அத்தியாயம் 32
ஆதவ் தனது ஆபிஸ் அறையில் கல்லாய் சமைத்து போய் அமர்ந்திருந்தான்.
அவன் கையில் அந்த டயரி...
அக்ஷய ப்ரியாவின் உணர்வுகளையும் கண்ணீரையும் சுமந்திருந்த டயரி...
ஆம் அதனை முழுவதுமாக ஆதவ் படித்து முடித்துவிட்டான்.
இன்று ஆச்சிரமம் சென்ற போது அக்ஷய ப்ரியா வெளியே வந்த சில நிமிடங்கள் கழித்தே ஆதவ் வெளியேறி இருந்தான்.
கமலாம்மாவிற்கும் அவன் மனைவியிற்குமான நெருக்கத்தை கவனித்தவன் அவளுக்கு இந்த உறவை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொன்னான் என்றால் மிகா..
தன் மனைவியின் விருப்பு வெறுப்புகளை பற்றி இவரிடம் மட்டுமே கேட்டு தெரிந்து கொள்ள முடியும் என்றெண்ணி அவனவளுக்கு தெரியாமல் அவரை சந்தித்திருந்தான்..
"இதுவரைக்கும் ஆசைப்பட்டு அவளாக எதுவும் கேட்டதுமில்லை.. வாங்கினதும் இல்லைப்பா. நானா எது சரி வாங்கி கொடுத்தால் தான் உண்டு" என்க..
ஆதவுக்கோ ஏமாற்றமாகியது. தன்னால் அவளின் தேவைக்கு அதிகமாகவே கொட்டிக் குவிக்க முடியும். இருந்தாலும் ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுப்பதை போல வருமா...? அது தான் இப்படி கஷ்டப்படுகிறான் அவளை இனி தங்க தட்டில் வைத்து தாங்க நினைக்கும் தூணானவன்.
"ஆனால் ஒன்னிருக்குபா..."என கமலாம்மா உரைக்க அவன் கண்களில் மின்வெட்டியது. அவன் முகத்தில் அதை அறிந்து கொள்ளும் ஆவல் தெரிய அவனின் தவிப்பும் அவள் மேல் கொண்டுள்ள காதலும் அவரை சிரிக்கவைத்தது.
"வை..வை ஆர் யூ லாபிங்..?" என புரியாமல் ஆதவ் விழிக்க..
"ஒன்றுமில்லைப்பா..."
"அவள்ட எப்போதும் ஒரு டயரி இருக்கும். என்ன தான் நடந்தாலும் அந்த டயரியை எழுதுவதை மட்டும் அவள் மறக்க மாட்டாள்... ஒருவேளை எனக்கு தெரியாத பல ஆசைகள் அதுல இருக்கலாம். இதுவரைக்கும் நான் அதை வாசிக்கனும்னு நினைக்கவில்லை.. அது அவளுட தனிப்பட்ட வாழ்க்கை. ஆனால் அதை இன்னைக்கு உங்ககிட்ட சொல்லணும்னு தோனுதுபா. உங்கட கேள்விக்கான பதில்கள் நிச்சயம் அதுல இருக்கும்..." என புன்னகைக்க
"ஆமால்ல... இத எப்படி மறந்தோம். ஆல் ரெடி அதுல ஒரு பக்கம் ரீட் பண்ணிக்கோம்ல.. மீதிய ஏன் படிக்க தோனல்ல எனக்கு...? இப்போ ரீட் பண்ணனும்னு தோனுது.." என மனதில் நினைத்தவன் "தெங்ஸ் ஆன்டி...போய் வரேன்.." என்றவன் அடுத்த நிமிடம் சிட்டாக பறந்திருந்திருந்தான்..
.....
பங்க்ஷன் முடிந்து வீட்டுக்கு வந்தவன் அவளை ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டு தானும் குட்டிக் குளியல் போட்டவன் முதலில் செய்த வேலை இது தான்...
அவளின் அறையில் தேடி அந்த டயரியை கைப்பற்றி இருந்தான்..
முதல் பக்கத்திலே அவனின் இதயத்தை சுக்கு நூறாக உடைத்திருந்தாள் அக்ஷயா...
அவளின் தனிமையின் கொடுமையையே பக்கம் பக்கமாக விபரித்து இருந்தாள்..
ஒரு சம்பவம் கூட விடாமல் அனைத்தும் அவளின் பொன்னான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது..
சில பக்கங்கள் தென்றலாய் அவனை வருடிச் சென்றதென்றால், பல பக்கங்கள் அவனை உயிருடன் புதைத்திருந்தது..
தன்னவள் இவ்வளவு கஷ்டத்தையும் வேதனையும் அனுபவித்துள்ளாளா...??என்பதே இரத்தம் வராமல் இதயத்தை கிழிக்க கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது..
அவன் அழுகிறான்..!!தன்னவளுக்காக..!! தன் காதலுக்காக..!! அவள் அனுபவித்த மரண வேதனைகளுக்காக..!! அவன் அழுகிறான்...!!
"அக்ஷு மா..." என்று இருகைகளாலும் தன் முகத்தை அழுந்த துடைத்தவன் கண்களிலிருந்த கண்ணீர் மற்றும் வற்றவே இல்லை..
அதில் அவள் தன் மேல் கொண்ட காதலையும் அறிந்து கொண்டான் அவளவன்.
அவனை முதல் தடவை ஆச்சிரமத்தில் பார்த்தது..!!
அவன் மேல் அறியாமல் தான் கொண்ட காதல்..!!
அதனை ஏற்க முடியாமல் அவள் பட்ட பாடு..!!
கல்லூரியில் அவனை மீண்டும் பார்த்தது..!!
திருமணம் அவனுடன் தான் நடக்க இருக்கிறது என்பதறியாமல் கதறிய பொழுதுகள்..!!
திருமண மேடையில் அவனுக்கு அருகிலிருந்த தன் நிலை, யார் இவன் என அறியாமல்..!!
அன்றிரவு அவளை கொல்லாமல் கொன்ற அவளின் காதல்..!!
பின் வந்த காலங்களில் அவனின் கொடிய பேச்சுக்கள்..!!
வேலைக்காரி என கூறி அவளின் மனதை சில்லு சில்லாக உடைத்த அவன் செயல்..!!
இறுதியாக அநாதை என்று அவனே கூறி அவளை உயிருடன் கொன்றது..!!
அனைத்து பக்கங்களிலும் அவளின் கண்ணீர் தடங்கள்..
இத்தனையிலும் அவள் மேல் காதல் பித்தனாகி இருந்த அவன் கொஞ்சம் கொஞ்சமாக மரித்துக் கொண்டிருந்தான்.
"தான் ஒரு ஆண்மகன். எதனையும் தாங்கிக் கொள்வேன்.. இருந்தும் என் தாய் தந்தையின் இழப்பை என்னால் தாங்கிக்கமுடியவில்லை.
ஆனால் இவள்..? இளகிய நெஞ்சம் கொண்ட பெண்...அநாதையாக வாழ்ந்து மனதளவில் இறந்தவளை தானே வதைத்துவிட்டோம்" என்று தன்னையே நொந்தவன் தாங்க முடியாமல் ஆஆஆஆஆஆ என்று கத்திய கத்தில் அக்ஷய ப்ரியா அரண்டு போய்விட்டாள்...
அறையிலிருந்து வெளியே வந்தவள் மனது தடதடக்க படியிறங்கி ஓடி வந்தாள்.
சுற்றும் முற்றும் தன் கணவனையே தவிப்புடன் தேடியவளுக்கு கீழிருந்த அறையொன்றில் பொருட்கள் உடையும் சத்தம் கேட்க அடுத்த நொடி கால்கள் பிண்ணிக் கொள்ள அங்கே ஓடினாள் அக்ஷயா..
அங்கே கண்ட காட்சியில் உடல் வாரித் தூக்கிப் போட்டது அவளுக்கு.
ஆதவ் வெறிபிடித்தவன் போல அனைத்தையும் கீழே தள்ளிவிட்டுக் கொண்டிருந்தான்..
உள்ளே செல்ல அடியெடுத்து வைக்க போனவளின் கால்கள் அப்படியே அந்தரத்தில் நின்றது அன்றைய சம்பவத்தை நினைத்து..
அன்றும் அதுபோலவே அனைத்தும் சிதறிக்கிடக்க, ஏன் சென்றோம் என கசங்கியவளுக்கு இன்றும் அது நினைவில் வர உள்ளே செல்லாமல் கண்கள் கலங்கிப் போய் விம்மலை அடக்கிக் கொண்டு வெளியே நின்றிருந்தாள்..
அன்று போல் இன்றும் நடந்துவிட்டால்...?
தன்னவளை தான் காயப்படுத்தி விட்டோம் என்பதே அவனை வெறியனாக்க அனைத்தையும் தூக்கி போட்டு உடைத்தவன் இறுதியாக தன் மடி கணனியை தாங்கிக் கொண்டு திரும்ப அந்தோ பரிதாபம் அவன் கைகள் அப்படியே அதன் இயக்கத்தை நிறுத்தியது அவளைக் கண்ட நொடியில்..
மூக்கு நுனியும் கண்களின் கீழோரமும் சிவந்து போய் கண்ணீருடன் நின்றிருந்த அக்ஷயா தன் தலையை "வேண்டாம்.."என ஆட்ட..என்ன ஆச்சரியம் அவன் கைகள் தானாக கீழிறங்கியது..
அது அவளுக்கும் ஆச்சரியத்தை கொடுக்க கண்கொட்டாமல் அவனை பார்த்து வைத்தாள்..
லெப்பை மேசையில் அப்படியே வைத்தவன் அவளை மன வேதனையுடன் ஏறிட்டான்.
உச்சி முதல் பாதம் வரை அவளை நோக்கியவனுக்கு அவள் சற்று இளகியது போல தோன்றியது...
தன்னால் தானே இப்படி என்று நினைத்தவன், அவளருகில் சென்றான்.
அவளோ வரும் அவனையே பயப்பந்து தொண்டையில் உருண்டோட பார்த்து வைத்தாள்.
கடந்தகாலம் அவளினுள் அப்படி தாக்கம் செலுத்தி இருந்தது..
அவள் பயந்து போய் நிற்கிறாள் என்பது அவளின் முகத்திலே தெரிய அடிபட்டுப் போனான் வேங்கை.
அவளுக்கு மிக அருகில் வந்து நின்றவன் அவள் சுதாரிக்கும் முன்னே மண்டியிட்டு அமர்ந்து அவளின் வயிற்றில் தன் முகத்தை புதைத்துக் கொண்டான்.
இதனை எதிர்பாரதவள் அதிர்ந்து விழிக்க அங்கே அவன் சிறு பிள்ளை போல அவளுள் இன்னும் புதைந்து கொண்டிருந்தான்...
அவனின் கண்ணீர் அவளது சேலையை நனைக்கவே அவள் விழித்துக் கொண்டாள்...
இத்தனை நாளும் கம்பீரமாக வளம் வந்தவனின் இந்த முகம் அவளை அதிர்வுக்குள்ளாக்கினாலும் அதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை அவளால்...
"அக்ஷு...அக்ஷூம்மா...ஐ எம் சாரிடா..."என்றவன் அவள் நெஞ்சில் முகத்தை தேய்க அவளுக்கு தான் ஏதோமாதிரி இருந்தது...
எதற்கு இந்த சாரி இந்த நிலைமையில்.. ஏன் இப்படி பிகேவ் பண்ணுகிறார் என்று மனதில் நினைத்தவள் கீழே குனிந்து அவனை பார்த்தாள்.
ஆதவ் க்ரிஷ் என்ற அடங்காதவன், இன்று தன்னுள் அடங்கி கிடப்பது அவளுக்கு வருத்தத்தை கொடுக்க தானே தலையை அழுந்த பிடித்து தன்னுள் பொத்திக் கொண்டாள் பெண்ணவள்...
அது அவனுக்கும் ஆறுதல் கொடுத்ததோ.. அப்படியே அடங்கிப் போனான் காளை..
செக்கன்கள் நிமிடங்களாகி மணித்தியாலம் கடந்த நிலையிலும் இருவரும் அப்படியே இருந்தனர்.
இருவரின் உணர்வுகளும் ஒன்றாக கலந்ததை போல ஒருவரிடம் ஒருவர் ஆறுதல் தேடிக் கொண்டிருந்த பொழுதுகள் அவை...!
வாழ்வின் பொக்கிஷங்களாகின இருவருக்கும்...!
திடீரென வீட்டின் ஹாலிலிருந்த கடிகாரம் தன் இருப்பை காட்ட திடுக்கிட்டு கலைந்தனர் இருவரும்.
அவள் அவஸ்தையுடன் அவனை குனிந்து பார்க்க அவன் நிதானமாக அதே சமயம் கவலையுடன் நிமிர்ந்து அவளை பார்த்தான்.
பின் எழுந்து நின்றவன் அவளின் முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டு அவன் கேட்ட கேள்வியில் அவளுக்கு நெஞ்சு படபடத்தது...
அப்படி என்ன கேட்டான்...?இதோ இதை தான்..
"என்னைய வெறுத்துட்டியா அக்ஷு...?" என்று கேட்டவனே பாதி செத்துவிட்டான்...
ஏன் திடீரென இப்படி கேட்கிறார் என்று அவள் குழம்பினாலும் அவளும் துடித்துவிட்டாள்.
அவளின் குழப்பம் புரிய திரும்பி தன் மேசையில் தன்னவளின் துயரத்தை சுமந்து கொண்டு அழகாக வீற்றிருந்த டயரியை காட்ட பெண்ணவளின் கண்கள் இடுங்கின..
திரும்பி அவனை கேள்வியாக பார்க்க..அவனோ "ஆம் அனைத்தையும் நான் வாசித்துவிட்டேன்" என கண்களால் கூறி கலங்கி நின்றான்.
இப்போது அவள், அவனை நிதானமாக பார்த்தாள்.
இந்தப் பார்வை அவனை பயமாக்க "அக்ஷு..அக்ஷும்மா"எ ன இப்போது தோளை தொட அவள் அப்படியே பார்த்து நின்றாள்..ஆனால் இம்முறை கண்கள் கலங்கிப் போய் இருந்தன..
"நோ..நோ..நோ பேபி..நீ இனி அழக் கூடாது" என்றவன் கண்களை துடைத்து விட்டான்.
இந்த கரிசனம், இத்தனை நாளும் அவன் கொடுத்த காயத்துக்கு மருந்திட அசையாமல் நின்றிருந்தாள்.
கலங்கிய ஆடவன் "எவ்வளவு கஷ்டத்தோட அத எல்லாம் எழுதி இருப்ப...உனக்கு போய் நான்..." என்றவன் பல்லைக் கடிக்க அவனின் நிலை அவளுக்கு புரிவதாவது...
இருந்தும் அவன் வாய் விட்டு பேசாமல் தான் வாய் திறக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் அவள். அது அவன் மேல் அவள் கொண்ட காதல் கொடுத்த உறுதி... இருந்தாலும் தான் அவனிடம் கேட்க வேண்டிய முக்கிய கேள்வி இருந்தது..
மீண்டும் அவனே "அக்ஷும்மா மனசுல என்ன இருந்தாலும் சொல்லிடு.. இப்படி நீ அமைதியாக இருக்கிறது எனக்கு பயமாக இருக்கு"
என்ன ஆதவிற்கு பயமா..? ஆம் அவள் மேல் தான் இப்போது கொண்டுள்ள காதல் அவனை பயமுறுத்தியது...
அப்போதும் அவள் மௌனமாக நிற்க அவன் தான் நொந்து போனான்.
பின் மனதில் மின் வெட்டியது போல அவள் தன் மேல் கொண்டிருந்த காதல் நினைவு வர..இடது கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கன்னத்தில் சூடாக இறங்க "வை பேபி...ஏன் அக்ஷு நீயும் என்னைய லவ் பண்ணுறத சொல்லல்ல.?" என்றவனின் பேச்சில் விக்கித்து நின்றாள் பேதை...
அது அவன் தன்னை கண்டுகொண்டான் என்பதற்கில்லை மாறாக "நீயும்... "என்றதில் அவனும் அவளை காதலிக்கிறான் என்பதை கண்டுவிட்டாள் காரிகை..
அவன் வார்த்தை அவளுக்கு உச்சகட்ட இன்பத்தை கொடுக்க கண்களிலிருந்து கண்ணீர் வடிய அவனை தொட சென்றவளை அவளின் மனசாட்சி தட்டி எழுப்ப அப்படியே கையை கீழே போட்டாள்...
அவள் தன்னை உணர்கிறாள் என்று மேலெழுந்த அவள் கையில் பார்வையை செலுத்தியவன் சந்தோஷமாகினான் என்றால் அவளின் அடுத்த செயலில் குழம்பிப் போனான்.
அவளையும் கையையும் மாறி மாறி பார்தவனிடம்..."நா.. நான் உங்ககிட்ட ஒ..ஒன்னு கேக்கனும்.." எவ்வளவு தான் தைரியமாக காட்டிக் கொள்ள நினைத்தாலும் இவனிடம் மட்டும் திக்கிவிடுகிறாள்..
"ஓகே..ச்சில்...டெல் மீ.." இப்போது ஆதவ்.
"ஏ..ஏன் என்னைய தி..திருமணம் செய்து கொண்டிங்க..." என்ற போதே அவளின் இரு கண்களும் கண்ணீரை சுரந்தன...
அவள் இப்படி கேட்பாள் என அவன் நினைத்திருக்கவில்லை...எப்படி கூறுவான்?? "பழிவாங்க நினைத்து திருமணம் செய்தேன். ஆனால் அது தப்பாகிவிட்டது" என்றா??
ஆனாலும் கூற வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தான் ஆதவ் க்ரிஷ்.
ஒரு பெருமூச்சுடன் அவளை அழைத்துச் சென்றவன் ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்து அவளையும் அமர வைத்தான்.
தான் ஒன்று கேட்டால் இவர் ஒன்று செய்கிறாரே என்று அவளுக்குள் தோன்றாமல் இல்லை...
அவளை தன்னை பார்க்க செய்தவன் தன் கைக்குள் அவள் கையை பொத்திக்கொண்டு "நீ கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் நிச்சயம் சொல்லுவேன் அக்ஷும்மா... ஆனால் அதுக்கு முன்னாடி நீ எனக்கு ப்ராமிஸ் பண்ணனும்" என்ற பீடிகையுடனே அவளை பார்க்க..அவளோ ங்கே என புரியாமல் விழித்தாள்.
"பேபி ம்ம் சொல்லு" என்று நீ இதுக்கு ஒத்துக் கொள்ளதான் வேண்டும் என அவனறியாமலே கூற...தான் அறியாமல் கூட தன்பிடியில் நிற்பவனை நினைத்து அக்ஷயாவிற்கு சிரிப்பாகினாலும் அடக்கிக் கொண்டு அவன் முன்னே இருந்தாள்.
அவனை ஏமாற்ற மனம் வராமல் "ம்ம்..ப்ராமிஸ்" என அவன் எதற்கு சத்தியம் என கூறுவதற்குள்ளே அவன் மேலுள்ள நம்பிக்கையில் அவள் வாக்குக் கொடுக்க இப்போது ஆதவ் சிரித்தான்.
அவளோ அவனை முகம் சுருக்கி பார்க்க..
ஆதவ் "அக்ஷூம்மா..நான் இன்னும் மேட்டரே சொல்லல்ல.. அதுகுள்ள இப்படி சொன்னா எப்படி..?"அதற்கும் கிண்டலடிக்க அக்ஷய ப்ரியாவோ நாணத்துடன் தலை குனிந்து கொண்டாள்..
அவனுக்கும் தன் மேல் காதல் இருக்கிறது என்பதே அவளை உயிர்ப்பாக்க...சற்று இயல்பாக இருக்க முற்பட்டாள்.
அவனுக்கும் இந்த சிறு மாற்றமே அவளிடம் போதுமாக இருந்தது. அதனால் அவனும் இயல்பாக பேசினான்..
"நான் சொல்லப் போறது உன்னைய கஷ்டப்படுத்தும்மா...அது தான்..."என அவன் இழுக்க..
மூச்சுக்கு முந்நூறு தடவை தன்னை மா போட்டும் பேபி என்றும் அழைக்கும் அவனின் பிரத்தியேகமான அழைப்பிற்காக எந்த கஷ்டத்தையும் தாங்கிக் கொள்ளும் நிலையில் அவள் அமர்ந்திருந்தாள்.
அவள் அமைதியே அவனுக்கு சம்மதம் தர அவள் கண்களில் வழமை போல மயங்கியவன் கண்களை பார்த்துக் கொண்டே தன் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் கூற ஆரம்பித்தான்.
அவன் தாய் தந்தையை இழந்தது முதல் தயாளனின் மகள் என அவளை நினைத்து பழிவாங்க துணிந்தது வரை கூறியவன் அவள் சம்பந்தப்பட்ட சில விடயங்களை மறைத்து அவள் பற்றி எப்படி அவன் அறிந்தான் என கூறி முடித்து விட்டு அவளை நோக்க அவள் விழிகளில் கண்ணீரின் தடம்.
அவனிடமும் தான்..
இருந்தாலும் வழமை போல முகத்தில் அதன் சாயலை காட்டாதவனின் கண்கள் மட்டும் கண்ணீரில் நனைந்திருந்தது.
தன் வேதனையை விட அவள் அழுவது அவனை காயப்படுத்த தன் செயலில் நொந்துவிட்டாள் என துடித்துப் போனான் ஆதவ்..
அவளை தன்னை நோக்கி இழுத்தவன்.."சாரி மா..நான் செய்தது தப்புத் தான்..ஆனால் வேணும்னு.." என்று முடிப்பதற்குள்ளே அவன் வாயை தன் கரம் கொண்டு மூடியவள் அழுகையுடனே இல்லை என்று மறுத்துவிட்டு அவன் நெஞ்சில் சாய்ந்து கதறி அழுதாள்.
அவள் அழுவது அவனை மேலும் மேலும் இறுக வைக்க "ஹேய்..என்னடா..?"என்றவனின் வார்த்தைகளிலிருந்தது முழுவதும் பாசமே..
அது அவளுக்கு மட்டுமாக அவனிடம் இருந்து வரும் பிரதிபலிப்பு. அதுவும் அவனறிந்த ஒன்று...
அவன் கேள்விக்கு பதிலளிக்காமல் இன்னும் இன்னும் அவனை இறுக கட்டிப்பிடித்தவள் மறுபடியும் விம்மி அழ அவளை சமாளிக்க முடியாமல் திணறினான் முதல் முறைமாக ஆதவ்.
பின் அவளாகவே "எ..எவ்வளவு கஷ்டப்பட்டிருக்குறீங்க..."எனவும் அவனுக்கு வியப்பாகியது.
அவள் அனுபவித்த துன்பங்களுக்கு கீழ் தான் பட்டது தூசி பெறுமதி கூட இல்லை. இருந்தாலும் தன் கஷ்டத்தை நினைத்து அழுபவளை என்ன சொல்லி தேற்றுவது என்றிருந்தது..
ஆறுதலாக அவள் முதுகை அவன் தடவி விட்டுக்கொண்டே இருக்க சிறிது நேரத்தில் அவள் அடங்கிப்போனாள். ஆனால் விம்மல் மட்டும் எஞ்சியது...
தான் தப்பாக நினைத்து பழிவாங்கியதை கூறினால் வருந்துவாள் எனறிருக்க அவள் அதனை கணக்கில் எடுத்தாளில்லையே.. என்ன மாதிரி பெண் இவள்..? என்று தான் தோன்றியது அவனுக்கு.
குனிந்து அவளை பார்க்க அவளோ விம்மிக் கொண்டிருந்தாள்.
அவளை நிமிர்த்திப் பார்க்க, முகம் சிவந்து போய் இருந்தது..
"ஓய்...நான் உன்னைய பழிவாங்கியது நினைச்சு உனக்கு கவலையில்லையா..?" என வினவ, அவள் உதட்டை பிதுக்கினாள்.
அவளுக்கு கவலை தான். இருந்தாலும் தெரியாமல் குழப்பத்தில் செய்த தவறுக்கு என்ன செய்வது என்று சமாதானம் ஆகிவிட்டிருந்தாள்.
அவளின் இதழில் பார்வை செலுத்தியவனுக்கு போதை தலைக்கேற அவள் கண்களை பார்த்தான்.
அதில் சந்தோஷம் நிரம்பி இருக்க அப்படியே இதழை தன்னிதழால் சிறை செய்தான்.
இருவரும் வார்த்தைகளால் பகிர்ந்து கொள்ளாததை அந்த முத்தத்தில் பகிர்ந்து கொண்டனர்.
சற்று விட்டவன் தன்னை மயக்கும் விழியில் முத்தம் வைத்து "ஐ லவ் யூ பேபி...லவ் யூ சோ மச்.." என்று மீண்டும் தான் விட்ட பணியை தொடர்ந்தான்.
அவன் வார்த்தை அவளை சென்றடைய சில வினாடிகள் எடுத்தன..
அவன் வார்த்தை தந்த காதலிலும் முத்தத்தின் சுகத்திலும் கண் மூடினாள் ஆதவின் அக்ஷு...
சில நிமிட நீடிப்பின் பின் அவளிலிருந்து விழகியவன் "பேபி ஐ நீட் யூ...கேன் ஐ...?" என அவளின் சம்மதம் வேண்டி நிற்க...எந்த பெண்ணுக்கு தான் கசக்கும்...!
பெண்களின் கற்பை களவாடும் இந்தக்காலத்தில் தன் மனைவியிடமே அவளின் சம்மதம் கேட்டு தாம்பத்தியத்துக்கு அனுமதி கேட்டு நிற்கும் கணவனுக்கு மறுப்பு தெரிவிக்க இயலுமா பெண்ணவளால்!?
அவள் நாணத்துடனே சரி என தலையசைக்க, போரிலே வெற்றி வாகை சூடியவன் போல அகம் மகிழ்ந்தவன் தன்னவளுடனான தன் உறவை பலப்படுத்த கைகளில் ஏந்திக் கொண்டு தனதறையை நோக்கி பயணமானான்...
தொடரும்...
தீரா.