• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன்னால் உயிர்த்தேன் - 31

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
அத்தியாயம் 31

மீடியா தங்களை சுற்றி வளைத்த போதும் சரி, முக்கியமான பெரிய தொழிலதிர்பர்கள் வந்து அவனை வரவேற்ற போதிலும் சரி, அதுவரையில் அவன் அவளை தன் அணைப்பிலிருந்து விடுவிக்கவில்லை...மேடை வந்த போதும் அதே நிலை நீடித்துக் கொண்டிருந்தது...

அக்ஷய ப்ரியாவிற்கு இவை அனைத்தும் ஓர் ஒவ்வாமையை கொடுத்துக் கொண்டிருந்தது. இதுவரையில் அவனை பற்றி மற்றவர்கள் வாயிலாகவே கேள்விப்பட்டவளுக்கு இன்று நேரில் பார்க்க மயக்கம் வராத குறை தான். சமூகத்தில் அவனின் அந்தஸ்து அப்படி...

இந்த இளம் வயதிலே சிறந்த தொழிலதிபர் பட்டம் பெற்றிருக்கின்றவன் என்றால் அவ்வளவு இலகுவா என்ன...? ஆனால் ஆதவ் க்ரிஷ் ரத்தினவேல் பெற்று இருந்தான்.

தன் தகுதியை மீறிய வாழ்க்கையை அனுபவிக்கின்றமோ என்ற குற்றவுணர்ச்சி அவளுக்குள் எழ
அணைத்திருந்த அவன் கையை மெல்ல விடுவித்தாள் பாவை.

அவனோ ஒரு முடிவுடன் வந்தவன் போல தன் அணைப்பை இன்னும் நெருக்கமாக்க அவள் தான் தவித்துப் போனாள்.

அங்கு வருகை தந்திருந்த அனைவரும் அந்தஸ்து மிக்க நல்ல மனிதர்கள். தங்கள் மனைவியுடன் வந்து ஆதவ் அக்ஷயா ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் ஆதவ் விக்ரமிற்கு அழைப்பெடுக்க அவன் "கொஞ்சம் அர்ஜன்ட் சார்" என விடுப்பு விட்டிருந்தான் தன் புது உறவுகளுடன் நேரத்தை செலவழிக்கும் நோக்கில்.

தர்மலிங்கமும் அதே காரணம் சொல்லி, தான் வராமல் போனதிற்காக வருந்தி விட்டு ஃபோனை வைக்கவே ஆதவிற்கு சந்தேகம் வலுப்பெற்றது.

பின் ஒரு பெருமூச்சுடன் மனைவியை திரும்பிப் பார்க்க அவளோ வெளிவிட்ட கண்ணீரை யாரும் அறியா வண்ணம் துடைத்துக் கொண்டிருந்தாள்.

யாருடைய சந்தோஷத்திற்காக இவ்வளவும் செய்தானோ அவளே கலங்கி நிற்க ஆதவிற்கு புஸ் என்றிருந்தது. கூடவே கோபமாகவும் வந்ததாலும் அவளிடம் அதை காட்டினால் இன்னும் வருந்துவாள் என்றே அவன் தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டான்.

அவளுக்கோ தன் சிந்தனையின் விளைவால் கண்களை சொருகிக் கொண்டு வாந்தி வருவதை போல இருக்க எங்கே செல்வதென தவித்தவள் இதற்கு மேலும் முடியாத கட்டத்தில் அவசரமாக மேடையை விட்டு இறங்கி ஓடினாள். இதற்காகவே காத்திருந்தவள் போல அவள் பின்னே கவிதாவும் சந்தேகம் வராத வண்ணம் எழுந்து சென்றாள்.

அதற்கிடையில் முக்கியமான நபர் வர ஆதவ் அவருடன் பேச வேண்டி ஆகிற்று...

......


வந்தவளுக்கோ மூச்சு முட்டிக் கொண்டு வியர்த்துக் கொட்ட தன் முந்தானையால் முகத்தை துடைத்து விட்டு மன ரணங்களுக்கு தீர்வு காண எண்ணி அருகிலிருந்த தூணில் பின்னாலே சாய்ந்திருந்தாள்.

ஏற்கவும் முடியாமல் விட்டுப் பிரியவும் மனமில்லாமல் மரண வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தாள் அவனவள்.

பழிவாங்க திருமணம் முடித்தேன் என வார்த்தைகளாலும் செயலாலும் எதுவும் அறியாத தன் உள்ளத்தை கத்தி கொண்டு அறுத்தவன் இன்று இப்படி அன்பை கொட்டிக் கொடுக்க அவளுக்கு அது பயமாகிப் போனது...

"ஏன் இப்படி நடந்து கொள்கிறார்...? ஒருவேளை தன்னை வி..விட்டு முற்று முழுதாக பிரிய தான் இப்படி பா..பாசம் போல நடிக்கிறாரோ?" என்று சிந்தித்த நொடி உள்ளம் காந்தியது.

அந்நேரம் அவளுக்கு முன்னே சொடக்கிடும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்க அங்கே நவநாகரீக மங்கை ஒருத்தி முறை தவறி ஆடை அணிந்து நின்றிருந்தாள்.

அவள் நின்றிருந்த தோரணையே அவளுக்கு முகச் சுழிப்பை தர அஷ்ட கோணலாகியது அக்ஷய ப்ரியாவின் முகம்.

அதனை பார்த்த கவிதாக்கு இன்னும் வெறியாகிப் போக..."யார பாத்துடி முகத்த திருப்புற" என பல்லைக்கடிக்க..

முன்ன பின்ன தெரியாத தன்னை டி போட்டு பேசியதில் அக்ஷயா கோபம் கொண்டாலும் இவளுடன் எல்லாம் என்ன பேச்சு என அமைதியாக நின்றிருந்தாள்.ஏ னோ பார்த்த இந்த முதல் சந்திப்பிலே கவிதாவை பிடிக்காமல் போய்விட்டது அவளுக்கு..கணவனை போலவோ..?!!

அவள் அமைதியாக நிற்க அது அவளை கடுப்பேற்றினாலும் தான் வந்த வேலையின் முதல் படியை எடுத்து வைத்தாள் அரக்கி..

"பார்க்க ஏதோ லோ க்ளாஸ் பொண்ணு மாதிரி இருக்க. உன்ன எப்படி க்ரிஷ் கல்யாணம் பண்ணினான்?" என அவள் கொக்கி போட அவளின் ஊகப்படியே அக்ஷயா தலை குனிந்து நின்றாள்.

இது தான் தனக்கு வேண்டும் என்பது போல அவளே மீண்டும் "எப்படியும் உன்னைய அவன் விரும்பி மெரி பண்ணிக்க மாட்டான்..."என தன் தந்தை வாயிலாக அவர்களின் திருமணம் நடந்த முறையை கேட்டு அறிந்திருந்தவள் வார்த்தையாலே அவளுக்கு சாட்டை அடி கொடுத்தாள்..

அக்ஷய ப்ரியாவோ வெளிவரத் துடித்த தன் கண்ணீரை அடக்க முற்பட அது தங்கு தடையின்றி அதன் பாட்டிற்கு வழிந்தோடியது.

அதனை ஆசை தீர பார்த்த அந்த விஷமப் பெண் அடுத்த அடியை அவளுக்கு கொடுத்தாள்.

"ஏதோ உன்னைய பழிவாங்க திருமணம் முடித்த மாதிரி அல்லவா வெளில கேள்விப்பட்டன்.."என கூற அக்ஷய ப்ரியா வேதனையுடன் அவளை நிமிர்ந்து பார்த்தாள்..

"அது தான பார்த்தேன்...அவனாச்சும் உன்னைய மாதிரி லோ க்ளாஸ விரும்புறதாவது...அவனுக்கு என்ன மாதிரி ஒருத்தி தான் தகுதியானவள்" என குறி பார்த்து தாக்கினாள் அவளை...

அவளுக்கோ இதயம் வெடித்து விடும் போல இருந்தது. இதுவரை தன்னுள் தானே கேட்டுக் கொண்டதை அடுத்தவர் சொல்லிக் கேட்கவுமே அதன் ஆழம் அவளுக்கு புரிந்தது...
உண்மை தானே...

இவள் கூறுவதும் நூற்றுக்கு நூறு வீதம் உண்மையே. தான் எந்த விதத்தில் அவருக்கு தகுதியானவள்...தன்னிடம் சொத்து என்று சொல்வதற்கு எந்தத் உடைமையுமே இல்லையே..பின் எதற்காக இந்த வாழ்வு என்று சிந்தித்தவளுக்கு எந்த விதத்திலுமே அவனுக்கும் அவளுக்கும் மலையும் மடுவும் போலவே தோன்றியது.

காதல் அந்தஸ்து பார்த்து வருவதில்லை..இரு ஆத்மா சம்பந்தப்பட்டது என்பதை அவள் புரிந்து கொள்ள தவறி விட்டாள்.

"இதற்கு மேலேயும் நான் சொல்லுவதற்கு இல்லை... நீயா புரிந்து கொண்டு அவரை விட்டு விலகிடு.." என்றவள் அவளை விட்டு அகல அவ்விடம் வந்து சேர்ந்தான் ஆதவ்.

அவள் நின்றிருந்த தோற்றம் ஆதவை அசைத்துப் பார்க்க அருகில் வந்து உலுக்கியவன் "ஹேய்...என்ன ஆச்சு?" என்று கேட்டதெல்லாம் அவள் செவிகளை தீண்டவில்லை...

"அவரை விட்டு விலகிடு..."இதுவே அசரீரி போல அவளுக்கு கேட்டுக் கொண்டிருந்தது...

முடியுமா அவளால்?அவளின் உயிரானவனை விட்டு ஒரு நிமிடம் கூட இருக்க முடியுமா அவளால்?! இல்லவே இல்லை...அவனை விட்டு நிச்சயமாக தன்னால் இருக்க முடியாது என்று உள்ளம் எடுத்துரைக்க அப்படியே நிமிர்ந்து பார்க்க அங்கே குழம்பிப் போய் அவளை பார்த்து கொண்டிருந்தான் ஆதவ்..

"இல்..இல்லை..இவ..இவர் எனக்கு மட்டும்தான் சொ..சொந்தமானவர்" என்ற நாமத்தை மனதில் உச்சரித்துக் கொண்டாலும் கண்ணீர் மட்டும் நின்றபாடில்லை..

"அக்ஷு..உன்னை தான்..என்னாச்சுனு கேக்குறன்ல..."என்று இப்போது சற்று கோபத்துடன் அவன் கேட்க..

அதே வேகத்தில் அவனை கட்டி அணைத்தாள் அக்ஷயா "நோ...நோ...நா..நான் உங்கள விட்டு எங்கேயும் போகமாட்டேன்" என அவனுள் இன்னும் புதைந்து அழுது வடித்தாள் காரிகை..

சற்று முன் தன்னிடம் இருந்த கோபம் காற்றில் எங்கோ பறந்திருக்க அவளின் அணைப்பும் அவளின் பேச்சும் ஒருங்கே அவனை ஆனந்தக் கடலினுள் தள்ளிவிட்டிருந்தது..

அவளின் அணைப்பும் நடுக்கமும் அதிகரிக்கவே விபரீதம் புரிந்து மீண்டும் அணைத்திருந்தான் ஆதவ்.

அவளோ விழி நீர் வடிய அதே பேச்சை தொடர அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டவன்.."நீ..என்ன விட்டு எங்க போக போற..? ஆங்...என்னவிட்டு போக உன்னைய நான் விட்டுடுவனா என்ன?" என்க அவனிலிருந்து விலகி அவள் மூக்கை உறிஞ்சிக் கொண்டு அவனை பார்க்க ஆதவிற்கு இன்னும் அவள் மேல் காதல் அதிகமானது..

அப்படியே குனிந்தவன் அவளின் இதழை மெல்ல வருடி தன்னிதழை அவளில் பொருத்தியிருந்தான். அவளுக்கும் அது தேவைப்பட்டதோ, அமைதியாக கண்மூடி நின்றாள்.

அவளின் சம்மதமும் அமைதியுமே அவனை பித்தனாக்க காலையிலிருந்து தங்களுக்குள் தொடர்ந்த நெருக்கத்தில் இன்னும் ஆழ ஆழ அவளை கட்டிக் கொண்டு தேனருந்திக் கொண்டிருந்தான் ஆதவ் க்ரிஷ்.

இதுவரையில் அவர்களை கலங்கிய கண்ணுடன் பார்த்து நின்ற கவிதா இறுதியில் "ச்சே.. "என வெறுப்புடனும் குரோதத்துடனும் அவ்விடம் விட்டகழந்தாள்.

அவளின் இடையில் அவன் கொடுத்த அழுத்தமே அவனது காதலையும் தேவையையும் பறைசாற்றியது...

கடைசியில் அவள் மூச்சுக்கு சிரமப் படவே அவளை பிரிய மனமற்று தன் இதழை பிரித்தவன் சிறிது நேரம் அவளுக்கு சுவாசிக்க நேரம் கொடுத்துவிட்டு மீண்டும் தான் விட்ட வேலையை தொடர்ந்தான்.

ஏதோ அரைகுறையாக விட்டு வந்தவன் போல முழுவதுமாக அவள் இதழை கவ்விச் சுவைத்தான். இதனை சற்றும் அவள் எதிர்பாத்திருக்கவில்லை.

கண்களை அகல விரித்து அவனின் சேட் காலரை அவள் பிடித்திழுக்க அவனுக்கோ கண்கள் சிரிப்பில் சிறுத்தன...

நீண்ட நேரம் தொடர்ந்த முத்தத்தின் இறுதியில் அவள் அவன் மேலே சரிய தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள ஆதவ் பெரும்பாடு பட்டுப் போனான். அவள் இன்னும் தனக்கு தேவையாக இருக்க வேறு வழியின்றி அவளை கட்டிக் கொண்டான்...

பின் சுற்றுப்புறம் உணர்ந்து இருவரும் விழக அவனை பார்க்க முடியாமல் வெட்கம் வர குனிந்து கொண்டாள் ஆதவின் காதலி...

கன்னம் சிவந்து தான் கொடுத்த முத்தத்தின் விளைவால் உதடு வீங்கி நின்றிருந்த தன் மனைவியின் அழகில் மயங்கி நின்றான் ஆதவ்.

பின் யாரோ தங்களை நோக்கி வருவது புரிய அக்ஷயா சேலையை சரி செய்து கொள்ள அதற்கும் சிரிப்பை பதிலளித்தவன் அவர்களை வரவேற்கும் முகமாக திரும்பி நின்றான்.

"ஹாய்...மிஸ்டர் என்ட் மிசிஸ் ஆதவ் க்ரிஷ்" என அன்பாக கூற அவன் புன்னகைத்தான் என்றாள் அவளோ தன்னை மறைத்துக் கொண்டு அவன் கையை பிடித்து நின்றிருந்தாள்.. அவன் செய்த வேலை அப்படி...
நிமிர்ந்தால் தங்கள் மானமே போய்விடுமே...ஹா..ஹா..

வந்த மற்ற நபரின் மனைவி "சீ இஸ் பியூட்டிபுல்...லக்கி மேன்"என ஆதவை கலாய்க்க சற்று முன் தன்னுள் வந்த மோகத்தினால் வெட்கச் சிரிப்பு சிரித்தான் ஆதவ்...

"யூ மேட் ஃபோர் ஈச் அதர்"என கள்ளம்கபடம் இல்லாமல் அவர்கள் இருவரையும் வாழ்த்திவிட்டு செல்ல...

"என்ன.. மிஸிஸ்.ஆதவ் க்ரிஷ் போலாமா...?"என அவளின் நெற்றிமுட்டி வினவ தன் பெயருக்குப் பின்னால் வந்த இணைப்பெயருக்கு சொந்தக்காரனே அவளை அவன் பெயருடன் இணைத்துக் கூற "இவன் எனக்கு மட்டுமே சொந்தமானவன்..."என பெருமையாக அதே சமயம் காதலுடன் மனதினுள் நினைத்துக் கொண்டாள்.

ஆனாலும் அங்கு அனைவர் முன்னிலையிலும் நிற்கும் தைரியம் இல்லாமல் "வே..வேண்டாம் "என்க அவனோ "வாட்?" என்றதில் கோபித்துவிட்டானோ என்று அவள் தவிப்புடன் நிமிர்ந்து பார்க்க அவனோ அதே அக்மார்க் தன் புன்னகையுடன் நின்றிருந்தான்..

அதில் ஆசுவாசம் அடைந்தவள் கண்களாலே கெஞ்ச இனியும் ஆதவிடம் கேட்க தான் வேண்டுமோ..பூம் பூம் என தலையாட்டியவன் பாதுகாப்பாக தான் தங்கும் அறையிற்கு அழைத்துச் சென்றான்.

"திஸ் இஸ் மை ரூம்...இங்க நீ தாராளமா இருக்கலாம்...எதுன்னாலும் எனக்கு ஒரு கால் பண்ணு..."என்று கூறும் போது அவளிடம் இதுவரையில் ஃபோனை கண்டதில்லையே என்பது நினைவுக்கு வர
அவளின் கன்னம் தாங்கி "பேபி...உனக்கிட்ட ஃபோன் இருக்கா..?"என கேட்க அவள் இல்லை என தலையாட்டி வைத்தாள்.

இவளிடம் ஃபோன் இல்லையா என்று அதிர்ந்தவன் எப்படியெல்லாம் தந்தையிடம் போட்டுக் கொடுத்தவள் என அவளை காயப்படுத்திவிட்டோம் என்று தோன்றவே அவனை நினைத்து அவனுக்கே வெறுப்பாகியது..

தன்னை கட்டுப்படுத்த வழியின்றி வழமை போல தலையை கோதிவிட்டவன், அவளருகில் வந்து நெற்றியில் முத்தம் கொடுத்து தன் உணர்வுகளை அடக்க முற்பட்டான் காளை.

அவளோ குழம்பிப் போய் அவனை ஏறிட உதட்டுக்கு வலித்து விடுமோ என இதழை விரித்தவன்... "பீ கெயார் ஃபுல்"என்றதுடன் சென்றுவிட்டான்.

வெளியே வந்தவனுக்கு தன் உயிரையே தான் காயப்படுத்தியது போல வலிக்க ஒருவருக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து ஏதேதோ பேசி வைத்து விட்டு, வந்தவர்களை கவனிக்க சென்று மறைந்தான்.


...


அந்த டைனிங் அறையிலே மேசையில் அனைவருமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் வேறு யாருமில்லை தர்மலிங்கம் என்ட் கோ தான்.

அவர் சிறுவயதில் விக்ரமை பார்த்தது தான். அதன் பின்னர் தொழில்துறையில் பல தடவை சந்தித்திருக்கின்றனர். எனினும் அவன் தன் மகனானவன் என அவர் அறியாதது துரதிஷ்டமோ..

இன்று அவனை மீண்டும் பெற்ற சந்தோஷத்தில் அவரின் முகத்தில் வழமைக்கு மாறாக புன்னகை அரும்பி இருந்தது.

அதே சந்தோஷத்துடன் "நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்" என்கவும் விக்ரம், விது, சங்கவி அனைவரும் அவரை ஆர்வமாக பார்க்க..

"இத்தனை நாளும் என்னுடைய பொறுப்புகளை எனக்கு பின் எடுத்து நடத்த ஒரு ஆண் வாரிசு இல்லையேனு கவலைப்பட்டுக் கொண்டு இருந்தேன். அம்முகிட்ட எவ்வளவோ சொல்லி அவளும் கேக்குற பாடில்லை. சோ இனி என்னுடைய அனைத்துக்கும் பொறுப்பையும் என் பையனுக்கு கொடுத்துட்டு நான் நிம்மதியா இருக்குற மீதி காலத்தை கடத்தலாம்னு முடிவு செய்திருக்கிறேன்" என தான் கூற வந்த வேலை முடிந்தது என அவர் மீண்டும் உண்ண ஆரம்பிக்க அங்கிருந்த மற்ற மூவருக்கும் புரிந்துவிட்டது அவர் யாரை குறிப்பிடுகிறார் என்று...

பெண்கள் இருவரும் சந்தோஷத்தில் திரும்பி விக்ரமை பார்க்க அவனுக்கோ அவர் முடிவில் உடன்பாடில்லை.

சங்கவி "என்னப்பா..ஏன் டல் ஆகிட்ட..அப்பா சொன்னது சரி தான? "என்க..

விதுவோ "ஐய்...ஜாலி...அப்பா இனி என்னைய கம்பல் பண்ணமாட்டாரு கம்பனிக்கு வான்னு சொல்லி... டேய் விக்ரா இனி உன்ட காட்டுல வரட்சி தான்.. அனுபவிடா "என சிரியாமல் கலாய்க்க, பெற்றவர்கள் அவளை விக்ரமை கண்காட்டி பார்வையாலே கண்டித்தனர்.

அவனோ சோகமாய் அமர்ந்திருக்க மீண்டும் தர்மலிங்கம் "என்னப்பா..நான் சொன்னதுல உடன்பாடில்லையா?சரிப்பா உனக்கு என்ன தோனுதோ அதை சொல்லு" என பொறுப்பான தந்தையாய் அவர் வினவ..

"இல்லைப்பா... இது சரிபட்டு வராது. நான் ஆதவ் சாருக்கு ரொம்ப தேவையானவன். இதுக்கு முன் நான் யாருமில்லாமல் இருந்தப்போ அவர் தான் எனக்கு எல்லாமுமா இருந்தவர். இப்பவும் அப்படித்தான் இருக்குறாரு. அவரை தனிய விட்டுட்டு என்னால வர முடியாதுப்பா... நாளைக்கு நான் நம்ம கம்பனில ஏற்க போற மனேஜர் பதவிய விட அவருக்கு பீ.ஏ வாக இருக்கதுல தான் பெருமப்படுறன்..ப்ளீஸ் பா இனி இத பற்றி பேசாதிங்க" என்று உறுதியாக மறுத்துவிட்டான் விக்ரம்.

இதை நான் எதிர்ப்பார்த்தேன் என அவர் அமைதியாக விக்ரமை பார்த்து வைத்தார்.

அவனின் வார்த்தைகளில் இருந்த தெளிவும் உண்மையும், அவன் ஆதவை தன்னுள்ளத்தில் எங்கே வைத்துள்ளான் என்று புரிபட அனைவரும் அமைதியாகினாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

"உன்னுடைய மனசுல இருக்கிறது புரியுது பா..இருந்தாலும் நம்ப சொத்த பாதுகாக்க ஒருதன் வேண்டும் தானப்பா...இவ்வளவு நாளும் இருந்த கவலை, நீ வந்த பிறகு தான் கண்ணா நீங்கிக்கி. கொஞ்சம் யோசித்து முடிவெடுப்பா" என சங்கவியே வருத்தப்பட... அவர் வருத்துப்படுவது தாங்கமாட்டாது இனி என்ன செய்வதென குழம்பிப் போய் இருந்தான் விக்ரம்.

"பேசாம இப்படி செய்வோம்...விக்ரா ஆதவ் சாருக்கு பீ.ஏ வாகவே இருக்கட்டும். இந்த பாட் டைம் ஜாப் மாதிரி நம்ம ஆபிஸையும் இடை இடையே கவனித்துக் கொள்ளட்டும். பின் எப்போ அவனுக்கு தோனுதோ அப்போ வந்து முழுசா பொறுப்பேற்கட்டும். அது வரைக்கும் ஏஸ் யூசுவல் டாடியே ஆபிஸை கவனிச்சுக்கோங்க" என்று புத்திசாலியாய் ஒரு ஐடியாவை எடுத்துவிட்டாள் விது.

இதுவே நல்ல யோசனையாக பட அனைவரினதும் முகம் குழப்பம் நீங்கி தெளிவு பெற்றது.

விக்ரமோ அவளை பார்த்து சூப்பர் என வாயை வளைக்க அவளோ இல்லாத காலரை தூக்கிவிட்டு கெத்து காட்டினாள்.

அதில் அவன் உதடு இன்னும் விரிய சந்தோஷமாக சாப்பிட்டு முடித்தனர்.

வளர்ந்த பிறகு தன் குடும்பத்துடன் சேர்ந்து உண்ணுவது இது தான் முதல் தடவை என்பதால் விக்ரமிற்கு உணவு சற்று அதிகமாகவே இறங்கியது.

இருந்தாலும் இது பற்றி ஆதவ் சாரிடம் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டே விதுவிடம் பல கதைகள் பேசிவிட்டு எக்ஸ்ரா அர்ச்சனைகளும் வாங்கிக் கொண்டே முதல் தடவை வருடங்கள் பல கழித்து நிம்மதியாக தூங்கச் சென்றான் விக்ரம்.


.....



தன் நண்பர்கள் அழைக்க அவர்கள் பக்கம் சென்றான் ஆதவ்.

ருத்ரன் "கங்ராட்ஸ் டா மச்சான்" என கட்டியணைத்துவிடுவிக்க...தீக்ஷனும் தன் பங்குக்கு வாழ்த்தினான். ஆனால் அவனிடம் உயிர்ப்பில்லை...

உயிர் நண்பனின் சிறு மனசுனக்கத்தையும் கண்டறியாமல் விட மடையன் ஒன்றும் இல்லை ஆதவ்.

"ஆமா..தங்கச்சி எங்கடா?" இப்போது ருத்ரன்...

"அவ.."என்று இழுப்பதுக்குள்ளேயே ஆதவின் பக்கம் வந்து நின்றாள் அவனவள்.

தன்னை யாரும் கேட்டால் தன் கணவன் பதில் கூற முடியாமல் போய்விடுமே. அது அவரின் கௌரவத்திற்கு பாதிப்பாகி விடும்..என்ற எண்ணத்திலே தன்நிலையை ஒதிக்கி வைத்தவள் ஆதவை தேடி அவன் பக்கம் வந்து விட்டிருந்தாள்.

ருத்ரன் அவளை பார்த்து சிநேகமாக சிரித்தான் என்றால் தீக்ஷனுக்கு பக் என்றிருந்தது...

அவனுக்கு தான் நேருக்கு நேர் முக கொடுக்க முடியவில்லையே அவளுடன்...

பதிலுக்கு சிரித்த அக்ஷயா தீக்ஷன் தலைகுனிந்து நிற்கவும் ஆதவை கேள்வியாக நோக்க... ருத்ரனோ ஆதவுக்கு தீக்ஷனை கண்ணை காட்டி சிரித்தான்...

நான் அறிவேன் அவனை பற்றி என ஆதவும் தெரியாமல் சிரித்து வைத்தான்..

பின் நிலைமையை சரி செய்யும் பொருட்டு "என்ன மச்சி..பொண்ணு பார்க்க வந்த மாதிரி தலை குனிஞ்சு நிற்கிற"என தீக்ஷனை கலாய்க்க

தீக்ஷன் திரும்பி முறைத்து வைத்தான்.

"மச்சி..உனக்கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன்,எ ன்னைய இப்படி பாசமா பார்க்காதனு.." என அவன் தோள் மேல் கை போட்டுக் கொண்டே காலைவாரி விட்டான் ருத்ரன். கடுப்பான தீக்ஷன் அவன் மேல் போட்டிருந்த ருத்ரனின் கையை தட்டுவிட்டு அவ்விடம் விட்டு செல்ல முற்பட..

"டேய்..டேய்..தீக்ஷா...அவன் கிடக்கான் வெட்டிப்பய..." என்ற ஆதவ்வின் பேச்சில் தடைபட்டு நின்றது தீக்ஷனின் நடை என்றால் ருத்ரனோ "சைக்கிள் கேப்ல நம்மல கலாய்க்கிறான் பக்கி "என்று ஆதவை திரும்பி முறைத்தான்..

இவர்களின் போரை பார்த்து சிரித்து நிற்பது அக்ஷயாவின் முறையாகியது..

"மீட் மை பெஸ்ட் பிரண்ட்ஸ்.. டாக்டர் தீக்ஷன் என்ட் ஏ.சி.பி ருத்ர பிரசாத்" என்று தன் நண்பர்களை அக்ஷய ப்ரியாவிற்கு அறிமுகம் செய்து வைக்க அவளும் சிறு தலையசைப்புடன் அமைதியாகிவிட்டாள்.

தீக்ஷனுக்கோ அங்கே நிற்க நிற்க முள் வேலியில் நிற்பது போல வலிக்க நிலையில்லாமல் தவித்தான்..

அவன் தான் அக்ஷய ப்ரியாவை விதூர்க்ஷன ப்ரியா என்று நினைத்துக் கொண்டிருக்கிறானே..

பின்னர் ஆதவே நண்பனை புரிந்தவன் போல கள்ளச் சிரிப்புடன் ருத்ரனுக்கு அவனை அழைத்துச் செல்லுமாறு கண் காட்ட அவனும் அதே சிரிப்புடன் நண்பனை அழைத்துக் கொண்டு சென்றான்...

பின்னர் பார்ட்டி இனிதென முடிவடைய மீடியாவை அழைத்தவன் அவர்களிடம் இந்த ரெகார்ட்ஸ் எல்லாம் தான் சொல்லும் தினத்தன்றே வெளியிட வேண்டும் என்ற கட்டளையுடன் அவ்விடம் விட்டகழ்ந்தான்.

அவன் பேச்சுக்கு மறு பேச்சு தான் அங்கு எழுமா...

பின் அவர்களுக்கு தேவையான பணத்தை செட்ல் செய்தவன் மனைவியை அழைத்துக் கொண்டு இல்லறம் சென்றுவிட்டான்...

......


தீக்ஷனுக்கோ வழி நெடுகிலும் யோசனையே. அன்று அவளின் பார்வை கூறிய அர்த்தம் வேறு இன்று இவளின் மௌனத்தின் அர்த்தம் வேறு..

அன்று வெறுப்புடன் முகத்தை திருப்பியவளா இன்று சிரித்துக் கொண்டு நின்றது என்றிருந்தது அவனுக்கு...

நண்பன் அமைதியாக வரவும் ஒரு கையால் ஸ்டியரிங் வீலினை பிடித்து ஓட்டிக் கொண்டு வந்த ருத்ரன் மறுகையால் உலுக்க "ஆங்..."என தன்நிலையிலிருந்து கலைந்தவன் "என்னடா..?" என ருத்ரனை பார்த்து வினவ..

"சரியாப் போச்சு..." என அவன் கடுப்படிக்க "ப்ச் என்னடா.." என கடுப்பாகி மீண்டும் தீக்ஷன் கேட்க

"ஏன்டா டேய்...அத நான் கேக்கனும்டா..என்னடா ஏதோ பிசாச பார்த்துட்டு வந்த மாதிரி வெறச்சு போய் உக்கார்நதுட்டிருக்க" என ருத்ரன் கேட்க..

"ஒன்னுமில்லடா...லேசான தலைவலி" என கூறிக் கொண்டே சீட்டில் தலை சாய்க..உண்மையிலேயே நண்பனின் நிலை ருத்ரனுக்கு பாவமாகிப் போனது..

"கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாக போய்விடும்" என்று ருத்ரன் உண்மையாகவே ஆறுதல் அளிக்க...உதட்டுக்கு வலிக்காமல் கசந்த புன்னகை ஒன்றை, இருந்த நிலையிலேயே சிந்தினான் தீக்ஷன்.

அவன் நினைத்தது நண்பன் தன் கடந்த கால நிகழ்வை அரைகுறையாக தெரிந்து வைத்து தான் கூறுகிறான் என...ஆனால் தனக்கு தெரியாதவை கூட அவனுக்கு தெரியும் என பாவம் அந்த டாக்டர் அறிந்திருக்கவில்லை...


தொடரும்...


தீரா.