் சிரிப்பு தயாளனுக்கு இன்னும் கிலியை பரப்ப "டேய்..டேய்..இரண்டு பேரும் சேர்ந்து என்னடா பண்ணி வச்சிருக்கிங்க" என்றவருக்கு உண்மையாகவே இதயம் வலித்தது..

"கட்டாயம் சொல்லனுமா...?" என்ற ஆதவ் விக்ரமிடம் கண் காட்ட அவன் ஒரு காணொளி காட்ட அங்கேயே அரைவாசி மரித்து விட்டான் அந்த அரக்கன் தயாளன்.

"என் பு..புள்ள..என் புள்ள" என்று கதறியவர் "டேய்...அநியாயமா என்ட புள்ளய சாகடிச்சிங்கல்ல...உங்கள சும்மா விட மாட்டன்டா" என எழ எத்தணித்தவருக்கு மீண்டும் நெஞ்சை அழுத்த ஆஆஆ என்று அமர்ந்துவிட்டார்..

"ஹேய்..ஹேய்...காம் டவுன் மிஸ்டர் க்ரேக்..." என்ற ஆதவ் "இது ஜஸ்ட் ட்ரயிலர் தான்...இனித் தான் இருக்கு மெயின் பிச்சரே" என விக்ரமிற்கு மறுபடியும் கண்ணைக் காட்ட அடுத்த காணொளி டேப் திரையில் மின்னியது..

அதை பார்த்தவர் ஏகத்துக்கும் கடுப்பாகி ருத்ரனை முறைக்க "என்னையே முறைக்குறியா.." என்று பல்லைக் கடித்துக் கொண்டு அடிக்கவர ஆதவ் அவனை தடுத்திருந்தான்.

"டேய்..என்னையே..."என அவன் ஆதங்கம் கொள்ள நண்பனின் வெறியில் சிரித்தவன் திரும்பி தயாளனை பார்த்து "அவன் கொலை வெறில இருக்கான்...சும்மா முறைச்சு உன் உயிருக்கு நீயே டிக்கட் வாங்கிக்காம இரு" என்ற ஆதவ் ருத்ரனின் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை காட்ட தயாளனுக்கு பக் என்றிருந்தது...

"ஹீ இஸ் எ பொலிஸ்..ஏ.சி.பி.ருத்ர பிரசாத்..." என்றான் விக்ரம். அதில் விக்ரமை மெச்சும் பார்வை பார்த்த ஆதவ் திரும்பி தயாளனை பார்க்க அவரோ பயந்து போய் அமர்ந்திருந்தார். அவருக்கு ருத்ரன் பற்றிய இந்த விடயம் புதிதே... பயத்தில் அவரிருக்க கண்ணில் பழிவெறி ர
தாண்டவம் ஆட தயாளனை சிறிது நேரம் பார்த்தவன், வந்த வேலை முடிந்து விட்டது என கூலர்சை ஸ்டைலாக அணிந்தவன் சென்றுவிட்டான்...

பின் சற்று நின்று நிதானித்து மீண்டும் அவரருகில் வந்து"திஸ் நைட் என்னுடைய வெடிங் பற்றிய ஒஃபீசியல் அனௌன்சிங் வெகு விமர்சையாக என்னுடைய வரவேற்பு இல்லத்திலே வச்சிருக்கேன்...மறக்காம பொண்டாட்டி பிள்ளை அதான் உன்னுடைய புத்திசாலி மகள் அவளோட வந்து சேரு...வர்டா.."என்றவன் திரும்பிக் கூட பார்க்காமல் சென்று விட்டான்.

தயாளனுக்கு சிறிது நேரம் எடுத்தது சுயத்தை அடைய...அவருக்கு தெரிந்துவிட்டது தன் சதித் திட்டம் அனைத்தையும் அவன் கண்டுவிட்டான் என. இயலாமையுடன் அமர்ந்திருந்தவரின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது கோபத்தில்...

எத்தனை மக்களின் கண்ணீரில் சுகம் கண்டவர்..

ஆனால் இன்று...?

தன்னால் இனி எதுவும் செய்ய முடியாத நிலையில் அமர்ந்திருந்தவரை மனைவி உலுக்கவே மீண்டும் சுயத்தை அடைந்தவர் மனைவியிடம் சற்று முன் நடந்ததை கூற அவருக்கும் பகீர் என்றிருந்தது. பெற்ற மகன் இறந்து விட்டான் என்பது அவரை கொன்றது என்றால் தன் சொத்து முழுவதும் ஆதவின் கையில் என்பது இன்னும் அந்த பணத்தாசை பிடித்தவளை சாகடிக்க கல்லாய் சமைத்து நின்றார்..

பின் கணவன் நெஞ்சை பிடித்துக் கொண்டு சரியவே... "டாக்டர்..டா.. டாக்டர்"என்று அலறினார்...


.....


ஆம் அடுத்த காணொளியில் தயாளன் பிரசாத்துடன் பேசிக் கொண்டிருப்பதே காட்டப்பட்டது. ருத்ரனை பார்த்தவுடனே அவனின் தோற்றம் தயாளனை நம்பச் செய்ய இவன் தான் தனது சொத்துக்கு பாதுகாப்பானவன் என்று தப்புக் கணக்கு போட்டவர் ருத்ரன் கேமராவை அந்த இடத்தில் பொருத்தி இருப்பது கூட அறியாமல் திறந்துவிட்ட டேமை போல அனைத்து டாக்கிமென்ட் முதல் கொண்டு ஆதவின் அப்பாவிடம் திருடிய பத்திரம் வரை அனைத்தையும் கொடுத்தவர் அதனை பாதுகாப்பாக வைக்கும் படி கொடுத்திருந்தார்...

தன்வினை தன்னைச் சுடும் என்பதை அறியாத முட்டாள், தான் விரித்த வலையில் தானே சிக்கிக் கொண்டார்...



தொடரும்...


தீரா.